பதிவிலேயே பின்னூட்டம் போடுபவர்கள் சங்கம் ..- இடுகை 3
நாளைக்கி லீவுதானேன்னு இன்னிக்கி ராத்திரி , திரட்டி வழியா மேஞ்சிக்கிடிருந்த போது..
"உயிர் மெய் மலர்கள் "ங்கர பதிவுல இ.கா வள்ளி என்னும் பதிவரின் "தரையில் இறங்கும் விமானங்களும், எதார்த்தத்தின் வலிகளும்"ங்கர இடுகைய பாக்க நேர்ந்துச்சி..
அருமையா எழுதியிருக்காங்கன்னு தோனுச்சி எனக்கு ;உங்களுக்குமுன்னு நம்பரேன்..போய் பாருங்க..
மொதப்பத்திய படிக்கும்போதே.. அந்த இடுகைக்கு நா ரொம்ப அன்னியோன்யமாயிட்டேன்..ஏன்னாக்கா..கல்லூரி படிப்பை முடித்து ,நானும் வாழ்க்கை போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்ட போது, பல சமயங்களுல இதே மனநிலையில்தான் இருந்தேன்..,
சிந்தனைய தூண்டர மாதிரி இருந்ததால.. மூளை படிக்கும் போதே.. மனசுல தோனுவதை டைப்பிட்டேன்.. ஏன்னாக்கா.. பின்னாடி மறுபடியும் படிச்சாக்கா, இதே பாதிப்பு இல்லாம போகலாம்..
// தகுதியற்ற இடங்களில், தகுதியானவர்களைப் பார்க்கும் போதும், தகுதியான இடங்களில்
தகுதியில்லாதவர்களைப் பார்க்கும் போதும் மனதுக்குள் ஒரு குழப்பம் வரும், எல்லாமே சந்தர்ப்பம் சார்ந்தது தானோ என்று.//
அப்போது மட்டுமல்ல,இப்போதும் பலரை பார்க்கும் போது.. சர்வைவல் தியரிகள் (வாழ்வியல் நிலைப்பு விதிகள்) காலத்துக்கேற்ப மாறிடுச்சோன்னு தோனுது.
// யதார்த்தம் வலிக்காமல் இருக்கும் ஒரு புள்ளியில், நாம் இந்த வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டோம் என்று தான் தோன்றுகின்றது.//
இதையெல்லாம் கூட பாஷையால் உணர்த்த முடியுதே என ஆச்சர்யமாயிருக்கு..சூப்பர்..
சுடு நீரையும், சாதாரண நீரையும் பதமாக கலந்து இரண்டையும் ,நம் உடலுக்கு பாதிப்பில்லாத வெப்பத்திற்க்கு கொண்டுவருவது (குளிக்கத்தேன்.. வேறேதுக்கு?..) என்ற நீண்ட பொருளை" விளாவுதல்" என்ற ஒற்றை தமிழ் சொல்லில் அடக்கலாம்..மற்ற மொழிகளில் இதற்க்கு அர்த்தம் சிதையாமல் , சுருங்க சொல்லி விளங்க வைக்கும் வார்த்தை உண்டா என தெரிய வில்லை.. அதுபோல யோசித்துப்பார்த்தால், மேலே உள்ள ஒற்றை வரி தன்னுள் ஆழ்ந்த அர்த்தங்களை பொதிந்து கொண்டுள்ளதாகத் தோனுது.
// அழகான ஒரு கைவேலை செய்யலாம், கோலம் போடலாம், வரையலாம் ஆனால் அவற்றை ரசிக்கும் ஒரு உயிர் தான் நம் உடன் இருக்க வேண்டுமென்று நினைப்பது புத்திசாலித்தனம் இல்லையில்லயா?//
பின்னே.. காண கண் இல்லாவிட்டால் தங்கமென்ன?தகரமென்ன எல்லாம் உலோகம் தானே.நாம் உயிரோடிருப்பதை நமக்கு நினைவுப்படுத்துவதே நம்மை நேசிக்கும்/ரசிக்கும் மற்ற மனங்கள்தானே..(நண்பர்களையும் சேர்த்துத்தான்)
சொர்கமோ, நரகமோ வாழ்க்கையின் முடிவில் இல்லை..அது நமது தினசரி வாழ்வின் பயணத்தில் தான் உள்ளது.
அந்த பயணத்தை இன்பமயமாக்க நிச்சயம் துணையின் குணம் அவசியம்தானுங்க...
சில சமயங்களில் இந்த இயந்திர வாழ்க்கையில் ரசிக்க என்ன இருக்கிறது என ஒரு சலிப்பு உண்டாயிருந்தது..இப்போது இந்த வாழ்க்கை இயந்திரத்தின் ரிதத்தைக்கூட ரசிக்கத்தோன்றுகின்றது..மனம் ஒன்றுதான் ..பார்வை தான் வேறு.
// இவற்றையெல்லாம் செய்வது நேரத்தை வீணாகச் செலவு செய்வதாக நினைக்கும் உள்ளங்களுடன் கூட வாழ்க்கை அமையலாம், பணம் பண்ணும் உலகில் இவை பலருக்குத் தேவையற்ற விசயங்களாகிவிடுகின்றன. //
கட்டாயப்படுத்தி வருவதல்ல ரசனை.. , ஷேர் மார்க்கெட் கற்றுக்கொள் என என் நண்பர்களும் என்னை கட்டாயப்படுத்துவதை நான் நிச்சயம் விரும்ப மாட்டேன்.. அதே சமயம் கவிதைளை,மலரை ரசிக்க கற்றுக்கொள் எனவோ,விஞ்ஞானம் தெரிஞ்சிக்கலாமுன்னோ.. நானும் கட்டாயப்படுத்த மாட்டேன்.
நான் ரசிச்சதை சொல்லுவேன்,அவர்கள் ரசிச்சதை சொல்லுவார்கள்..எங்கள் ரசனைகள் வேறு .எங்கள் பார்வைக் கோணங்களும் வேறு.ஆனாலும் ஏதோ ஒரு ரசனை புள்ளியில் நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம்..எனவேத்தான் இப்பவும் நாங்கள் நண்பர்களாயிருக்கிறோம்.
