Friday, November 30, 2007

என் மொபைல் நம்பரை மறந்த மஞ்சக்காட்டு மைனா..

நேத்து எல்லா workersக்கும் கொடுக்க வேண்டிய சம்பளப் பணம் துபாயிலிருந்து வந்து சேந்துச்சு...
வீட்டுக்கு வந்து ,அத எத்தனதடவ கணக்குப்பாத்தாலும் ஏதோ இடிக்கிற மாதிரியே இருந்துச்சி..கால்குளேட்டர தேடினாக்கா..எங்க வைச்சேன்னு தெரியலை.. கணிப்பொறிய வேற ஒரு புரோகிராம் லோடு செய்ய குடுத்துருந்தேன்..

சின்ன வயசுல நா நல்லா மனக்கணக்கு(?) போடுவேன்.. ஆனாக்கா காலேஜ் சேந்ததுலயிருந்து சின்ன ,சின்ன கணக்குக்கு கூடகால்குலேட்டர் யூஸ் பண்ண ஆரம்பிச்சி அதுவே தவிர்க்க முடியாதாயிடுச்சு...

நாம உபயோகப்படுத்தாத திறமை நம்ம கிட்டேருந்து படிப்படியா மறைஞ்சி போயிடும்பாங்களே.. அது நெசந்தேன் போலயிருக்கு..

அதே போலத்தேன் மொபைலும்.. முன்னாடி ஊர்ல போன் மாத்தரம் இருந்த போது நெறய நம்பர்கள நெனவில வைச்சிருப்பேன்..ஒரு தடவை கூட பேசியே இல்லாத கயல்விழி வீட்டு நம்பரகூட...
[ எங்க ஸ்கூல் பசங்க என்னியவிட சூப்பர் மெம்மரி,ஊர்ல இருக்குர எல்லா வயசுபொண்ணுங்க வீட்டு போன் நம்பரையும் வாய்ப்பாடு கணக்கா மனப்பாடமா சொல்லுவாய்ங்க.. ஆனாக்கா ஆறாம் நம்பர் வாய்ப்பாடு கேட்டாக்கா.. பெரும்பாடுத்தேன்..]

ஆனாக்கா.. மொபல் வந்ததுக்கப்பறம் அதுக்கான அவசியம் இல்லாம போச்சா?.. காலப்போக்குல.. மொபைல் இல்லேன்னாக்கா.. முக்கியமான நாளு நம்பரை தவிர அவசரத்துக்கு மத்த நம்பர்கள் நினைவில் நிக்கறதில்லை..

கால்குலேட்டர மேஜை டிராயர்ல தேடிக்கினிருந்த போது என்னோட கண்ணுல பட்டது.ஏர்டெல் சிம்கார்டோட கூடிய கவர்..

சில சமயங்களுல.. சில பொருள்களை பாக்கும்போது அவை டைம் மிஷின் மாதிரி வேலை செஞ்சி நம்மோட மலரும் நினைவுகள தூண்டி விட்டுடும்.அந்த நினைவுக்கே உரித்தான மனநிலைய இப்ப நியாபகப்படுத்தும்..

அந்த சிம்காட்டுக்குள்ள என்னா மலரும் நினைவு இருக்குங்கறிங்களா?..நீங்களும் வாங்க டைம் மிஷுனுல என்னோட.(டிக்கெட்டுக்கு காசுலாம் இல்ல.. சொம்மா ஃபிரிதான்..ஹிஹி..).
சொய்ய்ய்ய்ய்ய்ன்ன்ன்ன்ன்ங்க்க்க்க்க்க்க்

அது நான் துபாயிலருந்து , தோஹாவுக்கு மாற்றலானதுக்கு இடைப்பட்ட ரெண்டு மாசம் லீவுக்கு ஊருக்கு போன காலம்.

படிக்கிற வயசுலருந்தே எனக்கு ஒரு ஆசை.. என்னான்னாக்கா.. வேலை செய்யும் போது ஏதாவது கோர்ஸுல சேந்து படிக்கனுமுன்னு..
ஏற்க்கனவே வேலையில இருக்கறதால ஒரு தன்னம்பிக்கை, பாடம் நடத்துறவருங்க்கூட நம்ம மேல ஒரு மரியாதையா இருக்கிறது,மெச்சுரிட்டியான மனநிலை,
படிக்கிறது நாம சம்பாதிச்ச பணத்துலங்கரதுனால ஒரு திருப்தி,விடுபட்ட கல்லூரி நினைவுகளை நினைவு படுத்துவது.
அனுபவ அறிவோட கூடிய நண்பர்கள்ன்னு பல காரணங்கள்.

சரி ரெண்டு மாசம் லீவ கலாட்டாவா எஞ்சாய் பண்ணிட்டு ,கடைசி பதினைஞ்சி நாள் சென்னைக்கு போயி டி நகர் பக்கத்துல ஒரு ஓட்டலில் தனியா தங்கிட்டேன்..பதினைஞ்சி நாள்ங்கரதால டிஸ்கவுன்டெல்லாம் குடுத்தாய்ங்க..(அதுக்கு முன்னாடியே.. நார்மல் ரேட்ட ஏத்திபுட்டாய்ங்கன்னு பின்னாடிதேன் தெரிஞ்சிது.).
பக்கத்துலருக்குர ஒரு PLC டிரெனிங் சென்டருல சேந்துப்புட்டேன்..


