Friday, January 18, 2008

சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் (இளையவர்களுக்கான விஞ்ஞானம்) - இடுகை1(ஒலிப் பட்டையுடன்)...

குட்டீஸ்... போன முறை விளையாட்டு மூலமா நாம கத்துக்கிட்ட பாடம் உங்களுக்கு புடிச்சிருந்ததா?..சரி இன்னைக்கு நாம படிக்கப் போறது மனித உடல் எடை சமசீரின்மை..(human body imbalance)&மூளையின் கணிப்பு சக்தியில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள்.

(சன் டீவி ஸ்டெயிலில் படிக்கவும் : P ) தமிழ் பதிவுலகிலேயே , முதன் முறையாக பொதுப் பதிவுல,பதிவோட குரலையும் சேத்து மக்களை கொடுமைப் படுத்தறேன் பொறுத்துக்கோங்கோ.. மக்கள்ஸ் :)))))))

final science for ...(விளையாட்டுப் பாடத்தை ஒலியா கேக்கனுமா?..மேல இருக்குற பிளேயர்ல பிளே பட்டனை அழுத்துக்க..:))

”கண்ணைக் கட்டி காட்டுல விட்டப் போல”ம்பாங்க...இந்த முறை அங்கிள் உங்களை கண்ணைக் கட்டி கிரவுண்டுல விடப் போறேன்.இந்த பரிசோதனைக்கு உங்க அப்பாவோட உதவியும் தேவைப் படும்.அதனால அவரையும் கூப்பிட்டுக்கோங்க..


தேவையான பொருட்கள் :உங்க கண்ணைக் கட்டி மறைச்சுக்கறதுக்கு ஒரு தடிமனான கர்சிப் துணி கால் பாதுகாப்பிற்க்கு காலணிகள் அவசியம்.

விளையாட்டு ரொம்ப சிம்பிள்.. உங்க ஊருல இருக்குற,பெரிய விளையாட்டு மைதானத்துக்கு போயிருங்க.. சமதளமா புற்கள் மட்டுமே இருக்குற பகுதிய தேர்ந்தெடுத்துக்கோங்க.. ஓட்டப் பயிற்ச்சிக்கு யாரும் வராத நேரத்தை தேர்வு செய்யறது ரொம்ப அவசியம்.நீங்க நிற்குற இடத்துக்கு சுற்றி ஒரு 30 அடி நல்ல சமதளமா இருக்கற மாதிரி பார்த்துக்கோங்க..உங்க முன்னாடி மைதானத்துல, காலைத் தடுக்கி விடுற அளவு கற்கள்,பள்ளம் போன்றவை இருக்குதான்ன்னு பார்க்கச் சொல்லுங்க.. இருந்தா அவற்றை நீங்கிடுங்க/வேற இடம் தேர்ந்தெடுத்துக்கலாம்.


இடம் அப்பாவுக்கு திருப்தியாகிடுச்சுன்னா..நீங்க நிற்குற இடத்துல இருந்து,ஒரு முப்பது அடி தூரத்துல இருக்குற ஒரு பொருளை,போய் சேர வேண்டிய இடமா பார்த்து வச்சிக்கோங்க. உங்க கண்களை,கொண்டு வந்த துணியால கட்டிக்கோங்க.. (குறிப்பா சுபாக் குட்டி,கரண்,கிஷோர் செல்லம் யாரும் கண்ணை துறந்துக்கிட்டு ஏமாத்தப் படாது..:) )


நீங்க செய்ய வேண்டியதெல்லாம் கண்களை சாதாரணமா மூடிக்கிட்டு, முப்பது அடி தூரத்துல இருக்குற டார்கெட் இடத்த நோக்கி இயல்பா நடக்க வேண்டியது தான்.ஓடக் கூடாது,வேகம் வேண்டாம்.நிதானமா நடங்க.. வழியில எதுவும் உங்களை தடுக்காம அப்பா பாத்துக்கிட்டு இருக்காரு இல்லையா?..நம்பிக்கையா, கீழ விழாம அடிமேல் அடி வைச்சு நடஙக..


ஒரு முப்பது அடி நடந்தப்பறம் துணியை நீக்கிட்டு,கண்ணை திறந்து பாருங்க...அட என்ன ஆச்சர்யம்.. நீங்க நேரா நடந்துக்கிட்டிருக்கறதா தானே நெனச்சிக்கிட்டிருந்திங்க.. ஆனா நிஜமாவே நீஙக போக வேண்டிய பாதைய விட்டு வலதுபுறத்துல,கிட்டத்தட்ட ஒரு அரைவட்டம் அடிச்சு ஆச்சர்யகரமான தூரம் வந்து இருப்பிங்க.உஙகளை அறியாமலேயே..


