Friday, January 25, 2008

ஆப்பு வைக்கறாங்கலாம்ல்ல.. ஆப்பு...

திருநெல்வேலிக்கே அல்வாவா?...
திருப்பதிக்கே மொட்டையா?..
பழனிக்கே பஞ்சாமிர்தமா?..
தலைவிக்கே மொக்கையா?..
பாண்டிச்சேரிக்கே தண்ணியா?
(ஹலோ 24 hrs குடிநீர் வசதி,அதைச் சொன்னேன்:P)


இதெல்லாம் என்னன்னு கேக்கறிங்களா?.. எனக்கு ஆப்பு வைக்கப் போறேன்னு ஒருத்தங்க கெளம்பியிருக்காங்களாம்ல்ல..:)).ஏதோ ஒரு லீவு வந்தா ஒரு மூலையில நாம பாட்டுக்கு..நாளுப் பேருக்கு ஆப்பு வைச்சு காலத்தத ஓட்டிக்கிட்டிருக்கோம்...

தெனமும் எப்ப பாத்தாலும் ஹலோ சொல்லற தம்பின்னு ஒரு பாசமே இல்லாம வம்புக்கு இழுத்திருக்காங்க...

நான் துள்ளித் திரியும் ஒரு சிறு மீனாம்ல்ல... அவங்க கண்ணாடி மாத்த வேண்டிய நேரம் வந்துருச்சுன்னு நெனக்கிறேன்.:P

"ஆப்பு" கடலுல,நீச்சலே தெரியாம,வலைவீச வந்துட்டாங்க..அவங்களை குத்தம் சொல்ல முடியாது. பாவம், மின்னலா திடீருன்னு வந்து அடிக்கடி எஸ் ஆகுற ஒரு தோழியோட பேச்சைக் கேட்டு தெரியாம இறங்கிட்டாங்கன்னு புரியுது.

ஆப்பு வைக்கனும்ன்னு நெனச்சா தனி ஆளா ஒடனே எறங்கிடனும்.. இவங்க என்னடான்னா.. ஆப்பு வைக்க ஆள் சேக்க விளம்பரமெல்லாம் குடுத்து புஸ்வானமாக்கிட்டாங்க...

அதுமட்டும்ல.. நம்ம தனிப்பெரும் தலைவி கீதா அக்காவுக்கு போட்டியா,தலைவின்னு பட்டம் வாங்க நெனச்சி,நம்ம தலைவின் தன்னிகரில்லா மொக்கைப் பதிவுகளின் மகிழ்மையால அது முடியாம போய் பிளாக் தலைவியா வெயிட் பண்ணிக்கிட்டிருங்காங்க...

நம்ம கீதா அக்காவுக்கே, "அக்கா"(P) ங்கரதால,பரவாயில்லைன்னு விட்டுடலாம் மக்கள்ஸ்..(கீதா அக்கா, ரிப்பீட்டேய் எங்க?:D)

இப்போ மறுபடியும் நம்ம தனிப்பெரும் தலைவியின் பதவிக்கு குறிவைச்சு சதி ஆலோசனைக்கு முன்னோட்டம் தான் இந்த ஆப்புக்கு அணிசேக்கறதுங்கறது.. இது புரியாம நம்ம தலைவியின் சீடர்கள் & சிஷ்யைகள் அந்தப் பக்கம் அறியாமையால சேந்திருக்காங்க..

(கீதா அக்கா.. கவனிக்கவும்.. உங்க பிரதான சிஷ்யையை,இப்பவே கொஞ்சம் கண்டிச்சு வைக்கவும். சொல்லிப்புட்டேன்..)

வாழ்க தனிப்பெரும் தலைவி,வாழ்க அவரது மொக்கை புகழ்...
(அப்பாடா,இனி எல்லாத்தையும் கீதா அக்கா கவனிச்சிக்குவாங்க..:)) )

.....................................

சரி சரி .. நம்ம வேலையை பாக்கலாம்.. கொஞ்சம் நாளாவே, நம்ம குசும்பன் மாம்ஸ் ,ரெண்டு மாசத்துல தொப்பைய குறைக்கறது எப்படின்னு பாக்கறவங்க,சாட்டறவங்க எல்லார்க்கிடயும் கேட்டுக்கிட்டு திரியறார். என்னன்னு கேட்டா புள்ளைக்கு கல்யாணமாம்ல்ல..பின்ன,நம்மள விட பெரியவர்ல்ல.. ?? காதலிச்ச பொண்ணோடவேவாம்ல்ல.... குடுத்து வைச்சவர்:)...(அவரே, பதிவுல வாக்குமூலம் கொடுத்துட்டார்னு இந்த சமயத்தில் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.)

சரி நம்மாலான ஜடியாக்களை அள்ளித் தெளிக்கலாம்ன்னு ஒடனே இந்தப் பதிவு போட்டுப்புட்டேன்...


பிளாகுக்கு வந்தப்பறம்,இந்த எக்ஸசைஸ் டைமிங்கு ஒத்து வராது மாமே...அதுவும் 2 மாசத்துல..

நானு போன மாசம் லுலு செண்டர் போன போது எலட்ரானிக்ஸ் பிரிவுல.. ஒரு ஃபிலிப்பினோ பொண்ணு கலக்கலா சிரிச்சுக்கிட்டிருந்தாளா?..
பசங்கள விட்டு பிரிஞ்சு, நம்ம காலு தானா அங்க போயிருச்சு...என்ன சொன்னான்னு ஒரு எழவும் புரியலைன்னாலும்,அடிக்கடி இந்த டப்பாவ காட்டி ஏதோ சொல்லிக்கிட்டிருந்தா, சரி இதை வாங்கனாதான் புரியறமாதிரி பேசுவா போலன்னு நெனச்சு அதையும் டிராலில வாங்கிப் போட்டுக்கிட்டு ஃபிரியா பேசலாமுன்னு நெனச்சா.. அடுத்த ஆளுக்கிட்ட இதே மாதிரி டப்பாவை காட்டி அதே மாதிரி சிரிச்சு பேச ஆரம்பிச்சிட்டா...பயங்கர கடுப்பாயிட்டேன்ல்ல.. இப்படித்தான் அறியாப் பசங்களை ரொம்ப வருஷமா ஏமாத்தறாங்க இந்த பொண்ணுங்க...

சரி விட்ரா கைப்புள்ளைன்னு அந்த டப்பாவ பாத்தா ஒரு சூப்பர் பிகரோட படம் இருந்துச்சா.. ஜய்யயோ தெரிஞ்சவங்க பாத்தா,என்னவோ ஏதோன்னு தப்பா நெனச்சுக்கப் போறாங்கன்னு கைல இருக்குற டீவீடீ கலைக்ஷனை போட்டு போட்டு மறைச்சு கவுண்டருக்கு எடுத்துக்கிட்டு வந்தேன்...(பாக்ஸோட ரெண்டாவது பக்கம் வெளியிட்டா நம்ம மங்களூர் மாமுவோட வீக் எண்டு ஜொள்ளு ரேஞ்சுக்கு ஆகிடுங்கறதால, தவிர்க்கப் படுகிறது:P)

சங்கதி என்னன்னு பாத்தாதான் தெரியுது,அது வயற்றை குறைக்க,லேசி மக்கள்ஸ்க்கான சாதனம்ன்னு.. அடிப்பாவி... என்னிய பாத்தா அம்புட்டு வயறா தெரியுது?.. எனக்குப் பாத்து எடுத்துக் குடுத்துசே அந்த வெள்ளை கிளி(?) (அதுவும் நான் இப்போ சாப்பிட்டுக்கிட்டு இருக்குற சாப்பாட்டுக்கு,வயறு வர நோ சான்ஸ் ஆச்சே... )ன்னு கறுவிக்கிட்டு ,


யுஸ் பண்ணிப் பாத்தேன்.. அதுலயே ஏதும் வைபரேஷன் இல்லைங்கோ...நமது தசைகளை இயக்க மூளை இரு சின்ன மின் துடிப்பை நரம்புகள் மூலம் குடுத்து இயக்குகிறது.அதே யுத்தியைத்தான் இதுவும். அதுல இருக்குற இணைப்புக்கள் மூலமா,நம்ம வயிற்றுப் பகுதி த்சை மேல ரொம்ப சின்ன எலட்ரிக் பல்ஸ் பாயும்,உடனே நம்ம எக்ஸ்ரா தசைகள் தானா சுறுங்கி விரிஞ்சு எக்ஸர்சைஸ் செய்யும்.நாம ரிலாக்ஸ்ஸா பிளாக்ஸ் படிக்கலாம்,நியுஸ் கேக்கலாம்.
20 நிமிஷம் யுஸ் பண்ணா 800 தண்டாலுக்கு சமமான பல்ஸ் புரோகிராம் செஞ்சு இருக்காங்கலாம்ல்ல..


இதுல வேற 6 புரோகிராம் & 24 லெவல் ஆஃப்சன் இருக்கு.(அதிக லெவல் வைச்சுட்டிங்கன்னா.. மைக்கேல் ஜாக்சனுக்கு போட்டியா பிரேக்கே இல்லாம ,பிரேக் டான்ஸெல்லாம் ஆட ஆரம்பிச்சுருவிங்க.ஜாக்கிரதை...:P)அடடா.. இது நோகாம நொங்கெடுக்கற வேலையால்ல இருக்கு.. இதே மாதிரி கை,கால் தசைகளுக்கும் எக்ஸசைஸ் செய்ய முடிஞ்சா எப்படியிருக்கும்ன்னு நெனச்ச போது.., சிட்டி செண்டர்ல.. இதே போல ஒரு ஜட்டம் பாத்தேன்.. அதுல தனித் தனியா நாளு ஒயர்ல மின் இணைப்பு இருக்கறதால எங்க/எப்படி வேணாலும் பயன்படுத்துற வசதி இருக்கு...அதுலயே கை,கால் தசைப் பயிற்ச்சி,மசாஜ் அதிர்வுக்கும் ஆஃப்சன் குடுத்திருந்தாங்க.. முந்தையதை விட விலை ரெண்டு மடங்கு.டூ இன் ஒன் ஆச்சே.. வயற்றுப் பட்டையும் இருக்கே.
அதையும் வாங்ட்டோம்ல்ல.. ஒயரெல்லாம் ஒட்டி ஏதோ "ஃபைடர்மேன்" படத்துல வர்ர எலட்ரிக் மனுஷன் மாதிரி... கொஞ்ச நாள் ஆர்வமா உபயோகப் படுத்தனேன்..உடல்ல பல்ஸ் ஈஸியா,மென்மையா கடத்துறதுக்காக ஸ்பெசல் வாட்டர் பேஸ்டு ஜெல்(ஜொள் இல்லை:P) இருக்கு.


மெஷர் பண்ணப்போ,எக்ஸ்ரா தசைகள் போயே போச்..
ஆனா சாதாரணமா உடற்பயிற்சி செஞ்சு,குளிச்சுட்டு வந்து தூங்கும் போது வர்ர, தியானம் செஞ்ச மாதிரி ஒரு மன அமைதி இதுல கடைசி வரை கிடைக்கவே இல்லை,...அதனால மறுபடியும் வழக்கமான பயிற்ச்சிக்கு மாறிட்டேன்.
ஆனா,குறுகிய காலத்துல எக்ஸ்ரா தசையை குறைக்க இதை நிச்சயமா நம்பலாம்.

குசும்பன் மாம்ஸ்.. இது "மாப்பிள்ளை இன்ஸ்டன்" ஸ்பெசலுங்கோ... அங்கயும் லுல்லு சென்டல கிடைக்கும்ல்ல... ரெண்டு மாசம் குறைஞ்ச நேரம்ல்ல.. இன்னிக்கே வாங்க யுஸ் பண்ண ஆரம்பிச்சுடுங்க.... வாழ்த்துக்கள் மாமேய்... எந்த தேதின்னு சொன்னா,நானும் அப்போ இந்தியாவுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணிருவேன்ல்ல...


அன்புடன் உங்கள் ரசிகன்...

Friday, January 18, 2008

சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் (இளையவர்களுக்கான விஞ்ஞானம்) - இடுகை1(ஒலிப் பட்டையுடன்)...

குட்டீஸ்... போன முறை விளையாட்டு மூலமா நாம கத்துக்கிட்ட பாடம் உங்களுக்கு புடிச்சிருந்ததா?..சரி இன்னைக்கு நாம படிக்கப் போறது மனித உடல் எடை சமசீரின்மை..(human body imbalance)&மூளையின் கணிப்பு சக்தியில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள்.

(சன் டீவி ஸ்டெயிலில் படிக்கவும் : P ) தமிழ் பதிவுலகிலேயே , முதன் முறையாக பொதுப் பதிவுல,பதிவோட குரலையும் சேத்து மக்களை கொடுமைப் படுத்தறேன் பொறுத்துக்கோங்கோ.. மக்கள்ஸ் :)))))))

final science for ...(விளையாட்டுப் பாடத்தை ஒலியா கேக்கனுமா?..மேல இருக்குற பிளேயர்ல பிளே பட்டனை அழுத்துக்க..:))

”கண்ணைக் கட்டி காட்டுல விட்டப் போல”ம்பாங்க...இந்த முறை அங்கிள் உங்களை கண்ணைக் கட்டி கிரவுண்டுல விடப் போறேன்.இந்த பரிசோதனைக்கு உங்க அப்பாவோட உதவியும் தேவைப் படும்.அதனால அவரையும் கூப்பிட்டுக்கோங்க..


தேவையான பொருட்கள் :உங்க கண்ணைக் கட்டி மறைச்சுக்கறதுக்கு ஒரு தடிமனான கர்சிப் துணி கால் பாதுகாப்பிற்க்கு காலணிகள் அவசியம்.

விளையாட்டு ரொம்ப சிம்பிள்.. உங்க ஊருல இருக்குற,பெரிய விளையாட்டு மைதானத்துக்கு போயிருங்க.. சமதளமா புற்கள் மட்டுமே இருக்குற பகுதிய தேர்ந்தெடுத்துக்கோங்க.. ஓட்டப் பயிற்ச்சிக்கு யாரும் வராத நேரத்தை தேர்வு செய்யறது ரொம்ப அவசியம்.நீங்க நிற்குற இடத்துக்கு சுற்றி ஒரு 30 அடி நல்ல சமதளமா இருக்கற மாதிரி பார்த்துக்கோங்க..உங்க முன்னாடி மைதானத்துல, காலைத் தடுக்கி விடுற அளவு கற்கள்,பள்ளம் போன்றவை இருக்குதான்ன்னு பார்க்கச் சொல்லுங்க.. இருந்தா அவற்றை நீங்கிடுங்க/வேற இடம் தேர்ந்தெடுத்துக்கலாம்.


