வார லீவு முடிஞ்சாச்சே...என்ன மொக்கை போடலாமுன்னு யோசிச்சப்போ..சில நாட்களுக்கு முன்ன நம்ம மங்கை அக்கா வீட்டுக்கு போன போது. உலக மாமியார்கள் தின"த்தன்னிக்கு .எங்கிட்ட.. "மாமியார்களை வாழ்த்துங்கள்"இன்னு சொன்னது நியாபத்துக்கு வந்துச்சு..அப்ப என் நண்பன் சுரேஷின் புலம்பல் மழையில தெப்பல நனைஞ்சிக்கிட்டு இருந்த நா அவன சமாதானப்படுத்த எழுதிய பின்னூட்டம்.
நம்ம "பதிவிலேயே பின்னூட்டமிடுபவர்கள் சங்கத்தின்" கொள்கைக்காக..அங்க நான் சொன்னத இங்க போடறேன்..( கொஞ்சம் லேட்டாயிட்டாலும் அட்லிஸ்ட் இன்னொரு "சின்ன மாமியார்கள் தின"மாவது மறுபடியும் வருமில்ல..)
மங்கை அக்கா said..
//மருமகன், மருமகள் எல்லாரும் என்னோட சேர்ந்து நம்ம மாமியார் நல்லா இருக்குனும்னு வேண்டிக்கலாம் வாங்க.//
கண்மணி said. ...
//எங்க எந்த ஆணாவது தன் மனைவியின் தாயை [மாமியாரை] வாழ்த்தச் சொல்லுங்க பார்ப்போம்.//
உங்கள் ரசிகன் said....
சரிங்க...நானும் என்னோட வருங்கால மாமியார வாழ்த்த தயார்.
ஆனாஅவிங்க..
மகளுக்கு சூப்பரா இல்லன்னாலும் , சாப்புடற அளவாவது சமைக்க கத்து தரனும்.
பூரிக்கட்டையால அடிக்கிறது மகாபாவமின்னு சொல்லித்தரனும்.
புடவைக்கடையில 15 நிமிஷத்துல புடவை எடுக்க கத்து தரனும்.
புகுந்தவீட்டுலயும் ஒரு அம்மா,அப்பா இருப்பாய்ங்கன்னு சொல்லித்தரணும்.
வரவுக்கு தகுந்த செலவு பிராக்டீஸ் கொடுக்கனும்.
சில சமயத்துல ஹஸ்பெண்டு(?)ம் ஒரு குழந்த மாதிரிதான், இன்னு அனுசரிச்சி போவச் சொல்லனும்.
சாப்பாடு போட டீவி சீரியல் விளம்பரம் வர, வரைக்கும் காத்திருத்தல் தப்புன்னு புரிய வைக்கனும்..
வேல முடிஞ்சி வந்து ஒய்வு எடுத்தா,வெட்டியா இருப்பதா நெனச்சு மிரட்டி வேல வாங்ககூடாது (நாங்களே பாத்து உதவுவோமில்ல...சுய கெளரவத்தோட..)
பக்கத்து வீட்டு ஆடம்பரத்தை பாத்து ,மாட்டிய அப்பாவியை பலி போட கூடாதுன்னு சொல்லிக்குடுக்கனும்.
இன்னும்..
அபி அப்பா: ரசிகா.. ஏம்பா..என்னாச்சிப்பா ..ஒனக்கு.. நிறுத்து.. நிறுத்து... அபி அம்மா வேற நா சொல்லித்தா நீ பேசரதா நெனைக்க ஆரம்பிச்சிடாய்ங்க... எதாயிருந்தாலும் நமக்குள்ளாரயே பேசி தீத்துக்கலாமே..
ரசிகன்: இப்புடி கடமையுல எதுவுமே சரியா செய்யாத மாமியார வாழ்த்தச் சொல்லும் அவிங்கள முதலில் நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்...
இது பேசி ..தீக்க வேண்டிய விசயமில்ல.... தீத்துட்டு பேச வேண்டிய விஷயம்.
