Friday, November 23, 2007

தமிழ் படங்களுல மெசேஜ் இல்லைன்னு யாருங்க சொன்னது?..(குறிப்பு: நீங்களூம் உங்க திறமைய காட்டலாம்)

தமிழ் படங்களுல மட்டுமே காண கிடைக்கும் அற்புதங்கள்.(தமிழ் படங்களுலிருந்து நா கத்துக்கிட்ட "லா ஆஃப்(பு) டமில் சினிமா")



1) வில்லன் கிட்ட ஒல்லிப்பிச்சான் ஹீரோ மொத மூணு அடிகளை வாங்கிக்கிட்டு பறந்து,பறந்து விழுந்து ,எழுந்து வாய தொடச்சிக்கிட்டு புன் சிரிச்சாக்கா..
முப்பது அடியாள்களையும் மொத்தமா துவசம் செய்யப்போறாருன்னு அர்த்தம்.
[நீங்க.. கதாநாயகன் மொதல்ல எத்துனி அடி வாங்கனாருன்னு எண்ணி பாக்கறதுக்கு வசதியா வில்லன் ஒவ்வொரு அடியா டைமிங் விட்டுத்தான் அடிப்பார்.]

2) ஹீரோவ அடிக்க வர்ர குருப்பு ..அடியாள்கள் எல்லாரும் கும்மி அடிக்கற கணக்கா ரவுண்டு கட்டி மூணு தடவ அவர சுத்தி சுத்தி வரனும். இதுல
நாயகன் சூப்பர் ஸ்டாரா இருந்துட்டா.. கதாநாயகன் வட்டத்து நடுவிலேயே அவருக்கு தெரிஞ்ச ஆடுபுலி ஆட்ட ஸ்டெயிலெல்லாம் காட்டறவரை பாத்துக்கின்னே சுத்தனும்.
[ஹீரோ வுடு கட்டும் போது வட்டத்து நடுவிலேருந்து நகர்ந்துட்டாக்கா.., அவரோட புதிய சென்டர் பொசிசனுக்கு கும்மிய மாத்திப்புடனும்.].

3) ஹீரோ சண்டைக்கி முன்னாடி வசனம் பேசனுமின்னு ஆசைப்பட்டுட்டாக்கா.. அது முடியற வரை ரொம்ப பொறுமையா காத்துக்கிட்டிருக்கனும்.


4) ஹீரோ ஒரு வில்லன அடிக்கும்போது மத்த அடியாள்கள் பொறுமையா வெயிட் பண்ணி அவர சுத்தி பயமுறுத்தற(பயப்படற)பாணில (மாடிமேல மாடி வைச்சி) வுடு கட்டிக்கிட்டே ஒவ்வொருத்தரா அவிங்க மொற வரும்மோது வந்து அடி வாங்கனும்.
[அதுவும் ஒரே அடிதான் உங்க மூவ்.அத தடுத்து கதாநாயகன் திருப்பி அடிக்கும் போது முந்திரிக்கொட்ட தனமா தடுக்கல்லாம் கூடாது..]

5) ஹீரோ வயத்துல குத்தினாக்கா.. வலியில வயத்த முன்னாடி வளைக்கனும்.
[நெஜத்துல முன்னாடி மடங்கி , அடுத்த குத்துக்கு மூஞ்சியல்ல காட்டுவாய்ங்கல்ல..].



6) ஹீரோகிட்ட ஒரே சமயத்துல காலால ஒதை வாங்க வசதியா ரெண்டு பேரு ..சரியா ரெண்டு சைடுல அவரு கைய பிடிச்சி தூக்கி விடுவாய்ங்க..
சில பேரு வேற ரெண்டு சகாக்களை ஹீரோ அடிக்க தூக்கி விடுவாய்ங்க..




7) அடியாளுங்க அடி வாங்கி விழும்போது அட்லீஸ்ட் ஒரு டைவாவது அடிச்சிட்டு விழந்தாத்தேன் ஒரு மதிப்பு.அதிலும் கதாநாயகன் எப்பவும் காய்கறி வண்டி,கவுத்து வைச்ச பானைகள், பிளாஸ்டிக் குடம் ,பூத் கண்ணாடி,வீட்டு கூரைன்னு பாத்துத்தேன் தூக்கிப்போடுவார்.அதை யெல்லாம் ஒடைச்சிட்டு விழுர அளவு அடியாள் குண்டாயிருக்கனும்.
குறிப்பு: டைவ் அடிக்க கதாநாயகன் கையோ காலோ உங்க மேல படனுங்கர அவசியமில்ல...

8) பனி பிரதேசத்துல பாட்டு பாடும்போது குளிருல கதாநாயகன் உடம்பு முழுக்க டிரஸ் போட்டுருக்கும் போது கதாநாயகிகளுக்கு ரொம்ப புழுக்கமா இருக்கும் போல ,அதனால அவிங்க சின்ன புள்ளையா இருந்த போது போட்ட டிரஸை போட்டிருப்பாய்ங்க..

9) நம்ம ஹீரோ ரெண்டு கையையும் தட்டிட்டு ஒரு தாவு தாவிட்டாருன்னாக்கா... புவியீர்ப்பு விசையெல்லாம் ஆஃப் ஆயிடும்..அவரு சாவகாசமா பத்து பதினைஞ்சி தடவ ஒதச்சிட்டு தானா கீழ வந்துருவாரு.


10) சண்டை முடிஞ்சிருச்சின்னு நியுஸ் வந்துமே..போலிஸ் ஜீப் வரும்.தப்பி ஓடும் கடைசி அடியாள் ஜீப் மேலயே போய் விழுவார்.
(சில அவசர குடுக்கை இன்ஸ்பெக்டர்கள் துப்பாக்கியால வானத்துல மூனுமொறை சுட்டுக்கினே வருவாய்ங்க.. பத்துரூபாய்க்கு ஒரு டஜன்னு பர்மா பஜாருல வாங்கன தோட்டாவாயிருக்குமோ?)

11) வில்லனை பயம்புறுத்த கதாநாயகன் வீசும் கத்தி பூமாராங் விதிப்படிலாம் இருக்கனுமின்னு அவசியமில்லை..எந்த வடிவத்துல இருந்தாலும் அது வில்லன் முகத்துக்கு நேரா சொம்மா சங்கு, சக்கரம் மாதிரி நாளு சுத்து சுத்திட்டு சீக்கிறமா கதாநாயகன் கையில/காலுல வந்து விழுந்துடும் (ஏன்னாக்கா கத்திய எப்பிடி வீசனுமின்னு வில்லனுக்கு வசனம் மூலம் விளக்கி சொல்ல ஹிரோ வெயிட் பண்ணராரில்ல?..)


12) கதாநாயகிய வில்லன் வேனுல கடத்தும்போது.. அவன தொறத்திப் பிடிக்க,ஹீரோ யாரு கிட்டயும் லிப்ட் கேக்க வேண்டாம். சிட்டியா இருந்தா கடைக்கு போவ ,மலைபிரதேசமாயிருந்த மரத்தடி தேடி போவ, புது மாடல் பைக்கோட அப்பத்தான் ஒருத்தர் வந்து சாவியோட ஹீரோ கண்ணுல படர மாதிரி விட்டுட்டு போவார்..புண்ணியவான்.

13) அப்படி தொறத்தும் போது வழில குறுக்க வர்ர கண்டெய்னர் லாரி.. ஹீரோ பைக்கோட அதை தாவியோ.,.இல்ல சக்கரத்துக்கடில ஒருக்களிச்சிக்கின்னு பைக்கோட சருக்கிக்கிட்டோ தாண்டற வரையில ஃபிரிஸ் ஆகி நிக்கும்.

14) பாட்டுல சீனுல எம்புட்டு மழை பெஞ்சாலும் ஹீரோயின் மேக்கப் கலையாது..

15) ஒரே பாட்டுல நூறு எடத்துக்கு சொம்ம மாயமா போயி,ஆயிரம் டிரஸ் போட்டு கலக்கலாம்.

16) கதாநாயகன் தவர அவரு ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஜோக்கரு.. எப்பவுமே கதாநாயகன் தான் டீம் லீடரு.. ஹீரோயினு டீமுல அவிங்கத்தேன் தலைவி.

17) மூனு படத்துக்கு முன்னாடி ஹீரோவுக்கு ஜோடியா நடிச்ச நடிகை,இப்ப ஹீரோவுக்கு அக்காவா நடிக்கலாம்..

