Saturday, November 3, 2007

வேலைத்தேடிக் கொண்டிருக்கும் பெண்களே.. உஷார்..
                               நீங்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்ணா?அல்லது உங்களுக்கு இப்போது தான் படிப்பை முடித்துள்ள மகள் இருக்கிறாரா?..அல்லது வேலை தேடிக்கொண்டிருக்கும் உங்களின்/நண்பரின் சகோதரி இருக்கிறாரா? எனில் நீங்கள் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய பதிவு இது...

                               சில நாட்களுக்கு முன் என்னுடன் படித்த ஒரு தோழி அவளுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதை சொல்ல போன் செய்திருந்தாள்.வழக்கமான அரட்டைக்கு நடுவே அவள் கூறிய ஒர் விஷயம்..எனக்கு எதிர்பாராதது..
விஷயம் இதுதான்..

                               தோழியின் தங்கை..இப்போது தான் இஞ்சினியரிங் படித்து முடித்தார் (அதுவும் என்னோட துறை பிரிவு தான்).[நாங்கள் படிக்கும் போது..பத்துபதினைந்து பேராய்ஒன்றாக காலேஜ் கட்டடித்து,படத்துக்கு போவதெல்லாம் தெரிந்தும் தோழியை வீட்டில் மாட்டிவிடாத(விட தெரியாத) நல்ல பெண்.நான் கடைசி பத்து நாளில் படிச்சுதான், கல்லூரி முதல் மதிப்பெண் வாங்குவதை, எல்லாரும் சொல்லியும் நம்பாமல் தெனமும் வீட்டுக்கு வந்து ரெய்டு செஞ்ச புண்ணியவதி..

                                வேலைக்கு காத்திருக்கும் அவளுக்கு ஒரு போன் வந்தது.ஏதோ லோக்கல் பூத்துலருந்து ..கூப்பிட்டவன் " நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது,ஆனா நீங்க யாருன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.".என்று சொல்லி அவளது மதிப்பெண் ,முதல்கொண்டு கூறவும்,இவளும் சரி சரி யாரோ தெரிஞ்சவங்கதான் விளையாடுராய்ங்கன்னு.. ஜாலியா..அசால்டா பேசியிருக்கா.முடிவுல.. "நீங்க யாருன்னு இன்னும் தெரியல்லய்யே"ன்னு..கேட்டதுக்கு "கண்டுபிடி பாக்கலாம்"ன்னு வச்சுட்டான்.

                            இத்தோட விடலை அந்த "விடலை"ப் பையன்.. அடிக்கடி போன் செய்ய ஆரம்பித்தான்.இரவிலும் கூட..சில நாள்களில் பேச்சும் வேறு ரீதியில மாறவே,மிரண்டு போன தோழியின் தங்கை,வேறு எண்ணை மாற்றிவிட்டாள்.அப்பவும் அவன் விடவில்லை.. அவளோட வீட்டு எண்ணுக்கே போன் போட ஆரம்பித்து விட்டான்."நான் அந்த பார்க்கில் காத்திருப்பேன்.நீ வரவில்லை என்றால்.நாம ஜாலியா பேசனத எல்லாருக்கும் மொபைல்ல அனுப்பிச்சுடுவேன்"னு மெரட்டியிருக்கான்.முதன் முறையா..பயந்து போன அவள் வீட்டுலயே முடங்கி தனிமையில் அழுதிருக்கிறாள் அந்த சின்னப்பெண்.

                               வழக்கத்துக்கு மாறா அடிக்கடி வீட்டுல போன் வர்ரதும் யாராவது எடுத்தா கட் ஆவதும்,கலகலப்பான தங்கையின் நடவடிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றமும் தோழிக்கு சந்தேகத்தை உண்டாக்க..பக்குவமாய் விசாரித்தபோதுதான்.. அழுகையோடு விஷயத்தை கூறியிருக்கிறாள்.அதிர்ச்சியடைந்த தோழி.."கவலைப்படாதேம்மா..உன்னை பத்தி எங்களுக்கு தெரியும்".இதை சரிப்படுத்திடலாமின்னு ஆறுதல் கூறியிருக்கிறார். தன் பெற்றோரிடம் பக்குவமாக எடுத்துக் கூற.. அவர்களும் நிலமையை புரிந்துக்கொண்டு மகளுக்கு ஆறுதல் சொல்லியிருக்காங்க...

