Saturday, November 3, 2007

"பள்ளிக்கூடம்" நிஜமாகுமா?//
            கிராமப்புற அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த அரசு..சூப்பர் பிளான் ! தத்தெடுக்க தொழில் அதிபர்கள்,நிறுவனங்களுக்கு அனுமதி.

           தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த, புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆர்வம் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்,

             அரசுப் பள்ளிகளை நேரடியாக தத்தெடுத்து, அவர்களே மேம்பாட்டு பணிகளை செய்யலாம். எந்தெந்த பள்ளிகளுக்கு, என்னென்ன வசதிகள் தேவை என்ற விவரம், பள்ளிக் கல்வித் துறையின் இணைய தளத்தில் விரிவாக வெளியிடப்பட உள்ளது.

           இப்படி எண்ணிக்கையில் குறைவாக உள்ள தனியார் பள்ளிகள், உள் கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும், அதனால் கல்வித் தரத்தில் சிறந்ததாகவும் விளங்குகின்றன. ஆனால், பெரும்பான்மையாக உள்ள அரசு பள்ளிகளில் போதிய அளவிற்கு வசதிகள் கிடையாது. அதற்கு தகுந்தாற்போல் கல்வித் தரமும் குறைவாக இருக்கிறது. எனவே, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் வசதிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

                 தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது சாதாரண காரியமல்ல. ஏனெனில் மாநிலம் முழுவதும் மூலை, முடுக்குகளில் எல்லாம் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. எனவே, இந்த பள்ளிகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளில், ஆர்வம் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை ஈடுபடுத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைக்கென தனி இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில், `அரசு பள்ளிகளின் தேவை' என்ற தலைப்பில் பள்ளிகள் பட்டியலிடப்படும். கல்வி மாவட்ட வாரியாக, வருவாய் மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளியின் பெயரும் குறிப்பிட்டு, அதற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள், தேவைப்படும் இதர உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்து தெரிவிக்கப்படும். அரசு பள்ளிகளை தத்தெடுத்து தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க விரும்புபவர்கள், இணையதளத்தில் பார்த்து தாங்கள் விரும்பிய இடத்தில் உள்ள பள்ளியை தேர்வு செய்யலாம். சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி, உரிய உதவிகளை நேரடியாக தனது முன்னிலையிலேயே செய்து முடிக்கலாம்.

              பள்ளிக் கல்வித் துறை சார்ந்த புள்ளி விவரங்களை தொகுக்கும் பணிகள், ஜனவரிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வசூலுக்கு வழி வகுக்காமல் பார்க்க வேண்டியது அவசியம் :

                                அரசு பள்ளிகளுக்கு உதவி செய்பவர்கள் விவகாரத்தில், பள்ளிக் கல்வித் துறை உஷாராக செயல்பட வேண்டியுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், தொழிலதிபர்களும் அதிகளவில் உதவி செய்ய ஆர்வம் காட்டுவது, மாணவர்களுக்கு பயனளிக்கும். அதே நேரத்தில் அரசு பள்ளிக்கு உதவப் போகிறோம் என்று கூறிக்கொண்டு, ஆளாளுக்கு வசூல் வேட்டையில் இறங்க நேரிடலாம். அதை தடுத்து நிறுத்துவது குறித்தும் துறை ஆராய வேண்டும்.//

நன்றி தினமலர் (3.11.07)..

...........................

            
    கொஞ்ச நாளுக்கு முன்ன இதே தினமலருல "கோடிஸ்வராகும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு "ன்னு நியுஸ் வந்துது..
அது எங்கயோ போயி.. நாம அன்னாந்து பாத்து பெருமூச்சு விட்ட அமெரிக்க அண்ணாதே.. பில்கேட்ட பின்னால தள்ளிட்டு(கோடி கோடியா குவிக்கும் அரபு ஷேக்குகளையும் சேத்துத்தான்) இப்ப உலக பணக்காரர் நம்ம நாட்டுக்காரர்தேன்.