18) காதல் கதையில ..ஹீரோவும் ஹீரோயினும் ஒருத்தர ஒருத்தர் தேடிக்கிட்டிருக்கும் போது,கிளைமாக்ஸ் வரை, அடிக்கடி அவிங்க முகத்த வேற சைடு திருப்பிக்கிட்டு [பாத்துக்காம] சகஜமா கிராஸ் பண்ணி போவாங்க.(அப்ப ஸ்லோமோசன்ல காட்டுவாய்ங்க..).

19) துப்பாக்கி தோட்டா தீந்துருச்சின்னாக்கா.. அத அப்பிடியே (ஒன்ஸ் யுஸ் மாதிரி) சைடுல தூக்கி போட்டுட்டாக்கா... தரையில வேற துப்பாக்கி கெடைக்கும்.. அத டைவ் அடிச்சி எடுத்து டைவ்லயே சுடலாம்.. (எத்தன குண்டு சுட்டாங்கன்னெல்லாம் எண்ணப்படாது...).

20) பத்து பேரு ஒரு ஆள சரமாரியா சுடறதவிட, ஹீரோ ஒத்த ஆள் அந்த பத்துப்பேர சுடும்போது தான் குண்டு சரியா குறி தவறாம தாக்கும்.


21) கதாநாயகன் சம்பந்தப்பட்டவிங்க.. ரொம்ப சென்டிமென்டா பேசி..அவிங்க மூஞ்சிய குளோசப்புல காட்டிட்டாக்கா..அடுத்த சீனுல ஆள் குளோசுன்னு அர்த்தம்.

22) ஊருல யாருக்குமே தெரியாத வில்லனோட ரகசிய இடம்,கிளைமாக்ஸ்ல கதாநாயகனுக்கு மட்டுந்தேன் தெரியும்.செல சமயம் அத ஹீரோவுக்கு பயந்து சொல்லறதுக்காகவே ஒரு ஆளை வில்லன் சம்பளம் குடுத்து அவனோட வீட்டுல ஹீரோ வந்து மெரட்டி கேக்கர வர வைச்சிருப்பாரு.

23) ஹீரோயின் மழை வருபோது ரோட்டுல எறங்கி ஆடினாக்கா.. மார்டன் டிரஸ் போட்ட எல்லாரும் குடைய தூக்கிப்போட்டுட்டு அவிங்க பின்னாடி வரிசையா நின்னு ஆடுவாய்ங்க..

24) அதிலும் அவிங்க ஆடப்போறா ஸ்டெப் என்னன்னு முழுசா புரிஞ்சிக்கிட்டு அத கோரஸா ஆடுவாய்ங்க..இதுல குத்தாட்டமாயிருந்துட்டாக்கா.. தாவணி கட்டிக்கிட்டு பேயாட்டம் ஆடர அந்த ரெண்டு பொண்ணுங்க நிச்சயம் அங்க காய்கறி வாங்க வந்திருப்பாய்ங்க...

25) எம்புட்டு ஸ்டாங்கான தேக்கு மரக்கதவாயிருந்தாலும்,வீடு எரியும் போது ஹீரோ ஒரே ஒதையில தொறந்துடுவார்.



26) ஹீரோ ஒத்த துப்பாக்கி குண்டால காரை சுட்டாருன்னாக்கா.. அந்த கார் அப்படியே வெடிச்சி ஒரு முப்பது ,நாப்பது அடி உயரத்துக்கு போயி ஸ்லோவா விழும்.


27) எல்லா டைம் பாமும் ,எப்ப வெடிக்கப் போவுதுன்னு நொடி நொடியா காட்டுற பெரிய பெரிய டிஜிட்டல் வாட்சோட இருக்கும்.அதுல டிக் டிக் இன்னு பெருசா சத்தம் வேற வரும் (டிஜிட்டல் வாட்ச்சில சப்தமான்னு கேட்டாக்கா நீங்க தமிழ் படம் பாக்க ரிஜக்டட்..)
ஹீரோ அந்த சத்தத்த நல்லா கேட்டு வெடிகுண்ட கண்டு பிடிக்கும் போது பத்து நொடித்தேன் மிதியிருக்கும்.அதுல கலர் கலரா செயலிழக்க வைக்கிற ஒயருங்க வெளியிலேயே இருக்கும்.அத ஹீரோ ரொம்ப சீரியஸ்ஸா இங்கி,பெங்கி,பாங்கி போட்டு சரியான ஒயரை கண்டுபிடிச்சி வெட்டி எல்லாரையும் காப்பாத்திட்டு ,நிம்மதியா முகத்த தொடச்சிக்குவார் ..(அசடு வழிய பாத்துக்கிட்டிருக்கிற உங்க முகத்த தொடச்சிக்க சிம்பாலிக்கா சொல்லராருங்க்கோ..)


28) ஹீரோ திடீருன்னு ரேடியோவையோ, டீவியையோ திரும்பிப்பாத்தா.. அதுல அவருக்கு தேவையான /அவிரு வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயந்தேன் அதுல வரும்.

29) வில்லன் கிட்ட சவால் விட்டுட்டாக்கா...ஹீரோ ஒத்த பாட்டுல கோடிஸ்வரராயிடலாமுங்க்கோ...

30) டமில் தெரியாத மும்பை பொண்ணுக்கு ,இடுப்பு தெரியர லெவல்ல துணிய சுத்தி "தமிழ்மணம் கமழும் பெண்" ன்னு சொல்லி தமிழர்கள் காதுல ஒரு மொழம் பூ இலவசமா சுத்தலாம்.

31) ரோட்டுல குடுப்பபாட்டு பாடனாக்கா.. பல வருஷம் முன்னாடி காணாம போனவிங்கள்லாம் ஆயிரம் கிலோ தாண்டி டெலிபதில கேட்டுட்டு ஒடனே வந்துருவாய்ங்க..(அவிங்கள கன்பார்ம் பண்ண குடும்ப செயின் ,பாதிகாசுல செஞ்ச டாலர்,மோதரம் ஏதாவது போட்டு சின்ன வயசுல தொலைக்கனும்.).

32) ரொம்ப வேண்டப்பட்டவிங்களுக்கு ஒடம்பு சரியில்லாம போனாலோ,ஆப்பரேஷன் தியேட்டல அவிங்களுக்கு ஆபிரேஷன் நடக்கும் போதோ..ஏதாவது ஒரு அம்மன் கோயிலுக்கோ..அறுவாளோட இருக்குற அய்யனாரு கோயிலுக்கோ போயி தலைய விரிச்சிப்போட்டுக்கின்னு ஒரு குத்தாட்டம் போட்டாக்கா..அப்ப காஞ்சிப்போன இலை ,தழை எல்லாம் பறக்கற மாதிரி புயல்/மழை வந்தாலோ அவிங்களுக்கு ஒடம்பு சரியாயிடும்.



33) ஹீரோ எந்த கட்டடத்துக்கு கார்ல போனாலும் அந்த கட்டடத்துக்கு வாசலிலேயே கார் பார்க்கிங் இருக்கும்.(அவிரு லைசென்ஸ் வாங்க்கிட்டாரான்னு சென்சோட கொஸ்டீன் கேட்டாக்கா,மூணு வருஷத்துக்கு தமிழ் படம் பாக்கக்கூடாதுன்னு தள்ளி வைக்கப்படுவீர்கள்.)

34) மலை உச்சியில தொங்கிட்டிருக்கிற (யாரு அங்க போயி காரை தொங்கவிட்டதுன்னெல்லாம் கேக்கப்டாது).காருலேருந்து ஹீரோயின ஹீரோ காப்பாத்துர வரை அந்த கார் அங்கயே ஒட்டிக்கிட்டிருக்கும். அதுபோலத்தேன் பத்தி எறியற வீடு கூட ஹீரோ குழந்தைய ஹீரோயினுக்காக காப்பாத்திக்கிட்டு வந்தப்பின்னாடித்தேன் கீழ விழும்.

35) நல்லா வெயில் காலத்துல பாட்டு பாடுபோது,சண்டை போடும் போது,ஹீரோ ரொமான்ஸ் செய்யும் போது தானா மழை பேயும்.

36) ஹீரோயின்கள் எல்லாம் ரொம்பவே பயந்தாங்க்கோலிகள்ன்னு தோனுது ..ஏன்னாக்கா இடி இடிச்சாக்கா பயந்துபோயி ஒடனே ஹீரோவ கட்டி பிடிச்சிக்கிறாய்ங்கல்ல....

