Friday, November 16, 2007

திருடனுக்கு தேள் கொட்டினாக்கா எப்பிடியிருக்கும்..?





அப்பிடி போடு அறுவாள...

தனக்கு வந்தாதானே தெரியும் கஷ்டமும்,நஷ்டமும்...,திருடனுக்கு தேள் கொட்டினாக்கா எப்பிடியிருக்கும்..?

என்னாச்சி, ஒரே பழமொழியா கொட்டுதேன்னு யோசிக்கிறிய்ங்களா?..
நடந்த விசயம் அப்பிடியாப்பட்ட விசயமாச்சே..

நம்ம "நீல குறுக்கு" புகழ் (Blue crass ம்பாங்களே..) பிரியங்கா , அதானுங்க.. அடிக்கடி பிராணிகள் பாதுகாப்புக்கு போராட்டம் நடத்தி மனுஷங்கள வதைப்பாய்ங்களே.. அவிங்களேதேன்..

இப்ப டில்லில குரங்குகள் எண்ணிக்கை ரொம்பவும் பெருகிடுச்சி.(நா.. நம்ம அரசியல்வாதிகளை சொல்லலீங்கோ..)
வீடு ,ஆஃபிஸ் இன்னு எல்லா இடத்துலயும் பூந்து ஒரே அட்டகாசம்..,இவிங்க வீடு மாடில காய வைச்ச துணிகள அவிங்க வீட்டுல,அவிங்க விட்டு துணிகள இவிங்க வீட்டு மாடிலையும் போட்டு ,குடும்பத்துல கொழப்பத்த உண்டாக்கிக்கின்னு இருக்குதுங்க.. கவர்மெண்டு ஆபிசுல கூட பகல்ல நிம்மதியா தூங்கக்கூட(?) முடியாம ஆஃபிஸ்ரெல்லாம் கஷ்ட்டபடராய்ங்க..

ஆனாக்கா இந்த அக்கா.. இதெல்லாம் பத்தி கண்டுக்காம.. குரங்குகளுக்கு எதிரா முனிசிபாலிட்டி ஏத்தாவது நடவடிக்கை எடுத்தாக்கா.. ஒடனே போராட்டந்தேன்ன்னு சொம்மா மெரட்டிக்கினு இருந்தாங்கல்ல...அதுவும் "குரங்குகள் ரொம்பவும் சாதுவானவை குழந்தைகள் மாதிரி"ன்னு அதுங்களுக்கு சர்ட்டிபிக்கேட் சர்வீஸ் வேற.. (பெருகிவரும் வெறி நாய்களை குறைக்க நடவடிக்கை எடுத்த போதும் , முழுசா.. முட்டுக்கட்டை போட்டு விளம்பரம் தேடிக்கனதும் இவிங்கத்தேன்.)

சோனியாவோட மகளாச்சே.., அதனால முனிசிபாலிட்டியும் குரங்காட்டிகள டிஸ்மிஸ் செஞ்சிட்டு , குரங்குங்க கூட பேச்சு வார்த்தை (?)நடத்த டிரைனிங் எடுக்கப்பட்ட.."லங்கூர் "குரங்க (படம் பார்க்கவும்..) அப்பாயிட் செஞ்சிது..

குரங்கு எண்ணிக்கைய குறைக்குறதுக்கு பதிலா..யாராவது வீட்டுக்குள்ள குரங்க்கு வந்துடுச்சின்னு கம்லெயின்ட் செஞ்சாக்கா,குறைஞ்ச பட்சம் ஒரு வாரத்துக்குள்ளையோ(?),பத்து நாளுக்குள்ளை அங்க போயி அத வெரட்டரதுதான் திட்டமாம்...