                நம்ம லஷ்மி கூட (அதாங்க லஷ்மி மிட்டல் தாங்க..) டோனி பிளேயரு கட்சிக்கு பல மில்லியன் டொனேஷன் பண்ணியிருக்காரு..லண்டன்ல இருக்குற பொது சேவை நிறுவனத்துக்கு..கோடிக்கணக்குல தானம் பண்ணாருன்னெல்லாம் படிக்கும் போது.. ஏன் அடுத்த நாட்டுக்கு கொடுக்கனும்? நம்ம நாட்டுலயே வறுமை தலைய விரிச்சிக்கிட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடும்போது..(தனக்கு மிஞ்சியது தானே..தானமும் ,தர்மமும்?)இன்னு எனக்கு தோனும்.ஒருவேள அவுரு அங்க "செட்டில்" ஆனதுனால சுயலாப நோக்கமாமிருந்தாலும்,அதுல பத்து சதவீதமாவது நம்ம நாட்டுல நல்ல விஷயங்களுக்கு செலவு செஞ்சிருக்க கூடாதான்னுதா தோனுது..

                இவிங்கள பாக்கும் போது,சிலபல "மேஜிக்" வித்தைகள காட்டி , அரசியல்வாதிங்க..   கோடீஸ்வரங்க கிட்ட இருந்து பணத்த டபாய்க்கிற "புட்டபர்த்தி சாயிபாபா கூட " அந்த பணத்துல பெரும் பகுதிய (விளம்பரத்துக்காகவே இருந்தாலும் கூட),மக்களுக்கு நல்லது நிறைய நல்லது செய்ய பயன்படுத்துறதுனால ஆயிரம் மடங்கு பெட்டர்ன்னு தோனுது.


                பள்ளிக்கூடம் படத்த நம்ம தங்கரு மச்சான் சாரி பச்சான் ..ஏதோ நாடகம்பாணில எடுத்துப்புட்டாலும் ,அதுல உள்ள உண்மை யதார்த்தமானது.
"படிச்சி நல்ல நிலையில இருக்குற ஒவ்வொருத்தரும் தான் படிச்ச பள்ளிக்கூடத்த தத்தெடுத்துக்கிட்டாக்கா..தமிழ் நாட்டுல இருக்குற அத்தன சீரழிந்த பள்ளிக்கூடங்களுக்கும் ஒரு விடிவு பிறக்கும்"ன்னு சொன்னத ரொம்ப ரசிச்சேன்.தங்கருக்கு ஒரு கிளாப்.

                 என்னதா நாம வாழர சூழ்நிலை நம்ம மேல்லோட்டமான குணங்களை தீர்மானிச்சாலும்.நமது அடிப்படை குணங்களை தீர்மானிக்கிறது நமது பள்ளிப் பருவம்தான்.அந்த நட்பு,வீட்டை விட்டு நமக்கு இருந்த இன்னொரு குடும்பம்.அடிப்படை அறிவு.. நாம் நாமாகவே வாழ்ந்த அந்த தருணங்கள்.இப்பவும் நம் வயதை பின்னோக்கி தள்ளும் வலிமைவாய்ந்த மலரும் பள்ளி நினைவுகள்".பள்ளிக்குச் செய்யும் முதலீடுகள்..செலவுகள் அல்ல..நமது நாளைய பாரத்தின் அடிப்படை தூண்களுக்கு அஸ்திவாரம்.

            
  அதுல எண்பது சதவீதம் கிராமத்துப் பள்ளிகளே.அத சீர்படுத்தாம "இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த கல்வித்தரமுன்னு" சொல்லுறது "எட்டாக் கனி"தான்.

              இன்று அமெரிக்காவிலும்,ஜரோப்பாவிலும்(வளைகுடாவிலும் தான்)..பறந்து பறந்து திரவியம் தேடும் பலரையும் உருவாக்கிய அந்த பள்ளிகள்
இன்று மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்,ஆசிரியர்களும் இல்லாமல் வருங்கால மன்னர்களை எப்படி கரைத்தேற்ற போகிறோமோ?..என திண்டாடி நிற்கின்றன..

               இந்த சூழ்நிலையில அரசாங்கம் இப்பிடி ஒரு ஜடியாவ கொண்டுவந்திருக்கிறது பாராட்டக் கூடியது..இந்த எண்ணத்துக்கு மூலக்காரணமான அதிகாரி யாராயிருந்தாலும் அவரை பாராட்ட நாம கடமைப் பட்டிருக்கிறோம்.இது தமிழ்நாட்டுல மட்டுமில்ல நாடு முழுக்க செயல் படுத்த வேண்டிய அற்புத திட்டம். நம்ம அரசாங்கத்துல கூட சிந்திக்கிறவங்க இருக்காங்கப்பா...(
2025 ல இந்தியா உலக வல்லரசாகும்மின்னு இப்ப லேசா நம்பிக்கை வருது.).