37) காதலுக்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை.. ஹீரோயினோட ஒரு சண்டை போட்டாலோ(சொம்மா வாயாலதான்..)., ஹீரோயின் பாக்கர மாதிரி ரோட்டுல ஏமாந்த யாராவது ஒருத்தர ஒரு அறை விட்டு அரைப்பக்கத்துக்கு அறிவுரை சொன்னாலோ, (பின்னாடி இருந்து ஹீரோயின் பாக்கரத தெரியாத மாதிரி) நண்பர்கள் கிட்ட அவிங்கள பாராட்டி சொன்னாலோ..,வழுக்கி விழும் ஹீரோயின டைமிங்குல போயி தாங்கிக்கிட்டாலோ. ஆரம்பத்துல கெட்டவன் மாதிரி காட்டி பின்னாடி நல்லவன்னு புரிய வைச்சாக்கூட போதும் ஒடனே லலலவ்வு ஸ்டாட் ஆயிடும்.. ஒடனே ஊரவிட்டு போயி எங்காவது டூயட் பாடரது அவசியம்.(இதெல்லாம் படத்துல மட்டுந்தேன்.நெசத்துல டிரை செஞ்சி நண்பர்கள் மாட்டிக்கிட்டாக்கா.. நா பொருப்பில்லைங்க்கோ...)

38) ஹீரோ எதாவது ஒரு கட்சி ஆளாயிருந்துட்டாக்கா... உள்குத்து / வெளிக்குத்து பஞ்ச் டையலாக் இல்லேன்னாக்கா அது தமிழ் படத்துல சேந்தது இல்லை..

இப்ப சொல்லுங்க... தமிழ் படங்களுல எம்புட்டு மெசேஜ் இருக்குல்ல...

ஆங்கிலப் படங்களை கிண்டலடித்து ,பல நாடுகளை சுற்றி வந்த ஒரு கருத்துத்தொடர் பாத்துப்புட்டேன்.. ( கருத்துத்தொடர்- படிக்கிற யாரும் அவிங்களுக்கு தோனறத சேத்துக்கலாம்).
அதுபோல நம்ம தமிழ் படங்களுக்கு எத்த மாதிரி சொல்லியிருக்கேன்.. என்னிய விட நீங்க நெறய படம் பாத்து நொந்து போயிருப்பீங்க..
நீங்க படம் பாத்து கத்துக்கிட்ட "law of tamil cinema" மேசேஜ் ஜ சொல்லுங்க..பார்ப்போம்..ஹிஹி...

(நீங்க சொல்லற கலக்கல் மெசேஜ்கள், உங்க பேரோட பதிவுல சேக்கப்படும் ).



ஆப்டர்  பப்லீஸ்  குறிப்பு:

ஆஹா.. வெளியிட்டுட்டு காலையில வந்து பின்னூட்டத்தப்பாத்தாக்கா.. சீனா ஜயா அம்மா சென்டிமென்ட் பத்தி ஞாபகப் படுத்தியிருக்காரு.. அட..முக்கியமான , இத மறந்துட்டோமே.. நாம தமிழ் சினிமா பாக்க குவாலிபைடு இல்லையான்னு தோனுது.. அதப்பத்தி சீனா சாரே எதாவது சொல்லியிருந்தால நாமலும் ரசிக்கலாமில்ல...


அடுத்து ஒரு ஆச்சர்யம் .எனக்கு ரொம்ப மாசத்துக்கு முன்னாடியே தமிழ் படத்துக்குன்னு நண்பர் நாஞ்சில் மைந்தன் 11 பாயிண்ட் எழுதியிருக்காரு (.தலைப்பு : இது நம் தமிழ் சினிமா ).பின்னூட்டத்துல பாத்துட்டு ஆச்சர்யப்பட்டுட்டு போனேன். அதுல மூணு பாயின்ட் எனக்கு தோனனத முன்னாடியே யோசிச்சு எழுதியிருக்காரு..எல்லாருமே தமிழ் படம் பாக்கரவியிங்கதானே..ஹிஹி...
அவரு எழுதினதுல மத்த பாயிண்ட் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு..

சாம்பிள்ளுக்கு ஒன்னு பாருங்க..

3. கிளைமாக்ஸ்சில் ஹுரோ வில்லனை கொல்லபோகும் போது வில்லனின் மனைவி குழந்தையுடன் வந்து தாலியை காட்டியவுடன் ஹுரோ வில்லனை உயிருடன் விட்டுவிடுவார்.

அவரு ஏற்க்கனவே தனி பதிவா போட்டுப்புட்டதால மத்த மெசஜிகளை இங்க போடரத விட (பின்னே அவுரு கேஸ் போட்டுட மாட்டாரா?..ஹிஹி..) நாம மீதிய அங்கயே போய் படிச்சிக்கலாமே..



பின்னூட்ட கலக்கல்கள்


39) சீனா ஜயா: அம்மா சென்டிமென்ட:கடைசிக் காட்சியிலே அம்மாவைக் கட்டிப்போட்டு கதா நாயகனை வரவழைத்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள வில்லன் படும் பாடு - அய்யோ - தாங்காது.


(இது தமிழ் சினிமாவின் பாலபாடமாச்சே...சூப்பருங்க சார்..)

40) கவிதா : 
பொதுவா ஹீரோயினோட அப்பா தான் வில்லன்.எப்பிடி?



41)
ஆர்.கே :  
Heroin always rich and hero local poor.after love heroin will come to heros poor home and doing all works to shows heros mother.



42) விஜய் சார்: அப்படி வரும்போது ஹீரோயின் அடக்கமான பொண்ணுதான் என்று காண்பிப்பதற்காக ,புடவை கட்டிக்கொண்டு வரச் சொல்லுவார்.ஹிஹி:)

42)
பிரியமுடன் பிரித்தி:
மாறுவேடம் போட தாடி ஒட்டி,கருப்புக் கண்ணாடி அணிந்தால் போதும்.




43) துளசி அக்கா :ஆன்னா ஊன்னா ஹீரோ பெயரைச்சொல்லிப் பயமுறுத்தும் அவரோட தோழர்க்கூட்டம்.

ஒரு விளையாட்டுப்போட்டி(??)ன்னாகூட ஹீரோ வரும்வரை தோழர்கள
் தவிப்பாத் தவிக்கணும (ரசிகன்: இது ரொம்பவே சூப்பரு...)
& தாலி செண்டிமெண்ட்

44)  ஹரிஹரன சார்:

தமிழ் சினிமா தந்த இன்னொரு டெக்னாலஜி மேட்டர் பயோ ஐடண்டிபிகேஷன் எக்ஸ்பர்ட்டீஸ.
ஒரு பிரதரை சாட்டையால் அடித்தால் எங்கோ இருக்கும் இன்னொரு இரட்டை சகோதரன் முதுகில் வரி வரியா தடம்னு அறிவியலை தடம் புரட்டின டெக்னாலஜி ஜித்தன்ஸ் தமிழ்சினிமாவில் மட்டுமே உண்டு..

ஹீரோவுக்கு செக் வைக்கும் படு விவரமான வில்லன்கள் ரயில்வே டிராக் க்ளைமாக்ஸ் சேஸிங்கில் டிராக்கில் கால் மாட்டிக்கொண்டு ஙேன்னு பல்பு பார்ட்டி ஆகிவிடுவார்கள்... மாட்டிக்கொண்ட ஷூவை கழட்டி விட்டு ஓடாமல் ஏதோ கர்ணனின் கவச குண்டல ரேஞ்சுக்கு கழட்டமுடியாமல் ஹீரோயின் முன்னால் இம்சைப்படுவார்கள்..

(
ரசிகன்: சூப்பர்... அப்படி போடுங்க அறுவாளை..காருல பிரேக் பிடிக்கலின்னாக்கூட இஞ்சின சாவியால ஆஃப் பண்ணாம ,அறுவது கிலோமீட்டர் ஓட்டுவாய்ங்களே..)

45) டிரிம்ஸ் மாம்ஸ் :

ஹீரோ அறிமுகம்:மொத மொதல்ல ஹீரோ அறிமுக சீனுல,அவரு ஓடிக்கிட்டோ.. இல்லாட்டி பறந்துக்கிட்டோத்தேன் இருப்பாரு
..


