Monday, December 3, 2007

தண்ணீரை கேட்டாக்கா விஷம் கொடுக்குது கேரளா....

சென்னைக்கும் வருது ஆப்பு... 

கொடிய ரசாயன கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக மாறிய காவிரி ஆறு * தொட்டாலே விரல் புண்ணாகி அழுகும் ஆபத்து * சென்னை நகர மக்களும் பாதிக்கப்படும் அபாயம் .கொடிய ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் குப்பைத்தொட்டியாக காவிரி ஆறு மாறி வருகிறது.

கர்நாடக மாநிலம் குடகுமலையில் காவிரி உற்பத்தியாகிறது. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது. மேட்டூர் அணையில் சங்கமித்து, ஈரோடு, திருச்சி. தஞ்சை வழியாக தமிழகத்தில் 303 கி.மீ., துாரம் பயணம் செய்து வங்கக் கடலில் கலக்கிறது. தமிழகத்தில்16.5 லட்சம் ஏக்கர் பரப்பு காவிரி தண்ணீரால் பாசனவசதி பெறுகிறது. சென்னை உட்பட பல வடமாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் காவிரி நிறைவேற்றுகிறது.

மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக வெளியேறும் நீர், காவிரியில் கலந்து செல்கிறது. ஆற்றங்கரையில் மால்கோ அலுமினிய தொழிற்சாலை, மக்னீசியம் சல்பைட் உரத் தயாரிப்பு சிட்கோ தொழிற்கூடங்கள், கெம்பிளாஸ்ட் ரசாயனத் தொழிற்சாலை, மேட்டூர் அனல்மின் நிலையம் ஆகியவை உள்ளன. தொழிற்கூடங்களில் இருந்து வெளியேற்றும் ரசாயனக் கழிவு முழுவதும் காவிரி ஆற்றில் கலந்து மாசு ஏற்பட்டது. இது தொடர்ந்தது. இப்போது புதிய பிரச்னை ஒன்று ஏற்படுகிறது. வெளிமாநிலங்களில் இயங்கும் ரசாயனத் தொழிற்சாலைகள், கொடிய விஷத்தன்மையுள்ள ரசாயனக் கழிவை காவிரியில் வெளியேற்றி வருகின்றன.

கேரளா மாநிலம், கலமச்சேரி ரசாயனத் தொழிற்சாலையில் இருந்து ரசாயனக் கழிவை ஏற்றி வந்த டேங்கர் லாரி மேட்டூர் அருகே காவிரியில் கொட்டியதை பொதுமக்கள் கண்டுபிடித்தனர். 16 டன் ரசாயன கழிவு டேங்கர் லாரியில் இருந்தது. லாரி டிரைவர் கூத்தப்பன், கிளீனர் செல்வம் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காவரி டெல்டா விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. கேரளா, கலமச்சேரியில் `கொச்சின் மினரல்ஸ் ரூட்டெய்லி லிமிடெட்' என்ற பெயரில் ரசாயன தொழிற்சாலை செயல்படுகிறது. கடல் மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயாராகிறது. இதில் ரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பின் போது கழிவாக பெர்ரிக் குளோரைடு, பெர்ரஸ் குளோரைடு ஆகியவை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. பெர்ரிக் குளோரைடு காகித ஆலையில் உபயோகிக்க கொண்டு செல்லப்படுகிறது. பெர்ரஸ் குளோடுரை அபாயகர கழிவுப் பொருளாகிறது. இந்த கழிவில் ஹெக்ஸா வேலண்ட் குரோமியம், காட்மியம், ஈயம், ஆர்க்கானிக், மேங்கனீசு போன்றவை உள்ளன. இந்த கழிவை மிகவும் பாதுகாப்பாக சுத்திகரிக்க வேண்டும். அதற்கு செலவு அதிகம். இதனால், தொழிற்சாலை நிர்வாகம் இந்தக் கழிவை முறை கேடான வழிகளில் அழிக்கிறது. அதாவது, ஆறுகளில் கலந்து விடுவதுதான் முக்கிய விதிமீறல். இந்த கழிவுகள், தொடர்ந்து காவிரியாற்றில் கலந்து விடப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் ஏற்றிவரப்பட்டு, கள்ளத்தனமாக காவரியில் திறந்து விடப்படுகிறது. இந்த ரசாயனக் கழிவு கலந்த நீரை பருகினால், அதில் உள்ள மெர்குரி, நரம்பு மண்டலத்தை செயலிழக்க செய்யும்; காட்மியம் புற்றுநோயை உருவாக்கும்; ஈயம் மூளை வளர்ச்சியை பாதிக்கும். ரசாயனக் கழிவை கையால் தொட்டால் விரல் புண்ணாகி, அந்த பகுதி அழுகி உதிர்ந்து விடும் ஆபத்து உள்ளது.