இடம் அப்பாவுக்கு திருப்தியாகிடுச்சுன்னா..நீங்க நிற்குற இடத்துல இருந்து,ஒரு முப்பது அடி தூரத்துல இருக்குற ஒரு பொருளை,போய் சேர வேண்டிய இடமா பார்த்து வச்சிக்கோங்க. உங்க கண்களை,கொண்டு வந்த துணியால கட்டிக்கோங்க.. (குறிப்பா சுபாக் குட்டி,கரண்,கிஷோர் செல்லம் யாரும் கண்ணை துறந்துக்கிட்டு ஏமாத்தப் படாது..:) )


நீங்க செய்ய வேண்டியதெல்லாம் கண்களை சாதாரணமா மூடிக்கிட்டு, முப்பது அடி தூரத்துல இருக்குற டார்கெட் இடத்த நோக்கி இயல்பா நடக்க வேண்டியது தான்.ஓடக் கூடாது,வேகம் வேண்டாம்.நிதானமா நடங்க.. வழியில எதுவும் உங்களை தடுக்காம அப்பா பாத்துக்கிட்டு இருக்காரு இல்லையா?..நம்பிக்கையா, கீழ விழாம அடிமேல் அடி வைச்சு நடஙக..


ஒரு முப்பது அடி நடந்தப்பறம் துணியை நீக்கிட்டு,கண்ணை திறந்து பாருங்க...அட என்ன ஆச்சர்யம்.. நீங்க நேரா நடந்துக்கிட்டிருக்கறதா தானே நெனச்சிக்கிட்டிருந்திங்க.. ஆனா நிஜமாவே நீஙக போக வேண்டிய பாதைய விட்டு வலதுபுறத்துல,கிட்டத்தட்ட ஒரு அரைவட்டம் அடிச்சு ஆச்சர்யகரமான தூரம் வந்து இருப்பிங்க.உஙகளை அறியாமலேயே..


எப்படின்னு காரணம் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா?.. ரொம்ப சிம்பிள்..

நம்ம உடல் பாக்கறதுக்கு வலது இடது புறஙக்ளுல சரி சமமா அமைஞ்சிருந்தாலும்.. உண்மையிலேயே நமது உடலின் வலது,இடது புறங்கள் சமமான எடையோட இல்லை.. அதுக்கு என்ன காரணங்கள்ன்னு பார்த்தா..

1) நம் உடல் உள்ளுறுப்புக்கள் இடது வலது ,புறம் சரியான எடைவிகிதத்துல அமைஞ்சு இல்லை, கல்லீரல்,இதயம் இதெல்லாம் ஒரு புறம் அதிகமா ஒதுங்கியிருக்கு.(பார்க்க:சிம்பிள் அனாடமி -சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ்)

2) பொதுவா நாம எல்லாரும் வலதுகை பழக்கமுடையவங்களா இருக்கறதுனால,வலது கை,தோள்கள் எல்லாம் தசைகள் இறுகி,அதிக அடர்த்தியோட பலமா,நமது இடது பக்கத்தை விட எடை அதிகமா இருக்கும்.

அதனால இயல்பாவே நமது உடல்ல வலது பக்கம் கொஞ்சம் எடை கூடுதலா அமைஞ்சுடுது.நாம பழகிட்டதால இதை பெருசா உணரதில்லை.கண்களால் பாக்கும்போது,நாம தவறாம நேர் கோட்டுல போக முடியுது.ஏன்னா பார்வையால,மூளை கால்களின் சின்ன சின்ன கோண மாறுபாடுகளை லைவ்வா சரி செஞ்சுக்கிட்டே வருது.ஆனா கண்களை மூடிக்கிட்ட பின்னால் நமது மூளையால பாதைய சரியா கணிக்க முடியலை.. அப்போ உடல் எடை போன்ற சின்ன சின்ன விசயங்களும் கணக்கில வருது.

நம்மை அறியாமலேயே வலது பக்கம் லேசா சாய்ந்துக்கொண்டே நடக்கிறோம். அதனால நம்ம பாதை ஒரே நேர் கோடா இல்லாம,கொஞ்சம் கொஞ்சமா வட்டத்தின் பரிதி வடிவில மாறுகிறது. கவலையில்லை.. பாதையில ஏதும் ஆபத்தான தடையில்லைன்னு நாம ஏற்கனவே பாத்தோமே. தொடர்ந்து நடந்திங்கன்னா.. அது முழுமையான வட்டமா நீங்க ஆரம்பிச்ச இடத்துக்கிட்டயே வந்திருவிங்க..ஆச்சர்யமா இருக்கில்ல?..


உங்க காலடி தூரத்தையும்,உங்க இடது,வலது எடை வேறுபாட்டையும் பொறுத்து வட்டம் பெரிதாகவோ,சிறிதாகவோ இருக்கும்.
ஜாலியா செஞ்சுப் பாருங்க...

(இருட்டில் கூட நாம நேரா நிக்கிறோமான்னு நம்ம மூளைக்கு உணர்த்தரது,நம்ம காதினுல் உள்ள குறுத்தெலும்பை சுற்றி இருக்குற திரவத்தின் சம மட்டம் தான்ன்னு ஏற்கனவே படிச்சிருக்கறது ஞாபகம் இருக்கா?..)

கண்பார்வை அற்றவர்களுக்கு,மூளையின் பயிற்ச்சியால.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பாதத்தோட angle அதாவது கோணம் சிறிது மாறினாலும் அவங்களால உணர முடியும்.சரிப் படுத்திக்க முடியும்.அவங்களால் நேரா நடக்க முடியும்.உடல் எடை சமச்சீரின்மை அவங்களை அந்த அளவு பாதிக்கறதில்லை.

பெரியவங்களுக்கு..

ஃபிரண்ட்ஸ், நீஙக செய்ய வேண்டியது

1) கிரவுண்டுல பிள்ளைகள் நடக்கும் பாதையில ,ஓட்டப் பயிற்ச்சி எடுக்குற யாரும் வந்து குறுகிடாம இருக்க,யாரும் விளையாடாத நேரத்தை தேர்ந்தெடுத்துக்கோங்க...

2)எந்த கற்களோ,பள்ளம்,மேடு போன்றவைகளோ பிள்ளைகள் கண்ணைக் கட்டி நடக்கும் பாதையில் இல்லாம பாத்துக்கோங்க..

3)குழந்தை நடக்கும்போது லெஃப்ட்,ரைட்,நேர் பாதைன்னு கமெண்டரி கொடுக்க வேணாமே.. அவங்க நடக்கற மாறிய பாதையில எந்த தடையும் இல்லைங்கரதால, ஒன்னும் சொல்லாம அமைதியா கவனிங்க...லெட் தம் எக்ஸ்புளோர் நியு வண்டர்ஸ்...

இந்த விளையாட்டுல பெரியவஙக்ளுக்கும் ஒரு பாடம் இருக்கு.: இதேப் போல நாமலும் கண்ணைக் கட்டிக்கிட்டு நடக்க முயலும்போது என்ன என்ன நடக்கும் தெரியுமா?..

1)நம்பிக்கையின்மை:எந்த தடையும் பாதையில இல்லைன்னு நாம ஏற்கனவே உணர்ந்திருந்தாலும்,பிள்ளையைப் போல,தைரியமா நாளு அடிக்கு மேல எடுத்து வைக்க முடியாது.ஏதோ ஏதோ குறுக்கே வருவது போல தட்டுத் தடுமாறுவோம்.

2)இதயம் வேகமா துடிக்கும்,பிள்ளையைப்போல திரில் ரசிக்க மனம் வராது.

3)மனதில ஒளிந்திருக்குற பல கருப்பு மேகங்கள்,எண்ண அலைகள் ஒரு எச்சரிக்கை அலர்ட்னஸ்ங்கர பேருல எழுந்துக்கொண்டே இருக்கும்.

4)நம்மை அறியாமலேயே,இதுல சொன்ன படி ஆகக் கூடாதுன்னு, வேண்டுமென்றே இடதுபுறம் காலை இழுத்து வைத்து,நேர் பாதையில் செல்ல முயலுவோம்,செயற்க்கையாக.இதுல ஓவரா முயன்று,நேரா இல்லாம, இடது பக்கத்துல வேற பாதை போடறதுக்கு கூட வாய்ப்பு இருக்குங்க..

அதனால இது சூதுவாது(?) அறியாத பிள்ளைகளுக்குத்தான் சரியா வரும்.பெரியவங்களுக்கு இல்லை:P:P:P

லீவு நாளுல,ஜாலியா முயன்று பாத்துட்டு சொல்லுங்க...

அடுத்து மனப்பயிற்ச்சி பிரிவுல, ஒரு விளையாட்டைப் பார்ப்போம், குட்டீஸ்.. அதுவரை டாட்டா..


**இது எனது சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் பிளாக்ல இருந்து ஒரு இடுகை**
---------------------------------------

எனக்கு வேலை கொஞ்சம் அதிகமாவே இருக்குறதால புதுப்பதிவு போட சமயம் & மூடு இல்லை.. போன பதிவுல சும்மா விடைப் பெறுகிறேன் போட்டு அதை நகைச்சுவை பிரிவுல சேத்துக் கூட ,நெறய மக்கள்ஸ் பாராட்டி,“ரொம்ப நல்ல முடிவு”ன்னு சந்தோஷப் பட்டாங்க :)))) அதெப்படி மக்கள்ஸ்ஸ ஃபிரியா விட்டுற முடியும்?.:P.அதான் நேரம் கெடக்குற வரை என்னோட மற்ற பதிவுகளுல இருந்து சில இடுகைகளை வெளியிடலாம்ன்னு ,இதை வெளியிட்டிருக்கேன்.

இந்த புது வருஷத்துல எனக்கு 4 tag பதிவு எழுத சொல்லி விண்ணப்பம் /அன்புக் கட்டளை வந்திருக்கு.

1) சஞ்சய்கிட்டயிருந்து மொக்கை டாக்.. - போட்டாச்சு
2)இம்சை(f/o பவன் குட்டி) சீரியஸ் டாக் - போட்டாச்சு
3)எங்க தனிப்பெரும் தலைவி கீதா அக்கா சிறந்த பதிவு டாக்
4)புதுகைத் தென்றல் புத்தாண்டு உறுதிமொழி டாக்...

கீதா அக்காவும்,புதுகைத்தென்றலும் தாமதத்திற்க்கு மன்னிக்கவும்,கொஞ்சம் டைம் குடுங்களேன்...செஞ்சுடலாம்..

என்னுடைய அழைப்பை ஏற்று மொக்கை டாக் போட்டு ஆதரவு அளித்த.. சீனா ஜயா,மங்களூர் மாமு,கீதா அக்கா,வேதா,டிரிம்ஸ் மாம்ஸ்,ஸாரி சொல்லி எஸ் ஆன அம்பியண்ணா,விரைவில போட்டுடறேன்னு வாக்கு குடுத்து சைலண்டா இருக்குற ஜி3,ஃமைபிரண்டு,நிலா பாப்பா எல்லாருக்கும் என்னுடய நன்றிகளை சொல்லிக்கிறேன்...

Saturday, January 12, 2008

விடைப் பெறுகிறேன். பதிவுலகத்திலிருந்து...

கொஞ்சம் நாளாகவே பதிவுகளில் ஒரு ஆர்வமின்மை.. பதிவெழுதித்தான் ஆகவேண்டும் என கட்டாயப் படுத்திக்கொண்டால் அதுவே நமக்கு சுமையாகி விடுகிறது.. ஆரம்பத்தில் ஒரு சாதாரண ரசிகனாகத்தான் பதிவுகலகத்துக்கு வந்தேன்.. எல்லாருடைய பதிவுகளையும் ரசித்துப் படித்து,புதியவர்களை ஊக்கப் படுத்தத்தான்(?) ஒரு பேர் வேணுங்கற அடையாளமாக இந்தப் ”ரசிகன்” ‘பதிவை ஆரம்பித்தேன்..

ஆரம்பத்தில் பொழுதுப்பொக்கா ஆரம்பிச்ச இந்த பதிவு..வலை மக்கள்ஸ் & லோக்கல் ஃபிரண்ஸ் ஆதரவால அனுபவம்,சீரியஸ்,காமெடின்னு போய் கடைசியா வெறும் மொக்கையில வந்து விழிந்துருச்சு. அதானே ரொம்ப ஈஸி..:P

பதிவுக்கெல்லாம் ஒரு ஜாலிக்காகத்தானே வர்ரது,இதுல சீரியஸ்ல்லாம் வேணாம்ன்னு பலத்த லோக்கல் நண்பர்களின் (எல்லாம் படிப்பாங்கங்க,போனுல லொள்ளு பண்ணுவாங்க,ஆனா யாரும் பின்னூட்டம் போட மாட்டாங்கறாய்ங்க.. ஹிம் என்ன் ஒரு நல்ல பழக்கம்) எதிர்ப்பினால் சீரியஸ் இடுகைக்காகவே ஒரு பர்சனல் பதிவு போட்டாச்சு... அதனால மெயின் பதிவான உங்கள் ரசிகன் ,எப்போதாவது சீரியஸ் லேசா தலை காட்டினாலும் கூட ,மொக்கை ஸ்பெசலாகிடுச்சு.. எனக்கு மொக்கை மன்னன்னு கூட பட்டமெல்லாம் கொடுத்துட்டாஙக..:))
இன்னும் ஒருபடி மேல போய்,என்னிய பாத்து , நீயெல்லாம்.. காமெடி,ஜோக்கருக்குத்தான் லாயிக்கு, நெசத்துல சீரியஸ்க்கெல்லாம் சரி பட மாட்டேன்னு கமெண்டெல்லாம் அடிச்சிட்டாங்களே மக்கா..ஹிஹி... (ஹலோ.....நியாயம்தானேன்னு சைடுல கேக்கறது..யாருப்பா?:)))).

இதுக்கெல்லாம் மனம் தளராம,எல்லா சீரியஸ் பதிவர்கள் மாதிரி

முள்ளாய் தைத்தது, உன் முரட்டு முடிவு
நிதர்சனத்தின் நிராகரிப்பில்
நிர்மூலமான என் மனது.