ஒரே வகை மலர்களாலான மாலையைவிட ,வேறுபட்ட மலர்களின் சங்கம மாலையே..கவர்ச்சியானது..[நாஞ்சொன்னது "வேறுபட்ட " மட்டுமே.. "எதிர் குணமுள்ள "என்ற பொருளில் இல்லை].
கலையை ரசிக்க அதனை கற்றுக்கொள்ள வேண்டியதில்லை.. ரசனை இருந்தால் போதுமானது..அப்படியிருந்தாக்கா. ஒரு பரத நாட்டிய கலைஞர்.கூட .கராத்தே வீரரின் வித்தை ரிதத்தை ரசிக்க முடியும்.
// எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர்களே யோசித்து, நகைச்சுவையாக, சிரிக்க, சிரிக்க பேசும் அவர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்ததில்லை,//
வெளிச்சம் என்று எதை நாம் நிர்ணிப்பது..நாலு பேர் பாராட்டுவதையா?..இல்லை.. அப்படி பேசும் போது நமக்குள் /சூழ்னிலையில் ஏற்ப்படும் ஈடுபாடு/மகிழ்ச்சி மட்டுந்தான்.
// அழகு மட்டுமிருந்தால் போதுமா புத்திசாலித்தனம் வேண்டாமா என்ற கேள்வியும், புத்திசாலியான அழகில்லாத பெண்ணை ஏற்றுக்கொள்வாயா என்ற மறுகேள்வியின் பதிலான மௌனமும் எனக்கு யதார்த்ததின் வலியை உணர்த்தியது. //
என்னிய ரொம்பவே யோசிக்க வச்சிட்டீங்களே.. வள்ளி..
அழகு எத்தினி வருஷம் இருக்குமுங்க?. ஒரு குழந்தை பிறந்ததுக்கப்பறம்...ஜஞ்சி வருஷம்..? இல்ல ஆறு வருஷம்?.. அதுக்கப்பறம் அன்பும்,ஆறுதலும் ஆலோசனையும் சொல்லி தோளோடு தோள் கொடுக்க அறிவு தானே வேனும்...
அழகு வேணுமின்னாக்கா.. ஆரம்பத்துல கவரரதுக்கு ஒரு கருவியா இருக்கலாம் ஆனாக்கா..அந்த அட்ராக்ஸன் நிலைக்கனுமின்னாக்கா..அறிவு முக்கியம். எந்த ரசனையும் இல்லாத ஷோகேஸ் பொம்பையை யாரும் மனைவியா அடைய விரும்ப மாட்டாங்க..(ஹிஹி.. நானுந்தேன்..).
என்னிய பொருத்தவரை என்னோட ஓட்டு மொதல்ல அன்புக்குதாங்க.. நேசிக்கத்தெரிஞ்ச மனசுத்தான்,.. நெக்ஸ்டுதான் அறிவு..
அதுக்கப்பறந்தேன் கடைசியா அழகு..
[ஆனாக்கா,..அடுத்த பெண்கள் புத்திசாலியா இருப்பதைப் பார்த்து மதிக்கும் ,சில ஆண்கள் ,தங்கள் மனைவி புத்திசாலியாக இருந்தால் ஈகோவாக அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதை பார்த்திருக்கிறேன்.].
என்னிய பொருத்தவரை , என்னோட எதிர்காலதேவதை என்னிய விட புத்திசாலியா வந்தாக்கா.. சந்தோஷமா எல்லா பொறுப்புக்களையும் அவிங்ககிட்ட குடுத்துட்டு ..ஹாயா.. அவுங்கள புத்திசாலித்தனத்த ரசிக்கப்போயிடுவேன்னுங்க.. ஹிஹி.. (இப்பவே சரண்டரா?).
ஆனாக்கா..அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் போடுவேன்.. அப்பத்தான சமாதானப்படுத்த சான்ஸ் கெடைக்கும்..ஹிஹி..
//ஆனால் திறமை என்பதின் அர்த்தம், அதை வெளிக்காட்டுதல் மட்டும் தான் என்று நான் எண்ணியது தவறு என இப்போது நான் நினைப்பது தான் யதார்த்தத்தின் வலியை எனக்குப் போக்கியது.//
திறமைங்கரது ஒரு ஒளி வெளக்கு மாதிரி, அது எப்படியும் வெளிச்சத்த குடுத்துக்கிட்டுதேன் இருக்கும்.. நாம வலிந்து வெளிக்காட்ட அவசியமில்லை. கண்ணு நல்லா தெரியரவிங்களுக்கு தானாவே தெரியும்.
நாம்மல சூழ்ந்திருக்கரது குருடர்களின் கூட்டமாயிருக்கரதால வெளிச்சமே இல்லைன்னு சொல்ல முடியுமா என்ன?..
நம்ம கிட்ட இருக்குறது திறமையா இன்னு தீர்மானிக்கிற உரிமை நம்மகிட்ட இல்லீங்களே.. நம்மோட சூழ்னிலையும் ,சுற்றியிருக்கிற சமுகமும் தானே..?..
சமுகம் நமக்கு வெற்றிய குடுத்தா அது திறமை.. இல்லேன்னாக்கா.. ..........
உலகம் உருண்டைன்னு சொன்னவரை அவமதித்து பார்த்தது ஒரு சமுகம்..மாஜிக் வித்தை காட்டரவரை பாபான்னு காலுல விழுது இன்னொரு சமுகம்..இதுல யாரு தெறமசாலி ? யாருக்கு தெறமசாலி?..
// அடக்குமுறையை ஏற்படுத்திவிட்டு பெண்கள் முட்டாள்கள் தான் என்று சந்தோசப்படும் ஆண்கள், நிச்சயம் யதார்த்தத்தை அணுக பயப்படுபவர்கள் என்று தான் தோன்றும்.//
இது பெண்ணியவாத குரல் மாதிரி இருக்கே..,என்னிய கேட்டாக்கா இந்த காலத்துல நெறய ஆண்கள் தான் ,அப்பாவிகளா இருக்காங்கன்னு தோணுது..