கிளாஸ் அன்னிக்கு போய் பாத்தாதேன் புரியுது.என்னோட பேட்ஜில கூட படிக்கிறவிங்க கேரளாவை சேர்ந்த பசங்க.. இங்கவே தங்கி ரெண்டு வருஷ கோர்ஸ் படிக்கிறாய்ங்களாம்.எனக்கும் கொஞ்சம் மலையாளம் தெரியுங்கரதுனால,சரின்னுட்டு அவிங்ககூட நல்லா பிளேடு போட ஆரம்பிச்சேன். மூனே நாளுல எங்க்கூட ஒட்டிக்கிட்டாய்ங்க.. மாமா.. மச்சான் ரேஞ்சிக்கி..

காலையில கிளாஸு.. "எல்லாரும் படிக்கவரும்போது.,. நீ மட்டும், நான் படிச்சிருக்கேன்னான்னு செக் பண்ண வர்ர"ன்னு சாரு சிரிச்சிக்கிட்டே சொல்லுவாரு..
மதியானத்துக்கு மேல ஒவ்வொரு நாளும் ,ஒரு ஏரியாவை எங்க டீம் ஊர் சுத்த கெளம்பிடும். எந்த ஏரியாவுக்கும் ஓரவஞ்சனை செய்யப்டாதுன்னு ஒரு கொள்கை..
நகர்வலத்தை மொதல்ல.. பக்கத்திலருக்குற கம்புட்டர் சென்டருலயிருந்து ஆரம்பிப்பாங்க..
மொத மொத என்னிய கூட்டிக்கிட்டு போவும்போது..நாங்க்கூட பசங்களுக்கு படிக்கரது எம்புட்டு ஆர்வமுன்னு தப்பு தப்பா நெனச்சிப்புட்டேன்..
அங்க போயி பாத்தா.. ரிசப்ஸனுல கலக்கலா ஒரு பொண்ணு.. பேரு வித்யாவாம்.கொஞ்சம் கருப்பாயிருந்தாலும் களையான முகம்,புன்னகையை பசைபோட்டு முகத்துல ஒட்டி வைச்சுக்கிட்டாய்ங்களோ,கடைசி வரை ஒரு இஞ்ச் கூட கொறையல,சூப்பரு... நா சுய நெனைவுக்கு வந்து தொறந்த வாயை மூடறதுக்குள்ள "வாங்க..என்ன இன்னிக்கி லேட்டு?. இவிரு உங்க டீமுல புதுசான்ன்னு என்னிய பாத்துகிட்டே கேட்டாய்ங்க...".
என்னவோ சொந்தக்காரங்கள கூப்புடுர மாதிரி கூப்புடராய்ங்களேன்னு அதிசயமா பாத்தாக்கா,பின்னாடிதேன் தெரியது.. படுபாவிங்க..
ஆறு மாசமா.. வாரத்துக்கு வாரத்துக்கு ஆறு நாள் (ஞாயிற்றுக்கிழமை லீவாமில்ல..)வது தவறாம வந்து ஏதாவது கம்புட்டர கோர்ஸ் பத்தி விசாரிக்கர கணக்கா.. ஜொள்ளிக்கிட்டிருக்காய்ங்கன்னு..(கிளாஸு வேற எடத்துலயாம். அதனால சேரவே இல்லியாம்).
இதுல வேற "எங்க டீமுக்கு தலிவரே இவிருதேன்"ன்னு ஆப்பு வைச்சுட்டானுங்க...
என்னியயும் "இப்பிடி எத்தனை பேரு கெளம்பியிருக்கீங்க?ன்ற ரீதில ' சேத்துப்புட்டாய்ங்களே..மக்கா..

அடுத்து பீச்..பார்க்ன்னு.. எங்கயும் ஃபிரியா நடக்க முடியலை.. அங்கங்க .. காதலர்கள்(அப்பிடின்னு சொல்லலாமா?).. வெளியிடத்துல கூச்சமேயில்லாம மடிலெல்லாம் படுத்துக்கிட்டு.. நாமதேன் வெக்கப் பட்டுக்கிட்டு ,அவிங்களை டிஸ்டட்ப் பண்ணவேண்டாமுன்னு ஒதுங்கி நடக்க வேண்டியிருக்கு.. நா நாட்டுல இல்லாத காலத்துல என்னென்னவோ மாற்றங்கள் நடந்திருக்குல்ல...பசங்கதேன் ரொம்ப கமெண்டிக்குன்னு வந்தானுங்க..நாம தூரத்துலேருந்து சைட் அடிக்கறதோட சரி.., நமக்கு அம்புட்டு தைரியமில்லிங்க்கோ...