இது ஒரு கொழப்பம் என்னான்னாக்கா.. விடுகள பர்மனன்டா ஆக்ரமிச்சி டேரா போட்ட குரங்குகள விரட்ட போன நம்ம லங்கூரும் குஷியாயி ,அதுங்க கூட சேந்து ஆட்டம் போட்ட கதையெல்லாம் உண்டு..(மத்தவங்களுக்காக ,அதுங்களுக்குள்ளையே சண்ட போட்டுக்க அது ஒன்னும் தமிழ்நாட்டு குரங்கு இல்லையே..)..

இன்னா செய்யரத்து.?. எதாவது செஞ்சாக்கா இந்தம்மா பேஜார் பண்ணுமோன்னு கிறுக்கு புடிச்சி அலைஞ்சிக்கிட்டிருந்த.. முன்சிபாலிட்டிகாரங்க வயத்துல பால்,டிக்காஷன்,சீனி யெல்லாம் கலந்து வார்க்கர மாதிரி ஒரு சம்பவம் நடந்துடுச்சி...

இத்தன நாளும் நடுத்தர மக்களோட வீட்டுல டாண்ஸ் ஆடிக்கினிருந்த ஒரு குழந்தை (முன்னோர்தேன்....)நம்ம தலைவிய பாத்து நன்றி சொல்லிட்டு போலாமுன்னு நேத்திக்கி..அவிங்க வீட்டுக்கு (பிரியங்கா தனது கணவர் பற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுடன் வசித்து வரும் டில்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களா..) போயிருக்கு...(தினமலர் செய்தி)
அத நம்மாளு தப்பா புரிஞ்சிக்கிட்டு அலறியடிச்சிக்கின்னு வெளிய ஓடிவந்துட்டாய்ங்களாம்..
அத்தோட மட்டுமில்ல..
திருடனுக்கு தேள் கொட்டி.., அவன் நம்மல எழுப்பி உரிமையோட மருந்து வாங்க்கிட்டு வர சொல்லர கணக்காக்கா..
நேரா குடும்பத்தோட போயி முனிசிபாலிட்டில கம்லெய்ன்ட் குடுத்துட்டாய்ங்க...
ஓஹோ உங்க வீட்டுக்கு குழந்த வந்திருக்கா?..பீடிங் பாட்டிலுல பாலெல்லாம் குடுத்தீங்களா? ன்னு அவிங்க கிட்ட நேரா கேக்க முடியுமா?
ஒடனே.. நம்ம .லங்கூராரோட முனிசிபாலிட்டி காரங்க.. பிரியங்கா வீட்டுக்கு போயிருக்காங்க...(நன்றி சொல்ல இருக்குமோ?..) அதுக்குள்ள நம்ம ஹீரோ எஸ்கேப்..

முனிசிபாலிட்டிகாரங்களூக்கு ஒரே சந்தோஷம்.. இனிமே.. குரங்க்குகள் பெருக்கத்த குறைக்க நடவடிக்கை எடுத்தாக்கா இந்தம்மா வாய தொரப்பாங்கங்கரீங்க?.

இனிமே..வேற ஏதாவது.. பிராணிகளால பொது மக்களுக்கு கஷ்டம் வந்தாக்கா.. நடவடிக்கை எடுக்கரத்துக்கு முன்னாடி.. நம்ம பிரிங்கா மேடம் வீட்டுக்குள்ள ஒன்னு ரெண்டு பிராணிகள ஓட்டி விட்டாக்கா..
நடவடிக்கை எடுக்க சொல்லி மேலிடத்திலயிருந்தே நேரா பர்மிஸன் வந்துடுமில்ல.. இந்தம்மாவும் சைலண்டா இருப்பாய்ங்கள்ல..

(இந்த வம்புக்காகத்தேன்ன். பிரியங்காவும் சிம்லா பக்கம் ஒரு பெரிய பங்களா வாங்கரத்தா ஒரு நியுஸ்.. ஏன்னாக்கா பிராணிகள் அதிகம் இல்லாத குளிர் பிரத்தேசத்துல ஜாலியா இருந்துக்கின்னு.. அதுங்களுக்கு ஆதரவா நெறய போராட்டம் நடத்தலாமே.. நேரடியா கஷ்ட்டப்படுரது மக்கள்ஸ் தானே ).