                              இதை தோழி என்னோடு கூறி.. "என்ன செய்யரதுன்னே தெரியலடா..அவ வேற ரொம்ப அப்செட்" ன்னு கவலைப்பட.. எனக்கு தெரிந்த (நம்பகமான) ஒரு காவல்துறை நண்பர் முகவரியை கொடுத்து,அவருக்கும் பேசி உதவுமாறு கேட்டுக்கொண்டேன்."இவனுங்களை எல்லாம் விடக்கூடாது"ன்னு அவரும் சூடாயிட்டார்.

                               நண்பரும் உடனே தோழியோட ,அவரது வீட்டுக்கு போயி விசாரணயை ஆரம்பிச்சிட்டாரு..(கேஸ் இல்லாமத்தேன்).மொதல்ல வந்த டெலிபோன் பூத்து நம்பர் மொபைல்ல இருந்து அழிஞ்சிட்டதால...

                                    "அந்த நபர் இதுவரை உன்னைப்பற்றி என்னென்ன தெரியுமுன்னு சொன்னான்"ன்னு கேட்டு எழுதிக்கிட்டாரு.கடைசியா அத மொத்தமா படிச்சிக்காட்டி..இத்தன விபரங்கள் ஒரே சமயத்துல வெளியாளுக்கு கெடக்கனுமின்னாக்கா அது நீயே கொடுத்தாத்தாம்மா உண்டு..இவையெல்லாம் யார்யாருக்கு தெரிய வாய்ப்பு இருக்குன்னு "கேட்டு ஒரு பட்டியல் தயாரிச்சார்.அப்பத்தேன்..இந்தப்பெண் எல்லா கம்பெனிக்கும் அனுப்பிய CVல இந்த விபரங்கள் எல்லாம் இருந்ததும்.வீட்டுல நெட் இல்லாததால வழக்கமான ஒரு இன்டர்நெட் சென்டருல அத சேத்து வச்சிருக்கிறதும் தெரிய வந்தது..பழக்கமான சென்டர்ங்கரதால அங்க போயி பாத்ததுக்கு..அப்பயும் அந்த குறிப்பிட்ட கம்பியுட்டர் திரையில அந்த CV FILE இருந்திருக்கு..

                                சென்டர் நடத்துற பெண்ணை விசாரிசப்போ..அந்த குறிப்பிட்ட கம்பியூட்டர் மொதல்ல இருக்கிறதுனால,தனிமை விரும்பி பலபேரும் அத விரும்பரதில்ல..தோழியின் தங்கை போல கொஞ்சம் பேருதா உபயோகிச்சதாவும்.அரைமணிக்கொருதரம் புகைப்படம் எடுக்கும் கேமிராவை முதலாளி, உள் கூரையில் பொருத்தி இருப்பத்தால்,கடந்த ஒரு மாதம் வரை அதுல புகைப்படம் கிடைக்கும் எனக்கூறவும்.ஒரு வாரத்துக்கு முந்தைய (போன் வந்த வாரம்) படங்கள பாத்து ,ரெஜிஸ்டரையும் பாத்து ஒருத்தன புடிச்சார்(அவன் அங்கே மாதாந்திர கட்டண திட்டத்தில சேந்திருந்ததால..)

                               அவன் வந்த தேதியும் நேரமும் ,அந்த fille ஜ கடைசியா திறந்த நேரமும் (file ன் propertyல பாக்க தோழி யோசனை கொடுத்திருக்கா.) ஒத்துப்போகவே..அவன் வீட்டுக்கே போய் அவனப்பத்தி விசாரிச்சியிருக்கார்.டிப்ளமா சேந்து படிக்கவராததால பாதியிலேயே விட்டுட்டு ஊர் சுத்தும் அவன், அவர கண்டதும் மிரண்டதும்."ஏண்டா நீதான் போன் பன்னுனியா? எனக்கேட்டதும்..டபால்ன்னு உண்மைய ஒத்துக்கிட்டான்.

