Saturday, November 10, 2007

எச்சரிக்கை : பலவீன இதயம் கொண்டவர்கள் தயவு செய்து இதை படிக்கவேண்டாம்...

                            

                           அல்வாவுக்கு பேர் போன சென்னை மாநகரம்.அடிவானுக்கு செம்மஞ்சள் பூசிக்கொண்டிருந்த சூரியன், அதை அழித்துக்கொண்டிருந்த இருட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், வெக்கி கொண்டு விலகத்தொடங்கிய நேரம்.மார்கழிக்கே உரிய குளிருடன் தென்றல்.மொட்டை மாடியில் முழங்காலிட்டு முகம் புதைத்து இருக்கும் பாவனாவின் கூந்தலை ஆசையோடு தழுவியது.

                               நமிதா..காண்போர் மனதிலெல்லாம் மையம் கொள்ளும் காந்தப் புயல்(?).கடந்த ஜந்து வருடமாய் வயது 22.புதிதாய் காண்பவர் இன்னொரு முறை அவளை ரகசியமாக திரும்பிப் பார்க்கவில்லை என்றால் தைரியமாகச் சொல்லலாம் "ஒரு நல்ல கண் டாக்டரை போய் பார்" என்று.நெற்றி மேல் சரிந்து விழும் முடிக்கற்றையை அவள் அடிக்கடி சரி செய்துக் கொள்ளும் அழகை பார்ப்பதற்கே..லைபரெரி,கல்லூரி மரத்தடி,தெரு முனை மொட்டை சுவர் என மானத்தோடு,வாழ்க்கையையும் சேர்த்து அடகு வைத்து காத்திருக்கும் லோக்கல் ரோமியோ மாதிரிகள்(?) பலர்.

                                 "இராமர் பிரிட்ஜ்" ஆர்ட்ஸ் காலேஜி"ல வக்கீலுக்கு படிச்சிட்டு ,இஞ்சினியரிங் பரிச்சையில பதினைஞ்சு அரியரோட பாசாயிட்டு,இப்ப டாக்டர் வேலைக்கு காத்துக்கொண்டிருக்கிறாள்.(ஒருவேளை அவளோட அப்பா டாக்ரராக இருந்திருந்தால்.. இவள் டாக்ராவதற்க்கு பத்தாவது பாஸானாலே போதுமாயிருந்தது..என்ன செய்ய..?)

                                  தப்பித்தவறி அவள் யாரோடாவது பேசி விட்டால்,அந்த அதிருஷ்டசாலிதான், அன்றைய கல்லூரி ஹீரோ/வில்லன் எல்லாம்.(சில பேருக்கு )

                                 பக்கத்துவீட்டு மாமி இவள் இல்லாமல் கடைக்கு போவதில்லை..கறி்வேப்பில்லயிலிருந்து கத்திரிக்காய் வரை கூடுதல் கிடைப்பதால்..இப்படிப்பட்ட அழகு தேவதையை கண்ணில் காட்டியதுக்கு கடைக்காரன் பின் எப்படித்தான் நன்றியை காட்டுவதாம்?

                                 மீனை தூண்டில் போட்டு பிடிப்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள்.. மீன் தூண்டில் வீசுவதை நம்புவீர்கள் அவள் கண்களை பார்த்தால்..

                                அந்த கண்மீன்கள்(?)  இப்போது நீந்திக் கொண்டிருந்தன.தண்ணீரில் அல்ல.. கண்ணீரில்..

                               பெண்களுக்கே உரிய ரகசிய விசும்பல்..காற்றில் லேசாய் கசிந்துக் கொண்டிருந்தது..ஆம் அது நமது சினேகாவிடமிருந்து தான்..
அபி அப்பா வந்தாலும் தேற்ற முடியாத அழுகை.

                              நான் என்ன செய்வது?. "அது " நடக்க கூடாதாயிருந்தது..தப்பு என் மேலயுந்தான்...நான் அவசரப்பட்டிருக்க கூடாது.. என எண்ணங்கள் கூட்டணியாய் பூமிகாவின் மனதில் முட்டிமோத..

                             " நைட்டு தூங்கக்கூட பிடிக்கல..யாரைப்பார்த்தாலும் கோபமாய் வருகின்றது.நான் செஞ்ச அந்த தப்புக்கு நான் அனுபவிக்கிறேன் அதுக்கு மத்தவங்கங்கள குத்தம் சொல்லி இப்ப என்ன பண்ணரது?. நடந்தது நடந்தது தான.?அத மாத்தவா முடியும்?..". என்ற ஸ்ரேயாவின் யோசனையை சிணுங்கிக் கலைத்தது அவளுடன் எப்போது உறவாடும் பாக்கியத்தைப் பெற்ற அலைப்பேசி..

                              அதை சமாதானப்படுத்தும் நோக்கில் எடுத்து கண்ணத்தில் வைத்து(ஹிம்..கொடுத்து வைத்த நோக்கியோ இல்ல..) ஹலோ.. என்றாள் திரிஷா.

"எப்படி இருக்கே..(பத்மப்)பிரியா ?"

"ஜ அம் பைன்.நீங்க யாரு?'