எது எப்பிடியோ,அவிங்க லொல்லுல கடுப்பாயிபோயி ,வீட்டுக்குள குரங்க வெரட்டி விட்ட அந்த யாரோ ஒரு புண்ணியவான டில்லி முனிசிபாலிட்டிகாரங்க..நன்றியோட ரகசியமா பரிசு குடுக்க தேடரதா ஒரு நியுஸ்..
அது நீங்களாயிருந்தாக்கா.. ஒடனே ஓடிப்போயி.. வாங்கிக்கோங்க..

31 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

Anonymous said...

நான் அவனில்லை..ஹிஹிஹி..

Anonymous said...

நான் அவனில்லை..ஹிஹிஹி..

said...

//இந்த வம்புக்காகத்தேன்ன். பிரியங்காவும் சிம்லா பக்கம் ஒரு பெரிய பங்களா வாங்கரத்தா ஒரு நியுஸ்.. ஏன்னாக்கா பிராணிகள் அதிகம் இல்லாத குளிர் பிரத்தேசத்துல ஜாலியா இருந்துக்கின்னு.. அதுங்களுக்கு ஆதரவா நெறய போராட்டம் நடத்தலாமே.. நேரடியா கஷ்ட்டப்படுரது மக்கள்ஸ் தானே//

ROFL! சும்மா நச்சுனு சொன்னீங்க!!

said...

/அதானுங்க.. அடிக்கடி பிராணிகள் பாதுகாப்புக்கு போராட்டம் நடத்தி மனுஷங்கள வதைப்பாய்ங்களே.. அவிங்களேதேன்..//
;)

said...

//நான் அவனில்லை..ஹிஹிஹி..//
அவனா நீ??????

said...

திருடனுக்குத் தேள் கொட்டினாலும் ,போலீஸ்காரனுக்கு தேள் கொட்டினாலும் ஒரே மாதிரிதான் வலிக்கும்.
இருந்தாலும், நம்ம வடக்கத்தி அமலாம்மா ,நீல குறுக்கு பிரியங்காம்மாவுக்கு ,கொஞ்சம் அதிகப்படிதான்.குரங்குதான் எனக்கு பிடிச்ச "மனுஷன்னு" "நீலக்" கண்ணீர் வடிச்சுட்டு மக்கள் குமுறலில் குளிர் காயிரது என்ன நியாயம்.அதான் அந்த யாரோ ஒரு ஆபத்பாண்டவன் அழகா பிரச்சனைக்கு தோள் குடுத்து தேள் விட்டிருக்கிறார்.

said...

நன்றி சொல்லப் போன நம் மூதாதையருக்கு ரெண்டு வடை மாலை ஒரு சீப்பு பழம்,500கிராம் வெண்ணை அனுப்பியிருக்கிறேன்.அவரிடம் சேர்ப்பித்ததற்கு அக்னாலேஜ்மெண்ட் கைநாட்டு பெற்று அனுப்பிவைக்கவும்.

Anonymous said...

naanum avanillaingoo..

Anonymous said...

// இவிங்க வீடு மாடில காய வைச்ச துணிகள அவிங்க வீட்டுல,அவிங்க விட்டு துணிகள இவிங்க வீட்டு மாடிலையும் போட்டு ,குடும்பத்துல கொழப்பத்த உண்டாக்கிக்கின்னு இருக்குதுங்க.//

ஹாஹாஆஆஆ .சூப்பரு.

Anonymous said...

அங்கே குழந்தையை தூளியில் போட்டுவிட்டு தாய் நிம்மதியாய் தூங்கக்கூட முடியவில்லை என்று கேள்விப்பட்டேன்.ஒரே குரங்குகள் தொந்தரவாம். துன்பம் எல்லாம் சாதாரணமானவர்களுக்கு மட்டும்.

said...

