Friday, January 11, 2008

**என்ன கொடுமைங்க இதெல்லாம்?...

இன்னிக்கு காலையிலேருந்து மழை பெய்ஞ்சுக்கிட்டிருக்கு ,குளிர் காற்று வேற.. லீவா இருக்கிறதால ரசிக்க முடிஞ்சுது. அடடா மழையால, இன்னிக்கு வெளிய போக முடியாதேன்னு , நியுஸ் படிக்க ஒக்காந்தாக்கா... அந்த கொடுமைய நீங்களே பாருங்க மக்கள்ஸ்...




புதுடில்லி: இந்திய கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் மீது சரக்கு கப்பல் ஏறிச் சென்றதால் சிறிது சேதமடைந்தது.
இந்திய கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ்., சிந்துகோஷ். கடந்த 7ம் தேதி சிந்துகோஷ் நீர்மூழ்கிக் கப்பல், மும்பையிலிருந்து 140 கடல் மைல் தூரத்தில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அந்த வழியே வந்த சரக்கு கப்பல், சிந்துகோஷ் மீது ஏறிச் சென்றது. இதில், நீர்மூழ்கிக் கப்பலுக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆழ்கடலில் நீர்மூழ்கிக் கப்பல் வெறும் 10 முதல் 20 அடி ஆழத்தில் சென்று கொண்டிருந்தது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர். இது பற்றி கடற்படை அதிகாரிகள் கருத்து எதுவும் கூறவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடப்பாவிங்களா...அப்படி என்ன பயிற்ச்சில ஈடுபட்டுக்கிட்டிருந்திங்க?. கப்பலை அது பாட்டுக்கு போக விட்டுட்டு எப்படி தூங்கறதுன்னா? .அதுவும் சாதாரண சரக்குக் கப்பல் வந்து மோதுற அளவு அலட்சியம்,அதுவும் பாதுகாப்பு முக்கியத்துவம் நிறைஞ்ச பாக்கிஸ்தான் கடல் பகுதிக்கு மிக அருகில்... அப்போ நீர்முழ்கி கப்பல்ல இருந்த சோனார்,ரேடார்,எச்சரிக்கை சாதன சங்கதிங்கள்லாம் என்ன ஆச்சு?.அதையெல்லாம் காயலான் கடையில போட்டுட்டு பேரிச்சம்பழம் வாங்கி சாப்பிடுங்க...நீங்கெல்லாம், எதிரி உங்க நீர்முழ்கிய அழிக்க டர்பிடோ ஏவுகனைகளை அனுப்பும்போது என்ன செஞ்சு கிழிக்கப் போறிங்கன்னு புரியலை..இதுல வேற உலகத்திலேயே ஜந்தாவது பெரிய கடற்படைன்னு சொல்லிக்கிறிங்க..ரஷ்யாக்கிட்ட அதுவும் சகெண்டு ஹாண்டுல நீர்முழ்கி கப்பல் வாங்க மில்லியன் கணக்கா கடன் வாங்கி ஆர்டர் பண்ணியிருக்கிங்க.... உங்களையெல்லாம் நாட்டுக்காக இரவு பகல் கண்ணுமுழிச்சு கடமை செய்யறவிங்கன்னு நம்பி நாங்கெல்லாம்.. அடப்போங்கப்பா... சிரிப்பா(கோபமாவும் தான்)வருது...

------------------------------------------

சாட்னா (ம.பி.,): தனது ஜூனியர் மாணவனை துப் பாக்கியால் சுட்டுக் கொன்ற பத்தாம் வகுப்பு சிறுவன் ராகுல் சிங், எட்டாவது வயதில் இருந்தே துப்பாக்கியில் விளையாடுபவன். கொலை செய்ததற்காக அவன் சிறிதும் வருத்தப்படவில்லை. ஓராண்டுக்கு முன், கிரிக்கெட் விளையாட்டில் ராகுல் சிங்குக் கும், இவனது ஜூனியர் மாணவன் தர்மு கோலுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. . இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. ஏற்கனவே ஆயிரத்து 500 ரூபாயை கொடுத்து, முன்னாள் ராணுவ வீரர் ஒருவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி வாங்கி வைத்திருந்தேன். அதை சும்மா சுட்டும் பார்த்தேன். இரண்டாவது குண்டு தர்முக்கு என்றாகிவிட்டது. அவனை சுட்டுக் கொன்று விட்டேன்’ என்கிறான் ராகுல் சிங், அழுத்தமான குரலில். தற்போது, இவ் வழக்கு சிறுவர்கள் சீர்திருத்த கோர்ட்டில் நடந்து வருகிறது