// ஆனால் மதிப்புகள் என்பது, சரியானவர்களால் மதிப்பிடப்படும் போது தான் அறியவரும், அதும் தேவையான இடத்தில், கடலில் நீருக்கான மதிப்பும், பாலையில் நீருக்கான மதிப்பும் போல...//
ரொம்ப அருமையான ,பொருத்தமான உதாரணம்..
[கொஞ்சம் அகலப்பார்வையா யோசிச்சிப்பாத்தாக்கா.. இந்த பூமியோட வயசு பல கோடி ஆண்டுகள்..இனியும் பலகோடி ஆண்டுகள்..இதுல என்னோட குறுகிய கால நூற்றாண்டு வாழ்க்கைக்கும்,ஒரே நாள் முழு வாழ்க்கையையும் வாழும் ஈசலுக்கும் பெரிய வித்தியாசமிருக்கறதா தோன வில்லை. இதுல நா ஏன் என்னிய போன்ற வாழ்க்கையை கொண்டவர்கள்கிட்டயே என்னோட திறமைக்கு அங்கிகாரம் கேக்கனும்?]
// நான் எதை தகுதியாய் என்னிடம் பார்க்கின்றேன் என்பதிலும், மற்றவர் என்னிடம் தகுதியாய் எதைப்பார்க்கின்றார்கள் என்பதிலும் பெருவாரியாக வேருபாடு உள்ளது.
தகுதி என்பது நம்மிடம் இருப்பதில்லை, மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும், அவர்களால் உணர்ந்து கொள்ள முடிவதுமே தகுதியாகின்றது//
நான் ரொம்ப ரொம்ப ரசிச்ச விளக்கம் இத்தேன்..ஆனாக்கா இந்த "மற்றவர்" ங்கரவங்க கருத்து நிரந்தரமில்லையே.. "பெருவாரியானவர்கள்" அல்லது "என் வாழ்வில் பாதிப்பை ஏற்ப்படுத்த முடிந்தவர்கள்"ன்னு மாத்திடலாமா?
//நான் தேடிய அல்லது ஆசைப்பட்ட தகுதிகள் கிடைத்த மாத்திரத்திலும் கூட நம் தேடுதல்களும் எதிர்பார்ப்புகளும் முடிவதில்லை//.
உண்மைத்தான். நாம் முன்னே ஆசைப்பட்ட தகுதிகளின் தற்போதைய மதிப்பும் மாறிவிட்டிருக்கிறது..நாம் எப்போது தேடல்களை ஆரம்பிக்கிறோமோ அங்கே நமது முன்னேற்றம் துவங்குகின்றது .எங்கே நமது ஆசைகளை / எதிர்பார்ப்புகளை நிறுத்துக்கிறோமோ அங்கே நமது வாழ்க்கை முடிகின்றது..
// தான் போகும் இடத்தின் சூழலுக்கேற்ப தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற யதார்த்தம் தான் வெற்றிகரமான ஒரு வாழ்வியல் தத்துவமாக எனக்குப் படுகின்றது.//
நமது எண்ணங்களுக்கு ஏற்ப, நாம் போகும் சூழலை பக்குவமாக மாற்றுவதுதான் வெற்றிகரமான ஒரு வாழ்வியல் தத்துவமாக எனக்குப் படுதுங்
க..
பின் குறிப்பு:
இது யோசிச்சி எழுதியது அல்ல.. இப்போது தோனுவத எழுதியது.(பொலம்பல படிச்சாலே புரியுதே..)
இம்புட்டு பெரிய புலம்பல் , நீங்க படிச்சி மண்டைய குழப்பிக்க அல்ல..
நான் எதிர்காலத்தில் ,இந்த தருணத்தில் இருந்த ,என் மனநிலையை லேசா ஞாபகப்படுத்திக்கொள்ள மட்டுந்தேன்.
ஏன்னாக்கா இப்பிடி ரசிக்கும் மனநிலையில, என்னையே நான் ரசிக்கிறேன்..ஹிஹி..(இது வேறயா?..)
(இது தான் எங்க்கிட்ட ஒரு பெரிய கெட்டப்பழக்கங்கரது.. முன் குறிப்பா போட வேண்டியதையெல்லாம் பின்குறிப்பா போட்டுடறேன்..ஹிஹி..]
எப்படியோ இன்னைய லீவு சுவரஸ்யமா சிந்தனையில போச்சு.. நன்றிகள். இ.கா வள்ளி அவர்களுக்கு..
Saturday, November 17, 2007
பதிவிலேயே பின்னூட்டம் போடுபவர்கள் சங்கம் ..- இடுகை 3
Subscribe to:
Post Comments (Atom)
58 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
vanakkam, nanum ungal katchi than. Anbodu isantha vaazkai romba avasiyam. aziyatha anbuthan endrendrum nilaithu irukkum. Anbu illa vittal athu enbuthool porthyia udambunnu valluvare sollitare.
ayyo, nan than firsta. Pudusa vanthrukken.
tamilla type adika innum pazagala.
// அழகு எத்தினி வருஷம் இருக்குமுங்க?. ஒரு குழந்தை பிறந்ததுக்கப்பறம்...ஜஞ்சி வருஷம்..? இல்ல ஆறு வருஷம்?.. அதுக்கப்பறம் அன்பும்,ஆறுதலும் ஆலோசனையும் சொல்லி தோளோடு தோள் கொடுக்க அறிவு தானே வேனும்...//
வாஸ்தவம்தான் ரசிகரே.
மிக்க நன்றி ரசிகன், நான் ரசித்து போட்ட ஒரு பதிவு, ஆனால் யாரும் பின்னூட்டம் இடலயே ரொம்ப மோசமா எழுதிட்டமோனு நினைத்துக்கொண்டிருந்தேன், உங்கள் இந்த ஒரு பதிவு எனக்கு மன நிறைவை கொடுக்கின்றது..