[ரசிகன்: ஹிஹி... செண்டிமெண்ட் பாயிண்ட புடிச்சிட்டிங்க மாமே.. அருமை.. இது பரவாயில்லை.. செல படங்களுல காசு குடுத்து பாக்க வந்த ரசிகர்களோட மூஞ்சியில ஒதைக்கிற மாதிரி காலை காட்டிக்கிட்டேதேன் ஹீரோ அறிமுகம் ஆவராருங்க்கோ..]

46)dubukudisciple :

                                  1)  ஹீரோ விளையாட்டுல எப்பிடியும் கடைசில ஜெயிச்சுடுவாரு....அப்பிடியே தோத்துப்புட்டாலும் அது அவிரு வேணுமின்னே ஹீரோயினுக்காக பெருந்தன்மையா விட்டுக்கொடுததாயிருக்கும்..

                                  2)  ஹீரோ,ஹீரோயினைதேன் லவ் பண்ணிவாரு..


[ ரசிகன் : நல்லவேளை ஹீரோ ஹீரோவாத்தேன் நடிப்பாருன்னு சொல்லாம போனிங்களே..ஹிஹி..]
நல்லா நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க,.. ரொம்பவே ரசிச்சேனுங்க...டிடி...:D
[ஆமா ..சூழாவளி பயணத்துக்கு நடுவில படம் பாக்க ,ஒங்களுக்கு எப்பிடி டைம் கெடைக்குது?.]

47)   manipayal :

                          ஹீரோவும் ஹீரோயினும் வில்லனிடம் மாட்டிகொள்ளும் போது அவர்களை காப்பாற்ற ஒரு நாயோ ஆடோ யானையோ வரும். atleast போலீஸுக்கு ஒரு தகவலாவது குடுக்கும்.



[ ரசிகன் : மணி சார் .. நெசந்தானுங்க...சூப்பர் பாயிண்டுக்கு நன்றிங்க..

48) நம்ம பொடியனின் குறும்புகள்: (+18+3+1 rated): 

                          ஹீரோயின் கிட்ட வில்லன் டைம் என்னனு கேட்டாக் கூட அவனுக்கு செருப்படி விழும். அது ஸ்லோ மோஷனில் 3 முறை காட்டப் படும்.( படம் முடியரதுக்குள்ள ஒரு ரேப் சீன் கன்பர்ம். :P )
ஹீரோயினே தப்பா நடக்க சம்பதிச்சாலும்..ஹீரோ அறிவுறை சொல்லி திருத்துவார்..



49) பாச மலர்.

ஹீரோ விஜய்யோ முரளியோ...ஆனா அவர் ஃப்ரண்ட் மட்டும் கண்டிப்பா சார்லிதான்...ஹீரோ வயசுக்கும் ஃப்ரண்ட் வயசுக்கும் அப்படி ஒரு பொருத்தம்.



ஆமாங்க.. இப்ப நம்ம விவேக்கும் அந்த இடத்த பிடிச்சிக்கிட்டாரு..

50) கருப்பன்/Karuppan

எழும்பும் தோலுமாக இருக்கும் வில்லனின் அடியாளால் எளிதாக கடத்தப்படும் ஹீரோயின், ஹீரோயின் அம்மா, ஹீரோவின் தங்கை, மற்றும் இதர நன்பர்கள், கிளைமாக்சில் வில்லனின் ஆட்களை ஹீரோவுடன் சேர்ந்து பின்னி பெடலெடுப்பார்கள்.
பி.கு: கிளைமேக்ஸ் யுத்தத்தில் இந்த இதர மக்கள் அவ்வப்போது வில்லனின் இரண்டு அல்லது மூண்று ஆட்களிடம் மாட்டிக் கொள்வர் அப்போது பிசியாக பைட் செய்து கொண்டிருக்கும் ஹீரோ பறந்து வந்து நன்பர் மாட்டிக் கொண்ட வில்லன் ஆட்களில் ஒருவரை உதைப்பார் மீதியை நன்பர் கவனித்துக் கொள்வார்...!

 
51 ) நானானியின் நச்சுன்னு ஒரு பாயிண்ட்.. .

சினிமா போலீசும் சரி சீரியல் போலீசும் சரி...கதை முடியனுமின்னா சுறுசுறுப்பா வில்லனைப் பிடிப்பார்கள். கதையை இழுக்கனுமின்னா வெண்டைக்காய் மாதிரி ஒரே வழவழ கொழகொழதான். சர்தானே நய்னா?



உண்மைதானுங்க.. உண்மையைதவிர வேறெதுவுமில்லை..

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கல்ல?...

60 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

அம்மா செண்டிமெண்ட் ??????

said...

இதுக்கு முன்னாடி நானும் கொஞ்சம் சொல்லிகீறேன் சாமி...கொஞ்சம் படிச்சுட்டு சொல்லுங்க

http://ushnavayu.blogspot.com/2007/06/blog-post_28.html

Anonymous said...

பொதுவா ஹீரோயினோட அப்பா தான் வில்லன்.எப்பிடி?

Anonymous said...

Heroin always rich and hero local poor.after love heroin will come to heros poor home and doing all works to shows heros mother.

said...

// rk said...
Heroin always rich and hero local poor.after love heroin will come to heros poor home and doing all works to shows heros mother.
//
அப்படி வரும்போது ஹீரோயின் அடக்கமான பொண்ணுதான் என்று காண்பிப்பதற்காக ,புடவை கட்டிக்கொண்டு வரச் சொல்லுவார்.ஹிஹி:)

said...

மாறுவேடம் போட தாடி ஒட்டி,கருப்புக் கண்ணாடி அணிந்தால் போதும். சரிதானா?

said...

இதெல்லாம் தமிழ் சினிமா மெஸேஜ் இல்லைப்பா.....
ஆக்ஷன்.
ஹீரோயின் மட்டுமே 'கனவு காணுங்கள்'ன்னு
நம்ம அப்துல்கலாம் ஐயா சொன்னதைக் கேப்பாங்க

தாலி செண்டிமெண்டை விட முடியாது.

ஆன்னா ஊன்னா ஹீரோ பெயரைச்சொல்லிப் பயமுறுத்தும் அவரோட தோழர்க்கூட்டம்.

உதாரணத்துக்கு ஹீரோ பேரு சனியன்னு இருந்தா.....


சனியன்கிட்டே சொன்னாத்தெரியும் சேதி

சனியன் எங்கே, சனியன் எங்கேப்பா???? இன்னும் சனியனைக் காணோம்

சனியன் மட்டும் இப்ப இங்கெ இருந்துருக்கணும் அப்பத்தெரிஞ்சிருக்கும்(???)

எங்களையெல்லாம் யாருன்னு நினைச்சுக்கிட்டே...சனியனோட ஆளுங்க நாங்க.

ஒரு விளையாட்டுப்போட்டி(??)ன்னாகூட சனியன் வரும்வரை தோழர்கள் தவிப்பாத் தவிக்கணும்

said...

kalakkal

said...

ஓஓ - ரசிகன் - அம்மா செண்டிமெண்ட்னா என்னா - கேக்குராரு.

கடைசிக் காட்சியிலே அம்மாவைக் கட்டிப்போட்டு கதா நாயகனை வரவழைத்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள வில்லன் படும் பாடு - அய்யோ - தாங்காது

said...

ஆக ஒரு கூட்டமாவே இறங்கியிருக்கோம் தமிழ்படங்களை கலாய்ப்பதற்காக.

Anonymous said...

அம்மா செந்டிமெண்ட்ன்னா என்னான்னு கேக்கறாறா? அழுகிய தமிழ்மகன்ல கீதா தான் விஜய்க்கு அம்மா. அது சரி. ரசிகன் இன்னும் அழுகிய தமிழ் மகன் பாக்கலியா

Anonymous said...

[ஹீரோ வுடு கட்டும் போது வட்டத்து நடுவிலேருந்து நகர்ந்துட்டாக்கா.., அவரோட புதிய சென்டர் பொசிசனுக்கு கும்மிய மாத்திப்புடனும்.].

அதேதான். இப்ப நீங்க எந்த சென்டரில் நிக்கறீங்கன்னு பாத்துக்கிட்டிருக்கோம்.மாட்டினா கும்மிதான்.:D

said...

அவங்க இஷ்டத்துகு படத்தை எடுத்துப்புட்டு, மக்கள் இதைத்தான் விரும்பறாங்க அப்ப்டின்னு சொல்றாங்க லே? படம் எடுக்கறதுக்கு முந்தி மக்கள் கிட்ட சர்வேயா செஞ்சாங்க?

said...