காவிரியில் 16.2 கோடி லிட்டர் கழிவுநீர் கலப்பு : காவிரி நீர்வடிப்பகுதியில் ஆயிரத்து 100 தொழிற்சாலைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 16.2 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதில், 870 லட்சம் லிட்டர் நேரடியாக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 640 லட்சம் லிட்டர் கழிவு நீரும், திருச்சி மாவட்டத்தில் 57.64 லட்சம் லிட்டர் கழிவு நீரும் காவிரியில் கலக்கிறது என தமிழக அரசு கடந்த 2005ம் ஆண்டு வெளியிட்ட தமிழ்நாடு சுற்றுசுழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீர் வாழ் உயிரினங்களே வசிக்காத அபூர்வ காவிரி :மேட்டூர் 16 கண் மதகு முதல் காவிரி ஆற்றில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் மூன்று கி.மீ., துாரத்திற்கு, ஆற்றில் உள்ள பாறைகளில் ரசாயனம் கலந்து மஞ்சள் நிறமாக உள்ளது. செம்மண் நிறத்தில் தண்ணீர் உள்ளது. இந்த பகுதியில் மீன், தவளை, பூச்சிகள் போன்ற எந்தவித நீர் வாழ் உயிரினங்களும் வசிக்கவில்லை.

இருதய நோயால் மக்கள் பாதிப்பு : மருத்துவமனைகள் அதிகரிப்பு : காவிரியில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரில் இருந்து கிளம்பும் நெடியால் தங்கமாபுரிபட்டணம், பெரியார்நகர், சேலம் கேம்ப் பகுதியில் வசிக்கும் மக்கள் குடல், தோல், இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஈஸ்னோபீலியா என்ற நோய் தாக்கி ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். ரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேட்டூர் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுத் தலைவர் ஜெயராமன் வேதனை தெரிவித்தார்.மேட்டூரில்தான் நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம். இதனால் மேட்டூரை குறி வைத்துதான் மருத்துவமனைகள் துவங்கப்படுகின்றன. மேட்டூரில் இருந்து குஞ்சாண்டியூர் வரை மட்டும் 65 சிறிய மற்றும் பெரிய மருத்துவமனைகளும் 68 மருந்து விற்பனை கடைகளும் உள்ளன.

காவிரி கரையில் புற்று நோய் கிராமம் : காவிரி கரையில் மேட்டூர் அடுத்துள்ளது நாட்டமங்கலம் கிராமம். இக்கிராம மக்கள் காவிரி நீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர். கிராமத்தில் வசித்த துரைசாமி (52), சொகுசு (65) சின்னப்பிள்ளை, ரங்கசாமி (55), சம்பு (52), அலமேலு (40), சீனிவாசன் (60), பழனியப்பன் (65), அய்யாவு (50), அர்த்தனாரி (52) உட்பட 20க்கும் மேற்பட்டோர் புற்று நோய் தாக்கி பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்குள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காவிரி ஆற்று நீரே காரணம் கிராம மக்கள் கூறுகின்றனர்.

நன்றி தினமலர்..


அடப்பாவிங்களா?.. நீங்கள்ளாம் இந்தியர்கள் தானே?..
ஏற்கனவே இந்தியாத்தேன் ஏமாந்த இளிச்சவாய் நாடுன்னு நெனச்சுக்கிட்டு உலக நாடெல்லாம், நச்சுக்கழிவுகளை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றன. பல நாடுகளின் எல்லைகளிலேயே நிராகரிக்கப் பட்ட, இரசாயன கழிவு கப்பல்கள் இந்தியாவிற்க்கு தான் உடைக்க அனுப்பப்படுகின்றன.