நீங்கள் எடுத்துக்காட்டியிருந்த அத்தனை வரிகளும் நான் மிகவும் ரசித்து எழுதியவை..
எளிமையாக, மிக்க நன்றி...
வள்ளி.
ரசிகன், தங்களின் மறு பக்கத்தைக் கண்டேன். ரசித்தேன். மகிழ்ந்தேன். ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். சக பதிவரின் பதிவை படித்து, பாதிக்கப்பட்டு, வரிக்கு வரி ரசித்து, மறுமொழி இட்டு - பின்னூட்டத்தையே ஒரு பதிவாகப் போடுவதென்றால் ????
இவ்வலைப்பூ ஆரம்பித்த போது, புகைப்படங்கள் அதிகம். பிறகு மொக்கைப் பதிவுகள். நகைச்சுவைப் பதிவுகள். கலாய்க்கும் பதிவுகள். இப்பொழுதுதான் திறனாய்வுப் பதிவுகள்.
திறமையை வீணாக்க வேண்டாம். சீரியஸ் பதிவுகளுக்கு வாருங்கள். இப்பொழுதே சக பதிவர்கள் அனைவருக்குமே தங்களைத் தெரியும். இனி பதிவுகளில் ஈடுபடுங்களேன்.
நன்றாக இருக்கிறது ரசிகன்.
தோழி வள்ளியின் உணர்வுகள் எமக்கும் புரிகின்றது.நானும் மிகவும் ரசித்தேன்.அதற்கான உங்கள் விளக்கங்களும் very very nice.keep it up.
அசத்தலான விளக்க பதிவு...
அட நீங்க இது மாதிரி கூட எழுதுவீங்களா!! சூப்பரு!!
//ரசிகன், தங்களின் மறு பக்கத்தைக் கண்டேன். ரசித்தேன். மகிழ்ந்தேன்//
ரிப்பீட்டு!!
// புதுகைதென்ற்ல் said...
vanakkam, nanum ungal katchi than. Anbodu isantha vaazkai romba avasiyam. aziyatha anbuthan endrendrum nilaithu irukkum. Anbu illa vittal athu enbuthool porthyia udambunnu valluvare sollitare.
நல்வருகைகள் புதுகை தென்றல்..
உங்க புது வலைப்பூவுக்கு வந்தேன்.. ஆரம்பமே.. சர்வ மத ஒற்றுமையில ஆரம்பிச்சி..அன்புச்சமையல் வரை .. கலக்கியிருக்கீங்க.. (புதுசா ஆர்வத்துல திடீருன்னு ஆரம்பிக்கும் போது வர்ர கஷ்டங்கள்.. எனக்கும் நல்லாவே புரியுமுங்க்கோ..எல்லா தடையையும் தாண்டி,அருமையா தொடங்கியிருக்கீங்க சார்..வெளுத்து கட்டுங்க..)
ayyo, nan than firsta. Pudusa vanthrukken.//
நம்ம பதிவுக்கு மட்டுமில்லீங்க...எல்லாத்துலயும் நீங்களும் ,உங்க பதிவும் ஃபர்ஸ்ட் வர நண்பனின் .வாழ்த்துக்கள்.
// வாஸ்தவம்தான் ரசிகரே.//
வாங்க விஜய்.. அதானே.. இப்பிடி நம்பலபோல புரிஞ்சிக்கிற மனசுல்லவிங்க.. நெறயபேரு இருக்கிறாய்ங்கல்ல..
ஆதரவுக்கு நன்றிகளுங்க...
// இ.கா.வள்ளி said...
மிக்க நன்றி ரசிகன், நான் ரசித்து போட்ட ஒரு பதிவு, ஆனால் யாரும் பின்னூட்டம் இடலயே ரொம்ப மோசமா எழுதிட்டமோனு நினைத்துக்கொண்டிருந்தேன், உங்கள் இந்த ஒரு பதிவு எனக்கு மன நிறைவை கொடுக்கின்றது..//
நல்லா எழுதியிருக்கீங்க.. என்னியபோல மத்த நண்பர்களுக்கும் ,ஒன்னுக்கு ரெண்டு மொற அத படிச்சு ரசிக்க அவகாசம் வேணூமில்லையா?..லேட்டா வந்தாவது வாழ்த்து சொல்லுவாய்ங்க பாருங்களேன்,..
நீங்கள் எடுத்துக்காட்டியிருந்த அத்தனை வரிகளும் நான் மிகவும் ரசித்து எழுதியவை..//
நானுந்தான் ரொம்ப ரசிச்சேனுங்கோ..
எளிமையாக, மிக்க நன்றி...//
ஒங்களுக்கு ரொம்ப கிராண்டாவே நன்றிகளுங்க..(நன்றி சொல்லறதுல நா எப்பவுமே சிக்கனம் பாக்கரதில்லீங்களே..ஹிஹி..)
நல்வருகைகள் சீனா ஜயா..
// திறமையை வீணாக்க வேண்டாம். சீரியஸ் பதிவுகளுக்கு வாருங்கள்.//
சீனா சார் என்ன இப்பிடி சொல்லிட்டீங்களே.. இனி சீரியஸ் மேட்டருக்கு நா எங்க போவரது?..என்னிய தெறமசாலின்னு வேற சொல்லிட்டீங்களே சார்.
எதப்பாத்தாலும் மொக்கையாவே தோனுதே..
இப்பிடி நமக்குன்னு ஒரு எல்லையை வகுத்துக்கிட்டாக்கா.. பின்னாடி அந்த சுய முத்திரையே நமக்கு..சுமையாயிடாதா?
ஆனாலும் இடை இடையில கொஞ்சம் சீரியஸ்ஸான மேட்டரயும் கொடுத்துக்கிட்டுதான இருக்கேன்..
என்ன அத கொஞ்சம் மறைமுகமா சொல்லியிருப்பேன்..ஹிஹி..