ரசிகன்,

முன்னேறிய உலக நாடுகளின் குடிமக்கள் எல்லாம் அடையாள அட்டையை வைத்து இருந்தும் கூட்டத்தில் காணாமல் போனால் கன்ப்ப்யூஸ் ஆகி அல்லல்பட்டுக் கொண்டிருக்க...

பெரும் அதிர்ஷ்டம் செய்த தமிழ்மக்களாகிய நாம் தமிழ்ப்படங்களில் உபயத்தால்
20 வருஷம் முன்னால் சந்தை/திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போய் பிரிந்து போய்விட்ட அண்ணன் தம்பிகள் எல்லாம் நாளை நமதே ..இந்த நாளும் நமதே என்று அடையாளம் கண்டு கொள்கிறார்கள்..

காணாமல் போன ஜோடிகள் ஜானகி தேவி...ராமனைத் தேடி என்று பாடி வாய்ஸ் + லிரிக்ஸ் ரெகக்னிஷன் செய்யப்பட்டு ஒன்று சேர்கிறார்கள்!


காணாமல் போன சகோதரர்களைக் கண்டுபிடிக்கும் வாய்ஸ் ஐடெண்டிபிகேஷன் டெக்னிக்கை இந்த நவீன உலகிற்கு பிரசண்ட் செய்த குரு நாளை நமதே எம்ஜிஆர்!

இப்பக்கூட நாளை நமதே..ன்னு பாட்டு கேட்டா பின்னாடி இருந்து எம்ஜிஆர் அவர் சகோதரனைத் தேடுற மாதிரி இருக்குங்க:-)))

said...

மேற்கத்திய உலகம் பிசிஆர் மிஷின் -ஜீனோமிக்ஸ் என்று டிஎன்.ஏ கைநாட்டை (பிங்கர் பிரிண்ட்) டுவின் பிரதர்ஸ் ஐடெண்டிபிகேஷனுக்கு பயன்படுத்த...

தமிழ் சினிமா தந்த இன்னொரு டெக்னாலஜி மேட்டர் பயோ ஐடண்டிபிகேஷன் எக்ஸ்பர்ட்டீஸ்

டுவின் பிரதர் கண்டுபிடிப்புக்கு எம்ஜிஆரின் நீரும் நெருப்பும் டெக்னிக்... ஒரு பிரதரை சாட்டையால் அடித்தால் எங்கோ இருக்கும் இன்னொரு இரட்டை சகோதரன் முதுகில் வரி வரியா தடம்னு அறிவியலை தடம் புரட்டின டெக்னாலஜி ஜித்தன்ஸ் தமிழ்சினிமாவில் மட்டுமே உண்டு..

said...

//
Hariharan # 03985177737685368452 said...
காணாமல் போன சகோதரர்களைக் கண்டுபிடிக்கும் வாய்ஸ் ஐடெண்டிபிகேஷன் டெக்னிக்கை இந்த நவீன உலகிற்கு பிரசண்ட் செய்த குரு நாளை நமதே எம்ஜிஆர்!

இப்பக்கூட நாளை நமதே..ன்னு பாட்டு கேட்டா பின்னாடி இருந்து எம்ஜிஆர் அவர் சகோதரனைத் தேடுற மாதிரி இருக்குங்க:-)))
//
:-)))))))

//
டுவின் பிரதர் கண்டுபிடிப்புக்கு எம்ஜிஆரின் நீரும் நெருப்பும் டெக்னிக்... ஒரு பிரதரை சாட்டையால் அடித்தால் எங்கோ இருக்கும் இன்னொரு இரட்டை சகோதரன் முதுகில் வரி வரியா தடம்னு அறிவியலை தடம் புரட்டின டெக்னாலஜி ஜித்தன்ஸ் தமிழ்சினிமாவில் மட்டுமே உண்டு..
//
அண்ணா பின்னூட்டத்துல பொளந்து கட்டறீங்களே!!!!

said...

ரயில்வே டிராக்கு ரயில் போவதற்கு, ஸ்டேஷன் ப்ளாட்பார்ம் பயணிகளுக்கு ஆனா தமிழ் சினிமாவில் வேற காம்பினேஷனில் தமிழ் பட டைரடக்கர்ஸ் யூஸ் பண்ணிக்குவாங்க...

ஹீரோவுக்கு செக் வைக்கும் படு விவரமான வில்லன்கள் ரயில்வே டிராக் க்ளைமாக்ஸ் சேஸிங்கில் டிராக்கில் கால் மாட்டிக்கொண்டு ஙேன்னு பல்பு பார்ட்டி ஆகிவிடுவார்கள்... மாட்டிக்கொண்ட ஷூவை கழட்டி விட்டு ஓடாமல் ஏதோ கர்ணனின் கவச குண்டல ரேஞ்சுக்கு கழட்டமுடியாமல் ஹீரோயின் முன்னால் இம்சைப்படுவார்கள்...

சென்னை நகர ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பாரங்கள் இன்னும் இதயம் படத்தின் க்ளைமாக்ஸில் முரளி ஆக்டு காட்டினதிலும்... காதல் கோட்டை அஜீத்-தேவயானி ஸ்வெட்டர் கண்டுபிடிப்பு காதல் இம்சையால் இன்னும் டீப் ஃபீலிங்க்ஸில் இருக்கு...

அப்புறம் இந்த பாலூர் ரயில்வே ஸ்டேஷன்... தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் ஸ்டேஷன்... பாலூர் வீதிகளில் திரியும் மாடுகள் கூட தமிழ் சினிமா க்ளைமாக்ஸுக்கு சீன் சொல்லும் ஸ்கிரிப்ட் எழுதும்ங்ண்ணா

Anonymous said...

// Hariharan # 03985177737685368452 said...

அப்புறம் இந்த பாலூர் ரயில்வே ஸ்டேஷன்... தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் ஸ்டேஷன்... பாலூர் வீதிகளில் திரியும் மாடுகள் கூட தமிழ் சினிமா க்ளைமாக்ஸுக்கு சீன் சொல்லும் ஸ்கிரிப்ட் எழுதும்ங்ண்ணா//

ரிப்பீட்டேய்ய்ய்.....

said...

// cheena (சீனா) said...

ஓஓ - ரசிகன் - அம்மா செண்டிமெண்ட்னா என்னா - கேக்குராரு.

கடைசிக் காட்சியிலே அம்மாவைக் கட்டிப்போட்டு கதா நாயகனை வரவழைத்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள வில்லன் படும் பாடு - அய்யோ - தாங்காது//

ஆஹா..மெயின் பாயிண்ட புடிச்சிட்டீங்களே சீனா சார்... சின்னத்தம்பி காலத்துலேருந்து.. வரை இப்படியேதான் ஆகுது..சூப்பரு..

said...

avitha said...

பொதுவா ஹீரோயினோட அப்பா தான் வில்லன்.எப்பிடி?

கவிதா.. நெறய படம் பாக்கறிங்களா?.கிளாஸ கட்டடிச்சிட்டு.. இருங்க உங்க வீட்டுல போட்டுக் குடுக்கிறேன்.ஹிஹி..
சரியாதேன் சொல்லறிங்க...

said...

//rk said...

Heroin always rich and hero local poor.after love heroin will come to heros poor home and doing all works to shows heros mother.//
ஆமாங்க ஆர்.கே அரைச்ச மசாலாவயே மறுமடி மறுபடி நம்ம தலைமேலையே வைச்சு அறைக்கிறாய்ங்க..

said...

//vijay said...

// rk said...
Heroin always rich and hero local poor.after love heroin will come to heros poor home and doing all works to shows heros mother.
//
அப்படி வரும்போது ஹீரோயின் அடக்கமான பொண்ணுதான் என்று காண்பிப்பதற்காக ,புடவை கட்டிக்கொண்டு வரச் சொல்லுவார்.ஹிஹி:) //
இது நெசந்தான்ங்கோ....... நேத்து பாத்த படத்துல கூட இது கதைய காட்டினாங்க...

said...

//பிரியமுடன் பிரித்தி said...
மாறுவேடம் போட தாடி ஒட்டி,கருப்புக் கண்ணாடி அணிந்தால் போதும். சரிதானா?//

எந்த காலத்துல இருக்கிங்க பிரித்தி?.. இப்பெல்லாம் மேக்கப்புல இன்டர் நேஷனல் கில்லாடிகளை நம்ம ஊருக்கு கொண்டு வர்ராய்ங்க.. தசாவதாரம் பாத்துப்புட்டு நம்புங்க..ஹிஹி..

said...