மாலையில மனம்போன கணக்கா.. சுறுசுறுப்பா இருக்குற சென்னை தெருக்களில் நடப்பது புடிச்சிருந்துது. எம்புட்டு வேகம்?.வேலைவிட்டு வீட்டுக்கு ஸ்கூட்டில போகும் அக்கா, கல்லூரி முடிஞ்சு பஸ் நெறய வழியும் ஃபிகர்ஸ், இப்பவே புத்தக மூட்டையை வைச்சு ,வெயிட் லிஃப்ட்ங் பிராக்டீஸ் செய்யும். சின்னஞ்சிறு பிஞ்சுகள்ன்னு நேரம் போவரதே தெரியாம பராக்கு பாத்துக்கின்னு நடப்பேன்.
எல்லாரும் ஒன்னா "லண்டன்" படம் பாத்துட்டு அன்னிக்கி முழுக்க நெனச்சி,நெனச்சி சிரிச்சோம்.
மொதல்ல இது எங்க ஊரு கதைன்னு ஆரம்பிச்சாங்க..(சேட்டாக்களின் பிறவி சுபாவம் அங்கன..) ,நம்ம கிட்ட நடக்குமா?.ஏலே..உங்க ஊரு கதை லோக்கலு.. எங்க ஊரு கதை லண்டனு..எங்க ரேஞ்சே வேறன்னு கலாய்ச்சிப்புட்டேனுல்ல..(மலையாளப்படங்கள் பெரும்பாளும் லோ பட்ஜெட்டுல நாடகம் மாதிரிதேன் இருக்கும்.).
அப்புறம் அவிங்ககிட்டருந்து புதுசா ஒரு ஜடியா தெரிஞ்சிக்கிட்டேன்.அதாவது.. யாரவது சூப்பர் ஆள பாத்துட்டாக்கா.. மொதல்ல பாத்தவன் அந்த பொண்ணு காதுக்கு கேக்குற மாதிரி "மாமு என்னோட போன் நம்பர் சொல்லு"ன்னு கேப்பான். நாங்க அவனோட நம்பரை சத்தமா சொல்லனும்.
நாங்க ஸ்பென்சர் பிளாஸா போன போது நெறய மொற கேட்டு,சொல்லிக்கிட்டானுங்க.. நா அதுல கலந்துக்காம சைலண்டா சைட் ஸியிங்குல கவனம் செலுத்தினேன். பின்ன?.. மெயினா வந்ததே அதுக்குதான..ஹிஹி..

திரும்பி வரும்போது பஸ்ல ஒரு காலேஜ் மைனாக்களின் டீம் எங்கள மாதிரியே.. அவிங்களுக்குள்ளாரயே சொம்மா கலாட்டா செஞ்சிக்கின்னு வந்தாங்க.. அதுல ஒரு மஞ்சக்காட்டு மைனா.. என்னாமா சிரிச்சிக்குது.. மனசே எங்கிட்ட இல்ல,கொஞ்சம் குண்டாயிருந்தாலும்,நல்ல டிரஸிங் சென்ஸ்..,நடு நடுவுல காத்துல பறக்கும் கேசத்தை, வீணை தந்தி மீட்டற மாதிரி விரல்களால நளினமா காதுக்கு பின்னாடி நகர்த்தரதும், கேசத்து நுனியை விரல்ல சுத்தி சுத்தி வெளையாடரதும்,டிஸன்டா அடிக்கடி துப்பட்டாவை சரி செஞ்சிக்கிட்டதும்,தோழிகளோட ஜோக்குகளுக்கு வெக்கம் கலந்த சிரிப்பும் .கண்களில் தெரிஞ்ச குறும்புத்தனமும்.எதிர் பார்க்காத நேரத்துல என்மீது மின்சாரம் வீசிட்டு போன அவசர பார்வைகளும்..

என்னை மறந்து,பேக்ரவுண்டுல ஏ.ஆர். ரகுமான் மியுஸிகெல்லாம் ஒலிக்க.. மெதுவா திரும்பிப்பாத்தாக்கா.. நம்ம பசங்களும் , வாயப் பொளந்துக்கிட்டு ,ஜொள்ளிக்கிட்டிருக்காய்ங்க..

அடப்பாவிங்களா?.இன்னிக்காவது நாம தனியா வந்திருக்கக் கூடாதா?.ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டேங்கராய்ங்களேன்னு உஷாராவரதுக்குள்ள..

ஒருத்தன் முந்திக்கிட்டு கேட்டேபுட்டான்.."மச்சி என்னோட மொபைல் நம்பர குடு"ன்னு.."சே.. எனக்கு ஒரு சான்ஸ் குடுக்க மாட்டேங்கராய்ங்களேன்"னு மனசுல சபிச்சிக்கிட்டே நம்பரை சொன்னேன். சொல்லி முடிச்சிட்டு பாத்தாக்கா.. எல்லா பயலுவளும் என்னிய அதிர்ச்சியா பாக்கரானுங்க.. என்னாச்சுங்கரமாதிரி பாத்தாக்கா.. "அது உன்னோட நம்பரு "ந்னு அழுவரமாதிரி சொன்னான். அப்பத்தேன் எனக்கு புரிஞ்சிது.. அட...என்னையும் அறியாம நா சொன்னது என்னோட நம்பரத்தேன்.
ஹிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேய்ய்ய்ய்ய்.....
ஜ லவ் மை மனசு.. என்னோட கஷ்ட்டத்த புரிஞ்சிக்கிட்டு எம்புட்டு புத்திசாலிதனமா செஞ்சியிருக்கு?.,,ஹிஹி..
அந்த பொண்ணு வேற, நம்பரை சொல்லி பாத்துகர கணக்கா என்னிய பாத்து சிரிச்சிக்கிட்டே எதையோ கையில எழுத.. பசங்க பஞ்சராயிட்டானுங்க..
அடப்பாவி.. சைக்கிள் கேப்புல,எல்லாரும் ஆட்டோ ஓட்டரவிங்கள பத்தி கேள்விப்பட்டிருக்கேன்,நீ என்னடான்னா லாரியே ஓட்டிப்புட்டியேன்னு பொருமிட்டாய்ங்கல்ல.ஹிஹி....