அபி அப்பா: அது சரி ,நடக்கர கதையா இதெல்லாம்..இன்னும் ஒரு வாரம், எனக்கு " துபாய் சரவணபவன் "தான் படியளக்கனும் போல.
ஏம்பா சுரேசு .. இப்ப திருப்தியா?..
[ தன் ஹோம் மினிஸ்டடிடம் "நீ எதுக்குமே லாயக்கில்ல.."ன்னு திட்டு வாங்கி.. இப்ப ..எங்கிட்ட வந்து " மாமே ,எல்லாம் தப்பு, இந்த கல்யாணமே மாயை " ன்னெல்லாம் புலம்பி(அலும்பு பண்ணிக்) கொண்டிருக்கும் நண்பன் சுரேசுக்காக இந்த கேள்விகள்..].(எனக்கு தெரியாதா.. இன்னும் கொஞ்ச நேரத்துல ராஜி அக்கா..போன் செஞ்சி "சாரி"ன்னு கொஞ்சலா சொன்னா போதுமே.. 'நான் குடும்பஸ்தனாக்கும்"ன்னு ஒடிடுவானே..எத்த மொற பாத்திருக்கேன்.).
.............................
பின்குறிப்பு: "யாரை கேக்கிறீங்க வாழ்த்து?.. எதற்க்கு கேக்கீறிங்க வாழ்த்து? இன்னு சொம்மா வீர சிவாஜி கணக்கா பிளீரனுமின்னு இருந்த ஆசைய.. நம்ம அபி அப்பாவின் நிலமை பரிதாபமாயிருந்ததால.. கைவிட வேண்டியதாயிடுச்சி...
இந்த பின்னூட்டத்துக்கு தாளாரமா "ரிப்பீட்டே.. "சொன்ன நம்ம சிவாவுக்கு ரொம்ப தேங்க்ஸ்...
எதுக்கும் நானும் என்னோட மாமியாருக்கு என்னோட வாழ்த்த சொல்லிப்புடரேன்
..
"என்னோட வருங்கால "இன்னொரு அம்மாவுக்கு"(நன்றி தோழி பிரித்தி). எனது "இனிய மாமியார் தின வாழ்த்துக்கள்"
(கல்யாணத்துக்கப்பறம் குடும்பத்துல இதனால கொழப்பம் ஏதும் வந்துடக்கூடாதே.. அதனாலத்தான் எதுக்கும் சேஃப்பா இந்த மெகா ஜஸ்..)
அன்புடன் உங்கள் ரசிகன்.
Monday, November 5, 2007
மாமியாரை நான் எதுக்கு வாழ்த்தனும்?..
Subscribe to:
Post Comments (Atom)
33 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
\\சில சமயத்துல ஹஸ்பெண்டு(?)ம் ஒரு குழந்த மாதிரிதான், இன்னு அனுசரிச்சி போவச் சொல்லனும்.\\\
அடேங்கப்பா!!!
எல்லா பாய்ண்டும் சும்மா நச்சுன்னு இருக்கு ரசிகன்!
உங்க 'இன்னொரு அம்மா'க்கு இந்த பதிவை ப்ரிண்ட் போட்டு கொடுத்துடலாம்!
"மகளுக்கு சூப்பரா இல்லன்னாலும் , சாப்புடற அளவாவது சமைக்க கத்து தரனும்.
பூரிக்கட்டையால அடிக்கிறது மகாபாவமின்னு சொல்லித்தரனும்.
புடவைக்கடையில 15 நிமிஷத்துல புடவை எடுக்க கத்து தரனும்.
புகுந்தவீட்டுலயும் ஒரு அம்மா,அப்பா இருப்பாய்ங்கன்னு சொல்லித்தரணும்.
வரவுக்கு தகுந்த செலவு பிராக்டீஸ் கொடுக்கனும்.
சில சமயத்துல ஹஸ்பெண்டு(?)ம் ஒரு குழந்த மாதிரிதான், இன்னு அனுசரிச்சி போவச் சொல்லனும்.