எப்படின்னு காரணம் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா?.. ரொம்ப சிம்பிள்..

நம்ம உடல் பாக்கறதுக்கு வலது இடது புறஙக்ளுல சரி சமமா அமைஞ்சிருந்தாலும்.. உண்மையிலேயே நமது உடலின் வலது,இடது புறங்கள் சமமான எடையோட இல்லை.. அதுக்கு என்ன காரணங்கள்ன்னு பார்த்தா..

1) நம் உடல் உள்ளுறுப்புக்கள் இடது வலது ,புறம் சரியான எடைவிகிதத்துல அமைஞ்சு இல்லை, கல்லீரல்,இதயம் இதெல்லாம் ஒரு புறம் அதிகமா ஒதுங்கியிருக்கு.(பார்க்க:சிம்பிள் அனாடமி -சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ்)

2) பொதுவா நாம எல்லாரும் வலதுகை பழக்கமுடையவங்களா இருக்கறதுனால,வலது கை,தோள்கள் எல்லாம் தசைகள் இறுகி,அதிக அடர்த்தியோட பலமா,நமது இடது பக்கத்தை விட எடை அதிகமா இருக்கும்.

அதனால இயல்பாவே நமது உடல்ல வலது பக்கம் கொஞ்சம் எடை கூடுதலா அமைஞ்சுடுது.நாம பழகிட்டதால இதை பெருசா உணரதில்லை.கண்களால் பாக்கும்போது,நாம தவறாம நேர் கோட்டுல போக முடியுது.ஏன்னா பார்வையால,மூளை கால்களின் சின்ன சின்ன கோண மாறுபாடுகளை லைவ்வா சரி செஞ்சுக்கிட்டே வருது.ஆனா கண்களை மூடிக்கிட்ட பின்னால் நமது மூளையால பாதைய சரியா கணிக்க முடியலை.. அப்போ உடல் எடை போன்ற சின்ன சின்ன விசயங்களும் கணக்கில வருது.

நம்மை அறியாமலேயே வலது பக்கம் லேசா சாய்ந்துக்கொண்டே நடக்கிறோம். அதனால நம்ம பாதை ஒரே நேர் கோடா இல்லாம,கொஞ்சம் கொஞ்சமா வட்டத்தின் பரிதி வடிவில மாறுகிறது. கவலையில்லை.. பாதையில ஏதும் ஆபத்தான தடையில்லைன்னு நாம ஏற்கனவே பாத்தோமே. தொடர்ந்து நடந்திங்கன்னா.. அது முழுமையான வட்டமா நீங்க ஆரம்பிச்ச இடத்துக்கிட்டயே வந்திருவிங்க..ஆச்சர்யமா இருக்கில்ல?..


உங்க காலடி தூரத்தையும்,உங்க இடது,வலது எடை வேறுபாட்டையும் பொறுத்து வட்டம் பெரிதாகவோ,சிறிதாகவோ இருக்கும்.
ஜாலியா செஞ்சுப் பாருங்க...

(இருட்டில் கூட நாம நேரா நிக்கிறோமான்னு நம்ம மூளைக்கு உணர்த்தரது,நம்ம காதினுல் உள்ள குறுத்தெலும்பை சுற்றி இருக்குற திரவத்தின் சம மட்டம் தான்ன்னு ஏற்கனவே படிச்சிருக்கறது ஞாபகம் இருக்கா?..)

கண்பார்வை அற்றவர்களுக்கு,மூளையின் பயிற்ச்சியால.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பாதத்தோட angle அதாவது கோணம் சிறிது மாறினாலும் அவங்களால உணர முடியும்.சரிப் படுத்திக்க முடியும்.அவங்களால் நேரா நடக்க முடியும்.உடல் எடை சமச்சீரின்மை அவங்களை அந்த அளவு பாதிக்கறதில்லை.

பெரியவங்களுக்கு..

ஃபிரண்ட்ஸ், நீஙக செய்ய வேண்டியது

1) கிரவுண்டுல பிள்ளைகள் நடக்கும் பாதையில ,ஓட்டப் பயிற்ச்சி எடுக்குற யாரும் வந்து குறுகிடாம இருக்க,யாரும் விளையாடாத நேரத்தை தேர்ந்தெடுத்துக்கோங்க...