நீங்க உரிமையோட வந்து அறிவுரை சொல்லறதை கேக்க ரொம்ப சந்தோஷங்கள் சார்..
நாங்க மொக்க போட்டாலும் ,முழுசா அழுகாச்சி போட்டாலும் நிச்சயம் உங்க நட்பின் ஆதரவு எங்களுக்கு உண்டுன்னு உங்கமேல ஒருபெரிய நம்பிக்கை இருக்குங்க ஜயா.
ஆரம்பகாலங்களில் எங்களை ஊக்குவித்த உங்களுக்கு இல்லாத உரிமையா?.வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்..
// ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும்.//
நம்ம பின்னூட்டத்துலயே.. ஒவ்வோருத்தரோட வேறுபட்ட சிந்தனைக்கோணங்களை பாக்கும்போது நீங்க சொல்லறது 100% சரிதானுங்க சார்..
// பிரியமுடன் பிரித்தி said...
நன்றாக இருக்கிறது ரசிகன்.
தோழி வள்ளியின் உணர்வுகள் எமக்கும் புரிகின்றது.நானும் மிகவும் ரசித்தேன்.அதற்கான உங்கள் விளக்கங்களும் very very nice.keep it up.//
பாராட்டுக்கு.. ரொம்ப தாங்க்ஸ்ப்பா.. நாம் பெற்ற இன்பம் பெருக நண்பர்களும் ...சரிதானே..ஹிஹி..
(அத்தானே.. "நம்ம பதிவுலேயே பின்னூட்டம் போடுவோர் சங்கத்து கொள்கை"..)
// Dreamzz said...
அசத்தலான விளக்க பதிவு..//
வாங்க டிரிம்ஸ் மாமே..
உங்க சப்போர்ட்டுக்கு ரொம்ப நன்றிகள்..
// அட நீங்க இது மாதிரி கூட எழுதுவீங்களா!!//
ரசிகன்னு பேரு வச்சிக்கிட்டு இதுக்கூட செய்யலேன்னா நல்லாயிருக்காதுல்ல.. அதனாலத்தேன் நா ரசிச்சத அடிக்கடி இப்பிடி...ஹிஹி...
// ரிப்பீட்டு!!//
அதானே.. நம்ம வலையுலக தேசிய கீதத்தை யாரும் சொல்லலியேன்னு பாத்தேன்.. அந்த கொறைய நீங்க தீத்து வச்சிட்டீங்க மாம்ஸ்..
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.
நல்வருகைகள் புதுகை தென்றல்..
உங்க புது வலைப்பூவுக்கு வந்தேன்.. ஆரம்பமே.. சர்வ மத ஒற்றுமையில ஆரம்பிச்சி..அன்புச்சமையல் வரை .. கலக்கியிருக்கீங்க.. (புதுசா ஆர்வத்துல திடீருன்னு ஆரம்பிக்கும் போது வர்ர கஷ்டங்கள்.. எனக்கும் நல்லாவே புரியுமுங்க்கோ..எல்லா தடையையும் தாண்டி,அருமையா தொடங்கியிருக்கீங்க சார்..வெளுத்து கட்டுங்க..)
பு.தென்றல்: வலைப்பூ பார்த்தற்கு நன்றி நண்பரே.
ayyo, nan than firsta. Pudusa vanthrukken.//
நம்ம பதிவுக்கு மட்டுமில்லீங்க...எல்லாத்துலயும் நீங்களும் ,உங்க பதிவும் ஃபர்ஸ்ட் வர நண்பனின் .வாழ்த்துக்கள்
புது அட்மிஷன்னு ராகிங் பண்ணாமல்
வாழ்த்தி வரவேற்கும் அன்பு நெஞ்சகளூக்கு மிக்க நன்றி.
புதுசா விளம்பரம் என் பிளாக்கில் போட்ருக்கேன். அதையும் பாருங்கள்.
எப்பிடித்தான் இப்பிடி எல்லாம் சிந்திப்பீங்களோ. பொறாமையா இருக்கு.
//புது அட்மிஷன்னு ராகிங் பண்ணாமல்
வாழ்த்தி வரவேற்கும் அன்பு நெஞ்சகளூக்கு மிக்க நன்றி.//
வாங்க புதுகைத்தென்றல்.. நானும் இப்ப ஜீனியர் தானுங்க..நமக்கெல்லாம் ..பெரிய பெரிய சீனியருங்க பலவருஷமா இங்க இருக்காய்ங்க...நம்மை போன்ற புதியவர்களுக்கு தயங்காம ஊக்கம் தர்ராய்ங்க..நாங்க்கூட என்னோட"கைத்தட்டுங்க சார்"பதிவுல என்னோட மொதல் பதிவு பிரவேச அனுபவத்தை சொல்லியிருக்கேனில்ல ...நாமலும் நம்மோட பங்குக்கு தெறமையுள்ள புதியவர்களுக்கு ஆதரவு கூடுக்கனுமுங்க.செய்வீங்களா தென்றல்?..
// புதுசா விளம்பரம் என் பிளாக்கில் போட்ருக்கேன். அதையும் பாருங்கள்.//
நாந்தேன் அப்பவே ஓடிப்போயி மொத சீட்டு ரிசர்வ் செஞ்சிட்டேனே..ஹிஹி...
எடுத்திருக்கறது அருமையான மேட்டரு... கலக்குங்க...
சபாஷ் .. சரியான போட்டி...வாழ்த்துக்கள்.
// எப்பிடித்தான் இப்பிடி எல்லாம் சிந்திப்பீங்களோ.
வாங்க நளாயினி அக்கா .. நல்வருகைகள்.
"இப்படியெல்லாம்" == எப்படியெல்லாமுன்னு சொல்லலிங்களே.(.ஏதாவது உள்குத்தாயிருக்குமோ?..ஹிஹி...)
// பொறாமையா இருக்கு.////
என்னிய வைச்சு காமெடி கீமடி பண்ணலீங்களே..ஹிஹி...:)))
வருகக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிகள்..அக்கா..
