Thursday, May 1, 2008

மறுப்பிறவி- ஒரு விஞ்ஞான அலசல்...(பாகம்-1 உடல்)

மரணத்திற்க்கு பிறகு,என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்வதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம் என்றுமே குறையாதது தான் .ஏன் என்றால் மனித மனம்,மரணத்திற்க்கு பிறகு, தான் முழுமையாக இல்லாமல் போவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மில் பலபேர் மறுபிறவியை நம்ப விரும்புகிறோம்.





ஹாய் ஃபிரண்ஸ்...

போன மீள் இடுகையில் (*பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும்...*), உங்க ஆதரவைத் தொடர்ந்து,மறுபடியும் ஒரு குழப்பத் தொடர்.நேரமில்லாததால் முழுமையாக விளக்க இயலாம போனாலும், எளிமையா,தேவையான அளவு குழப்பி இருக்கேன்னு நெனைக்கிறேன். படிச்சிட்டு பின்னூட்டத்துல திட்டிட்டு போங்கப்பு..:)))))



மரணத்திற்க்கு பிறகு,என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்வதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம் என்றுமே குறையாதது தான் .ஏன் என்றால் மனித மனம்,மரணத்திற்க்கு பிறகு, தான் முழுமையாக இல்லாமல் போவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மில் பலபேர் மறுபிறவியை நம்ப விரும்புகிறோம்.

இதைப் பற்றி பல மதங்களிலும்,தவறு செய்பவர்களை குறைக்கவோ,நல்ல செயல்களை ஊக்குவிக்கவோ, குறைந்த பட்சம் சொர்கம்,நரகம் என மரணத்திற்க்கு பிறகும், ஏதோ இருப்பதாகவே சொல்ல விரும்புகின்றன.


சரி... அதுப்பாட்டுக்கு கிடக்கட்டும்.நம் நிகழ்காலத்துக்கு தொந்தரவு கொடுக்காத வரை...:))

விஞ்ஞானம் இதற்க்கு என்ன சொல்கிறது என கேட்டீர்களேயானால்.. மறுபிறவி ஒன்று இல்லை.. ஒரே சமயத்தில பல வகையில் மறுபிறவி அடைகிறோம்ன்னு நான் சொன்னால்,வியப்படைவீர்களா?.. என்ன இது குழப்பமான கூற்று என? ஆனால் விஞ்ஞானம் இதை ஒருவித மறுசுழற்சியாக பார்க்கிறது.


நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்று ,நம் மரணம் என சொல்லப் படுகின்ற விடயத்திற்க்கு பின்பும் பழையதை விட்டு,நிலைப்பது(சாகா வரம்?) அல்லது புதிய வடிவத்தில் உருவாவது/சேர்வது என்பதை மறுபிறவி என எடுத்துக்கொள்ளலாமா?..


நம்மிடம் இருப்பதை

1)உடல்
2)ஆன்மா/மனம்(soul)
3)ஜீன்கள்


என பிரித்து விஞ்ஞான முறையில மறுப்பிறவியை ஆராய்வோம்.


முதலில்...

இந்த இடுகையில் உடல் பற்றி எடுத்துக்கொள்வோம்..

உடலைப் பொறுத்த மட்டில்,நாம் உயிரோடு இருக்கும் போதே பல மறுபிறவிகள் எடுக்கிறோம்.

நம் உடலில் வினாடிக்கு , 2.5 கோடி செல்கள் இறந்த வண்ணம் இருக்கின்றன.அவற்றிற்கு இணையாக புதிய செல்கள் தோன்றுகின்றன.

[மூளையில் மட்டும் இறந்த செல்கள் புதுப்பிக்கப் படுவது இல்லை.. அதற்க்கு பதிலாக இறக்கும் நியுரான் செல்களின் இணைப்புகள் வேறு உபரி (ஸ்பேர்) செல்களுக்கு மாற்றப் படுகிறது.நம் வாழ்நாள் முழுவதற்க்குமான உபரி செல்கள் மூளையில் உள்ளன.. ஒரு சராசரி மனிதன் தன் மொத்த மூளையில் 2% மட்டுமே பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு உண்டு.(இப்படி செல் இணைப்பு காப்பி செய்யும்போது,குறைவான என்சைம்களை தூண்டிய முக்கியமில்லா நிகழ்வுகள் குறித்த இணைப்புகளுக்கு,மூளை காப்பி செய்ய முக்கியத்துவம் கொடுக்காததினால் தான் மறதி என்ற நிகழ்வு ஏற்படுகின்றது என சொல்கிறார்கள்,..) இதைப்பற்றி பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்].

உடலின் இறந்த செல்கள்,கண்ணுக்குத் தெரியாத மேல் தோல் உரிப்புகளாக,முடி,நகம்,வியர்வை அழுக்கு என பல வடிவங்களில் வெளியேறுகிறது.குண்டாக இருப்பவர், இறக்கும் செல்களுக்கு ,சமமான புதிய செல்கள் உருவாவதற்க்கு தேவையான அளவில் அமீனோ அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளாவிட்டால் உடல் இளைக்கிறார்..

இப்படி பார்க்கும்போது ஒவ்வொரு 24 நாட்களூக்கும் ஒருமுறை நம் உடலின் எல்லா செல்களும் புதுப்பிக்கப் படுகின்றன.(ரத்தத்த செல்களையும் சேர்த்து தான்). எனவே உடலைப் பொருத்தமட்டில்,வாழும் போதே, நாம் ஒவ்வொரு 24 நாட்களுக்கு ஒருமுறை மறுப்பிறவி எடுக்கிறோம் தானே..
அதாவது 100 வருடம் வாழும் ஒருவர்..(அவ்வ்வ்...பேராசை?) =100 * (365/24) =5,55,104.2 முறை முழு உடலையும்,செல்மறுசுழற்ச்சி செய்துக் கொள்கிறோம்(அடேங்கப்பா..).


இல்லை..இல்லை.. இறந்த பிறகு எடுப்பது தான் மறுபிறவி என சொல்வீர்களானால்... உங்களுக்காக..

நமது மனித உடல்..பல்வேறு மூலக்கூறுக்களால் ஆன ஒருகூட்டுப்பொருள்.அந்த மூலக்கூறுகள் எல்லாம் அணுக்களால் ஆனவை..
அணுக்கள் எலக்ரான்,புரோட்டான்,நியுட்ரான் போன்ற அடிப்படை அணுத்துகள்களால்..ஆனவை..

இதே அணுத்துகள்களால் தான் உலகமும்,அதில் நான் காணுகிற எல்லா பொருட்களும் ஆகியுள்ளன.(ஒரே வகை செங்கட்களை,பல பாணிகளில் உபயோகித்து பல வடிவம்.வகையான வீடுகளை உருவாக்குவது போல..).


இறப்பு என்பது உடனே ஏற்படுவது இல்லை,அது படிப்படியாக நிகழ்வது.20 வயதோடு மூளையின் முழுவளர்ச்சி நின்றுவிட,மூளையின் செல்கள் இறந்துக்கொண்டே இருக்க..அதிலிருந்தே திரி கொளுத்தப் பட்ட வெடி மருந்தைப் போல,நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துக்கொண்டே இருக்கிறோம்.


கடைசி காலத்தில், மூளை கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாடு இழந்து,ஒரு கட்டத்தில் ,தன்னிச்சை செயல்களான இதய இயக்கம் போன்றவைகளைக் கூட நிகழ்த்த முடியாத காலகட்டம் தான்,இறப்பு எனப்படுகிறது.(அந்த சமயத்திலேயும்,உடலின் செல்கள்,இதய இயக்கத்தின்,கடைசி வினாடியில் கிடைத்த ஆக்ஸிஜன் தீரும்வரையில் உயிர்வாழ்கின்றன.அதன் பின்புதான்,செல் கட்டமைப்பு சிதையத் துவங்குகின்றன.).

நாம் இறந்த பிறகு, மண்ணில் புதைக்கப் பட்டால்,நமது செல்கள் சிதைந்து உடலின் மூலப் பொருட்களான ஆக்ஸிஜன்,கார்பன்,சோடியம் போன்ற அணுக்களாக பிரிந்து மண்ணில் கலக்கின்றன.அவற்றை உண்ணும் பேக்டீரியாவில் கலந்து மறுப்பிறவி எடுக்கிறோம். அந்த மண்ணில் வளரும் மரம்,செடி,புல்லினால் ஈர்க்கப் பட்டு அவைகளில் ஒரு பகுதியாக மறுபிறவி எடுக்கிறோம்.