அடப்பாவமே...துப்பாக்கி கலாச்சாரம் வெளி நாட்டுல தான்னு நெனச்சேன்.இப்போ நம்ம நாட்டுலயும் ஆரம்பிச்சுடுச்சோ?.. வெறும் 1500 ரூபாய்க்கு துப்பாக்கி.அதுவும் நம்மோட வரிப்பணத்தை பென்ஷனா வாங்கிக்கிட்டிருக்குற முன்னாள் ராணுவ வீரர்(?)கிட்டேயிருந்து. இனிமே பிக் பாக்கெட் அடிக்கிறவனும்,சொம்புத் திருடனும் கூட 1500 ரூபாய் இன்வெஸ்ட் மூலதனமா செஞ்சு,ஆளுக்கு ஒரு துப்பாக்கி வாங்கிக்கலாம்.

ஓய்வு பெறும் ராணுவ வீரர்களை கொஞ்ச காலத்திற்க்கு அரசு கண்காணிக வேண்டியது அவசியம்ன்னு தோணுது.ஏன்னா.. நாட்டு பாதுகாப்புக்கு உதவுமின்னு ராணுவத்துல கொடுக்கப்படற ஆயுத தொழில்நுட்ப அறிவும்,பயிற்ச்சியும் ஓய்வு பெற்றப் பின்,பணத்துக்காக , இப்படி கள்ளத்துப்பாக்கிகளாகவும்,வெடி குண்டுகளாகவும் லோக்கல் தீவிரவாதிகளுக்கு போய் சேர வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.

---------------------------------------



கண்காட்சியில் அறிமுகப்படுத்தப் பட்ட இது, செப்டம்பரில் நாடு முழுவதும் ஷோரூம்களில் விற்பனைக்கு வந்து விடும். இந்தியாவில் ஆறரை லட்சம் பேர், ஸ்கூட்டர் மற்றும் பைக் ஓட்டி வருகின்றனர். அவர்களால் இதுவரை கார் வாங்க முடியாமல் இருந்தது. டாடா கார், அவர்களின் கனவை பூர்த்தி செய்யும் என்று அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.


ஹலோ சார்.. நீங்க நம்ம நாட்டுக்கு ஏதோ நல்லது செய்யனுமின்னு ஆசைப்படறது புரியுது.. அது உண்மையா இருந்தா,இந்த எலக்ட்ரிக் & கேஸ் கார்,ஸ்கூட்டர்ங்கராய்ங்களே..அதுல விலை குறைத்து புரட்சி செய்யுங்களேன். ஏன்னா இப்போ ஏற்கனவே நம்ம நாட்டுல வாகனங்கள் அதிகம்.அவை வெளியிடற புகையே சுற்றுசூழலுக்கு குடுக்கற சீர்கேட்டைப் பற்றி சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த சமயத்துல,
பைக்,ஸ்கூட்டர்களை விட அதிகமா பெட்ரோலை சாப்பிட்டு கார்பன் மோனாக்சைடை வெளியிடும் கார்கள் அவசியம் தானா?..

இப்போ பைக்,ஸ்கூட்டர் வைச்சிருக்குற நடுத்தர மக்கள் எல்லாம் ஒரு கெளரவத்துக்காக (நடுத்தர மக்களோட த்விற்க்க முடியாத சாபக்கேடு அது..) லட்ச ரூபா காருக்கு மாறிட்டா..ஏற்கனவே மூச்சு முட்டிக்கிட்டிருக்குற நகர டிராஃபிக் நிலமை என்னவாகும்?..

இந்த கார் பேக்டரி துவங்கும்போதே எம்புட்டு பிரச்சனை,விவசாய நிலம் கையகப்படுத்தல்ன்னு.., நிறைய பேருக்கு வேலை குடுக்கறோம்ன்னு வசதியான,சாமர்த்தியமான காரணத்தை அரசாங்கத்துக்கு சொல்லிட்டு ,அரசு உதவியோட பிரியா அரசு நிலங்களையும் கையகப் படுத்துக்கிட்டிங்க.,.உங்க லாபத்துக்காக எம்புட்டு மாஸ்டர் பிளான்லாம் போடறிங்க..அதுல ஒரு 5% மாவது நாட்டு நன்மைக்கும்,சுற்றுப்புற சூழலக்கும் சேத்தே பிளான் பண்ணலாம்ல்ல...