சாப்பாடு போட டீவி சீரியல் விளம்பரம் வர, வரைக்கும் காத்திருத்தல் தப்புன்னு புரிய வைக்கனும்..
வேல முடிஞ்சி வந்து ஒய்வு எடுத்தா,வெட்டியா இருப்பதா நெனச்சு மிரட்டி வேல வாங்ககூடாது (நாங்களே பாத்து உதவுவோமில்ல...சுய கெளரவத்தோட..)
பக்கத்து வீட்டு ஆடம்பரத்தை பாத்து ,மாட்டிய அப்பாவியை பலி போட கூடாதுன்னு சொல்லிக்குடுக்கனும்."
இதிலே எதுவுமே பொருந்தாத என்னை மாதிரி அப்பாவிங்களுக்குக் கணவன்மார் என்ன செய்யணும்னும் யோசனை கொடுத்திருக்கலாமில்ல! :P :P
யோவ்.. போங்கய்யா.. மாமியா காரிக தான் மருமகன்க குடியவே கெடுக்கிறது...பொண்ணுக்கு எல்லா விஷத்தையும் சொல்லி குடுத்து...ஆப்பு வெக்கிற வேலைய செய்யுறது எல்லாம் இந்த மாமியாளுங்கதான்.. அனுபவத்திலே சொல்லுறேன்....நான் படுற கஷ்டம் யாருக்குமே வரக்கூடாது...ஒரே பொண்ணு பெத்த வீட்டிலே பொண்ணு எடுத்தது நாய் பொழப்பு...போங்க... கை நெறைய காசு இருந்தும் நிம்மதி இல்ல.... பித்து பிடிச்சி அலையுறேன்...என் புள்ளையும், பொண்டாட்டியையும் நல்லா டியுன் பண்ணி விட்டுட்டாக...
எப்போ மாமியாகாரிங்க மண்டைய போடுறாங்களோ அப்போ தேன் என்ன மாதிரி அப்பாவிக வாழ்வோம்...
// உங்க 'இன்னொரு அம்மா'க்கு இந்த பதிவை ப்ரிண்ட் போட்டு கொடுத்துடலாம்!//
அப்பிடின்னாக்கா.. இன்னும் நாலு பக்கத்துக்கு பாயிண்ட் சேக்க வேண்டிவருமேங்க..ஹிஹி..
வருகைக்கு ரொம்ப நன்றிங்க திவ்யா.. அப்புறம் உங்க வலைப்பூவுக்கு ஒரு வயசாயிடுச்சின்னு சொன்னீங்க.. எங்க எல்லாரோட சார்புலயும்"வாழ்க.. வளமுடன்."உங்களுக்கும்,வலைப்பூவுக்கும்.
// இதிலே எதுவுமே பொருந்தாத என்னை மாதிரி அப்பாவிங்களுக்கு//
வாங்க கீதா அக்கா வாங்க..இத நா நம்பிட்டேன் ..இருந்தாலும்..எதுக்கும் நம்ம சாம்பு மாமாகிட்ட கன்பார்ம் செஞ்சிக்கலாமா?..ஹிஹி..[மாமா எங்க தப்பிச்சி ஓடுறிங்க... ஹிஹி..]..
அன்பும் சரி;கோபமும் சரி..கெடைச்சதை இரண்டு மடங்கா திருப்பி கொடுப்பது தான் ஆண்களின் குணம்..அம்மா இத்தனையும் உங்களுக்கு சரியா சொல்லிக்கொடுத்ததால தான.. சாம்பு மாமா மொத்தமா உங்ககிட்ட சரண்டர் ஆயிருக்கார்...சரிதான..ஹிஹி...
// யோவ்.. போங்கய்யா.//
ஏனுன்க Keyven ..அய்ய்ய்யோ.. எம்புட்டு கடுப்பு ஒங்களுக்கு..