                 நம்ம" சிவாஜி"சங்கரும்,ஜூப்பர்ர்ர்ரு ஸ்டாஆரும் ஒன்னா சேந்து இலவச பள்ளிக்கூடம் கதயெல்லாம் சொல்லி நம்ம தலையில நல்லா மொளகா அரைச்சி பணத்த லபட்டிக்கினாங்க..(இது வரை இல்லாத வசூல்)காலேஜி வரை சொத்தை எல்லாம் வித்து " படத்துல " பசங்கள இலவசமா படிக்க வைச்ச நம்ம ரசினி ஜய்யா..அவரோட சொந்தப்பள்ளிக்கூடத்துல கட்டணத்த இன்னும் உயர்த்திட்டதா ஒரு செய்தி..அப்ப சிவாஜில கெடச்ச கோடிகள் எங்கங்கரீங்களா?அது எப்பவோ பெங்கலூருவில நிலப்பட்டாவா மாறிடுச்சுங்கோ?.. [இதுக்கு பேசாம அந்த படத்துக்கு குடுத்த பணத்த மக்கள் பள்ளிக்கூடங்களுக்கு குடுத்திருந்தாக்கா.. நாம ஒவ்வொருத்தருமே "சிவாஜி "யா ஆகியிருக்கலாமில்ல...].


                     "கந்தசாமி" படக்குழுவினரும் கூட தான் சொல்ல வந்த கருத்துக்கு ஒரு ஆரம்பமா இருக்கட்டுமேன்னு ஒரு கிராமத தத்தெடுத்து வசதிகள் செஞ்சி குடுத்திருக்காங்க..(பட ஆரம்ப விழாவுல அதயே விளம்பரமா பல தடவ போட்டுக்காட்டனது வேற விஷயம்..ஆனாலும் செய்யாம இருக்குறவங்கள விட செஞ்சத சொல்லிக் காட்டுறது ,தப்பில்லேன்னு தோனுது.அத பாத்தாவது(போட்டிக்காகவாவது) மத்தவங்களுக்கும் உதவனும்ன்னு தோணலாமில்லையா?.. திரைப்படத்துறையில் ஆரோக்கியமான வளர்ச்சி..

                  இப்ப அரசாங்கமே ஒரு வாய்ப்பு  கொடுத்திருக்கு. கோடீஸ்வரங்களே.,தொழிலதிபர்களே..உங்க உதவி செய்யும் உரிமைய விட்டுக்கொடுத்திடாதிங்க...

                  மக்கள்ஸ் நாமலும் நம்மாலான ஏதாவது உதவி..(ஒன்றிரண்டு நல்லா படிக்கும் மாணவர்களின் படிப்பு செலவை (ஸ்கூலுங்கரதால ரொம்பவே கம்மியாத்தேன் செலவாகும்)ஏத்துக்கலாமே..)


// வசூலுக்கு வழி வகுக்காமல் பார்க்க வேண்டியது அவசியம்//

அதனால எது செஞ்சாலும் நீங்க நேரடியாவே செய்யுங்க.. நாங்க்கூட ஊருல இருக்குற நண்பர்கள் மூலமா ஏதோ முடிஞ்சத செஞ்சிக்கிட்டிருக்கேன்.
அதுவும் நமக்கு உலகத்த படிக்க கத்துத்தர ஆரம்பிச்ச பள்ளிக்கூடத்துக்கு செய்யுரது ,பெத்தவங்களுக்கு செய்யுர போல ஒரு கடமை என்பது நிஜம் தானே.?..
அன்புடன் உங்கள் ரசிகன்.
38 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

"சீரடி சத்யசாயிபாபா கூட " அந்த பணத்துல பெரும் பகுதிய (விளம்பரத்துக்காகவே இருந்தாலும்

க்ர்ர்ர்ர்ர்ர்ர்., எல்லாத்துக்கும் பாடம் சொல்லித் தரணும் போலிருக்கே! சீரடி சத்யசாயிபாபா இல்லை, புட்டபர்த்தி சாயிபாபா, இவர் தான் இப்போ இருக்கார், தொண்டு நிறுவனங்கள் மூலம் தொண்டுகள் செய்து வருகிறார். சென்னையின் தொலைதூர நெருங்க முடியாத குடிசைக் குடியிருப்புக்களுக்குக் கூட இவரின் தொண்டு நிறுவனம் தண்ணீர் விநியோகம் செய்கிறது! முதலில் இரண்டு பேரும் வேறே வேறேனு புரிஞ்சுட்டு எழுதுங்க! :P :P :P

said...

