Thursday, November 1, 2007

நெனச்சது ஒன்னு!!! நடந்தது ஒன்னு !!!! ஹிஹி...



                   

                               டிரிம்ஸ் மாம்ஸின் (மாமு என்பதன் ரீஜன்ட்). "தி கிரேட் எஸ்கேப்" போட்டி முடிவுகள். "கவியரசி" வேதாவுடன் ஒரு விபரீத ஒப்பந்தம்.தோழி சுமதியின் கொலைவெறி சிபாரிசு.கீதா அக்கா கெளப்பிய புரளி.மைஃபிரண்டின் மிரட்டல்...("குங்குமம் இந்த வாரம்" விளம்பர பாணியில் படிக்கவும்)
இன்னும் பல ரகசியங்களை உங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்..


நடந்தது என்ன?..


                 மக்கஸ்...கொஞ்ச நாளைக்கி " கணிப்பொறியில "சிக்காம தப்பிச்சிட்டாலும்...நண்பர்களோட வலைப்பூவுகெல்லாம் மறக்காம போவதுண்டு.

                ஒரு போட்டி வச்சி மொதமொதல்ல..நமக்குள கவித(மொக்கை) வெளக்க ஏத்தி வச்ச புகழ்..நம்ம ட்ரிம்ஸ் மாமுக்குக்குத்தான்.(நல்லா கேட்டுக்கோங்க மக்கள்ஸ்... தப்பு எம்மேல இல்ல..).

               அந்த போட்டில நானும் சொம்மா..ஜல்லிக்கட்டுல குதிக்கிற மாதிரி(அவ்ளோ தகிரியமா ஒனக்கு?),குதிச்சி சில பல கவித(மாதிரி)கள போஸ்ட் செஞ்சிட்டோமில்ல..அப்பிடியே மொத மொதல்ல கவித எழுதன நம்ம அனுபவத்த மத்தவிங்களுக்கும் சொல்லிக்குடுத்து பொதுச்சேவை செய்யலாமேன்னு நம்ம பதிவுலயும் போட்டாச்சி(பத்து நிமிடத்துல கவித எழுத கத்துக்கனுமா?.பிகு: முன் அனுபவம் தேவையில்லை).

               அப்பத்தான்.. நமக்கும் ,நம்ம "கவியரசி வேதாவுக்கும்" (பட்டத்த சேத்துப் போடலினாக்கா கோவிச்சுக்குவாங்கல்ல?..)..வரலாற்று முக்கியத்துவம் மிக்க.. ஓப்பந்தம் கையொப்பமாச்சு...

" நம்ம கவிதாயினி சொல்லிட்டா அதுக்கு அப்பீலே இல்லீங்கோஒ" இன்னு நம்ம சுமதியே சொன்னதால நம்பிட்டேன்.

                அதுல தான் வேதா என்னிய ஏமாத்திட்டாய்ங்க..பரிசு கெடச்சாக்கா...அதுல பாதி பாதின்னு சொன்னதால..யோசிக்காம ஒத்துக்கிடேன்.அப்புறமா தா புரிஞ்ச்சிது இந்த ஒப்பந்தத்துல நெறய ஓட்டைகள் இருக்குன்னு..
                நம்மளுக்கு பரிசு கெடிச்சாக்கா...பாதி அவிங்களுக்கு..
ஆனா அவிங்களுக்கு பரிசு கெடிச்சா ?... நம்மளுக்கு அஸ்கு.. புஸ்க்கு த்தான்..
"பரிசுக்கு பதிலா வேற எதாவது கெடிச்சாக்கா ?"..ன்னு கேட்டபோது.
"நான் பார்த்துக் கொள்கிறேன்"ன்னு திருவிளையாடல் பாணில அவிங்க பதில் சொன்ன போதே..பிரிஞ்சிருக்க வேண்டாம்? ."எதை?..எங்க வீங்கியிருக்குன்னா?" ன்னு நாகேஷ் போல கேட்டிருக்க வேணாமோ?..

               நம்ம நளாயினி அக்கா..வின் உள்குத்துக்கு, பெருந்தன்மையா வேதாவுக்கு பங்கு கொடுத்தாக்கா.."அக்ரிமென்ட்படி,பரிசுல தான்..பங்கு..உள்குத்துலள்லாம் இல்லேன்னுடாய்ங்க.."(பேசாம எங்க கம்பெனி டெண்டர் மேனேஜர் வேலைக்கு சிபாரிசு செய்யலாம் போலருக்கு)

                சரி யோசிக்காம செஞ்சிட்டோமேன்னு.. நம்ம Dreamz சோட பதிவுக்கு போய் பாத்தாக்கா..அங்க அவுரு ஆபீசுலேயே Dreams [வேறென்ன?... (பகல்)கனவுத்தேன்.]கண்டுக்கின்னு ரொம்ப நாளா..போட்டி முடிவ அறிவிக்காம டபாய்ச்சிக்கினு இருந்தாரு..

