Saturday, November 3, 2007

மீசை வச்ச ஆம்பளைகளிடம் ஒரு வாக்கெடுப்பு (ஆண்களுக்கு மட்டும் !!!).




                           எல்லாரும் இப்ப அவிங்க வீட்டுலயே வாக்குப்பதிவு பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்களா..எனக்கும் அந்த சர்வே கோடு/புள்ளி எல்லாம் இப்பத்தேன் கெடச்சிது.. சரி என்னத்த போட்டு டெஸ்ட் பண்ணரதுன்னு யோசிச்சிக்கிட்டே தமிழ்மணத்துக்கு போனேனா.. அங்க.. " மீசை வச்ச ஆம்பளைகள்" ன்னு சின்ன அம்மிணி ஒரு பதிவு போட்டிருந்தாங்க..
                            
                            நா ஸ்கூலுல படிக்கும் போதுலாம் மொத மொத அரும்பு மீசை வந்தபோது தினமும் அத கண்ணாடியில் ரகசியமா பாத்து தடவி தடவி ரசிச்சது நினைவுக்கு வந்தது..சும்மாவா..ஆம்பளங்க பெரிய வயசாயிட்டாங்கன்னு மத்தவங்களுக்கு?..ஏன் நம்ம வீட்டுக்கே சொல்லர அடையாளமாச்சே..(இதுக்காகவே அப்பாவோட ரேசர தெரியாம எடுத்து சும்மா சேவ் பண்ணி வளத்த மீசையாச்சே.(அப்ப இத்தான் பேமஸ் ஜடியா..).இதுல காயம் பட்டு அம்மாக்கிட்ட காரணத்த சொல்ல முடியாம தவிச்ச சந்தர்ப்பங்களும் உண்டு. )

                         மீசை வந்தப்புறந்தான் அக்கம்பக்கத்துக்காரங்களாம் "டேய் பையா"ங்கரத்த மாத்தி திடீருன்னு "வாங்க தம்பி"ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க..மீசையில தண்ணிய தடவிக்கின்னு (அப்பத்தான ரொம்ப கருகருன்னு தெரியும்)தெருவுல பசங்களோட நின்னு கத பேசும்போது டியுசன் போகும் ஸ்மித்தா,ஜான்சியெல்லாம் நம்மல ஓரக்கண்ணால பாத்து சிரிச்சிக்கிட்டே (?) கிட்டே போரமாதிரி தோனுச்சி..

                          ஸ்கூல்ல டீச்சரெல்லாம் "சொல்லுடாவிலிருந்து "சொல்லுப்பா"வுக்கு மாறனதும் அந்த காலகட்டத்தில் தான்.

                          வீட்டுல கூட எல்லா விஷயத்துலயும் ( என்னிய பெரிய மனுஷனா மதிச்சி ) திடீருன்னு ஜடியா கேக்க ஆரம்பிச்சாய்ங்க..தெரு பசங்க கூட திடீருன்னு நம்ம மேல மரியாதயா பாத்தாங்க..எல்லாமே அந்த அரும்பு மீசை (மகிமை) வந்ததால தான்னு ஒரு நம்பிக்கை.. இப்படி ஆண்களுக்கே பெருமையைத்தரும் மீசையை குறை சொல்லராய்ங்களா?..அட இன்னா நம்மள எல்லாம் மொத்தமா வம்புக்கு இழுக்கிறாய்ங்க.?.
                          ஒரு வேளை பெண்ணிய போருல சின்ன அம்மிணியும் குதிச்சிட்டாய்ங்களோ?ன்னு  ஆர்வமா போய் பாத்தேன்.இப்பல்லாம் பெண்ணீய பதியுகள ஆண்கள்தான் அதிகமா படிக்கிறாய்ங்க..எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான்.
    
அப்புறந்தேன் தெரிஞ்சிது..விஷயமே வேற..

                        சில ஆண்கள் பாக்கவே சகிக்காத வகையில தாடிய நெறயா வளத்துக்கிட்டு,மத்தவங்க பொறுக்க முடியாம கேக்கறப்போ?..தாடிய எடுக்கனும்மின்னாக்கா.." டொனேஷன் வெட்டு "இன்னு சொல்லி மிரட்டி பணம் சேர்த்து அத நல்ல காரியத்துக்கு (ஆண்கள் சம்பந்தப்பட்ட) தர்ராய்ங்களாம்.இப்படி ரெண்டே வருஷத்துல மில்லியன் கணக்குல பணம் சேத்துட்டாய்ங்களாம்.(இதுவும் நல்ல பிசினசாயிருக்கில்ல..)