sub news in another news paper

டில்லியில் 42 கோடி மனித உழைப்பு மணி நேரம் இழப்பு: போக்குவரத்தால் 70 லட்சம் பேர் படாதபாடு:நமது சிறப்பு நிருபர்
டில்லியில் தினமும் பஸ் சை பிடித்து, ஆபீஸ் போய் திரும்புவதற்குள் மக்கள் படும்பாடு பரிதாபம்; வேலை செய்யும் நேரத்தை விட,பயணம் செய் யும் நேரம் தான் அதிகம்.இதனால், டில்லியில் வேலைக்கு செல்லும் 70 லட்சம் பேரின் உழைப்பு, ஒரு மாதத்துக்கு 42 கோடி மணி நேரம் வீணாகிறது என்று கண்டறியப்பட்டுள் ளது.இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு நடத்திய சர்வேயில் இந்த தகவல் தெரியவந்தது.
இவர்களின் மனித உழைப்பு நேரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால், உற்பத்தி, பணிகள் கடுமையாக தாமதம் ஆகிறது.போக்குவரத்து நெரிசலை போக்க, நியூயார்க், லண்டன், பிஜீங் போன்ற சர்வதேச நகரங்களில் உள்ள அதிவேக போக்குவரத்து திட்டங்கள் போல, டில்லியிலும் நிறைவேற்ற வேண்டும்.டில்லியில் இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட 11 கோடியே 20 லட்சம் வாகனங்கள் உள்ளன. போக்குவரத்துநெரிசலுக்கு அவை தான் காரணம்.


-------------------------------------

ஜந்து வருடங்களுக்கு மேல அரசாங்க புறம்போக்கு நிலத்தை ஆக்கரமிச்சு இருந்தா,அந்த நிலங்களுக்கு அவர்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு..

அடப்பாவிங்களா... பெரும்பான்மையான புறம்போக்கு நிலங்கள் அரசியல்வாதிகளாலும்,அவங்க சேர்ந்தவங்களாலும் தானே ஆக்கரமிக்கப் பட்டிருக்கு?.. அப்போ இது அவிங்க எடுத்த முடிவு தானா?..இப்போ நிலம் போற ரேட்டுக்கு,உலகப் பணக்காரர்கள் வரிசையில ,லைன் கட்டி நின்னாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லை..

தப்புசெஞ்சா அவங்க கிட்டயுருந்து அரசாங்க நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்காம ஜஞ்சு வருஷம் கையாலாகாததனமா இருந்ததே தப்பு. அவிங்க திறமைய பாராட்டி ,இப்போ அவிங்களுக்கு அதையே பரிசா வேற குடுக்கபோறேங்கறிங்க...


போறப்போக்க பாத்தா ,நீங்க குடுக்குற ஊக்கத்துல.. புறம்போக்கு நிலமில்ல.. அரசு கட்டிடங்கள்,அரசு அலுவலகங்கள் எல்லாத்தையும் ஆக்கிரமிப்பு பண்ண ஆரம்பிச்சாலும் சொல்லறதுக்கில்லை..
அரசியலா இருக்கறதால ..இதுக்கு மேல ஒன்னும் சொல்லறதுக்கில்ல.. எதுக்கு வம்பு :))

(ஜயோ... சொக்கா.. இது முன்னாடியே தெரியாம போயிருச்சே.. நானும் எம்பங்குக்கு பத்துப் பதிஞ்சு ஏக்கரை(?) வளைச்சு போட்டிருப்பேன்ல்ல..:)))


செய்தி 1:
ராணுவ ஆயுதக் கிடங்குகள் அடிக்கடி தீப் பற்றி அழிவு ...
செய்தி 2:
போர்கலத்தில் ராணுவத்தினரின் உயிர்காக்கும் உடைகள்,பாராசூட்கள் சியாசின் பகுதியில் பாதுகாப்பில் இருக்கும் ராணுவ வீரர்களுக்காக நம் அரசு பெரும் பொருட் செலவில் தயாரித்த குளிர் உடைகள் எல்லாம் காஷ்மீர் நடைப்பாதைக் கடைகளில் கிடைக்கின்றன..இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம்.
செய்தி:3
சரணடைந்த தீவிரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்திய ராணுவத்தில் மட்டுமே உபயோகத்தில் உள்ள ஆயுதங்கள். அதிகாரிகள் அதிர்ச்சி...