                             இது போல பலபெண்கள் CV ய நெட்சென்டருல அழிக்காம எதிர்கால உபயோகத்துக்கு/மறந்து விட்டுட்டு போவதாயும்,தேடினாக்கா ஒரு சென்டருல நாலாஞ்சாவது தேறுமுன்னும்(?),பொழுது போக்காயும்,தேவைப்பட்டால் மிரட்டி பணம் வாங்கவும் முயன்றதா ஒத்துக்கிட்டான்..(இத்தனைக்கும் அவன் தோழியோட தங்கைய பாத்ததே இல்ல).அவனோட நண்பனும் இப்பிடி ஒரு பெண்ணோட பேசி இப்ப நல்ல நண்பர்களா இருக்காங்களாம்(ஒருவேளை அவன் ரொம்ப நல்லப் பையனோ?).நண்பர் ,அவனை ரெண்டு தட்டு தட்டி,அவனோட பெற்றோர் கெஞ்சல்/உத்தரவாதத்தின் பேரில் அவனை விட்டிருக்கிறார்.

                  நேத்து தோழி போனுல.".தாங்க்ஸ்டா.."என்றபோது " ஃபிரண்ட்ஸ்க்குள்ள எதுக்குப்பா இந்த தாங்க்ஸ் எல்லாம்"ன்னு சொல்லிட்டு ,சந்தோஷமா நண்பரை கூப்பிட்டு நன்றி(அப்ப நீ மட்டும்?) கூறிய போது.."பையா..நன்றியெல்லாம் இருக்கட்டும்..ஊருக்கு வரும் போது ,நான் சொன்ன போலிஸ் கூலிங் கிளாசை டுவ்டிஃபிரில வாங்கிட்டு வந்துரு.."என சிரித்தார்(என்னயிருந்தாலும் நம்ம ஊரு போலிசாச்சே..ஹிஹி..).அவர் சும்மா விளையாட்டுக்கு சொன்னாலும்,நெசமா வாங்கிக் கொடுக்கனுமின்னு முடிவு செஞ்சிக்கிட்டேன்.

                                   மத்தவங்களுக்கும் ஜாக்கிரதையா இருக்கட்டுமின்னு தோழியோட அனுமதியோட..இத சொல்றேன்.

                               வேலை தேடும் பெண்களே.. இப்பத் தெரியுதா..நாட்டுல என்னவெல்லாம் நடக்குதுன்னு?.இன்னும் எத்தன பேர் இப்பிடி மாட்டிக்கிட்டு..வெளிய சொல்ல முடியாம தவிக்கிறாய்ங்களோ.?.

                               இது போன்ற "களவாளிப்பசங்க "எல்லா எடத்துலயும் இருக்காங்க..நெட்சென்டர் வச்சியிக்கிறவனோடகூட்டாளியாயிருந்துட்டாக்கா.. அவனோட உதவியோட உங்களை சென்டருல வீடியோவே எடுக்க முடியும்ங்கரது அதிர்ச்சியான விஷயம்.

                               மேலும் நீங்க அனுப்பும் cv கப்பெனியோட மேலிடத்துக்கு மட்டுமே போய் சேரரதில்ல..இடையில பியுன்..போன்ற சம்பந்தமில்லாதவங்ககிட்டயும்.cv நிராகரிக்கப்பட்டாக்கா பழைய பேப்பர்காரங்க கிட்டயும் (சில சமயங்களில முழுமையா அழிக்கப்படாமல்)போய் சேருது.

      
           இதனால வர்ர ஆபத்த தவிர்க்க சில யோசனைகள்..


1)       எந்த நெட் சென்டருலயும் உங்க சம்பந்தப்பட்ட கோப்புகள சேமிச்சி வைக்காதிங்க...கையோட ஒரு "flash memory/floopy disk" வாங்கி வச்சிக்கோங்க..