// துளசி கோபால் said...
ஒரு விளையாட்டுப்போட்டி(??)ன்னாகூட ஹீரோ வரும்வரை தோழர்கள் தவிப்பாத் தவிக்கணும்.//

ஹா..ஹா... துளசி அக்கா.. என்னமா பஞ்ச் குடுக்கிறிங்க.. அதுவும் தோழர்கள் பேசர எல்லா வசனத்தோடயும்.
நிச்சயமா அது எதாவது ஒன்னு வந்துரும்.
ஓஹோ.. நீங்க தான் உங்க ஏரியா லோக்கல் சினிமா சென்சார் போர்டுன்னு சொன்னீங்க இல்ல... அது மறந்தே போச்சு...ஹிஹி...

said...

மங்களூர் சிவா said...
kalakkal
//அண்ணா பின்னூட்டத்துல பொளந்து கட்டறீங்களே!!!!//

மாம்ஸ் என்னா இது? வந்தாக்கா நல்ல புள்ளையாட்டும் "மே அய் கமின்" இன்னு பவ்யமா கேக்கறீங்க.. இல்லேன்னாக்கா..பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போட்டுட்டு போயிடறிங்க...
நமக்குள்ல இந்த ஃபார்மாலிட்டிலாம் தேவையா... கல்யாணமாவர வரைக்கும் நீங்க தைரியமா பேசலாம்..நாங்க யாரும் போட்டு குடுக்க மாட்டோம்..ஹிஹி...

said...

பிரதாப் குமார் சி said...

ஆக ஒரு கூட்டமாவே இறங்கியிருக்கோம் தமிழ்படங்களை கலாய்ப்பதற்காக.
அஹா.. நண்பரே.. உங்களுக்கு இப்பத்தேன் பிரிஞ்சுதா?..ஹிஹி...

said...

//சின்ன அம்மிணி said...

அம்மா செந்டிமெண்ட்ன்னா என்னான்னு கேக்கறாறா? அழுகிய தமிழ்மகன்ல கீதா தான் விஜய்க்கு அம்மா. அது சரி. ரசிகன் இன்னும் அழுகிய தமிழ் மகன் பாக்கலியா //

போதுங்க அம்மிணி... நீங்க அந்தப் படம் (அதுவும் ஓசில ). பாத்துட்டு. " யான் பெற்ற துன்பம்,பெறுக இவ்வையகமேன்னு :"கொலை வெறி"ல அலையறதா ஊருல பேசிக்கிறாய்ங்க...நாங்க உஷாருங்க்கோ...

said...

// Anonymous said...

[ஹீரோ வுடு கட்டும் போது வட்டத்து நடுவிலேருந்து நகர்ந்துட்டாக்கா.., அவரோட புதிய சென்டர் பொசிசனுக்கு கும்மிய மாத்திப்புடனும்.].

அதேதான். இப்ப நீங்க எந்த சென்டரில் நிக்கறீங்கன்னு பாத்துக்கிட்டிருக்கோம்.மாட்டினா கும்மிதான்.:D

யாருப்பா அது?...என்னிய மார்க் பண்ணிட்டிங்களா?. நா ஒரு எடத்துல நின்னாத்தானே கட்டங்கட்டி தூக்கரதுக்கு...
நடுவுல யாரையாவது நிக்க வைச்சி தரையோட தரையா தவ்விடுவோமில்ல... யாருக்கிட்ட?..ஹிஹி...//

said...

//புதுகைத் தென்றல் said...

அவங்க இஷ்டத்துகு படத்தை எடுத்துப்புட்டு, மக்கள் இதைத்தான் விரும்பறாங்க அப்ப்டின்னு சொல்றாங்க லே? படம் எடுக்கறதுக்கு முந்தி மக்கள் கிட்ட சர்வேயா செஞ்சாங்க?//

வாங்க தென்றல் .. அதுக்குத்தேன் ..நம்ம ப்ளாக் மக்கள் படம் வந்த வாரத்துக்குள்ளயே "கொலைவெறி"யோட கணிப்பு போட்டு பழி தீத்துக்கறாய்ங்களே..ஹிஹி...

said...

// Hariharan # 03985177737685368452 said...

ரசிகன்,

காணாமல் போன சகோதரர்களைக் கண்டுபிடிக்கும் வாய்ஸ் ஐடெண்டிபிகேஷன் டெக்னிக்கை இந்த நவீன உலகிற்கு பிரசண்ட் செய்த குரு நாளை நமதே எம்ஜிஆர்!

ஒரு பிரதரை சாட்டையால் அடித்தால் எங்கோ இருக்கும் இன்னொரு இரட்டை சகோதரன் முதுகில் வரி வரியா தடம்னு அறிவியலை தடம் புரட்டின டெக்னாலஜி ஜித்தன்ஸ் தமிழ்சினிமாவில் மட்டுமே உண்டு..

ஹீரோவுக்கு செக் வைக்கும் படு விவரமான வில்லன்கள் ரயில்வே டிராக் க்ளைமாக்ஸ் சேஸிங்கில் டிராக்கில் கால் மாட்டிக்கொண்டு ஙேன்னு பல்பு பார்ட்டி ஆகிவிடுவார்கள்... மாட்டிக்கொண்ட ஷூவை கழட்டி விட்டு ஓடாமல் ஏதோ கர்ணனின் கவச குண்டல ரேஞ்சுக்கு கழட்டமுடியாமல் ஹீரோயின் முன்னால் இம்சைப்படுவார்கள்...//

ஏனுங்க .. நண்பரே..
சொம்மா சீசன் காலத்து குத்தால அருவி கணக்கா.. பாயிண்டுகள அள்ளி வீசுறிங்களே...எப்பிடிங்க..?..
உங்க பார்வை படாத விசயமே இல்லியா?.. சொம்மா.. சரக்கு மிக்ஸ் பண்ணரமாதிரி.(ஹிஹி.. எங்க ஊரு பாண்டிச்சேரியில்ல.. அத்தான் உதாரணங்க்கூட இப்பிடியெல்லாம் தோணுது..). சையின்ஸ சினிமாவுலயும், மகாபாரதத்த ,ரயில்வே டிராக்குலயும் ரீமிக்ஸ் பண்ணி கலக்குறிங்க...சூப்பரு...

said...

// Anonymous said...

// Hariharan # 03985177737685368452 said...

அப்புறம் இந்த பாலூர் ரயில்வே ஸ்டேஷன்... தமிழ் சினிமாவின் செண்டிமெண்ட் ஸ்டேஷன்... பாலூர் வீதிகளில் திரியும் மாடுகள் கூட தமிழ் சினிமா க்ளைமாக்ஸுக்கு சீன் சொல்லும் ஸ்கிரிப்ட் எழுதும்ங்ண்ணா//

ரிப்பீட்டேய்ய்ய்.....//

நானும் ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.... (நா போட்ட ரிப்பீட்டுதேன் ரொம்ம நீளம்..ஹிஹி... )

said...

அன்றில் பறவை தண்ணியும் பாலும் வெச்சா பாலமட்டும் குடிக்குமாம்.. அது போல தமிழ் சினிமால் இருக்கற அத்தனை மெஸேஜையும் அற்புதமா கவனிச்சு அதை விட முக்கியமா அதை ஞாபகம் வெச்சிருக்கீங்களே நீங்களல்லவோ உண்மையான ரசிகர் :))

said...

நல்வருகைகள் ஜி3...

// G3 said...
அன்றில் பறவை தண்ணியும் பாலும் வெச்சா பாலமட்டும் குடிக்குமாம்..//

அப்பிடியா?.. நம்ம சிங்கார சென்னையில பஸ்ல (பாக்கெட்டுல) பர்சோட போனாக்கா பர்சை விட்டுட்டு பணத்த மாத்தரம் பிரிச்சு எடுத்துக்கிறாய்ங்களாமே?..அது மாதிரிங்களா?..ஹிஹி..
[இப்ப பரவாயில்லை...முன்னாடியெல்லாம் பாக்கெட்டே காணாம போவுமில்ல?..].

