Monday, October 15, 2007

பிராணிகளிடத்தில் இரக்கம் தேவையா?-ஒரு சொந்த அனுபவம்

மக்கள்ஸ் இதைப் படிங்க
 
15 oct 2007 dinamalar -ல் வந்த சேதி
5 வயசு ம்ட்டுமே ஆன சிறுமியை 10 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கடித்து குதறிய சம்பவம். பாவம் அந்த பிஞ்சு இன்னும்கூட கண்ணில் பயம் போக வில்லை.போட்டோவ பாருங்க...







கஷ்டம் புரிய வேண்டுமா?. உங்களை 10 வெறிநாய்கள் கடித்து குதறுவதாக கற்பனை செய்து பாருங்கள்.
ஏண்டா டேய்,ஏதோ பொழுது போகலன்னு உன் பதிவுக்கு வந்தா நாய் கடிக்கும்ன்னு பயம்புறுத்தற?.என நீங்கள் கேக்கரது பிரியுது [புரியுது].உங்களுக்கே இவ்வளவு பயம்னாகா, அந்த குழந்தைக்கு?.


               இன்று மட்டும் அல்ல.நிறைய தடவை இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.இன்னும் ஏன் இதுக்கு ஒரு தீர்வு செய்ய முடியல .. ?
முனிசிபாலிட்டி-யை கேட்டாகா.... நாய்களை ஒழிக்க "பிராணிகள் வதை தடுப்பு சங்கங்கள்" எதிர்ப்பு -இன்னு சொல்ராங்க.... அவங்க சொல்லிட்டு கார்ல போய்டுவாங்க.. கஷ்டப்படறது /கடிபடறது நடக்கர நடுதர மக்கள்ஸ் தானே.இதில வேற நம்ம ஊருல ஆஸ்பத்திரில நாய் கடிக்கு போதுமான மருந்து இல்லையாம்.டாக்கிடரே [டாக்டர்] நாட்டு வைத்தியம் செய்யச் சொல்றாரமாம்.

                   நாய்க்கு குடும்ப கட்டுப்பாடு செஞ்சு எதிர்காலத்துல நாய் தொகைய கொறைக்கிரது[லொல்..லொல்..] இருக்கட்டும்.....நிகழ்காலத்தில நாங்க கடி பட்டுதான் ஆவனுன்னு சொன்னா...பிராணிகள் வதை தடுப்பு சங்கங்கள் நடத்துரவங்க என்னிய பொறுத்த வரை "பிராணிகள்" தான்.அவர்களுக்கு எதிரா "மனித வதை தடுப்பு சங்கம் ஆரம்பிக்க யோசனை இருக்கு..[இது வேறயா?..]

     
                எதுக்கு சொல்லரன்னாக்கா... எனக்கே இதுல சொந்த அனுபவம் இருக்கு [மத்தவங்களுக்கு என்ன வாடகை அனுபவமா இருக்கு?]என்னன்னா...[என் பார்வை விட்டத்தை பார்க்க.. உடையாத ஒரு டாட்டாய்ஸ் கொசு வத்தி சுருள் ..வேண்டாம்..வேண்டாம்..டாட்டாய்ஸ் வெரி ஸ்லோ...திபாவளி சங்குசக்கரம் என் முகத்துக்கு நேரா [நெருப்பு பதித்த வைக்காமல் தான்]சுத்துவதாக கற்பனை செய்யுங்கள்].