இப்ப நாட்டுக்குள்ளயே தமிழன்தான் இளிச்சவாயன்னு நெனக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களா?..

இப்படித்தேன் சில மாசங்களுக்கு முன்னாடி .. ஆபத்தான மருத்துவ கழிவுகளை (ஆப்பரேஷன் செய்து நீக்கப்பட்ட பகுதிகள், ரத்தக்கறையுடன் கூடிய பஞ்சுபொதிகள் )ஒரு கேரளலாரி தமிழக பகுதிகளில் கொட்டி சென்றதைப் பற்றி படித்தேன்.

எத்தனை மாதங்களாக இப்படி நடக்கின்றன என்று புரிய வில்லை..

தாகத்துக்கு உபரி தண்ணீர் கூட தராமல் வீம்புபிடிக்கிறது.
திருச்சி விமான நிலையத்துக்கு வர வேண்டிய திட்டங்களை கேரள உயர் அதிகாரிங்க தடைசெஞ்சது, பாலக்காடு கோட்டத்து கட்டுப்பாட்டிலிருந்த ,நம்ம மாநில ரயில்வே நிலையங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட அவர்கள் செய்து தராமல் லாபத்தை மட்டும் சுரண்டியதால் ,தனி ரயில்வே கோட்டம் அமைத்த போது கூட தமிழக பகுதிகளை பங்கு கேட்டது எல்லாம் கூட மன்னிக்கலாம்.. ஆனாக்கா இப்ப நடந்துக்கிட்டிருக்கிறது கீழ்தரமான செயல்..

தமிழ் நாட்டுலயிருந்து அரிசியையும் , காய்கறிகளையும் பெற்றுக்கொண்டு ,நமது தலைமுறைகளுக்கு நஞ்சூட்டிக்கொண்டிருக்கும் செயலை கேரள அரசு தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையா?..இல்லை தன்னோட பகுதில கொட்டாம இருந்தா போதுமின்னு விடுகின்றதா?..அங்க கொட்ட பயந்து தமிழ் நாட்டு எல்லைக்குள் வந்து ரசாயன,உயிரி கழிவுகளை கொட்ட தமிழ்நாடு என்ன குப்பைத்தொட்டியா?

தனது பகுதியிலுள்ள இரசாயன தொழில்சாலைகளூக்கு ,கேரளாவில் ரசாயன கழிவை கொட்டினால் தண்டனை தருவோமின்னு சொல்லற கேரள அரசுக்கு.. அதை முறைப்படி சுத்திகரிக்காம எப்படி ?எங்க டிஸ்போசல் செய்யராய்ங்கன்னு கண்காணிக்க முடியாதா?..
மத்தவிங்க மட்டும் என்ன எதிரி நாடா?..இல்ல மனுஷங்களே இல்லேன்னு நெனப்பா?..

அதுவும் இரசாயன போர்களில் பயன்படுத்தப்படும் அதி கொடுரமான ரசாயனங்கள்.. மூளை நரம்புகளை செயலிழக்கச்செய்யுதல், முடமான மழலைகள் பிறத்தல், புற்று நோய்ன்னு. சந்தோஷமான வாழ்க்கையில் புற்று நோயின் கொடுமைகளை புரிஞ்சிக்கனுமா?சகோதரி அனுராதாவின் பதிவுக்கு போய் பாருங்க..


ஏம்பா .. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி தமிழர்களை வேற மாநிலத்துல வேலைக்கு போக தகுதியில்லாதவங்களா ஆக்குன புண்ணியவான்களே.. இதையெல்லாம் கேக்க மாட்டீங்களா?..

என்னத்த சொல்ல..... நமக்குத்தேன் பிரஷர் எகிருது....ம்ம்...

பாதிக்கப்படறவிங்களே ஒன்னும் சொல்லக்காணாம்.. அடப்போங்கப்பு.. தூக்கம் வருது ..நா தூங்கப்போறேன்..
52 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

ரசிகன்
//ஏம்பா .. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி தமிழர்களை வேற மாநிலத்துல வேலைக்கு போக தகுதியில்லாதவங்களா ஆக்குன புண்ணியவான்களே.. இதையெல்லாம் கேக்க மாட்டீங்களா?..