2)எந்த கற்களோ,பள்ளம்,மேடு போன்றவைகளோ பிள்ளைகள் கண்ணைக் கட்டி நடக்கும் பாதையில் இல்லாம பாத்துக்கோங்க..

3)குழந்தை நடக்கும்போது லெஃப்ட்,ரைட்,நேர் பாதைன்னு கமெண்டரி கொடுக்க வேணாமே.. அவங்க நடக்கற மாறிய பாதையில எந்த தடையும் இல்லைங்கரதால, ஒன்னும் சொல்லாம அமைதியா கவனிங்க...லெட் தம் எக்ஸ்புளோர் நியு வண்டர்ஸ்...

இந்த விளையாட்டுல பெரியவஙக்ளுக்கும் ஒரு பாடம் இருக்கு.: இதேப் போல நாமலும் கண்ணைக் கட்டிக்கிட்டு நடக்க முயலும்போது என்ன என்ன நடக்கும் தெரியுமா?..

1)நம்பிக்கையின்மை:எந்த தடையும் பாதையில இல்லைன்னு நாம ஏற்கனவே உணர்ந்திருந்தாலும்,பிள்ளையைப் போல,தைரியமா நாளு அடிக்கு மேல எடுத்து வைக்க முடியாது.ஏதோ ஏதோ குறுக்கே வருவது போல தட்டுத் தடுமாறுவோம்.

2)இதயம் வேகமா துடிக்கும்,பிள்ளையைப்போல திரில் ரசிக்க மனம் வராது.

3)மனதில ஒளிந்திருக்குற பல கருப்பு மேகங்கள்,எண்ண அலைகள் ஒரு எச்சரிக்கை அலர்ட்னஸ்ங்கர பேருல எழுந்துக்கொண்டே இருக்கும்.

4)நம்மை அறியாமலேயே,இதுல சொன்ன படி ஆகக் கூடாதுன்னு, வேண்டுமென்றே இடதுபுறம் காலை இழுத்து வைத்து,நேர் பாதையில் செல்ல முயலுவோம்,செயற்க்கையாக.இதுல ஓவரா முயன்று,நேரா இல்லாம, இடது பக்கத்துல வேற பாதை போடறதுக்கு கூட வாய்ப்பு இருக்குங்க..

அதனால இது சூதுவாது(?) அறியாத பிள்ளைகளுக்குத்தான் சரியா வரும்.பெரியவங்களுக்கு இல்லை:P:P:P

லீவு நாளுல,ஜாலியா முயன்று பாத்துட்டு சொல்லுங்க...

அடுத்து மனப்பயிற்ச்சி பிரிவுல, ஒரு விளையாட்டைப் பார்ப்போம், குட்டீஸ்.. அதுவரை டாட்டா..


**இது எனது சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் பிளாக்ல இருந்து ஒரு இடுகை**
---------------------------------------

எனக்கு வேலை கொஞ்சம் அதிகமாவே இருக்குறதால புதுப்பதிவு போட சமயம் & மூடு இல்லை.. போன பதிவுல சும்மா விடைப் பெறுகிறேன் போட்டு அதை நகைச்சுவை பிரிவுல சேத்துக் கூட ,நெறய மக்கள்ஸ் பாராட்டி,“ரொம்ப நல்ல முடிவு”ன்னு சந்தோஷப் பட்டாங்க :)))) அதெப்படி மக்கள்ஸ்ஸ ஃபிரியா விட்டுற முடியும்?.:P.அதான் நேரம் கெடக்குற வரை என்னோட மற்ற பதிவுகளுல இருந்து சில இடுகைகளை வெளியிடலாம்ன்னு ,இதை வெளியிட்டிருக்கேன்.

இந்த புது வருஷத்துல எனக்கு 4 tag பதிவு எழுத சொல்லி விண்ணப்பம் /அன்புக் கட்டளை வந்திருக்கு.

1) சஞ்சய்கிட்டயிருந்து மொக்கை டாக்.. - போட்டாச்சு
2)இம்சை(f/o பவன் குட்டி) சீரியஸ் டாக் - போட்டாச்சு
3)எங்க தனிப்பெரும் தலைவி கீதா அக்கா சிறந்த பதிவு டாக்
4)புதுகைத் தென்றல் புத்தாண்டு உறுதிமொழி டாக்...

