Saturday, January 12, 2008

** இன்று, அவளிடம் என் மனதைச் சொல்லிவிடப் போகிறேன்...


ஃபிரண்ஸ்,அந்த பொண்ணுக்கிட்ட எம்மனசுல இருக்குறத, இன்னிக்கு எப்படியும் சொல்லிடனும்ன்னு இருக்கேன்.இது என் வாழ்க்கையில முக்கியமான கட்டம்.அதான் உங்க எல்லார்கிட்டயும் ஜடியா கேக்கறேன்.

சொன்ன கிருஷ்ணனை சுற்றி தோழர்கள் ரமேஷ், சுரேஷ் & பாலா ,பால்ய தோழர்கள்.


ஆ"
ரம்பம்"

"
மாமே, இது உன்னோட வாழ்க்கை.நீ நேரடியா சொல்லறதுல தப்பெதுவும் இருக்குறதா எனக்குத் தெரியலை"...இது ரமேஷ்

இடம், கிருஷ்ணனின் மொபைல் கடை... படித்து முடித்துவிட்டு வேலைத்தேடி அலைந்து சலித்து,முடிவெடுத்து, கடன் வாங்கி, பேருந்து நிலைய அருகாமையில் இந்த மொபைல் கடையை துவங்கி,உழைக்க ஆரம்பித்ததிலிருந்து அவனது முன்னேற்றம் துவங்கியது.

இந்த அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தினமும் காலையில் அவன் கடைக்கு தானாய் வந்து தரிசனம் கொடுக்கும் தேவதையைப் பற்றி.. கல்லூரி மாணவி.தினமும் கிருஷ்ணனின் கடைக்கெதிரே,தனது வண்டியை நிறுத்தி விட்டு தோழிகளுடன் அரட்டையடிக்கவே, கல்லூரி பேருந்தில் செல்லும் பெண்.ராதா என்று அவளின் தோழி அழைத்ததிலிருந்து அவள் பெயர் தெரிந்திருந்தது இவனுக்கு...

என்றோ ஒரு நாள் இவள் வர கொஞ்சம் தாமதமாகிவிட.. பேருந்து கிளம்பி விடுமோ என்று அவசரத்தில் கிருஷ்ணனின் கடைக்கெதிரே வண்டியை விட்டு விட்டாள்.இவனும் இன்று ஒரு நாள் என்று நெனச்சா.. மறுநாளிலிருந்து தவறாமல்..,அவள் அவன் கடைக்கு எதிரே வண்டியை நிறுத்துவதும்,அவனைப் பார்த்து ஒரு சினேகப் புன்னகை செய்யறத்தும் சகஜமாகிடுச்சு...இவனும்தான்...

காலங்கள் ஓடின..(எந்த கிரவுண்டுலன்னெல்லாம் கேக்கப்டாது..). இப்போதெல்லாம் தானாக அவன் மனம் அவள் வரும் சமயத்தை எதிர்பார்க்குது...

காலையில அவளின் அதே புன்னகை.. அவள் சென்றதும் ஏதோ ஒரு தவிப்பு.. மாலையில் அவள் வரும் வரை.. மாலையில் அவளின் முகம் கண்ட போது அவனுக்கு வருமே ஒரு சந்தோஷம்.. அது இரவு கடையை அடைத்து செல்லும்வரை நீடிக்கும்..

எதிர்பார்ப்பு

"ஆனா எனக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்குடா... என் மனசை புரிஞ்சுப்பாளா?...ரொம்ப கோபப்படுவாளோ?.. இப்பெல்லாம் நைட்டு கூட தூக்கம் வர மாட்டேங்குது மாமே..அவளுக்கே தெரியாம, என்னை ரொம்ப கொடுமை பண்ணறாடா... "

" டூவீலர் வைச்சிருந்தும் ,வண்டிய நிறுத்திட்டு எதுக்கு பஸ்ல போகனும்.?. நிறுத்த வேற நெறய எடமிருந்தும் ,தினமும் எதுக்கு என் கடை எதிர தவறாம வரனும்..? ..நான் நெனக்கிறதுல எதனா தப்பிருக்காடா?.."