என்னத்த சொல்ல..... நமக்குத்தேன் பிரஷர் எகிருது....ம்ம்...

பாதிக்கப்படறவிங்களே ஒன்னும் சொல்லக்காணாம்..//

ப்ரசன்ட் போட்டுட்டு
ரிப்பீட்டேய்ய்.... சொல்லிக்கரேன்

rk said...

you are 100% correct.

said...

மிக முக்கியமான இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இல்லெயே என்பது மிகவும் வேதனிக்க செய்கிறது.நண்பர்கள் இது போன்ற சமூக அக்கறையுள்ள நல்ல கட்டுரைகளை படித்து அவர்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யலாம்.

மிகவும் நன்றி.

இந்த கட்டுரை முத்தமிழ் குழுமத்தில் மீள் பதிவு செய்யப்படுகிறது.
http://groups.google.com/group/muththamiz

Anonymous said...

//இப்படித்தேன் சில மாசங்களுக்கு முன்னாடி .. ஆபத்தான மருத்துவ கழிவுகளை (ஆப்பரேஷன் செய்து நீக்கப்பட்ட பகுதிகள், ரத்தக்கறையுடன் கூடிய பஞ்சுபொதிகள் )ஒரு கேரளலாரி தமிழக பகுதிகளில் கொட்டி சென்றதைப் பற்றி படித்தேன்.//
பொதுவாவே க‌ழிவுக‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தொந்த‌ர‌வு த‌ராத‌ வ‌கையில் எப்ப‌டி ரீச்சைகிள் செய்வ‌துன்னு ந‌ம்ம‌ ஊர்ல‌ ப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுக்கு தெரிவ‌தில்லை. அர‌சாங்க‌ம் தான் இப்ப‌டி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு த‌ண்ட‌னை த‌ர‌ணும்.

Anonymous said...

மஞ்சூர் ராசா கவலைப்பட்டிருப்பது போல இது மாதிரி நல்ல பதிவுகள் பலரால் கவனிக்கப்படுவதில்லை.

said...

என்ன ஆச்சு ரசிகன் தொடர் சீரியஸ் பதிவுகள்????

said...

நோ டெஸ்சன் பாஸ். போய் கூலா ஒரு பியர் அடிங்க :)

kavithaa said...

விஜி அங்கிள், ரசிகன் சீரியஸா முக்கியமா மேட்டர் எழுதியிருக்காரு நீங்க பொறுப்பே இல்லாம ஜோக் அடிக்கறிங்களே?.

said...

hi kavithaa its jest for funya:P
i was also understood seriusness of this matter.ok

kavithaa said...

ஓகே பொழைச்சு போங்க:)
Sபெல்லிங் எல்லாம் தப்பு:D

சுப.செந்தில் நாதன் said...

வருந்த தக்கது விஷயம் .விழிப்புணர்வு அவசியம்.

said...

அதிர்ச்சியாக இருக்கிறது.

said...

"தனது பகுதியிலுள்ள இரசாயன தொழில்சாலைகளூக்கு ,கேரளாவில் ரசாயன கழிவை கொட்டினால் தண்டனை தருவோமின்னு சொல்லற கேரள அரசுக்கு.. அதை முறைப்படி சுத்திகரிக்காம எப்படி ?எங்க டிஸ்போசல் செய்யராய்ங்கன்னு கண்காணிக்க முடியாதா?..
மத்தவிங்க மட்டும் என்ன எதிரி நாடா?..இல்ல மனுஷங்களே இல்லேன்னு நெனப்பா?'"

சரியாக கேட்டீற்கள் ரசிகன்.
விபரீதங்கள் நடக்கும் முன் ,இந்த மோசமான செயல் கண்டிக்கத்தக்கது.

said...

//இப்ப நாட்டுக்குள்ளயே தமிழன்தான் இளிச்சவாயன்னு நெனக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களா?..//
ithu solli thaan theriyanuma!
enna sonaalum naama thaana nalla thalai aatitu nama velaya pappom!

said...

namma makkalukku tolerance aniyayathuku jaasthi.. enna panrathu!

said...

மிகவும் நியாயமான கோவம்!