நீங்க எவ்வளவு வெந்து வெதும்பி,நொந்து,நூலாயி,சிக்கி சீரழிஞ்சி வந்திருக்கீங்கன்னு புரியுது..
என்ன இருந்தாலும் உங்க பிள்ளைங்களுக்காக கொஞ்சம் பொறுத்து பாருங்களேன்.என்னிக்காவது ஒரு நா உங்கள புரிஞ்சிக்காமலா போயிடுவாய்ங்க...
அவிங்க சைடுலயும் ஏதாவது நியாயம் இருக்கலாமில்லையா? ஒரு நாள்..அமைதியா இருக்கும் போது.. உங்க பிரச்சனையை பேசிப்பாருங்களேன்..(பேசும் போது குறை சொல்லாதிங்க....அவுங்க பேசும் போது இடைமறிக்காம கேக்கனுங்க. அப்பத்தேன் அவிங்க பிரச்சனையும் புரியும்.).
[ தப்பாயிருந்தா திட்டாதிங்க.. எனக்கு அப்பிடி அனுபவமில்லை,அனுபவப்படவும் .. விரும்பலைங்க...]
[ரொம்ப சீரியஸா வந்திருக்காரு.. மொக்க போட்டா கோவிச்சுக்குவாருல்ல..]
மாமியாரையும் வாழ்த்தணும்ற நல்ல எண்ணங்களுக்கு நன்றி. நடைமுறைப்படுத்தினால் நலமாக இருக்கும். மருமகள்கள் மாமியாருக்கு வாழ்த்து சொல்வார்களா ? அவ்வாழ்த்து உடடுகளின் னுனியிலிருந்து வருமா அல்லது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருமா ? மருமகன்கள் எளிதாக சொல்லி விடுவார்கள்.
// மருமகன்கள் எளிதாக சொல்லி விடுவார்கள்.//
வாங்க சீனா சார் நீங்க நம்ம கூட்டணில சேந்ததுக்கு நன்றிகள்..ஹிஹி..
ரசிகன் - நம்ம கூட்டணி என்னைக்குமே பலம் வாய்ந்தது தான்.
அடப்பாவமே இபப்டி வேற ஒரு பதிவு வந்துச்சா...ஆஹா..
சீனா, ரசிகன்
நான் மனசார தான் மாமியார வாழ்த்தினேன், இது நாள் வரைக்கும்(17 வருஷம்)மாமியாருக்கோ இல்லை நாத்தனார்களுடனோ(5) ஒரு சிறு மனக்கசப்பு கூட வந்ததில்லை...
உதட்டில் இருந்து அல்ல, உள்ளத்தில் இருந்து தான் இந்த வாழ்த்து...:-))
மங்கை - உள்ளம் பூரிக்கிறது - Depth of Heart லேந்து வாழ்த்துகள் - Not from the tips of lips - வாழ்க வாழ்க - கொடுத்து வைத்த மாமியார்
வாங்க மங்கை அக்கா..
// நான் மனசார தான் மாமியார வாழ்த்தினேன், இது நாள் வரைக்கும்(17 வருஷம்)மாமியாருக்கோ இல்லை நாத்தனார்களுடனோ(5) ஒரு சிறு மனக்கசப்பு கூட வந்ததில்லை...//
ஆஹா.. நாங்க உங்களை சொல்லலிங்க அக்கா.. நீங்க இவ்வளவு சீரியஸ்ஸா வாக்குமூலம் குடுத்து இருக்கீங்களே..உங்களை பத்தி எங்களுக்கு தெரியாதா?.. மாமியார்களுக்கு வாழ்த்து சொல்லனுமின்னு எங்களுக்கு மொதல்ல சொல்லி குடுத்த்தே நீங்க தானே..
[ஆனாலும் 5 நாத்தனார்கள்.. நீங்க ரொம்ப பொறுமைசாலிதான் அக்கா..ஹிஹி..]
சீனா சார்,என்னாங்க சார் இது?..