எரிக்கப் பட்டால்,வாயுவாகி காற்றில் கலக்கின்றன,உலகத்தை சுற்றி வருகிறோம்.காற்றின் கலவையாய்.அவற்றை சுவாசிக்கும்,உயிர்களில் தங்குகிறன.

மிஞ்சிய கார்பன் அணுக்களை(அஸ்தி) தூவிய நதி, கடல் போன்றவற்றால் , பரவுகின்றோம். அதை உண்ணும் மீன்,ஒதுங்கும் கரையோற புல்வேர் என பல விதங்களில் மறுசுழற்ச்சி ஆகின்றன நம் அணுக்கள்.

எனவே உடல் ரீதியாக நாம் மொத்தமாக இல்லாமல்,பல துகள்களாய்,அணுக்கலாய்,பல கோடிப் பிறவிகளை (அவதாரங்களைன்னு சொல்லலாமா?..) எடுக்கிறோம்.சரிதானே?..


அதுசரி,சாகாவரம்ன்னு ஏதோ சொன்ன மாதிரி தோனுச்சேன்னு கேக்கறிங்களா?..

நமது பூமியின் ஒவ்வொரு அங்கூலமும்,பல்லாயிரக்கணக்கான உயிர்களின் சமாதிகள் தான்.நமது பூமியில் எங்கு தோண்டினாலும்,பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்து ,சில ஆயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த வாழ்ந்த உயிர்களின் தடயங்களை காணலாம்.
அது அவற்றின். எலும்புகள் தான்.


எலும்புகள் கால்சியத்தினாலானவை. உயிர்களின் வாய்வியலுக்கு தேவையான உறுதியான கட்டமைப்பு,அவற்றை பல லட்சக்கணக்கான ஆண்டுகளூக்குப் பிறகும் சிதைவடையாமல் இருக்கச் செய்கின்றன.இதனால் தான் ,உடல் செல்கள் சிதைவடைந்து,மறைந்த நிலையிலும்,
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டையனோஸர் போன்ற விலங்குகளின் எலும்புகளை நாம் இன்றும் அகழ்வாராச்சியில் மீட்டெடுக்க முடிகிறது.மனித எலும்பும்,பற்களும் அதே வகை தான்.எனவே எலும்புகளைப் பொருத்தவரையில் அவை சாகாவரம் பெற்றவைன்னு சொல்லலாமா?..

மனம் மற்றும் ஜீன்கள் வகையில் மறுபிறவி கருத்துக்களை விஞ்ஞான விளக்கங்களை இனிவரும் இடுகைகளில் பார்ப்போம்.

96 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

nalla vilakkam..
meethi thodargalaiyum seekiram podunga :)

Anonymous said...

உடல் பத்தி சொல்லுறது சுலபம்...அடுத்த பகுதியையும் போடுங்க...வரேன்...பிரிச்சு மேஞ்சிறலாம்.

said...

கலக்கல் ஸ்ரீ. உன் பதிவுகள் வேற லெவலுக்கு போயிட்டு இருக்கு.

(பாரேன்... இந்த புள்ளைகிட்ட ஏதோ ஒண்ணு இருந்திருக்கு.தெரியாம போச்சு...)

said...

அனானிமஸ் சொன்ன மாதிரி அடுத்த பகுதியை எப்படி ஹேண்டில் பண்ணப்போறன்னு ஆர்வமா நானும் இருக்கேன்.

Anonymous said...

thanks

said...

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

மறு பிறவி மற்றவர்கள் நம்மைப் பற்றிப்
பேசுவதிலும்,நினைப்பதிலும் இருக்கிறது.திருக்குறள் முனுசாமி அய்யா அவர்கள் சொல்வார்,நாம் இருந்ததற்கு ஒரு முத்திரை வைத்து விட்டுப் போக வேண்டும் என்று.

said...

வித்தியாசமான சப்ஜெக்ட்டு, அதற்கேற்றாற் போல் படங்கள்.
நன்றாக இருக்கு.

Anonymous said...

NICE POST AGAIN.

said...

ஹாய் ரசிகா,

//வித்தியாசமான சப்ஜெக்ட்டு, அதற்கேற்றாற் போல் படங்கள்.
நன்றாக இருக்கு.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்.

இதுக்கு தான் சீக்கிரமா கல்யானம் பண்ணிகோனு சொல்றேன், எங்கே நீ கேட்டா தானே...ம்ம்ம் ... எப்படி இப்படில்லாம் யோசிக்கறயோ?அதுக்கு ஏத்த மாதிரி படங்கள வேற தேடி எடுக்கற...ம்ம்ம்...அப்படியே அடுத்ததையும் போட்டுடு..

said...

// Dreamzz said...

nalla vilakkam..
meethi thodargalaiyum seekiram podunga :)//

நல்வருகைகள் மாம்ஸ்.. நன்றி:)

said...

//Anonymous said...

உடல் பத்தி சொல்லுறது சுலபம்...அடுத்த பகுதியையும் போடுங்க...வரேன்...பிரிச்சு மேஞ்சிறலாம்//'/

அவ்வ்வ். செஞ்சுடலாம்..நண்பரே ஆனா உங்க பேரையே சொல்லாம,கலந்தாலோசனைக்கு தயாரா கூப்பிடுறிங்களே,அதான் யோசிக்கறேன்:)))))))
வருகைக்கு நன்றி:).

said...

// நந்து f/o நிலா said...

கலக்கல் ஸ்ரீ. உன் பதிவுகள் வேற லெவலுக்கு போயிட்டு இருக்கு.

(பாரேன்... இந்த புள்ளைகிட்ட ஏதோ ஒண்ணு இருந்திருக்கு.தெரியாம போச்சு...)//

ஆவ்வ்வ்வ்.. வாங்க மாம்ஸ்.. வருகைக்கு,ஊக்கத்திற்க்கு நன்றி..(ஆமா இதை 7ஜி-ரெயின்போ காலனி படத்துல கேட்ட மாதிரியே ஒரு ஞாபகம்.:)) )
எல்லாம், உங்க ஆதரவினாலதான்..:)
நன்றி.

said...

// நந்து f/o நிலா said...

அனானிமஸ் சொன்ன மாதிரி அடுத்த பகுதியை எப்படி ஹேண்டில் பண்ணப்போறன்னு ஆர்வமா நானும் இருக்கேன்.//
அனானி நண்பர்கிட்ட தமிழ் எழுதி இருக்கும்போது,அவர் பிளாக் பழக்கம் உடையவர்ன்னு புரியுது,பிறகு ஏன் அனானியாக வரணும்ன்னு புரியலை:)))))) . நாம என்ன அம்புட்டு,சர்ச்சைக்குறிய மேட்டரா பேசிகிட்டிருக்கோம்?.:)))))))
ஆரோக்கியமான விவாதங்கள் நல்லது தானே. நன்றி மாம்ஸ்..:).

said...

//Anonymous said...

thanks//

நன்றிகள் நண்பரே:)

said...

// Thamizhan said...

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

மறு பிறவி மற்றவர்கள் நம்மைப் பற்றிப்
பேசுவதிலும்,நினைப்பதிலும் இருக்கிறது.திருக்குறள் முனுசாமி அய்யா அவர்கள் சொல்வார்,நாம் இருந்ததற்கு ஒரு முத்திரை வைத்து விட்டுப் போக வேண்டும் என்று.//

அருமையான விளக்கம், நல்ல குறளை நினைவுப் படுத்தியதற்க்கு நன்றிகள் நண்பரே.:)

said...

//வடுவூர் குமார் said...

வித்தியாசமான சப்ஜெக்ட்டு, அதற்கேற்றாற் போல் படங்கள்.
நன்றாக இருக்கு.//

நல்வருகைகள் வடுவூர் குமார் பாராட்டுகளுக்கு நன்றி:)

said...

// rK said...

NICE POST AGAIN.//

வருகைக்கும்,கருத்துக்கும்
நன்றி ஆர்.கே சார்:)..

said...

//Sumathi. said...

ஹாய் ரசிகா,

//வித்தியாசமான சப்ஜெக்ட்டு, அதற்கேற்றாற் போல் படங்கள்.
நன்றாக இருக்கு.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்.