"அட என்ன மாமே,சப்ப மேட்டரு..நீ ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரியே. ஃபீல் பண்ணறியே... உனக்கு சொல்ல தைரியம் இல்லாட்டி எங்க கிட்ட விடு..பிரண்ஸ்செல்லாம் பின்ன எதுக்கு இருக்கோம்.இதுக்கூட உனக்கு செய்யலேன்னா எப்படி?.. உனக்கு தூது போக நானாச்சு.. கவலைப் படாதே.."

"வேணாம்டா மச்சி..அது இன்னும் பிரச்சனையாகிடும்.நானும் தினமும் அவளை பாக்கும் போதெல்லாம் எம்மனசுல இருக்குறதயெல்லாம் கொட்டிடனும்ன்னு பாக்கரேன்..ஆனா அவளை பார்த்த்தும்,ஏதோ ஒன்னு தடுக்குது..அதான்..."

மிரட்டல்

" டேய் எதுக்கு அவசரப்படறே.. லைஃப்ல இந்த நிலையை அடைய,எவ்வளவு கஷ்டப் பட்டு உழைச்சிருப்பே?அப்போ கூட, எவ்வளவு பொறுமையா இருந்திருப்பே.. இப்போ என்ன அவசரம்?.அந்த பொண்ணு இதை பிரச்சனையாக்கிட்டா,உனக்குத்தான் கெட்ட பேரு.. அப்புறம் யார்கிட்டயும் உன் முகத்தை கூட காட்ட முடியாது. ஜாக்கிரதை..."

"புத்திசாலியா இருந்தா,அந்தப் பொண்ணும் இதை தானா புரிஞ்சிக்கிட்டிருக்க வேணாமா?..அட்லிஸ்ட் தினமும் உன் பார்வையில் இருக்குற அர்த்தத்தையாவது புரிஞ்சிக்கிட்டிருக்க வேணாம்?,.. சொல்லறத கேளு மாமே.."

"அந்த பொண்ணும் தினமும் உன்னைப் பாத்து சிரிக்குதுன்னு தப்புக் கணக்கு போட்டுறாத. எப்ப வேணாலும் ,நான் சிரிச்சது உன்னைப் பாத்து இல்லை..உன் பின்னாடி வைச்சிருக்குற குழந்தை படத்த பாத்துதான்னு சொல்ல முடியும். பொண்ணுங்களைப் பத்தி உனக்கு அதிகம் பழக்கமில்லை.நமக்கு தெரிஞ்ச பொண்ணுங்களை வைச்சு எல்லாரையும் அப்படி நெனச்சுடாதே.."


"சில பெண்கள் நாம சொல்லர வரை காத்துக்கிட்டிருந்து,அதுக்கான சந்தர்ப்பங்களையும் உண்டாக்கிட்டு ,சொன்ன அப்புறம்,இல்லையே, எனக்கு அப்படில்லாம் தோணவே இல்லையேன்னு பட்டுனு சொல்லி நம்மையே ஜோக்கராக்கிடுவாங்க ..ஜாக்கரதையா இரு மாமே...அப்புறம் உன் இஷ்டம்."

"வேணுமின்னா நீயும் மறைமுகமா சொல்லிப்பாரு.. அந்தப்பொண்ணு புத்திசாலியா இருந்தா புரிஞ்சிக்கட்டும். இல்லாட்டி,இதெல்லாம் சொல்லி மட்டும் என்ன புரிஞ்சிக்கப் போவுதுன்னு விட்டுரு...உனக்குன்னு இருக்குறது,எத்தனை தடை இருந்தாலும், உன்னைத்தேடி தானா வரும்
" .இது பாலா..

ஆதரவு

"
அடப்பாவி.,. நம்ம நண்பன் ஆலோசனைக்கு நம்மளை கூப்பிட்டா இப்படி பயம்புறுத்தறியே அவனை.. மாமே இவன் கெடக்கறான்.. 23ம் புலிகேசி.."
"நண்பா, நான் சொல்லறேன் கேளு.. அந்தப் பொண்ணை பாத்தா நல்லப் பொண்ணாதான் தெரியுது..நிச்சயமா தப்பா எடுத்துக்க மாட்டாங்க. சும்மா தைரியமா சொல்லு..இந்த வருஷமாவது பிப்ரவரி 14 காதலர் தினத்தை கொண்டாட வேணாமா?.அதுவரை வெயிட் பண்ணப்போறியா?.. பின்னாடி உனக்கு சந்தர்ப்பமே கெடக்காம போயிறலாம்.. அதனால நேராவே சொல்லிரு,.. உன் நன்மைக்காகத்தான் சொல்லறேன்..
"

"சரிடா மச்சி.. நீங்கெல்லாம் குடுக்கற தைரியத்துல இன்னிக்கு அவக்கிட்ட என் மனசுல இருக்குறத சொல்லப் போறேன்.. எதுவும் தப்பாகிடாதே?.."