//ஏன்னாக்கா பிராணிகள் அதிகம் இல்லாத குளிர் பிரத்தேசத்துல ஜாலியா இருந்துக்கின்னு.. //

அய்ய்ய்ய்ய்ய்ய.... குளுர் ஊரா இருந்தாலும் பிராணிகளுக்குக் கொறவா என்ன?

ஜிகே, பூனி, மில், ஆலி & முள்ளி இவுங்களோடெல்லாம் நாம் படறபாடு எனக்குத்தானே தெரியும்? :-))))

ஆமாம்...இந்தம்மாவோட ச்சின்னம்மாதானே நீலக்குறுக்கு?

said...

இதே போல் மழையும் வெள்ளமும் புயலும் 'ரொம்ப முக்கியமானவர்கள்' அதாங்க VVIP-க்கள் இருக்கும் பக்கம் வீசினால் என்னாகும்? அவர்களெல்லாம்
பள்ளிக்கூடங்களிலும் மண்டபங்களிலும் ஒதுங்கினால்...நாம் போய் ரொட்டியும் துணிமணிகளும் கொடுத்தால் எப்படியிருக்கும்? நல்ல கற்பனை! அல்லே?

said...

ஆகவே திருடனுக்கு தேள் கொட்டினால்
திருட்டுப்புத்திதான் வரும்!சரிதானே? ரசிகன்?

said...

// கவர்மெண்டு ஆபிசுல கூட பகல்ல நிம்மதியா தூங்கக்கூட(?) முடியாம ஆஃபிஸ்ரெல்லாம் கஷ்ட்டபடராய்ங்க..//
ஹா..ஹா. ரொம்ப பெரிய கஷ்டம்தான்.

said...

// (நா.. நம்ம அரசியல்வாதிகளை சொல்லலீங்கோ..)//
இது மெகா மெகா உள் குத்தே.ஹா..ஹா.:):D

said...

// Anonymous said...

நான் அவனில்லை..ஹிஹிஹி..//
நீங்க அவனில்லைன்னாக்கா வேற யாருன்னு சொல்லியிருந்தா நல்லாயிருக்குமில்லை..ஹிஹி..
வருகைக்கு நன்றிகள் அனானியாரே..

said...

Dreamzz said...
//ROFL! சும்மா நச்சுனு சொன்னீங்க!!//
வாங்க மாம்ஸ் வாங்க.. பாராட்டுக்கு ரொம்ப நன்றிகள்.

said...

//நான் அவனில்லை..ஹிஹிஹி..//
அவனா நீ??????//
அப்பிடி கேளுங்க ..இப்பிடி கேக்க எனக்கு தோனாம பூடுச்சே....ஹா..ஹா..சூப்பர்..

said...

// திருடனுக்குத் தேள் கொட்டினாலும் ,போலீஸ்காரனுக்கு தேள் கொட்டினாலும் ஒரே மாதிரிதான் வலிக்கும்.//

வாங்க கோமதி வாங்க.. போலிஸிக்கு தேள் கொட்டினாக்கா கத்த முடியும்.. திருட வந்த திருடனுக்கு தேள் கொட்டினாக்கா கத்தக்கூட முடியாது.மாட்டிக்குவானே..ஹிஹி..
// நம்ம வடக்கத்தி அமலாம்மா//
//குரங்குதான் எனக்கு பிடிச்ச "மனுஷன்னு"//
// "நீலக்" கண்ணீர் வடிச்சுட்டு மக்கள் குமுறலில் குளிர் காயிரது என்ன நியாயம்.//
// தோள் குடுத்து தேள் விட்டிருக்கிறார்.//
எப்பிடிங்க உங்களுக்கு பேசும்போதே இப்பிடி ரசனையா தோணுது.. நல்லாயிருக்கு உங்க வார்த்தை ஹாஸ்யம்..அருமை.

said...