மங்கை,
உள்ளம் பூரிக்கிறது
ஏதோ பழைய படங்கள் பேர் மாதிரி இருக்கிறது..
Depth of Heart
tips of lips
ஏதோ இங்கிலீஸ் படம் பேர் மாதிரி இல்ல?.
கொடுத்து வைத்த மாமியார்
ஆமாம் இது இனிமே வரப்போர படமா?..ஹிஹி..
ஆக மொத்ததுல ,ஏதோ சீடி கடையில படம் தேடிக்கிட்டே பின்னூட்டம் எழுதியிருக்கீங்க சரியா?..ஹிஹி..
மனிரத்தினம் படமுன்னாக்கா சாருக்கு ரொம்ப புடிக்குமோ?..ஹிஹி..(அடிக்காதிங்க.. அடிக்காதிங்க..).
என் மாமியாரும் எனக்கு இன்னொரு அம்மாதான் அவங்களுக்காக ஒரு வலை விரிப்பது தப்பே இல்லை.
ரசிகன் பக்கம் நிறைய விஷயங்கள் கொட்டி கிடக்கிறது நிதானமாக மேயணும்.அப்புறமா நல்ல அசை போடணும் ....இனி தொடர்ந்து உங்கள் பதிவில் கிளுக்குகிறேன்.
//மகளுக்கு சூப்பரா இல்லன்னாலும் , சாப்புடற அளவாவது சமைக்க கத்து தரனும்//
நச்சுனு சொன்னப்பு!
சூப்பரு!
வாங்க goma.. மொதல் முறையா வந்திருக்கீங்க.. நல்வருகை..
// // என் மாமியாரும் எனக்கு இன்னொரு அம்மாதான் அவங்களுக்காக ஒரு வலை விரிப்பது தப்பே இல்லை.//
சரியா சொன்னீங்க.. உங்க இன்னொரு அம்மா நிச்சயம் குடுத்து வைச்சவங்கதான்...(நாஞ்சொல்லரத்து கொத்து சாவிய இல்லை..ஹிஹி..).
// இனி தொடர்ந்து உங்கள் பதிவில் கிளுக்குகிறேன்.//
ஆனாக்கா அடிக்கடி சமயம் கெடைக்காத போது நெறய மொக்கை பதிவுகளா போடுவேனே.. நீங்க நிச்சயம் கிள்ள மட்டுமில்லை ஓங்கி கொட்டவும் வேண்டிவருமுங்க.. ஹிஹி...
நானும் உங்க வீட்டுக்கு வந்து அடிக்கடி லொல்லு பண்ணுவேன். நட்புக்காக கொஞ்சம் பொறுத்துக்கோங்களேன்..ஹிஹி..
வருகைக்கும் ,பாராட்டுக்கும் ரொம்ப நன்றிகள்..
ஆஹா.. டிரிம்ஸ் மாம்ஸ்..வாங்க..நீங்க நியுயார்க்குக்குல்ல போயிருந்தீங்க..நானும் உங்க நியுயார்க் அனுபவ பதிவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன்..
//மகளுக்கு சூப்பரா இல்லன்னாலும் , சாப்புடற அளவாவது சமைக்க கத்து தரனும்//
// நச்சுனு சொன்னப்பு!//
ஏன் யார்கிட்டையாவது மாட்டிக்கினீங்களா?..ஹிஹி.:D..சேஃபுக்கு எதுக்கும் நாமளும் சமைக்க கத்துக்கிறது நல்லதுதான்.:)
சப்போர்ட்டுக்கு ,பேச்சுலர் சங்கத்து சார்புல ரொம்ப நன்றிகள் மாம்ஸ்...
என் மாமியார், கொத்துச் சாவியை ,நான் கொத்தாமலேயே, கொத்து கொத்தாய் என்கிட்டே கொடுக்க ரெடிதான் .நாந்தான் வேணாம்னுட்டேன் .எதுக்கு வம்பு, நாளைக்கு என் "இன்னொரு மகள்" வந்து சொந்தம் கொண்டாடி..அம்மன் கொண்டாடி மாதிரி ஆடி கொத்துச் சாவியைக் கொண்டாடின்னு கொத்தப் போறா...தேவையா எனக்கு.