கீதா அக்காவும்,புதுகைத்தென்றலும் தாமதத்திற்க்கு மன்னிக்கவும்,கொஞ்சம் டைம் குடுங்களேன்...செஞ்சுடலாம்..

என்னுடைய அழைப்பை ஏற்று மொக்கை டாக் போட்டு ஆதரவு அளித்த.. சீனா ஜயா,மங்களூர் மாமு,கீதா அக்கா,வேதா,டிரிம்ஸ் மாம்ஸ்,ஸாரி சொல்லி எஸ் ஆன அம்பியண்ணா,விரைவில போட்டுடறேன்னு வாக்கு குடுத்து சைலண்டா இருக்குற ஜி3,ஃமைபிரண்டு,நிலா பாப்பா எல்லாருக்கும் என்னுடய நன்றிகளை சொல்லிக்கிறேன்...

33 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

me too

http://locarrerdelriu.blogspot.com

said...

அவ்வ்வ்வ்வ்......யாருப்பா நீயி..? உன்னோட பதிவு பிரஞ்சுலயோ,இல்ல வேற பாஷையிலல்ல இருக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்... என்ன கொடுமைங்க இது?..

said...

யோவ்.. "மீ டூ "ன்னு எதுக்கு சொன்னேன்னாவது சொல்லிட்டு போய்யா..
என்னை மாதிரி ஒருவன்னாவது சந்தோஷப் படுவேனில்ல..:P

said...

நன்றி மாமா, இம்சை கிட்ட சொல்லரேன்

said...

கேட்டாச்சு. குரல் நல்லாவே இருக்கு.

பயிற்சி பண்ணிருவோம்:-)))))

நல்ல பதிவு.

said...

இவ்ளோ சீரியஸ் பதிவெல்லாம் போட்டா என்னால படிக்க முடியாது :) மொக்கை வரும் வரை காத்திருப்போம் :)

/கண்பார்வை அற்றவர்களுக்கு,மூளையின் பயிற்ச்சியால.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பாதத்தோட angle அதாவது கோணம் சிறிது மாறினாலும் அவங்களால உணர முடியும்.சரிப் படுத்திக்க முடியும்.அவங்களால் நேரா நடக்க முடியும்.உடல் எடை சமச்சீரின்மை அவங்களை அந்த அளவு பாதிக்கறதில்லை./

இது உண்மை தான் நான் நேரிலே நித்தமும் காண்கிறேன், என் உறவினர் கண் பார்வையற்றவர் தான் அவருடைய நடவடிக்கைகள் என்றுமே என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.

said...

//இவ்ளோ சீரியஸ் பதிவெல்லாம் போட்டா என்னால படிக்க முடியாது :) மொக்கை வரும் வரை காத்திருப்போம் :)//

ரிப்பீஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏ

ரொம்பவே நல்ல பதிவு போல இருக்கே? படிச்சுட்டு வந்து பின்னூட்டறேன். :D

said...

வாவ்.. மாம்ஸ் வாய்ஸ் ரொம்ப நன்னா இருக்கு.. :)

said...

மாம்ஸ்.. எல்லா பதிவுகளையும் இதே மாதிரி ஒலி வடிவத்துலையும் எல்லாரும் போட்டுட்டா நம்ம வேலை பாத்துட்டே கேட்டுக்கலாம். :).. படிக்கிறதுக்காக ஒதுக்கிற நேரம் மிச்சம். :P

said...

aakaa - ரசிகன், இவ்வளவு விஷயம் இருக்கா கண்ணெக் கட்டிட்டா - ம்ம்ம் - நல்லாவே இருக்கு - அதென்ன சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் - சுட்டி கொடுத்தா பாப்போமில்ல - நல் வாழ்த்துகள்.

said...

குரல் ரொம்ப நல்லா இனிமையா இருக்கு - ஸ்ரீதர்

Anonymous said...

:)

said...

//கேட்டாச்சு. குரல் நல்லாவே இருக்கு.

பயிற்சி பண்ணிருவோம்:-)))))//
ரிப்பீட்டு!

said...

//இவ்ளோ சீரியஸ் பதிவெல்லாம் போட்டா என்னால படிக்க முடியாது :) மொக்கை வரும் வரை காத்திருப்போம் :)//
ஹாஹா!

said...

பின்னனில வற்ற நாதஸ்ஸும் சூப்பர்

said...