இதுக்கு தான் சீக்கிரமா கல்யானம் பண்ணிகோனு சொல்றேன், எங்கே நீ கேட்டா தானே...ம்ம்ம் ... எப்படி இப்படில்லாம் யோசிக்கறயோ?அதுக்கு ஏத்த மாதிரி படங்கள வேற தேடி எடுக்கற...ம்ம்ம்...அப்படியே அடுத்ததையும் போட்டுடு..//

அவ்வ்வ்வ்... ஏனுங்க சுமதி, நீங்க பாராட்டுறிங்களா?திட்டுறிங்களா?ன்னு புரிய மாட்டேங்குதே:)))))
வஞ்சப் புகழ்ச்சி அணில நீங்க எக்ஸ்பர்ட்டுன்னு சொன்னாங்க. இப்பத்தேன் புரியுது,அது உண்மைதான்னு..ஹிஹி..
கல்யாணம்ன்னு மாட்டி விட்டுட்டா, மொக்கை போட்டு கொடுமை படுத்த,எங்க நேரம் கெடைக்கப் போவுதுன்னு தானே,இப்டி ஜடியா செய்யறிங்க?..:))))
நாங்க ரொம்ப உஷாருல்ல..:))))))))

said...

வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி

said...

சுவாரசியமாக இருக்கிறது. ரொம்ப யோசிச்சி நீங்க ஒரு வழி ஆகிடாம அடுத்த பதிவ போடுங்க.

said...

என்னடா 20 கமெண்டோட ஒரு பதிவு தமிழ்மணத்துல சுத்துதே ரசிகன்து பாத்துட்டு போலாம்னு வந்தேன்.

நல்ல வெவரமாத்தேன் இருக்கு.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

24 நாட்களுக்கு ஒரு முறை செல்கள்புதுப்பிச்சிக்கிறது எப்பிடி மறுபிறவியாகும்???

said...

//
ஒரு சராசரி மனிதன் தன் மொத்த மூளையில் 2% மட்டுமே பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு உண்டு.(இப்படி செல் இணைப்பு காப்பி செய்யும்போது,குறைவான என்சைம்களை தூண்டிய முக்கியமில்லா நிகழ்வுகள் குறித்த இணைப்புகளுக்கு,மூளை காப்பி செய்ய முக்கியத்துவம் கொடுக்காததினால் தான் மறதி என்ற நிகழ்வு ஏற்படுகின்றது
//

யு மீன் சிஆர்சி எர்ரர்????

said...

//
எரிக்கப் பட்டால்,வாயுவாகி காற்றில் கலக்கின்றன,உலகத்தை சுற்றி வருகிறோம்.காற்றின் கலவையாய்.அவற்றை சுவாசிக்கும்,உயிர்களில் தங்குகிறன.
//
இது தான் ஆத்தா வந்திருக்குன்னு அங்கங்க ஆடறாய்ங்களே அதா??


எங்க தாத்தா (ஆவி) நமிதா மூச்சுக்குள்ள இருக்கோ இல்ல நயந்தாரா மூச்சுக்குள்ள இருக்கோ !!

அவ்வ்வ்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

தல..பெரிய ஆளுதான் நீங்க...அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..

சந்தோகம் வரும் கண்டிப்பாக கேள்வி கேட்பேன் ;;

said...

நல்ல படங்களுடன் புரிந்து கொள்ளும்படி எளிமையான நடையில்..தொடருங்கள் ரசிகன்..

said...

பிறவி என்பது manifested
மறுபிறவி என்பது unmanifested to re-manifested

பிறவி என்பது உடல் மட்டும் சார்ந்த விஷயமாகக் கருதினால் மங்களூர் சிவா கவலை/பொறாமைப்பட்ட மாதிரி தாத்தாவின் எரிக்கப்பட்ட உடல் காற்றில் கலந்து நமீதா மேடத்தை தழுவிக்கிடக்கிறதோன்னு ஈசியா சொல்லிடலாம் :-))

பிறவி என்பது Body, Mind, Intellect இவைகளின் கலவை.

இதில் Body என்பது gross matter made up of பஞ்சபூதங்கள் எனவே அது அழியும் போது தோன்றிய பஞ்சபூதங்களிடையே சென்று சேர்கிறது.

Subtler controls the Grosser... எண்ணங்கள்-உணர்வுகள் +அனுபவ-நினைவுகளால் ஆக்கப்பட்ட மனம் எனும் Mind நினைத்தால் சுஜாதா மற்றும் நெருங்கிய நபர் மறைந்ததற்கு Body ஐ கண்ட்ரோல் செய்து கண்ணில் கண்ணீர் மல்கவைத்தோ அல்லது வாயால் வசைபாடவோ செய்யவைக்கிறது.

Intellect is Subtler than Mind
பொறாமையால் இறந்து விட்ட சுஜாதாவைத் திட்டினாலும் அது தப்பு என்று மனதிற்குச் சொல்லும்.. Intellect Interference செய்வதை gross ஆன மனம் கேட்டால் அது இன்னமும் grosser ஆன உடலை கட்டுக்குள் எடுத்துவந்து செய்த செயலுக்கு மன்னிப்பு என்று வாயாலோ தட்டச்சு செய்து கையாலோ
செயலாற்ற வைக்கும்.

இதில் உடல் அங்கமான கண், கை, வாய் செயல் பட்டாலும் அவை தனிப்பட்டு இயங்க வில்லை. Body is inert without mind and intellect.

இதனாலேயே உடலை இயக்கும் மனமும், புத்தியும் சூட்சும சரீரமாகிறது.

பூத உடலை இயக்கும் சூட்சும சரீரமான மனம் புத்தி என்பன அடுத்த பிறவிக்கான காரண சரீரமாகிறது (Causal Body).

Causal Body என்பதற்கு ஆற்றலின் விதியை (கருத்தில் மிக அருகாமையில் வருவதால்) பொருத்திப்பார்க்கலாம்.

ஆற்றலுக்கு அழிவே கிடையாது. ஆற்றலானது வகை மாறி வருமே அன்றி அழிவே கிடையாது.


Simple Matter is Body is just made up of inert MATTER!
For the Mattered Body to be functional it requires manifestation of divine spark into it.

இறைத்துகளை /divine spark ஐ ஒரு உடல் பிரதிபலிக்காத நிலையில் அதுவரையில் சுஜாதா என்று நன்கு அறியப்பட்ட Functional Matter, inert Matter ஆகிவிடுவதால் அது பிணம் என்று ஆகிறது!

பிறப்பு இறப்பு மறு சுழற்சியை
கண்ணுக்குத் தெரியும் உடலை மட்டும் கணக்கில் எடுத்துப்பார்த்தால் எடைக்கு எடை பேரீச்சம் பழம் எனும் ரேஞ்சுக்கு சிம்பிளாகிவிடும் அபாயம் இருக்கிறது :-)).


ஹெவியான சப்ஜெக்ட்... அடுத்த பதிவு மேட்டர்ல என்னன்னு வந்து பார்க்கிறேன் :-))

said...

அருமையான ஆராய்ச்சி பதிவுனு மட்டும் தெரியுதுண்ணா

நட்போடு
நிவிஷா

Anonymous said...

மறுபிறவி பற்றி நீங்க,

உடல்
ஆன்மா/மனம்(soul)
ஜீன்கள்

என்று மூன்று விதமா ஆராய்ச்சி பண்ணீருக்கீங்க. ஓகேதான். இதில் முடிய பிச்சிக்க வைக்கிற சின்ன விசயம் ஆன்மாவும் மனமும் ஒன்னுதான்னு விஞ்ஞானிகள் எடுத்துக்கிறதுதான்.

Anonymous said...

:)

said...

மறுபிறவி பத்தி நல்லாவே விஞ்ஞானபூர்வமா அலசியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

said...

Hi Rasikan,

romba nalla eludhi erukkinga, padangalum, simple words la vilakkamum romba nalla erundhadhu,

Anonymous said...

உடலும் ஜீன்களும் வெவ்வேறா? உடலின் பாகம் தானே ஜீன். எதனால் அப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

Anonymous said...

"hello Rasigan Sir, romba periya subject eduthu irukireergal. Adutha pathivai aavaludan edhirparkiren. Vaazhthukkal, Anbudan... MuPa.Nagarajan"

comment Sent via jaxtr.

said...

மறுப்பிறவி பதிவுக்கு மறுப்பு ஏதும் இல்லை தொடர்ந்து எழுதுங்கள்...


தினேஷ்

said...

ஹிஹி, இந்த நேரம் கல்யாணம் ஆகி இருந்தா தோசைக்கு மாவாட்டுவது எப்படி?னு மீள் பதிவு வந்திருக்கும். இப்பவே இந்த பதிவு எல்லாம் போட்டுடு, அப்புறம் நேரம் கிடைக்காது என்ன.. :))

said...

படங்கள் எல்லம் சூப்பர்.

அப்ப பதிவு..?னு இழுக்க படாது. :p

Anonymous said...

nice

Anonymous said...