2)       CVல சொந்த முகவரிய/டெலிப்போன கொடுக்காம .. வயசு பொண்ணுங்க இல்லாத உறவினர்/நண்பர் வீட்டு முகவரிய அவிங்க அனுமதியோட கொடுத்துட்டு அடிக்கடி செக் பண்ணிக்கலாமே.

3)      இப்பல்லாம் இரண்டு சிம் கார்டு ஒரே போனுல வந்துட்டதால.. முடிஞ்சா வேலை தேடும் விஷயத்துக்கு ஒரு சிம்கார்டு தனியா வைக்கலாம்.அந்த எண்ண CV யில மட்டும் கொடுத்துட்டு ,வேலைய தவிர வேற கால் வந்தாக்கா.. உஷாராயிடலாம்.

4)       கம்பெனி சம்மந்தப்பட்ட மானேஜரோட மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியா விண்ணப்பம் அனுப்பினாக்கா.. சம்மந்தமில்லாதவங்ககிட்ட போறத குறைக்கலாம்.

5)       தவிர்க்க முடியாத அவசியம் இருந்தா மட்டும்,புகைப்படம் இணைச்சா போதுமானது.

6)       கெடைச்ச உப்புமா கம்பெனி பேருக்கெல்லாம் CV அனுப்பாம..நல்லா விசாரிச்சு ,நல்ல கம்பெனிகளுக்கு மட்டும் அனுப்பலாம்.


                             
    முக்கியமா..ஒருவேளை இப்படி ஏதாவது பிரட்சனையில மாட்டிக்கிட்டாக்கா.. சோர்ந்துடக்கூடாது..தைரியமா அத எதிர்கொள்ளனும்..ஏன்னாக்கா..நாம வாழுர உலகம் அப்படியாயிடுச்சு..பெத்தவங்ககிட்ட மறைக்காதிங்க.. விளக்கிசொல்லி அவங்க உதவிய கேளுங்க..


                                 இந்த முன்னெச்சரிக்கை விஷயத்தை உடனே உங்களுக்கு தெரிந்த வேலை தேடும் தோழிகளிடமும்,நண்பர்களின் மகள் /உறவினர் குடும்பத்தாருக்கும் அனுப்பி வையுங்க..

                             
    விங்களும் இப்படி ஏதேனும் ஆபத்துல மாட்டிக்கிறதுக்கு முன்னாடி,நீங்க செய்யர இந்த உதவி.நீங்க அவங்க மேல வைச்சிருக்கிற உண்மையான அக்கறையை உணர்த்தும்.


அன்புடன் உங்கள் ரசிகன்.


39 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

muthukkumaran A.N said...

rasigan, already i have forworded to all known person.thank you.

said...

நானும் சொல்லிட்டேனுங்கோ.

said...

Rasikan, an informative & useful post, thanks a ton!!!

[ sorry unicode illa intha system la, so cudnt type in tamil]

Parents shud also understand their kids when they face such problems,else their children wont approach them to overcome such issues,

Will definetly fwd your post to my friends!!!
Thanks Rasigan!!

kavitha said...

// மேலும் நீங்க அனுப்பும் cv கப்பெனியோட மேலிடத்துக்கு மட்டுமே போய் சேரரதில்ல..இடையில பியுன்..போன்ற சம்பந்தமில்லாதவங்ககிட்டயும்.cv நிராகரிக்கப்பட்டாக்கா பழைய பேப்பர்காரங்க கிட்டயும் (சில சமயங்களில முழுமையா அழிக்கப்படாமல்)போய் சேருது.//

true.

kavitha said...

//முக்கியமா..ஒருவேளை இப்படி ஏதாவது பிரட்சனையில மாட்டிக்கிட்டாக்கா.. சோர்ந்துடக்கூடாது..தைரியமா அத எதிர்கொள்ளனும்.//

exactlly.

said...

நல்ல காரியம் செய்தீங்க. கண்டிப்பா இந்த தகவலை நண்பர்களுக்கு அனுப்புகிறேன் :)

said...

