Thursday, February 14, 2008

காதலர்தின ஸ்பெசல் இன்ஸ்டண்ட் மொக்கை....

ரோஜா,கிஃப்ட்,ரெஸ்டாரண்ட்,சினிமா,நகை வியாபாரிகளுக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்து, ஒண்டிக்கட்டை பசங்களின் பெருமூச்சை இன்னிக்கே மொத்தமா வாங்கிடனும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுற எல்லா காதலர்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்...ஹிஹி...

இன்னிக்கு காலையில 5 மணிக்கே,ஒருத்தன் போன் செஞ்சு,மச்சான் எனக்கு "வேலண்டைஸ் டே"வாழ்த்து சொல்லுன்னு சொல்லறான். அடப்பாவி,சும்மா தூங்கிக்கிட்டிருந்தவனை எழுப்பி வேலை நாளுல இப்டி கொடுமைப் படுத்தறியேன்னு கேட்டதுக்கு... ஊர்ல இருக்குற அவனோட ஆளு இன்னும் எழுந்திரிக்கவே இல்லியாம்ல்ல.. அது வரைக்கும் போரடிக்குதுன்னு என் தலையை இப்டி உருட்டறான்.இவனுக்காக பாவப் பட்டு,ஒரு நாள் முழுக்க ஷாப்பிங்ல சுத்தி,வாழ்த்து அட்டை,பர்ஃபியும் கிஃப்டெல்லாம் செலக்ட் பண்ணி,ஒரு கவிதை வேற எழுதி (கவிதை புக்கெல்லாம் தேடி... ஜி3பண்ணி(ஹிஹி..) ),மறக்காம கையெழுத்தை மட்டும் அவனை போட வைச்சு,போஸ்ட் பண்ணிக் குடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும்ன்னு நெனச்சிக்கிட்டு,வாழ்த்துக்கள் சொன்னேன்."அங்க காதுலருந்து புகையெல்லாம் வர்ர மாதிரி இருக்கே"ன்னு கிண்டல் வேற.. இவனுங்க பண்ணுற கலாட்டா ஒரு வாரத்துக்கு முன்னாடியே துவங்கிருச்சு.. போன வருஷம் வரை ஞாபகத்துக்கே வராத பிப்ரவரி 14 ,இந்த முறை இம்புட்டு குறிப்பா தெரியறதுக்கு,இவனுங்க மாதிரி ஆளுங்க கூடஇருக்கறதாலதான்னு தோனுது...

"சரி... சரி... ஒங்கிட்ட பேசிக்கிட்டிருந்தா,எங்காளு கூப்பிடும்போது, போன் ஃபிரியா வைச்சிருக்கனும்ல்ல...நீயும் ஆபிஸ்க்கு போவனும்ல்ல.., தூங்கு மாமே" ன்னு கட் பண்ணிட்டான்..ரொம்ப விவரமாத்தான் இருக்கானுங்க...படுபாவிப் பைய.. பின்ன எங்க தூங்கறது?.

கடுப்பிலிருந்த நான் திடீரென ஞானம் வந்தவனாய்.. அடடா.. காதல்ன்னா அன்பு..அப்போ நாங்களும் அன்பர் தின வாழ்த்து சொல்லுவோம்ல்லன்னு ,ஒடனே ஊருக்கு போன் செஞ்சு,வீட்டுல இருந்த அம்மா,வேலையில இருந்த அப்பா,டிராவல்ல இருந்த தம்பி எல்லாருக்கும் போன் செஞ்சு “I love you அம்மா,அப்பா,தம்பி"ன்னு சொன்னேன்.. அம்மாவும், தம்பியும் நான் சொன்னதை கண்டுக்கவே இல்லை.. ”எப்படிடா இருக்கே.. சாப்பிட்டாச்சா?..ன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க அம்மா. அப்பா மட்டும் சிரிச்சிக்கிட்டே, “என்னடா? ஒரு மார்க்கமாத்தான் திரியற போல?, உனக்கு கூடிய சீக்கிரம் கால் கட்டு(???) போட்டாத்தான் சரிப்படும்ன்னு மிரட்டுறார்:( .இதுதான்..இதைத்தான் ”சொ.கா.சூ”ம்பாங்களோ?..ஹிஹி..