                ரொம்ப லேட்டானதால... நாந்தேன் ஏதோ ரகசியமா பொதயலுல பங்கு வாங்கிபுட்டதா வேதா சந்தேகப் பட ஆரம்பிச்சிட்டாய்ங்க...(ஒரு வேளை நம்ம கீதா அக்கா,நான் அம்பியோடயும்,சாம்பு மாமாவோடயும் கூட்டு/பொறியல் சேந்தத பொறுக்க முடியாம புரளிய கெளப்பி விட்டுட்டாய்ங்களோ?..).
அவிங்க அடுத்து "தசா மொழிகள்"ல கவித எழுத போறதா..நம்ம மைஃபிரண்டு வேற பீதி கெளப்பிக்கிட்டு திரியருதால..
                எங்க அடுத்த கவிதயில என்னிய டார்கெட்டாக்கி.."கேள்விக் கணைகளால" கீச்சிடுவாய்ங்களோ? ன்னு ஒரு பயம் வேற...

                 நம்ம கீதா அக்கா வேற (அதாங்க என்னோட தமிழ் டிச்சர்..தன்னிகரில்லா தனிப்பெருந் தலைவி)..வேதா பேரை எழுதும் போது அடைப்புக்குறியில "ள்"ன்னு போடனுமின்னு (வேதா(ள்)) சொல்லிக் கொடுத்து என்னிய ரொம்ப கலவரப்படுத்திட்டாய்ங்க....

                 ஜயய்யோ... பரிசு கெடிச்சாலும்,கெடிக்கலன்னாலும் பங்கு கொடுக்கலன்னாக்கா..நாம காலி -ன்னு தலைமறைவா தசாவதாரம் கெட்டப்புல( நன்றி சுமதிக்கு...)அலைஞ்சப்போ ,கண்டுபுடிச்சி "என்ன கொடும இதுன்னு"கடுப்புல..கமெண்ட் போட்டாங்க..

கடிசியா நம்ம Dreamz தூக்கம் கலைஞ்சி வந்து கவித முடிவ அறிவிச்சிட்டாரு..

                 இங்க நடக்கர கலவரம் எதுவுமே தெரியாம "சொம்மா... உம்மாங்காட்டிக்கு.. பரிசுன்னு சொல்லிட்டேன்.மதித்து கவிதை எழுதின எல்லார்க்கும் நன்றி".ன்னு ஜகா வாங்கிட்டாரு...(பைனான்ஸ் கம்பெனி வச்சிருக்காரோ?) அப்பிடியே நா எழுதனத மொத எடத்துல போட்டு,அதுக்கு கீழ "இந்த வரிகள் அசத்தல்..." ன்னு பாராட்டி வேற வச்சிருக்காரு...

இங்கதா ஒரு ரகஸியம் இருக்கு..

                நா "கவிதன்னு சொல்லிக்கிற பகுதி" தெளிவா தெரியருதுக்காக கலருல வேற எழுதி வச்சிருந்தேன்..
              ஆனா நம்ம Dreamz அதயெல்லாம் விட்டுட்டு.. நா சாதாரணமா எழுதன வரிய, கவித(?) ன்னு நெனச்சுப்புட்டு..ரசிச்சி அதுக்கு மொதலிடம் வேற கொடுத்திருக்காரு...ஹிஹி... [நெனச்சது ஒன்னு!!! நடந்தது ஒன்னு !!!! ஹிஹி...]

" உங்க கவித உங்களுக்கே புரியலன்னாக்கா.. கவலப் படாதிங்க.. அதுக்கு படிக்கிற விசயந்தெரிஞ்சவங்க அவிங்களாவே " மீனிங் " கண்டுபிடிச்சி பின்னூட்டத்தில கிழி கிழின்னு கீச்சிடுவாய்ங்க..." ன்னு பதிவுல நாஞ்சொன்னது நெசமாயிடுச்சேன்னு.. எனக்கு ரொம்ப சந்தோஷம்...(கல்லிலும் கலைவண்ணம் கண்ட ) Dreamz ன் கலைப்பார்வை பாராட்டுக்குரியது..

போட்டியோட பின்னூட்ட பதிலுலயே நம்ம வரிய நாலாவது கவிதயா சேத்து பாராட்டியிருந்தாரு..நமக்கு எனக்கு அப்பவே லேசா சந்தேகம் வந்துச்சி ..சரிசரி மூணு கவித போட்டாக்கா.. சிறப்பு சலுகையா , அவிங்களாவே ஒரு வரிய, கவிதயா ஒத்துக்கிறாய்ங்க போல..ன்னு நெனச்சிக்கிட்டேன்.