//உடல் பத்தி சொல்லுறது சுலபம்...அடுத்த பகுதியையும் போடுங்க...வரேன்...பிரிச்சு மேஞ்சிறலாம்.//
I agrre with the above statement.
Will see.
Thanks, keep posting

said...

//வித்தியாசமான சப்ஜெக்ட்டு, அதற்கேற்றாற் போல் படங்கள்.
நன்றாக இருக்கு//

ரீப்பீட்டே!!!

said...

//நிஜமா நல்லவன் said...

சுவாரசியமாக இருக்கிறது. ரொம்ப யோசிச்சி நீங்க ஒரு வழி ஆகிடாம அடுத்த பதிவ போடுங்க.//

ஹா..ஹா... ரொம்ப நன்றிங்க.. கொஞ்சம் வேலையா இருக்கறதால தாமதமாகிருச்சி.. விரைவுல செஞ்சுடலாம்:)

said...

// மங்களூர் சிவா said...

என்னடா 20 கமெண்டோட ஒரு பதிவு தமிழ்மணத்துல சுத்துதே ரசிகன்து பாத்துட்டு போலாம்னு வந்தேன்.

நல்ல வெவரமாத்தேன் இருக்கு.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

24 நாட்களுக்கு ஒரு முறை செல்கள்புதுப்பிச்சிக்கிறது எப்பிடி மறுபிறவியாகும்???//

வாங்க மாம்ச் குட் கொஸ்டீன்...
எல்லா செல்களும் புதுப்பிக்கப்பட்டா ,அது புது உடல் தானே.. புது உடல்ன்னா மறுப்பிறவின்னு சொல்லிக்கலாம் தானே..:)

said...

//மங்களூர் சிவா said...

//
எரிக்கப் பட்டால்,வாயுவாகி காற்றில் கலக்கின்றன,உலகத்தை சுற்றி வருகிறோம்.காற்றின் கலவையாய்.அவற்றை சுவாசிக்கும்,உயிர்களில் தங்குகிறன.
//
இது தான் ஆத்தா வந்திருக்குன்னு அங்கங்க ஆடறாய்ங்களே அதா??


எங்க தாத்தா (ஆவி) நமிதா மூச்சுக்குள்ள இருக்கோ இல்ல நயந்தாரா மூச்சுக்குள்ள இருக்கோ !!

அவ்வ்வ//
ஹா..ஹா... தாத்தாவுக்கு பானுமதி,சரோஜா தேவி தானே பிடிக்கும்ன்னு நெனைச்சேன்:P.. நல்ல கற்பனை ரசித்தேன்:))

said...

// மங்களூர் சிவா said...

//
ஒரு சராசரி மனிதன் தன் மொத்த மூளையில் 2% மட்டுமே பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு உண்டு.(இப்படி செல் இணைப்பு காப்பி செய்யும்போது,குறைவான என்சைம்களை தூண்டிய முக்கியமில்லா நிகழ்வுகள் குறித்த இணைப்புகளுக்கு,மூளை காப்பி செய்ய முக்கியத்துவம் கொடுக்காததினால் தான் மறதி என்ற நிகழ்வு ஏற்படுகின்றது
//

யு மீன் சிஆர்சி எர்ரர்????//

ஹா..ஹா..அதே அதேத் தான்.. பொருத்தமான ஒப்பீடு..

(ஆமா சீ ஆர்..சீ எரர்ன்னா என்ன? :P)

said...

//Comment deleted

This post has been removed by the blog administrator//

நண்பரின் கோரிக்கைக்கு ஏற்ப அவரின் பின்னூட்டம் மறைக்கப் படுகிறது:)
நன்றி நண்பரே:)

said...

//கோபிநாத் said...

தல..பெரிய ஆளுதான் நீங்க...அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..

சந்தோகம் வரும் கண்டிப்பாக கேள்வி கேட்பேன் ;;//

வாங்க வாங்க.,..கேளுங்க..நமக்குள்ள தெரிஞ்சவரை கலந்தாலோசிக்கலாம்.
ஆமா.. அதென்ன சந்”தோகம்”.புதுசா இருக்கே..:)))))
வருகைக்கு நன்றிகள் மாம்ஸ்...

said...

// பாச மலர் said...

நல்ல படங்களுடன் புரிந்து கொள்ளும்படி எளிமையான நடையில்..தொடருங்கள் ரசிகன்..//

நன்றிகள் பாச மலர்.. வலைசரத்துல பின்னி எடுக்கறிங்க.. வாழ்த்துக்கள்..:)

said...

//Hariharan # 03985177737685368452 said...

பிறவி என்பது manifested
மறுபிறவி என்பது unmanifested to re-manifested

பிறவி என்பது உடல் மட்டும் சார்ந்த விஷயமாகக் கருதினால் மங்களூர் சிவா கவலை/பொறாமைப்பட்ட மாதிரி தாத்தாவின் எரிக்கப்பட்ட உடல் காற்றில் கலந்து நமீதா மேடத்தை தழுவிக்கிடக்கிறதோன்னு ஈசியா சொல்லிடலாம் :-))

பிறவி என்பது Body, Mind, Intellect இவைகளின் கலவை.

இதில் Body என்பது gross matter made up of பஞ்சபூதங்கள் எனவே அது அழியும் போது தோன்றிய பஞ்சபூதங்களிடையே சென்று சேர்கிறது.

Subtler controls the Grosser... எண்ணங்கள்-உணர்வுகள் +அனுபவ-நினைவுகளால் ஆக்கப்பட்ட மனம் எனும் Mind நினைத்தால் சுஜாதா மற்றும் நெருங்கிய நபர் மறைந்ததற்கு Body ஐ கண்ட்ரோல் செய்து கண்ணில் கண்ணீர் மல்கவைத்தோ அல்லது வாயால் வசைபாடவோ செய்யவைக்கிறது.

Intellect is Subtler than Mind
பொறாமையால் இறந்து விட்ட சுஜாதாவைத் திட்டினாலும் அது தப்பு என்று மனதிற்குச் சொல்லும்.. Intellect Interference செய்வதை gross ஆன மனம் கேட்டால் அது இன்னமும் grosser ஆன உடலை கட்டுக்குள் எடுத்துவந்து செய்த செயலுக்கு மன்னிப்பு என்று வாயாலோ தட்டச்சு செய்து கையாலோ
செயலாற்ற வைக்கும்.

இதில் உடல் அங்கமான கண், கை, வாய் செயல் பட்டாலும் அவை தனிப்பட்டு இயங்க வில்லை. Body is inert without mind and intellect.

இதனாலேயே உடலை இயக்கும் மனமும், புத்தியும் சூட்சும சரீரமாகிறது.

பூத உடலை இயக்கும் சூட்சும சரீரமான மனம் புத்தி என்பன அடுத்த பிறவிக்கான காரண சரீரமாகிறது (Causal Body).

Causal Body என்பதற்கு ஆற்றலின் விதியை (கருத்தில் மிக அருகாமையில் வருவதால்) பொருத்திப்பார்க்கலாம்.

ஆற்றலுக்கு அழிவே கிடையாது. ஆற்றலானது வகை மாறி வருமே அன்றி அழிவே கிடையாது.


Simple Matter is Body is just made up of inert MATTER!
For the Mattered Body to be functional it requires manifestation of divine spark into it.

இறைத்துகளை /divine spark ஐ ஒரு உடல் பிரதிபலிக்காத நிலையில் அதுவரையில் சுஜாதா என்று நன்கு அறியப்பட்ட Functional Matter, inert Matter ஆகிவிடுவதால் அது பிணம் என்று ஆகிறது!

பிறப்பு இறப்பு மறு சுழற்சியை
கண்ணுக்குத் தெரியும் உடலை மட்டும் கணக்கில் எடுத்துப்பார்த்தால் எடைக்கு எடை பேரீச்சம் பழம் எனும் ரேஞ்சுக்கு சிம்பிளாகிவிடும் அபாயம் இருக்கிறது :-)).