.
// அவரிடம் சேர்ப்பித்ததற்கு அக்னாலேஜ்மெண்ட் கைநாட்டு பெற்று அனுப்பிவைக்கவும்.//

ஆஹா.. அவர் வாயால , என்னோட உடம்புல அக்னாலேஜிமெண்ட் வாங்க வச்சிடுவிங்க போலயிருக்கே.. ஹா..ஹா..
பின்னூட்டத்தையும் ரொம்பவே ரசிச்சேனுங்க கோமதி..

said...

// Anonymous said...

naanum avanillaingoo..//

மறுபடியும் யாருப்பா அது..நம்ம டிரிம்ஸ் மாம்ஸ் கேட்ட கேள்விய படிச்சப்பறமுமா?..ஹிஹி..

said...

// rakavan said...

// இவிங்க வீடு மாடில காய வைச்ச துணிகள அவிங்க வீட்டுல,அவிங்க விட்டு துணிகள இவிங்க வீட்டு மாடிலையும் போட்டு ,குடும்பத்துல கொழப்பத்த உண்டாக்கிக்கின்னு இருக்குதுங்க.//

ஹாஹாஆஆஆ .சூப்பரு.//

வருக..ராகவன் நன்றிகள்..
ஆமா உங்களுக்கும் ரொம்ப அனுபவமோ?..

said...

// வடமங்கலம் C.மோகன் குமார் . said...

அங்கே குழந்தையை தூளியில் போட்டுவிட்டு தாய் நிம்மதியாய் தூங்கக்கூட முடியவில்லை என்று கேள்விப்பட்டேன்.ஒரே குரங்குகள் தொந்தரவாம். துன்பம் எல்லாம் சாதாரணமானவர்களுக்கு மட்டும்.//

உண்மையிலேயே தீர்வு காணவேண்டிய பிரச்சனைதானுங்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றீகள்.
நம்புவோம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று..

said...

வாங்க..வாங்க..துளசி அக்கா..புது வீட்டுல.. இப்ப எப்படியிருக்கு.?..
// ஜிகே, பூனி, மில், ஆலி & முள்ளி இவுங்களோடெல்லாம் நாம் படறபாடு எனக்குத்தானே தெரியும்? :-))))//
ஆமா இவிங்கள்ளாம் யாரு ? உங்க ஃபிரண்ட்ஸா?.. அம்புட்டு கஷ்ட்டம் படுத்தராய்ங்களா?ஹிஹி..
வந்ததுக்கும் விபரத்துக்கும் நன்றிகள் அக்கா..(கேட்டுத்தெரிஞ்சிக்கிறேன்..)ஹுஹி

said...

// நானானி said...

இதே போல் மழையும் வெள்ளமும் புயலும் 'ரொம்ப முக்கியமானவர்கள்' அதாங்க VVIP-க்கள் இருக்கும் பக்கம் வீசினால் என்னாகும்? அவர்களெல்லாம்
பள்ளிக்கூடங்களிலும் மண்டபங்களிலும் ஒதுங்கினால்...நாம் போய் ரொட்டியும் துணிமணிகளும் கொடுத்தால் எப்படியிருக்கும்? நல்ல கற்பனை! அல்லே?//

நிஜமாவே.. நடக்கவேண்டிய காரியம்.. உங்க கற்பனையை ரொம்பவே ரசித்தேனுங்க நானானி..

said...

// நானானி said...

ஆகவே திருடனுக்கு தேள் கொட்டினால்
திருட்டுப்புத்திதான் வரும்!சரிதானே? ரசிகன்?//
சரியா சொன்னிங்க.. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகளுங்க.. நானானி.

said...

// vijay said...