"எதுவும் ஆகாது?.. ஜமாய், நாங்கெல்லாம் இருக்கோம்ல்ல.. நீ சொல்லற வரை வேணும்ன்னா இங்கயே வெயிட் பண்ணறோம்.. உனக்காக.."

அவளுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிந்தது.. பாலா வாட்சைப் பார்த்துக்கொண்டான்.,. "மாமே எனக்கு ஆபிஸ் ரொம்ப லேட்டாகும்போல.." என இழுக்க... ரமேஷ் அவனை முறைக்க..

இதோ வந்துவிட்டாள் அவள்.,. அதே புன்னகை.. இன்றைக்கு வழக்கத்தை விட ரொம்ப அழகாயிருப்பதா பட்டது. எப்போதும் போல அவள் வண்டியை பூட்டிவிட்டு கிருஷ்ணனை பார்த்து ஒரு சினேகப் புன்னகையை சிந்த..

சொல்லவும்,முடியாமல் மெல்லவும் முடியாமல் கிருஷ்ணன் வெறும் வெற்றுப் புன்னகையை பூத்து வைக்க...இதோ அவள் கிளம்பி விட்டாள்.அடப் பாவமே இது தொடர் கதை தானா?..என அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க.

இவன் சரிப்பட மாட்டான்.. போய் சொல்லு மாமேன்னு அவனை தள்ளி விட்டார்கள் பசங்கள். அந்த சப்தத்தில்,கிளம்பிய அவள் ,நின்று திரும்பிப் பார்க்க.கிருஷ்ணனை அறியாமல்.. "என்னங்க,உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்.தப்பா எடுத்துக்காதிங்க" என்றான்.

ஆச்சர்யத்துடன் அவள் என்ன? என்பது போல பார்க்க, சொல்லிவிடலாமா என்பது போல நண்பர்களை திரும்பி பார்த்தான். நடத்து என்பது போல எல்லாரும் சைகை காட்டிவிட்டு அந்தப்பக்கம் திரும்பி அவர்களுக்குள் பேசிக்கொள்ள,தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தான் கிருஷ்ணன்.

ஒரு டுவிஸ்ட்டு

"
டம்.. நான் ரொம்ப கஷ்டப் பட்டு இந்த கடையை நடத்துக்கிட்டு வர்ரேன். அதுவும் மத்த கடைக்காரங்களை விட கொஞ்சம் அதிக விலை குடுத்து,நடை பாதைக்கு நேரா இந்த கடையை வாடகைக்கு எடுத்திருக்கேன்.அடுத்த மாசம் வர்ரபோற காதலர் தினத்துக்காக மொபைல் கம்பெனிகள் சிறப்பு சலுகைகளை அறிவிச்சிருக்குறதால இப்போ விற்பனை சூடு பிடிச்சிருக்கு.. நானும் கடன் வாங்கி அதிகமா ஸ்டோக் வைச்சிருக்கேன்.

நடைப்பாதையிலருந்து என்னோட கடைக்கு வர்ர வழியில குறுக்கே நீங்க வண்டிய நிறுத்திட்டுப் போறதால,கடைக்கு வர நினைப்பவங்க அதை தாண்டி வரும்போது,அருகிலேயே இருக்குற பக்கத்து மொபைல் கடைக்குள்ள புகுந்துடறாங்க...