ஒவ்வொன்றாய் நீ எடுத்துக்கொடுத்த கற்களில்
நான் கட்டிய கனவுக் கோட்டை...

கண்ணிமைக்கும் நேரத்தில்
கடைக்கால் வரை இடிந்தது.

ச்சீ..ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்...
ரணங்களின் வலியில் வலுக்கட்டாயமாய்
தூக்கியெறிந்தேன் உன்னை என்னுள்ளிருந்து...

மண்ணில் போய் விழுந்தது நீ மட்டுமல்ல...
நீ மட்டுமே நிறைந்திருந்த, என் இதயமும் கூடத்தான்...
"

ன்னு அழுகாச்சி,கொலைவெறிக் கவிதையெல்லாம் எழுதலாமான்னு பாத்தேன்..
ஹய்யோ..... அடிக்காதிங்க.,.. அடிக்காதிங்க,... இதான் கடைசி அழுகாச்சிக் கவிதை.. , இப்ப எனக்கு கூட எழுதுத வருமோன்னு சும்மா எழுதிப் பாத்தேன்.. இனிமே நிச்சயமா இல்லை...மன்னிச்சு விட்டுருங்க...ஹிஹி....

ஆனா, எதுக்கு நமக்கு அந்த வேண்டாத வேலையெல்லாம்?..நல்லாயிருக்கட்டும் மக்கள்ஸ்ன்னு விட்டுட்டேன்..

இப்பத்தான் படிச்சேன்.. எனக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்திய வழிகாட்டி அபிஅப்பா கூட “விடை பெறுகிறேன்”ன்னு பதிவு போட்டுடாரு..
ஒருமுறைக்கூட “விடைப் பெறுகிறேன்”ன்னு பதிவு போடலேன்னா முழுமையான பதிவர்(?)ஆக முடியாதுன்னு நம்ம குசும்பர் கூட சொல்லியிருக்காரு..

அதனால எம்மனசுக்கு தோணற வரை, இந்த பதிவுலகத்துலயிருந்து விடை பெறலாம்ன்னு முடிவெடுத்துட்டேன்...
போய் வருகிறேன் நண்பர்களே...இதுவரை உங்கள் ஆதரவுக்குமனமார்ந்த நன்றிகள்... என்னால இனி எந்த தொந்தரவும் இருக்காது..


மறுபடியும் எப்போ வரத் தோணும்?(பதிவுலகத்திற்க்கு ..)ன்னு கேக்குற தோழர்கள் மட்டும் கீழே இருக்குற அடைப்புக்குறிக்குள்ள ஃமவுஸ்சால செலக்ட் செய்யுங்க..(
க.கை.நா மக்கள்ஸ்க்கு மட்டும்: செலக்ட்= மவுஸ் இடது பட்டனை அழுத்தியவாறு அடைப்புக்குறியோட ஆரம்பத்துல இருந்து ,முடிவு வரை மவுஸ் பாயிண்டரை நகர்த்தனும்..:)))) )

இல்லாட்டி வெறுமனே, உங்க கணிப்பொறி கீபோர்டுல “ ctrl ” பட்டனையும் ”A" பட்டனையும் ஒரே சமயத்துல அழுத்தினாலும் ,அடைப்புக்குறிக்குள்ள இருக்குற எழுத்துக்கள் கண்களுக்கு தெரியும்...

{ அவ்வ்வ்வ்வ்....... நான் விடைப் பெறறேன்னதும், எம்புட்டு சந்தோஷம் உங்களுக்கு..?.. அதெல்லாம் சும்மா இன்னிக்கு மட்டும்தான் விடைப் பெறுகிறேன் போட்டேன்.. எப்ப தோணிணாலும் மொக்கை போடுவேன்..ஹிஹி...ஆனா இனி பழையபடி,நான் எழுதறத விட ,மத்த எல்லாரோட பதிவுகளுக்கும் ரசிக்க அதிக நேரம் ஒதுக்குவேன்..இதுவரை தூரத்துல தள்ளி வைச்சிருந்த,உங்க அழுகாச்சி கவிதைகளுக்கும் இனி ஆதரவு உண்டுங்கோ...இதான் என்னோட புத்தாண்டு தீர்மானம்....

இனி யாருக்கும் தொந்தரவு செய்யாம,ஒரு மூலையில, மொக்கை போட்டுக்கிட்டிருக்கேன்..பொறுத்துக்கோங்க மக்கள்ஸ்...ஹிஹி...

இதப் படிச்சிப்புட்டு “நீ நெசமாவே மொக்கையிலருந்து விடைப் பெறுகிறேன்னு நல்ல முடிவெல்லாம் எடுத்துட்டியோன்னு சந்தோஷப்பட்டேன். அடப்பாவி... உன் மொக்கையை தமிழ்மணம் தாங்கிதான் ஆவனுமா?.என்ன கொடுமை இது?”ன்னெல்லாம் பின்னூட்டத்துல என்னிய பாராட்டனும்ன்னு தோணுமே... சந்தோஷமா பாராட்டிட்டு போங்கப்பூ....ஹிஹி...
}

** இன்று, அவளிடம் என் மனதைச் சொல்லிவிடப் போகிறேன்...


ஃபிரண்ஸ்,அந்த பொண்ணுக்கிட்ட எம்மனசுல இருக்குறத, இன்னிக்கு எப்படியும் சொல்லிடனும்ன்னு இருக்கேன்.இது என் வாழ்க்கையில முக்கியமான கட்டம்.அதான் உங்க எல்லார்கிட்டயும் ஜடியா கேக்கறேன்.

சொன்ன கிருஷ்ணனை சுற்றி தோழர்கள் ரமேஷ், சுரேஷ் & பாலா ,பால்ய தோழர்கள்.


ஆ"
ரம்பம்"

"
மாமே, இது உன்னோட வாழ்க்கை.நீ நேரடியா சொல்லறதுல தப்பெதுவும் இருக்குறதா எனக்குத் தெரியலை"...இது ரமேஷ்

இடம், கிருஷ்ணனின் மொபைல் கடை... படித்து முடித்துவிட்டு வேலைத்தேடி அலைந்து சலித்து,முடிவெடுத்து, கடன் வாங்கி, பேருந்து நிலைய அருகாமையில் இந்த மொபைல் கடையை துவங்கி,உழைக்க ஆரம்பித்ததிலிருந்து அவனது முன்னேற்றம் துவங்கியது.

இந்த அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தினமும் காலையில் அவன் கடைக்கு தானாய் வந்து தரிசனம் கொடுக்கும் தேவதையைப் பற்றி.. கல்லூரி மாணவி.தினமும் கிருஷ்ணனின் கடைக்கெதிரே,தனது வண்டியை நிறுத்தி விட்டு தோழிகளுடன் அரட்டையடிக்கவே, கல்லூரி பேருந்தில் செல்லும் பெண்.ராதா என்று அவளின் தோழி அழைத்ததிலிருந்து அவள் பெயர் தெரிந்திருந்தது இவனுக்கு...

என்றோ ஒரு நாள் இவள் வர கொஞ்சம் தாமதமாகிவிட.. பேருந்து கிளம்பி விடுமோ என்று அவசரத்தில் கிருஷ்ணனின் கடைக்கெதிரே வண்டியை விட்டு விட்டாள்.இவனும் இன்று ஒரு நாள் என்று நெனச்சா.. மறுநாளிலிருந்து தவறாமல்..,அவள் அவன் கடைக்கு எதிரே வண்டியை நிறுத்துவதும்,அவனைப் பார்த்து ஒரு சினேகப் புன்னகை செய்யறத்தும் சகஜமாகிடுச்சு...இவனும்தான்...

காலங்கள் ஓடின..(எந்த கிரவுண்டுலன்னெல்லாம் கேக்கப்டாது..). இப்போதெல்லாம் தானாக அவன் மனம் அவள் வரும் சமயத்தை எதிர்பார்க்குது...

காலையில அவளின் அதே புன்னகை.. அவள் சென்றதும் ஏதோ ஒரு தவிப்பு.. மாலையில் அவள் வரும் வரை.. மாலையில் அவளின் முகம் கண்ட போது அவனுக்கு வருமே ஒரு சந்தோஷம்.. அது இரவு கடையை அடைத்து செல்லும்வரை நீடிக்கும்..

எதிர்பார்ப்பு

"ஆனா எனக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்குடா... என் மனசை புரிஞ்சுப்பாளா?...ரொம்ப கோபப்படுவாளோ?.. இப்பெல்லாம் நைட்டு கூட தூக்கம் வர மாட்டேங்குது மாமே..அவளுக்கே தெரியாம, என்னை ரொம்ப கொடுமை பண்ணறாடா... "

" டூவீலர் வைச்சிருந்தும் ,வண்டிய நிறுத்திட்டு எதுக்கு பஸ்ல போகனும்.?. நிறுத்த வேற நெறய எடமிருந்தும் ,தினமும் எதுக்கு என் கடை எதிர தவறாம வரனும்..? ..நான் நெனக்கிறதுல எதனா தப்பிருக்காடா?.."

"அட என்ன மாமே,சப்ப மேட்டரு..நீ ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரியே. ஃபீல் பண்ணறியே... உனக்கு சொல்ல தைரியம் இல்லாட்டி எங்க கிட்ட விடு..பிரண்ஸ்செல்லாம் பின்ன எதுக்கு இருக்கோம்.இதுக்கூட உனக்கு செய்யலேன்னா எப்படி?.. உனக்கு தூது போக நானாச்சு.. கவலைப் படாதே.."

"வேணாம்டா மச்சி..அது இன்னும் பிரச்சனையாகிடும்.நானும் தினமும் அவளை பாக்கும் போதெல்லாம் எம்மனசுல இருக்குறதயெல்லாம் கொட்டிடனும்ன்னு பாக்கரேன்..ஆனா அவளை பார்த்த்தும்,ஏதோ ஒன்னு தடுக்குது..அதான்..."

மிரட்டல்

" டேய் எதுக்கு அவசரப்படறே.. லைஃப்ல இந்த நிலையை அடைய,எவ்வளவு கஷ்டப் பட்டு உழைச்சிருப்பே?அப்போ கூட, எவ்வளவு பொறுமையா இருந்திருப்பே.. இப்போ என்ன அவசரம்?.அந்த பொண்ணு இதை பிரச்சனையாக்கிட்டா,உனக்குத்தான் கெட்ட பேரு.. அப்புறம் யார்கிட்டயும் உன் முகத்தை கூட காட்ட முடியாது. ஜாக்கிரதை..."

"புத்திசாலியா இருந்தா,அந்தப் பொண்ணும் இதை தானா புரிஞ்சிக்கிட்டிருக்க வேணாமா?..அட்லிஸ்ட் தினமும் உன் பார்வையில் இருக்குற அர்த்தத்தையாவது புரிஞ்சிக்கிட்டிருக்க வேணாம்?,.. சொல்லறத கேளு மாமே.."

"அந்த பொண்ணும் தினமும் உன்னைப் பாத்து சிரிக்குதுன்னு தப்புக் கணக்கு போட்டுறாத. எப்ப வேணாலும் ,நான் சிரிச்சது உன்னைப் பாத்து இல்லை..உன் பின்னாடி வைச்சிருக்குற குழந்தை படத்த பாத்துதான்னு சொல்ல முடியும். பொண்ணுங்களைப் பத்தி உனக்கு அதிகம் பழக்கமில்லை.நமக்கு தெரிஞ்ச பொண்ணுங்களை வைச்சு எல்லாரையும் அப்படி நெனச்சுடாதே.."


"சில பெண்கள் நாம சொல்லர வரை காத்துக்கிட்டிருந்து,அதுக்கான சந்தர்ப்பங்களையும் உண்டாக்கிட்டு ,சொன்ன அப்புறம்,இல்லையே, எனக்கு அப்படில்லாம் தோணவே இல்லையேன்னு பட்டுனு சொல்லி நம்மையே ஜோக்கராக்கிடுவாங்க ..ஜாக்கரதையா இரு மாமே...அப்புறம் உன் இஷ்டம்."

"வேணுமின்னா நீயும் மறைமுகமா சொல்லிப்பாரு.. அந்தப்பொண்ணு புத்திசாலியா இருந்தா புரிஞ்சிக்கட்டும். இல்லாட்டி,இதெல்லாம் சொல்லி மட்டும் என்ன புரிஞ்சிக்கப் போவுதுன்னு விட்டுரு...உனக்குன்னு இருக்குறது,எத்தனை தடை இருந்தாலும், உன்னைத்தேடி தானா வரும்
" .இது பாலா..

ஆதரவு

"
அடப்பாவி.,. நம்ம நண்பன் ஆலோசனைக்கு நம்மளை கூப்பிட்டா இப்படி பயம்புறுத்தறியே அவனை.. மாமே இவன் கெடக்கறான்.. 23ம் புலிகேசி.."
"நண்பா, நான் சொல்லறேன் கேளு.. அந்தப் பொண்ணை பாத்தா நல்லப் பொண்ணாதான் தெரியுது..நிச்சயமா தப்பா எடுத்துக்க மாட்டாங்க. சும்மா தைரியமா சொல்லு..இந்த வருஷமாவது பிப்ரவரி 14 காதலர் தினத்தை கொண்டாட வேணாமா?.அதுவரை வெயிட் பண்ணப்போறியா?.. பின்னாடி உனக்கு சந்தர்ப்பமே கெடக்காம போயிறலாம்.. அதனால நேராவே சொல்லிரு,.. உன் நன்மைக்காகத்தான் சொல்லறேன்..
"

"சரிடா மச்சி.. நீங்கெல்லாம் குடுக்கற தைரியத்துல இன்னிக்கு அவக்கிட்ட என் மனசுல இருக்குறத சொல்லப் போறேன்.. எதுவும் தப்பாகிடாதே?.."

"எதுவும் ஆகாது?.. ஜமாய், நாங்கெல்லாம் இருக்கோம்ல்ல.. நீ சொல்லற வரை வேணும்ன்னா இங்கயே வெயிட் பண்ணறோம்.. உனக்காக.."

அவளுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிந்தது.. பாலா வாட்சைப் பார்த்துக்கொண்டான்.,. "மாமே எனக்கு ஆபிஸ் ரொம்ப லேட்டாகும்போல.." என இழுக்க... ரமேஷ் அவனை முறைக்க..