ரசிகா why டென்சன்!!! No டெண்சன்! எல்லாத்துக்கு ஒரே தீர்வு 2011ல் குறள் அரசனை முதல்வர் ஆக்குவதுதான்!
(சிம்புவின் தம்பி)

said...

ம்ம்ம்ம்ம் உங்க பதிவு தான் கலக்குது எல்லா இடத்திலேயும், எனக்குத் தனியா வந்துச்சு!!!!

said...

ஐயா, ஊர்ல இருக்கீங்களா?

உடம்பு ஏதும் நல்லா இல்லையா?

சவுண்டே இல்ல?

said...

Hello
a small mark at the time of my passage on your very beautiful blog!
congratulations!
thanks for making us share your moments
you have a translation of my English space!
cordially from France
¸..· ´¨¨)) -:¦:-
¸.·´ .·´¨¨))
((¸¸.·´ ..·´ -:¦:-
-:¦:- ((¸¸.·´* ~ Chris ~ -:¦:-
http://SweetMelody.bloguez.com
http://www.bloguez.com/shaina/

rajan said...

it is danger for all.why govt not taken any action againt this?
last time when nimits ship came peoples aware of danger.so required testing arrangements.
now why nobody worry about this?.

bad habbit.

Anonymous said...

sariyaa soolierukinga

ambi said...

ரெம்ப சீரியசான விஷயம். தன்னார்வ நிறுவனங்கள் கூடவா கண்டுக்கலை? ஹைகோர்ட்டுல ஒரு பொது நல வழக்கு போடலாம் இல்ல?

பெப்சிக்கும், கோக்குக்கும் ஆப்பு வெச்ச அம்மணி கூடவா சும்மா இருக்காங்க?

ambi said...

அடங்கொய்யால, இந்த coupdecor அண்ணாச்சி என்ன சொல்றாரு? :p

said...

// புதுகைத் தென்றல் said...

ப்ரசன்ட் போட்டுட்டு
ரிப்பீட்டேய்ய்.... சொல்லிக்கரேன்//

வருகைக்கும் ,ரிப்பீட்டேக்கும் நன்றிகள் புதுகைதென்றல்...

said...

// rk said...

you are 100% correct. //

ஆதரவுக்கு நன்றிகள் ஆர்.கே..

said...

// மிக முக்கியமான இந்த கட்டுரைக்கு பின்னூட்டம் இல்லெயே என்பது மிகவும் வேதனிக்க செய்கிறது.நண்பர்கள் இது போன்ற சமூக அக்கறையுள்ள நல்ல கட்டுரைகளை படித்து அவர்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யலாம்.

மிகவும் நன்றி.

இந்த கட்டுரை முத்தமிழ் குழுமத்தில் மீள் பதிவு செய்யப்படுகிறது.
http://groups.google.com/group/muththamiz//

உங்களோட சமுக அக்கரை என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது நண்பரே..
மீள்பதிவுக்கு நன்றிகள்..
நேரம் கிடைக்கும்போது நானும் முத்தமிழ் குடும்பத்தில (குழுமத்தில்) அங்கமாக முயற்சி செய்கிறேனுங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

said...

// சின்ன அம்மிணி said...

பொதுவாவே க‌ழிவுக‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு தொந்த‌ர‌வு த‌ராத‌ வ‌கையில் எப்ப‌டி ரீச்சைகிள் செய்வ‌துன்னு ந‌ம்ம‌ ஊர்ல‌ ப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுக்கு தெரிவ‌தில்லை. அர‌சாங்க‌ம் தான் இப்ப‌டி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு த‌ண்ட‌னை த‌ர‌ணும்.//

வாங்க சின்ன அம்மிணி..
ரொம்ப சரியா சொன்னிங்க... இதைப்படிக்கிற யாராவது சரியான இடத்துக்கு கருத்தை அனுப்பி வைப்பாங்களா?ந்னு ஒரு ஆசைத்தேன்.. நல்லா சொல்லியிருக்கிங்க.. நன்றிகள்..

said...

// சின்ன அம்மிணி said...