சரி ஏதாவது 10 மினிட்ஸ் இன்ஸ்டன்ட் மொக்கை பதிவு போடலாம்னு தோனுச்சு.. இன்னிக்கு காதலர் தினமா இருக்கறதால, அதுப்பத்தி மத்தவங்க ஏதாவது எழுதியிருந்தா லிங்க் குடுக்கலாம்ன்னு பதிவுல "காதல்"ன்னு குறிப்புச்சொல் குடுத்து கெடச்சதுக்கெல்லாம் லிங்க் குடுத்திருக்கேன்...(அடுத்து "கத்தரிக்கா"ன்னு குறிப்புச்சொல் குடுத்து தேடலாம்ன்னு பாத்தா நேரம் ஆகிடும்ன்னு தோனுது:( ,காதலர்கள் மன்னிக்கவும்,இணைப்பிரியா காதலையும் கத்திரிக்காவையும் பிரிச்சு வைச்சதுக்கு: P)
படிச்சிப் பாத்துட்டு திட்டுங்க.. (எழுதனவங்களை..ஹிஹி..:P )

முன் குறிப்பு: ஒன்னு ரெண்டு தவிர மத்த லிங்க்கெல்லாம் படிக்க நேரமில்லாததால,எதையும் படிக்க வில்லை... நீங்க படிச்சிப் பாத்து சொல்லுங்க.. :)))))

காதலை திட்டியும் இருக்கலாம்..பாராட்டியும் இருக்கலாம்.. சுட்டிகள் வரிசைப் படுத்தப் படவில்லை:)..என் காதலும் புனிதமானது தான்…!
காதல் வணக்கம்
காதலர் தினம்...காதல் செய்க...இனிதே செய்க..
இது காதல் தினம்
காதலர் தினம்
காதல் மழை
தபுசங்கர் பக்கங்'கள்'...
கொஞ்சம் காதலித்துத் தொலையேன்...
காதலர் தினம்

காதல் உலாவும் வீதி!
காதல் தினம்
காதலர் தின வாழ்த்துக்கள்!!!
காதல் சிறை
காலமெல்லாம் காதல் வாழ்க!!
”காதலிகள்” தினம் - சிறுகதை
இது காதல் செய்யும் நேரம் -3
காதலர்தினம் வந்துவிட்டது
புரியப் பத்து வருஷம் ஆனது - காதல் என்றால் என்ன?
காதல்நிஜம்.
காதல் படங்களும், ஒரு ரசிக்கத் தெரியாதவனும்...
உன்னை காதலிப்பதை என்னால் நிறுத்த முடியாது... எம்.ஜே!
Yes, I love this Idiot, I love this lovable Idiot
காதலர் தின ஸ்பெஷல் சாதா கவுஜ!!!
காதலர்தின வாழ்த்துக்கள் !
காதலிக்க நேரமில்லை...ம்ம்ம்ம
காதல் வாழ்க
காதல் தெய்வீகமானது - (காதலர் தின ஸ்பெஷல்)
காதலர் தின காட்சிகள் : வித்தியாசமானவை.
காதலர் தின Wallpaper
டார்லிங் டார்லிங் டார்லிங் - காதலர் தினம்(2)
அட! காதலிச்சா போதாது!
காதலர் தினம்
காதலர் தின சின்னங்கள்...
காதலர் தினம்: மாயையும் மிகைபுனைவும் / மகிழ்வும் மனக்கிளர்வும்
காதலர் தினம
காதலர் தினம
காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா-?
காதலர் தினம்
காதலர் தினம்!!!
காதலர் தினம்-தேவை / தேவையில்லை
காதலர் தினம்
குறுமொழி & நெடுங்காதல
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள
மலர்களும், ‘மலர்களும்’
காதலர் தினம்!
காதலர் தின வாரம் : கவிதை : மனவளையம
காதல் சமைக்கும் ‘குண்டான்’ ப்ரியா
காதலர் தினத்தை முன்னிட்ட கவிதைனு சொன்னா நம்பணும்...
காதலர் தின கவுஜை

Saturday, February 9, 2008

*பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும்...*

ஹைபிக்ஷன் படங்களை பார்த்திருக்கிங்களா?. அதுல வர்ர மாதிரி, நீங்க டைம் மிஷினுல பயணம் செய்யனும்ன்னு விரும்பியிருக்கிங்களா?. அட்லிஸ்ட் டைம்மிஷின்னு ஒன்னு சாத்தியம்ன்னாவது நம்பியிருக்கிங்களா?.