வாங்க கீதா அக்கா..வாங்க..இதுக்குத்தான்.இதுக்குத்தான்.. நம்ம குரு வேணும்ங்கரது..
மாத்திட்டேன்..தாங்க்ஸ்..

said...

// சென்னையின் தொலைதூர நெருங்க முடியாத குடிசைக் குடியிருப்புக்களுக்குக் கூட இவரின் தொண்டு நிறுவனம் தண்ணீர் விநியோகம் செய்கிறது!//
(அவரோட வித்தைகளுல எனக்கு உடன்பாடு இல்லாட்டியும்) அதுக்குத்தானே அவர பாராட்டி எழுதியிருக்கேன்..
பாபாவின் தொண்டு வாழ்க.
இப்ப சந்தோஷம் தான..

said...

அந்த செய்தியை படித்துவிட்டு , இந்தியாவில் 32000 தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்று அதே தினமலரில் செய்தி வந்ததை பார்த்து பகீர் என்று இருந்தது.இதில் IT மாநிலமான கர்னாடகத்தில் மட்டும் 11000 பள்ளிகளாம்.

நிச்சயம் இந்த திட்டம் அவசியமானது தான். வரவேற்போம். எத்தனை இடையூறுகளோ? . தத்தெடுக்க முன்வருபவர்கள் தங்களுக்கென்று எந்த எதிர் கால நலனையும் மனதில் வைக்காமல் மாணவர்களின் எதிர் காலத்தை மட்டுமே மனதில் வைக்க வேண்டும்.

said...

ஹாய் ரசிகா,

//தத்தெடுக்க தொழில் அதிபர்கள்,நிறுவனங்களுக்கு அனுமதி.//

நான் கூட போன மாசம் விஜய் டிவில பாத்தேன்.ஒரு சனிக்கிழமை மத்தியான நேரம் நம்ம சிவக்குமார் (நடிகர் தாங்க)
அவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து அவரு படிச்ச பள்ளியை தத்து எடுத்துடுட்டதா சொன்னாரு.கேக்கவே சந்தோஷமா இருந்தது.

said...

ஹாய்,

//வசூலுக்கு வழி வகுக்காமல் பார்க்க வேண்டியது அவசியம் ://

இது கண்டிப்பா சாத்தியம் இல்லைனு நினைக்கிறேன்.

//நம்ம நாட்டுலயே வறுமை தலைய விரிச்சிக்கிட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடும்போது..(தனக்கு மிஞ்சியது தானே..தானமும் ,தர்மமும்?)இன்னு எனக்கு தோனும்.ஒருவேள அவுரு அங்க "செட்டில்" ஆனதுனால சுயலாப நோக்கமாமிருந்தாலும்,அதுல பத்து சதவீதமாவது நம்ம நாட்டுல நல்ல விஷயங்களுக்கு செலவு செஞ்சிருக்க கூடாதான்னுதா தோனுது..//

நீங்க சொல்றது 100% கரெக்ட்.
ஆனா இத யாரு அவங்ககிட்ட போயி கேக்கறது?

//

said...

ஹாய் ரசிகா,

//அவரோட சொந்தப்பள்ளிக்கூடத்துல கட்டணத்த இன்னும் உயர்த்திட்டதா ஒரு செய்தி..//

அதுசரி, அங்க படிக்கறவங்க என்ன நம்ம்ல மாதிரியா இல்ல கிராமத்து மக்கள் மாதிரியா? எல்லாரும் வசதியோட இருக்கரவங்க தான்பா

said...

ஹாய் ரசிகா,

//நாங்க்கூட ஊருல இருக்குற நண்பர்கள் மூலமா ஏதோ முடிஞ்சத செஞ்சிக்கிட்டிருக்கேன்.//

ஆஹா, நம்ம ரசிகனுக்கு இப்படி ஒரு மறுபக்கமா?சொல்லவேயில்ல?
வாரே வா ராஜா இது ரசிகனின் மறுபக்கம்...

said...