// அதை விட முக்கியமா அதை ஞாபகம் வெச்சிருக்கீங்களே நீங்களல்லவோ உண்மையான ரசிகர் :)) //

என்னிய ரொம்ப புகழறிங்களே..அய்யோ எனக்கு ரொம்ப வெக்கமாயிருக்கு.ஹிஹி....:)))
[மறக்க கூடிய விசயங்களா இவை..தெரியாத்தனமா எந்தப்படத்துக்கு போய் ஒக்காந்தாலும் இதே பல்லவித்தேன்.மூணு நாளைக்கு சாப்பாடு,தண்ணி (எந்த தண்ணியின்னெல்லாம் கேக்கப்டாது-நா ரொம்ப சின்ன புள்ள) எறங்க மாட்டேங்குது.. படத்தயே இன்னும் ஜீரணிக்க முடியலையே.. அதனாலத்தேன்..:D)

உங்க வருகைக்கு ரொம்ப நன்றிகளுங்க ஜி3.

said...

என்ன திடீர்னு எல்லாருக்கும் தமிழ் சினிமா பத்தின அறிவு ஜாஸ்தியாயிட்டு இருக்கு? அது எழுதறப்போ கூடவா இவ்வளவு தப்பு விடணும்? தலை எழுத்து!!!!! எப்போ திருந்தப் போறீங்களோ????????

said...

எப்போ வந்தாலும் உங்க பக்கம் "done, but with errors" அப்படின்னே வருதே என்ன காரணம்? அது சரி, "அழகிய தமிழ் மகன்" அப்படினு எழுதணுமா? "அழுகிய தமிழ் மகன்" அப்படினு எழுதணுமா? படம் டப்பாங்கறதாலே, "அழுகிய" போட்டுட்டீங்களோ ஒருவேளை? :P

said...

// கீதா சாம்பசிவம் said...
என்ன திடீர்னு எல்லாருக்கும் தமிழ் சினிமா பத்தின அறிவு ஜாஸ்தியாயிட்டு இருக்கு? அது எழுதறப்போ கூடவா இவ்வளவு தப்பு விடணும்?//

வாங்க கீதா அக்கா.. சரிசரி டீச்சரும் ஒரு அருமையான ஃபாயிண்ட் சொல்லுவாய்ங்கன்னு பாத்தாக்கா.. இப்பவும் எனக்கு மண்டகப்படிதானா?..

//எப்போ திருந்தப் போறீங்களோ????????//

ஹிஹி.. யாமறியேன் பராபரமே.:D

said...

// எப்போ வந்தாலும் உங்க பக்கம் "done, but with errors" அப்படின்னே வருதே என்ன காரணம்?//

இன்னும் உங்க வீட்டு ஹைதர் அலி காலத்து கம்பியுட்டர் பொட்டிய மாத்தலியா?..

// அது சரி, "அழகிய தமிழ் மகன்" அப்படினு எழுதணுமா? "அழுகிய தமிழ் மகன்" அப்படினு எழுதணுமா? //

ஹிஹி.. கண்டுபுடிச்சிட்டீங்களா?..சூப்பர்..
நீங்க கண்டுபுடிக்கிறீங்களான்னு டெஸ்ட் பண்ணத்தேன் வேனுமின்னே அப்பிடிபோட்டேன்..
( நாங்க்கெல்லாம் எங்க தமிழ் டீச்சருக்கே டெஸ்ட் வைச்சவங்கல்ல..ஹிஹி:D

படம் டப்பாங்கறதாலே, "அழுகிய" போட்டுட்டீங்களோ ஒருவேளை? :P
என்னா ஒரு சிந்தனை.. சூப்பரு..எக்ஸலன்ட்டு..:)))

said...

heh! superu! nalla irukkappu! neenga solrathu! nalla irukku!

said...

apparam eppovum muthal scenela hero introductionku bikelayo illa odikitoo paranthu vara maari irukume.. ahtu!

said...

edavathu vilayadina hero thothu pogave mataru...
heroine herova thaan love pannuvaanga...

said...

ஹீரோவும் ஹீரோயினும் வில்லனிடம் மாட்டிகொள்ளும் போது அவர்களை காப்பாற்ற ஒரு நாயோ ஆடோ யானையோ வரும். atleast போலீஸுக்கு ஒரு தகவலாவது குடுக்கும்.

said...

ஹீரோயின் கிட்ட வில்லன் டைம் என்னனு கேட்டாக் கூட அவனுக்கு செருப்படி விழும். அது ஸ்லோ மோஷனில் 3 முறை காட்டப் படும்.( படம் முடியரதுக்குள்ள ஒரு ரேப் சீன் கன்பர்ம். :P )
அதுவே ஹீரோ ஹீரோயின்கிட்ட நீ ஒரு ராத்திரி என் கூட தங்கினா தான் உன்ன லவ் பன்னுவேன்னு சொன்னாலும் அம்மணி ஓகே சொல்லிடுவாங்க. அப்புறம் ஹீரோ செம டயலாக் பேசி அம்மணிய அவிங்க ஊட்டுக்கு அனுப்பி வைப்பார்.

said...

வாங்க .. டிரிம்ஸ் மாம்ஸ்.. வந்திங்களே.. ஒரு அருமையான பாயிண்டோட...
நிருபிச்சிட்டீங்க..... சூப்பரு..
மொத மொதல்ல ஹீரோ அறிமுக சீனுல,அவரு ஓடிக்கிட்டோ.. இல்லாட்டி பறந்துக்கிட்டோத்தேன் இருப்பாரு..
ஹிஹி... செண்டிமெண்ட் பாயிண்ட புடிச்சிட்டிங்க மாமே.. அருமை..
[இது பரவாயில்லை.. செல படங்களுல காசு குடுத்து பாக்க வந்த ரசிகர்களோட மூஞ்சியில ஒதைக்கிற மாதிரி காலை காட்டிக்கிட்டேதேன் ஹீரோ அறிமுகம் ஆவராருங்க்கோ..]
வருகைக்கும் ,அருமையான பாயிண்டுக்கும் நன்றிகள் மாம்ஸ்...

said...

வாங்க டிடி..,நல்வருகைகள்..
//
edavathu vilayadina hero thothu pogave mataru...//

சரியா சொன்னீங்க.. ஹீரோ விளையாட்டுல எப்பிடியும் கடைசில ஜெயிச்சுடுவாரு....அப்பிடியே தோத்துப்புட்டாலும் அது அவிரு வேணுமின்னே ஹீரோயினுக்காக பெருந்தன்மையா விட்டுக்கொடுததாயிருக்கும்..
heroine herova thaan love pannuvaanga...//

ஹா..ஹா.. இது டாப்பு.. இப்பிடி கலக்றிங்களே..:))))

ஹீரோ,ஹீரோயினைதேன் லவ் பண்ணிவாரு..
[வேற யாரையாது லவ் பண்ணா அவுரு ஹீரோவே இல்லியே.,..ஹிஹி..]

[நல்லவேளை ஹீரோ ஹீரோவாத்தேன் நடிப்பாருன்னு சொல்லாம போனிங்களே..ஹிஹி..]

நல்லா நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க,.. ரொம்பவே ரசிச்சேனுங்க...டிடி...:D
முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றிங்க..

said...

// manipayal said...

ஹீரோவும் ஹீரோயினும் வில்லனிடம் மாட்டிகொள்ளும் போது அவர்களை காப்பாற்ற ஒரு நாயோ ஆடோ யானையோ வரும். atleast போலீஸுக்கு ஒரு தகவலாவது குடுக்கும்.//
வாங்க மணிப்பயல்.. நெசந்தானுங்க..
பத்துபேர் ஹீரோவ கோழி அமுக்குற கணக்கா அமுக்கி பிடிச்சிருப்பாய்ங்க..ஹீரோ திமிரிக்கிட்டிருப்பாரு.. ஆடு வந்து ஒரு ஆளை முட்டியதும் ஹீரோவுக்கு வீரம் வந்து எல்லாரையும் ஒரே மூச்சுல இழுத்து போடுவார்..இடைக்கால படங்களுல நெறய பாத்திருக்கேனுங்க...நாய் போலிஸுக்கு வழிகாட்டறத கூடத்தேன்..ஹிஹி..

சூப்பர் பாயிண்டுக்கு நன்றிங்க..

said...

// ~பொடியன்~ said...