                           அதனால நம்ம எல்லாரையும் தாடி வளர்த்து,தியாகம் பண்ணசொல்லி சின்ன அம்மிணி கேட்டிருக்காங்க..
(அவிங்கள தாடி வளக்க சொல்லமுடியாதுங்கர தைரியந்தேன்).
தாடிலாம் நமக்கு ஒத்துவராதே.. சரிசரி நம்மாலான ஜடியாக்களயாவது சொல்லி உதவுவோமின்னு ,கெடச்ச சர்வே கோடுல போட்டுடேன் (அப்படியே..சரியா வேல செய்யுதான்னுன்ம் டெஸ்ட் செய்ய).

                         இது ஒட்டு மொத்த ஆண் சமுகத்து சம்பந்தப்பட்டதால உங்க ஓட்டுரிமைக்கு விட்டுட்டேன்..
       
                    அப்பிடியே கீழ "கண்ண மூடிக்கிட்டி" எதாவது ஒன்ன கிளிக்கிடுங்க..





34 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

\\மீசையில தண்ணிய தடவிக்கின்னு (அப்பத்தான ரொம்ப கருகருன்னு தெரியும்)\\

really????

Anonymous said...

romba mukkiyamaana mattaru.
inhtha aambalingala ippidiththaan.haha.

Anonymous said...

athu enna "aambalingalukku mattum"

said...

// தெருவுல பசங்களோட நின்னு கத பேசும்போது டியுசன் போகும் ஸ்மித்தா,ஜான்சியெல்லாம் நம்மல ஓரக்கண்ணால பாத்து சிரிச்சிக்கிட்டே (?) கிட்டே போரமாதிரி தோனுச்சி..//
// ஆம்பளங்க பெரிய வயசாயிட்டாங்கன்னு மத்தவங்களுக்கு?..ஏன் நம்ம வீட்டுக்கே சொல்லர அடையாளமாச்சே
//
ம்ம்.நடத்து தலைவா.நடத்து.ஹாஹா.
ரிப்பீட்டே.

said...

அட.. இந்த கூத்தெல்லாம் நடந்திருக்கா??

said...

எதுக்கு இதுல சூர்யா படம்? சூர்யா உங்களைபோலத்தான் மீசை வச்சிருக்காரா என்ன??

said...

//வாங்க.. இங்க நீங்க என்னிய திட்டலாம்,பாராட்டலாம்,கருத்தை சொல்லலாம்.ஆணி வைக்கலாம்,ஆணி புடுங்கலாம்.[அதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்களோ?],சண்டை கூட போடலாம்.அனானிகளுக்கும் ஆதரவுண்டு[உண்மையான பின்னூட்டம் கிடைச்சா சரி].ஆனா..தரக் குறைவான வார்த்தைகளுக்கு அனுமதியில்லை.அவை நீக்கப்படும் இன்னு சொல்லிக்கிறேன்.அட உங்க கருத்த கேக்க வந்துட்டு,நானே பேசறேன் . நீங்க சொல்லுங்க..//

பின்னூட்ட அழைப்பே பதிவு சைஸ்ல இருக்கே? என்னதிது விளையாட்டு ரசிகா? :-)

said...

ஹாய் ரசிகா,

இது என்ன ஆண்களுக்கு மட்டும்னு போட்டுட்டு இவ்வளவு பேரும் பொண்ணுங்களா கமெண்டிருக்காங்க

said...

ஹாய் ரசிகா,

//மீசையில தண்ணிய தடவிக்கின்னு (அப்பத்தான ரொம்ப கருகருன்னு தெரியும்)//

அத விட விளக்கெண்ணெய் போட்டிருந்த இன்னும் நல்லா கரு கருன்னு வந்திருக்ம்ல

said...

ஹாய் ரசிகா,

//நம்மல ஓரக்கண்ணால பாத்து சிரிச்சிக்கிட்டே (?) கிட்டே போரமாதிரி தோனுச்சி..//

ஓஓஓ.. இப்ப இதுலாம் வேற நடந்திருக்கா? சொல்லவேயில்ல இவ்ளோ நாளா?

said...

ஹாய் ரசிகா,

//வீட்டுல கூட எல்லா விஷயத்துலயும் ( என்னிய பெரிய மனுஷனா மதிச்சி ) திடீருன்னு ஜடியா கேக்க ஆரம்பிச்சாய்ங்க..//

ஹேய் இதுலாம் ரொம்ம்ம்ப ஓவர் பில்டப்பா தெரியல?

said...

//"இன்னு சொல்லி மிரட்டி பணம் சேர்த்து அத நல்ல காரியத்துக்கு (ஆண்கள் சம்பந்தப்பட்ட) தர்ராய்ங்களாம்.//

ஓஹோ,அந்த கன்றாவிக்கு இப்படி ஒரு பேரா?

Anonymous said...