நல்லதோர் பதிவு.

said...

பதிவெப் படிச்சதும் வேற வலைப்பூக்கு தப்பா வந்துட்டோமான்னு தோனுச்சு. நம்ம ரசிகனா இப்படி எழுதறதுன்னு யோசிச்சேன். அப்புறம் நல்லா பாத்து ரசிகந்தான்னு உறுதிப் படுத்திட்டேன். சுமதி சொன்னா மாதிரி இது ரசிகனின் மறு பக்கம் தான்.

said...

\\என்னதா நாம வாழர சூழ்நிலை நம்ம மேல்லோட்டமான குணங்களை தீர்மானிச்சாலும்.நமது அடிப்படை குணங்களை தீர்மானிக்கிறது நமது பள்ளிப் பருவம்தான்.அந்த நட்பு,வீட்டை விட்டு நமக்கு இருந்த இன்னொரு குடும்பம்.அடிப்படை அறிவு.. நாம் நாமாகவே வாழ்ந்த அந்த தருணங்கள்.இப்பவும் நம் வயதை பின்னோக்கி தள்ளும் வலிமைவாய்ந்த மலரும் பள்ளி நினைவுகள்".\\

நம் அடிப்படை குணங்களை தீர்மானிப்பது நம் பள்ளி பருவம் என மிக சரியாக சொல்லியிருக்கிறீங்க ரசிகன்.

அருமையான பதிவு,
எவ்வளவு பொறுமையா, சரியான குறிப்புகளோட எழுதியிருக்கிறீங்க, பாராட்டுக்கள் ரசிகன்!!

said...

\\அதனால எது செஞ்சாலும் நீங்க நேரடியாவே செய்யுங்க.. நாங்க்கூட ஊருல இருக்குற நண்பர்கள் மூலமா ஏதோ முடிஞ்சத செஞ்சிக்கிட்டிருக்கேன்.\\

ரசிகன், உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கும் , சேவைக்கும் பாராட்டுக்கள்!!

tharunprakaash dubai said...

// இதுக்கு பேசாம அந்த படத்துக்கு குடுத்த பணத்த மக்கள் பள்ளிக்கூடங்களுக்கு குடுத்திருந்தாக்கா.. நாம ஒவ்வொருத்தருமே "சிவாஜி "யா ஆகியிருக்கலாமில்ல...//

EXCELLENT BROS.

said...

' நாம் நாமாகவே வாழ்ந்த அந்த தருணங்கள்.இப்பவும் நம் வயதை பின்னோக்கி தள்ளும் வலிமைவாய்ந்த மலரும் பள்ளி நினைவுகள்".'
என்ன?.மறுபடியும் கவிதையா?haa.haa.

said...

' நம்ம லஷ்மி கூட (அதாங்க லஷ்மி மிட்டல் தாங்க..) '
சொல்லவேயில்லை..அவர் உங்க சொந்தக்காரரா?..haa.haa

' வறுமை தலைய விரிச்சிக்கிட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடும்போது'
இது புதுசாயிருக்கு..

said...

' மக்கள்ஸ் நாமலும் நம்மாலான ஏதாவது உதவி..(ஒன்றிரண்டு நல்லா படிக்கும் மாணவர்களின் படிப்பு செலவை (ஸ்கூலுங்கரதால ரொம்பவே கம்மியாத்தேன் செலவாகும்)ஏத்துக்கலாமே..)'
மிக நல்ல அழைப்பு .நிச்சயமா செய்யலாம் ரசிகன்.

said...

// (2025 ல இந்தியா உலக வல்லரசாகும்மின்னு இப்ப லேசா நம்பிக்கை வருது//
எனக்கும் தான்.
// .அப்ப சிவாஜில கெடச்ச கோடிகள் எங்கங்கரீங்களா?அது எப்பவோ பெங்கலூருவில நிலப்பட்டாவா மாறிடுச்சுங்கோ?//
இன்னமும் யாரும் திருந்தர மாதிரி தெரியலியே.

said...

// / வசூலுக்கு வழி வகுக்காமல் பார்க்க வேண்டியது அவசியம்//
அதனால எது செஞ்சாலும் நீங்க நேரடியாவே செய்யுங்க.//
இது ஆயிரத்தில் ஒரு வார்த்தை.சூப்பர்.

said...

mm!

said...