              நமக்கு சாதாரணமா தோனுற சில நகைசுவை கூட,சில பேருக்கு ரொம்ப சிரிப்பை வர வழிக்கும். அவிங்க அந்த விஷயத்த மத்த வேற விஷயங்களோட சம்பந்தப்படுத்தி வேற கண்ணோட்டத்துல பாத்திருப்பாய்ங்க..அது அவிங்க.. ரசனையோட சிறப்புன்னுதேன் சொல்லனும்.(மேல இருக்குற பெண் மாதிரி பூவும் இந்த ரகந்தேன்..)

உதாரணம்:

               ஒருத்தர் அவரோட நண்பர் வீட்டுக்கு போனபோது,அவரோட நண்பர் ஜலதோஷம் பிடிச்சு தும்பல்லால ரொம்ப கஷ்டப்பட்டுகின்னு இருந்தாராம்.போனவர் திடீருன்னு நண்பரோட நெலமைய பாத்துபுட்டு சிரிக்க ஆரம்பிச்சிட்டாராம்..
                 நண்பருக்கோ.. ரொம்ப கோபம் "ஏன்யா என்னோட நெலம ஒனக்கு சிரிப்பா வருதா?என்ன நக்கலா?"ன்னு கேட்டாராம்.அதுக்கு வந்தவர்..
இல்ல.. நேத்திக்கு ஒரு ராமாயணம்(இதுக்கும் ராமர் பால மேட்டருக்கும் சம்பந்தம் இல்லிங்கோ...)கதா காலஷேபம் கேட்டேன்.. அதுல ராவணனுக்கு "பத்து தலை" ன்னு சொன்னாய்ங்க..
                 ஒன் ஒரு தலைக்கு ஜல தோஷம் வந்ததுக்கே இப்பிடி ஒன் நெலம ஆயிடுச்சே..அந்த ராவணனுக்கு ஜலதோஷம் பிடிச்சாக்கா அவனோட நெலம என்னன்னு யோசிச்சி பாத்தேன் ன்னாரு..

                  இப்ப கோவப்பட்ட நண்பரும் கஷ்டத்த மறந்து..சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு.
இதுல மொதல்ல சொன்னவரோட கற்பனை திறன் நல்லாயிருந்திருக்கு..இல்லையா?.இப்பிடித்தேன் சில பேரு சராசரி வாழ்க்கையையும் ரசிச்சி வாழராய்ங்க..(சில பேரு சராசரி வாழ்க்கையையும் டென்சனா நெனச்சுக்கிறாய்ங்க..)


Dreamz.. நீங்க அந்த வரிய எந்த கண்ணோட்டத்தோட பாத்து ரசிச்சிங்கன்னு சொன்னிங்கன்னாக்கா.. நாங்களும் ரசிப்போமில்ல?...ஹிஹி....

இல்ல அவருக்கு என்ன தோணியிருக்கும்மின்னு மத்தவங்க சரியா யுகிச்சி சொன்னா கூட பரிசு உண்டு (அதான் டிரிம்ஸ் வழி காட்டிட்டாருல்ல.. சொம்மா கண்ண மூடிக்கின்னு பரிசு அறிவிக்கலாமில்ல...ஹிஹி..)


.
.
.

66 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

சூப்பர்.
படிச்சிட்டு வந்து அப்புறம்
பின்னூட்டம் போடறேன்

said...

ஓ கமெண்ட் மாடுரேசன் இல்லையா??

said...

மைக் டெஸ்டிங்

said...

ஒன்

said...

ட்டூ

said...

த்ரீ

said...

ஐயோ ஐயோ! என்னுடைய 75வது பதிவில் பரிசு கொடுப்பதாய் இருந்தேன்...

said...

//"சொம்மா... உம்மாங்காட்டிக்கு.. பரிசுன்னு சொல்லிட்டேன்.மதித்து கவிதை எழுதின எல்லார்க்கும் நன்றி".//
ஹிஹி! எங்க விடறீங்க!

said...

//நா "கவிதன்னு சொல்லிக்கிற பகுதி" தெளிவா தெரியருதுக்காக கலருல வேற எழுதி வச்சிருந்தேன்..
ஆனா நம்ம Dreamz அதயெல்லாம் விட்டுட்டு.. நா சாதாரணமா எழுதன வரிய, கவித(?) ன்னு நெனச்சுப்புட்டு..ரசிச்சி அதுக்கு மொதலிடம் வேற கொடுத்திருக்காரு...//

எல்லாம் நேரந்தான்!

said...

//Dreamz.. நீங்க அந்த வரிய எந்த கண்ணோட்டத்தோட பாத்து ரசிச்சிங்கன்னு சொன்னிங்கன்னாக்கா.. நாங்களும் ரசிப்போமில்ல?...ஹிஹி....//

அடடட..ப்பாவிகளா........... ((விவேக் ஸ்டைல்ல படிங்கப்பு))

said...