நிறைய பேர கவனிச்சிருக்கேன் இப்படி. மாலையில நீங்க வண்டிய எடுத்துக்கிட்டு போனதும். நடைப்பாதை வழியா வர்ரவங்க.. நேரா இருக்குற என்னோட கடைக்குத்தான் வர்ராங்க..ஒரு நாள்,ரெண்டு நாள்ன்னா பரவாயில்லை,தினமும் வர்ரிங்க..நீங்க வண்டிய நிறுத்துற இடத்தின் மேல எனக்கு எந்த உரிமையும் இல்லேன்னாலும்...இந்த பிப்ரவரி 14க்குள்ள எனக்கு லாபம் காட்டியாகனும்.

வியாபாரம் அதிகமாகும் இந்த சீசன்ல, இப்படி ஒரு பிரச்சனை இருக்குறத நெனச்சு எனக்கு நைட்டுல தூக்கம் கூட வர்ரதில்லைங்க மேடம். தயவு செஞ்சு.. உங்க வண்டிய கடைக்கெதிரா பார்க் செய்யாம இருந்தா ரொம்ப உதவியா இருக்குமுங்க..
." மூச்சு விடாம சொல்லிட்டு..அவளது பதிலுக்கு காத்திருப்பு.அதுவரை கவனிக்காதது போல காட்டிக்கொண்டிருந்த அவனது நண்பர்களும் ஆர்வமாய் என்ன நடக்கப் போகிறது என பார்த்தனர்..

அதிர்ச்சியில சிலையாய் உறைந்த அவள்,சுதாரிச்சுக்கிட்டு.., "மன்னிச்சிருங்க,எனக்கே தெரியாம உங்களுக்கு இத்தனை நாள் எவ்வளவு தொந்தரவு குடுத்திருக்கேன்ன்னு நெனக்கும்போது கஷ்டமாயிருக்குங்க.. பஸ்டாண்டுக்குள்ள வண்டிய கொண்டுபோய் நிறுத்தி,அந்த டிராஃபிக்குல திரும்ப கொண்டு வர ஆகுற அலைச்சலை விட,இந்த இடம் ஈஸியா இருந்தததல செஞ்சுட்டேன்.தோழிகளோட ,பஸ்ல ஒன்னா அரட்டை அடிச்சுக்கிட்டு பிடிச்சிருக்கறதால பஸ்ல போறது.இனி இங்கே நிறுத்தலை..கவலைப் படாதிங்க.".

மகிழ்ச்சி அவன் முகத்தில் மட்டுமல்ல...தோழர்களின் முகத்துல கூட..

பாலா சொன்னான்.." பெண்களை, குழப்பவாதிகள்ன்னு தப்பா நெனச்சிக்கிட்டிருந்தேன். எவ்வளவு எளிமையா பிரச்சனையை புரிஞ்சுக்கிட்டிங்க... இவன்கூட இதை சொல்ல ரொம்பவே யோசிச்சான். நான் கூட என் பங்குக்கு ரொம்பவே பயம்புறுத்திட்டேன்.இப்போ நாங்கதான் குழப்பவாதிகளோன்னு தோணுது.நீங்களும் எங்களை மன்னிச்சிருங்க..."

ரமேஷ் சொன்னான்.."மறுபடியும் நீங்க பஸ்டாண்டுக்குள்ள வண்டிய கொண்டுபோய் கஷ்டப் பட வேண்டாம்.கடைக்கு பக்கத்து சந்துல தான் கிருஷ்ணனோட வீடு..அது வாசலுலயே நீங்க வண்டிய விட்டுக்கலாம்....அவன் வீட்டுல இருக்கிறவங்க உங்க வண்டிய பாதுகாப்பா பாத்துப்பாங்க.வர போக பிரச்சனை இருக்காது. என்ன சொல்லறடா?".. என கிருஷணனை பார்க்க.. ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்த திருப்தியோட தலையசைத்தான் அவன்.

"நீங்க இவ்வளவு எளிமையா ,புரிஞ்சுக்கிட்டட்துக்கு ரொம்ப நன்றிங்க.."

ஒரு ஹைலைட்டு

அவள்..."ரொம்ப தாங்க்ஸ்.. அப்புறம், நீங்க மொபைல் விலை சலுகையைப் பத்தி சொல்லும்போது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்துச்சு. எங்க கல்லூரில முதல் குருப் சீனியர்ஸ்க்கு வழியனுபும் விழா நடக்க இருக்குறதால,அவங்க எல்லாருக்கும், கல்லூரி நிர்வாகமும்,ஜுனியர் ஸ்டூடண்ட்ஸ்ம் சேந்து மதிப்பான பரிசு தர முடிவு செஞ்சிருக்கோம்.ஸ்டூடண்ட்ஸ் சேர்மேன்ங்கர வகையில, என்ன பரிசு தர்ரதுங்கர முடிவை எங்கிட்ட விட்டிருக்காங்க.."