மக்கள்ஸ்.. வணக்கம்..
வேலை பளுவால கொஞ்சம் லேட்டானாலும் , வந்துட்டோம்ல்ல.. மறுபடியும் மொக்கையோட... ஹிஹி... (நாங்களு்ம் அடங்க மாட்டோம்ல்ல..:P :)))) 

ஹைபிக்ஷன் படங்களை பார்த்திருக்கிங்களா?. அதுல வர்ர மாதிரி, நீங்க டைம் மிஷினுல பயணம் செய்யனும்ன்னு விரும்பியிருக்கிங்களா?. அட்லிஸ்ட் டைம்மிஷின்னு ஒன்னு சாத்தியம்ன்னாவது நம்பியிருக்கிங்களா?.

இயற்க்கையான டைம் மிஷினினுல நாம எல்லாருமே பயணம் செய்திருக்கிறோம்.செய்துக்கொண்டிருக்கிறோம்ன்னு நான் சொன்னா நம்புவிங்களா?..

இது என்ன யதார்த்தமில்லாத கூற்றுன்னு நீங்க சொல்லறது எனக்கு புரியுது.
ஃபிளாஸ்பேக்கைத்தான் டைம்மிஷின்னு ஜல்லியடிக்கிறேன்னு நீங்க நெனச்சா,மன்னிச்சுக்கோங்க..விடயம் அதுவும் இல்லை..

மாறாத/ நிலையானதுன்னு நாம நெனச்சிக்கிட்டிருந்த காலமும்கூட (Time) சுருங்கவும்,நீளவும் கூடிய ஒன்றுதுதான் என்று மாஅறிவியலார் திரு.ஜன்ஸ்டின் ஜயா அவர்கள் தன்னோட ரிலேட்டிவிட்டி தியரியின் மூலமாக நிருபித்து,அகிலத்தின் நான்காம் பரிமாணமாய் அதை சேர்த்தப் போது, உலகம் எதிர்கொண்ட வியப்பும்,சந்தேகமும் கலந்த உணர்வைத்தான் நீங்கள் இப்போது உணர்கிறிர்கள். இந்த உலகில் விந்தைகளுக்கு பஞ்சமே இல்லை. இப்போது புதிதாய் வந்துள்ள ஸ்டிங் தியரியும் கூட ஆர்வத்தை தூண்டும் 
வகைதான்.

சரி.. நம்ம மேட்டருக்கு வருவோம்.
நாம் இப்போது எந்த காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்?..
கலியுக காலம்..ஹிஹி.. இல்லைங்க தாத்தா/பாட்டி
கீ.பி 2008 நோ நோ.. ஃபிரண்ஸ்...

 நாம் ஒவ்வொருவரும்,மொத்தமாக வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

ஹிஹி.. தலையில பாதி முடிய பிய்த்து கொண்டிருப்பீர்களே?,.,. மிச்சம் வையுங்க.. மற்ற பதிவுகளுக்காக.. P ..ஓகே.. விஷயத்துக்கு வருவோம்.
இந்த விந்தையை புரிந்துக்கொள்ள, அதற்க்கு முன் ஒரு விடயம் தெரிந்துக் கொள்ளலாம்..

சாதாரண தூரத்தை நாம் அளக்க மீட்டர்,அதைவிட தூரம் என்றால் கிலோ மீட்டர்,மைல் போன்ற அளவைகளைப் பயன்படுத்துகிறோம்.இந்த பரந்த அண்டவெளியில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே உள்ள அளவுகள் மிகப் பிரமாண்டமானவை. அவற்றை அளக்க இதே அளவுகளை உபயோகப் படுத்துவோமானால்.. அருகில் உள்ள நட்சத்திரக் கூட்டத்திற்க்கே,அளவு மிகச் சாதாரணமாக 40 இலக்கங்களைத் தாண்டும். நம்மில் பலபேருக்கு ஒரு கோடிக்கு எத்தனை பூஜ்யம்ன்னு கேட்டாலே.. விரல்விட்டு எண்ணத் துவங்குவோம். இதுல 40 இலக்க எண்கள் என்றால்..ஹிஹி..

இதுவரை உலகில் கண்டுப்பிடிக்கப்பட்டதிலேயே மிக வேகமாய் பயணிக்கக் கூடியது ஓளி (லைட் [the speed of light = 299 792 458 m / s]).(ரேடியோ வேவ்ஸ்ம் கிட்டத் தட்ட ஒளியின் வேகம் தான். ஆனால் அதை மிஞ்சுவதில்லை)
அது ஒரு வருடத்தில் 9,460,800,000,000 kilometers கிட்டத் தட்ட 10 டிரில்லியன் கிலோமீட்டர்கள் பயணிக்கும். இந்த மகாதூரத்தை, 1 ஓளிஆண்டு(லைட் இயர்)ன்னு அளக்கலாம்.