/அதே நேரத்தில் அரசு பள்ளிக்கு உதவப் போகிறோம் என்று கூறிக்கொண்டு, ஆளாளுக்கு வசூல் வேட்டையில் இறங்க நேரிடலாம். அதை தடுத்து நிறுத்துவது குறித்தும் துறை ஆராய வேண்டும்/
இது தான் ரொம்ப முக்கியம் இப்ப எல்லாம் சமூக சேவை நிறுவனங்கள் என்று கூறிக்கொண்டு அரசிடம் பணம் பெறும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.

said...

/" பசங்கள இலவசமா படிக்க வைச்ச நம்ம ரசினி ஜய்யா..அவரோட சொந்தப்பள்ளிக்கூடத்துல கட்டணத்த இன்னும் உயர்த்திட்டதா ஒரு செய்தி./
சினிமா வேற உண்மை நிலவரம் என்பது வேறங்க :)

said...

// தத்தெடுக்க முன்வருபவர்கள் தங்களுக்கென்று எந்த எதிர் கால நலனையும் மனதில் வைக்காமல் மாணவர்களின் எதிர் காலத்தை மட்டுமே மனதில் வைக்க வேண்டும்.//
சரியா சொன்னீங்க பொடியன்.. வருகைக்கு நன்றிகள்..

said...

வாங்க சுமதி வாங்க..
// கேக்கவே சந்தோஷமா இருந்தது.//
இப்ப எனக்குந்தானுங்க..

//நீங்க சொல்றது 100% கரெக்ட்.
ஆனா இத யாரு அவங்ககிட்ட போயி கேக்கறது//
நீங்க சொல்லறதும் சரிதானே?..

said...

// அங்க படிக்கறவங்க என்ன நம்ம்ல மாதிரியா இல்ல கிராமத்து மக்கள் மாதிரியா? எல்லாரும் வசதியோட இருக்கரவங்க தான்பா//
அதான்ப்பா நானும் சொல்லறேன்.. அவ்வளவு அதிகமா வசதியோட இருக்கரவங்க கிட்ட வாங்குரவர் அதுல ஒரு சின்ன தொகையில பொதுமக்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்த பராமரிக்கலாமில்ல..

said...

//
வாரே வா ராஜா இது ரசிகனின் மறுபக்கம்...//
நா என்னோட முதுகை போட்டோ புடிச்சி இன்னும் போடலியே?ஹிஹி....

கருத்துகளுக்கு ரொம்ப நன்றிங்க.. சுமதி ..

// /வசூலுக்கு வழி வகுக்காமல் பார்க்க வேண்டியது அவசியம் ://
இது கண்டிப்பா சாத்தியம் இல்லைனு நினைக்கிறேன//
நம்ம நாட்டு நெலமை ய .சரியா சொன்னீங்க ..

said...

// நல்லதோர் பதிவு.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நட்டு..
அடிக்கடி வாங்க..உங்க வீட்டுல படங்கள்லாம் நெல்லாயிருக்கு.

said...

// பதிவெப் படிச்சதும் வேற வலைப்பூக்கு தப்பா வந்துட்டோமான்னு தோனுச்சு.//
ஹா..ஹா..
வாங்க சீனா சார் வாங்க.. .எப்பன்னா நேரம் கெடச்சாக்கா கொஞ்சம் இப்படி.. (ஏன்னாக்கா .. நம்ம வேதா நமக்கே தெரியாம பட்டமளிப்பு விழாவெல்லாம் நடத்தி எனக்கு "பொற்க்கை மன்னன்" மாதிரி "மொக்கை மன்னன்"இன்னு பேர் சூட்டு விழாவெல்லாம் நடத்திட்டாய்ங்கல்ல..ஹிஹி...)

said...

// நம் அடிப்படை குணங்களை தீர்மானிப்பது நம் பள்ளி பருவம் என மிக சரியாக சொல்லியிருக்கிறீங்க ரசிகன்//அருமையான பதிவு//
ரசிச்சி வாழ்த்தனுதுக்கு ரொம்ப நன்றிங்க திவ்யா..

said...

வாங்க தருன் பிரகாஷ்..(ரெண்டு பேரா?).. புதுசா வந்திருக்கீங்களா?.. நல்வருகைங்க..

said...