மஞ்சூர் ராசா கவலைப்பட்டிருப்பது போல இது மாதிரி நல்ல பதிவுகள் பலரால் கவனிக்கப்படுவதில்லை.//

மருந்து எப்பவுமே கசக்கும்தானே..உங்கள மாதிரி இன்னும் சில பேராவது யதார்த்தத்தை உணர்ந்து சமுகத்தைப் பத்தி கவலைப்படுவது சந்தோஷமாயிருக்குங்க..

said...

// vijay said...

என்ன ஆச்சு ரசிகன் தொடர் சீரியஸ் பதிவுகள்????//

வாங்க.. விஜய்.. இடையிடையே நம்மாலானது.. நல்லதுதானே...

// நோ டெஸ்சன் பாஸ். போய் கூலா ஒரு பியர் அடிங்க :)//

அவ்வ்வ்வ்வ்வ்..........
அது சரி பியர் அடிச்சாக்கா நெசமாவே டென்சன் கொறையுமா?..ஹிஹி..

said...

// kavithaa said...

விஜி அங்கிள், ரசிகன் சீரியஸா முக்கியமா மேட்டர் எழுதியிருக்காரு நீங்க பொறுப்பே இல்லாம ஜோக் அடிக்கறிங்களே?.//

ஆஹா.. கவிதா இப்பத்தேன் நீங்க நல்ல பொண்ணு.. அண்ணனுக்காக சப்போர்ட் செஞ்சதுக்கு ரொம்ப நன்றிகள்..

விஜய் அங்கிளோட ஏதாவது சண்டையா?..ஹிஹி..

said...

சுப.செந்தில் நாதன் said...

வருந்த தக்கது விஷயம் .விழிப்புணர்வு அவசியம்.

சரியா சொன்னிங்க சும.செந்தில்நாதன் . கருத்துக்களுக்கு நன்றிகள்..

said...

// பிரியமுடன் பிரித்தி said...

அதிர்ச்சியாக இருக்கிறது.//

// பிரியமுடன் பிரித்தி said...

சரியாக கேட்டீற்கள் ரசிகன்.
விபரீதங்கள் நடக்கும் முன் ,இந்த மோசமான செயல் கண்டிக்கத்தக்கது.//

வாங்க பிரித்தி.. கருத்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் ரொம்ப நன்றிகள்...

said...

// Dreamzz said...

//இப்ப நாட்டுக்குள்ளயே தமிழன்தான் இளிச்சவாயன்னு நெனக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களா?..//
ithu solli thaan theriyanuma!
enna sonaalum naama thaana nalla thalai aatitu nama velaya pappom!//

வாங்க மாம்ஸ்.. என்ன செய்ய இது நம்ம தமிழர்களோட நிரந்தர குறைபாடா போயிடுச்சே..

// Dreamzz said...

namma makkalukku tolerance aniyayathuku jaasthi.. enna panrathu!//
ஹா..ஹா... காரணமில்லாத சகிப்புத்தன்மை பல சமயங்களுல அவசியமில்லாதது தான்..
சரியா சொன்னிங்க..
கருத்துக்களுக்கு நன்றிகள்..மாம்ஸ்..

said...

// குசும்பன் said...

மிகவும் நியாயமான கோவம்!

ரசிகா why டென்சன்!!! No டெண்சன்! எல்லாத்துக்கு ஒரே தீர்வு 2011ல் குறள் அரசனை முதல்வர் ஆக்குவதுதான்!
(சிம்புவின் தம்பி)//

வாங்க... குசும்பரே..

அவ்வ்வ்........ நாங்க்கெல்லாம் உங்கள முதல்வரா ஆக்கிட்டு ,மந்திரி பதவிய அமுக்கிடலாமுன்னு நெனச்சிக்கிட்டிருக்கோம்..நீங்க அந்த அழுகுணி கரடி பேம்லிக்கு சப்போர்ட் பண்ணரீங்களே..
ஹிஹி..
வருகைக்கு ரொம்ப நன்றிகள் நண்பா.

said...

// கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம்ம் உங்க பதிவு தான் கலக்குது எல்லா இடத்திலேயும், எனக்குத் தனியா வந்துச்சு!!!!//

வாங்க கீதா அக்கா... உங்களுக்கு தனியா வந்துருச்சா?.. நீங்க கேட்டிருந்தா ஸ்பெசல் எடிசன் அனுப்பியிருப்பேனுல்ல.. எனக்குத்தெரியாமல் ஸ்பை நெட்வர்க் அரேஞ் செய்வதற்க்கு என்னோட கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேனுங்க டீச்சர்..

