Wednesday, May 14, 2008

வாழ்த்தலாம் .. வாங்க...என்னோட குட்டி ஃபிரண்டு ,வலையுலக அப்பாவி சிறுமி துர்கா தேவியாருக்கு இன்னிக்கு (15.05.08) ஜனன தினம்.அதாங்க பிறந்த நாள். பில்கேட்ஸ்லருந்து ,பில் கிளிண்டன் வரைக்கும் அம்மணிக்கு போன் செஞ்சு போன் எங்கேஜிடாவே இருக்கு..:P


சரி.. நம்மோட டியர் ஃபிரண்டுக்கு நாமளும் வாழ்த்து சொல்லலாமேன்னு நெனைச்ச போது, அம்மணிக்கிட்டேயிருந்து மிரட்டல்,யார்க்கிட்டயும் சொல்லப்டாது ,இது மலேஷிய ரகசியமாம்ல்ல...
கடைசி நிமிஷம் வரை சண்டைப் போட்டு சம்மதிக்க வைச்சாச்சு:P .ஆனா ஒரு கண்டீசன் .இது எத்தனையாவது பிறந்தநாள்ன்னு மறந்துடனுமாம்ல்ல...


நான் சந்தோஷிக்கும் ,சமயங்களில் பகிர்ந்து கொண்டு
நான் வேதனிக்கும் சமயங்களில் ஆறுதல் சொல்லி,
தோழமையில் எத்தனை சண்டைகள் வந்தாலும்
நட்பின் ஆழத்தை உணர்த்தவே அவைகளை உபயோகித்து ,
தனது மகிழ்ச்சிகளையும் ,வேதனைகளையும்,
வேறுபடுத்தாது என்னுடன் பகிர்ந்து கொண்டு,
என் கல்யாணத்துக்கு தான் பெண்பார்ப்பதாக
கலாட்டா செஞ்சுக்கொண்டு
ஒரு முழுமையான தோழமையை எனக்கு கொடுத்த
எனதருமை தோழி துர்காவிற்க்கு
நண்பனின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)Because it is your Birthday,
You get an extra hug,
You also are entitled to,
Another year of love.

Now when God first picked you out,
So many years ago,
He tucked an angel in your heart,
Before He let you go.

So, I see an angel looking back,
When I look into your eyes,
Your Birthday is a gift to me,
Your Birthday is my prize

Of course, I cannot match such gift,
By what I say or do,
But when I wish you Happy Birthday,

I AM THANKING GOD FOR YOU!
WISH YOU MANY MANY RETURNS OF THE DAY.
Happy birthday Durghaஅன்புடன் நண்பன்
ஸ்ரீ...Thursday, May 8, 2008

பொங்கும் காதலும், பொழியும் கவுஜையும்.:P..ஒரே ஒரு முத்தமிட்டு,
சந்தோஷத்தில் குதிக்காதே
,பூமி அதிருதுன்னு
கிண்டல் செய்கிறாய்.குதிப்பதா?
உன் முத்தத்தால்,
நான் மிதந்துக்
கொண்டல்லவா
இருக்கிறேன்.
உன் கவிதை
நன்றாகத்தான்
இருக்குடா என்கிறாய்,
அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி:P

என்னை பூதம்
என திட்டுகிறாயே
எனக்கு
சந்தோஷம்தானடி,
என் செல்ல
காதல் பிசாசே:Pபுவியீர்ப்பு சக்தி
பூமிக்கு உண்டு
என தெரியும்.புவி எதிர்ப்பு சக்தி
உன் கண்களில்
உள்ளதோ?
என் அம்முக்குட்டி


உன் கண்களைக்
கானும்போதெல்லாம்
மனம் மிதக்கத்
துவங்குகிறதேஉன் முகம்
கண்டால் மட்டும்
ஏனடி நான் இப்படி
உளருகிறேன்?

ஓ.; இவை
உன் கண்களா?
இல்லை
கண்”கள் ”ளா?

என்னைக்
காதலிக்கச் சொன்னால்
கற்றுக்கொடு
என்கிறாய்.
குருவிற்க்கு
மிஞ்சிய
சிஷ்யன்
ஆகிவிட்டேனோ?.

நான் காதலைக்
உணர்ந்துக்கொண்டதே
உன்னிடமிருந்துதானே.


மனம்
ஒரு குரங்கு
என்பது உண்மைதான்
உன் தொலைப்பேசிக்
குரலைக் கேட்ட
கணமே உன்மேல்
தாவி விடுகிறதே


நீ நகமாயும்,
நான் சதையாயும்
இருப்போம்
என்றாய்.