             அது நான் கத்தாருக்கு வருவதற்க்கு முன் துபாயில் திரவியம் தேடிய காலம்[கி.பி 2004/ஸ்ரீ.பி 0024 (ஸ்ரீதர் பிறந்த பின் என படிக்கவும்.)ஹிஹி..].
லீவு நாளில் யாரேனும் ஒரு நண்பனின் ரூமில் எல்லாரும் தங்கி கும்மாளம் செய்து,நாங்கள் போன பின் அவனுடைய மற்ற ரூம்மேட்களிடம் திட்டு வாங்க செய்வதில் ஒரு சுகம்.[என் ரும் முறை வரும் போது [கம்பெனி ரூமாதலால்)பெறும்பாலும் தலைமறைவாகிவிடுவேன்.நானாகொக்கா?].
அன்று மாட்டிய நண்பன் நாங்கள் போட்டசத்தத்துக்கும்[பாட்டும்பாங்களே] கூத்துக்கும்[டான்ஸ்-ம்பாங்களே] ஒன்னும் சொல்லாததால் ,"என்ன தொந்தரவு செஞ்சாலும்,அமைதியா இருக்கானே, இவன் ரொம்ப நல்லவன் டா..இன்னு ஃப் பீல் பண்ணி வெளியே வரும் போது மணி 12-30.[ரூமை கிளின் செய்யவும்,உறக்கம் கலைந்த பக்கத்து ரூம் பெரிசிடம் திட்டு வாங்கி முடிக்கவும் நிச்சயம் விடிந்து விடும் அந்த "அன்பே சிவம்" நண்பனுக்கு.]
             

               இரவு ஜில்லென்ற காற்று.அரட்டைக்கு பின் யாருமில்லா அமைதி.மேகத்தில் ஒளிந்து ஒளிந்து என்னை சைட் அடிக்கும் நிலா (?)[பொறுத்துக்கோங்க வயசுக் கோளாறு..].எனக்கு பாரதி,ஷ்ல்லி போல உண்ர்வு வரவே [போதாத நேரம்] இயந்திர வாழ்க்கைக்கு நடுவே இயற்கையை ரசிக்க கிடைத்த வாய்ப்பாக நினைத்து...
டாக்ஸி யை விட்டு நடக்க ஆரம்பித்தேன்-5 km மட்டுமே .மனதில் தோன்றிய பாடலை முணுமுணுத்தவாரே குளிரில் நடந்த சில நிமிடங்களில் தூரத்தில் பத்து பதினைந்து நாய்கள் [சரியா சொல்லு பத்தா?பதினைந்தா?-என்ன என் நிலம ஒனக்கு நக்கலா-நா நாய எண்ணினாகா,அதுக என்னோட எலும்பை எண்ணாம இருந்தா பத்தாது?].எதுல விட்டேன்.?.. ம்..பத்து பதினைந்து நாய்கள் ஒன்றை ஒன்று கடித்து விளையாடிக் கொண்டு இருந்தன.நமக்கு இந்த விளையாட்டெல்லாம் வாணமுன்னு.சுத்தி பாத்தா யாருமில்ல..பாலைவனத்தில் ரோடு மாத்திரம் லைட் வெளிச்சத்துல கோடாக தெரிஞ்சிச்சு...வானத்த பாத்தா நிலா மிஸ்ஸிங்.. சே.. நிலாவாயிருந்தாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.பிரச்சனைன்னு வரும்போது.... பதற்றத்தில்ல என்னென்னவோ தோனுதுல்ல....
 