ஊருக்கு வந்தப்புறம் ,எனக்கு ஒரு சந்தேகம்.. ஒரு வேளை நெசமாவே அந்த பொண்ணு போன் செஞ்சா?.. அதனால தம்பிக்கிட்ட வாங்குன சிம்கார்ட, அவங்கிட்ட குடுக்காம வேற புதுசா வாங்கி குடுத்துட்டேன்.. ரெண்டு நாளா கனவு கூட செல்போன் அழைப்பு வர்ர மாதிரி வந்துச்சு,எழுந்து பாத்தாக்கா.கல்லூரி நண்பர்கள் கிட்டயிருந்து அழைப்புகள் .பின்னாடி ஏர்போர்ட் வந்தப்பறம் கூட, போன் வராதா? ,பிளைட்ட கேன்ஸல் பண்ணிப்புடலாமின்னு காத்துருந்தேன் . ஃபிளைட்டுல ஏர் ஹோஸ்டல்.."சார் ஃபிளிஸ் மைபைல ஆஃப் செஞ்சிடுங்களேன்"னு கொஞ்சலா சொல்லறவரை மொபைலையே பாத்துக்கிட்டிருந்தேன். கடைசி வரை போன் வரவேயில்லை..ஹிம்.. எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேனுமில்ல.. என்ன நாசொல்லறது..ஹிஹி..

56 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

hai.. modhal boni naan dhaana :)

said...

//"அது உன்னோட நம்பரு "ந்னு அழுவரமாதிரி சொன்னான். அப்பத்தேன் எனக்கு புரிஞ்சிது.. அட...என்னையும் அறியாம நா சொன்னது என்னோட நம்பரத்தேன்.//

Anda puzhughu aagaasa puzhugu kanaga puzhugareengalae.. neenga venumnae thanae unga no.a kudutheenga :P

said...

Seri modhalla vandhu top 3 comment pottadhukku supera oru chicken briyani parcel anuppidunga :)

said...

//
எங்க ஸ்கூல் பசங்க என்னியவிட சூப்பர் மெம்மரி,ஊர்ல இருக்குர எல்லா வயசுபொண்ணுங்க வீட்டு போன் நம்பரையும் வாய்ப்பாடு கணக்கா மனப்பாடமா சொல்லுவாய்ங்க.. ஆனாக்கா ஆறாம் நம்பர் வாய்ப்பாடு கேட்டாக்கா.. பெரும்பாடுத்தேன்..]
//
அதென்ன ஸ்கூல் பசங்க

உண்மைய ஒத்துக்க மேன்!!

said...

//
G3 said...
hai.. modhal boni naan dhaana :)
//
அக்காவுக்கு ஒரு கின்னஸ் ரெக்கார்ட் பார்சல்

said...

//
G3 said...
Seri modhalla vandhu top 3 comment pottadhukku supera oru chicken briyani parcel anuppidunga :)
//
எக்கா நீயும் லெக் பீஸ் பார்ட்டியா!!
கோழிக்கு இருக்குறதே ரெண்டு காலு எல்லாருக்கும் லெக் பீஸ் வேணும்னா எங்க போறது!!

Anonymous said...

//G3 said...

//"அது உன்னோட நம்பரு "ந்னு அழுவரமாதிரி சொன்னான். அப்பத்தேன் எனக்கு புரிஞ்சிது.. அட...என்னையும் அறியாம நா சொன்னது என்னோட நம்பரத்தேன்.//

Anda puzhughu aagaasa puzhugu kanaga puzhugareengalae.. neenga venumnae thanae unga no.a kudutheenga //

repeetayy

said...

// G3 said...

hai.. modhal boni naan dhaana :) //

ரொம்ப நன்றிங்க ஜி3, பதிவ திரட்டில போட்டுப்புட்டு வந்து பாத்தாக்கா,ஏதோ ஒரு டெக்னிகல் பிராபலத்தால (நாம ஏதாவது தப்பு செஞ்சிப்புட்டாக்கா.. கம்புட்டர் மேல பழிய போட்டுபுடனுமின்னு கம்பியுட்டர் கிளாசுல சொல்லிக்குடுத்திருக்காய்ங்கல்ல..) நாலு பதிவா பப்லீஸ் ஆகியிருக்கு..என்ன கொடுமை இது?ன்னு மூன டெலிட் செஞ்சிட்டு வந்து தமிழ்மணத்து லிங்க அமுக்கினாக்கா.. எரர்ன்னு வருது.. நா டெலிட் செஞ்ச லிங்க் தான் எல்லா திரட்டிலயும் வந்திருக்குபோல.. தேங்கூடு,தமிழ் வெளியிலேயும் இதே கதைதேன்.திரும்ப இணைக்க முடியலை..
அடப்பாவமே..இது ஒரு சீக்ரெட் இடுகையாயிடுச்சேன்னு நெனச்சபோதுதேன்..உங்க வருகை..எப்பிடி வழி தெரிஞ்சிதுன்னு புரியலை..என்ன மேஜிக்குங்க இது ஜி3..

said...

// //"அது உன்னோட நம்பரு "ந்னு அழுவரமாதிரி சொன்னான். அப்பத்தேன் எனக்கு புரிஞ்சிது.. அட...என்னையும் அறியாம நா சொன்னது என்னோட நம்பரத்தேன்.//

Anda puzhughu aagaasa puzhugu kanaga puzhugareengalae.. neenga venumnae thanae unga no.a kudutheenga :P//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ என்னிய நம்புங்களேன்.. அட நெசமாத்தேன் ,என்னையே அறியாமதேன் சொல்லிப்புட்டேனுங்க..:)))

said...

// G3 said...

Seri modhalla vandhu top 3 comment pottadhukku supera oru chicken briyani parcel anuppidunga :)//

ஒங்களுக்கு இல்லாததா..பார்சல் ரெடி...சீக்கிறமா வந்து வாங்கிக்கலேன்னாக்கா நானே சாப்பிடுவேனுங்க்கோ..ஹிஹி...

said...

// மங்களூர் சிவா said...