நம்ம வலைப்பக்கத்துக்கு உங்க வீட்டுல இலவசமா வெளம்பரம் கொடுத்ததுக்கு நன்றிங்கோ :)

அப்புறம் ஒரு திருத்தம்(இந்த பழக்கத்தை மட்டும் விட முடியல:))
'சமிபத்தில்' இல்லை 'சமீபத்தில்' என்று வர வேண்டும் :)

said...

ஹாய் ரசிகா,

அப்ப இப்படிலாம் வேற நடக்குதா?
பாருங்க, எங்களுக்கு எத்தனை கஷ்டங்கள், சோதனைகள். இதுல வேற

//இப்படி ஏதாவது பிரட்சனையில மாட்டிக்கிட்டாக்கா.. சோர்ந்துடக்கூடாது..தைரியமா அத எதிர்கொள்ளனும்..ஏன்னாக்கா..நாம வாழுர உலகம்..//

அதனால பெண்களே உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நம்ம ரசிகன் காப்பாத்துவார் நம்புங்கள்.தைரியமாக இருங்கள்.


நல்ல பதிவு. அட்லீஸ்டு இவ்ளோ மொக்கை போட்டாலும் ஒன்னே ஒன்னாவது நல்லதா போட்டீங்களே. வாழ்க.

said...

ரசிகன், பொது நலச் சேவைக்கு பாராட்டுகள். ஆலோசனைகள் அருமை. பெண்களே கடைப்பிடியுங்கள். (என்னாபா, வரவர ரொம்ப சீரியசா பதிவெல்லாம் வர்து ?? என்னாச்சுமா கண்ணு ? )

said...

ரசிகா.
' இத்தோட விடலை அந்த "விடலை"ப் பையன்.. ' என்னயிருந்தாலும் நம்ம ஊரு போலிசாச்சே..ஹிஹி.'
இன்னு அந்த நக்கலை விட முடியவில்லை போல இருக்குதே.haa.haa.
உண்மையிலேயே நாம் கவனிக்கத் தவறும் விஷயம் தான்.எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
எல்லாருக்கும் அனுப்பிவிட்டேன்.உங்கள் e-mail முகவரியும் சேர்த்து.
நன்றி என்று சொல்ல மாட்டேன்.எதிர் பார்க்காதிங்க.

' ஃபிரண்ட்ஸ்க்குள்ள எதுக்குப்பா இந்த தாங்க்ஸ் எல்லாம்'
அதுதானே?.

said...

நல்லா சொன்னீங்க! இந்த ஆர்குட் ல்ல இருந்து ஆரம்பிக்கனும்!

said...

ம்ம்ம்! ennatha solla! thirudanai paarthu thiruntha vitta ...

avanavanunga akka thangachikuna eppadiyo, appadi thaana mathavangalukkum enbathu ennaiku puriyamo!

said...

// rasigan, already i have forworded to all known person.thank you//
ரொம்ப நன்றிகள் முத்து.. நல்வருகை..

said...

// நானும் சொல்லிட்டேனுங்கோ.//
வாங்க விஜய் உங்க ஆளுக்கும் சேத்துதான?.. ஹிஹி...

said...

// Parents shud also understand their kids when they face such problems,else their children wont approach them to overcome such issues,//
ரொம்ப சரியா சொன்னீங்க திவ்யா...எல்லா பெற்றவங்களுக்கும் அந்த பக்குவம் வந்திட்டாக்கா.. இளம்வயசுல வர்ர பல பிரச்சனைகளுக்கு தீர்வு கெடைக்கும்தானுங்க..
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றிகள் திவ்யா..

said...

// true.//
//exactlly.//
வாங்க கவிதா சமிபத்துல மணிரத்தினம் படம் ஏதாவது பாத்துட்டீங்களா?ஹிஹி..
வருகைக்கு நன்றிகள்.

said...