இதோ வந்துவிட்டாள் அவள்.,. அதே புன்னகை.. இன்றைக்கு வழக்கத்தை விட ரொம்ப அழகாயிருப்பதா பட்டது. எப்போதும் போல அவள் வண்டியை பூட்டிவிட்டு கிருஷ்ணனை பார்த்து ஒரு சினேகப் புன்னகையை சிந்த..

சொல்லவும்,முடியாமல் மெல்லவும் முடியாமல் கிருஷ்ணன் வெறும் வெற்றுப் புன்னகையை பூத்து வைக்க...இதோ அவள் கிளம்பி விட்டாள்.அடப் பாவமே இது தொடர் கதை தானா?..என அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க.

இவன் சரிப்பட மாட்டான்.. போய் சொல்லு மாமேன்னு அவனை தள்ளி விட்டார்கள் பசங்கள். அந்த சப்தத்தில்,கிளம்பிய அவள் ,நின்று திரும்பிப் பார்க்க.கிருஷ்ணனை அறியாமல்.. "என்னங்க,உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.தப்பா எடுத்துக்காதிங்க" என்றான்.

ஆச்சர்யத்துடன் அவள் என்ன? என்பது போல பார்க்க, சொல்லிவிடலாமா என்பது போல நண்பர்களை திரும்பி பார்த்தான். நடத்து என்பது போல எல்லாரும் சைகை காட்டிவிட்டு அந்தப்பக்கம் திரும்பி அவர்களுக்குள் பேசிக்கொள்ள,தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தான் கிருஷ்ணன்.

ஒரு டுவிஸ்ட்டு

"
டம்.. நான் ரொம்ப கஷ்டப் பட்டு இந்த கடையை நடத்துக்கிட்டு வர்ரேன். அதுவும் மத்த கடைக்காரங்களை விட கொஞ்சம் அதிக விலை குடுத்து,நடை பாதைக்கு நேரா இந்த கடையை வாடகைக்கு எடுத்திருக்கேன்.அடுத்த மாசம் வர்ரபோற காதலர் தினத்துக்காக மொபைல் கம்பெனிகள் சிறப்பு சலுகைகளை அறிவிச்சிருக்குறதால இப்போ விற்பனை சூடு பிடிச்சிருக்கு.. நானும் கடன் வாங்கி அதிகமா ஸ்டோக் வைச்சிருக்கேன்.

நடைப்பாதையிலருந்து என்னோட கடைக்கு வர்ர வழியில குறுக்கே நீங்க வண்டிய நிறுத்திட்டுப் போறதால,கடைக்கு வர நினைப்பவங்க அதை தாண்டி வரும்போது,அருகிலேயே இருக்குற பக்கத்து மொபைல் கடைக்குள்ள புகுந்துடறாங்க...

நிறைய பேர கவனிச்சிருக்கேன் இப்படி. மாலையில நீங்க வண்டிய எடுத்துக்கிட்டு போனதும். நடைப்பாதை வழியா வர்ரவங்க.. நேரா இருக்குற என்னோட கடைக்குத்தான் வர்ராங்க..ஒரு நாள்,ரெண்டு நாள்ன்னா பரவாயில்லை,தினமும் வர்ரிங்க..நீங்க வண்டிய நிறுத்துற இடத்தின் மேல எனக்கு எந்த உரிமையும் இல்லேன்னாலும்...இந்த பிப்ரவரி 14க்குள்ள எனக்கு லாபம் காட்டியாகனும்.

வியாபாரம் அதிகமாகும் இந்த சீசன்ல, இப்படி ஒரு பிரச்சனை இருக்குறத நெனச்சு எனக்கு நைட்டுல தூக்கம் கூட வர்ரதில்லைங்க மேடம். தயவு செஞ்சு.. உங்க வண்டிய கடைக்கெதிரா பார்க் செய்யாம இருந்தா ரொம்ப உதவியா இருக்குமுங்க..
." மூச்சு விடாம சொல்லிட்டு..அவளது பதிலுக்கு காத்திருப்பு.அதுவரை கவனிக்காதது போல காட்டிக்கொண்டிருந்த அவனது நண்பர்களும் ஆர்வமாய் என்ன நடக்கப் போகிறது என பார்த்தனர்..

அதிர்ச்சியில சிலையாய் உறைந்த அவள்,சுதாரிச்சுக்கிட்டு.., "மன்னிச்சிருங்க,எனக்கே தெரியாம உங்களுக்கு இத்தனை நாள் எவ்வளவு தொந்தரவு குடுத்திருக்கேன்ன்னு நெனக்கும்போது கஷ்டமாயிருக்குங்க.. பஸ்டாண்டுக்குள்ள வண்டிய கொண்டுபோய் நிறுத்தி,அந்த டிராஃபிக்குல திரும்ப கொண்டு வர ஆகுற அலைச்சலை விட,இந்த இடம் ஈஸியா இருந்தததல செஞ்சுட்டேன்.தோழிகளோட ,பஸ்ல ஒன்னா அரட்டை அடிச்சுக்கிட்டு பிடிச்சிருக்கறதால பஸ்ல போறது.இனி இங்கே நிறுத்தலை..கவலைப் படாதிங்க.".

மகிழ்ச்சி அவன் முகத்தில் மட்டுமல்ல...தோழர்களின் முகத்துல கூட..

பாலா சொன்னான்.." பெண்களை, குழப்பவாதிகள்ன்னு தப்பா நெனச்சிக்கிட்டிருந்தேன். எவ்வளவு எளிமையா பிரச்சனையை புரிஞ்சுக்கிட்டிங்க... இவன்கூட இதை சொல்ல ரொம்பவே யோசிச்சான். நான் கூட என் பங்குக்கு ரொம்பவே பயம்புறுத்திட்டேன்.இப்போ நாங்கதான் குழப்பவாதிகளோன்னு தோணுது.நீங்களும் எங்களை மன்னிச்சிருங்க..."

ரமேஷ் சொன்னான்.."மறுபடியும் நீங்க பஸ்டாண்டுக்குள்ள வண்டிய கொண்டுபோய் கஷ்டப் பட வேண்டாம்.கடைக்கு பக்கத்து சந்துல தான் கிருஷ்ணனோட வீடு..அது வாசலுலயே நீங்க வண்டிய விட்டுக்கலாம்....அவன் வீட்டுல இருக்கிறவங்க உங்க வண்டிய பாதுகாப்பா பாத்துப்பாங்க.வர போக பிரச்சனை இருக்காது. என்ன சொல்லறடா?".. என கிருஷணனை பார்க்க.. ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்த திருப்தியோட தலையசைத்தான் அவன்.

"நீங்க இவ்வளவு எளிமையா ,புரிஞ்சுக்கிட்டட்துக்கு ரொம்ப நன்றிங்க.."

ஒரு ஹைலைட்டு

அவள்..."ரொம்ப தாங்க்ஸ்.. அப்புறம், நீங்க மொபைல் விலை சலுகையைப் பத்தி சொல்லும்போது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. எங்க கல்லூரில முதல் குருப் சீனியர்ஸ்க்கு வழியனுபும் விழா நடக்க இருக்குறதால,அவங்க எல்லாருக்கும், கல்லூரி நிர்வாகமும்,ஜுனியர் ஸ்டூடண்ட்ஸ்ம் சேந்து மதிப்பான பரிசு தர முடிவு செஞ்சிருக்கோம்.ஸ்டூடண்ட்ஸ் சேர்மேன்ங்கர வகையில, என்ன பரிசு தர்ரதுங்கர முடிவை எங்கிட்ட விட்டிருக்காங்க.."

"நண்பர்களை பிரியாம எப்பவும் அவர்களை தொடர்புக் கொள்ள ஆளுக்கு ஒரு மொபைல்,சிம்கார்டோட குடுத்தா பொருத்தமாயிருக்கும்ன்னு தோனுது.நீங்க கடைக்கு வெளியே தொங்க விட்டிருக்குற சலுகை விலைப் பட்டியலும் எங்க பட்ஜெட்டுக்கு பொருத்தமாதான் இருக்கு. ஒரு 200 மொபைல் போனாவது தேவைப்படும்.சிம்கார்டோட. என்ன?,மொத்தமா வாங்கறதால, நீங்க இன்னும் கொஞ்சம் விலை குறைக்க வேண்டியிருக்கும்.உங்க வசதிப்பட்ட விலையை சொல்லுங்க. கல்லூரி நிர்வாகத்துக்கிட்ட பேசி வைக்கறேன். ஹய்யோ பஸ் வந்துருச்சு, அப்போ இன்னிக்கு மட்டும் வண்டி.."என இழுக்க...

"பரவாயில்லைங்க.. ஆறு மாசத்து விற்பனைய மொத்தமா குடுக்கறிங்க... நாங்க பாத்துக்கிறோம் கவலைபடாம போய் வாங்க. மாலையில வரும்போது ஸ்பெசல் சலுகை விலையை மொபைல் சப்ளையர் கிட்ட கேட்டு வைக்கறேன்.மொத்த விற்பனையா இருக்குரதால ரொம்ப நல்ல விலையே குடுப்பாங்க.."

" தாங்க்ஸ்,வர்ரேன்"ன்னு அப்போது வந்த கல்லூரி பஸ்ஸில இருக்கும் தோழிகளைப் பார்த்து கையசைத்தவாறு ஓடும் அவள்.இப்போது நிஜமாகவே அவனது கஷ்டங்களை தீர்க்க வந்த தேவதையாய் தெரிந்தாள்.


(ஹிஹி.. பின்ன கதைக்கு பொருத்தமில்லாத அந்த படம் எதுக்குன்னு கேக்கறிங்களா?.. எல்லாம் கதைய படிக்கிற உங்களுக்கு ஒரு ஆறுதலுக்காகத்தான்...:))))))))))))))))))))))))))))))))))))))))))

Friday, January 11, 2008

**என்ன கொடுமைங்க இதெல்லாம்?...

இன்னிக்கு காலையிலேருந்து மழை பெய்ஞ்சுக்கிட்டிருக்கு ,குளிர் காற்று வேற.. லீவா இருக்கிறதால ரசிக்க முடிஞ்சுது. அடடா மழையால, இன்னிக்கு வெளிய போக முடியாதேன்னு , நியுஸ் படிக்க ஒக்காந்தாக்கா... அந்த கொடுமைய நீங்களே பாருங்க மக்கள்ஸ்...
புதுடில்லி: இந்திய கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் மீது சரக்கு கப்பல் ஏறிச் சென்றதால் சிறிது சேதமடைந்தது.
இந்திய கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ்., சிந்துகோஷ். கடந்த 7ம் தேதி சிந்துகோஷ் நீர்மூழ்கிக் கப்பல், மும்பையிலிருந்து 140 கடல் மைல் தூரத்தில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அந்த வழியே வந்த சரக்கு கப்பல், சிந்துகோஷ் மீது ஏறிச் சென்றது. இதில், நீர்மூழ்கிக் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆழ்கடலில் நீர்மூழ்கிக் கப்பல் வெறும் 10 முதல் 20 அடி ஆழத்தில் சென்று கொண்டிருந்தது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர். இது பற்றி கடற்படை அதிகாரிகள் கருத்து எதுவும் கூறவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடப்பாவிங்களா...அப்படி என்ன பயிற்ச்சில ஈடுபட்டுக்கிட்டிருந்திங்க?. கப்பலை அது பாட்டுக்கு போக விட்டுட்டு எப்படி தூங்கறதுன்னா? .அதுவும் சாதாரண சரக்குக் கப்பல் வந்து மோதுற அளவு அலட்சியம்,அதுவும் பாதுகாப்பு முக்கியத்துவம் நிறைஞ்ச பாக்கிஸ்தான் கடல் பகுதிக்கு மிக அருகில்... அப்போ நீர்முழ்கி கப்பல்ல இருந்த சோனார்,ரேடார்,எச்சரிக்கை சாதன சங்கதிங்கள்லாம் என்ன ஆச்சு?.அதையெல்லாம் காயலான் கடையில போட்டுட்டு பேரிச்சம்பழம் வாங்கி சாப்பிடுங்க...நீங்கெல்லாம், எதிரி உங்க நீர்முழ்கிய அழிக்க டர்பிடோ ஏவுகனைகளை அனுப்பும்போது என்ன செஞ்சு கிழிக்கப் போறிங்கன்னு புரியலை..இதுல வேற உலகத்திலேயே ஜந்தாவது பெரிய கடற்படைன்னு சொல்லிக்கிறிங்க..ரஷ்யாக்கிட்ட அதுவும் சகெண்டு ஹாண்டுல நீர்முழ்கி கப்பல் வாங்க மில்லியன் கணக்கா கடன் வாங்கி ஆர்டர் பண்ணியிருக்கிங்க.... உங்களையெல்லாம் நாட்டுக்காக இரவு பகல் கண்ணுமுழிச்சு கடமை செய்யறவிங்கன்னு நம்பி நாங்கெல்லாம்.. அடப்போங்கப்பா... சிரிப்பா(கோபமாவும் தான்)வருது...

------------------------------------------

சாட்னா (ம.பி.,): தனது ஜூனியர் மாணவனை துப் பாக்கியால் சுட்டுக் கொன்ற பத்தாம் வகுப்பு சிறுவன் ராகுல் சிங், எட்டாவது வயதில் இருந்தே துப்பாக்கியில் விளையாடுபவன். கொலை செய்ததற்காக அவன் சிறிதும் வருத்தப்படவில்லை. ஓராண்டுக்கு முன், கிரிக்கெட் விளையாட்டில் ராகுல் சிங்குக் கும், இவனது ஜூனியர் மாணவன் தர்மு கோலுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. . இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. ஏற்கனவே ஆயிரத்து 500 ரூபாயை கொடுத்து, முன்னாள் ராணுவ வீரர் ஒருவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி வாங்கி வைத்திருந்தேன். அதை சும்மா சுட்டும் பார்த்தேன். இரண்டாவது குண்டு தர்முக்கு என்றாகிவிட்டது. அவனை சுட்டுக் கொன்று விட்டேன்’ என்கிறான் ராகுல் சிங், அழுத்தமான குரலில். தற்போது, இவ் வழக்கு சிறுவர்கள் சீர்திருத்த கோர்ட்டில் நடந்து வருகிறது

அடப்பாவமே...துப்பாக்கி கலாச்சாரம் வெளி நாட்டுல தான்னு நெனச்சேன்.இப்போ நம்ம நாட்டுலயும் ஆரம்பிச்சுடுச்சோ?.. வெறும் 1500 ரூபாய்க்கு துப்பாக்கி.அதுவும் நம்மோட வரிப்பணத்தை பென்ஷனா வாங்கிக்கிட்டிருக்குற முன்னாள் ராணுவ வீரர்(?)கிட்டேயிருந்து. இனிமே பிக் பாக்கெட் அடிக்கிறவனும்,சொம்புத் திருடனும் கூட 1500 ரூபாய் இன்வெஸ்ட் மூலதனமா செஞ்சு,ஆளுக்கு ஒரு துப்பாக்கி வாங்கிக்கலாம்.