// (நா.. நம்ம அரசியல்வாதிகளை சொல்லலீங்கோ..)//
இது மெகா மெகா உள் குத்தே.ஹா..ஹா.:):D//

வாங்க விஜய் வாங்க.. ஏதேது என்னிய வம்பில மாட்டி விட்டுடுவிங்க போல..ஹிஹி..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

said...

hello ரசிகன் என்ன hi hi hi எதுக்கு அத்தனை hi hi hi
போலீஸ்காரன் திருடனைப் பிடிக்க ஒழிஞ்சிருக்கப்போ தேள் கொட்டினா கத்த முடியுமா?என்ன சார் சின்ன புள்ளத் தனமா இருக்கு.நியாயம்னா அது எல்லாருக்கும் பொதுவா இருக்கணும் ....தேளோட கொடுக்குக்கு முன்னாடி போலீஸ்காரனும் ஒண்ணுதான் திருடனும் ஒண்ணுதான் புரிஞ்சுக்கோங்க .ரெண்டு மூணு நாளா கண்ணகி சிலையை ஒரு பத்துவாட்டியாவது கிராஸ் பண்ணியிருப்பேன்...அதோட தாக்கம்தான் இது .அதை நிவர்த்தி பண்ண விவேகாநந்தர் புத்தர் சிலைன்னு போய்ட்டு வரேன் .வர்..ர்ர்...ர்ர்..ர்ட்..ட்ட்..ட்டா

said...

// goma said...

hello ரசிகன் என்ன hi hi hi எதுக்கு அத்தனை hi hi hi //
hihihi..வாங்க கோமதி .
எல்லாம் நம்ம நண்பர்களுக்கு ஒரு ஸ்பெசல் வெல்கம்மாயிருக்கட்டுமேன்னுதேன்..ஹிஹி...
// தேளோட கொடுக்குக்கு முன்னாடி போலீஸ்காரனும் ஒண்ணுதான் திருடனும் ஒண்ணுதான் புரிஞ்சுக்கோங்க //
புரிஞ்சிக்கிட்டேன்..புரிஞ்சிக்கிட்டேன்...

// கண்ணகி சிலையை ஒரு பத்துவாட்டியாவது கிராஸ் பண்ணியிருப்பேன்...அதோட தாக்கம்தான் இது .அதை நிவர்த்தி பண்ண விவேகாநந்தர் புத்தர் சிலைன்னு போய்ட்டு வரேன் .வர்..ர்ர்...ர்ர்..ர்ட்..ட்ட்..ட்டா//

ஆஹா .. அப்ப ஒங்களுக்கு எதாவது கோவமிருந்தாக்கா..என்னிய ஒரு காய்ச்சு காய்ச்சிடரதுன்னு முடிவே பண்ணிட்டீங்களா..ஹா..ஹா..
நல்லவேளை .. அந்த நாளு தலை சிங்கம் சிலை பக்கம் நீங்க இன்னும் போகலைன்னு நெனைக்கிறேன்..

said...

//அது நீங்களாயிருந்தாக்கா.. ஒடனே ஓடிப்போயி.. வாங்கிக்கோங்க..//

ஒருவேளை அந்த குசும்பு புடிச்ச ஆள் நீங்களாக இருக்குமோ? என்னே தன்னடக்கம்.hihi :))
பதிவும்,அதற்க்கு எடுத்துக்கொண்ட பொருளும் ரசிக்கக்கூடியதாக உள்ளது.well done rasigan.

said...

//ஒருவேளை அந்த குசும்பு புடிச்ச ஆள் நீங்களாக இருக்குமோ?//
அடப்பாவமே..என்னிய ஒரேயடியா தீத்துகட்டிடறதுன்னு இருக்கீங்களா?.
//என்னே தன்னடக்கம்.hihi//
என்னிய ரொம்ப புகழாதிங்களேன்..ஹிஹி....

//பதிவும்,அதற்க்கு எடுத்துக்கொண்ட பொருளும் ரசிக்கக்கூடியதாக உள்ளது.well done rasigan.//
ரொம்ப நன்றிகள் பிரித்தி..பாராட்டுகளுக்கு..