              திரும்பி போகலாமுன்னா...நைட் ரொம்ப தூரம்.. அதுவுமில்லாம அந்த ரூம் நண்பந்தான் என்னோட அலும்பு தாங்காம..சைலண்டா இருந்து,நாய்களை அரேன்சு செய்துட்டானோன்னு ஒரு சந்தேகம்..[நாங்கதா சீனா தானா 001 இல்ல...]..
            எத்தனை சதிகளுக்கும் கலங்க மாட்டான் இந்த புளி.. சாரி.. புலி. கடிக்கிற நாய் குலைக்காதாமே .இந்த எல்லா நாயும் குலைக்குதே.
என என் ஏட்டறிவை நம்பி[வேற வழியில்ல].முகத்துல தைரியமா ஆக்ட் கொடுத்துக்கிட்டு [பயந்தாதான் நாய் துறத்துமின்னு பாட்டி சொன்னாங்கல்ல] மெதுவா நடத்தேன்.என் "லப் டப்" எனக்கே கேட்டது.நாய்கள் ரோட்டின் அந்தப் பக்கம் இருந்தன.அவற்றை கடக்கும்வரை
ஒன்னும் ஆகல... எனக்கு கொஞ்சமா நம்பிக்கை வந்தது.எனக்கு கராத்தாவில் பிரவுன் பெல்ட்,இப்போ இடுப்பிலே பிளாக் லெதர் பெல்ட் .நான் 6+1 அறிவு(?) படைத்த மனிதன் இந்த நாய்கள கண்டு பயப்படுவதா?..என லேசா..அட லேசாதான் ஒரக்கண்ணால பாத்தேன்..அங்க ஒரு நாய் மட்டும் என்னய ஓரக்கண்ணால பார்த்துகினுருக்குது...
                எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய் விட்டது.நான் ஓடவில்லை என நாய்க்கு தெரிவிக்க இன்னும் மெதுவா நடத்தேன்.எனக்கு சம்பந்தமில்லாம எல்லார் ஞாபகமும் வந்தது,ஊருல அம்மா,அப்பா..தம்பி..அப்புறம் இன்னும் யாரு?எங்கன்னே தெரியாத என் தேவதை [என் உட்பி தாங்க].

ஆனா அந்த நாயுக்கும் எனக்கும் எந்த ஜென்மத்து பகையோ.. திடீரென குறைத்தது.அதை கேட்டதும் என்னை அறியாமல் என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு [சும்மா அதிருதில்ல....அதிருதில்ல....].
அத பாத்ததும் மத்த நாய்களுக்கும் நான் நிஜத்தில் பயப்படும் ரகஸியம் தெரிஞ்சு போயிருக்க வேண்டும்.அவ்வளவு தான் ஓனாய்களுக்கு இடையே சிக்கிய மான் போலானது என் நிலமை.[இப்பத்தான் புலி.சிங்கம்ன்ன..?..-ok வில்லங்கள் ரவுண்டு கட்டும் தமிழ் பட ஹிரோ(?) போலானேன்].
matrix படத்தில் வருவது போல கேமிரா என் பின்னாலிருந்து சுற்றுவதாக கற்பனை செய்து கொள்ளவும்.
 
            நாய்கள் ரோட்டை தாண்டி ஓடி வரும் சமயத்தில் திடிரென என் மொபைல் போன் அடித்தது.அதில் லைட் பிரகாசமாக [நெருப்பு மாதிரி]அனைந்து அனைந்து எரிந்ததும், பேட்டா ராப் பாட்டு சத்தமும் நாய்களை பயபடுத்தியிருக்க வேண்டும்.அவை ஒரு வினாடி திகைத்து நின்று,பின் ஓடத் துவங்கின..[என் அதிருஷ்டம் துபாய் நாய்கள் பயந்தாகோளிகள்]-(அப்ப நீ..)
war of the worlds- படத்தில் வேற்று கிரகவாசிகளை அழிக்க வழி கண்டுபிடித்த அமேரிக்க ஜனாதிபதி மனநிலையிலிருந்தேன் நான்.ஓடும்போது நின்று திரும்பிப் பார்த்த ஒன்றிரண்டு நாய்களையும் மொபைல் போன் ஜ இயக்கி லைட் ஜ ஆட்டி ஆட்டி காட்டி ஓட வைத்தேன்.இப்போது அங்கு நான் மட்டுமே.
மொபைல் call ஜ எடுக்காதது ஞாபகம் வர,recall செய்தேன்.அந்த ரூம் நண்பன் தான்.டேய் நீ தனியாக போனதாக சொன்னார்கள்.நீ உன் ரூமுக்கு போய் விட்டாயா என தெரிஞ்சிகத்தான் கூப்பிட்டேன் என்றான்.

அடேய் ..என் உயிர் காத்த நண்பா.. உன்னைப்போய் சந்தேகப்பட்டேனே.. டெலிபதியோ..எலிபதியோ.... சமயத்தில் காப்பாற்றினாயே.. என் நன்றி உணர்ச்சியில் பொங்க...ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க அவன் அங்கு விழிக்க..
ஒருவேளை அவன் அந்த சமயத்தில் எனக்கு கால் பண்ணாமல் இருந்தாலோ.. அல்லது நான் மொபைலை சைலண்ஸில் போட்டிருந்தாலோ..
என் கதி என்னவாகிருக்கும் ?..நினைக்கவே முடியவில்லை.