ஏம்பா எடிட்டரு.. இந்த மூனு செய்தியையும் சேத்தே போட்டிருக்கலாம்ல்ல.. சாதாரணமா படிக்கற எனக்கே ஏதோ புரியுதே.. அறிவு ஜீவிகள்,புலனாய்வு,இண்டலிஜியன்ஸ் பிரிவு மக்கள்ஸ் எல்லாம் என்ன செய்யறாய்ங்க..

அதுவும் தொடர்ந்து ஆயுதக் கிடங்குகள் தீக்கிரையாகறதும், ஆவணங்கள் அழியறதும்..தீவிரவாதிங்களுக்கு, சைடுல அவிங்க வித்து காசாக்கிய ஆயுதஙகள்/ஆயுதங்கள் கணக்கு தெரியக்கூடாதுன்னு தானே?.. இதுக்கு நீங்க ஏன் கண்டுக்காம துணைப் போறீங்கன்னு தான் இந்த சாதாரணப் பட்ட பிரஜைக்கு புரியலை...கொஞ்சம் விளக்குங்களேன்.


---------------------------------------------

சிவகாசி: உழைக்கத் திராணியற்ற முதியவரை குப்பைத் தொட்டியில் வீசி மனித நேயத்தை வளர்க்கும் செயல் சிவகாசியில் நடந்துள்ளது.பாசமுள்ள’ மகனை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி மருதநாடார் ஊரணி பகுதியில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். பழைய துணியால் சுற்றப்பட்ட பொருட்கள் மூட்டைகளாக கிடந்தன. அவற்றை துப்புரவு பணியாளர்கள் அகற்ற முயன்ற போது சந்தேகம் அடைந்தனர். மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 60 வயதுள்ள முதியவர் சுயநினைவின்றி கிடந்தார்.

மனித நேயமும்,பாசமும் கூட குப்பை கூளங்களாம் மாதிரி ஆகிடுச்சே, நம்ம நாட்டில்ன்னு வருத்தமாயிருக்கு.:(எம்புட்டு மிருக இதயமாயிருந்தா , உயிருள்ள ஒரு ஜீவனை மூட்டையா கட்டி ,மனசுல ஈரமே இல்லாம குப்பைத்தொட்டியில போட்டிருப்பாங்க..
ப்ச்.. எப்படியெல்லாம் ஆளுங்க இருக்காங்கல்ல.. நம்ம ஊர்லயே,....


.----------------------------


2 ரூபாய் அரிசி திட்டம். பலனடைகிறது கேரளா...


அட என்ன இது கேரளாவும் தமிழகத்தை பின் பற்ற ஆரம்பித்து விட்டதா?..ன்னு யோசிக்கிறிங்களா?.அட நீங்க வேற வயத்தெரிச்சலை கெளப்பாதிங்க.கேரள அரசியல்வாதிகள் என்ன அம்புட்டு மாக்கான்களா?... பெரும்பாலான ரேஷன் கடைகளில் அரிசி இல்லை.வரலை ,தீந்து போச்சுன்னு சொல்லறாய்ங்களாம்.நம்ம தமிழக ஏழைகள் இன்னும் பாவம்தான். ஆனா கேரளாவுக்கு செல்லும் லாரிகளில் தினமும் நூற்றுக்கணக்கான 2 ரூபாய் அரிசி மூட்டைகள் திருட்டுத்தனமா,ரேஷன் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன்,கேரள செக்போஸ்ட்டுகளின் அமோக ஆதரவுடன் கடத்தப் பட்டு 2 ரூபாய் அரிசி கொஞ்சம் விலை வைக்கப் பட்டு (கடைத்தேங்காய் தானே..) கேரள பாவப்பட்ட மக்களுக்கு விற்கப் படுகிறது..உள்குத்து விவகாரங்களால், ஏதோ அடிக்கடி பிடிபட்டாலும்,குறைய வில்லை.விவசாயத்திற்க்கு ,உபரியாக மீதமான தண்ணீரைக்கூட தராமல் விளைச்சலை மட்டும் சுரண்டும் சேட்டாக்களே.. மன்னிச்சிக்கோங்க.. எங்க தமிழக பொது மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் ,அநியாயமா பக்கத்து நிலத்துல பாயுதேன்னு ஒரு ஆதங்கத்துல கேட்டுப்புட்டேன்..திருந்தவா போறிங்க.. பணத்துக்காக உங்களுக்கு உதவ தயார எங்க சைடுலயும் சிலர் இருக்கும் வரை..