"நண்பர்களை பிரியாம எப்பவும் அவர்களை தொடர்புக் கொள்ள ஆளுக்கு ஒரு மொபைல்,சிம்கார்டோட குடுத்தா பொருத்தமாயிருக்கும்ன்னு தோனுது.நீங்க கடைக்கு வெளியே தொங்க விட்டிருக்குற சலுகை விலைப் பட்டியலும் எங்க பட்ஜெட்டுக்கு பொருத்தமாதான் இருக்கு. ஒரு 200 மொபைல் போனாவது தேவைப்படும்.சிம்கார்டோட. என்ன?,மொத்தமா வாங்கறதால, நீங்க இன்னும் கொஞ்சம் விலை குறைக்க வேண்டியிருக்கும்.உங்க வசதிப்பட்ட விலையை சொல்லுங்க. கல்லூரி நிர்வாகத்துக்கிட்ட பேசி வைக்கறேன். ஹய்யோ பஸ் வந்துருச்சு, அப்போ இன்னிக்கு மட்டும் வண்டி.."என இழுக்க...

"பரவாயில்லைங்க.. ஆறு மாசத்து விற்பனைய மொத்தமா குடுக்கறிங்க... நாங்க பாத்துக்கிறோம் கவலைபடாம போய் வாங்க. மாலையில வரும்போது ஸ்பெசல் சலுகை விலையை மொபைல் சப்ளையர் கிட்ட கேட்டு வைக்கறேன்.மொத்த விற்பனையா இருக்குரதால ரொம்ப நல்ல விலையே குடுப்பாங்க.."

" தாங்க்ஸ்,வர்ரேன்"ன்னு அப்போது வந்த கல்லூரி பஸ்ஸில இருக்கும் தோழிகளைப் பார்த்து கையசைத்தவாறு ஓடும் அவள்.இப்போது நிஜமாகவே அவனது கஷ்டங்களை தீர்க்க வந்த தேவதையாய் தெரிந்தாள்.


(ஹிஹி.. பின்ன கதைக்கு பொருத்தமில்லாத அந்த படம் எதுக்குன்னு கேக்கறிங்களா?.. எல்லாம் கதைய படிக்கிற உங்களுக்கு ஒரு ஆறுதலுக்காகத்தான்...:))))))))))))))))))))))))))))))))))))))))))

28 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

//ஸ்டண்ட்ஸ் சேர்மேன்ங்கர //

Stunts chairmana???? Ammani karataela ethana black belto :P

said...

//G3 said...

//ஸ்டண்ட்ஸ் சேர்மேன்ங்கர //

Stunts chairmana???? Ammani karataela ethana black belto :P//

நல்வருகைகள் ஜி3. தவறுகளை திருத்திக்கிட்டேன். சுட்டிக் காட்டியதற்க்கு
ரொம்ப நன்றிங்க...

said...

//
புலம்பியது உங்கள் ரசிகன்
//
இந்த லைன் சூப்பர்

said...

//
புலம்பியது உங்கள் ரசிகன்
//
இந்த லைன் சூப்பர்

said...

நல்லா இருக்கு கதை!

said...

////
புலம்பியது உங்கள் ரசிகன்
//
இந்த லைன் சூப்பர்/
ரிப்பீட்டு!

said...

//மங்களூர் சிவா said...

//
புலம்பியது உங்கள் ரசிகன்
//
இந்த லைன் சூப்பர//

ஹா...ஹா.. உங்க தேர்ந்தெடுப்பு ரசனையும் ரொம்பவே சூப்பர் மாமே.. வருகைக்கு நன்றிகள் சிவா..

said...

//மங்களூர் சிவா said...

//
புலம்பியது உங்கள் ரசிகன்
//
இந்த லைன் சூப்பர//

அடப்பாவமே ரெண்டு தடவையா.. உங்களையும் சேத்து புலம்ப வைச்சுட்டேனோ?..:P
:))))))))))

said...