ஹெவியான சப்ஜெக்ட்... அடுத்த பதிவு மேட்டர்ல என்னன்னு வந்து பார்க்கிறேன் :-))//

வாங்க ஹரிஹரன் சார்... இதைப்போன்ற கூற்றைத் தான் எதிர்பார்த்தேன்...:)
விஞ்ஞானம் ஏன் மனதை ,ஆன்மாவாக உருவகம் செய்துக்கொள்ள நேரிட்டது?.ன்னு ”மனம்” பதிவுல சொல்லியிருக்கிறேன். சர்ச்சைக்குறிய பகுதிகளை நீக்கியதும் ,வெளியிடுகிறேன்..ஆர்வமுடன் கலந்தாலோசிக்கலாம்...நீங்க கருதும் பல வாக்கியங்கள் சரிதான். ஆனால் விஞ்ஞானத்தில் அவைகளுக்கு வேறு பெயர்கள்,காரணங்கள் உண்டு. ஆன்மா என்பதனை அறிவியல் வேறு விதமாக ஆதாரங்களுடன் விளக்குகிறது.
//Intellect is Subtler than Mind// என்பதெல்லாம் மூளையின் செயல்பாடுகளின் ஒரு பகுதியான சில சுரபிகளின் இடைபாடுகள் தான் என்று நிருபிக்கப் பட்டுள்ளது.ஏன்?.. காதல் போன்ற உணர்வுகள் கூட ஆன்ரஜென் போன்ற சுரபிகளின் வேதியல் விளைவுகள் தான்.அதை பற்றி விரிவாக எழுதுகிறேன்.வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்க்கும் நன்றிகள் சார்.:)

said...

//நிவிஷா..... said...

அருமையான ஆராய்ச்சி பதிவுனு மட்டும் தெரியுதுண்ணா

நட்போடு
நிவிஷா//

நன்றி நிவிஷாம்மா...:)
இது விளக்கப் பதிவுதான்.நேரம் கிடைக்கும் போது தொடர்கிறேன். ஆமாம்.. அதென்ன கண்கள் படம்.. நம்ம “அப்பாவி சிறுமி”துர்காவோட பழக்க தோஷமா?.. :)))))

said...

// நவன் said...

மறுபிறவி பற்றி நீங்க,

உடல்
ஆன்மா/மனம்(soul)
ஜீன்கள்

என்று மூன்று விதமா ஆராய்ச்சி பண்ணீருக்கீங்க. ஓகேதான். இதில் முடிய பிச்சிக்க வைக்கிற சின்ன விசயம் ஆன்மாவும் மனமும் ஒன்னுதான்னு விஞ்ஞானிகள் எடுத்துக்கிறதுதான்.//

அதற்க்கான தெளிவான காரணங்கள் உள்ளன.. மனம் என்பது எது? அதனை பாதிக்கும் காரணிகள்,ஆன்மா எனப்படுவதன் குணங்களாக சொல்லப் படுபவை,அந்த கொள்கையில் உள்ள குறைபாடுகள்&ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் எல்லாம் ஒப்பிட்டு அறிவியலால் ஒருவாறு ஏற்றுக்கொள்ளப் பட்டதே..இந்த கருத்து. இதனை விளக்க 2-3 பதிவாது தேவைப்படும். என்ன? ரொம்பவே போரடிக்கும் என்பதால்,இடையிடையே நிறய மொக்கைகளுடன் இப்படி பட்ட குழப்பங்களையும் கொடுக்க முயற்ச்சிக்கலாம் :)))))
நன்றிகள் நண்பரே..மனம் பதிவில் உங்கள் கேள்விகளுக்கு பதில் இருக்கிறது என நம்புகிறேன்.:)

said...

// Anonymous said...

:)//

நன்றிகள் நண்பரே:)

said...

//சகாரா said...

மறுபிறவி பத்தி நல்லாவே விஞ்ஞானபூர்வமா அலசியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.//

வாங்க சகாரா,...வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்:)

said...

// Siddharthan said...

Hi Rasikan,

romba nalla eludhi erukkinga, padangalum, simple words la vilakkamum romba nalla erundhadhu,//

வாங்க சித்தார்த்தன்.. வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றிங்க:)

said...

// Anonymous said...

உடலும் ஜீன்களும் வெவ்வேறா? உடலின் பாகம் தானே ஜீன். எதனால் அப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?//

நம் உடலின் ஜீன்கள் நமக்கு முன்னால் இருந்த தலைமுறைகளின் (தலைமுறையின் அல்ல..) கலவைக் கொடை,.நாம் அடுத்த தலைமுறைகளுக்கு அளிக்கும் பங்கு. அதனால் தான் நமது சொத்தாக மட்டும் அதனை கருத இயலாது:)

said...

//Anonymous said...

"hello Rasigan Sir, romba periya subject eduthu irukireergal. Adutha pathivai aavaludan edhirparkiren. Vaazhthukkal, Anbudan... MuPa.Nagarajan"

comment Sent via jaxtr..//
மிக்க நன்றி நண்பரே:)

said...

// தினேஷ் said...

மறுப்பிறவி பதிவுக்கு மறுப்பு ஏதும் இல்லை தொடர்ந்து எழுதுங்கள்...


தினேஷ்//

செஞ்சுடுவோம் நண்பரே.. வேலைகளுக்கு இடையே நேரம் ஒதுக்க முயன்றுக்கொண்டிருக்கிறேன்:)

said...

// ambi said...

ஹிஹி, இந்த நேரம் கல்யாணம் ஆகி இருந்தா தோசைக்கு மாவாட்டுவது எப்படி?னு மீள் பதிவு வந்திருக்கும். இப்பவே இந்த பதிவு எல்லாம் போட்டுடு, அப்புறம் நேரம் கிடைக்காது என்ன.. :))//

வாங்க அம்பி அண்ணா... அனுபவம் பேசுதுன்னு நினைக்கறேன் :)))))))
நன்றிகள்.

said...

//ambi said...

படங்கள் எல்லம் சூப்பர்.

அப்ப பதிவு..?னு இழுக்க படாது. :p//

ஹா..ஹா... அதானே? படிச்சாதானே சொல்ல முடியும்:))))))))))
வருகைக்கு நன்றிகள் அம்பியண்ணா...

said...

// Anonymous said...

nice//

நன்றிகள் நண்பரே:)

said...

//Sabes said...

//உடல் பத்தி சொல்லுறது சுலபம்...அடுத்த பகுதியையும் போடுங்க...வரேன்...பிரிச்சு மேஞ்சிறலாம்.//
I agrre with the above statement.
Will see.
Thanks, keep posting//

வாழ்த்துக்களுக்கும்,ஆர்வத்திற்க்கும் நன்றிகள் நண்பரே.. செஞ்சுடலாம்.

said...

//மதுரையம்பதி said...

//வித்தியாசமான சப்ஜெக்ட்டு, அதற்கேற்றாற் போல் படங்கள்.
நன்றாக இருக்கு//

ரீப்பீட்டே!!!//

வருகைக்கும் ,ஆதரவுக்கும் நன்றிகள் மதுரையம்பதி சார்:)

said...

http://valluvam-rohini.blogspot.com/2007/10/blog-post_23.html#links

maru piraviyaip patri en karuththaiyum paarungkaLen

said...

romba nalla erukku unga blog, epadiyoo vandhu vilundhutten edula...meela mudiyala..

but oru chinna suggestion, template-ium / no of pictures-ium konjam kavanicha takkara irukkumnu ninaikiren..

edhu namma blogu, vaayla edu varudho sollunda/thuppunga ;)
http://scribbledwithdifference.blogspot.com/

Anonymous said...

//// Anonymous said...

உடலும் ஜீன்களும் வெவ்வேறா? உடலின் பாகம் தானே ஜீன். எதனால் அப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?//

நம் உடலின் ஜீன்கள் நமக்கு முன்னால் இருந்த தலைமுறைகளின் (தலைமுறையின் அல்ல..) கலவைக் கொடை,.நாம் அடுத்த தலைமுறைகளுக்கு அளிக்கும் பங்கு. அதனால் தான் நமது சொத்தாக மட்டும் அதனை கருத இயலாது:)

//
நம் உடல் இன்று எப்படி இருக்கிறது என்பதற்கு மூலமே ஜீன் தானே? என் உடல் என்று இப்போது எதைப் பார்த்தாலும் அதன் வேர் ஜீன் தான். உதாரணமாக என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் சிலர் குண்டாகவே இருப்பார்கள். அதற்கு காரணம் ஜீன்..ஒருவற்கு ஜீனிலேயே ஆஸ்துமா நோய் இருக்கும்..அதனால் எப்போதும் நோய் உடையவர்களாய் இருப்பர். ஜீனின் ஆதிக்கத்தில் இல்லாத உடல் என்பது பெரிய அளவில் இல்லை என்றே நினைக்கிறேன்..சரி...ஜீன் பற்றிய பதிவு வந்தவுடன் விவாதிக்கலாம் இதை..

பதிவர் ரஜினி ””ரசிகன்”” போலிருக்கிறது...இரு பதிவுகளுக்கிடையே பெரிய இடைவெளி!!!