ஹீரோயின் கிட்ட வில்லன் டைம் என்னனு கேட்டாக் கூட அவனுக்கு செருப்படி விழும். அது ஸ்லோ மோஷனில் 3 முறை காட்டப் படும்.( படம் முடியரதுக்குள்ள ஒரு ரேப் சீன் கன்பர்ம். :P )
அதுவே ஹீரோ ஹீரோயின்கிட்ட நீ ஒரு ராத்திரி என் கூட தங்கினா தான் உன்ன லவ் பன்னுவேன்னு சொன்னாலும் அம்மணி ஓகே சொல்லிடுவாங்க. அப்புறம் ஹீரோ செம டயலாக் பேசி அம்மணிய அவிங்க ஊட்டுக்கு அனுப்பி வைப்பார்.//

வாப்பா.. பொடியன்.. இந்த மாதிரி வயசுக்கு மீறிய சிந்தனையெல்லாம் ஒனக்கு மட்டுந்தேன் வரும்.. ஹிஹி..
எம்புட்டு சிந்தனை இந்த சின்ன வயசுல.. இப்போதைய கதாசியர்கள் தலையில நறுக்குன்னு கொட்டின மாதிரி இருக்கு..சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ரேஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்..

//( படம் முடியரதுக்குள்ள ஒரு ரேப் சீன் கன்பர்ம். :P ) //
[ ஆனாலும் இந்த வயசுல இப்பிடிப்பட்ட படமா தேடிப்பிடிசெல்லாம் பாக்கரது ஓவருதேன்.. சொல்லிப்புட்டேன்..ஹிஹி..]

said...

எங்கே உங்களை ஆளே காணோம்? "மொக்கை"க்குத் தான் வருவீங்க போலிருக்கு? அதான் பார்க்க வந்தேன்!! :P

said...

ஹீரோ விஜய்யோ முரளியோ...ஆனா அவர் ஃப்ரண்ட் மட்டும் கண்டிப்பா சார்லிதான்...ஹீரோ வயசுக்கும் ஃப்ரண்ட் வயசுக்கும் அப்படி ஒரு பொருத்தம்

said...

வாங்க கீதா அக்கா..

//எங்கே உங்களை ஆளே காணோம்? "மொக்கை"க்குத் தான் வருவீங்க போலிருக்கு? அதான் பார்க்க வந்தேன்!! :P//

அப்பிடில்லாம் எதுவும் இல்லைங்க.. நீங்க சீரியஸ்ஸா சாமி கதையெல்லாம் சொல்லிக்கினுருக்கும்போது வந்து கமெண்டடிச்சா சாமி குத்தமாயிடுமில்ல.. அத்தான் சைலண்டா பாத்துட்டு வந்துபுடறேனுங்க கீதா அக்கா..ஹிஹி...

said...

// பாச மலர் said...

ஹீரோ விஜய்யோ முரளியோ...ஆனா அவர் ஃப்ரண்ட் மட்டும் கண்டிப்பா சார்லிதான்...ஹீரோ வயசுக்கும் ஃப்ரண்ட் வயசுக்கும் அப்படி ஒரு பொருத்தம//

சரியா சொன்னிங்க நண்பரே.. அதுவும் இந்த முரளியெல்லாம் காலேஜ் ஸ்டூடண்டா காட்டுறதை பாக்கும்போது , காலேஜுக்கு மொத்தமும் ஒரு ஸ்டைக் அறிவிக்கனுமின்னு தோனும்.(நம்ம ரஜினி தாத்தா.. கல்யாணத்துக்கு "தமிழ் மணமுள்ள பெண் "தேடர கொடுமைய விடவா?.)

வருகைக்கும் ,அருமையான கருத்துக்கும் நன்றிங்க...

Anonymous said...

// "தமிழ் படங்களுல மெசேஜ் இல்லைன்னு யாருங்க சொன்னது?.//
நானில்லை.

said...

எழும்பும் தோலுமாக இருக்கும் வில்லனின் அடியாளால் எளிதாக கடத்தப்படும் ஹீரோயின், ஹீரோயின் அம்மா, ஹீரோவின் தங்கை, மற்றும் இதர நன்பர்கள், கிளைமாக்சில் வில்லனின் ஆட்களை ஹீரோவுடன் சேர்ந்து பின்னி பெடலெடுப்பார்கள்.

பி.கு: கிளைமேக்ஸ் யுத்தத்தில் இந்த இதர மக்கள் அவ்வப்போது வில்லனின் இரண்டு அல்லது மூண்று ஆட்களிடம் மாட்டிக் கொள்வர் அப்போது பிசியாக பைட் செய்து கொண்டிருக்கும் ஹீரோ பறந்து வந்து நன்பர் மாட்டிக் கொண்ட வில்லன் ஆட்களில் ஒருவரை உதைப்பார் மீதியை நன்பர் கவனித்துக் கொள்வார்...!

said...

// சுப.செந்தில் நாதன் said...

// "தமிழ் படங்களுல மெசேஜ் இல்லைன்னு யாருங்க சொன்னது?.//
நானில்லை.//

நம்பிட்டேன்..ஹிஹி..

said...

// கருப்பன்/Karuppan said...

எழும்பும் தோலுமாக இருக்கும் வில்லனின் அடியாளால் எளிதாக கடத்தப்படும் ஹீரோயின், ஹீரோயின் அம்மா, ஹீரோவின் தங்கை, மற்றும் இதர நன்பர்கள், கிளைமாக்சில் வில்லனின் ஆட்களை ஹீரோவுடன் சேர்ந்து பின்னி பெடலெடுப்பார்கள்.//

வாங்க கருப்பன் நல்வருகைகள்..
நல்ல கருத்தா புடிச்சி சொல்லியிருக்கிங்க நன்றிகள்.
அப்புறம் உங்க புது பதிவு பாத்தேன். ஆரம்பமே நல்லா தடுமாற்றம் இல்லாம எழுதியிருக்கிங்க.. தொடருங்கள்.
வாழ்த்துக்கள்..

Anonymous said...

:D

said...

இந்த மாதிரி தமிழ் சினிமா காட்சிகளை நம்ப ஷாருக்கான் அவரோட ஓம் சாந்தி ஓம் படத்துல நக்கலடிச்சுருப்பாரு, அந்த படத்தோட விமர்சமனமும் ,அந்த தமிழ் படக் காட்சியும் என் பதிவுல போட்டுருக்கேன், கொஞ்சம் பாருங்க!,
htt://cinemapaarvai.blogspot.com

said...

சினிமா போலீசும் சரி சீரியல் போலீசும் சரி...கதை முடியனுமின்னா சுறுசுறுப்பா வில்லனைப் பிடிப்பார்கள். கதையை இழுக்கனுமின்னா வெண்டைக்காய் மாதிரி ஒரே வழவழ கொழகொழதான். சர்தானே நய்னா?

said...

// Anonymous said...

:D//

:D:D:D

said...

// mouli said...

இந்த மாதிரி தமிழ் சினிமா காட்சிகளை நம்ப ஷாருக்கான் அவரோட ஓம் சாந்தி ஓம் படத்துல நக்கலடிச்சுருப்பாரு, அந்த படத்தோட விமர்சமனமும் ,அந்த தமிழ் படக் காட்சியும் என் பதிவுல போட்டுருக்கேன், கொஞ்சம் பாருங்க!,
htt://cinemapaarvai.blogspot.com//

வாங்க மெளலி ,

சினிமா விமர்சனத்துக்காகவே ஒரு வலைப்பூ வைச்சு பல பேர காப்பாத்தறிங்களே..
நன்றிகள். ஆனாக்கா நீங்க சொன்ன அந்த விடியோ இப்போது இல்லை என்று எரர் தகவல் வருது
சரி செய்யுங்களேன்..
வருகைக்கு நன்றிகள்.

said...

// நானானி said...

சினிமா போலீசும் சரி சீரியல் போலீசும் சரி...கதை முடியனுமின்னா சுறுசுறுப்பா வில்லனைப் பிடிப்பார்கள். கதையை இழுக்கனுமின்னா வெண்டைக்காய் மாதிரி ஒரே வழவழ கொழகொழதான். சர்தானே நய்னா?//

அவ்வ்வ்வ்.... அதை ஏன் கேக்கறிங்க.. படத்துலயும் சீரியல்லயும் போலிஸ் காரங்க எப்ப புத்திசாலியாவாங்க.. எப்ப முட்டாளாயிருப்பாங்கன்னு டைரட்டருக்கே தெரியாது..

பாயிண்ட் நச்சுன்னு இருக்குங்க நானானி..