எனவே நம் ஊரில முனிஸிபாலிட்டி காரங்களுக்கு ஒரு ஜடியா..
வெறி நாய்களை கொல்லக்கூடாதுங்கறவங்களை ,அந்த நாய்களோடு ஒரு நாள்[big brothor program மாதிரி] அடைத்து வைத்தால் அப்புறம் இப்படி சொல்லுவாங்கங்கிறிங்க.....

வெறி நாய்களை கொல்வதன் மூலம் இது போன்ற அசம்பாவித சம்பவங்களிலிருந்து பொது மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறிர்கள்.
எனவே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல்,யாரை பற்றியும் பயமும் இல்லாமல்,கடமையை செய்யுங்கள்.

ஒரு நற்செய்தி : மற்ற மானில முனிஸிபாலிட்டி- கள் ஏற்கனவே இந்த கடமையை துவங்கி விட்டன.

33 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

இந்த 'நாய்'பதிவு (பதிவைத்தான் சொன்னேங்க) நல்லா இருந்துச்சு. சிரிச்சேன். என்னைக் கேட்டா வேலையத்துப் போய் இந்த நாய்ங்களைப் படைச்ச கடவுளைத்தான் (இருக்காரா என்ன) முட்டாள் என்பேன். தெருவெல்லாம் பசில அதுங்க அலையிற அலைச்சலைப் பாக்கிறப்போ கவலையா இருக்கும். இதுல என்ன விசேசம்னா தெருவுல இதுவரைக்கும் நல்ல ஜாதி நாய் எதையும் கண்டதில்லை. அதாவது அல்சேசன்,பொமரேனியன்,ராஜபாளையம் இந்த மாதிரி...அதெல்லாம் மீனும் பாலும் சாப்பிட்டு மெத்தைல தூங்குமாயிருக்கும். இதுலேர்ந்து நீங்க தெரிஞ்சுக்கிறது என்ன.... ஜாதிங்கிறது எல்லா ஜீவராசிகள்ளயும் இருக்குங்கிறதைத்தான...:) (என்னவொரு புரட்சிகரமான சிந்தனை)

said...

வாங்க தமிழ் நதி .நல்லா சொன்னிங்க...
வித்தியாசமான கோணத்துல சிந்திக்கிறிங்க.
நாங்கூட ஆரம்பத்துல என்னயதான் திட்டறிங்களோன்னு நெனச்சேன்.
இது உங்க வீடு மாதிரி,அடிக்கடி வந்துட்டுப் போங்க...

said...

//வானத்த பாத்தா நிலா மிஸ்ஸிங்.. சே.. நிலாவாயிருந்தாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்//

நான் எஸ் ஆவறதுல பெரிய ஆளு மாமா.

Anonymous said...

//ஓடும்போது நின்று திரும்பிப் பார்த்த ஒன்றிரண்டு நாய்களையும் மொபைல் போன் ஜ இயக்கி லைட் ஜ ஆட்டி ஆட்டி காட்டி ஓட வைத்தேன//

ஒரே சிரிப்புத்தான் போங்கள்.நல்ல வேளையாக நாயை துரத்தி பிடித்து கடிக்காமல் விட்டீர்களே.

said...

நாய்கிட்ட மட்ட்டுனது சரி, நரிகிட்ட மாட்டி இருக்கிங்களா?அது இன்னும் சிக்கல், தனி ஆளா இருந்து நரிகூட்டமா இருந்தா கும்மி அடிச்சிரும்,அப்பா ஒருதடவை மாட்டீருக்காரு.