சிவா - மறுமொழி எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு இப்படி ஒரு வழி இருக்கா - தெரியாமப் போச்சே

said...

வாங்க..சிவா..வாங்க...
// சூப்பர்.
படிச்சிட்டு வந்து அப்புறம்
பின்னூட்டம் போடறேன//
வருகை பதிவேட்டுல மொதல்ல கையெழுத்து போட்டு ,தொவக்கி வச்சதுக்கு நன்றிங்க..
ஆமா.. அப்ப படிக்காமத்தேன்.. பின்னூட்டம் போடரீங்களா?..ஹா..ஹா...
அப்ப அந்த "சூப்பர்"ங்கரது உங்க ஊருல வணக்கம் மாதிரி உபயோகப்படுத்தரதாப்பு..?...?ஹிஹி....

said...

// ஓ கமெண்ட் மாடுரேசன் இல்லையா??//
இருக்கு மாமு இருக்கு.. அது பாட்டுக்கு ஒரு ஓரமா இருக்கு..
வைச்சாலும் மெரட்டுறிங்க.. வைக்காட்டாலும் கேக்கறிங்க..
ஆளுக்கொரு உத்தரவு போட்டாக்கா.. என்னப்பு செய்யரது?ஹிஹி...

said...

/ மைக் டெஸ்டிங//
ஹலோ.. யாருப்பா அது..?.. காதுல வந்து ஸ்பீக்கர் வைக்கரது!..சிவா நீங்களே தானா?..ஹா..ஹா..

said...

// ஒன் //
ஹலோ.. ஹலோ..ஒன்னும் சரியா கேக்கலீங்களே...(ஒரு பின்னூட்டமாச்சில்ல...ஹா..ஹா..)

said...

// ட்டூ //
இப்பத்தேன் லேசா ஏதோ கேக்கர மாதிரி இருக்கு.. (ரெண்டாவது பின்னூட்டமுமாச்சி... ) டூடூ டுட்டுடு..

said...

// த்ரீ //
அப்பாடா.. இப்ப நல்லா கேக்குதுங்க சிவா..மொத ஆறு பின்னூட்டம் தாராளமா கொடுத்ததுக்கு தேங்க்ஸ்மா..
(போதுங்கர மனமே பொன் செய்யுமாமே?..) அப்பறம் இப்பிடி அடிக்கடி மைக் டெஸ்டிங் செஞ்சாக்கா பின்னூட்டம் எண்ணிக்கை எங்கயோ போயிடாது?..ஹிஹி....
So ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....ஹா..ஹா...

said...

// ஐயோ ஐயோ! என்னுடைய 75வது பதிவில் பரிசு கொடுப்பதாய் இருந்தேன்...//
ஆஹா... மொபைல்ல எங்க பேசனாலும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கலாமின்னிருந்தேன்னு.. நம்ம தயாநிதி சொல்லிட்டு போன மாதிரில்ல இருக்கு..
சீக்கிறமா கட்சி ஆரம்பிச்சிங்க மாமே.. (ஆனாக்கா அந்த பொதுசெயலாலர் பதவிய மாத்தரம் எனக்கு குடுத்துடுங்க..ஹிஹி...)

said...

// //Dreamz.. நீங்க அந்த வரிய எந்த கண்ணோட்டத்தோட பாத்து ரசிச்சிங்கன்னு சொன்னிங்கன்னாக்கா.. நாங்களும் ரசிப்போமில்ல?...ஹிஹி....//
அடடட..ப்பாவிகளா........... ((விவேக் ஸ்டைல்ல படிங்கப்பு))//

ஏன் மாம்ஸ்.. நல்லாத்தான ரசிச்சியிருக்கீங்க?....ஹா..ஹா...

said...

// சிவா - மறுமொழி எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு இப்படி ஒரு வழி இருக்கா - தெரியாமப் போச்சே//
வாங்க சீனா சார்.. வாங்க..
எனக்கும் இன்னிக்குத்தான் சிவா சொல்லிக்குடுத்து இருக்காரு...(நானும் பின்னூட்டபதிலுல எப்பிடி எண்ணிக்கையை கூட்டறதுன்னு மறைமுகமா காட்டியிருக்கேனே.. பாருங்க..ஹீ..ஹி..(ஆக்சுவலா உங்க கேள்விய படிச்சப்பறந்தேன் ஜடியா கெடச்சிச்சி..)
ஆனா பாருங்க.. உண்மையிலேயே நமக்கு சந்தோஷம் "பின்னூட்ட எண்களில்" இல்லை..நண்பர்களின் "பின்னூட்ட எண்ணங்களில்" தான்.எல்லாருமே..என் பதிவுகளுல.. நகைச்சுவையா..வாழ்த்தா..உரிமையோட கண்டிக்கிறதா( தப்ப சுட்டிக்காட்டறதா)..விளக்கம் சொல்லுறதா..அவிங்க கண்ணோட்டத்த சொல்லுறதா.. பின்னூட்டம் போட்டு கலக்கியிருக்காங்க.. எல்லாருக்கும் ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ்..

said...