//
எங்க ஸ்கூல் பசங்க என்னியவிட சூப்பர் மெம்மரி,ஊர்ல இருக்குர எல்லா வயசுபொண்ணுங்க வீட்டு போன் நம்பரையும் வாய்ப்பாடு கணக்கா மனப்பாடமா சொல்லுவாய்ங்க.. ஆனாக்கா ஆறாம் நம்பர் வாய்ப்பாடு கேட்டாக்கா.. பெரும்பாடுத்தேன்..]
//
அதென்ன ஸ்கூல் பசங்க

உண்மைய ஒத்துக்க மேன்!!//

மாம்ஸ் நீங்க செஞ்ச தப்பெல்லாம் என்னிய ஒத்துக்க சொல்லறது எந்த வகையில ஞாயமுங்க?..ஹிஹி..

ஒருவேளை நா இடுகை டெலிட் பண்ணரதுக்கு முன்னாடி இருந்த லிங்க புடிச்சி வந்து மெரட்டறீங்களோ?..
எப்படியிருந்தாலும்.. உங்க வருகைக்கு ரொம்ப சந்தோஷம் மாம்ஸ்..

said...

// மங்களூர் சிவா said...

//
G3 said...
Seri modhalla vandhu top 3 comment pottadhukku supera oru chicken briyani parcel anuppidunga :)
//
எக்கா நீயும் லெக் பீஸ் பார்ட்டியா!!
கோழிக்கு இருக்குறதே ரெண்டு காலு எல்லாருக்கும் லெக் பீஸ் வேணும்னா எங்க போறது!!//

மாம்ஸ்.. எனக்கு ஒரு சந்தேகம்.." கோழி "க்கு இருக்கறது ஒத்தக் காலுதான?.(கோ)..ஹிஹி.

ஒங்க கவலை நியாயமானதுதேன்.ஹிஹி..

said...

// Anonymous said...

//G3 said...

//"அது உன்னோட நம்பரு "ந்னு அழுவரமாதிரி சொன்னான். அப்பத்தேன் எனக்கு புரிஞ்சிது.. அட...என்னையும் அறியாம நா சொன்னது என்னோட நம்பரத்தேன்.//

Anda puzhughu aagaasa puzhugu kanaga puzhugareengalae.. neenga venumnae thanae unga no.a kudutheenga //

repeetayy//

யாருப்பா.. அது முக்காடு போட்டுக்கின்னு, ஜி3க்கு சப்போர்ட்டு பண்ணரது?.

Anonymous said...

// என்னாமா சிரிச்சிக்குது.. மனசே எங்கிட்ட இல்ல,கொஞ்சம் குண்டாயிருந்தாலும்,நல்ல டிரஸிங் சென்ஸ்..,நடு நடுவுல காத்துல பறக்கும் கேசத்தை, வீணை தந்தி மீட்டற மாதிரி விரல்களால நளினமா காதுக்கு பின்னாடி நகர்த்தரதும், கேசத்து நுனியை விரல்ல சுத்தி சுத்தி வெளையாடரதும்,டிஸன்டா அடிக்கடி துப்பட்டாவை சரி செஞ்சிக்கிட்டதும்,தோழிகளோட ஜோக்குகளுக்கு வெக்கம் கலந்த சிரிப்பும் .கண்களில் தெரிஞ்ச குறும்புத்தனமும்.எதிர் பார்க்காத நேரத்துல என்மீது மின்சாரம் வீசிட்டு போன அவசர பார்வைகளும்..//

that was me. your number please.

said...

// மஞ்சகாட்டு மைனா said...

that was me. your number please. //

ஆஹா.... இது மஞ்சக்காட்டு மைனா குரல் போல தோனலியே.. ஏதோ பனங்காட்டு நரியோட குரல் மாதிரில்ல.. இருக்கு...
நா வரலேப்பா...இந்த விபரீத விளையாட்டுக்கு..ஹிஹி...

[sivaa maams niinga naaraa kattaala kuduththiruppenella..]

said...

// அத எத்தனதடவ கணக்குப்பாத்தாலும் ஏதோ இடிக்கிற மாதிரியே இருந்துச்சி..//

கடைசியா கணக்கெல்லாம் சரியாகிடுச்சா?..

said...

// அப்புறம் அவிங்ககிட்டருந்து புதுசா ஒரு ஜடியா தெரிஞ்சிக்கிட்டேன்.அதாவது.. யாரவது சூப்பர் ஆள பாத்துட்டாக்கா.. மொதல்ல பாத்தவன் அந்த பொண்ணு காதுக்கு கேக்குற மாதிரி "மாமு என்னோட போன் நம்பர் சொல்லு"ன்னு கேப்பான். நாங்க அவனோட நம்பரை சத்தமா சொல்லனும்.//
சூப்பர்ப் ஜடியா.let us try .
ஆனால் உங்களை போன்ற சைடுல லாரி ஓட்டுகின்றவர்களை கிட்டே வராமல் பார்த்துகோனும்.ஹிஹிஹி.

said...

//நடு நடுவுல காத்துல பறக்கும் கேசத்தை, வீணை தந்தி மீட்டற மாதிரி விரல்களால நளினமா காதுக்கு பின்னாடி நகர்த்தரதும்//
aadada! rasanai rasanai!

said...

nalla thaan kalaichirukeenga! kavalapadatheenga! seekiram set aagatum!

Anonymous said...

excelent flashback post.nice

said...

//நாம உபயோகப்படுத்தாத திறமை நம்ம கிட்டேருந்து படிப்படியா மறைஞ்சி போயிடும்பாங்களே.. அது நெசந்தேன் போலயிருக்கு..//

அப்போ தினமும் ஜொள்ளுங்க.இல்லை,மறந்துட போகுது :)
சீக்கிரம் பெண் பார்க்க சொல்லி,உங்க வீட்டுக்கு போன் போட்டாச்சு :P

Anonymous said...