ஓய்வு பெறும் ராணுவ வீரர்களை கொஞ்ச காலத்திற்க்கு அரசு கண்காணிக வேண்டியது அவசியம்ன்னு தோணுது.ஏன்னா.. நாட்டு பாதுகாப்புக்கு உதவுமின்னு ராணுவத்துல கொடுக்கப்படற ஆயுத தொழில்நுட்ப அறிவும்,பயிற்ச்சியும் ஓய்வு பெற்றப் பின்,பணத்துக்காக , இப்படி கள்ளத்துப்பாக்கிகளாகவும்,வெடி குண்டுகளாகவும் லோக்கல் தீவிரவாதிகளுக்கு போய் சேர வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.

---------------------------------------கண்காட்சியில் அறிமுகப்படுத்தப் பட்ட இது, செப்டம்பரில் நாடு முழுவதும் ஷோரூம்களில் விற்பனைக்கு வந்து விடும். இந்தியாவில் ஆறரை லட்சம் பேர், ஸ்கூட்டர் மற்றும் பைக் ஓட்டி வருகின்றனர். அவர்களால் இதுவரை கார் வாங்க முடியாமல் இருந்தது. டாடா கார், அவர்களின் கனவை பூர்த்தி செய்யும் என்று அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.


ஹலோ சார்.. நீங்க நம்ம நாட்டுக்கு ஏதோ நல்லது செய்யனுமின்னு ஆசைப்படறது புரியுது.. அது உண்மையா இருந்தா,இந்த எலக்ட்ரிக் & கேஸ் கார்,ஸ்கூட்டர்ங்கராய்ங்களே..அதுல விலை குறைத்து புரட்சி செய்யுங்களேன். ஏன்னா இப்போ ஏற்கனவே நம்ம நாட்டுல வாகனங்கள் அதிகம்.அவை வெளியிடற புகையே சுற்றுசூழலுக்கு குடுக்கற சீர்கேட்டைப் பற்றி சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த சமயத்துல,
பைக்,ஸ்கூட்டர்களை விட அதிகமா பெட்ரோலை சாப்பிட்டு கார்பன் மோனாக்சைடை வெளியிடும் கார்கள் அவசியம் தானா?..

இப்போ பைக்,ஸ்கூட்டர் வைச்சிருக்குற நடுத்தர மக்கள் எல்லாம் ஒரு கெளரவத்துக்காக (நடுத்தர மக்களோட த்விற்க்க முடியாத சாபக்கேடு அது..) லட்ச ரூபா காருக்கு மாறிட்டா..ஏற்கனவே மூச்சு முட்டிக்கிட்டிருக்குற நகர டிராஃபிக் நிலமை என்னவாகும்?..

இந்த கார் பேக்டரி துவங்கும்போதே எம்புட்டு பிரச்சனை,விவசாய நிலம் கையகப்படுத்தல்ன்னு.., நிறைய பேருக்கு வேலை குடுக்கறோம்ன்னு வசதியான,சாமர்த்தியமான காரணத்தை அரசாங்கத்துக்கு சொல்லிட்டு ,அரசு உதவியோட பிரியா அரசு நிலங்களையும் கையகப் படுத்துக்கிட்டிங்க.,.உங்க லாபத்துக்காக எம்புட்டு மாஸ்டர் பிளான்லாம் போடறிங்க..அதுல ஒரு 5% மாவது நாட்டு நன்மைக்கும்,சுற்றுப்புற சூழலக்கும் சேத்தே பிளான் பண்ணலாம்ல்ல...


sub news in another news paper

டில்லியில் 42 கோடி மனித உழைப்பு மணி நேரம் இழப்பு: போக்குவரத்தால் 70 லட்சம் பேர் படாதபாடு:நமது சிறப்பு நிருபர்
டில்லியில் தினமும் பஸ் சை பிடித்து, ஆபீஸ் போய் திரும்புவதற்குள் மக்கள் படும்பாடு பரிதாபம்; வேலை செய்யும் நேரத்தை விட,பயணம் செய் யும் நேரம் தான் அதிகம்.இதனால், டில்லியில் வேலைக்கு செல்லும் 70 லட்சம் பேரின் உழைப்பு, ஒரு மாதத்துக்கு 42 கோடி மணி நேரம் வீணாகிறது என்று கண்டறியப்பட்டுள் ளது.இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு நடத்திய சர்வேயில் இந்த தகவல் தெரியவந்தது.
இவர்களின் மனித உழைப்பு நேரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால், உற்பத்தி, பணிகள் கடுமையாக தாமதம் ஆகிறது.போக்குவரத்து நெரிசலை போக்க, நியூயார்க், லண்டன், பிஜீங் போன்ற சர்வதேச நகரங்களில் உள்ள அதிவேக போக்குவரத்து திட்டங்கள் போல, டில்லியிலும் நிறைவேற்ற வேண்டும்.டில்லியில் இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட 11 கோடியே 20 லட்சம் வாகனங்கள் உள்ளன. போக்குவரத்துநெரிசலுக்கு அவை தான் காரணம்.


-------------------------------------

ஜந்து வருடங்களுக்கு மேல அரசாங்க புறம்போக்கு நிலத்தை ஆக்கரமிச்சு இருந்தா,அந்த நிலங்களுக்கு அவர்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு..

அடப்பாவிங்களா... பெரும்பான்மையான புறம்போக்கு நிலங்கள் அரசியல்வாதிகளாலும்,அவங்க சேர்ந்தவங்களாலும் தானே ஆக்கரமிக்கப் பட்டிருக்கு?.. அப்போ இது அவிங்க எடுத்த முடிவு தானா?..இப்போ நிலம் போற ரேட்டுக்கு,உலகப் பணக்காரர்கள் வரிசையில ,லைன் கட்டி நின்னாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லை..

தப்புசெஞ்சா அவங்க கிட்டயுருந்து அரசாங்க நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காம ஜஞ்சு வருஷம் கையாலாகாததனமா இருந்ததே தப்பு. அவிங்க திறமைய பாராட்டி ,இப்போ அவிங்களுக்கு அதையே பரிசா வேற குடுக்கபோறேங்கறிங்க...


போறப்போக்க பாத்தா ,நீங்க குடுக்குற ஊக்கத்துல.. புறம்போக்கு நிலமில்ல.. அரசு கட்டிடங்கள்,அரசு அலுவலகங்கள் எல்லாத்தையும் ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிச்சாலும் சொல்லறதுக்கில்லை..
அரசியலா இருக்கறதால ..இதுக்கு மேல ஒன்னும் சொல்லறதுக்கில்ல.. எதுக்கு வம்பு :))

(ஜயோ... சொக்கா.. இது முன்னாடியே தெரியாம போயிருச்சே.. நானும் எம்பங்குக்கு பத்துப் பதிஞ்சு ஏக்கரை(?) வளைச்சு போட்டிருப்பேன்ல்ல..:)))


செய்தி 1:
ராணுவ ஆயுதக் கிடங்குகள் அடிக்கடி தீப் பற்றி அழிவு ...
செய்தி 2:
போர்கலத்தில் ராணுவத்தினரின் உயிர்காக்கும் உடைகள்,பாராசூட்கள் சியாசின் பகுதியில் பாதுகாப்பில் இருக்கும் ராணுவ வீரர்களுக்காக நம் அரசு பெரும் பொருட் செலவில் தயாரித்த குளிர் உடைகள் எல்லாம் காஷ்மீர் நடைப்பாதைக் கடைகளில் கிடைக்கின்றன..இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம்.
செய்தி:3
சரணடைந்த தீவிரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்திய ராணுவத்தில் மட்டுமே உபயோகத்தில் உள்ள ஆயுதங்கள். அதிகாரிகள் அதிர்ச்சி...

ஏம்பா எடிட்டரு.. இந்த மூனு செய்தியையும் சேத்தே போட்டிருக்கலாம்ல்ல.. சாதாரணமா படிக்கற எனக்கே ஏதோ புரியுதே.. அறிவு ஜீவிகள்,புலனாய்வு,இண்டலிஜியன்ஸ் பிரிவு மக்கள்ஸ் எல்லாம் என்ன செய்யறாய்ங்க..

அதுவும் தொடர்ந்து ஆயுதக் கிடங்குகள் தீக்கிரையாகறதும், ஆவணங்கள் அழியறதும்..தீவிரவாதிங்களுக்கு, சைடுல அவிங்க வித்து காசாக்கிய ஆயுதஙகள்/ஆயுதங்கள் கணக்கு தெரியக்கூடாதுன்னு தானே?.. இதுக்கு நீங்க ஏன் கண்டுக்காம துணைப் போறீங்கன்னு தான் இந்த சாதாரணப் பட்ட பிரஜைக்கு புரியலை...கொஞ்சம் விளக்குங்களேன்.


---------------------------------------------

சிவகாசி: உழைக்கத் திராணியற்ற முதியவரை குப்பைத் தொட்டியில் வீசி மனித நேயத்தை வளர்க்கும் செயல் சிவகாசியில் நடந்துள்ளது.பாசமுள்ள’ மகனை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி மருதநாடார் ஊரணி பகுதியில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். பழைய துணியால் சுற்றப்பட்ட பொருட்கள் மூட்டைகளாக கிடந்தன. அவற்றை துப்புரவு பணியாளர்கள் அகற்ற முயன்ற போது சந்தேகம் அடைந்தனர். மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 60 வயதுள்ள முதியவர் சுயநினைவின்றி கிடந்தார்.

மனித நேயமும்,பாசமும் கூட குப்பை கூளங்களாம் மாதிரி ஆகிடுச்சே, நம்ம நாட்டில்ன்னு வருத்தமாயிருக்கு.:(எம்புட்டு மிருக இதயமாயிருந்தா , உயிருள்ள ஒரு ஜீவனை மூட்டையா கட்டி ,மனசுல ஈரமே இல்லாம குப்பைத்தொட்டியில போட்டிருப்பாங்க..
ப்ச்.. எப்படியெல்லாம் ஆளுங்க இருக்காங்கல்ல.. நம்ம ஊர்லயே,....


.----------------------------


2 ரூபாய் அரிசி திட்டம். பலனடைகிறது கேரளா...


அட என்ன இது கேரளாவும் தமிழகத்தை பின் பற்ற ஆரம்பித்து விட்டதா?..ன்னு யோசிக்கிறிங்களா?.அட நீங்க வேற வயத்தெரிச்சலை கெளப்பாதிங்க.கேரள அரசியல்வாதிகள் என்ன அம்புட்டு மாக்கான்களா?... பெரும்பாலான ரேஷன் கடைகளில் அரிசி இல்லை.வரலை ,தீந்து போச்சுன்னு சொல்லறாய்ங்களாம்.நம்ம தமிழக ஏழைகள் இன்னும் பாவம்தான். ஆனா கேரளாவுக்கு செல்லும் லாரிகளில் தினமும் நூற்றுக்கணக்கான 2 ரூபாய் அரிசி மூட்டைகள் திருட்டுத்தனமா,ரேஷன் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன்,கேரள செக்போஸ்ட்டுகளின் அமோக ஆதரவுடன் கடத்தப் பட்டு 2 ரூபாய் அரிசி கொஞ்சம் விலை வைக்கப் பட்டு (கடைத்தேங்காய் தானே..) கேரள பாவப்பட்ட மக்களுக்கு விற்கப் படுகிறது..உள்குத்து விவகாரங்களால், ஏதோ அடிக்கடி பிடிபட்டாலும்,குறைய வில்லை.விவசாயத்திற்க்கு ,உபரியாக மீதமான தண்ணீரைக்கூட தராமல் விளைச்சலை மட்டும் சுரண்டும் சேட்டாக்களே.. மன்னிச்சிக்கோங்க.. எங்க தமிழக பொது மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் ,அநியாயமா பக்கத்து நிலத்துல பாயுதேன்னு ஒரு ஆதங்கத்துல கேட்டுப்புட்டேன்..திருந்தவா போறிங்க.. பணத்துக்காக உங்களுக்கு உதவ தயார எங்க சைடுலயும் சிலர் இருக்கும் வரை..

இதையெல்லாம் படிச்சு எனக்கு ரொம்ப டென்ஷனாகிருச்சா... அப்புறம் டென்ஷன எப்படி கூல் பண்ணினேன்னு கேக்கறிங்களா?,,

ஹிஹி.. நேத்து வாங்கின "சக்கரை பாகுல மிதந்துக்கிட்டிருக்குற குளோப் ஜாமுன்" டின்னை எடுத்து


இப்படி ஸ்பூனில இப்படி எடுத்து திறந்து..இப்படி ஒரு கடி கடிச்சிக்கிட்டா

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... தேவாமிர்தம் மாதிரி கரையுது.. டென்ஷன் ஓடியே போயிருச்சு..


அதுலயும் இதுல சத்துக்கள் வேற அடங்கியிருக்காம்ல்ல..
சுத்தமான பாலாடையில செஞ்சதுங்க...

குடுத்து வைச்ச குடும்பஸ்தர்கள் வீட்டுலயே செய்ய சொல்லி சாப்பிடுங்க..பாவப்பட்ட ஆத்மாக்கள் நீங்களே செஞ்சு குடுங்க .....:)))))

பிற்ச்சேர்க்கை.: இப்போ தான் பார்த்தேன். நம்ம இம்சை அங்கிள் என்னியசீரியஸ் பதிவு” போடச் சொல்லி அழைப்பு குடுத்திருக்காரு... சரி குட்டீஸ் பவன் நம்ம ஆளாசே.. அதனால இந்த பதிவையே (ஹலோ... என்ன சிரிக்கிறிங்க?. இது சீரியஸ் பதிவா தெரியலையா உங்களுக்கு ?..அவ்வ்வ்வ்.... ) அவருக்கு டெடிகேட் செஞ்சுடறேன். போன மொக்கை சங்கிலியே இன்னும் ஆக்‌ஷனுல இருக்குறதாலயும் , மொக்கை பதிவர்கள்ன்னா நெறய நண்பர்கள் இருக்காங்க. சீரியஸ் பதிவர்களுக்கு எங்கே போவேன்?.. அதனால சீரியஸ்ஸா எழுதுற நண்பர்களே ,.நீங்களே வாலிண்டியரா வந்து,இம்சை அங்கிளின் கோரிக்கையை தொடருங்களேன்....:)

Friday, January 4, 2008

கத்தார் பதிவர்கள் மாநாடு.1300 டிக்கெட்டுக்களில்,முக்கால்வாசி விற்று தீர்ந்த அதிசயம்.....