-அதே அனானி

said...

//Intellect is Subtler than Mind// என்பதெல்லாம் மூளையின் செயல்பாடுகளின் ஒரு பகுதியான சில சுரபிகளின் இடைபாடுகள் தான் என்று நிருபிக்கப் பட்டுள்ளது.ஏன்?.. காதல் போன்ற உணர்வுகள் கூட ஆன்ரஜென் போன்ற சுரபிகளின் வேதியல் விளைவுகள் தான்.அதை பற்றி விரிவாக எழுதுகிறேன்.//


ரசிகன்,

நமது பாரம்பரியத்தின் தனிப்பட்ட சிறப்பு என்பதே மனோ விஞ்ஞானத்தினை பெருமளவு மிக நுட்பமாக விளக்கியிருப்பதே.

நான் Intellect is Subtler than Mind என்று குறிப்பிட்டதில் Intellect என்பது "நித்ய அநித்ய விவேகம்" சார்புகள் தவிர்த்து எது சரி எது தவறானது என்று சீர்தூக்கிப்பார்க்கும் திறன்.

Mind என்பது இடைவிடாத எண்ணங்களின் தொகுப்பு எனலாம்.

ஆழமான மனித மனோ விஞ்ஞானத்தை விளக்க ஆங்கில வார்த்தைகளுக்கு சாரம் போதாது.

அன்பின் ஒரு டெரிவேட்டிவான காதல் எனும் உணர்வுக்குக் காரணமாகிற அதே ஹார்மோன் பெற்றோர், பிள்ளைகள் மீது காட்டும் பாசத்திற்கும் காரணியாகிறதா??

காதல் கெமிஸ்ட்ரி ஹார்மோன் சுரப்பு என்பது மனிதன் விலங்கினத்தில் இருந்து எவால்வ் ஆனதால் விலங்கின சீசனல் மேட்டிங் கெமிஸ்ட்ரி சுரப்பு(உதாரணம்: கார்த்திகை மாத நாய்)
என்பது வெகுவாக மேம்பட்டு மனிதரிடையே நெறிப்பட்டு வெளிப்படுகிறது.

அறிவியல் படி மாசிவ் ஹார்ட் அட்டாக் ஒருவரது மரணத்திற்கு ஒரு காரணமாகிற நேரத்தில், மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியின் செயலிழப்பு மட்டுமே உடல் க்ளினிகலி டெட் என அறிவிக்க உச்சமான காரணியாக வரையறுத்திருக்கிறது.

மரணத்தை ஆன்ம விஞ்ஞானம் உடலின் ப்ராரப்தம் முடிந்து அதனால் தொடர்ந்து ஆன்மாவை பிரதிபலிக்க இயலாமல் போனதால் உதிர்கிறது என்றும் அழிவற்ற ஆன்மா மீண்டும் வேறுவடிவெடுக்க முடிவற்ற பிறப்பு இறப்பு தொடர்சங்கிலி பிரபஞ்சத்தில் தொடர்கிறது என்கிறது.

said...

அட்டட்டே...!
சூப்பருடா பேராண்டி.

உனக்கும் தலைல கொஞ்சம் ----- இருக்கு...
நீயும் அருமையா சிந்திக்கறேன்னு புரியுது.
(சும்மாச்சுக்கும் வாரினேன்.)
:-))]

இந்த மறு பிறவி பத்தி நானே ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்.
நீ மு்ன்னாடியே... முந்திக்கிட்டியா?

நீ சொல்லி இருக்கற விஷயம் எல்லாமே...
நான் மனசுல நினைச்சிருந்த மேட்டர்தான்.

நீ கொஞ்சம் இளமை ததும்பற படம்லாம் வேற போட்டுட்டியா.?

சொன்ன மேட்டரை விட,
போட்ட மேட்டர்ல கொஞ்சூண்டு...
கவனம் தாண்டுனதை தவிற்க முடியலை.

ஒத்துக்கறேன்.

அடுத்தப் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

என் பேரனா கொக்கா?

வாழ்த்துக்கள்.

said...

ஆமா... இந்த ஹரிஹரன்...
பெரிய டாக்டராயிருப்பார் போல...
அங்கயும் ஒரு எட்டு போயி பாத்துட்டு வந்துடுறேன்.

said...

தலைப்புல...
மறுப்பிறவி....
தப்பு.

மறுபிறவி என்பதே சரி.

இரு... இரு...
ஓ... நீ அப்படி வர்றியா?

மறுப்பு+பிறவி= மறுப்பிறவி.

அப்பிடின்னா சரிதான்.

எங்கியோ போயிட்டடா பேராண்டி...

said...

Hey i liked this post but sila edangal konjam confusinga irukku. Anyway, differentaana subject, supera picturesoda solli irukeenga.

said...

Pictures ellam romba padam podure mathiri erunthuchu... Post is simple and good...

said...

I cant open all ur other blogs... Enn eppadi access deny panni vachurukeenge?

said...

/ goma said...

http://valluvam-rohini.blogspot.com/2007/10/blog-post_23.html#links

maru piraviyaip patri en karuththaiyum paarungkaLen//

வாங்க கோமதி அக்கா,.,
அருமையா இருக்கு உங்க படைப்பு:)

said...

// Boopathy said...

romba nalla erukku unga blog, epadiyoo vandhu vilundhutten edula...meela mudiyala..

but oru chinna suggestion, template-ium / no of pictures-ium konjam kavanicha takkara irukkumnu ninaikiren..

edhu namma blogu, vaayla edu varudho sollunda/thuppunga ;)
http://scribbledwithdifference.blogspot.com///

வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே :)
தங்கள் ஆலோசனையை நினைவில் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது செயல்படுத்த,,:)

said...

// Boopathy said...

romba nalla erukku unga blog, epadiyoo vandhu vilundhutten edula...meela mudiyala..

but oru chinna suggestion, template-ium / no of pictures-ium konjam kavanicha takkara irukkumnu ninaikiren..

edhu namma blogu, vaayla edu varudho sollunda/thuppunga ;)
http://scribbledwithdifference.blogspot.com///

வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே :)
தங்கள் ஆலோசனையை நினைவில் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போது செயல்படுத்த,,:)

said...

//Anonymous said...

//// Anonymous said...

உடலும் ஜீன்களும் வெவ்வேறா? உடலின் பாகம் தானே ஜீன். எதனால் அப்படி கூறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?//

நம் உடலின் ஜீன்கள் நமக்கு முன்னால் இருந்த தலைமுறைகளின் (தலைமுறையின் அல்ல..) கலவைக் கொடை,.நாம் அடுத்த தலைமுறைகளுக்கு அளிக்கும் பங்கு. அதனால் தான் நமது சொத்தாக மட்டும் அதனை கருத இயலாது:)

//
நம் உடல் இன்று எப்படி இருக்கிறது என்பதற்கு மூலமே ஜீன் தானே? என் உடல் என்று இப்போது எதைப் பார்த்தாலும் அதன் வேர் ஜீன் தான். உதாரணமாக என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் சிலர் குண்டாகவே இருப்பார்கள். அதற்கு காரணம் ஜீன்..ஒருவற்கு ஜீனிலேயே ஆஸ்துமா நோய் இருக்கும்..அதனால் எப்போதும் நோய் உடையவர்களாய் இருப்பர். ஜீனின் ஆதிக்கத்தில் இல்லாத உடல் என்பது பெரிய அளவில் இல்லை என்றே நினைக்கிறேன்..சரி...ஜீன் பற்றிய பதிவு வந்தவுடன் விவாதிக்கலாம் இதை..

பதிவர் ரஜினி ””ரசிகன்”” போலிருக்கிறது...இரு பதிவுகளுக்கிடையே பெரிய இடைவெளி!!!

-அதே அனானி//

ஹா..ஹா.. அனானி நண்பரே, ஜீன்களைப் பற்றிய கருத்து ,உடல் பாகம் போல பெரியதாய் இருப்பதால்,அதை தனியாக எடுத்துக்கொள்வது தவறா? :))

//ஜீனின் ஆதிக்கத்தில் இல்லாத உடல் என்பது பெரிய அளவில் இல்லை என்றே நினைக்கிறேன்..//

ஜீன் உடலிலிருந்து தனித்து சொல்வதற்குறிய தனிச்சிறப்புக்களை பெற்றுள்ளதல்லவா?