// நம்ம வலைப்பக்கத்துக்கு உங்க வீட்டுல இலவசமா வெளம்பரம் கொடுத்ததுக்கு நன்றிங்கோ //
அட என்னங்க இதுக்குப் போயி.. நா என் கடமையத்தான செஞ்சேன்?..யான் பெற்ற இன்பம் ...பெறுக நம் நண்பர்களும்.

said...

// அப்புறம் ஒரு திருத்தம்(இந்த பழக்கத்தை மட்டும் விட முடியல:)//
மாத்திப்புட்டேனுங்க.. அப்பறம் நல்ல பழக்கத்த எதுக்கு விடனும்?..
ரொம்ப நன்றிங்க வேதா..

said...

வாங்க சுமதி வாங்க..
// எங்களுக்கு எத்தனை கஷ்டங்கள், சோதனைகள். //
பெண்கள் வேலைக்கு சேந்த பிறகு பெண்களால் "எங்களுக்கு எத்தனை கஷ்டங்கள், சோதனைகள்."ன்னு ஆண்கள் சொல்ராய்ங்களே?..ஹிஹி..

said...

// அதனால பெண்களே உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நம்ம ரசிகன் காப்பாத்துவார் நம்புங்கள்.தைரியமாக இருங்கள்.//
ஆஹா.. ஆரம்பிச்சிட்டிங்களா?..ஹா..ஹா...

// நல்ல பதிவு. அட்லீஸ்டு இவ்ளோ மொக்கை போட்டாலும் ஒன்னே ஒன்னாவது நல்லதா போட்டீங்களே. வாழ்க.//
ஹிஹி.. வாழ்த்துக்கு ..ரொம்ப நன்றிங்க சுமதி..

said...

// ஃபிரண்ட்ஸ்க்குள்ள எதுக்குப்பா இந்த தாங்க்ஸ் எல்லாம்'
அதுதானே?.//
இருந்தாலும் ஒரு மொறைக்கு சொல்லரது தானுங்க..ஹிஹி.. ரொம்ப நன்றிகள் பிரித்தி(அப்படியின்னு நானும் சொல்ல மாட்டேன்.(வாய் தவறி வந்தத எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு))

said...

// நல்லா சொன்னீங்க! இந்த ஆர்குட் ல்ல இருந்து ஆரம்பிக்கனும்!//
நா இன்னும் அந்த ஊருக்கு போய் பாக்கலீங்களே..நல்லாயிருக்குமா?

// ம்ம்ம்! ennatha solla! thirudanai paarthu thiruntha vitta ...//
என்ன மாமு திடீருன்னு ஆங்கிலத்துக்கு மாறிட்டீங்க?.. ஹிஹி..
உங்க கருத்துக்கும் வருகைக்கும்...ரொம்ப நன்றிகள் ..

// thirudanai paarthu thiruntha vitta ...//
ரொம்ப ரொம்ப சரி..மாமே...

said...

ரசிகன், எல்லோருக்கும் பதில் சொல்லிட்டீங்க - என் மறுமொழிக்கு என்ன பதில் ?? ஏன் சொல்லலே ?? கடுமையாகக் கண்டிக்கிறேன்.

said...

// ரசிகன், எல்லோருக்கும் பதில் சொல்லிட்டீங்க - என் மறுமொழிக்கு என்ன பதில் ?? ஏன் சொல்லலே ?? கடுமையாகக் கண்டிக்கிறேன்.//

சீனா சார் மன்னிச்சுடுங்க.. நா உங்ககிட்ட பேசனது தவறி அடுத்த பதிவுல போய் விழுந்துடுச்சி... அத அப்பிடியே கீழ G3 பண்ணிடரேன்..ஹிஹி...

// வாங்க சீனா சார் வாங்க.. .எப்பன்னா நேரம் கெடச்சாக்கா கொஞ்சம் இப்படி.. (ஏன்னாக்கா .. நம்ம வேதா நமக்கே தெரியாம பட்டமளிப்பு விழாவெல்லாம் நடத்தி எனக்கு "பொற்க்கை மன்னன்" மாதிரி "மொக்கை மன்னன்"இன்னு பேர் சூட்டு விழாவெல்லாம் நடத்திட்டாய்ங்கல்ல..ஹிஹி...)//

said...