அதிசயம்.. ஆச்சர்யம்...திட்டமிட்டப்படி ,வரும் ஜனவரி 25ம் தேதி தோஹாவில் நடக்கவிருக்கும் கத்தார் பதிவர்கள் மாநாட்டுக்கு, அலைகடலென மக்கள் கூட்டம்.அரங்கத்தின் கணிக்கப்பட்ட 1300 இருக்கைகளை விட அதிகமாக திரண்டு தமிழர்கள் முன்பதிவு. முன்பதிவு நிலையங்கள் (டிக்கெட் கவுன்ட்டர்கள்) குறிப்பிட்ட காலத்துக்கு முன்னவே மூடப்படும் வகையில் சரித்திரம் காணாத சூடான நுழைவுச்சீட்டு விற்பனை.நிற்க வேண்டிய அளவு கூட்டம் இருக்கும் என எதிர்பார்ப்பு.

சரி சரி முறைக்காதிங்க... மேட்டரை சொல்லிடறேன்..

தமிழ் இணையத்தின் புதுவரவான ஜாலி ஏன்ஜல்ஸ் சிந்து , செளமியாவின் அப்பாவும்,என்னுடைய அருமை நண்பரும்,"பொன்ஸ் "என்று பணி இடத்தில் அன்போடு அழைக்கப் படுபவருமான நண்பர் திரு.பொன்சித்திரவேல் அவர்கள் , கத்தார் தமிழ் சங்கத்தின் ஒரு அங்கமாய் தமிழ் பணி ஆற்றி வருவது கத்தார் வாழ் தமிழ் மக்கள் நன்கு அறிந்ததே..

கடந்த முறை பொங்கல் விழாவுக்கு திரு.சாலமன் பாப்பையா,"அரட்டை அரங்கம் புகழ் ராஜா,திருமதி.பாரதி பாஸ்கர் போன்ற தமிழறிஞர்களை தோஹாவுக்கு அழைத்து வந்து தமிழ் சங்கம் சார்பில் நகைச்சுவை பட்டி மன்றம் நடத்தியதில் நண்பரின் பங்கு குறிப்பிடத் தக்கது.

பழகுவதற்க்கு எளிமை, வந்த நாட்டிலும் கூட பிள்ளைகள் தமிழை மறந்து விடக்கூடாது என்று தன் குழந்தைகளுக்கு தவறாமல் தமிழ் பயிற்றுவிக்கும் அவரது தமிழ் ஆர்வம் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை...சிந்து,செளமியாவின் இனிய தமிழ் பேச்சை கேற்கவே அவ்வளவு இனிமையாக இருக்கிறது.தமிழ் பதிவுகளுக்காக தமிழ் தட்டச்சு படித்து வருகிறார்கள். என் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்கத்தெரியாது என்று பெருமையோடு கூறும் சில பெற்றோர்களுக்கு இவரின் தமிழ் ஆர்வம் ஒரு படிப்பினையாய் அமைய வேண்டும்.

இந்த வருடம் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு," சன் தொலைக் காட்சி-அசத்தப்போவது யாரு? " புகழ் நகைச்சுவை கலைஞர்கள்
கோவை குணா,மதுரை முத்து, வடிவேல் கணேஷ்,ஈரோடு மகேஷ், கோவை ரமேஷ் ஆகியோரை கொண்டு ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியும்,வழக்கம் போல பள்ளி சிறுவர்கள்,சிறுமியர்,குழந்தைகள் கலை ,நடன நிகழ்ச்சிகளும் நடத்த சங்கம் தீர்மானித்திருப்பதை தெரிவித்தார்.

எப்போதும் போல தோஹா சினிமா அரங்கத்தில் இல்லாமல், இந்த முறை MES பள்ளி வளாகத்தில் நடக்கப்போகிறது.எனவே 1300 பேருக்கான இருக்கைகளே உள்ளதால்...இந்த வருடம் இடமின்மை மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.வழக்கம் போலவே எல்லாருக்கும் வசதியான விடுமுறை நாளான "வெள்ளிக் கிழமை"யில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதால் ,தமிழ் அன்பர்கள் குடும்பம்,குடும்பமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்...

நுழைவுச்சீட்டுக்களும் கூடிய விரைவில் தீரும் நிலை உள்ளதால் ,சிரமத்தை தவிர்க்க..நண்பர்கள் உங்கள் அருகில் இருக்கும், கீழ்காணும் அலைபேசி எண்களை தொடர்புக் கொண்டு நுழைவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

தமிழன்பர்கள் -
அருகில் உள்ள இடம் -தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி /அலைபேசி எண்கள்

திரு. சுப்பிரமணியன்- தோஹா- 4687408 / 5723114
திரு.அஷோக் -தோஹா- 4490155 / 5549378
திரு.சேகர் -தோஹா -4946387 / 5524704
திரு.வரதராஜன்- தோஹா- 4433644 / 5685652
திரு.SRM பாண்டியன் -மிசைத்- 4626679 / 5660684
திரு.பொன்சித்திரவேல் -அல் வக்ரா- 4645037 / 5615952
திரு.பாஸ்கரன் -அல்கூர் -4722736 / 5214385

நுழைவு சிட்டு
வினியோக பணியில்
நிறுவனங்கள்

Aryaas உணவகம் -மான்சூரா- 4419668
'' '' முந்தசா- 4360097
Dreams Studio- 4323575மேலும் இது பற்றி இன்னும் அறியாத மற்ற நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழி தகவல் அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.


கீழ் காணும் நிகழ்ச்சி அழைப்பிதழை பெரிதாக காண/மேலதிக விபரங்களுக்கு படங்களின் மேல் சுட்டவும்... ( ஃகிளிக்குங்க..)


அதுசரி...ஆரம்பத்துல" பதிவர்கள் மாநாடு "அது இதுன்னு எதோ கேட்ட மாதிரி இருந்துச்சேன்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது..
பல சமயங்கள்
கத்தார் கதாநாயகர்கள் அதாங்க.. நானு(ஹிஹி..) , நவின பாரதிய இளவரசர்,கானகத்தார்,கடகத்தார் எல்லாரும் ஒன்னா பதிவர்கள் சந்திப்பு நடத்தனுமின்னு பல முறை அலைபேசி,குறுந்தகவல் அரட்டை (சாட்) மூலம் முடிவு செஞ்சு ,ஆனால் சில பல காரணங்களால அது தாமதமாகிக்கிட்டே போவுது... நம்ம கானகத்தார் கூட இதைப்பற்றி அவர் பதிவில் சொல்லியிருந்தார்.

அதனால இதை பதிவர்கள் சந்திப்பிற்க்கு ஒரு வாய்ப்பா மாற்றிடலாமேன்னு எனக்கு ஒரு யோசனை.. மற்ற மூன்று பேருக்கும் அழைப்பு அனுப்பிட்டேன்.( நம்ம கடகம் மட்டும் வழக்கம்போல சாக்குப்போக்கு சொல்லி அடம்பிடிக்கிறாரு,...விட்டுருவோமா?... பாத்துடலாம்...:)))

இப்போ புரியுதா ,இந்த விழாவுக்கு ஏன் இவ்வளவு கூட்டம் அலைமோதுதுன்னு..

அட என்னங்க இது?.. கூட்டம் வரனுமின்னு அரசியல் கட்சிங்க மாத்திரம் ,விடுமுறை/பண்டிகை நாட்களில் கடற்கறையோரங்களுல மேடை போட்டு,சும்மா கடற்காற்று வாங்க வந்த மக்களையெல்லாம் பார்த்து
அலைகடலென திரண்டு வந்திருக்கும் தொண்டர்களேன்னு ஒரு ஃபில்டப்பு கொடுக்கலையா?.. பத்திரிக்கைகளில் முதல் பக்கத்துல போட்டுகலையா?..
அதே ஃபார்முலாவை, நான் பின்பற்றனா என்ன தப்புங்கறேன் ?... என்ன நான் சொல்லறது..


கத்தார் தமிழன்பர்களே.. உங்களை விழாவில் சந்திக்க தயாராகிறோம் கத்தார் கதாநாயகர்கள்... நாங்க ரெடி?.. நீங்க ரெடியா?..


என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்..

மொக்கை TAG

நேற்று நண்பர் “பொடியன்” சஞ்ஜய் அவர்களோடு சாட்டில் மொக்கை போட்டுக்கொண்டிருந்த போது “மாம்ஸ் நா புதுசா ஒரு TAG விளையாட்டு பதிவு போட்டிருக்கேன். அதுல முடிவுல உங்களுக்கும் ஒரு TAG குடுத்திருக்கேன்... உடனே ஏதாவது மொக்கை பதிவு போட்டு இன்னும் 4 பேருக்கு நீங்களும் TAG போடுங்கன்னாரு.. மொக்கை எதைப்பற்றி வேணாலும் இருக்கலாம் ,எதுவும் கட்டுப்பாடு இல்லை.. இது என்னோட வேண்டுகோள் இல்லை கட்டளை"ன்னு உரிமையா சொல்லிட்டாரு...

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கப்பறம் ,பல பதிவர்கள் இன்னும் ஸ்டார்டிங் ட்ரபிளால ,பதிவை ஆரம்பிக்க சோம்பிக்கிடக்கும் இந்த நேரத்தில் ,இந்த விளையாட்டு சங்கிலி தொடராய் எல்லாரையும் உசுப்பி விட வாய்ப்பு இருப்பதாலையும், மொக்கைதானே ,அதில்லென்ன கஷ்டம் ,அதுவும் எனக்கு :P என்பதாலும் , சஞ்ஜய்யின் அன்புக்கட்டளைக்கு இணக்கவும்.. இந்த இன்ஸ்டண்ட் மொக்கை...


.............................................................


பொதுவாகவே எனக்கு இந்த தினப்பலன்களில் நம்பிக்கை இல்லை.. ஆனா தினமும் நியுஸ் படிக்கும்போது ,அதையும் தவறாம பார்க்கறதுல ஒரு இன்ரஸ்ட் .

புத்தாண்டு அன்று காலையில தினமலருல வந்த தின பலன் பாருங்க...புத்தாண்டு தின ராசிபலன்

மேஷம்: மகிழ்ச்சி, குதுகலம் அதிகரிக்கும் நாள். நண்பர்களின் வாழ்த்துக்களை கேட்கலாம். ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். புதிய உறுதி மொழிகள் ஏற்று செயல்பட முற்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணக் கனவுகள் நனவாகும் நாள்.

ரிஷபம்: பெரிய மனிதர்களின் ஆசிகளைப் பெறும் நாள். நலிந் தோர் சிலருக்கு உதவிகள் செய்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் அணியலாம். மற்றவர்களின் மனம் புண்படாமல் நடந்து கொள்வீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நல்லது நடக்கும் நாள்.

மிதுனம்: புது உத்வேகம், தெம்புடன் செயல்படுவீர்கள். குடும் பத்தினருடன் கோயில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவீர்கள். நல்லவர்கள், பெரிய மனிதர்களின் வாழ்த்துச் செய்திகளைக் கேட்கலாம். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவதன் மூலம் பாராட்டுக்களைப் பெறலாம். ஆனந்தமான நாள்.

கடகம்: நல்லவர்களின் நட்பு கிடைக் கும் நாள். பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு திருப்தி அடைவீர்கள். பிரியமானவர் கள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்
களின் வாழ்த்துக்களைப் பெறலாம். அண்டை, அயலார் கேட்ட உதவிகளைச் செய்வீர்கள்.

சிம்மம்: உறவினர்களின் வாழ்த்து மழையில் நனைவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த முற்படுவீர்கள். ஆடை, அலங் காரப் பொருட்கள் வாங்கலாம். தொழிலை மேம்படுத்துவதில் நாட்டம் செல்லும். பொழுது போக்கு உல்லாச விஷயங்களில் நாட்டம் செல்லும். குடும்பத்தினருடன் சிலர் வெளியிடங்களுக்கு செல்லலாம்.

கன்னி: சந்திக்கும் நபர்களிடம் சந் தோஷத்தை பரிமாறிக் கொள் வீர்கள். உங்களை குறை சொன்னவர்களே பாராட்டுவர். வீட்டில் சில நல்ல நிகழ்ச்சிகள் நடக்கலாம். நெடுநாட்களாக தொடர்ந்த கெட்ட பழக்கம் ஒன்றை விட்டொழிக்க தீர்மானிப்பீர்கள். தொலைபேசி வழியில் முக்கியமான செய்திகளைக் கேட்கலாம். இனிமையான அனுபவம் பெறலாம்.

துலாம்: தொலைந்தன துன்பங்கள் என புதிய நம்பிக்கை பெறும் நாள். பணவரவுகள் தொடர்பாக முக்கியமான செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் எதிர்பாராத ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறலாம். உடன் பிறப்புக்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். தெய்வ அனுகூலத்தால் சில நல்ல காரியங்கள் நடக்கலாம்.

விருச்சிகம்: பரிசு, பாராட்டுக்கள் பெறும் நாள். காலை முதல் மாலை வரை உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பகட்டான ஆடை, ஆபரணங்கள் அணிந்து உங்களின் செல்வாக்கை வெளிப்படுத்துவீர்கள். வி.ஐ.பி.,க்கள் சிலரின் சந்திப்பு நிகழும். வசதிகள் கூடும் நாள்.

தனுசு: மனதில் நிம்மதி, பெருந் தன்மை குடிகொள்ளும் நாள். கலகலப்பான பேசி மற்றவர் களை மகிழ்விப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பால்ய நண்பர்கள் சிலருக்கு வாழ்த்துச் சொல்வீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விலை மதிப்புமிக்க பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும்.