//Dreamzz said...

நல்லா இருக்கு கதை!//

வாங்க டிரிம்ஸ் மாம்ஸ்.. நன்றிகள்..:)

said...

// Dreamzz said...

////
புலம்பியது உங்கள் ரசிகன்
//
இந்த லைன் சூப்பர்/
ரிப்பீட்டு!//

நீங்களுமா?..ஹா..ஹா..:))))))))))))))))))))

said...

என்னப்பா இப்ப்டில்லாம் யோசிக்கிறீங்க!!!!!!!!!!!! சஸ்பென்ஸ் தூக்கிடுச்சு.
அருணா

said...

//aruna said...

என்னப்பா இப்ப்டில்லாம் யோசிக்கிறீங்க!!!!!!!!!!!! சஸ்பென்ஸ் தூக்கிடுச்சு.
அருணா//

வாங்க அருணா.... வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிகள்.உங்க 5 நிமிட காதல் காமெடி கவிதை ரொம்ப சூப்பருங்க...:)))
என்ன அதுல தவறா பெண்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டிங்க.. நெஜத்துல அதிகம் ஆண்கள் தான் பாதிக்கப்படறதுன்னு அனுபவசாலிகள்ல்லாம் சொல்லறாய்ங்களே?..:))))))))))))))))))))))))))

said...

ஆமா -சர்வேசன் சிறுகதைப் போட்டி முடிஞ்சிடுச்சா ?? அனுப்பலியா .

ம்ம்ம்ம் - நல்ல சிறுகதை. நல்ல திருப்பம். அருமை.

இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துகள்.

said...

//cheena (சீனா) said...

ஆமா -சர்வேசன் சிறுகதைப் போட்டி முடிஞ்சிடுச்சா ?? அனுப்பலியா .

ம்ம்ம்ம் - நல்ல சிறுகதை. நல்ல திருப்பம். அருமை.

இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துகள்.//

பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றிகள் சீனா ஜயா..
உங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
அன்புடன் ஸ்ரீதர்...

said...

Nalla keedhupa kadha. Edhir paakaadha mudivu dhool :)

said...

//Nalla keedhupa kadha. Edhir paakaadha mudivu dhool //
ரொம்ப நன்றிகள் ஸ்ரீ...எப்பேரு கேட்டது சந்தோஷம்..ஹிஹி..
வருகைக்கு நன்றிகள்...

said...

கொஞ்ச நாளா தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சா...?
இன்னிக்குத்தான் பேராண்டி இங்க வர முடிஞ்சது.

இந்தக் குமுதத்துல ஒரு பக்கக் கதைன்னு ஒண்ணு வரும்.

எதையோ நினைச்சுப் படிப்போம். எங்கயோ கொண்டாந்து முடிச்சிருப்பாங்க.

அதே ஒரு பக்கக் கதைய இன்னும் கொஞ்ச்சம் நீட்டியிருக்கே.

தொடங்கும் போதே நினைசேன்..

'என்னமோ ரவுசு பண்ணப் போறான்னு'

கடைசீல அப்படியே பண்ணிட்டே.

(அவன் நிச்சயமா லவ்வ சொல்ல வரலைன்னு முன்னாடியே யூகிச்சிட்டேன்.)

கதை சொன்ன விதம்(Technic), அந்த Twist அருமை.

இதை ஆங்கிலத்தில் 'O'Henry Twist என்பார்கள்.

நல்லதுடா... பேராண்டி.

Keep it up.

வாழ்த்துக்கள்!

ம்... முன்ன மாதிரி சமாதனப் புறா வேலையெல்லம் பண்ண மாட்டேன். (ஆப்பு பதிவச் சொல்றேன்.)

(முழியப் பாரு. கல்லுளி மங்கா. உனக்குப் போயி சப்போர்ட்டுக்கு வந்தன் பாரு. என் வாக்கிங் ஸ்டிக்காலயே என்னை அடிக்கணும்.)

சரி.. சரி..
பழம் விட்டுக்கலாம்.
சரியா...?

சரி.. அப்படியே வீட்டுக்கு வந்து... புதுசா சாப்பாடு செஞ்சிருக்கன்.