// என் "இன்னொரு மகள்" வந்து சொந்தம் கொண்டாடி..அம்மன் கொண்டாடி மாதிரி ஆடி கொத்துச் சாவியைக் கொண்டாடின்னு கொத்தப் போறா...தேவையா எனக்கு.//
ஹா..ஹா.. கோமதி.. நல்லா யோசிக்கிறீங்க.. இப்பிடியே எல்லாரும் யோசிச்சாக்கா.. ரொம்ப ..நல்லாயிருக்குமுங்க...சூப்பர் மருமகள்தான் நீங்க..
ஹெலோ என்ன இது பிண்ணுட்டம் எல்லாம் காபி பேஸ்ட் பன்னி ஒரு பதிவா
நடக்கட்டும் நடக்கட்டும்
//
மங்கை said...
நான் மனசார தான் மாமியார வாழ்த்தினேன், இது நாள் வரைக்கும்(17 வருஷம்)மாமியாருக்கோ இல்லை நாத்தனார்களுடனோ(5) ஒரு சிறு மனக்கசப்பு கூட வந்ததில்லை...
உதட்டில் இருந்து அல்ல, உள்ளத்தில் இருந்து தான் இந்த வாழ்த்து...:-))
//
நம்பிட்டோம்
அகில உலக தமிழ் ப்ளாகர்ஸ் பேரவை
மங்களூர் கிளை
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)
காரணம் கேட்டீங்கன்னா...நான் பதிவை இடம் மாத்தினேன் அது கூடவே கமெண்ட்ஸும் வருமா வராதான்னு தெரியாம ...முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா காபி பேஸ்ட் பிரஷ்ன்னு போய்ட்டேங்கோ.எல்லாம் நன்மைக்குதாங்கோ.[என் பதிவு முளைச்சு மூணு இலை கூட விடலீங்க]
// மங்களூர் சிவா said...
ஹெலோ என்ன இது பிண்ணுட்டம் எல்லாம் காபி பேஸ்ட் பன்னி ஒரு பதிவா
நடக்கட்டும் நடக்கட்டும்//
நேரமில்லைன்னாக்கா வேற என்னா செய்யரதுங்க? G3 த்தேன் . .ஹிஹி..
//அகில உலக தமிழ் ப்ளாகர்ஸ் பேரவை
மங்களூர் கிளை
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)//
கத்தருலயும் ஒரு கிளை தொவங்கிடலாமா?..ஹா..ஹா..
// goma said...
காரணம் கேட்டீங்கன்னா...நான் பதிவை இடம் மாத்தினேன் அது கூடவே கமெண்ட்ஸும் வருமா வராதான்னு தெரியாம ...முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா காபி பேஸ்ட் பிரஷ்ன்னு போய்ட்டேங்கோ.எல்லாம் நன்மைக்குதாங்கோ.[என் பதிவு முளைச்சு மூணு இலை கூட விடலீங்க]//
வாங்க கோமதி , யாருக்கு சொல்லறீங்கன்னு புரியல்லைன்னாலும்.. அந்த பெட்காஃபி மேட்டரு சூப்பருங்கோ..(பேஸ்ட் பிரஷ்க்கு முன்ன காப்பி குடிச்சா பெட்காப்பி தானுங்களே..)..
நகைச்சுவைக்காகவே பதிவு தொவங்கியிருக்கீங்க..நிச்சயமா..மகிழ்ச்சிக்காக நெறய பறவைகள் வந்து சேரும் ஆலமரமா. தழைக்க நண்பர்களின் சார்பில வாழ்த்துக்கள்...
mamiyara valtha sonna onnu valthanum ille summa irukkanum.