// vijay said...

//நாம உபயோகப்படுத்தாத திறமை நம்ம கிட்டேருந்து படிப்படியா மறைஞ்சி போயிடும்பாங்களே.. அது நெசந்தேன் போலயிருக்கு..//

அப்போ தினமும் ஜொள்ளுங்க.இல்லை,மறந்துட போகுது//

repetuu vijay

Anonymous said...

// vijay said...

சீக்கிரம் பெண் பார்க்க சொல்லி,உங்க வீட்டுக்கு போன் போட்டாச்சு //

ethu taapu.naana seyanumnnu nenachchaan.saachchikku naanu ready.

rasigan annaavukku vaattu vachchiduvoom :)

said...

அடப்பாவமே, இவ்வளவு விசயம் நடந்திருக்கா?.
கவலை படவேண்டாம் கண்டுபிடிச்சிடலாம்.:D

said...

'சின்ன வயசுல நா நல்லா மனக்கணக்கு(?) போடுவேன்.'
மனதில் என்ன ராமானுஜம் என்று நினைப்போ?:)

said...

//என்ன மேஜிக்குங்க இது ஜி3..//

ஹி..ஹி.. மேஜிக் எல்லாம் ஏதும் இல்ல. வேதா ப்ளாக்ல கமெண்ட் போட போனப்போ அவங்க கூகிள் ரீடர் உங்க புது போஸ்ட சொல்லுச்சு. சரின்னு போகவேண்டிய ப்ளாக் எல்லாம் ஒரு ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு நேரா உங்க ப்ளாக்குக்கு வந்தேன்.

said...

//சீக்கிறமா வந்து வாங்கிக்கலேன்னாக்கா நானே சாப்பிடுவேனுங்க்கோ..//

ஹல்லோ.. நான் தான் பிரியாணி பார்சல் அனுப்பிடுங்கோ ன்னு தெளிவா கேட்டிருக்கேனில்ல.. அப்புறம் என்ன வந்து வாங்கிக்கோங்கன்னு டயலாக்???

said...

//எக்கா நீயும் லெக் பீஸ் பார்ட்டியா!!
கோழிக்கு இருக்குறதே ரெண்டு காலு எல்லாருக்கும் லெக் பீஸ் வேணும்னா எங்க போறது!!//

@சிவா,
அதான் ரெண்டு கால் இருக்கே. எனக்கு ஒன்னு கவிதாயினிக்கு ஒன்னு சரியா தானே இருக்கு :P

said...

ஆஹா.. அப்படியா விசயம்?.. வேதாவுக்கும் உங்களுக்கும் ரொம்ப நன்றிகள் ஜி3..

said...

// G3 said...

//சீக்கிறமா வந்து வாங்கிக்கலேன்னாக்கா நானே சாப்பிடுவேனுங்க்கோ..//

ஹல்லோ.. நான் தான் பிரியாணி பார்சல் அனுப்பிடுங்கோ ன்னு தெளிவா கேட்டிருக்கேனில்ல.. அப்புறம் என்ன வந்து வாங்கிக்கோங்கன்னு டயலாக்???//

என்னாது ?..எனக்கு சரியா காது கேக்கலிங்களே..ஹிஹி..
(என்னமா ஃசார்ப்பா இருக்காய்ங்கல்ல...,
இப்பெல்லாம் அப்பப்பவே மடக்கிடராய்ங்க..ரொம்ப உஷாராத்தேன் பதில் சொல்லனும்போல..)

said...

// G3 said...

//எக்கா நீயும் லெக் பீஸ் பார்ட்டியா!!
கோழிக்கு இருக்குறதே ரெண்டு காலு எல்லாருக்கும் லெக் பீஸ் வேணும்னா எங்க போறது!!//

@சிவா,
அதான் ரெண்டு கால் இருக்கே. எனக்கு ஒன்னு கவிதாயினிக்கு ஒன்னு சரியா தானே இருக்கு :P//

பாத்திங்களா சிவா மாமு..எம்புட்டு ஸ்பெசிபிஃகா இருக்காய்ங்க.. ஆண்கள் தான், ரொம்ப பொதுவா கவலை பட்டுக்கிட்டிருக்கோமுன்னு தோனுது.

said...

"என்னை மறந்து,பேக்ரவுண்டுல ஏ.ஆர். ரகுமான் மியுஸிகெல்லாம் ஒலிக்க.."

அந்த காலத்திலே எங்களுக்கு எம்.ஸ்.வி/இளயராஜா மியூசிக் , உங்களுக்கு ஏ.ஆர்.ரஹமான், மியூசிக் டைரக்டர்கள்தான் வேற, மியூசிக் எல்லாம் ஒண்ணுதேன்

said...

// vijay said...

// அத எத்தனதடவ கணக்குப்பாத்தாலும் ஏதோ இடிக்கிற மாதிரியே இருந்துச்சி..//

கடைசியா கணக்கெல்லாம் சரியாகிடுச்சா?..//

ஹிஹி.. இடுகைய எழுதி முடிச்சதும் சரியாகிடுச்சி.. :P

said...

// vijay said...