//
Sumathi. said...
ஹாய் ரசிகா,

அப்ப இப்படிலாம் வேற நடக்குதா?
பாருங்க, எங்களுக்கு எத்தனை கஷ்டங்கள், சோதனைகள். இதுல வேற

//இப்படி ஏதாவது பிரட்சனையில மாட்டிக்கிட்டாக்கா.. சோர்ந்துடக்கூடாது..தைரியமா அத எதிர்கொள்ளனும்..ஏன்னாக்கா..நாம வாழுர உலகம்..//

அதனால பெண்களே உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் நம்ம ரசிகன் காப்பாத்துவார் நம்புங்கள்.தைரியமாக இருங்கள்.


நல்ல பதிவு. அட்லீஸ்டு இவ்ளோ மொக்கை போட்டாலும் ஒன்னே ஒன்னாவது நல்லதா போட்டீங்களே. வாழ்க.
//
rippetey

really superb post.

Anonymous said...

very nice post!! Rasigan!
Thanks for sharing.
Anand

said...

// rippetey
ஆஹா.. சிவாமாம்ஸ் ரிப்பிட்ட ரைப்பிட்டாக்கிட்டீங்களே..ஏதாவது உள்குத்தோ?..
really superb post.//
நன்றிகளுங்க..

said...

// Anonymous said...

very nice post!! Rasigan!
Thanks for sharing.
Anand

Friday, 16 November, 2007//

வருகைக்கும் உங்க கருத்த ஷேர் பண்ணிக்கிட்டதுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகளுங்க ஆனந்த்..

Anonymous said...

very usefull post.
thank you.

Anonymous said...

:P

said...

நல்ல கட்டுரை ரசிகன்.. நல்ல ஜனரஞ்சகமா எழுதுறீங்க.. தொடருங்கள்..

said...

நல்ல எச்சரிக்கை பதிவு நான் இப்பொதுதான் பார்த்தேன் நானும் என் நன்பர்களுக்கெல்லாம் பரிந்துரைக்கிறேன்.
நல்ல செய்தியை பதித்தமைக்கு நன்றி

said...

மிகவும் உபயோகமன ஒரு பதிவு..

said...

// Anonymous said...

very usefull post.
thank you.////

ரொம்ப நன்றிகள் நண்பரே

said...

// கானகம் said...

நல்ல கட்டுரை ரசிகன்.. நல்ல ஜனரஞ்சகமா எழுதுறீங்க.. தொடருங்கள்.././

வாங்க கானகத்தாரே.. நல்வருகை..
நம்ம ஊருக்காரர் (தோஹா)கிட்ட பாராட்டு வாங்கனுதுல ரொம்ப சந்தோஷமுங்க..

said...

// புரட்சி தமிழன் said...

நல்ல எச்சரிக்கை பதிவு நான் இப்பொதுதான் பார்த்தேன் நானும் என் நன்பர்களுக்கெல்லாம் பரிந்துரைக்கிறேன்.
நல்ல செய்தியை பதித்தமைக்கு நன்றி//

நன்றிகள் நண்பரே ,பாராட்டுக்கும் பரிந்துரைக்கும் நல்ல உள்ளத்துக்கும்.

said...

// பாச மலர் said...

மிகவும் உபயோகமன ஒரு பதிவு..//

மிகுந்த நன்றிகள் பாச மலர்.

said...

ரொம்ப உபயோகமான பதிவு அங்கிள்.
நம் மின்னஞ்சலிலேயே கோப்புகளை சேமித்து வைத்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதை அறியாமல் பெரும்பாலானோர் இப்படி மாட்டிக் கொள்கின்றனர். இது போன்ற பாதுகாப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வுகள் இல்லாமல் இருப்பதற்கு நம் நாட்டின் மிக முட்டள் தன்மான கல்வி முறையே காரணம்.

said...

//ரொம்ப உபயோகமான பதிவு அங்கிள்.//

நானும் பொடியனின் கருத்தை வழிமொழிகிறேன்