\\மீசை வந்தப்புறந்தான் அக்கம்பக்கத்துக்காரங்களாம் "டேய் பையா"ங்கரத்த மாத்தி திடீருன்னு "வாங்க தம்பி"ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க.\\
உங்க நெலம பரவாயில்லை. என் பக்கத்து வீட்டு பையனுக்கு கல்லூரிக்கு முதல் நாள். ராகிங்ல ஷேவ் பண்ணுன்னு சீனியர்ஸ் சொல்லிட்டாங்க. அவனுக்கோ பால் வடியற முகம். மீசை வர ஆரம்பிக்கவே இல்லை. சீனியர்ஸ் உதவியோட முதல் ஷேவிங் அவனுக்கு நடந்தது.

Anonymous said...

\\//"இன்னு சொல்லி மிரட்டி பணம் சேர்த்து அத நல்ல காரியத்துக்கு (ஆண்கள் சம்பந்தப்பட்ட) தர்ராய்ங்களாம்.//
மிரட்டரதெல்லாம் இல்லீங்க. நீங்க யாரியும் மிரட்டீடாதீங்க. ஏதாவது வம்புல மாட்டிக்க போறீங்க.

Anonymous said...

\\கெடச்ச சர்வே கோடுல போட்டுடேன் \\
லிங்க் எங்கே. காணோம்.

Anonymous said...

\\ஓஹோ,அந்த கன்றாவிக்கு இப்படி ஒரு பேரா?\\ என்னங்க‌ சும‌தி இப்ப‌டிக்கேட்டுட்டீங்க‌. ந‌ல்ல‌ ஷெவ் ப‌ண்ணியே பாத்த‌ முக‌ங்க‌ள்ல‌ பூராம் தாடி மீசைன்னு மூஞ்சி பூராம் முடியா இருந்தா பாக்க‌ ச‌கிக்காம‌, நாங்க‌ ப‌ண‌ம் குடுக்குறோம் ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌த்துக்கு, ஒழுங்கா ஷெவ் ப‌ண்ணுங்க‌ப்பா. ராத்திரி கெட்ட‌ க‌ன‌வா வ‌ருதுன்னு சொல்லீட்டு, ப‌ண‌த்தை Movember Fund Raisingக்கு குடுத்துற‌துதான்

said...

rasikaa, ஸ்மித்தா ஜான்சி எல்லாம் எப்படி இருக்காங்க, கதெயெச் சொல்லலாமில்ல வெவரமா. ஆமா - இப்போ மீசை தாடி எல்லாம் இருக்க இல்லெயா ( 1000 ரூபாக்கு ரேசரா ??? - அடேங்கப்பா). ஒட்டுப்போட முடிலேயே

said...

தண்ணிய தடவிக்கிட்டு நின்னா என்னாகும்?.இதெல்லாம் சரி இல்லை சொல்லிவிட்டேன்.இனி இப்படி நின்றால் தூங்கும் போது உங்கள் மீசை எடுக்கப்படும்.

said...

' இதுவும் நல்ல பிசினசாயிருக்கில்ல.'
ஏன் try செஞ்சு பார்க்க வேண்டியது தானே?.

said...

இதெல்லாம் சேலை கட்டிட்டு வர்ற பொண்ணு கேட்டா தான் சொல்லுவேன்! :P

said...

வாங்க திவ்யா.. அப்ப அப்பிடித்தான் எல்லா சீனியர் .
அண்ணன்களும் செஞ்சாங்க..ஹிஹி..

said...

//romba mukkiyamaana mattaru.//
அட என்னங்க கவிதா இப்புடி சொல்லிப்புட்டீங்க சின்ன அம்மிணி கோவிச்சிக்கப்போராங்க...

said...

ம்ம்.நடத்து தலைவா.நடத்து.ஹாஹா.
ஹலோ விஜய் ,என்னவோ நீங்க நடத்தாதயெல்லாம் நான் நடத்திட்ட மாதிரி..
உங்க கத எல்லாம் உங்க தெருவுல கேட்டா சொல்லுவாய்ங்கள்ல..ஹா..ஹ...

said...

// அட.. இந்த கூத்தெல்லாம் நடந்திருக்கா??//
இதுக்கே இப்பிடி கேட்டாக்கா?.,,....ஹா...ஹ,..

// பின்னூட்ட அழைப்பே பதிவு சைஸ்ல இருக்கே? என்னதிது விளையாட்டு ரசிகா? :-)//
அது போல நீங்களும் கூச்சப்படாம பெரிய பின்னூட்டமா போடலாமின்னு மறைமுகமா சொல்லியிருக்கேனுங்க..மைஃபிரண்டு ஹிஹி..

said...