இதையெல்லாம் படிச்சு எனக்கு ரொம்ப டென்ஷனாகிருச்சா... அப்புறம் டென்ஷன எப்படி கூல் பண்ணினேன்னு கேக்கறிங்களா?,,

ஹிஹி.. நேத்து வாங்கின "சக்கரை பாகுல மிதந்துக்கிட்டிருக்குற குளோப் ஜாமுன்" டின்னை எடுத்து


இப்படி ஸ்பூனில இப்படி எடுத்து திறந்து..



இப்படி ஒரு கடி கடிச்சிக்கிட்டா

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... தேவாமிர்தம் மாதிரி கரையுது.. டென்ஷன் ஓடியே போயிருச்சு..


அதுலயும் இதுல சத்துக்கள் வேற அடங்கியிருக்காம்ல்ல..
சுத்தமான பாலாடையில செஞ்சதுங்க...

குடுத்து வைச்ச குடும்பஸ்தர்கள் வீட்டுலயே செய்ய சொல்லி சாப்பிடுங்க..பாவப்பட்ட ஆத்மாக்கள் நீங்களே செஞ்சு குடுங்க .....:)))))

பிற்ச்சேர்க்கை.: இப்போ தான் பார்த்தேன். நம்ம இம்சை அங்கிள் என்னியசீரியஸ் பதிவு” போடச் சொல்லி அழைப்பு குடுத்திருக்காரு... சரி குட்டீஸ் பவன் நம்ம ஆளாசே.. அதனால இந்த பதிவையே (ஹலோ... என்ன சிரிக்கிறிங்க?. இது சீரியஸ் பதிவா தெரியலையா உங்களுக்கு ?..அவ்வ்வ்வ்.... ) அவருக்கு டெடிகேட் செஞ்சுடறேன். போன மொக்கை சங்கிலியே இன்னும் ஆக்‌ஷனுல இருக்குறதாலயும் , மொக்கை பதிவர்கள்ன்னா நெறய நண்பர்கள் இருக்காங்க. சீரியஸ் பதிவர்களுக்கு எங்கே போவேன்?.. அதனால சீரியஸ்ஸா எழுதுற நண்பர்களே ,.நீங்களே வாலிண்டியரா வந்து,இம்சை அங்கிளின் கோரிக்கையை தொடருங்களேன்....:)

13 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

ரசகுல்லா மட்டும் நல்லாத் தெரியுது, நல்லா இருக்கே, அங்கே இதெல்லாமும் கிடைக்குதா என்ன?

said...

எதுக்கு வம்பு? :P ரசகுல்லா கமெண்ட்டே இருக்கட்டும். அப்புறம் என்னோட கணினிக்கே பிரச்னை வந்துடப் போகுது! :P :P

said...

ரசிகா, எங்கூர்லே அதுக்குப் பேரு ரசகுல்லா - உங்கூர்ல அது குலோப் ஜாமூனா -

Anonymous said...

really it is serius post.but you made it as comedy by adding your rasa kulla.it was mistaken rasigan

give serious matters alone.so peple can feel it seriously.

see the comments.all about comedy.not observed your impartant advice or knowladge about your thoughts.i just surpriced how exactly you are understanding news and current events in country.that is really exallent.

don't weaste your knowladge with such a bulsht comedy.give us your strange thoughts like this.which you are often doing.all the best.

said...

சீரியஸா தான் இருக்கு ஆனாலும் கடைசில ஜோக் பண்ணதால செல்லாது... வேற சிரியஸ் பதிவுக்கு வெயிட்டிங்...

said...

//அதுவும் சகெண்டு ஹாண்டுல நீர்முழ்கி கப்பல் வாங்க மில்லியன் கணக்கா கடன் வாங்கி ஆர்டர் பண்ணியிருக்கிங்க.... உங்களையெல்லாம் நாட்டுக்காக இரவு பகல் கண்ணுமுழிச்சு கடமை செய்யறவிங்கன்னு நம்பி நாங்கெல்லாம்.. /
நல்லா சொன்னீங்க!

said...

நீளமான பதிவா இருந்தாலும், படிக்கவும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தது!

said...

//கீதா சாம்பசிவம் said...