வருகைக்கும் ,பாராட்டுகளுக்கும் நன்றிகள் அக்கா..
மொக்கைகளுக்கு நடுவுல எப்பவாவது ஒரு தரம் நீங்க பாராட்டுற அளவுக்கு ஏதோ நல்ல பதிவு போட முடிஞ்சது சந்தோஷமுங்க கீதா அக்கா...

said...

// புதுகைத் தென்றல் said...

ஐயா, ஊர்ல இருக்கீங்களா?

உடம்பு ஏதும் நல்லா இல்லையா?

சவுண்டே இல்ல?//

ஹா..ஹா.. நல்வருகைகள் தென்றல்..

இல்லிங்க.. கொஞ்சம் வேலை அதிகமாகிடுத்து.. அம்புட்டுத்தேன்..
மத்த படி பெரியவிங்களாம் வந்ததுனால கொஞ்சம் சவுண்ட அடக்கி வாசிக்கிறேனுங்க..ஹிஹி..

வருக்கைக்கும்,நலம் விசாரிப்புக்களுக்கும் நன்றிகள் தென்றல்....

said...

// coupdecoeur said...

Hello
a small mark at the time of my passage on your very beautiful blog!
congratulations!
thanks for making us share your moments
you have a translation of my English space!
cordially from France
¸..· ´¨¨)) -:¦:-
¸.·´ .·´¨¨))
((¸¸.·´ ..·´ -:¦:-
-:¦:- ((¸¸.·´* ~ Chris ~ -:¦:-
http://SweetMelody.bloguez.com
http://www.bloguez.com/shaina/

Thursday, 06 December, 2007

நீங்க என்னா சொல்லறிங்கன்னு ஒன்னுமே பிரியலை...
காசா? பணமா ?.. ஒரு நன்றி சொல்லிக்கிறேனுங்க...

said...

// rajan said...

it is danger for all.why govt not taken any action againt this?
last time when nimits ship came peoples aware of danger.so required testing arrangements.
now why nobody worry about this?.

bad habbit.//

வாங்க ராஜன்..
மக்கள்ன்னு யாரும் தனியா இல்லிங்க.. நாம தான் மக்கள்..
இதப்பத்தி நீங்க கவலைப்படறீங்க இல்லையா?..
இதுத்தேன் சமுகத்து விழிப்புணர்ச்சிக்கு ஆரம்பம்..
உங்க கருத்தை உங்க நண்பர்களிடமும் கலந்தாலோசிங்க..
மத்தவிங்களும் உணரட்டும்..

நன்றிகள்.....

said...

// Anonymous said...

sariyaa soolierukinga//

நன்றிகள்..

said...

// ambi said...

ரெம்ப சீரியசான விஷயம். தன்னார்வ நிறுவனங்கள் கூடவா கண்டுக்கலை? ஹைகோர்ட்டுல ஒரு பொது நல வழக்கு போடலாம் இல்ல?

பெப்சிக்கும், கோக்குக்கும் ஆப்பு வெச்ச அம்மணி கூடவா சும்மா இருக்காங்க? //

நல்வருகைகள் அம்பியண்ணா... நல்லா கேளுங்க... விசயம் வெளிவந்தப்பறமும் இன்னும் சுகாதாரத்துறை கூட நடவடிக்கை எடுக்காம மவுனமா இருக்குதாம்.. என்னத்த சொல்ல...


// அடங்கொய்யால, இந்த coupdecor அண்ணாச்சி என்ன சொல்றாரு? :p//
ஹா..ஹா... எனக்கும் ஒன்னுமே பிரியலை... அவசரத்துல அனுமதிச்சிப்புட்டேன்.. அப்படியே உட்டுட்டேன்..ஹிஹி..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..

said...

NAALA IRRUKKU UNCLE

said...

பதிவுல இருக்க உண்மைகள் ரொம்ப பயப்பட வைக்குது..

said...

"நேரம் கிடைக்கும்போது நானும் முத்தமிழ் குடும்பத்தில (குழுமத்தில்) அங்கமாக முயற்சி செய்கிறேனுங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்."