எல்லா மிருகத்திற்கும் தீ என்றால் பயம்,சோ அப்பா பாக்கெட்ல இருந்த தீப்பெட்டில 4,5 குச்சிய மொத்தமா உரசி பத்த வெச்சிருக்காரு, எல்லா நரியும் ஓடிருச்சாமா(தம்மு அடிக்கறதுல இப்படி ஒரு நண்மையா?)

அடுத்து நரிகிட்ட மாட்டினா இத பண்ணுங்க மாமா

said...

ஜய்ய்ய்ய்ய்யா.ஜாலி.. நிலா குட்டி நம்ம வீட்டுக்கு வந்துடுச்சி....
அட அதுக்குள்ள நிலா பாப்பாவ காணாமே..?..

//நான் எஸ் ஆவறதுல பெரிய ஆளு மாமா.//

ஹா ஹா.... நன்றி மீண்டும் வருக...

said...

//நல்ல வேளையாக நாயை துரத்தி பிடித்து கடிக்காமல் விட்டீர்களே.//

வாங்க அனானி, உங்க ரிவெஞ்ச் ஜடியா எனக்கு தோனாம பூடுதே..
நீங்களும் அப்படி தான் செய்விங்களோ?..
நீங்க யாருன்னு தெரிஞ்சாக்கா ,உங்க கிட்ட ஜாக்கிரதையா இருந்துப்பேனுங்க...

சிலபேர் ஒரு முடிவோடதான் ரவுண்டு கட்டராங்கய்யா......உஷாருங்கோ......உஷாரு.
வருகைக்கு மிக்க நன்றி.

said...

//அடுத்து நரிகிட்ட மாட்டினா இத பண்ணுங்க மாமா//


தாங்கஸ். நிலா பாப்பா அட்வைஸ்படி ,இனி நான் வெளியே வெய்ட் மெஷினில் நின்னாக்கா... ஒரு "லைட்டர்" வெய்ட் கூடியிருக்கும்.

pin குறிப்பு:ஆனா.டெஸ்ட் பண்ண ,இங்க பாலைவனத்துல நரிய எங்கப்போயி தேடரதுன்னுதான் ஒரே கவலயாருக்கு.

Anonymous said...

நல்லாயிருக்குபா...
எனக்கு ஒரு சந்தேகம்.உங்க நண்பன் தான் நாயை அனுப்பிட்டு,என்ன ஆச்சின்னு தெரிஞ்சிக்க,நேரம் தெரியாமல் கால் பண்ணியிருப்பாரோ.?

Anonymous said...

என் கவலை என்ன என்றால் ..கடைசி வரை அந்த நாய் உன்னை கடிக்கலயே.

Anonymous said...

ethu nalla irukku

good comedy but with serious matter
really govt.ind has to deside something to stop this kind of dog bite issues.

said...

வருகைக்கு நன்றி கவிதா..ஒரு வேளை அப்படியும் இருக்குமோ?...

said...

//என் கவலை என்ன என்றால் ..கடைசி வரை அந்த நாய் உன்னை கடிக்கலயே.//

எம்மேல அப்படி இன்னா உனக்கு காண்டு...ஜென்ம பகை அந்த நாய்க்கும் எனக்கும் இல்ல.. உனக்கும் எனக்கும்ன்னு தோனுது.
ஆமா..அத்தன நாயயும் எங்க வாடகைக்கு வாங்கினிங்க?

said...

// really govt.ind has to deside something to stop this kind of dog bite issues.//

நல்லது தான சொல்றிங்க..உங்க பேர போடலாமில்ல..

said...

//ஓடும்போது நின்று திரும்பிப் பார்த்த ஒன்றிரண்டு நாய்களையும் மொபைல் போன் ஜ இயக்கி லைட் ஜ ஆட்டி ஆட்டி காட்டி ஓட வைத்தேன//

ஒரே சிரிப்புத்தான் போங்கள்.நல்ல வேளையாக நாயை துரத்தி பிடித்து கடிக்காமல் விட்டீர்களே.

//
நல்ல பதிவு.

பின்னூட்டங்களும் அருமை

said...