ரசகுல்லா மட்டும் நல்லாத் தெரியுது, நல்லா இருக்கே, அங்கே இதெல்லாமும் கிடைக்குதா என்ன? //

அட ஆச்சர்யமா இருக்கே!!! நம்ம கீதா அக்காவுக்கு எழுத்துப்பிழைகள் தான் தெளிவா தெரியுமின்னு இதுவரை நாங்கெல்லாம் நெனச்சிக்கிட்டிருக்கோம்ல்ல..:))))

said...

//கீதா சாம்பசிவம் said...

எதுக்கு வம்பு? :P ரசகுல்லா கமெண்ட்டே இருக்கட்டும். அப்புறம் என்னோட கணினிக்கே பிரச்னை வந்துடப் போகுது! :P :P//

அக்கா... இன்னிக்கு தோஹாவுல மழை வெளுத்துக் கட்டுது..இப்பத்தான் எனக்கு காரணம் புரிஞ்சுச்சு..
வருகைக்கும்,தீர்மானத்திற்க்கும் ரொம்ப நன்றிகள் அக்கா..ஹிஹி..:)))))

said...

// cheena (சீனா) said...

ரசிகா, எங்கூர்லே அதுக்குப் பேரு ரசகுல்லா - உங்கூர்ல அது குலோப் ஜாமூனா -//

சீனா சார் ரசகுல்லாங்கரது இந்திய பாஷை.. ரசம்ன்னா சர்க்கரைப் பாகுவை குறிக்கும். ஆங்கில முறைப்படி இந்த இந்திய உணவை குலோப் ஜாம்ம்பாங்க.பாலாடைக் கட்டி உலகம் (குலோப்) போல இருக்கரதாலையும் ,இனிப்பு ஜாம் மாதிரி தேன்பாகு இருக்கிறதாலையும் அப்படி சொல்லுவாங்க.. இப்ப சரியா?...ஹிஹி.... (ஆன்சர் சரியான்னு தெரியலை,ஏதோ தோணிச்சு.:))).ஆனா எங்க ஊருல குலோப் ஜாமுன்னு தான் கூப்பிடறோம்.:)
வருகைக்கு ரொம்ப நன்றிகள் சார்.

said...

// rK (Doha ,RTP) said...

really it is serius post.but you made it as comedy by adding your rasa kulla.it was mistaken rasigan

give serious matters alone.so peple can feel it seriously.

see the comments.all about comedy.not observed your impartant advice or knowladge about your thoughts.i just surpriced how exactly you are understanding news and current events in country.that is really exallent.

don't weaste your knowladge with such a bulsht comedy.give us your strange thoughts like this.which you are often doing.all the best.//

நீங்க சொல்ல வர்ர விஷயம் புரியுதுங்க கோதண்ட ராமன் சார்.பழக்க தோஷத்துல இப்படி செஞ்சுடறேன்.தவிறவும் ரொம்ப சீரியஸ்ஸாக்கிடறதை தவிற்க்கவும் விரும்புகிறேன்.அதான். வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் சார்...

said...

//இம்சை said...

சீரியஸா தான் இருக்கு ஆனாலும் கடைசில ஜோக் பண்ணதால செல்லாது... வேற சிரியஸ் பதிவுக்கு வெயிட்டிங்...//

என்னங்க அங்கிள், ஒடனே இன்னொரு சீரியஸ் மேட்டருன்னா நான் எங்கப் போறது?.. பேசாமா என்னோட சொந்தக் கதையைத்தான் எழுதனும்போல..:))))))

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்.. நம்ம் பவன் குட்டிக்கும் வாழ்த்துக்கள் சொல்லிருங்க.,...

said...

// Dreamzz said...

//அதுவும் சகெண்டு ஹாண்டுல நீர்முழ்கி கப்பல் வாங்க மில்லியன் கணக்கா கடன் வாங்கி ஆர்டர் பண்ணியிருக்கிங்க.... உங்களையெல்லாம் நாட்டுக்காக இரவு பகல் கண்ணுமுழிச்சு கடமை செய்யறவிங்கன்னு நம்பி நாங்கெல்லாம்.. /
நல்லா சொன்னீங்க!//

// Dreamzz said...

நீளமான பதிவா இருந்தாலும், படிக்கவும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தது!//

வாங்க டிரிம்ஸ் மாம்ஸ்.. கூழாங்கற்களுக்கு நடுவுல,சரியா மரகதக் கற்களை மட்டும் அடையாளம் கண்டுக்கறிங்க..
சரியான பாயிண்டை புரிஞ்சுக்கிறிங்க.. வாழ்த்துக்கள்..& நன்றிகள்.. வருகைக்கும்,பாராட்டுகளுக்கும்.