ரசிகன் - உண்மை - உணமை - இருப்பினும் தமிழ்மண முகப்பிலே அதிக மறுமொழி இட்டவர்கள் என பெயர் வந்தால் மகிழ்ச்சி தானே

said...

// தமிழ்மண முகப்பிலே அதிக மறுமொழி இட்டவர்கள் என பெயர் வந்தால் மகிழ்ச்சி தான//

நிச்சயமா.. எங்களுக்கும் சந்தோஷம் தான்..ஏன்னாக்கா..எங்க எல்லாரோட ,எல்லா பதிவையும் படிச்சதோட இல்லாம,மறக்காம பின்னூட்டம் போட்டு எங்களுக்கு ஒரு அங்கிகாரம் கொடுக்கறதே..நீங்க தானே..?"ரசிகனின் சார்பில ரசிக கலாமணி"ன்னு பட்டம் கொடுக்க கூட சந்தோஷமா நான் தயார்.
ஆமா சீனா சார்.நா எந்த வீட்டுக்கு போனாலும்,நீங்க அங்க இருக்கீங்க.. எப்பிடி நேரம் கெடைக்குது?....

said...

ஒருவேளை நீங்க சும்மா எழுதுவதே Dreamz-ku கவிதையாக தோன்றியிருக்குமோ என்னவோ.? haaaahaaaa.
இதற்க்காகவே நானும் இனி பதிவுகள் போடலாம் என்றிருக்கிறேன்.

said...

' இப்பிடித்தேன் சில பேரு சராசரி வாழ்க்கையையும் ரசிச்சி வாழராய்ங்க..(சில பேரு சராசரி வாழ்க்கையையும் டென்சனா நெனச்சுக்கிறாய்ங்க.. '
உண்மை தான்.

said...

'வேதா ஏமாத்திட்டாய்ங்க.'
வேதா கோபித்துக் கொள்ள போகிறார்கள்.

said...

இதனோடு சேர்த்து நான்கு பின்னூட்டம் ஆகிவிட்டது.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.எதிர்காலத்தில் வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டிவரும்.

said...

வாங்க பிரித்தி. நீங்க பரிச்சைக்கு படிக்கிறதா சொன்னீங்க இல்ல.. பரிச்சை எழுதிட்டீங்களா?..பக்கத்துல உக்காந்தது எழுதுனது நல்லா படிச்சவங்க தான?...ஹிஹி..

// நானும் இனி பதிவுகள் போடலாம் என்றிருக்கிறேன்//
சந்தோஷமா ஆரம்பியுங்க..மொதல்ல ஆரம்பிக்க தா கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்,ஆரம்பிச்சப்பறம் நம்ம வீட்டுல இருக்குறவங்க கிட்ட பேசற மாதிரி ரொம்பவே நல்லாயிருக்கு..

said...

// // 'வேதா என்னிய ஏமாத்திட்டாய்ங்க.'//
வேதா கோபித்துக் கொள்ள போகிறார்கள்.//

இல்லிங்க.. நா சொம்மாத்தேன் கலாட்டா பண்ணறேன்னு அவிங்களுக்கு தெரியுமில்ல....நம்ம நண்பர் எல்லாருக்குமே அந்த பக்குவம் இருக்கு..(ஏனுங்க .. எனக்கு பின்னூட்டத்துல எல்லாரும் என்னிய கிழி கிழின்னு கிழிச்சப்ப உங்குளுக்கு இந்த சந்தேகம் தோனலியா?...).
நெசமாலுமே நமக்கு யாரோட மனசையும் புண்படுத்தரத விரும்பரதில்லீங்க..நா எல்லாத்தையும் ஜாலியா எடுத்துக்கிற மாதிரி மத்தவங்களையும் நெனச்சுகிறேன்..ஆனாக்கா.. என்னையும் அறியாம ரொம்ப தப்பு நடந்துட்டாக்கா... மன்னிப்பு கேக்க தயங்கரதில்ல..

தப்ப சுட்டிக்காட்ட என் நண்பர்களுக்கு முழு உரிமை இருக்குங்கறது அவிங்களுக்கு தெரியும்.ஒரு வேளை பின்னூட்டத்துல சொல்ல விரும்பலேன்னாக்கா...என்னோட தனி மின்னஞ்சல் முகவரிய கொடுத்திருக்கேன்.
அதுல வந்து திட்டிட்டு போலாம்.
ஜய்யய்யோ.. நாளைக்கு லீவுங்கரதால ரொம்பவே பேசறேனோ?...

said...