//...நாமலும் நம்மோட பங்குக்கு தெறமையுள்ள புதியவர்களுக்கு ஆதரவு கூடுக்கனுமுங்க.செய்வீங்களா தென்றல்?..//
கண்டிப்பா செய்வேன். உங்களுக்கு முதல் பெஞ்ச் சீட் ரிசர்வ்ட். தங்களின் ஆலோசனை பட் தேங்கூடு ல் பதிவு செஞ்சாச்சு. பதில் இன்னும் வரலை.
பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் நண்பரே.
"மத்தவங்க வீட்டுல, சமீபத்துல ரசித்தது.." இதுல என்னோட 'பிடுங்கப்பட்ட மரங்கள்' கவிதையை போட்டதுக்கு நன்றி. :)
- சகாரா.
//கண்டிப்பா செய்வேன். உங்களுக்கு முதல் பெஞ்ச் சீட் ரிசர்வ்ட்//
ரொம்ப ரொம்ப நன்றிகள்ங்க புதுகைத்தென்றல்..
வாங்க சகாரா...நல்வருகைகள்..
பிடுங்க பட்ட செடியாவது வேற எடத்துல நட்டாக்கா வேர் பிடிக்கும்.
"பிடுங்கப்பட்ட மரங்கள்" என்று தலைப்பிலேயே..
அகதி என்ற சொல்லின் கொடுமையை உணர்த்தியிருந்தீர்கள்.. அதை கவிதை என்று சொல்வதா?.இல்லை ",பறி கொடுத்த கணவனோடு,ஆயிரம் ,ஆயிரம் ஆசைக்கனவுகளையும் தாய்மண்ணிலேயே,குழிதோண்டி புதைத்துவிட்டு, கையில் குழந்தையிருந்தும் அனாதையாய்.. மணல் திட்டுக்களில் விட்டுச் செல்லப்பட்ட தமிழ் சகோதரியின் உள்ளத்து இயலாமை எதிரொலி" என்று சொல்வதா? புரியாமல் நிற்க்கிறேன் கனத்த மனதோடு..
அருமையா இருந்துச்சிங்க..
rasigan,
as usual hero dialauge super.
//
அழகு எத்தினி வருஷம் இருக்குமுங்க?.
//
இதுக்கு மட்டும் பதில் சொல்லுறேன் அறிவும் அப்படித்தான் மழுங்கிகிட்டேதான் வரும். அதனால தான் பெரும்பாலான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய இடைவெளி.
இந்த வயசுல புத்தி எப்படி வேகமாகவும் சரியானதாகவும் ஒரு முடிவு எடுக்க முடிகிறதோ அது வயதான பெரும்பாலோரிடம் கிடையாது.
அறிவு மட்டும் போதாது, அழகு மட்டும் போதாது எல்லாம் பேலன்ஸ்டா இருக்கனும்.
சரி வந்தது வந்துட்டேன் பதிவுக்கு சம்பந்தம் இல்லாம ஒருபின்னூட்டம் போட்டுட்டு போயிடறேன்
பொண்ணு பாக்கிறப்ப அறிவு, மனசு எல்லாம் சரிதான் கொஞ்சம் அழகாவும் பாத்து கட்டிக்க!!
படிச்ச பொண்டாட்டிக்கும் படிக்காத பொண்டாட்டிக்கும் என்ன வித்தியாசம்?
படிச்ச பொண்டாட்டி வளைச்சு வளைச்சு கேள்வி கேப்பா!
படிக்காத பொண்டாட்டி முட்டாதனமா கேள்வி கேப்பா!!
so no escape.
// மங்களூர் சிவா said...
rasigan,
as usual hero dialauge super.//
வாங்க சிவா... நம்ம வாழ்க்கைக்கு நாம தான ஹீரோ..என்ன நாஞ்சொல்லறத்து?..ஹிஹி..
// அறிவும் அப்படித்தான் மழுங்கிகிட்டேதான் வரும். அதனால தான் பெரும்பாலான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய இடைவெளி.//
பெத்தவிங்களப் பாத்து நீங்க இங்கன சொல்லறிங்க.. அவிங்களோ.." பிள்ளைகளுக்கு இன்னும் அந்த அளவு அறிவு வளரலை .. சின்ன வயசுதானே?.. அது ,அதுக்கு ஒரு வயசு வரும்போது நாம சொன்னத தானா புரிஞ்சிக்குவாய்ங்க..ன்னுல்ல சொல்லறாய்ங்க...ஹிஹி..
[ நெசத்த சொல்லனுமின்னாக்கா.. வயசாக ,வயசாக சிந்திக்கிற அறிவு கொறைய ,கொறைய, அனுபவ அறிவு அதிகமாயிகிட்டே போவுது.. அந்த அனுபவ அறிவே பின்னாடி பெரும்பாலும் வாழ்க்கைய தரமா நடத்திக்கிட்டு போவ உதவுது..ஊர்ல,உலகத்துல நடக்காத அனுபவங்களா..நம்ம வாழ்க்கையில புதுசா நடந்துடப்போவுது?..ஹிஹி..
அனுபவ அறிவு மறக்க ஆரம்பிக்கிர ஸ்டேஜ் வரும் முன்னரே.. பிள்ளைகள் முடிவுகளில் தங்கள் ஆதிக்கத்தை நாட்டும் அளவு அனுபவத்தை பெற்று விடுகின்றார்கள். ].
// இந்த வயசுல புத்தி எப்படி வேகமாகவும் சரியானதாகவும் ஒரு முடிவு எடுக்க முடிகிறதோ அது வயதான பெரும்பாலோரிடம் கிடையாது.//
மாமே.. வயசானவங்க புத்தி எப்பிடி விவேகமாவும் ஞாயமாவும் ஒரு முடிவு எடுக்க முடியுதோ அது இள வயசுல பெரும்பாலோரிடம் கிடையாதுன்னு தோணுது.. அத்தான் இந்த காலத்து குடும்பங்களுல இம்புட்டு ஈகோ பிரச்சனைகள்..இல்லிங்களா?..