// அப்புறம் அவிங்ககிட்டருந்து புதுசா ஒரு ஜடியா தெரிஞ்சிக்கிட்டேன்.அதாவது.. யாரவது சூப்பர் ஆள பாத்துட்டாக்கா.. மொதல்ல பாத்தவன் அந்த பொண்ணு காதுக்கு கேக்குற மாதிரி "மாமு என்னோட போன் நம்பர் சொல்லு"ன்னு கேப்பான். நாங்க அவனோட நம்பரை சத்தமா சொல்லனும்.//
சூப்பர்ப் ஜடியா.let us try .
ஆனால் உங்களை போன்ற சைடுல லாரி ஓட்டுகின்றவர்களை கிட்டே வராமல் பார்த்துகோனும்.ஹிஹிஹி.//

வெவரமான ஆளுத்தேன். என்னிய போல கும்பல் சேத்துக் கஷ்ட்டப்பட வேண்டாம்.சிங்க்கிளா போயி ஜமாயுங்க..ஹிஹி..

said...

வாங்க டிரிம்ஸ் மாம்ஸ்..

//நடு நடுவுல காத்துல பறக்கும் கேசத்தை, வீணை தந்தி மீட்டற மாதிரி விரல்களால நளினமா காதுக்கு பின்னாடி நகர்த்தரதும்//
aadada! rasanai rasanai! //

ஹா..ஹா.. அதானே ..ஹிஹி..

said...

// Dreamzz said...

nalla thaan kalaichirukeenga! kavalapadatheenga! seekiram set aagatum!//

அவ்வ்வ்வ்வ்வ்.... உங்க வாழ்த்துக்கு நன்றிகள்..ஹா..ஹா...

said...

// Dreamzz said...

nalla thaan kalaichirukeenga! kavalapadatheenga! seekiram set aagatum!//

அவ்வ்வ்வ்வ்வ்.... உங்க வாழ்த்துக்கு நன்றிகள்..ஹா..ஹா...

said...

//
rk said...

excelent flashback post.nice//

ரொம்ப நன்றிகள் ஆர்.கே சார்..

said...

// vijay said...

//நாம உபயோகப்படுத்தாத திறமை நம்ம கிட்டேருந்து படிப்படியா மறைஞ்சி போயிடும்பாங்களே.. அது நெசந்தேன் போலயிருக்கு..//

அப்போ தினமும் ஜொள்ளுங்க.இல்லை,மறந்துட போகுது :)
சீக்கிரம் பெண் பார்க்க சொல்லி,உங்க வீட்டுக்கு போன் போட்டாச்சு :P//

என்ன அநியாயங்க..இது.? இப்பத்தானே.. நீங்க ஜடியா சொன்னதுக்கு தாங்க்ஸ் சொன்னிங்க..அதுக்குள்ள.. மாட்டிவிடரீங்களே..
அதுக்குத்தேன் வீட்டுக்கு தெரிஞ்சவிங்ககிட்ட பிளாக் அட்ரஸ் சொல்லப்டாதுங்கரது..ஹிஹி....

இருந்தாலும் உங்க மொத அட்வைச தெனமும் மறக்காம ..பாலோப் பண்ணறேனுங்க..

ரெண்டாவதா சொன்ன உதவிக்கு ரொம்ப நன்றிங்க்கோ?..ஹிஹி:)))))

said...

// kavithaa said...

// vijay said...

//நாம உபயோகப்படுத்தாத திறமை நம்ம கிட்டேருந்து படிப்படியா மறைஞ்சி போயிடும்பாங்களே.. அது நெசந்தேன் போலயிருக்கு..//

அப்போ தினமும் ஜொள்ளுங்க.இல்லை,மறந்துட போகுது//

repetuu vijay//

நெனச்சேன்.. விஜய் அங்க்கிளுக்கு கவிதா குட்டி சப்போர்ட் பண்ணுமின்னு..
நல்ல புள்ளையா பாடத்த படிக்கறது விட்டுட்டு,ஃபிளாக் படிச்சி போட்டுக்குடுக்கறதுல உங்களுக்கு என்னா அம்புட்டு இஷ்டம்.

said...

// kavithaa said...

// vijay said...

சீக்கிரம் பெண் பார்க்க சொல்லி,உங்க வீட்டுக்கு போன் போட்டாச்சு //

ethu taapu.naana seyanumnnu nenachchaan.saachchikku naanu ready.

rasigan annaavukku vaattu vachchiduvoom :)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அண்ணன் மேல எம்புட்டு பாசம் கவிதாவுக்கு...நீங்க மேக்ஸ்ல பெயிலானது விட்டுக்கு தெரியுமா?..ஹிஹி..

said...

// பிரியமுடன் பிரித்தி said...

அடப்பாவமே, இவ்வளவு விசயம் நடந்திருக்கா?.
கவலை படவேண்டாம் கண்டுபிடிச்சிடலாம்.:D//

வாங்க பிரித்தி.. சைடுல பிரவேட் டிடெக்டிவ் ஏஜன்சி நடத்துர மாதிரி இருக்கே..ஹிஹி..

said...

// பிரியமுடன் பிரித்தி said...

'சின்ன வயசுல நா நல்லா மனக்கணக்கு(?) போடுவேன்.'
மனதில் என்ன ராமானுஜம் என்று நினைப்போ?:)//

ஹலோ.. நான் எப்ப அப்பிடி சொன்னேன்?.. வம்பு புடிக்கிறது உங்களுக்கு காரணமே வேணாமே..ஹிஹி..

said...

வாங்க மணி சார்...


// "என்னை மறந்து,பேக்ரவுண்டுல ஏ.ஆர். ரகுமான் மியுஸிகெல்லாம் ஒலிக்க.."