மகரம்: வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். தெய்வ வழிபாடுகளின் மூலம் திருப்தி காண் பீர்கள். தர்ம, புண்ணிய காரியங்களுக்காக கணிசமாக செலவிடலாம். நண்பர்களுடன் பார்ட்டி, கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்த்துக் களைப் பெறுவீர்கள்.

கும்பம்: இறைவழிபாட்டின் மூலம் இன்பங்கள் அதிகரிக்கும் நாள். சோர்வாக அமர்ந்திருக்காமல் ஏதாவது வேலைகளை செய்து கொண்டிப்பீர்கள். மனைவி, குழந்தைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்ற பணத்தை தாராளமாக செலவு செய்வீர்கள். வெளியூர்களில் இருக்கும் சிலருக்கு வாழ்த்துக் கூறுவீர்கள்.

மீனம்: உள்ளத்தில் இனம்புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள். பழைய பொருட்கள் சிலவற்றை கழித்து விட்டு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பெண்கள் வழியில் சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம். எதிர்ப்புகள் போட்டிகள் குறைந்து ஏற்றம் பெறலாம். தொழிலில் மாற்றங்கள் செய்ய திட்டமிடுவீர்கள்.

இதுல உங்க ராசி எதுவா இருந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு எந்த ராசியோட பலனை பாத்துக்கிட்டாலும் ,பொருத்தமாத்தான் தோனும். ஏன்னா வாழ்த்து சொல்லறது,வாழ்த்து/பரிசு வாங்கறது எல்லாமே புத்தாண்டுக்கு எல்லாருக்கும் நடக்கற விசயம். இதை எம்புட்டு ஸ்மார்ட்டா இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் மிக்ஸ் பண்ணி பலன்னு போட்டு கலக்கறாய்ங்கல்ல... (ஏமாறது மக்கள் தானே..).இன்னும் மனம் பலமில்லா சிலபேர் இதை வெளையாட்டா எடுத்துக்காம ,சோகம்ன்னு போட்டிருந்தா ,உண்மையாவே சீரியஸ்ஸா சோகமாகிடறாய்ங்க... அதுதான் பாவமாயிருக்கு...


மொக்கைக்கு விளக்கம் குடுத்தா நல்ல பதிவாகிடும் ,அதனால நோ கமெண்ட்ஸ் ..நீங்களே எல்லா பலன்களையும் கம்பேர் பண்ணி புரிஞ்சிக்கோங்க..

இம்புட்டு கிண்டல் பண்ணுற நீ பின்ன ஏதுக்கு அதை போய் படிக்கனுமின்னு கேக்கறிங்களா?... பின்ன.. காலையில வாய்விட்டு சிரிச்சா ,அன்னிக்கு முழுக்க மனசு ஃபிரியா இருக்கும்ன்னு பெரியவிங்க சொல்றாய்ங்களே..:P
அதான் ராசிபலன் பகுதில வர்ர ஜோக்கை தினமும் காலையில தவறாம படிச்சிடறது..:P


ஆனா பொதுப்பலன் போல இல்லாம ,குறிப்பிட்ட பிறந்த நேரம்ல்லாம் வைச்சு,ஜாதகம் கணிச்சு சொல்லறதுல்ல..ஏதோ மீனிங் இருக்குங்கராய்ங்க...


எழுத்தாளர் சுஜாதா சொல்லறப்போல.. “சாதாரண மனித வாழ்க்கையை ,பிரபஞ்ச இயக்கங்களோட சம்பந்தப்படுத்தி சொல்லற பார்வை என்னை கவர்ந்தது. ஆனா இதுல உண்மையான விசயம் தெரிஞ்சவிங்க குறைவு”.


.............................................................


இந்த மொக்கை போதுமா?..இன்னும் கொஞ்சம் வேணுமா?..


சரி இப்போ விசயத்துக்கு வருவோம்....
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டு நான் அழைப்பு விடுக்கும் வீ.ஜ.பிக்கள் யாருன்னா... (மொக்கை எக்ஸ்பீரியண்ஸ் இருக்கிறவிங்க மட்டும் குடுத்திருக்கேன்).

1) மொக்கைன்னு சொல்லிட்டப்பறம் நம்ம தனிப் பெரும் தலைவி இல்லாமலா?...

2) இனி பதிவே போட மாட்டேன்ன்னு.. கூறிய என் இந்த தோழியின் முடிவைக்கேட்டு ஆரம்பத்துல லேசா “அப்பாடான்னு தப்பிச்சது உலகம்ன்னு“ தோணினாலும் இப்போ அவர் இல்லாத கும்மி உலகமே ஏதோ வெறுமையா தோனுற காரணத்தாலும் ,அவரது விரதத்தை கலைக்கும் விதமா அழைப்பு விடுக்கிறேன்.

3)சீரியஸ் பதிவுகளை தொடந்து போட்டு தாக்கினாலும்.தனது மொக்கை திறமையை தன்னை அறியாமல் அடிக்கடி வெளிப்படுத்தும் சகலகலா வல்லி ஆகிய இந்த தோழிக்கு அழைப்பு அனுப்பலேன்னாக்கா தமிழ் உலகம் என்னிய மன்னிக்காது..

4) பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய , தமிழிணையத்தின் நம்ம வீட்டு பிள்ளை ,என்ன பதிவு போடறது?ன்னு கேட்டே ஒரு பதிவு போட்ட மொக்கை வழிகாட்டி,நம் பாசத்துக்குறிய அபிமான நண்பர்.

5)உலகத்தை சுத்தினாலும் ,அம்மா அப்பாவை சுத்தினாலும் ஒன்னுதாங்கர போல , மொக்கை போட்டாலும் , (காயலான் கடையில, கிலோ கணக்குல பழைய பாட்டு சீடிகளா வாங்கி குவிச்சு அதை )பிட் எழுதி கொடுமை பண்ணரதும் ஒன்னுன்னு புரிஞ்சிக்கிட்டு,என்னிக்குமே மேட்டர் பஞ்சம் வராத பாட்டு பிட்டு டிரிக்ஸ்ஸ இந்த சின்ன வயசுலயே கண்டு பிடிச்ச புத்திசாலி குட்டீஸ் இவர்.

6)தலைவியோட பலமுனை தாக்குதல்களை சமாளிச்சு , எதிர்கட்சியா நிக்கும் ஒரே ஜித்தன் இவர்தான். தலைவியின் சீடர்களால் அன்போடு வம்பி என்று அழைக்கப்படும் இவர் ஒரு வாழும் வழிகாட்டி...

7) வயசோட அனுபவத்தையும் , மனசோட இளமையையும் கலந்து எல்லா ஏஜ் குருப்க்கும் பிடித்தமான இவர். இவர் போகாத வலை வீடுகளே இல்லைன்னு சொல்லலாம். எல்லாத்தையும் ரசிச்சு படிக்கும் தமிழ் வலையுலகின் திரிலோக சஞ்சாரி... இவர்.(ஆனா நாரதர் போலல்லாம் இல்லை ரொம்ப நல்லவர்.) .(இதுவரை இவர் மொக்கை போட்டதில்லை என்றாலும் நமக்காக செய்வார் என்று நம்புவோம்...)

8)ஜாலியா பதிவுகள்ல்ல கலக்கும்போதே ,சமயம் கெடக்கும் போதெல்லாம் டீடீ அக்கா,ரசிகன் போன்ற அப்பாவி நண்பர்களை வம்புக்கு இழுக்கும் மின்னல் இவர்...

9)இவர் இல்லேன்னா இந்த வீ.ஜ.பி லிஸ்ட் ஒரு நிறைவு பெறாது.. பார்வேர்ட் மெயில் வீட்டியோக்களை ,ஜிலு ஜிலு தலைப்பு வைச்சு,ஹிட் கவுண்டரை சும்மா கேதான் ஃபேன் போல சுத்த வைக்கிரதுல இவர அடிச்சுக்க ஆளே இல்லை..10)தேவதை கனவுகளில் அலுவலகத்துலயே டிரிம்ஸ் காணுபவர்...தேவதை வர்ணனை கவிதைகளால் கலக்குபவர்.(ஆனா இன்னும் நேருல தேவதையை பாத்துட்டாரான்னு தெரியாத ரகசியமாவே இருக்கு:)))


11) இணையத்தின் இளைய இளவரசி... செல்லக்குட்டி ,பொம்முக்குட்டி, அம்முக்குட்டி
1) “தனி”ப்பெரும் தலைவி கீதா அக்கா..
2) கும்மி புகழ் அன்புத்தோழி ஜி3
3) தலைவியின் பிரதான சிஷ்யை ”கவியரசி“ வேதா
4)” நம்ம வீட்டுப் பிள்ளை” அபி அப்பா..
5)சித்து,சித்துன்னு நம்மையெல்லாம் கடுப்பேத்தி சந்தோஷப்படும் நம்ம ஃபிரண்டு (ஃமைபிரண்டு)
6)”ஆல் இன் ஆல் அழகுராஜா” அம்பியண்ணன்
7)என்றும் பதினாறு ”சீனா சார்”
8)மின்னல் சுமதி
8)மங்களூர் மாமு..”சிவா தி கிரேட்”


10)தேவதையின் காதலன்(:P) டிரிம்ஸ் மாம்ஸ்...
11) “நறுக்”புகழ் நிலா செல்லம்...

ஓகே...இதுல அழைப்பு வாங்கனவிங்கள்லாம் சொம்மாவது ஏதாவது மொக்கை போட்டு ,தமிழ் பதிவர்களின் இந்த வருஷ பதிவுகளை உசுப்பி விட்டு சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.அப்படியே போற போக்குல குறைந்த பட்சம் 4 பதிவர்களை TAG செய்து விட்டு போகவும்.

ஸ்ஸ்ஸ் யப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே... இருங்க,...ஒரு சோடா குடிச்சிட்டு வர்ரேன்..ன்னு ஒரு தோழி சொல்ல ஆசைபடறது புரியுது.. :P

அதான் நாங்களே சொல்லிட்டோம்ல்ல...:P

ஏம்பா சஞ்ஜய்.. இப்போ திருப்தியா... ரசிகன் அங்கிள் சார்புல உங்க தோழி பொன்னரசிக்கும் ஒரு தாங்க்ஸ் சொல்லிடுங்க... மொக்கையை ஆரம்பிச்சு வைச்சதுக்கு...:P..Wednesday, January 2, 2008

"தனி"ப்பெரும் தலைவி "கீதா சாம்பசிவம் " டீச்சரின் நுண்ணரசியல் (பின்னூட்ட ஆதாரங்களுடன் ஒரு அலசல்..)


வருடத்தின் முதல் பதிவை எங்கள் தங்கத் "தனி" பெரும் தலைவி... கீதா அக்காவுக்கு ,அவரது கோடான கோடி சீடர்களின் சார்பில் சமர்ப்பிக்கிறேன்:P

"தனி"ப்பெரும் தலைவி "கீதா சாம்பசிவம் " டீச்சரின் நுண்ணரசியல் ( பின்னூட்ட ஆதாரங்களுடன் ஒரு அலசல்..)


கீதா அக்காவின் அனைத்துலக சிஷ்ய கேடிகளுக்கு ,நமது "தனி" பெரும் தலைவியின் கடல் போன்ற நுண்ணரசியலை கலையில் , தலைமை சிஷ்யன் (என்ன கொடுமைங்க..)என்ற முறையில் சிலவற்றை மற்ற சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுக்கவும்,தலைவியின் தனித்திறமையை பாராட்டுவதற்கும் தான் இந்த அவசரப் பதிவு...

நிற்க.. (பரவாயில்லை..பரவாயில்லை உக்காந்துக்கிட்டே படியுங்க....)


பாடம் நடத்தி பேர் வாங்க்கும் டீச்சர்களும் இருக்கிறார்கள்.. குற்றம் கண்டு பிடித்தே அவர்களை விட பேர் வாங்க்கும் டீச்சர்களும் இருக்கிறார்கள். நமது தன்னிகரற்ற தலைவி இரண்டாவது கொள்கையை ,தனது முழு முதற் கொள்கையாக எப்போதோ ஏற்று பொதுத்துண்டு சாரி.. போதுத்தொண்டு ஆற்றி வருவது நாம் அனைவரும் அறிந்ததே..

எப்படி எழுதினாலும்,அவருக்கென்று ஏதாவது ஒரு எழுத்துப்பிழை எப்படியோ வந்து விடுகிறது... எப்போதும் அவரிடன் திட்டு வாங்கி, வாங்கி பழகிப்போயி,இப்போ பதிவு ஸ்பெல்லிங் சரியா எழுதிட்டா ஏதோ மனசுல ஓரு நிறைவு இல்லாத மாதிரி ஃபீலிங்கு.. அதனால வேணுமின்னே ஒரு தப்பு நம்ம தனிப்பெரும் தலைவின் கர்ர்ர்ர்ர் & உர்ர்ர்ர்ர் களுக்காக விட்டு வைக்கிறது வழக்கமாகிடுச்சு. கண்டு புடிச்சுட்டா.. எதையாவது சொல்லி சமாளிக்கவும் கத்துக்கிட்டோம்ல்ல...

சரி தப்பா எழுதுனா திட்டறாய்ங்க.. சரியா எழுதுனா பாராட்டுவாங்களான்னாக்கா... அதுல தான் இருக்கு தலைவியின் நுண்ணரசியல்.. எங்க சிஷ்யர்கள பாராட்டுனா ,அட நாமலும் சரியாத்தான் எழுதறோம் போலன்னு ஒரு தன்னம்பிக்கை வந்து, அவிங்க பதிவுல வந்து ஸ்பெல்லிங் கண்டுபுடிக்க ஆரம்பிச்சுடுவாங்களோன்னு முன்னெச்சரிக்கையா... ஒரு திட்டு போட்டுட்டு.. நா பதிவையே இன்னும் படிக்கலை... வலை இணைப்பு சரியா வேலை செய்யலை.. அப்புறம் வந்து பாக்கறேன்னு .. எப்போ வருவாங்களோ?.. எந்த தப்ப கண்டுபிடிப்பாங்களோன்னு நம்ம மெரள வைச்சுட்டு ,அவிங்க ஹாயா சாம்பு மாமாவ குத்தம் சொல்ல போயிருவாங்க....

நம்ம தலைவிக்கு பதிவு புரியலேன்னாலும் .. பழிய தூக்கி நெட்வர்க்கு மேல போட்டுவாய்ங்க... அட இது நல்லாயிருக்கே .. இதை மத்த சீடர்களும் பின் பற்றலாமேன்னு இதை சொல்லறேன்.