// இது என்ன ஆண்களுக்கு மட்டும்னு போட்டுட்டு இவ்வளவு பேரும் பொண்ணுங்களா கமெண்டிருக்காங்க//
வாங்க வாங்க சுமதி..
ஏன்னாக்கா நா தெரியாம எதாவது தப்பா சொன்னாக்கா மொதல்ல வந்து திட்டலாங்கர ஜடியாதான்.ஹிஹி..
நாந்தேன் சொன்னேனுல்ல..இப்பல்லாம் பெண்ணிய பதிவுகளையும்,மங்கையர் மலர் போன்றவற்றையும் ஆண்கள்தான் அதிகமா படிக்கிறாய்ங்க...அதே..

said...

// அத விட விளக்கெண்ணெய் போட்டிருந்த இன்னும் நல்லா கரு கருன்னு வந்திருக்ம்ல//
ஹா...ஹா...... சூப்பர் ஜடியாப்போங்க...ஹா..ஹா..

said...

// ஓஓஓ.. இப்ப இதுலாம் வேற நடந்திருக்கா? சொல்லவேயில்ல இவ்ளோ நாளா//
அப்பறமா சொல்லாமின்னு இருந்தேனுங்க..ஹிஹி..

said...

// ஹேய் இதுலாம் ரொம்ம்ம்ப ஓவர் பில்டப்பா தெரியல//
அட நெசந்தேன்.. நம்புங்கப்பா...

said...

// மிரட்டரதெல்லாம் இல்லீங்க. நீங்க யாரியும் மிரட்டீடாதீங்க. ஏதாவது வம்புல மாட்டிக்க போறீங்க.//
வாங்க சின்ன அம்மிணி..
நீங்க சொலுறது சரிதானுங்க..நமக்கு ஏனுங்க வம்பு..
வருகைக்கு நன்றிகள்.

said...

// லிங்க் எங்கே. காணோம்.//
ஏதோ அன்னிய நாட்டு சதின்னு நெனக்கிறேன்.வோட்டு மிஷின் கொஞ்ச நாளா வேள செய்யல..நெறய பேறோட ஓட்டு செல்லாத ஓட்டாயிருச்சின்னு சொன்னாய்ங்க.. இப்ப தானா சரியாயிடுச்சின்னு நெனக்கிறேன்..
ஆமா இது ஆம்பிளைங்களுக்கான (அதுவும் மீசை வைச்ச) ஓட்டெடுப்பாச்சே?..

said...

// rasikaa, ஸ்மித்தா ஜான்சி எல்லாம் எப்படி இருக்காங்க, கதெயெச் சொல்லலாமில்ல வெவரமா. ஆமா - இப்போ மீசை தாடி எல்லாம் இருக்க இல்லெயா ( 1000 ரூபாக்கு ரேசரா ??? - அடேங்கப்பா). ஒட்டுப்போட முடிலேயே//
வாங்க சீனா சார்.. வாங்க..
நேரம் கெடக்கும் போது சொல்லிடலாம் சீனா சார்..மீசை மட்டுந்தேன் இருக்கு.தாடி வைக்கிற அளவுக்கு நாம எந்த வம்புலயும் இன்னும் மாட்டிக்கில்லையே..ஹிஹி...
"கில்லெட் எம்திரி பைவ் கோல்ட்" ஒரு சின்ன மின் மசாஜ் அதிர்வோட இயங்கும்.கண்ணத்துல வைச்சாக்கா..சும்மா..வெண்ணை கணக்கா வழுக்கிக்கிட்டு போவுது.நேரம் ரொம்ப மிச்சம்.ஒரு பிளேடுல முப்பது மொற ஸ்கேட்டிங்க் செய்யலாம்.சின்ன கீரல் கூட வராது(டிரைப் பண்ணாக்கூட).முயற்சி பண்ணிப் பாருங்களேன்.
ஓட்டு மிஷின் இப்பத்தேன் சரியாச்சு..

said...

// .இனி இப்படி நின்றால் தூங்கும் போது உங்கள் மீசை எடுக்கப்படும்.//
எப்பிடியெல்லாம் மெரட்டராய்ங்க. பாருங்க மக்கள்ஸ்...
ஏன் try செஞ்சு பார்க்க வேண்டியது தானே?.
ஏங்க பிரித்தி இன்னிக்கி ரொம்ப கோவமாயிருக்கீங்களா?...

said...

// இதெல்லாம் சேலை கட்டிட்டு வர்ற பொண்ணு கேட்டா தான் சொல்லுவேன்! :P// ஆஹா.. வாங்க டிரீம்ஸ் மாமு.. அப்ப சிவாஜி கணக்கா.. சேலை கட்டணவங்களா தேட ஆரம்பிச்சிடுவோமா?..ஹிஹி..

said...

கில்லட் எம்3 பைவ் கோல்ட் தகவலுக்கு நன்றி. ஸ்கேட்டிங் ஆரம்பிச்சுடரேன்