//

Anonymous said...
என் கவலை என்ன என்றால் ..கடைசி வரை அந்த நாய் உன்னை கடிக்கலயே.
//
அனானி ரசிகன் மேல ஏன் இவ்ளோ பாசம்?????

said...

//கி.பி 2004/ஸ்ரீ.பி 0024 (ஸ்ரீதர் பிறந்த பின் என படிக்கவும்.//

ஆகா...
இருக்குற காலண்டர் போதாதுன்னு இன்னொன்னா?
அப்ப ஸ்ரீ.மு-ல கலாச்சாரம், நாகாரிகம் எல்லாம் எப்படி இருந்திச்சின்னு ஆய்வு செய்து, அதுக்கும் ஒரு பதிவு போட்டுடுங்க :-)))

நல்லாத் தான் இருக்கு ஸ்ரீமு/ஸ்ரீபி!

said...

ஸ்ரீ.பி - ஸ்ரீ.மு - பெரிய ஆளுண்ணு நினைப்பா ?? இருக்கட்டும் இருக்கட்டும். அருமையான நகைச்சுவைப் பதிவு. பின்னூட்டத்திலே மற்ற பதிவர்கள் தூள் கிளப்பி இருக்காங்க.

செல் போனிலால் இப்படி ஒரு புதுமையான செயல் செய்ய முடியும் என்பதே புதுமையான செய்தி. நிலாவோ பெண்களோ சமயத்தில் ஓடிப் போக மாட்டார்கள். ஒளிந்து ரசித்துப் பார்ப்பார்கள்.

பதிவின் முக்கிய செய்தியான வெறி நாய்கள் கடித்த சிறுமியைப் பற்றிய எண்ணம் எல்லா பின்னூட்டப் பதிவர்களுக்கும் மறந்து போனது. அது உண்மைச் செய்தி - நகைச்சுவை அல்ல.

தொலைக்காட்சியில் அச்செய்தி ஒளி பரப்பானது. பார்க்கும் போதே யார் மீது கோபம் கொள்வது என்று தெரியாமல் உலகத்தையே சபித்தேன். அச்சிறு மலர் பட்ட பாட்டை எண்ணிப் பார்த்து மிகவும் வேதனைப் பட்டேன்.

கையாலாகாத்தனம். வேறு என்ன நம்மால் செய்ய இயலும்.

said...

ஹாய்,

இது நிஜமாவே ஒரு கொடுமையான விஷயம் தான். அந்த குழந்தையை பற்றி தற்போதைய தகவல் உண்டா?

//கொல்லக்கூடாதுங்கறவங்களை ,அந்த நாய்களோடு ஒரு நாள்[big brothor program மாதிரி] அடைத்து வைத்தால் அப்புறம் இப்படி சொல்லுவாங்கங்கிறிங்க.....//

இது கூட நல்ல ஐடியாவா தான் இருக்கு.

said...

ஹாய்,

//டாட்டாய்ஸ் வெரி ஸ்லோ...திபாவளி சங்குசக்கரம் என் முகத்துக்கு நேரா [நெருப்பு பதித்த வைக்காமல் தான்]சுத்துவதாக கற்பனை செய்யுங்கள்].//

ஹா ஹா ஹா ... சம காமடி போங்க.

said...

ஹாய்,

//எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய் விட்டது.//

உடனே அதுங்களோட ஒரு சமாதானா தூது விட்டுருக்கலாமே...

Anonymous said...

" வெறி நாய்களை கொல்வதன் மூலம் இது போன்ற அசம்பாவித சம்பவங்களிலிருந்து பொது மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறிர்கள்.
எனவே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல்,யாரை பற்றியும் பயமும் இல்லாமல்,கடமையை செய்யுங்கள். "

ROMBAUM SARIYAANA ADVICE.
PLEASE FORWORD THIS ADVICE TO MUNICIPAL PEOPLES.

said...

ரசிகன் நிஜமாவே ரொம்ப ரொம்ப ரசித்தேன்.