இப்போதுதான்
புரிகிறது,

என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.அன்பே எத்தனை நாள்
என்னை இப்படி
இயந்திரமாய்
வைத்திருக்கப் போகிறாய்?
ஒன்று நீ திருடிய
என் இதயத்தைக் கொடு .
இல்லையென்றால்
நஷ்ட ஈடாய் உன்
இதயத்தைக் கொடு
அடிப்பாவி..
ஏன் இந்த
கொலைவெறி?


காதலிச்சா

கவிஞனாகிடலாமாம்?
என்றேன்
அர்த்தத்தோடு

காதலில்
தோற்றால் கூட
மகா கவிஞனாகலாம்
என்கிறாய்
கிண்டலோடு.

இதென்ன?
எனக்கு பசிக்கவே
இல்லையே?

ஓ.
நீ அங்கு
உணவருந்திவிட்டாயா?
என் குட்டிம்மா..

நேற்று
உன் கனவில்
நான் வந்தேனா?

மறக்காமல் கேற்கிறாயே,
அறியாமல் பேசுகிறாயடி
என் செல்லம் ,
உன் நினைவுகள்
என்னைத் தூங்க
விட்டால்தானே
கனவு
காண்பதற்க்கு!!!


என் மனதை
திட்டம் போட்டு
திருடியவள் நீ.
நான் பொறுப்பில்லாம,
தொலைத்து விட்டதாய
அல்லவா குற்றம்
சாட்டுகிறாய்:Pஎத்தனை யோசித்தும்
விடை கிடைக்கவில்லை.
அதிகம் பேசுவது
உன் கண்களா?
இல்லை
உதடுகளா? என்று.

அன்று தடுக்கி
விழுந்தேன்
இன்றும்
எழவே இயலவில்லை.
என்னடா செல்லம்
விழிக்கிறாய்?. .
உன் கண்ணடி பட்டு,
உன்னுள் விழுந்த நான்.

முள்ளை
முள்ளால்தான்
எடுக்க வேண்டுமாம்.

உன் ஒவ்வொரு
கடைசி முத்தத்தால்
என்னுள் எழும்
பாதிப்புக்களை
சரி செய்ய,

தயவு செய்து
இன்னொரு முத்தம்
கொடுத்துவிடு கண்ணே.தூக்கம் வருதுன்னு
கொஞ்சலாய்
சோம்பல் முறிக்கிறாயே
என் மான்க்குட்டியே
இதைக் கண்டு
மொத்தமாய் என்
தூக்கம் போய் விட்டதை
நீ அறிவாயா?


இது நடக்குமாடா?
கேற்க்கிறாய்.
நான்
உன்னைக் காதலிப்பது
மட்டும் நடக்கும்
என்றா நினைத்திருந்தேன்?

அன்பே..
உன் அலைப்பேசி மேல்
எனக்கு பொறாமை.
அது
சிணுங்கும் போதெல்லாம்
உன் கன்னத்தில் வைத்து
சமாதானப் படுத்துகிறாயே:Pசகியே ,என்ன செய்கிறாய்?
ஓ.. தான்
தான் அழகு
என இறுமாந்திருந்த
அந்த கிளிக்கு பாடம்
புகட்டிக்கொண்டிருக்கிறாயா?

என் மனம் பறிக்கும் காதல்
,உயிர் வாங்கும் கண்கள்
கனவு கொடுக்கும் உதடுகள்,
எத்துணை ஆயுதங்களுடன்
என்னுடன் போரிடுகிறாய்?.
சந்தோஷமாய் சரணடைகிறேன்
என் தேவதையே.


என் கோபத்தை
உன் ஒற்றை
கொஞ்சலில் எளிதாய்
வீழ்த்துகிறாய்.

உன் ஒற்றைக்
கண்ணீர் துளியின்
வலிமையைத் தாங்கும்
வகையறியாமல்
தவிக்கிறேன் நான்.


புல்லட் புருப் ஆடைகள்
புவியெங்கும் கிடைக்கின்றன.
என் நெஞ்சைத்துளைக்கும்
உன் ஓரப் பார்வையை
தாங்கத் தான்
ஒருகவசம் எங்கு
தேடியும் கிடைக்கலையே
கவிதை எழுதி
கல்லடிபட்ட(:p) காயம்கூட
ஆறி விட்டதடி கண்னே
உன் கண்ணடி
பட்ட காயம்
இன்னும் ஆறவில்லையடி
நெஞ்சில்:Pபசியில்லாமல் புசிக்கிறேன்.
உணர்வில்லாமல் நடக்கிறேன்.
உறக்கமில்லாமல் கனவுக்காண்கிறேன்
அன்பே இன்னுமா புரியவில்லை?
உடன் நீயில்லாமல் தவிக்கிறேன்டி..