வந்து மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு, அப்படியே ஒரு மொக்கக் கம்ன்ட்டையும் போட்டு வச்சிட்டு போ...

சரியா...?
வரட்டா...?

said...

@சாம் தாத்தா

//சாம் தாத்தா said...
கொஞ்ச நாளா தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சா...?
இன்னிக்குத்தான் பேராண்டி இங்க வர முடிஞ்சது.

இந்தக் குமுதத்துல ஒரு பக்கக் கதைன்னு ஒண்ணு வரும்.

எதையோ நினைச்சுப் படிப்போம். எங்கயோ கொண்டாந்து முடிச்சிருப்பாங்க.

அதே ஒரு பக்கக் கதைய இன்னும் கொஞ்ச்சம் நீட்டியிருக்கே.

தொடங்கும் போதே நினைசேன்..

'//என்னமோ ரவுசு பண்ணப் போறான்னு'

கடைசீல அப்படியே பண்ணிட்டே.

(அவன் நிச்சயமா லவ்வ சொல்ல வரலைன்னு முன்னாடியே யூகிச்சிட்டேன்.)

ஹிஹி.. தாத்தாவை ஏமாத்த முடியுமா?..

//கதை சொன்ன விதம்(Technic), அந்த Twist அருமை.

இதை ஆங்கிலத்தில் 'O'Henry Twist என்பார்கள்.

நல்லதுடா... பேராண்டி.

Keep it up.

வாழ்த்துக்கள்!//

ரொம்ப நன்றிகள் தாத்தா..

// ம்... முன்ன மாதிரி சமாதனப் புறா வேலையெல்லம் பண்ண மாட்டேன். (ஆப்பு பதிவச் சொல்றேன்.)

(முழியப் பாரு. கல்லுளி மங்கா. உனக்குப் போயி சப்போர்ட்டுக்கு வந்தன் பாரு. என் வாக்கிங் ஸ்டிக்காலயே என்னை அடிக்கணும்.) //
அவ்வ்வ்வ்....அது அது வந்துங்க தாத்தா.. நீங்க சீரியஸ்ஸா நெனச்சி சொன்னத,நா சொல்லித்தான் தாத்தா சொல்லறாருன்னு சொல்லி என்னோட பிரண்டும்கூட, ஆட்டோல்லாம் அனுப்பிட்டாங்க.. அதான்...ஒளிஞ்சுக்கிட்டேன்..ஹிஹி...(கொஞ்சம் கோவக்கார,ஆனா ரொம்ப பெஸ்ட் பிரண்டாக்கும்.:).).

// சரி.. சரி..
பழம் விட்டுக்கலாம்.
சரியா...? //
"கா " விட்டாதானே பழம் விடனும்?..:) நாம எப்போ கா விட்டுக்கிட்டோம்?..ஞாபகம் இல்லையே....ஹிஹி..

// சரி.. அப்படியே வீட்டுக்கு வந்து... புதுசா சாப்பாடு செஞ்சிருக்கன்.

வந்து மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு, அப்படியே ஒரு மொக்கக் கம்ன்ட்டையும் போட்டு வச்சிட்டு போ..././
அவ்வ்வ்.... அப்பவே வந்து பாத்து,வயறு வலிக்க சிரிச்சிட்டு ஒரு சூப்பரு சொல்லிட்டு வந்தேனே.. புதுசா ஒன்னும் இல்லையே..தாத்தா,சும்மால்லாம். கூப்பிட்டு ஏமாத்தப்டாது சொல்லிப்புட்டேன் ஆமா:P

ஆமா,உங்க சென்னை செந்தமிழ்க் கவிதையை பக்கத்துல இருந்த ஃபிலிப்பைன் பொண்னுக்கிட்ட சொன்னதுல இருந்து,என்னைப் பாத்தாலே மெரளுது,ஏன்?.. எல்லாம் நம்ம சென்னை தமிழோட மகிமை..மகிமை..:P..
வருகைக்கு நன்றிகள்..

said...

:)

சப்டைட்டில் எல்லாம் கொடுத்து கட்டுரை மாதிரி எழுதனது நல்லாதான் இருக்கு :)

said...