// நிகழ்காலத்தில நாங்க கடி பட்டுதான் ஆவனுன்னு சொன்னா...பிராணிகள் வதை தடுப்பு சங்கங்கள் நடத்துரவங்க என்னிய பொறுத்த வரை "பிராணிகள்" தான்.//

நானும் உங்க side தான்.

//யாரு?எங்கன்னே தெரியாத என் தேவதை [என் உட்பி தாங்க].//

அப்பறம் first , girls-i-angelனு சொல்லிட்ட தால ஆளு girls-i- மதிக்கரார்ன்னு நெணச்சா..
திடீருன்னு கவுத்துட்டிங்க்களே

//சே.. இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.பிரச்சனைன்னு வரும்போது....//

நல்லா தைரியமான உட்பி-yaa பாருங்க.

nice post-ya., man.. keep it up

said...

// "மனித வதை தடுப்பு சங்கம் ஆரம்பிக்க யோசனை இருக்கு..//

membership-ku-நானும் சேர வரேன்.

said...

ரொம்ப நன்றிங்க சுமதி..

அடிக்கடி வாங்களேன். நம்ம வீட்டுக்கு.உங்க கொலு விருந்து நல்லாயிருந்துது..

said...

// அனானி , "ரசிகன் "மேல ஏன் இவ்ளோ பாசம்?????//
வாங்க சிவா, நன்றி.
அப்பறம் ஒரு சந்தேகம்.நீங்க அந்த அனானி இல்லையே..ஹிஹி..

said...

//அப்ப ஸ்ரீ.மு-ல கலாச்சாரம், நாகாரிகம் எல்லாம் எப்படி இருந்திச்சின்னு ஆய்வு செய்து, அதுக்கும் ஒரு பதிவு போட்டுடுங்க//

நன்றி ரவி ..உடனே செஞ்சிரலாம்....[ஆமா..மக்கள்ஸ் மேல உங்களுக்கு இரக்கமேயில்லயா? ஹிஹி.. ]

said...

வாங்க சீனா ஜயா... வாங்க..
சொன்னாப்போல எல்லா பதிவயும் படிச்சு ,மறக்காம பின்னூட்டமிட்டதுக்கு மிக்க நன்றிகள்.[பின்ன அதுக்கு எதயும் தாங்குக் இதயமும்,கடல் போல பொறுமையும் வேனுமில்ல..]

said...

வாங்க பிரித்தி..

//நானும் உங்க side தான்//.thanks

ஜய்....ய்.யா,நானு தனியாளு இல்ல.. [அஜித் ஸ்டெயிலில் படிக்கவும்]


// "மனித வதை தடுப்பு சங்கம் ஆரம்பிக்க யோசனை இருக்கு..//

membership-ku-நானும் சேர வரேன்.

அடடா.. லேட்டயிடுச்சே. பிரித்தி மேடம்..
நா ..பதிவ போட்டு மக்கள்ஸ்ச கொடுமை படுத்தனுதால.. நமகெதிரா "மனிதவதை"தடுப்பு சங்கம் ஏற்கனவே தொடங்கிட்டாங்கலாமில்ல...

// நல்லா தைரியமான உட்பி-yaa பாருங்க.//
அறிவுரைக்கு நன்றிங்க.நிச்சயமா அப்பா ,அம்மாகிட்ட அப்படியே பாக்கச் சொல்லுறேன்.

said...

ஒரு சீரியஸ் ஆன விசயத்த காமெடி ஆக்கிட்டிங்க

said...

// பொறுக்கி said...
ஒரு சீரியஸ் ஆன விசயத்த காமெடி ஆக்கிட்டிங்க//

ஒங்க பேரோட சேத்து படிக்குபோது என்னிய திட்டற மாதிரியே இருக்கு.. பழக்கதோஷத்தால நகைச்சுவை கலந்துருச்சு.ஆனாக்கா.. விசயத்தின் கருத்து எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சில்ல...ஹிஹி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகளுங்க..

Anonymous said...

nice post,good.

said...

// Anonymous said...

nice post,good.//

நன்றிகள் நண்பரே..