// இதனோடு சேர்த்து நான்கு பின்னூட்டம் ஆகிவிட்டது.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.எதிர்காலத்தில் வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டிவரும்.
//
நிச்சயமா.. மகிழ்ச்சியுடன் மேலும் கடன் பட விரும்புறேனுங்க..பிரித்தி...ஹிஹி...

Anonymous said...

sridhar sir,it is nice to read.keep it up.happy week end.enjoy.sunday we will meet in plant.

said...

முப்பத்தொன்னு.

said...

முப்பத்திரண்டு

said...

முப்பத்து மூன்று.

said...

முப்பத்து நாலு

said...

முப்பத்து ஜஞ்சு

said...

முப்பத்து ஆறு

said...

முப்பத்து ஏழு

said...

முப்பத்து எட்டு

said...

முப்பத்து ஒன்பது

said...

நாற்பது..நானே நாற்பது.நானே நாற்பது.

said...

சீனா & ரசிகன் பின்னூட்டத்த அதிகரிக்க இப்படியும் ஒரு வழி இருக்கு என்பதை இப்ப புரிந்துகிட்டீங்களா? நிறைய பதிவுகளில் பார்த்திருக்கேன்.ஹீயீயீய்.

said...

//
நண்பர்களின் "பின்னூட்ட எண்ணங்களில்" தான்.எல்லாருமே..என் பதிவுகளுல.. நகைச்சுவையா..வாழ்த்தா..உரிமையோட கண்டிக்கிறதா( தப்ப சுட்டிக்காட்டறதா)..விளக்கம் சொல்லுறதா..அவிங்க கண்ணோட்டத்த சொல்லுறதா.. பின்னூட்டம் போட்டு கலக்கியிருக்காங்க..
//
ரசிகன். உங்க பதிவு எனக்கு புரியலை அதனாலதான் அந்த மாதிரி கமெண்ட் போட்டேன்.

உங்க பதிவு எனக்கு புரியனும்னா ஒரு 25 லிங்க் குடுத்திருக்கீங்களே அது எல்லாம் படிச்சாதான் புரியும்னு நினைக்கிறேன்.

நாம எழுதனத இன்னொருத்தர் பாத்திருக்கார்னு தெரியரதே ஒரு சந்தோசம் இல்லையா அதுக்காகத்தான் ஒரு அட்டண்டன்ஸ் மாதிரி போட்ட கமெண்ட்ஸ் அது.

அப்புறம் எப்பிடி இப்பிடி எல்லாம் பக்கம் பக்கமா எழுதறீங்கன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் இன்னொரு பக்கம் சந்தோசமாவும் இருக்கு.

வாழ்த்துக்கள்.

சீனா சார் நாங்க உங்க பதிவோட ஃபேன். உங்களுடைய இளமை ப்ராயம் பத்தின பதிவு இன்னும் என் மனசுல இருக்கு.

said...

எல்லா கமெண்டுகளும் கமெண்ட்டுகளுக்கு நீங்க போட்ட பதில் கமெண்ட்களும் சூப்பர்.

பின்னூட்ட குறிப்பு : இது படித்துவிட்டு போட்ட பின்னூட்டம்.

எப்பிடியெல்லாம் குறிப்பு போடவேண்டியிருக்கு பாருங்க!!!!!
:-))))

Anonymous said...

இதை கும்மிப்பதிவாக்கீட்டாங்களே

said...

//
சின்ன அம்மிணி said...
இதை கும்மிப்பதிவாக்கீட்டாங்களே
//
நெனச்சது ஒன்னு!!! நடந்தது ஒன்னு !!!! ஹிஹி...

தலைப்போட செம பொருத்தமா ஆயிடிச்சில்ல!!

said...

//
வேதா said...
சரி வெயிட் பண்ணுங்க போய் பதிவை படிச்சுட்டு வரேன் :D
//
என்னைப்போல் இன்னொருவர்
:-))))

said...

//
vijay said...
சீனா & ரசிகன் பின்னூட்டத்த அதிகரிக்க இப்படியும் ஒரு வழி இருக்கு என்பதை இப்ப புரிந்துகிட்டீங்களா? நிறைய பதிவுகளில் பார்த்திருக்கேன்.ஹீயீயீய்.
//
ரிப்பீட்டேய்

said...

ஹாய் ரசிகா,

//தோழி சுமதியின் கொலைவெறி சிபாரிசு//
//நம்ம சுமதியே சொன்னதால நம்பிட்டேன்.//

இல்ல நான் தெரியாமத் தான் கேக்கறேன், என்னை ஒரேயடியா ஒழிச்சு கட்டறதா முடிவே பண்ணிட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்...