// அறிவு மட்டும் போதாது, அழகு மட்டும் போதாது எல்லாம் பேலன்ஸ்டா இருக்கனும்.//
இது ரெண்டுமே..உங்க வீடுல சொல்லிடரேன் மாமே..ஹிஹி..
ஆனாக்கா.. இந்த பர்சன்டேஜ் காமினேஷன் வருஷத்துக்கு வருஷம் மாறிக்கிட்டே போவுமே..
அறிவு கூடிக்கிட்டே போகும்.. அழகு கொறஞ்சிக்கிட்டே போவும்.(அத்தான் நேச்சுரல்).
அப்ப மறுபடியும் பேலன்ஸ்க்காக இன்னோரு கல்யாணம் செஞ்சிக்குவீங்களா?..ஹிஹி.. [ ஜய்ய்ய்யா.. உங்க வீட்டுக்கு வரும்போது தங்கச்சிக்கிட்ட போட்டுக்குடுக்க மேட்டர் கொடச்சுடுத்தே....:))))) )
[அதனாலத்தேன் வேலையில டாப்புல எக்ஸ்பீரியன்ஸ் ஆள வைக்கிராய்ங்க.. புது ஆளுக்கு சம்பளம் கொறைச்சி குடுக்கிறாய்ங்க...நீங்க சொல்லற கணக்கா அறிவு மங்கிக்கிட்டே வருதுன்னாக்கா.. இளமையான புது ஆளுக்கு நெறய சம்பளமும்.. எக்ஸ்பீரியண்ஸ் ஆவ ஆவ சம்பளத்த கொறைச்சுமில்ல குடுக்கனும்..ஹிஹி..]
// பொண்ணு பாக்கிறப்ப அறிவு, மனசு எல்லாம் சரிதான் கொஞ்சம் அழகாவும் பாத்து கட்டிக்க!!//
அறிவுரைக்கு ரொம்ப தாங்க்ஸ் மாம்ஸ்..
ஆனா பாருங்க.. எனக்கு அழகா தோனுறவிங்க .. மத்தவிங்களுக்கு அழகா தோனுவாய்ங்களான்னு தெரியலை..
மத்தவிங்களுக்கு அழகா தோனறவிங்க.. எனக்கு அம்புட்டு அழகா தோனலை..
அப்பறம் இப்ப அழகா எனக்கு தோனுறவிங்க.. அப்புறம் அழகா தோனுவாய்ங்களான்னு தெரியலை..
வாழ்க்கையில நாளுல மூணு பங்கு கூட இருக்கப் போறோம்..
அதனால மொதல்ல நல்ல ஃபிரண்லியா , ஜாலியா , ஹாப்பியா , கொஞ்சம் புத்திசாலியா இருந்தா போதுமின்னு நெனக்கிறேன்.. தப்புங்களா?...
ஜாலியா இருக்கிறவிங்க எந்த சூழ் நிலையையும் ஜாலியா எடுத்துக்கிட்டு,புத்திசாலிதனமா இறுக்கமான சூழலையும் மாத்திப்புடுவாய்ங்கல்ல?..
ஹாப்பியான ஆளுகூட இருந்தாக்கா.. நாமலும் ஹாப்பியா மாறிடுவோமுங்க...என்ன நாஞ்சொல்லறது..?.சரிதானே..?
// படிச்ச பொண்டாட்டி வளைச்சு வளைச்சு கேள்வி கேப்பா!//
நிச்சயமா சிஸ்டர் உங்க காதைப்பிடிச்சு வளைச்சு வளைச்சு (திருகி ம்பாங்களே..ஹிஹி..) கேள்வி கேக்கப் போறாய்ங்க..ஹிஹி..
//
வயசாக ,வயசாக சிந்திக்கிற அறிவு கொறைய ,கொறைய, அனுபவ அறிவு அதிகமாயிகிட்டே போவுது.. அந்த அனுபவ அறிவே பின்னாடி பெரும்பாலும் வாழ்க்கைய தரமா நடத்திக்கிட்டு போவ உதவுது
//
elders who got some bad experience in their life they thought that is life, thats what i come to mention here.
ஆஹா.. பேசாம பதிவுக்கு பின்னூட்டம் போடறதுக்கு பதிலா பின்னூட்டத்துக்கு பதிவு போடலாம் போல இருக்கே....
மக்கள்ஸ்.. அதுக்குள்ள நீங்க டென்சனாகி ஆட்டோவ ரெடி பண்ணாதிங்க.. நா அப்பிடியெல்லாம் பண்ணமாட்டேன்..
இது ரெண்டு பேச்சுலர் நண்பர்களுக்கிடையேயான கருத்துப் பறிமாற்ற உரையாடல் . அம்புட்டுத்தேன்...
[ மத்த பேச்சுலர் யாராவது.. பின்னூட்டத்த பாத்துப்புட்டா.. நீங்களும் கலந்துக்கலாமுங்க..ஹிஹி..
//
ரசிகன் said...
// அறிவு மட்டும் போதாது, அழகு மட்டும் போதாது எல்லாம் பேலன்ஸ்டா இருக்கனும்.//
இது ரெண்டுமே..உங்க வீடுல சொல்லிடரேன் மாமே..ஹிஹி..
//
I already decided no need of two intelligents in a house.
:-))))))
அப்ப தங்கச்சி இன்டலீஜியன்ட்டுன்னு சொல்லறீங்க..கரைட்தானே..ஹிஹி....:))))
//ரசிகன் said...
அப்ப தங்கச்சி இன்டலீஜியன்ட்டுன்னு சொல்லறீங்க..கரைட்தானே..ஹிஹி....:))))
//
ya ofcourse
//
எனக்கு அழகா தோனுறவிங்க .. மத்தவிங்களுக்கு அழகா தோனுவாய்ங்களான்னு தெரியலை..
மத்தவிங்களுக்கு அழகா தோனறவிங்க.. எனக்கு அம்புட்டு அழகா தோனலை..