அந்த காலத்திலே எங்களுக்கு எம்.ஸ்.வி/இளயராஜா மியூசிக் , உங்களுக்கு ஏ.ஆர்.ரஹமான், மியூசிக் டைரக்டர்கள்தான் வேற, மியூசிக் எல்லாம் ஒண்ணுதேன.//

அதானே ... ஆஹா..இந்த டைம்மிஷின் இடுகை, உங்களையும் மலரும் நினைவு காலத்துக்கு கொண்டு போயிடுச்சா?ஹிஹி...

Anonymous said...

வாழ்த்துகிறேன்.

said...

ரசிகன்
உங்க மஞ்சக் காட்டு மைனா ,கைலே உங்க நம்பரை ஏன் குறிச்சிகிச்சு தெரியுமா ...இந்த நம்பருக்கெல்லாம் மறந்தும் கூட டயல் பண்ணிடக்கூடாதுன்னு டிக் பண்ணத்தான்...அது பிரியாம நீங்க பாட்டுக்கு விமான உபசரிப்பாளி வந்து சொல்ற வரைக்கும் காத்திட்டு இருந்தீங்களா....அடப் பாவமே...

said...

// சுப.செந்தில் நாதன் said...

வாழ்த்துகிறேன்.//

நன்றிகள் நண்பரே..

said...

// goma said...

ரசிகன்
உங்க மஞ்சக் காட்டு மைனா ,கைலே உங்க நம்பரை ஏன் குறிச்சிகிச்சு தெரியுமா ...இந்த நம்பருக்கெல்லாம் மறந்தும் கூட டயல் பண்ணிடக்கூடாதுன்னு டிக் பண்ணத்தான்...அது பிரியாம நீங்க பாட்டுக்கு விமான உபசரிப்பாளி வந்து சொல்ற வரைக்கும் காத்திட்டு இருந்தீங்களா....அடப் பாவமே...//

அவ்வ்வ்வ்வ்வ்வ் .. கோமதி அக்கா என்மேல ஏனிந்த கொலை வெறி?..பாசிட்டிவா நெனைச்சுக்கலாமில்ல..ஹிஹி...

said...

// வேதா said...

/ஊருக்கு வந்தப்புறம் ,எனக்கு ஒரு சந்தேகம்.. ஒரு வேளை நெசமாவே அந்த பொண்ணு போன் செஞ்சா?.. /
இதெல்லாம் ரெம்ப ஓவரா தெரியல? ;D நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் :D//

ஏனுங்க வேதா.. இது ரொம்ப அநியாயமுங்க..,இளைஞர்களே கனவு காணுங்கள்ன்னு நம்ம அப்துல் கலாம் சொல்லியிருக்காரு. பாஸிடிவ்வா ஒரு எதிர்பார்ப்புகூட பொறுக்கலியே யாருக்கும்..திட்டறதுக்குன்னு ரெடியா காத்துக்கிட்டிருக்கிங்களே..

பேச்சுலர்பசங்க(?)சங்கத்து
சார்புல என்னோட கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேனுங்க...

said...

"அடுத்து பீச்..பார்க்ன்னு.. எங்கயும் ஃபிரியா நடக்க முடியலை.. "அங்கங்க .. காதலர்கள்(அப்பிடின்னு சொல்லலாமா?).. வெளியிடத்துல கூச்சமேயில்லாம மடிலெல்லாம் படுத்துக்கிட்டு.. நாமதேன் வெக்கப் பட்டுக்கிட்டு ,அவிங்களை டிஸ்டட்ப் பண்ணவேண்டாமுன்னு ஒதுங்கி நடக்க வேண்டியிருக்கு." அட அட என்னமனசு

said...

இப்பத்தான் பார்த்தேன்.....
சூப்பர்.....:-))))

அதுலேயும் அந்த மைனாவை ஆஹ்ஹா........
வீணையை மீட்ட்டும் நளினத்தில்.....

அடடா.....எங்கியோ போயிட்டீங்க.
நல்ல இயல்பான நடை.

ரொம்பவும் ரசிச்சேன்.

Anonymous said...

:)

said...

// நளாயினி said...

"அடுத்து பீச்..பார்க்ன்னு.. எங்கயும் ஃபிரியா நடக்க முடியலை.. "அங்கங்க .. காதலர்கள்(அப்பிடின்னு சொல்லலாமா?).. வெளியிடத்துல கூச்சமேயில்லாம மடிலெல்லாம் படுத்துக்கிட்டு.. நாமதேன் வெக்கப் பட்டுக்கிட்டு ,அவிங்களை டிஸ்டட்ப் பண்ணவேண்டாமுன்னு ஒதுங்கி நடக்க வேண்டியிருக்கு." அட அட என்னமனசு //
(இதுல ஏதும் உள் குத்து இல்லிங்களே..ஹிஹி...)
அவ்வ்வ்...... நெசமாத்தேன்.. நம்புங்க அக்கா...

வருகைக்கும்,கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றிகள்..

said...

// துளசி கோபால் said...

இப்பத்தான் பார்த்தேன்.....
சூப்பர்.....:-))))

அதுலேயும் அந்த மைனாவை ஆஹ்ஹா........
வீணையை மீட்ட்டும் நளினத்தில்.....

அடடா.....எங்கியோ போயிட்டீங்க.
நல்ல இயல்பான நடை.

ரொம்பவும் ரசிச்சேன்.//

ஹிஹி.. எல்லாம் வயசு கோளாறுத்தேன்.. கண்டுக்காதிங்க.. துளசி அக்கா..
வருகைக்கும்,பாராட்டுக்கும் ரொம்ப நன்றிகள்..

said...

// Anonymous said...

:) //

நன்றிகள் :)

Anonymous said...

VERY COMEDY