//வேதா பேரை எழுதும் போது அடைப்புக்குறியில "ள்"ன்னு போடனுமின்னு (வேதா(ள்)) சொல்லிக் கொடுத்து//

நீங்க சரியா தான் புரிஞ்சுகிட்டீங்களா? அது உங்களுக்குத் தானா? இல்ல தனிப்பெரும் தலைவிக்கு மட்டும்மா?
எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்.

//ஆனா நம்ம Dreamz அதயெல்லாம் விட்டுட்டு.. நா சாதாரணமா எழுதன வரிய, கவித(?) ன்னு நெனச்சுப்புட்டு..ரசிச்சி அதுக்கு மொதலிடம் வேற..//

நான் நினைக்கிறேன் அவருக்கு கலர் சரியா தெரியலையோ? அதான் இப்படி ஹி ஹி ஹி ஹி ஹி ....வேற வழியில்லாம ஏதோ பாவம்னு உட்டுட்டாரோ?

said...

ஹாய் ரசிகா,

//சிறப்பு சலுகையா , அவிங்களாவே ஒரு வரிய, கவிதயா ஒத்துக்கிறாய்ங்க போல..ன்னு நெனச்சிக்கிட்டேன்.//

மனுசனுக்கு நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்...

said...

வாங்க.. இங்க நீங்க என்னிய திட்டலாம்,பாராட்டலாம்,கருத்தை சொல்லலாம்.ஆணி வைக்கலாம்,ஆணி புடுங்கலாம்.[அதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்களோ?],சண்டை கூட போடலாம்.அனானிகளுக்கும் ஆதரவுண்டு[உண்மையான பின்னூட்டம் கிடைச்சா சரி].ஆனா..தரக் குறைவான வார்த்தைகளுக்கு அனுமதியில்லை.அவை நீக்கப்படும் இன்னு சொல்லிக்கிறேன்.அட உங்க கருத்த கேக்க வந்துட்டு,நானே பேசறேன் . நீங்க சொல்லுங்க..

வந்துட்டேன்....இப்பொதைக்கு பிரசண்ட் போட்டுக்கரென்

said...

ஹெல்லோ சிவா - என் ரசிகன்னு சொல்றதெ எங்க வூட்லே வந்து சொல்லக் கூடாதா - நம்ம ப்ரண்ட் வூட்லே சொல்ற்றீங்க - எனி வே - நன்றி நன்றி நன்றி

said...

// சீனா & ரசிகன் பின்னூட்டத்த அதிகரிக்க இப்படியும் ஒரு வழி இருக்கு என்பதை இப்ப புரிந்துகிட்டீங்களா?//
இன்னும் புரியலிங்களே....இன்னொரு மொற ரிப்பீட்டேய்ய்ய்..ஹிஹி...
நல்வருகை விஜய்ராஜ்..

said...

// ஒரு 25 லிங்க் குடுத்திருக்கீங்களே அது எல்லாம் படிச்சாதான் புரியும்னு நினைக்கிறேன்.//
செஞ்சிடுங்களேன் சிவா.. அதுக்காகத்தான குடுத்திருக்கிறது..நம்ம நண்பர்கள் வீட்டுக்கு வழி சொல்லறதிலயும் ஒரு சந்தோஷம் இருக்கில்ல..

said...

// நாம எழுதனத இன்னொருத்தர் பாத்திருக்கார்னு தெரியரதே ஒரு சந்தோசம் இல்லையா //
ரொம்ப நெசந்தானுங்க சிவா..நன்றிகள்

//அப்புறம் எப்பிடி இப்பிடி எல்லாம் பக்கம் பக்கமா எழுதறீங்கன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் இன்னொரு பக்கம் சந்தோசமாவும் இருக்கு.//
எனக்கு இதுபோல கொஞ்சம் ஓய்வு கெடச்சாக்கா,நீங்க இந்த மாதிரி தொந்தரவெல்லாம தாங்க வேண்டியிருக்கும்..சொல்லிப்புட்டேன்..ஆமா...ஹிஹி...

said...

// பின்னூட்ட குறிப்பு : இது படித்துவிட்டு போட்ட பின்னூட்டம்.//
//எப்பிடியெல்லாம் குறிப்பு போடவேண்டியிருக்கு பாருங்க!!!!!//

நாங்கல்லாம் ஒடனே நம்பிட்டோமில்ல..

said...

// இந்த மொக்கை மன்னன் உன்ன வச்சு காமெடி பண்றதையே தொழிலா வச்சுருக்காரு//
ஆஹா.. வாங்க வேதா வரும்போதே என்னிய கைமா பண்ணரிங்களே?..
ஆமா எனக்கே தெரியாம பட்டமளிப்பு விழால்லாம் நடத்தி "மொக்கை மன்னன்" ன்னெல்லாம் பட்டம் கொடுத்துட்டாய்ங்களா?...சரிசரி.. ஏதாவது பட்டம் கெடைச்சாக்கா நல்லது தான..samething is betterthen northing இல்லையா?ஹிஹி...

said...