\\மங்களூர் சிவா said...
//
புலம்பியது உங்கள் ரசிகன்
//
இந்த லைன் சூப்பர்\\

கதைக்கு பொறுத்தமான பின்னூட்டம்...வழிமொழிகிறேன்..;))

said...

அது மட்டுமில்லை..வேற ஏதோன்னு புரிஞ்சுது..ஆனாலும் இதுவா இருக்கும்னு நினைக்கல..

பெண்களைக் குழப்பவாதிகள் இல்லைன்னு சொன்னது நல்ல புரிதல்...

said...

//அரை பிளேடு said...

:)

சப்டைட்டில் எல்லாம் கொடுத்து கட்டுரை மாதிரி எழுதனது நல்லாதான் இருக்கு :)//

நன்றிகள் அரைபிளேடு அவர்களே...:)

said...

//ோபிநாத் said...

\\மங்களூர் சிவா said...
//
புலம்பியது உங்கள் ரசிகன்
//
இந்த லைன் சூப்பர்\\

கதைக்கு பொறுத்தமான பின்னூட்டம்...வழிமொழிகிறேன்..;))//
அவ்வ்வ்வ்வ்.....ஆப்பு வைக்க ஒரு கூட்டமாத்தேன் அலையராங்கய்யா...:))
நன்றிகள்..நண்பரே...

said...

// பாச மலர் said...

அது மட்டுமில்லை..வேற ஏதோன்னு புரிஞ்சுது..ஆனாலும் இதுவா இருக்கும்னு நினைக்கல..

பெண்களைக் குழப்பவாதிகள் இல்லைன்னு சொன்னது நல்ல புரிதல்...//

நிஜம்தான்.. பெண்கள் குழப்பவாதிகள் அல்ல.. சந்தர்ப்பவாதிகள்...P
சரிதானே..ஹிஹி..:)))

ரொம்ப நன்றிகள்ங்க பாசமலர்..

said...

ரசிகன்.....ட்விஸ்ட்ன்னு சொல்லி நல்லா வெச்சிருக்கீறு...செம கலக்கல்..நான் கூட உண்மையிலே காதலை தான் சொல்ல போறான்னு நினைச்சேன்...ஏமாத்திட்டியே

புலம்பல் மாதிரியே தான் இருந்தது எல்லாமும்

said...

இந்தமாதிரி சஸ்பென்ஸ் கதை எத்தனை படிச்சிருக்கோம் 68ம் வருஷத்து ஸ்டைலு 08 வரை ஓடுதே.இருந்தாலும் நடை சூப்பர் .படத்துக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நல்லா தெரியும் ஆனா எப்படி சம்பந்தம் இல்லைன்னு கண்டு பிடிக்கிறதுதான் சஸ்பென்ஸ்.

said...

//தணிகாசலம் said...

ரசிகன்.....ட்விஸ்ட்ன்னு சொல்லி நல்லா வெச்சிருக்கீறு...செம கலக்கல்..நான் கூட உண்மையிலே காதலை தான் சொல்ல போறான்னு நினைச்சேன்...ஏமாத்திட்டியே

புலம்பல் மாதிரியே தான் இருந்தது எல்லாமும்//

ஹா..ஹா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே:)

said...

// goma said...

இந்தமாதிரி சஸ்பென்ஸ் கதை எத்தனை படிச்சிருக்கோம் 68ம் வருஷத்து ஸ்டைலு 08 வரை ஓடுதே.இருந்தாலும் நடை சூப்பர் .படத்துக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நல்லா தெரியும் ஆனா எப்படி சம்பந்தம் இல்லைன்னு கண்டு பிடிக்கிறதுதான் சஸ்பென்ஸ்.///

அக்கா...பலவருடங்களாய் கதைகளை வாசிக்கும் உங்களுக்கெல்லாம் சஸ்பென்ஸ் வைக்க முடியுமா?.ஏதோ கொஞ்சம் முயற்ச்சி செஞ்சு பார்த்தேன்:)

//படத்துக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நல்லா தெரியும் ஆனா எப்படி சம்பந்தம் இல்லைன்னு கண்டு பிடிக்கிறதுதான் சஸ்பென்ஸ்.//

ஹா..ஹா./.. எப்படியோ சஸ்பெண்ஸ் வந்துருச்சுல்ல.,.,:))))