அப்பறம் இப்ப அழகா எனக்கு தோனுறவிங்க.. அப்புறம் அழகா தோனுவாய்ங்களான்னு தெரியலை..
வாழ்க்கையில நாளுல மூணு பங்கு கூட இருக்கப் போறோம்..
அதனால மொதல்ல நல்ல ஃபிரண்லியா , ஜாலியா , ஹாப்பியா , கொஞ்சம் புத்திசாலியா இருந்தா போதுமின்னு நெனக்கிறேன்.. தப்புங்களா?...
ஜாலியா இருக்கிறவிங்க எந்த சூழ் நிலையையும் ஜாலியா எடுத்துக்கிட்டு,புத்திசாலிதனமா இறுக்கமான சூழலையும் மாத்திப்புடுவாய்ங்கல்ல?..
ஹாப்பியான ஆளுகூட இருந்தாக்கா.. நாமலும் ஹாப்பியா மாறிடுவோமுங்க...என்ன நாஞ்சொல்லறது..?.சரிதானே..?
//
dont expect lot. then disappoint will be more.
மாமே.. வெள்ளைக் கொடியா?..
ஹிஹி...
அழகை சொம்மா பாத்து கண்டுபுடிக்கலாம்.. ஒரு அறிவாளியை உணர இன்னொரு அறிவாளியால தான் முடியும்..
நிச்சயமா நீங்களும்,உங்க துணையும் புத்திசாலிங்கதேன் அமைவீங்க... வாழ்த்துக்கள்..
அப்பறம்... கொஞ்சம் அடிப்படை ரசனை குணம் இருக்கிறவிங்களா போதுமின்னு சொல்லியிருக்கேன்.
பின்னாடி நாம அவிங்களை எக்ஸ்பர்ட்டாக்கிட மாட்டோம்?..ஹிஹி...நம்பிக்கை இருக்கு.
// ஜாலியா இருக்கிறவிங்க எந்த சூழ் நிலையையும் ஜாலியா எடுத்துக்கிட்டு,புத்திசாலிதனமா இறுக்கமான சூழலையும் மாத்திப்புடுவாய்ங்கல்ல?..
ஹாப்பியான ஆளுகூட இருந்தாக்கா.. நாமலும் ஹாப்பியா மாறிடுவோமுங்க....?//
நாங்க்கூட ஜாலியான ஆளூதேன்.. நாம மாத்திப்புடுவோமில்ல..ஹிஹி...
//
நாங்க்கூட ஜாலியான ஆளூதேன்.. நாம மாத்திப்புடுவோமில்ல..ஹிஹி...
//
cant u change a beautiful girl into intellegent??
let me try man
today this is the only "JOODAANA" idugai
:-)))))))
ரெண்டுமே அமைஞ்சாக்கா வேணான்னு சொல்லலை..
ஒரு வேளை அழகு அம்புட்டு இல்லேன்னாலும் பரவாயில்லைன்னு சொல்ல வந்தேனுங்க...
ஆனாக்கா மினிமம் நல்ல அன்பான கேரட்டரும், புரிஞ்சிக்கிற அறிவும் மஸ்ட்டுங்க்கோ..ஹிஹி..
நீங்க அப்பிடி அழகை மட்டுமே விரும்பி, பின்னாடி அறிவாளியா ஆக்கி முடியருத்துக்குள்ள.. நீங்க விரும்பிய அழகு மாயமாயிடுங்க மாம்ஸ்..
//
நாங்க்கூட ஜாலியான ஆளூதேன்.. நாம மாத்திப்புடுவோமில்ல..ஹிஹி...
//
//
அழகை மட்டுமே விரும்பி, பின்னாடி அறிவாளியா ஆக்கி முடியருத்துக்குள்ள.. நீங்க விரும்பிய அழகு மாயமாயிடுங்க மாம்ஸ்..
//
just compare urseflf
VAAZKAIYE PORKALAM VAAZNDHUDHAAN PAARKKANUM
:-)))))))
ஆஹா.. அதுக்குள்ள தத்துவமெல்லாம் பேசர அளவு அனுபவப்பட்டுடிங்க.. தத்துவம் சூப்பரேய்ய்ய்.....
//
(KALYAANA) VAAZKAIYE PORKALAM
//
So u r accepting !?!?!!?
ஆமா அதுல என்ன சந்தேகம்.. போர்க்களம் இல்லேன்னாக்கா.. வெற்றி ஏது?..
ஆனாக்கா இந்த போர்க்களத்துல அன்பு,பொறுமை,விட்டுக் கொடுத்தல் எல்லாம்தான் ஆயுதங்கள்..
//
அன்பு,பொறுமை,விட்டுக் கொடுத்தல்
//
YAARU??
TOPIC IS CHANGING
ரெண்டு பேருக்குந்தேன்...
நமக்கு எப்பிடி போர்க்களமா இருக்கோ அப்பிடித்தானே அவிங்களுக்கும் இருக்கும்.
பின்னாடி இது பெண்ணிய - ஆணிய வாதமா மாறும் வாய்ப்பிருப்பதால்.. அவிங்கள கூப்பிடாததே நல்லதுன்னு படுது..
பின்ன நம்மக்குள்ள ஆரோக்கியமா டிஸ்கஸ் செய்யர மாதிரி அவிங்ககிட்ட வாய குடுத்து தப்பிக்க முடியுமா?..
ஹிஹி...(சும்மா..சும்மா....(நாளைக்கி பாத்துட்டு ஆரம்பிச்சிட்டாக்கா... அத்தான் ஒரு சேஃடிக்கு..ஹிஹி..)
பயனுள்ள கருத்து பறிமாற்றம். நன்றிகள் உங்களுக்கு..
இரவு..இல்ல.. இல்ல.. நல்லிரவு வணக்கங்கள் ( இந்தியாவுல இப்ப எப்படியும் நள்ளிரவாயிருக்குமில்ல?..]
goodnight sivaa maams...
Post a Comment