வாய்ஸ் நல்லா இருக்கு கொஞ்சம் கேட்டேன். மீதி அப்புறம் கேட்டுக்கறேன்.

30 அடி சம தளத்திற்கு எங்க போறது??
அவ்வ்வ்

said...

ஒலி வடிவம் நன்றாக இருந்ததுப்பா.....அதென்ன இடம் அப்பாவுக்குத் திருப்தியா இருந்தாப் போதும்?அம்மாக்களை மறந்துட்டீங்களா? இந்த மாதிரி விளையாட்டிற்கெல்லாம் நாங்கதான் கூட்டீட்டுப் போறோமாக்கும்???
அன்புடன் அருணா

said...

நல்லா சொல்லிருக்கீங்கப்பா. குரல் நல்லாருக்கே :)

said...

என்ன என்னமோ பேரெல்லாம் ப்ரொஃபைலில் புதுசா வந்திருக்கு? இதெல்லாம் வேறேயா? :P

said...

//Baby Pavan said...

நன்றி மாமா, இம்சை கிட்ட சொல்லரேன//
ரொம்ப நன்றிகள் பவன் செல்லம்.:)

said...

//துளசி கோபால் said...

கேட்டாச்சு. குரல் நல்லாவே இருக்கு.

பயிற்சி பண்ணிருவோம்:-)))))

நல்ல பதிவு.//

நன்றிகள் அக்கா.. குழந்தைகள் விளையாட்டு,நீங்க விளையாடிப் பாக்க போறேன்ங்கறிங்களே?..:)))))

said...

// வேதா said...

இவ்ளோ சீரியஸ் பதிவெல்லாம் போட்டா என்னால படிக்க முடியாது :) மொக்கை வரும் வரை காத்திருப்போம் :)

/கண்பார்வை அற்றவர்களுக்கு,மூளையின் பயிற்ச்சியால.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பாதத்தோட angle அதாவது கோணம் சிறிது மாறினாலும் அவங்களால உணர முடியும்.சரிப் படுத்திக்க முடியும்.அவங்களால் நேரா நடக்க முடியும்.உடல் எடை சமச்சீரின்மை அவங்களை அந்த அளவு பாதிக்கறதில்லை./

இது உண்மை தான் நான் நேரிலே நித்தமும் காண்கிறேன், என் உறவினர் கண் பார்வையற்றவர் தான் அவருடைய நடவடிக்கைகள் என்றுமே என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.//

வருகைக்கு ரொம்ப நன்றிகள் வேதா...மொக்கைதானே...போட்டுறலாம்:)).வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

said...

//
கீதா சாம்பசிவம் said...

//இவ்ளோ சீரியஸ் பதிவெல்லாம் போட்டா என்னால படிக்க முடியாது :) மொக்கை வரும் வரை காத்திருப்போம் :)//

ரிப்பீஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏ

ரொம்பவே நல்ல பதிவு போல இருக்கே? படிச்சுட்டு வந்து பின்னூட்டறேன். :D//

கீதா அக்கா,படிக்க கஷ்டமாயிருக்கும்ன்னு தான் பேசியிருக்கேன். கேட்டுட்டு வந்து சொல்லுங்க..(பேசறதுலயும் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கண்டுபிடிக்க முடியுமோ?:P ) நன்றிகள் அக்கா...

said...

// SanJai said...

வாவ்.. மாம்ஸ் வாய்ஸ் ரொம்ப நன்னா இருக்கு.. :)

மாம்ஸ்.. எல்லா பதிவுகளையும் இதே மாதிரி ஒலி வடிவத்துலையும் எல்லாரும் போட்டுட்டா நம்ம வேலை பாத்துட்டே கேட்டுக்கலாம். :).. படிக்கிறதுக்காக ஒதுக்கிற நேரம் மிச்சம். :P//

ஊக்கப் படுத்தனதுக்கு,ரொம்ப நன்றிகள்ப்பா..
விளையாட்டா சொன்னாலும் நீங்க சொல்லறதுல உண்மை இருக்கு..
நம்ம வேலைகளைப் பாத்துக்கிட்டே கேக்க முடியும்.
தமிழ் பதிவுலகத்தோட அடுத்த முன்னேற்றம் ஒலி,ஒளி வகையா இருக்கும்ன்னு தோனுது..

said...