Athukkaga MANALKAYIRU s.v.sekar mathri kandeeshanlampodapdathu
வாங்க புதுகைத்தென்றல்.. நல்வருகை..பேரே நல்லாயிருக்கே..(நாங்கூட புதுவை தென்றல் எங்க ஊரோன்னு நெனச்சிட்டேனுங்க..)
mamiyara valtha sonna onnu valthanum ille summa irukkanum.
Athukkaga MANALKAYIRU s.v.sekar mathri kandeeshanlampodapdathu//
ஹா..ஹா.. கல்யாணத்துக்கப்பறம்தான் ஆண்களுக்கு பேச சுதந்திரமில்லை.. கல்யாணத்துக்கு முன்னாடியாவது கொஞ்சம் பேசிட்டுப்போறோமுங்க.. மன்னிச்சி விட்டுடுங்க சார்...
மறக்காமல் என்னோட பேரை போட்டதற்க்கு, தோழனுக்கு முதலில் மிகவும் நன்றிகள்.இந்த வாய்ப்பையும் பயன் படுத்திக்கொண்டு என் வாழ்த்தையும் பதிவு செய்கின்றேன்.
// "என்னோட வருங்கால "இன்னொரு அம்மாவுக்கு" எனது "இனிய மாமியார் தின வாழ்த்துக்கள்"//
இரட்டை ரிப்பீட்.
கூடவே இல்லாமல் தள்ளியிருந்த மாமியார்களை இன்னொரு அம்மாவாக
கொண்டாடலாம். ஆனால் கூடவேயிருந்து குடும்பங்களை குழப்பிய மாமியார்களை என்ன செய்வது? நான் என் மாமியாரை கணவரின் அம்மா என்ற அளவில் நல்லபடியாகவே கவனித்து...என் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக செயல்பட்டிருக்கிறேன் என்று தைரியமாக சொல்வேன். ரசிகன்! எல்லோரையும் நன்றாக உசுப்பிவிட்டீர்கள்!!
உங்கள் 'பத்து கட்டளைகள்' சூப்பர்.
//பிரியமுடன் பிரித்தி said...
மறக்காமல் என்னோட பேரை போட்டதற்க்கு, தோழனுக்கு முதலில் மிகவும் நன்றிகள்.இந்த வாய்ப்பையும் பயன் படுத்திக்கொண்டு என் வாழ்த்தையும் பதிவு செய்கின்றேன்.
// "என்னோட வருங்கால "இன்னொரு அம்மாவுக்கு" எனது "இனிய மாமியார் தின வாழ்த்துக்கள்"//
இரட்டை ரிப்பீட்.//
வாங்க பிரித்தி..எப்படியிருக்கிங்க.. படிவு போடப்போறேன் ,எல்லாரும் வாங்கன்னு சொன்னிங்க.. ஆளையே காணோம்...
இப்படித்தான் சொல்லாம கொள்ளாம போறதா:P
வருகைக்கு நன்றிகள்...
//
நானானி said...
கூடவே இல்லாமல் தள்ளியிருந்த மாமியார்களை இன்னொரு அம்மாவாக
கொண்டாடலாம். ஆனால் கூடவேயிருந்து குடும்பங்களை குழப்பிய மாமியார்களை என்ன செய்வது? நான் என் மாமியாரை கணவரின் அம்மா என்ற அளவில் நல்லபடியாகவே கவனித்து...என் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக செயல்பட்டிருக்கிறேன் என்று தைரியமாக சொல்வேன். ரசிகன்! எல்லோரையும் நன்றாக உசுப்பிவிட்டீர்கள்!!
உங்கள் 'பத்து கட்டளைகள்' சூப்பர்.//
ஒரு தைரிய மருமகளா நட்ந்துக்கிட்ட உங்களை உண்மையிலேயேயே பாராட்டனுமுங்க.. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்..
// Anonymous said...
:D//
இந்த சிரிப்புக்கு அர்தமென்னன்னு தெரியாட்டியும்..ஒரு தாங்க்ஸ் சொல்லிக்கறேன்.. :))))))
Post a Comment