அதாவது 20 டிரில்லியன் கிலோமீட்டர் தூரத்துல உள்ள ஒரு பொருள்(அடேங்கப்பா..), 2 ஒளியாண்டுகள் தூரத்துல இருக்குன்னு எளிமையா சொல்லலாம்.

இல்லை..இல்லை கிட்டத் தட்டல்லாம் வேண்டாம். நாங்கெல்லாம் கணக்குல புலின்னு சொல்லிக்கறவங்களுக்காக..
a light second is 186,000 miles (300,000 kilometers). A light year is the distance that light can travel in a year, or:
186,000 miles/second * 60 seconds/minute * 60 minutes/hour * 24 hours/day * 365 days/year = 5,865,696,000,000 miles/year
A light year is 5,865,696,000,000 miles (9,460,800,000,000 kilometers).

ஓகே இப்போ நம்ம டைம் மிஷின் மேட்டருக்கு வருவோம்..

நாம எந்த காலகட்டத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கோம்ன்னு எப்படி நிர்ணயம் செய்வது?.. நம்மைச் சுற்றி உலகத்துல,உள்ள காட்சிகள் எந்த காலத்தை சேர்ந்தவையா இருக்கோ?.. அந்தக் காலகட்டத்தில் நாம இருக்கோம்ன்னு ஒத்துக்கலாமா?..

டைம் மிஷினுல இருந்து இறங்கிய உடன் சுற்றி இருக்குற பொருட்கள் எல்லாம் பழங்காலத்துல இருந்ததா, நாம கேள்விப் பட்ட மாதிரி இருந்தா,நாம காலப் பயணம் செய்தோம்ன்னு ஒத்துக்கலாம்ல்லையா?.. ஒருவேளை வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த பொருட்களை ஒரே சமயத்துல பாத்திங்கனா?..என்னன்னு முடிவு செய்விங்க?..ஹிஹி.. நாம வாழ்ந்துக்கொண்டிருக்குற உலகமும் இப்படிப்பட்ட கலவை கால காட்சிகளை கொண்டது தானுங்க...ஆரோக்கியமான வெறும் கண்களால் நாம எவ்வளவு தூரம் உள்ள பொருள் வரை பார்க்க முடியும்ன்னு நெனைக்கறிங்க?..

ஒரு கிலோ மீட்டர்?..
ரெண்டு கிலோ மீட்டர்.?. ஹிஹி.. ரொம்ப கஞ்ஜுஸா இருக்கிங்களே..
அருகில இருக்குற நிலா,சூரியன் துவங்கி ,பல ஒளியாண்டுகள் தூரத்துல இருக்குற நட்சத்திரங்களைக் கூட நாம வெறுங்கண்களால் பார்க்க முடியுமுங்க..ஹிஹி.. அதாவது நம்மோட பார்வைத் திறன் நம்மோட கண்களின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நாம் பார்க்கும் பொருள் வெளியிடும் அல்லது எதிரொலிக்கும் ஒளியின்,நம்மை வந்தடையும் அளவைச் சார்ந்தது.


இரவில் நாம் தொலைநோக்கி/வெறும் கண்களால் காணும் ஒவ்வொரு நட்சத்திரங்கள்/குழுமங்கள் ..பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவை..விண்வெளியின் பிரமாண்டத்தைப் பற்றி தெரிஞ்சுக்கனும்ன்னா,
தமிழில் விண்ணியல் எழுதும் விஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கு 
சென்று பாருங்கள்.


உதாரணத்திற்க்கு
The Crab supernova remnant is about 4,000 light-years away.
The Andromeda Galaxy is 2.3 million light-years away.

உதாரணமாக நீங்கள் 10 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள மின்னும் ஒரு நட்சத்திரத்தின் ஒளியைக் காண்கிறிர்கள் என்றால்.. அந்த ஒளி நட்சத்திரத்திலிருந்து உங்களை அடைய 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதுன்னு அர்த்தம்.. அப்படியென்றால் நீங்கள் இப்போது பார்க்கும் அந்த நட்சத்திரம்/அதன் ஒளி இப்போதைய நட்ச்சத்திரத்தினுடையதல்ல ..பத்து வருடம் முந்தைய நட்சத்திரத்தைத் தான் இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