//பதிவர் ரஜினி ””ரசிகன்”” போலிருக்கிறது...இரு பதிவுகளுக்கிடையே பெரிய இடைவெளி!!!//

ஹா..ஹா... நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு:)))))
உங்கள் எல்லாருடைய பின்னூட்ட கருத்து பரிமாற்றங்களுக்கு ரசிகனாய் இருக்கறதுலதான் விருப்பம்.

வேலையின் உக்கிர காலம் இது.இது முடிந்தால் பிறகு ரசனையாய் ஈ ஓட்டக்கூட நேரம் கிடைக்கும்:P
அதான் தாமதம் மன்னிக்கவும்.
ஒரு வலைத் தொகுப்பிற்க்கு ஆசிரியராய் இருக்க அழைப்பு அனுப்பியிருக்காங்க..
அது முடியட்டுமேன்னு ”டீல்”ல்ல விட்டிருக்கேன்:))

said...

//Blogger Hariharan # 03985177737685368452 said...



// நமது பாரம்பரியத்தின் தனிப்பட்ட சிறப்பு என்பதே மனோ விஞ்ஞானத்தினை பெருமளவு மிக நுட்பமாக விளக்கியிருப்பதே.//

பல விஷயங்களை ,நாமாகவே விஞ்ஞானத்தோடு சம்பந்தப் படுத்தி புரிந்துக்கொள்கிறோம்ன்னு தான் தோணுது.விஞ்ஞானத்திற்க்கு முரணான விஷயங்களும் இதைவிட அதிகமாக உள்ளன.அவற்றை விட்டு விடுகிறோம்.

//நான் Intellect is Subtler than Mind என்று குறிப்பிட்டதில் Intellect என்பது "நித்ய அநித்ய விவேகம்" சார்புகள் தவிர்த்து எது சரி எது தவறானது என்று சீர்தூக்கிப்பார்க்கும் திறன் //

எதிர்மறையான எண்ணங்களை (சில சமயங்களில் உயிர்வாழ்தலின் தீர்மானங்களுக்கு இது அவசியம்) தூண்டு சுரபி எண்டாக்ரின். ஹைப்ப்போலதாலாமஸில் இது ஏற்படுத்தும் விளைவு எதிர்மரை சிந்தனைகள்.
நேர் மறை சிந்தனையாய் இது “சரி” என்று தீர்மானிக்க இன்னொரு சுரபியும்,சிந்தனை மையமாகிய கார்டெக்ஸ் மூளை போர்வையும்
செயல்படுகின்றன.இது பல்வேறு மூளை மின் அசை படங்களால் ஆதாரங்களுடன் நிருபிக்கப் பட்டுள்ளது,.

// Mind என்பது இடைவிடாத எண்ணங்களின் தொகுப்பு எனலாம்.

ஆழமான மனித மனோ விஞ்ஞானத்தை விளக்க ஆங்கில வார்த்தைகளுக்கு சாரம் போதாது.//

எல்லா மொழிகளுக்கும் ,காலத்திற்க்கேற்ப ,நிஜம் மட்டுமல்ல,கற்பனைகளுக்கும் எட்டக்கூடிய விஷயங்களை குறிக்கும் சொற்கள் உருவாகி/மருவி வருகின்றன. எப்போது இந்த தன்மை மறைகிறதோ?.. அப்போது அந்த மொழி அழியும்.

//அன்பின் ஒரு டெரிவேட்டிவான காதல் எனும் உணர்வுக்குக் காரணமாகிற அதே ஹார்மோன் பெற்றோர், பிள்ளைகள் மீது காட்டும் பாசத்திற்கும் காரணியாகிறதா??//

இல்லை.. இது சமுக பழக்கப் படுத்தல்களினால் வருவது.நல்ல முறையில் பெற்றோராலும்,நல்ல சமுகத்தாலும் பழக்கப் படுத்தப் பட்ட ஒருவன் தன் பெற்றோரை கடைசி வரை பாசமாக மதிப்பதையும். சுயநலம் நிறைந்த சமுகத்தால் பழக்கப் படுத்தப் பட்டவன் தன் பெற்றோரை தன் சுய நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஆதரவற்றவர்களாக்குவதும் வெகுவாகக் காணக் கிடைப்பதே.

// காதல் கெமிஸ்ட்ரி ஹார்மோன் சுரப்பு என்பது மனிதன் விலங்கினத்தில் இருந்து எவால்வ் ஆனதால் விலங்கின சீசனல் மேட்டிங் கெமிஸ்ட்ரி சுரப்பு(உதாரணம்: கார்த்திகை மாத நாய்)
என்பது வெகுவாக மேம்பட்டு மனிதரிடையே நெறிப்பட்டு வெளிப்படுகிறது.//
இதுவும் சமுகப்பழக்கப்படுத்தலின் மூலம் விளைந்தது.இல்லை எனில் மனிதனும் விலங்கு தான்.
இன்னுமும் சில ஆப்பிரிக்க பழங்குடியினரின் கட்டுப்பாடுகளற்ற உறவுகளுக்கும்,முன்னேறியதாய் சொல்லப்படுகின்ற நாடுகளின் இரவு கிளப்களின் செயல்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.
இந்தியா போன்ற இடைத்தர நாடுகளின் சமுக பழக்கங்களால் இயல்பாகவே நமது குணங்கள் அமைக்கப் பட்டதால் //வெகுவாக மேம்பட்டு மனிதரிடையே நெறிப்பட்டு வெளிப்படுகிறது.//

மற்றபடி நமக்கும்,கட்டுப்பாடுகளற்ற சமுக பிரஜைக்கும்,கட்டுப்பாடுகளற்ற காட்டுப்பிரஜைக்கும் சுரக்கும் ஹார்மோன்கள் ஒரே வகைதான்.

// அறிவியல் படி மாசிவ் ஹார்ட் அட்டாக் ஒருவரது மரணத்திற்கு ஒரு காரணமாகிற நேரத்தில், மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியின் செயலிழப்பு மட்டுமே உடல் க்ளினிகலி டெட் என அறிவிக்க உச்சமான காரணியாக வரையறுத்திருக்கிறது.//

உண்மை ஏன் என்றால் அது திரும்ப வரமுடியாத நிலை. சிந்தனை தளமாகிய ஹைப்போதலாமஸ் செல்கள் இறந்துபடின்,மீண்டும் புதுப்பிப்பதில்லை என்பதால் தான்.
மற்றபடி இதயம் நின்று போனவர்கள் கூட ,அதனால் இரத்த ஓட்டம் நின்று ஆக்ஸிஜன் குறைபாடால் மூளை செல்கள் இறக்கும் முன்னர் ,திரும்ப இதயத்தை துடிக்க வைப்பதின் மூலம் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.

இதுவரை சொல்லப் பட்ட எல்லாவற்றையும் விஞ்ஞானம் ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறது,மூளையின் மின் செல்பாடுகளில் ஒவ்வொரு காரணியும் ஏற்படுத்தும் மாற்றங்கள் உட்பட.ஸ்டிமுலேஷன் எனப்படும் செயற்க்கை காரணிகளை வைத்து வேண்டுபோதெல்லாம் ஆராயவும் முடியும்.

ஆனால்

///மரணத்தை ஆன்ம விஞ்ஞானம் உடலின் ப்ராரப்தம் முடிந்து அதனால் தொடர்ந்து ஆன்மாவை பிரதிபலிக்க இயலாமல் போனதால் உதிர்கிறது என்றும் அழிவற்ற ஆன்மா மீண்டும் வேறுவடிவெடுக்க முடிவற்ற பிறப்பு இறப்பு தொடர்சங்கிலி பிரபஞ்சத்தில் தொடர்கிறது என்கிறது.///

இந்த கூற்று நிருப்பிக்கப் படவில்லை.,வாதங்களும் வார்த்தைகளும் மட்டும் விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை :)

நாம் பழக்கப் படுத்தப் பட்ட சமுகத்தின் கொள்கைகளுக்கேற்ப இவற்றை உறுதியாக (இதை நாம் அனுபவித்து உணர்ந்ததில்லை எனினும்) நம்ப விரும்புகிறோம். நம் நம்பிக்கைக்கு சாதகமான விளக்கங்களை தேடி, இயல்பாகவே எதையும் ஆராயும் குணம் உள்ள நம் மனதை சமாதானப் படுத்துகிறோம்.நம் எண்ணங்களை வலுப்படுத்துகிறோம். ஏன் என்றால் நாம் இதுவரை நிருபித்து அறிந்திறாத எதையும் சன்பெண்ஸாக விட மனித மனம் விரும்புவதில்லை:)

said...

//Blogger சாம் தாத்தா said...

அட்டட்டே...!
சூப்பருடா பேராண்டி.