சாம்பிளுக்கு ...சில பின்னூட்ட மிரட்டல்களை பார்த்து கற்றுக்கொள்ளவும்..


தலைமை சிஷ்யன்னு கூட பாக்காம (ஹிஹி.. நாந்தான் மாட்டிக்கிட்டேன்..) தலைவியின் அர்சனைகள்..

.......................................................................

கீதா சாம்பசிவம் said...
// "வல்வருகைகள்.. விடுமுறை எப்படி இருக்கு?.."
அது என்ன வல்வருகைகள்? இன்னுமா தமிழ் எழுத வரலை? நறநறநற ஒரு லட்சம் முறை எழுதுங்க இம்பொசிஷன் கொடுத்திருக்கேன், உங்களுக்கு! //

பதிவு: "அல்ப சந்தோஷங்கள்..."-ரசிகன்
.........................................................................

கீதா சாம்பசிவம் said...
//வேதா said...
இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு பெரிய ஆப்பு எங்க தலைவியின் தலைமையில் தங்களுக்கு கொடுக்கப்படும் என்பதை பணிவன்புடன் தெரிவிச்சுக்கிறேன் ;D //

வழிமொழிகிறேன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து சொல்லி இருக்கேன். நினைப்பு இருக்கட்டும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர
பதிவு: கலக்கப்போவது யாரு?(ஹாலிடே ஆப்பு ஸ்பெஷல்-இறுதிப்பகுதி)-ரசிகன்.

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
அதென்னமோ உங்க பதிவிலே மட்டும் ஒரே முறையிலே கமெண்ட் பப்ளிஷே பண்ண முடியலை, எர்ரர் வந்துடுது, முதலில் இதுக்கு ஏதாவது செய்யுங்க, அப்புறம் என்னையும் சேர்த்து, என் பதிவுகளிலே இருந்தும் மாட்டரை எடுத்து, ஜி3 பண்ண இப்படியும் ஒரு வழியா? சொந்தமா எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போக வேண்டியது தானே? சாட்டிலே மாட்ட மாட்டேங்கறீங்களே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கு ஸ்பெஷலா ஆப்பு காத்திருக்கு, இருங்க, சீக்கிரமாவே வரேன்.!
பதிவு:நச்சு நச்சுன்னு ஒரு கதை.. -ரசிகன்.


"இன்னிக்கு வெள்ளி கிழமையா போயிருச்சு ..இல்லாட்டினா நடக்கரதே வேறங்கர" ...வடிவேலு வசனம் உங்க ஞாபகத்துக்கு வந்துச்சுனா,அதுக்கு நான் பொறுப்பில்லைங்கோ.......

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
அப்பாடா, 3 முறை முயற்சித்து இப்போத் தான் கமெண்ட் பப்ளிஷ் ஆச்சு!
Friday, 21 December, 2007

பதிவு:கலக்கப்போவது யாரு? (ஹாலிடே ஆப்பு ஸ்பெசல்- சீசன்-II )-ரசிகன்.

.........................................................................


கீதா சாம்பசிவம் said...
இந்த மாதிரித் தப்புத் தப்பா எழுதிட்டு அங்கே வந்தும் என் மானத்தை வாங்காதீங்க. எல்லாம் ப்ளாகே போதும்!
Sunday, 09 December, 2007
பதிவு:தண்ணீரை கேட்டாக்கா விஷம் கொடுக்குது கேரளா....-ரசிகன்.

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
என்னங்க இது? பின்னூட்ட நகல்கள் பக்கம்தான் மூடிட்டீங்கனு பார்த்தா, இங்கே திறக்கவே வரலை?? அப்ப்ப்ப்ப்பாஆஆ உடம்பு முடியாதப்போக் கூட இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து பார்க்க வேண்டி இருக்கு!!!! நறநறநறநற
பதிவு:சானியா மிர்சாவும், படங்களும்.. -ரசிகன்.

..................................................................................................................................................


தலைவியின் கொலைவெறி பின்னூட்டத்தில் சிக்கித்தவித்த மற்ற நண்பர்கள் அனுப்பிய ஆதாரங்கள்...


..................................................................................................................................................

கீதா சாம்பசிவம் said...
வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருந்து, திருவாதிரைக்குக் களியும், குழம்பும் சாப்பிட்டு, இப்போ கிறிஸ்துமஸுக்குக் கேக்கும் சாப்பிட்டாச்சு, நல்லாவே இருக்கு எல்லாம். நேரமும் இல்லை, கணினி இணைப்பும் சரி இல்லை, அதனால் ரொம்பவே தாமதமான பின்னூட்டம் வருதோ என்னமோ தெரியலை, பார்க்கணும். :(
6:41 AM, December 29, 2007
பதிவு:கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்! -மாதவிப் பந்தல்

பசிக்குது.. இப்போ பதிவெல்லாம் யாரு படிப்பா?..ங்க்கரதை எம்புட்டு அழகா சொல்லியிருக்காங்கல்ல...

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
எர்ரர் னு வருது, வம்பு, ஏற்கெனவே, உங்க "பொங்க"ள்" படிச்சதிலே இருந்து பயமா இருக்கு, நல்ல பதிவு, அப்புறமா வந்து படிக்கிறேன், பின்னூட்டம் போடறதுன்னா முதலில் கண்ணாடியை பத்திரமா வைக்கணும்!:P அப்புறம் இந்த இணைய இணைப்பு வேறே! வரேன் மெதுவா!
December 29, 2007 6:14 PM
பதிவு:"அபிஅப்பாவும் அபுதாபியும்!!! பாகம் # 2"-அபி அப்பா

தப்பு எதுவும் கண்டுபிடிக்க முடியலேன்னாக்கா.. இணைப்பு மேல கொறை சொல்லி பதுங்கும் புலி.............................................................................

கீதா சாம்பசிவம் said...
நல்ல பதிவுகள்னு நினைக்கிறேன், மெதுவா வந்து படிக்கிறேன். :)))))))
December 29, 2007 6:37 PM
பதிவு:தலை'நகரம் - 4 (வாழ்த்துகள்)-Kaipullai Calling...

நோ கமெண்ட்ஸ்....:))
.........................................................................

கீதா சாம்பசிவம் said...
நறநறநறநறநற, இந்தப் பீட்டருக்குத் தானா இத்தனை அலட்டல்? க்ர்ர்ர்ர்ர்ர்., நான் படிக்கலை, நல்லா வாழ்த்துச் சொல்றீங்க! :)))))))
பதிவு:புத்தாண்டு வாழ்த்துகள்: template-தெரியல!

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
எது எப்படிப் போனா என்ன? இணையத்தின் தன்னிகரற்ற, ஒப்பற்ற, ஒரே தனிப்பெரும் தலைவி ஒருத்தி இருக்காங்கறதை மறக்காமல் இருந்தால் போதுமே! :)))))
December 21, 2007 11:50 AM

(பதிவு புரியலைன்னாலும் எப்படி சமாளிக்காய்ங்க.. நம்ம தலைவி..பாத்திங்கல்ல....)

ஆட்டோ கேப்புல அட்வர்டைஸ்மென்ட்...
.........................................................................

தப்பு கண்டு பிடிச்சப்பறம் ... வரிசையா தாக்கறதுல , எதிருல இருக்கிறவிங்க எழுந்திருக்க கூட வாய்ப்பு தரப்டாதுங்கர ரீதில பாயும் புலி..

"அனுபவிக்கனும்.’’ஏண்டா ஆண்டவா என்னை இத்தன அழகா படச்சே”ன்னு நெனச்சுகிட்டே பின்ன வேஷ்டியால முகத்தை துடைத்து கொண்டே வந்து "இந்த தபாவும் பொம்பள புள்ளயா போச்சு, காப்பி சுமாராவே இருக்கட்டும்"ன்னு சொல்லிகிட்டு பிளாஸ்க்கை நீட்டும் கோயிஞ்சாமியை "கொஞ்சம் தள்ளுப்பா"ன்னு சொல்லிகிட்டே நாம அடுக்களை உள்ளே போயிடனும்.
"-அபி அப்பா.

கீதா சாம்பசிவம் said...
இந்த "ண" "ன" வும் சரியா வரலையே, இதிலே அழகா இருக்கிறதா வேறே நினைப்பா? தாங்கலை, எண்ண முடியலை, என்னாலே, I give up!!!!!!!!!!!!!!
December 13, 2007 4:14 PM

கீதா சாம்பசிவம் said...
"என்ன பொங்களா?"ன்னு
தப்பு ஒண்ணு,

December 13, 2007 4:02 PM

கீதா சாம்பசிவம் said...
மூக்காலே "உறுஞ்சு"
தப்பு இரண்டு

December 13, 2007 4:05 PM

கீதா சாம்பசிவம் said...
"கட்டிக்கனும். "
தப்பு மூணு

December 13, 2007 4:06 PM

கீதா சாம்பசிவம் said...
"எதேர்ச்சையா"
தப்பு நாலு

December 13, 2007 4:07 PM

தொடர் தாக்குதலுக்கு உள்ளான
பதிவு:பொங்கல் சாப்பிடுவது எப்படி???-அபி அப்பா.

.........................................................................

கீதா சாம்பசிவம் said...
என்னத்தைச் சொல்றது? :((((((( எங்கே போனாலும் ஒரே சோகம் தானா????
பதிவு:Monday, December 03, 2007 5:25:00 PM- வைகை

எல்லா இடத்துலயும் பதிவுவலம் போறாய்ங்களாம்.. மறைமுகமா சொல்லறாய்ங்கலாமாம்.....

.........................................................................

(இது நுண்ணரசியலின் அடுத்த பாடம்: தலைவியையே வேதா சந்தடி சாக்குல டேமேஜ் செஞ்சிருந்தாலும்.. அதை கண்டுக்கவே கண்டுக்காம ,எதிரணியினரின் டேமேஜிக்கு ரிப்பீட்டேய்ய் போட்டு துரும்ப தூணாக்குறதுல நம்ம தனிப்பெரும் தலைவிக்கு நிகர் அவரே தான் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
)


கீதா சாம்பசிவம் said…
/
/ வேதா said…
இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்/
எங்க தானை தலைவி,
தனிப்பெரும் தலைவலி சீசீ தலைவி, எப்பவும் உங்க பேரு எல்லா பதிவுகளிலும் வர்ர மாதிரி உங்களை இந்த பதிவுலுகத்துக்கே அடையாளம் காட்டினவரின் கருணையுள்ளத்தை புரிந்துக்கொள்ளாமல் இப்டி ஒரு பட்டத்தை கொடுத்ததை எதிர்த்து அவர் சிஷ்யகேடிகள் அனைவரும் கன்னாபின்னாவென்று கண்டிக்கிறோம் :D //


ரிப்பீஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ

பதிவு:2007 பிளாகர் அவார்டுகள்-ammanchi

.........................................................................

நம்ம அணி ஆளு எதிரணில சொம்மா எட்டிப்பாத்தாக்கூட ,அவரு உளவாளியா அங்க வராருன்னு எதிரணிக்கு கடிதாசி எழுதி அணிசேராம பாத்துக்கிற தெறம வேற யாருக்கு வரும்.. நம்ம தலைவிய விட்டா... ???

கீதா சாம்பசிவம் said…

/
/அம்பி ..
"//கலக்கலோ கலக்கல்...//
@M'pathi, ஆமா! ஆமா! இப்ப தான் நீங்க எங்க கட்சி! :p"//


ஹாஹாஹாஹா, அசட்டு, அம்மாஞ்சி, அம்பியே, மதுரையம்பதிதான் இப்போதைய ஒற்றர் படைத் தலைவர், தெரிஞ்சுக்குங்க, காரியத்தோட தான் உங்க பக்கம் வந்திருக்கார், அதுவும் நான் சொல்லி! :P :P

பதிவு: 2007 பிளாகர் அவார்டுகள்-ammanchi

.........................................................................


அப்புறம் ஒரு கொசிப்....


நம்ம தலைவியின் நுண்ணரசியலால கவரப்பட்டு அவரோட பிரதான சீடை ..(அட நீங்க வேற ..சீடை முறுக்கு ஜட்டமெல்லாம் இல்லிங்க.. சிஷ்யன் - சிஷ்யை மாதிரி சீடன்- சீடை ..சரிதானே.. )
ஏற்கனவே அவரோட வழிகளை பின்பற்ற ஆரம்பிச்சுட்டாங்கன்னு ஊருக்குள்ள ஒரு நியுஸ் இருக்கு..

அதுகும் சாம்பிள் பாருங்க...

ஆதாரம் 1:
சிஷ்யை said…
// நண்பர்களே ஒரு வாரமாகவே என்னுடைய கணினியில் இணையத் தொடர்பில் ஒரே பனிமூட்டம், எப்ப தொடர்பு வரும் எப்ப போகும்னே தெரியலை :) தலைவி ஊருக்கு போகும் போது அவங்க இணைய ராசியை எனக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க போல, அதனால இந்த வருடத்தின் கடைசி பதிவா இந்த மொக்கை பதிவு :)//
பதிவு: .........................

ஆதாரம் 2:
சிஷ்யை said...
மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி. தற்போது இணையத்தொடர்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தனித்தனியாக பதில் சொல்ல முடியவில்லை, மன்னிக்கவும் :)
Mon Dec 24, 12:22:00 PM
பதிவு: ........................

இதுக்கு மேலையும் யாரு அந்த சிஷ்யைன்னு சொல்லவும் வேணுமா என்ன?..:P யாருன்னு உங்களுக்கே "புரிஞ்சி"ருக்குமே..:))))

இப்படி" நுண்ணரசியல் சாசனத்தை"யே கரைத்துக்குடித்த தனிப்பெரும் தலைவியின் சீடர்களாய் இருப்பதில் நாமெல்லாம் பெருமை அடையும் இந்த வேளையில்
கீழே இருக்கும் ஓட்டு பெட்டில ,மறக்காம உங்க ஓட்டையும் குத்திட்டுப்போங்க...


வாழ்க.. தலைவி.. வாழ்க
(தலைவி எல்லாருக்கும் போடும்) நாமம்...

இங்கனம் தலைமை சிஷ்யன்...
அகில உலக,யுனிவர்ஸ்,பால்வெளி மண்டல ,தயிர்வெளி மண்டல,வெண்ணை வெளி மண்டல தனிப்பெரும் தலைவி ஸ்பெல்லிங் மிஸ்டேக் ரிசர்ச் கழகம்..