// என்ன?.மறுபடியும் கவிதையா?haa.haa.//
நீங்களும் நம்ம டிரீம்ஸ் மாமு மாதிரி வரியெல்லாம் கவிதையா நெனக்க ஆரம்பிச்சிட்டீங்களா?. ஹா..ஹா..

said...

// நம்ம லஷ்மி கூட (அதாங்க லஷ்மி மிட்டல் தாங்க..) '
சொல்லவேயில்லை..அவர் உங்க சொந்தக்காரரா?..haa.haa//
அத அவரே சொல்லட்டுமின்னு வெயிட் பண்ணிக்கிட்டிருக்கேன்..ஹிஹி..

said...

// வறுமை தலைய விரிச்சிக்கிட்டு டிஸ்கோ டான்ஸ் ஆடும்போது'
இது புதுசாயிருக்கு..//
இல்லையே இது காலங்காலமா நம்ம நாட்டுல இருக்கறதாச்சேங்க..ஹிஹி..

// மிக நல்ல அழைப்பு .நிச்சயமா செய்யலாம் ரசிகன்.//
அழைப்புல பங்கேறதுக்கு ரொம்ப நன்றிங்க.. பிரித்தி,,

said...

// .அப்ப சிவாஜில கெடச்ச கோடிகள் எங்கங்கரீங்களா?அது எப்பவோ பெங்கலூருவில நிலப்பட்டாவா மாறிடுச்சுங்கோ?/
// இன்னமும் யாரும் திருந்தர மாதிரி தெரியலியே.//
வாங்க விஜய் வாங்க.. நா நெனச்சதையே தான் நீங்களும் நெனச்சிருக்கீங்க.. ரொம்ப சரிங்க...நன்றிகள்.

said...

// mm!//
என்னாச்சு டிரீம்ஸ் மாமே..எதாவது சாப்பிட்டுக்கின்னு இருக்கீங்களா?... ஹா..ஹா..
எ.ரொ.ந (எட்டிபாத்ததுக்கு ரொம்ப நன்றிகள்.)ஹிஹி..

said...

// இது தான் ரொம்ப முக்கியம் இப்ப எல்லாம் சமூக சேவை நிறுவனங்கள் என்று கூறிக்கொண்டு அரசிடம் பணம் பெறும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.//
வாங்க வேதா வாங்க..ரொம்ப சரியாச் சொன்னீங்க..

// சினிமா வேற உண்மை நிலவரம் என்பது வேறங்க :)//
ஆனா இத இன்னும் நம்ம மக்கள் உணரலீங்களே..

said...

மிக அருமையான பதிவு ரசிகன். நாம படிச்ச பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒரே ஒரு தடவை எட்டிப் பாத்தோம்னா கண்டிப்பா நாமளும் செய்ய ஆரம்பிச்சிடுவோம்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள். ஹி..ஹி.. சாரிப்பா. தீபாவளி முடிஞ்ச அப்பறம் வாழ்த்துக்கள் சொன்னதுக்கு.

- சகாரா.

said...

// சகாரா said...

மிக அருமையான பதிவு ரசிகன். நாம படிச்ச பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒரே ஒரு தடவை எட்டிப் பாத்தோம்னா கண்டிப்பா நாமளும் செய்ய ஆரம்பிச்சிடுவோம்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள். ஹி..ஹி.. சாரிப்பா. தீபாவளி முடிஞ்ச அப்பறம் வாழ்த்துக்கள் சொன்னதுக்கு.
- சகாரா.//

ரொம்ப நன்றிகள்ப்பா.., வாழ்த்தரதுக்கு நேரம் காலம் எதுக்கு..?
நாம படிச்ச பள்ளிக்கூடத்துப் பக்கம் ஒரே ஒரு தடவை எட்டிப் பாத்தோம்னா கண்டிப்பா நாமளும் செய்ய ஆரம்பிச்சிடுவோம்.
நீங்க சொல்றதும் ரொம்ப சரி.. ஆனாக்கா ஊருக்கு போனாக்கா ,யாரும் பள்ளிக்கூடத்த தேடிப்போயி பாக்க மாட்டேங்கராய்ங்க.. ஃபிஸா கார்னருலயும் சினிமா தியேட்டருலயுந்தேன்.. சுத்தராய்ங்க..

SURESH V.C said...

FINE POST :D