உனக்கும் தலைல கொஞ்சம் ----- இருக்கு...
நீயும் அருமையா சிந்திக்கறேன்னு புரியுது.
(சும்மாச்சுக்கும் வாரினேன்.)
:-))]

இந்த மறு பிறவி பத்தி நானே ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்.
நீ மு்ன்னாடியே... முந்திக்கிட்டியா?

நீ சொல்லி இருக்கற விஷயம் எல்லாமே...
நான் மனசுல நினைச்சிருந்த மேட்டர்தான்.

நீ கொஞ்சம் இளமை ததும்பற படம்லாம் வேற போட்டுட்டியா.?

சொன்ன மேட்டரை விட,
போட்ட மேட்டர்ல கொஞ்சூண்டு...
கவனம் தாண்டுனதை தவிற்க முடியலை.

ஒத்துக்கறேன்.

அடுத்தப் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

என் பேரனா கொக்கா?

வாழ்த்துக்கள்.//

ஹா..ஹா.. நன்றிகள் சாம் தாத்தா.,.
உங்களுக்கும் நாளாக நாளாக இளமை தளும்புது :))))

//
மறுப்பு+பிறவி= மறுப்பிறவி././

அடடா.. சூப்பர்.. இதுக்குத்தான் விஷயம் தெரிஞ்சவங்க பக்கத்துல இருக்கனுங்கறது. நல்லா சமாளிச்சு உதவி செய்யறிங்க

நன்றி சாம் தாத்தா.:)

said...

// Kittu said...

Hey i liked this post but sila edangal konjam confusinga irukku. Anyway, differentaana subject, supera picturesoda solli irukeenga.//

நன்றிகள் நண்பரே:)

முடிந்தவரை மிக எளிமையாக கொடுக்கத்தான் முயல்கிறேன்.:)

said...

//Mythily said...

Pictures ellam romba padam podure mathiri erunthuchu... Post is simple and good...//

மிக்க நன்றி மைதிலி.

said...

//Mythily said...

I cant open all ur other blogs... Enn eppadi access deny panni vachurukeenge?//

அதில் பிரட்சனைக்குறிய வாத/விவாதங்களுக்குறிய பகுதிகளும் இடம்பெற்றிருப்பதால்,அறிந்த நண்பர்களுக்களுடனான விவாத களமாய் உபயோகப் படுத்துவதால் பொது களமாக மாற்ற இயலவில்லை. எனினும் முடிந்த வரை இயல்பான பகுதிகளை நேரம் கிடைக்கும் போது மீள் பதிவாக பொதுப்பதிவில் இட முயகிறேன்:)
நன்றிகள்.

said...

என்னப்பா ரொம்ப நாளா மறு பிறவிய காணோம்:((((

எழுதுங்க ரசிகன்...

said...

வாவ்! நல்லா எழுதி இருக்கீங்க.

said...

வணக்கம் ரசிகன்,

மறுபடியும் பிறப்பதற்கு முதல் ச்சின்ன முட்டையுடன் உயிரணு சேர்ந்து பல நாடி நரம்புகள் மற்றும் மூளை உருவாகி பத்தே மாதத்தில் தயாராகி சிலபல வருடங்களிலேயே தான் தோன்றிய விதம் குறித்து சிந்திக்கும் 'இதை' உருவாக்கிய க்ரியேட்டிவ் டைரக்டர் பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சுதுகளா..? சிங்கம் புலி புலிமுகச்சிலந்தி எல்லாம் தற்செயலாவா உருவாகியிருக்கும்.. யாரோ ஒக்காந்து யோசிச்சு செய்தாப்ல இருக்குங்க..

said...

பயங்கரமான ஆளுங்க நீங்க .. அறிவியல் ஏ இவ்வளவு அழகா சொல்ல முடியும் னு உங்க கிட்ட தான் தெரிஞ்ச்சுகிட்டேன்

said...

//தமிழன்... said...

என்னப்பா ரொம்ப நாளா மறு பிறவிய காணோம்:((((

எழுதுங்க ரசிகன்...//

கொஞ்சம் வேலை பளு. சீக்கிரமே செஞ்சுடலாம் நண்பரே:)
வருகைக்கு நன்றிகள்:)

said...

//சத்யா said...

வாவ்! நல்லா எழுதி இருக்கீங்க.//

மிக்க நன்றிகள் சத்யா:)

said...

//ஆ.கோகுலன் said...

வணக்கம் ரசிகன்,

மறுபடியும் பிறப்பதற்கு முதல் ச்சின்ன முட்டையுடன் உயிரணு சேர்ந்து பல நாடி நரம்புகள் மற்றும் மூளை உருவாகி பத்தே மாதத்தில் தயாராகி சிலபல வருடங்களிலேயே தான் தோன்றிய விதம் குறித்து சிந்திக்கும் 'இதை' உருவாக்கிய க்ரியேட்டிவ் டைரக்டர் பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சுதுகளா..? சிங்கம் புலி புலிமுகச்சிலந்தி எல்லாம் தற்செயலாவா உருவாகியிருக்கும்.. யாரோ ஒக்காந்து யோசிச்சு செய்தாப்ல இருக்குங்க..//

ஹா..ஹா..:)) பத்தே மாதத்தில் தயாராகும்விதம் அமைய பலகோடி வருடங்கள் ஆகின செல்களுக்கு.

//சிங்கம் புலி புலிமுகச்சிலந்தி எல்லாம் தற்செயலாவா உருவாகியிருக்கும்.. யாரோ ஒக்காந்து யோசிச்சு செய்தாப்ல இருக்குங்க..//

அங்கும் இங்கும் ஒவ்வொன்றுக்கும் கற்பனைகெட்டா தூரத்தில் சிதறிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டத்தையே ,பார்க்க மான்,பறவை,தேள்,குதிரை அமைப்பு போல இருக்குன்னு ஒப்பிடுவதுதான் நமது மூளை.மூளை, தான் பார்ப்பவற்றை ஏற்கனவே அறிந்த ஒன்றோடு ஒப்பிடுவது.இருட்டில் காணும் நிழலை உருவமாய் காணுவது.,கயிற்றை பாம்பாய் உணர்வது என.
அதுபோல காணும் உயிரின அமைப்புக்களை அறிந்து பழக்கப் பட்ட உயிரின வடிவதோடு ஒப்பிட்டு பார்ப்பது மனித இயல்பு.புதிதாய் அறிவதை எளிமைப் படுத்திக்கொள்ள உதவும் அடிப்படை பண்பு இது.நிலவைப்பற்றி அறியும் வரை,வெறும் நிலவின் நிழலை, பாட்டி அங்கு வடை சுடுவதாய் ஒப்பிட்டு பார்க்க முடியும்.


காற்றில் மேகம் வடிவம் மாறும்போது(பொங்கும் மேகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு ரொம்ப புடிக்கும்)வினாடிக்கு வினாடி இதைப்போல,நாம் வாழ்வில் காணும் ஆயிரம் வடிவங்களுடன் ஒப்பிட முடியும். இதையும் யாரோ ஒக்காந்து மேகத்துல வடிவம் உண்டாக்குறாங்கன்னு சொல்லுவிங்களா?:))

said...

// Thenmozhi said...

பயங்கரமான ஆளுங்க நீங்க .. //

ஹா..ஹா...இந்த சின்ன புள்ளைய ,பயங்கரமான ஆளுன்னு சொன்னது நீங்க மட்டும்தாங்க..:P


//அறிவியல் ஏ இவ்வளவு அழகா சொல்ல முடியும் னு உங்க கிட்ட தான் தெரிஞ்ச்சுகிட்டேன்//

பாராட்டுகளுக்கு நன்றிகள் தேன்மொழி:)

said...

தல இங்கயும் எழுதுங்க...

said...

Good blog! Keep up your good work..

said...
This comment has been removed by the author.
said...

Hi Rasikan

Thanks for dropping ur comments on my blog.

You blog is interesting! Keep up.

said...

//Blogger தமிழன்... said...

தல இங்கயும் எழுதுங்க..//

கொஞ்சம் வேலை பளு மாம்ஸ்..எழுதிருவோம்:)
வருகைக்கு நன்றிகள்.

said...

// Kumiththa said...

Good blog! Keep up your good work..//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிகள் Kumiththa.

said...

//Saranya said...

Hi Rasikan

Thanks for dropping ur comments on my blog.

You blog is interesting! Keep up.//

நன்றிகள் சரண்யா.உங்க பிளாக்கும் அருமையா வடிவமைக்கப் பட்டிருக்கு:)

Anonymous said...

good post.please continue.
awaiting for next part.