அன்பே எச்சரிக்கையாயிரு
,உன் வீட்டிற்க்கு
ஆட்டோ
அனுப்பியிருக்கிறார்களாம்.


என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு:P

Friday, May 2, 2008

ஜொள்ளுக்காதலும் , லொள்ளுக்கவிதையும்

தன்னிச்சையாய்
தொந்தரவு செய்யும்

என் விரல்களுக்காய்,
உன் வெட்கத்தை
காவல் வைத்தாயே.

பாவம்
உன் வெட்கத்திற்க்கு
கொஞ்சம் நேரமாவது
ஓய்வு கொடேன் என்றால்,


கோபத்தை துணைக்கு
அழைக்கிறாய்.

ச்சே,
ஒரு பிரைவசியே
இல்லாம போச்சு.
என் உள்ளும் அகமும் ஒடுங்கி
ஜென்ம சாபல்யம்
அடைந்துக் கொண்டிருக்கிறேன் .

மடியிருத்தி தலைக் கோதும்
உன் விரல்கள்.
கலிங்கத்து (காதல்) பரணி
பாடலாமடி உனக்கு.

ஒற்றைக் கண்ணீர் துளியில்
என்னை முழுமையாய்
வீழ்த்தியதற்க்கு.
என்னுடன்
பேசாதே
என்கிறாய்.

எனக்குள்ளேயே
பேசிக் கொள்ளும்

தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?


நானும் நீயும்
வேறல்லன்னு

நீதானே சொன்னாய்?


மூன்று என்றேன்.
முடியாது ஒன்றுதான்
என்கிறாய்.

மூன்று மணிநேரம் இருக்கே,
ஒரே முத்தம் தானா?
என்றேன்.

இப்போ ஆரம்பித்தாலும்
அந்த ஒரு முத்தத்தை
மூன்று மணி நேரத்தில்
முடித்து விடுவாயா?
இருட்டும் முன்
எனக்கு வீட்டுக்கு
போகனும்ல்ல என்கிறாய்.
கள்ளி.

உனக்கென்ன?
நான் பார்க்க
கடல் மணலில் கால்புதைய
ஓடி விளையாடுகிறாய்.


அந்த காலடித்தடங்கள்
என் மனதில் அல்லவா
கனமாய் பதிகின்றன.

நீ கவிதை சொன்னாய்
நான் ஏற்றேன்.

நான் காதல் சொன்னால்
ஏனடி முறைக்கிறாய்?
நான் கவிதையை
காதலிக்கிறேன் என்றேன்.
நல்லதா போச்சு,
அதையே போய் கட்டிக்கோ
என்கிறாயே,..
நீயும் ஒரு கவிதைதான்
மறந்துவிட்டாயா?:P
காற்றில் பறக்கும்

உன் ஒற்றை முடி,
என்னை தூங்க
விடாமல்
சாட்டையாய்
சுழற்றியடிக்கிறதே

பக்கத்தில் அமர்ந்தால்
இடையைக்
கிள்ளக்கூடாது

விரல்காட்டி எச்சரிக்கை.


சரி ஒன்னும் செய்யலை
போதுமா? என்றால்,
நிஜமாவா?
என்கிறாய் கண்களில் ஏக்கத்தோடு ,

செய்
என்கிறாயா?

வேண்டாம்
என்கிறாயா?


விட்டில் பூச்சி,
விளக்கை சுற்றி
அதிலேயே இறந்து போகுமாம்
தெரியுமா? என்கிறாய்.
நான் உன்னை
சுற்றுவது போலவா?
என்றால் ஏனடி
முறைக்கிறாய்?
என் உறக்கமில்லா
இரவுகளின் இருளில்
கனவுகளின் மேல் பயணங்கள்.
முழு நிலவாய் உன் நினைவுகள்.

எனக்கு
ஆடத்தெரியாதே
என்கிறாய்,


இதைச் சொல்லும்போதும் ,
உன் உதடுகளின்
நடனத்தை
என்னவென்று சொல்வது?

உள்ளிருந்தே
என் மனதை

ஆட்டுவிக்கும்
உனக்கு

ஆடத்தெரியாதென்பதை

எப்படி நம்புவது?கண்ணே!!!
கவிதைக்கு
மட்டுமல்ல

காதலுக்கும்
பொய்
அழகுதான்.