// ஆட்டோ அனுப்பறத்து வசதியா குறிச்சு வச்சுக்கிட்டாச்சு கட்சி வேற ஆரம்பிக்க போறீங்க :D//
ஜயோ.. அந்த பொருளாலர் பதவிய உங்களுக்கு விட்டுக்கொடுத்துடறேனுங்கோ...[எப்பிடியெல்லாம் மெரட்டராய்ங்கல்ல...)

said...

வேதா said..
// அது!!! அந்த பயம் இருக்கட்டும் :)//

இருக்குதுங்க...இருக்குதுங்க..
நெறயாவே இருக்குதுங்க..

// இதையும் ட்ரீம்ஸ் தலையில கட்டிடுவீங்களா? :D//
வேற வழி?..ஹிஹி...

said...

// சின்ன அம்மிணி said...

இதை கும்மிப்பதிவாக்கீட்டாங்களே//

ஹா..ஹா...வாங்க சின்ன அம்மிணி..
நல்வருகை..ஆப்புறம், பெரிய அம்மினி நல்லாயிருக்காங்களா?

said...

வாங்க..வாங்க..சுமதி..
// நீங்க சரியா தான் புரிஞ்சுகிட்டீங்களா? அது உங்களுக்குத் தானா? இல்ல தனிப்பெரும் தலைவிக்கு மட்டும்மா?
எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்.//

நீங்க சொல்லரதும் நெசந்தேன்..நமக்கு எதுக்கு வம்பு?..
ஆனா பாருங்க.. குருவை பின்பற்றும் சிஷ்யனா இருக்கோனுமின்னு எங்க தலைவி சொல்லியிருக்காய்ங்களே..ஹிஹி..

said...

// நான் நினைக்கிறேன் அவருக்கு கலர் சரியா தெரியலையோ? அதான் இப்படி ஹி ஹி ஹி ஹி ஹி ...//
சபாஷ் சரியான யூகம்.அந்த பரிசு உங்களுக்குத்தான்..
Dreamz மாமு.. நாமெல்லாம் காலேஜில எத்தன கலருங்கள லைன்கட்டி பாத்துக்கிட்டு இருப்போம். ஆனா ஆனா நம்ம தோழி உங்களை "கலர்பிளைண்டு(blind)" ன்னு கலாட்டா பண்ணுராய்ங்களே..பதில் சொல்லிடுங்க.....ஹிஹி...

said...

ஹாய் சுமதி..
// மனுசனுக்கு நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்...//
நெசந்தாம்ப்பா..

said...

// வந்துட்டேன்....இப்பொதைக்கு பிரசண்ட் போட்டுக்கரென்//
வாங்க.. வாங்க பவன்.. நன்றிகள்..
அட்டெனஸ் எழுதிட்டு கிளாச கட்டடிக்கிறத இப்பவே ஆரம்பிச்சாச்சா?..ஹிஹி..

said...

சீனா சார், அவர் எங்க எல்லார் சார்புலயும் சொல்றார்..அதனாலதான்...
அப்புறம்..நீங்க ஏதாவது புது விருந்து வைச்சிருக்கிங்களான்னு ,அடிக்கடி நான் உங்க வீட்டு சன்னல் வழியா எட்டிப்பாத்துக்கிட்டிருக்கேன்..சீக்கிறம் வச்சிடுங்களேன்.

said...

"நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு" தலைப்பை படிச்சப்போ ,ஏதோ நம்ம ரசிகன் கிண்டி ரேசுக்குப் போய்ட்டு வந்து புலம்பிட்டு இருக்காறோன்னு நினைச்சுட்டெ மேலே படிக்க ஆரம்பிச்சப் பிறகுதான் தெரிஞ்சது...இது ஒரு வட்ட மேஜை மாநாடு மாதிரி கவிதை [மொக்கை]கமெண்ட்ஸ்[கலாய்த்தல்],நூல் விடுரது,பிலிம் காட்றது ....இன்ன பிற விஷயங்களெல்லாம் அலசப் பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.முழுக்க படிச்சப்பதான் புரிஞ்சுக்கிட்டேன்....நான் கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு.யாராவது பிளாக் பாஷைக்கு ஒரு அகராதி வெளியிடுங்களேன்.

said...

//சீனா சார், அவர் எங்க எல்லார் சார்புலயும் சொல்றார்..அதனாலதான்...
அப்புறம்..நீங்க ஏதாவது புது விருந்து வைச்சிருக்கிங்களான்னு ,அடிக்கடி நான் உங்க வீட்டு சன்னல் வழியா எட்டிப்பாத்துக்கிட்டிருக்கேன்..சீக்கிறம் வச்சிடுங்களேன்.//

விருந்து வைககணும் ரசிகன்....சீக்கிரமே வைக்கிறேன்.