ஒருவேளை நீங்கள் தொலைநோக்கி வழியாக Andromeda Galaxyயை பார்க்க வாய்ப்புக் கிடைத்தால்... நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 2.3 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய அதன் வடிவம் தான்.இப்போது உண்மையிலேயே அங்கே பல மாறுதல்கள் நடந்து விட்டிருக்கலாம்.. ஏன்?இன்னொரு நட்சத்திர வெடிப்பு நிகழ்ந்துக்கொண்டிருக்கலாம்.. அந்த ஒளி நம்மை வந்தடைய/நாம் காண, இன்னும் 2.3 மில்லியன் வருடங்கள் ஆகும். அதற்க்குள் நம்சூரியன் சிகப்பு நட்சத்திரமாகி தனது இறுதிகாலத்தை நெருங்கி,அதீத வெப்பத்தால் பூமியை எரித்துவிட்டிருக்கும்..மாற்றமடைந்த மனித சந்ததிகள் தொலைதூர கிரகங்களுக்குத் தாவியிருப்பார்கள்...

இல்லையென்றால்..இப்போது, அங்கும் பூமியைப்போல ஒரு சூழல் கிரகம் உருவாகி உயிர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கலாம்.. அவை இந்த வினாடி,நம் பூமியைப் பார்க்க நம்மைப்போலவே முயன்றுக்கொண்டிருக்கலாம்.. அவைகள் பார்க்கும் போது, 2.3 மில்லியன் வருடத்திற்க்கு முந்தைய சூரிய மண்டலம் தான் தெரியும் .(அப்போது சூரிய மண்டலமே முழுமையாக உருவாகியிருக்க வில்லை.. நம்ம பூமி உருவாவதற்க்கு முந்தைய கால நட்சத்திர கூட்டத்தை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்க முடிவது, விசித்திரமாக இருக்கு இல்லையா?).

இவ்வளவு ஏன்? நமது மிக அருகில் உள்ள நடுத்தர வயசு நட்சத்திரமான சூரியனின் ஒளி நம்மை வந்தடைய முழுமையாக எட்டரை
நிமிடங்கள் ஆகின்றது. நாம் பார்க்கும் சூரியன் எட்டரை நிமிடத்திற்க்கு முந்தையது. உதாரணத்திற்க்கு சூரியன் திடீரென மறைந்துவிட்டால் எட்டரை நிமிடங்கள் கழித்து தான் நாம் அதை உணர முடியும்..

எனவே.. நம் பூமியைச் சுற்றி நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளின் ஒளியும் அல்லது பொருளும் வேவ்வேறு காலகட்டத்தை சார்ந்தவை


ஏன்? பூமியிலும் கூட,மழை சமயத்தில் நம்மிலிருந்து 680.58 மீட்டர் உயரத்தில் இடி இடித்தால், அந்த இடிச் சப்தத்தை 2 வினாடிகள் தாமதமாக உணர்கிறோம். (speed of sound at sea level = 340.29 m / s).

நம் பக்கத்திலேயே உக்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவரின் வார்த்தைகள் கூட,இந்த கணப் பொழுதைச் சேர்ந்தவை அல்ல.. வினாடியின் மிகச்சிறிய அளவுக்கு முந்தையது.

தூரத்தில் கேற்க்கும் கோவில் மணியோசையை விட,அதே சமயத்தில் பல கிலோமீட்டர்கள் தாண்டி இருக்கும் ஒருவர் அலைபேசியில் பேசுவது விரைவாக வந்தடையும்.ஆனால் ஜ.எஸ்.டி கால்களில்,ரேடியோ வேவ்ஸ் வெவ்வேறு மூலைகளில் உள்ள தொலைத் தொடர்பு செயற்க்கைக் கோள்களுக்கிடையேயான தூரங்களை கடக்க வேண்டியிருப்பதால்..தூரம் 300,000 kilometersஜ எட்டினால் 1 வினாடி தாமதம் இருக்கும்.

எனவே நம்மைச் சுற்றியுள்ள நாம் காணும், அண்டவெளி இப்போதைய காலத்தைச் சேர்ந்தது இல்லை.வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த கலவையான காட்சிகளைத் தான் நாம் இப்போது கண்டுக்கொண்டிருக்கிறோம்.

எனவே நாம் வாழும் பால்வெளி மண்டலமே ஒரு இயற்க்கை டைம்மிஷின்/கால இயந்திரம்ன்னு சொல்லிக்கலாமா?..ஹிஹி.."பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும் " பதிவிலிருந்து ஒரு இடுகை.