//cheena (சீனா) said...

aakaa - ரசிகன், இவ்வளவு விஷயம் இருக்கா கண்ணெக் கட்டிட்டா - ம்ம்ம் - நல்லாவே இருக்கு - அதென்ன சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் - சுட்டி கொடுத்தா பாப்போமில்ல - நல் வாழ்த்துகள்.
குரல் ரொம்ப நல்லா இனிமையா இருக்கு - ஸ்ரீதர்.
//

வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றிகள் சீனா சார்...

தனி சர்குலேஷன் கையேடு பிரதியா நண்பர்களுக்காக எழுதியதை வலையேற்றி இருக்கேன்.அதுல நண்பர்களோட குழந்தைகள் ,பர்சனல் படங்கள்,கருத்துக்கள் சேத்து இருக்குறதால,அவற்றை எடுத்துட்டு,சில இடுகைகளை இங்கே எதிர்காலத்துல வெளியிட உத்தேசிச்சிருக்கேன்... மாறுதல் வேணும்னா உங்க ஆலோசனைகளை சொன்னால் உபயோகமா இருக்கும்:)

said...

//துர்கா said...

:)//

நன்றிகள் துர்கா :)

said...

// Dreamzz said...

//இவ்ளோ சீரியஸ் பதிவெல்லாம் போட்டா என்னால படிக்க முடியாது :) மொக்கை வரும் வரை காத்திருப்போம் :)//
ஹாஹா!//

ஹா..ஹா.. மாம்ஸ் என்ன சப்போர்ட்& சிரிப்பெல்லாம் இம்புட்டு பலமா இருக்கு:P

வருகைக்கு நன்றிகள்.

said...

//மங்களூர் சிவா said...

பின்னனில வற்ற நாதஸ்ஸும் சூப்பர்

வாய்ஸ் நல்லா இருக்கு கொஞ்சம் கேட்டேன். மீதி அப்புறம் கேட்டுக்கறேன்.

30 அடி சம தளத்திற்கு எங்க போறது??
அவ்வ்வ//


பரவாயில்லையே.. ஆழமா கவனிச்சிருக்கிங்க.. அது கதரி கோபால்நாத்தோட சாக்ஸபோன் இசை.. ஏ.ஆர்.ஆர் கம்போஸ் செஞ்சது.நன்றிகள் மாம்ஸ்...

said...

// aruna said...

ஒலி வடிவம் நன்றாக இருந்ததுப்பா.....அதென்ன இடம் அப்பாவுக்குத் திருப்தியா இருந்தாப் போதும்?அம்மாக்களை மறந்துட்டீங்களா? இந்த மாதிரி விளையாட்டிற்கெல்லாம் நாங்கதான் கூட்டீட்டுப் போறோமாக்கும்???
அன்புடன் அருணா//

ரொம்ப நன்றிங்க அருணா... சொன்ன மாதிரி அம்மாவையும் சேத்து இருக்கலாம்தான்.. :)

said...

//சகாரா said...

நல்லா சொல்லிருக்கீங்கப்பா. குரல் நல்லாருக்கே :)//

நலவருகைகள் சகாரா.பாராட்டுகளுக்கு நன்றி.

said...

// கீதா சாம்பசிவம் said...

என்ன என்னமோ பேரெல்லாம் ப்ரொஃபைலில் புதுசா வந்திருக்கு? இதெல்லாம் வேறேயா? :P//

ஹிஹி.. பதிவெழுத நேரமில்லாத போது,அதுலயிருந்து அடிக்கடி கொஞ்சம் இங்க போடலாம்ன்னு இருக்கேனுங்க அக்கா.. நீங்க கண்டுபிடிக்க நெறய சொல்,பொருள் குற்றம்ல்லாம் கூட விட்டிருக்கேன்.. :))))))))))

said...

Hello Rasigan Sir,

Romaba periya subject Sir...,

Wish you to finish perfectly...

Anbudan
MuPa.Nagarajan

said...

//Nagarajan Panduranran said...

Hello Rasigan Sir,

Romaba periya subject Sir...,

Wish you to finish perfectly...

Anbudan
MuPa.Nagarajan//

நல்வருகைகள் நண்பரே.. இந்த சார் எல்லாம் எதுக்கு? நான் ரொம்ப சின்னப் பையன்.:)
நீங்க சொன்ன கமெண்ட பாத்தா என்னோட வேற பதிவுக்கு (மறுபிறவி(???) பதுவு)போட வேண்டியதை தவறி இதுல போட்டுட்டிங்கன்னு தோனுது.
உங்க வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்:)