ஏய்
நீ ரொம்ப
அழகாயிருக்கே:P


எனக்கான
இன்றைய முத்தங்களை
பாக்கி வைக்காமல்
கொடுத்துவிடு .

கடன் வட்டி
விகிதம் கூட்டலாம்ன்னு

சிதம்பரம் அறிக்கை
விட்டிருக்கார்.

கடல் அழகு,
நுரை அழகு,
அலை அழகு,
எதுடா ரொம்ப அழகு?
கேற்கிறாய் ,

என்னிய கேட்டா,
இவற்றை நீ
சொல்லும் விதமே

தனி அழகுதானடி
என் செல்லக் குட்டி,
வெல்லக்கட்டி:P:))))).

உன் கண்ணில்
படபடப்பு,
பார்வையில்
தவிப்பு,
என் கண்களை நோக்கிய
ஆழமான பார்வை.
புரிகிறது,
உனக்கு முன்னால்,
என் முதுகுக்கு பின்னால்
அழகாய்
ஒரு ஃபிகர் ஜாக்கிங்.


நிச்சயமாய் பார்க்க மாட்டேன் .
அவள் உன் முதுகை
தாண்டும்வரை...:P
எனக்கு
ஒரு உண்மை
தெரிஞ்சாகனும்.


உன்
ஒற்றை
நெற்றி
முத்தத்தில்


எத்தனை முறை
என்னைக்
கொல்லுவாய்?

கோபப்படும்போது
அழகாய் இருக்கிறாய்ன்னு
சொன்னதற்காக
அடிக்கடி கோபப்படும் நீ,

முத்தம் கொடுக்கும்போது
ரொம்ப ரொம்ப அழகாய்
இருக்கிறாய்ன்னு சொன்னா
மட்டும் முறைப்பதெதற்க்கு?

எல்லாத்தையும்
தப்புத்தப்பா செஞ்சு
வைக்கறதே உனக்கு
வேலையா போச்சு:P

உன்மீதான என்காதலின்
வெளிப்பாடுகளை
ஷார்ட் டேர்ம் மெம்மரியிலும்,

நான் செய்த

சிறு சிறு தவறுகளை
லாங் டேர்ம் மெம்மரிலும்
போட்டு வைத்திருக்கிறாயே?:Pஉயிர் வாழ
ஆக்ஸிஜன் தேவை
என்கிறார்கள்.
நான் ”நிஜமாய்”
வாழ நிச்சயமாய்
நீ தேவை.


ஏழு மாசமாய் தான்
(யாருப்பா அது? ஏழரைன்னு சொல்லறது?:P)
நமக்குள் பழக்கம்
என்கிறாய்.
உன்னை காண
ஏழு ஜென்மமாய்
காத்திருந்ததெல்லாம்
எந்தக் கணக்கில் சேர்ப்பது?

எனக்கு
கவிதை சொல்லத்
தெரியாது என்கிறாய்.
என்னை திட்டுவதாய்
நினைத்துக்கொண்டு
நீ சொல்பவற்றை
எந்த வகையில் சேர்ப்பது
நான்?எல்லா கிரகங்களும்

சூரியனை சுற்றுவதன்
காரணம்
விஞ்ஞானம்
சொல்லியிருக்கு.
ஆனா
எல்லா கிரகம்புடிச்ச
பயலுங்கல்லாம்
உன்னை சுற்றி
என்னை ஏன்
கடுப்பேத்தறாங்கன்னு
புரியல.த.செ.வி.


குளோபல் வார்னிங்கு : ஆபிஸ்ல ஆணி அதிகமாயிருக்கே,கொஞ்ச நாள் பதிவுக்கு லீவு கொடுக்கலாம்ன்னு நெனைச்சு,ஓய்வு சமயத்துல யார் வீட்டுக்கு போனாலும் கவிதை எழுதி வைச்சிருக்காங்க.ஒரு பயமே இல்லாம போச்சு.இதையெல்லாம் நிறுத்திக்கலைன்னா என்னோட இந்த மாதிரி கொடுமைகள் தொடரும்ன்னு கடுமையான எச்சரிக்கை விடுக்கறேன்:P

கூகுள் ரீடர்/சப்ஸ்கிரிப்ஷன் மெயில்ல படிக்கும் நண்பர்கள் பின்னூட்டத்துல போட்டுத் தாக்க https://www.blogger.com/comment.g?blogID=46781201932577998&postID=4627355087152970733என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்