இந்த மாதிரித் தப்புத் தப்பா எழுதிட்டு அங்கே வந்தும் என் மானத்தை வாங்காதீங்க. எல்லாம் ப்ளாகே போதும்! :P

said...

சமூக விழிப்புணர்விற்க்கேற்ற நல்ல பதிவு, பாராட்டுக்கள் ரசிகன்.

தொடர்ந்து இம்மாதிரியான நல்ல பதிவுகளை சமூக அக்கறையுடன் படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

said...

Very shocking to read.

said...

தொடர்ந்து பல நல்ல விஷயங்களை சொல்லிட்டு வரீங்க ரசிகன். உங்களோட எல்லாப் பதிவும் படிக்கறேன். விரிவா பின்னூட்டமிடனும்னு தான் ஆசை. ஆனா, வேலை இடம் தர மாட்டீங்குது. :(
இன்னும் நிறைய பதிவிடுங்கள்.

மிக நல்ல பதிவு இது. சமூக அக்கறையுள்ளதும் கூட.

- சகாரா.

said...

// ஜாலி ஏஞ்சல்ஸ் said...

NAALA IRRUKKU UNCLE//

நன்றிகள் சிந்து & செளமியா..

சீக்கிறம் தமிழ் தட்டச்சு கத்துக்கிட்டு கல்க்குங்க..

said...

// பாச மலர் said...

பதிவுல இருக்க உண்மைகள் ரொம்ப பயப்பட வைக்குது..//

எனக்கும் கவலையை தருதுங்க பாசமலர்..
உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்..

said...

// கீதா சாம்பசிவம் said...

இந்த மாதிரித் தப்புத் தப்பா எழுதிட்டு அங்கே வந்தும் என் மானத்தை வாங்காதீங்க. எல்லாம் ப்ளாகே போதும்! :P//

டீச்சர் இது என்ன கொடுமை..
இப்பத்தானே பாராட்டிப்புட்டு போனிங்கன்னு சந்தோஷப்பட்டேன்.

அதானே மாணவன் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டா உங்களுக்கு பிடிக்காதே..

said...

// Rasiga said...

சமூக விழிப்புணர்விற்க்கேற்ற நல்ல பதிவு, பாராட்டுக்கள் ரசிகன்.

தொடர்ந்து இம்மாதிரியான நல்ல பதிவுகளை சமூக அக்கறையுடன் படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.///

ரொம்ப நன்றிங்க ரசிகா...
பேருலயே நம்ம கட்சில சேந்துப்புட்டிங்க.. உங்க ரசனைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க..

மொக்கைகளுக்கு நடுவில செல சமயத்துல்ல உருப்படியான பதிவுகளையும் குடுக்க முயற்ச்சி செய்யறேனுங்க...

said...

// Valli said...

Very shocking to read.//

உண்மைதானுங்க வள்ளி..ஏதாவது சமுக ஆர்வலர்கள் கவனத்தை ஈர்த்தால்தான் உண்டு..

வருகைக்கு நன்றிகள்.

said...

// சகாரா said...

தொடர்ந்து பல நல்ல விஷயங்களை சொல்லிட்டு வரீங்க ரசிகன். உங்களோட எல்லாப் பதிவும் படிக்கறேன். விரிவா பின்னூட்டமிடனும்னு தான் ஆசை. ஆனா, வேலை இடம் தர மாட்டீங்குது. :(
இன்னும் நிறைய பதிவிடுங்கள்.

மிக நல்ல பதிவு இது. சமூக அக்கறையுள்ளதும் கூட.

- சகாரா.//


நல்வருகைகள் சகாரா தென்றல்...

உங்க வருகையும்,சின்ன கருத்து துண்டுமே நிறைவா சந்தோஷமா இருக்குங்க...

மொக்கைக்காகவே பதிவை துவங்கினேன்..
நண்பர்களின் ஊக்கத்தால அடிக்கடி சொல்லனும்ன்னு தோனறத சொல்ல முயற்ச்சி செய்யறேனுங்க...

உங்க வருகைக்கும்,கருத்துக்களுக்கும் ரொம்பவே நன்றிங்க..