"ம்.. ஒசாம முன் லேடன்னு வச்சிக்கோயேன்"

                        முதலில் அதிர்ந்த கோபிகா உடனே சுதாரித்துக்கொண்டாள்.
ஒரு வேளை நமக்கு தெரிஞ்சவந்தான் சும்மா கலாட்டா செய்யரானோ?..
ஒருவேளை நம்மோட படிச்ச கடைசி பெஞ்சி சடைமுடி "கெட்டவன்" சிம்புவா இருப்பானோ..அப்பவே."யாரு மொதல்ல கிளாசுக்கு வராங்கன்னரது முக்கியமில்ல..யார் கடைசில ,மொதல்ல வெளிய போறாங்கன்றதுதான் முக்கியம்ன்னு தத்துவம் பேசுவானே?..அவனா?
இல்ல.. மொத பெஞ்சி பரட்டை தலை தனூஷா? இருக்காதே.. அவனுங்க மொக்க வாய்ஸ்தான் ஊருக்கே தெரியுமே..யாரா இருந்தால் என்ன?
யாராயிருந்தாலும் இப்ப நம்ம நிலமை புரியாமல்..

"இதப்பாருங்க .. யாராயிருந்தாலும் இந்த வெளயாட்டெல்லாம் வேணாம்..இப்ப நா மூடுல இல்லை"

ஹேய்..அசின் கூல்ப்பா.. நா..மாதவன்..நானும் ஆன்ரியாவும்.. நேத்து உனக்காக தைலாவரம் தியேட்டருல "கூட்டணிதர்மம் " படத்துக்கு எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?ஏன் வரலை?"

"மன்னிச்சிடு சூர்யா ..வேல அதிகமாயிடுச்சு.

"நானும் ஜோதிகாவும் இப்ப உன் வீட்டுலதான் இருக்கோம்..அம்மா நீ மேல மொட்டை(?)மாடியில இருக்கரதா சொன்னதால இப்ப மேல வந்துக்கிட்டிருக்கோம். நம்ம அறிவாலயத்துல "ராமன்=இயேசு=அல்லா" படமோ இல்ல, போயஸ்கார்டனுல "கொலைமுயற்சி"படமும் கூட ஆளில்லாம தான் ஓடுதாம்.. அதுக்கு இன்னிக்கு போலாமா?.."

"நா இப்ப எங்கயும் வரலை.."

                    பேசிக்கொண்டே மேலே வந்த ஸ்ரீகாந்தும் லைலாவும், ரகஸியாவின் அழுத முகத்தை கண்டு பதறினார்கள்.

"என்னாச்சு ஏன் இப்படி மேக்கப் போடாம மொட்ட மாடியில உக்காந்திருக்கிற?.. பாக்கவே சகிக்கல.."

"நானே ரொம்ப நொந்து போயிருக்கேன். என்ன எதுவும் இப்ப கேக்காதே சந்தியா..பிலீஸ்.."

 " இன்னமும் திகைப்பு நீங்காமலிருந்த சித்தார்த்தின் (சந்தோஷமா?. மைஃபிரண்டு?) கையை பிடித்து சர சரவென்று படிக்கட்டில் இறங்கத்தொடங்கினாள் நிலா.

"என்னாச்சுப்பா ஏன் இவ்வளவு கோபம்?.".என்றான் ஜாக்கிஜான்.
" பின்ன என்னடா.. நம்ம பிரண்டாச்சேன்னு கேட்டாக்கா?..ரொம்ப பிகு பண்ணிக்கிறா?..அவளுக்கு ரொம்ப திமிரு.."

"நீ நெனக்கிற மாதிரி இருக்காதுடா.அபிராமி .ஒரு பொண்ணோட மனசு ஒரு பையனுக்குத்தான் புரியுமின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..மாள்விகா ஏதோ டென்ஷனுல இருக்காங்க..இல்லன்னாக்கா.. அவிங்க..இப்பிடியெல்லாம் நடக்க கூடியவங்க இல்ல..இந்த மாரி நெலமையில ஃபிரண்ட்ஸ் நாமலே கைவிட்டாக்கா.. அவிங்க பாவமில்லையா?".என்ற அஜித்தை கனிவோடு பார்த்தாள்  ஷிரேயா ரெட்டி..(ஏமி உங்க ஊருல எத்துனி காரு).

அட இவனைப்போல நானும் அவளுக்கு ஃபிரண்டுதான் .நமக்கு இவனப்போல தோனாம பூடுத்தே..என வருத்தப்பட்ட சிம்ரன்.. அவனிடம்.." கமல் நீ சொல்லரத்தும் சரிதாம்ப்பா..நான் மேலப்போயி அவக்கிட்ட தனியா பேசிப்பாக்குறேன்.". என்றாள்.

அவள் மேலே சென்ற சிறிது நேரத்தில்....பிரியாமணியின் விசும்பல்களுக்கிடையே.. கஜாலாவின் பேச்சு லேசாக கேட்டது..


" நெனச்சேன்.இப்பிடி ஏதாவது நடந்திருக்குமின்னு..உனக்கு அறிவு எங்க போச்சு.. கொஞ்சமாவது முன்னெச்சரிக்க வேணாம்?..இப்ப கஷ்ட்டப்படரது யாரு.?இப்ப டென்ஷனாயிட்டு என்ன பண்ணறது?..
உன்னிய மாதிரி பல பேரு இந்த காலத்துல ஜாக்கிரதையா இல்லாம பாதிக்கப்படராய்ங்க..
சரிசரி அழுவாத.. கண்ண தொடச்சிக்கோ..
நடந்ததையே நெனச்சிக்கிட்டிருக்காம.. எல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சி மறக்க முயர்ச்சி பண்ணு..".


                  ஆறுதல் எனக்கூறிவிட்டு கீழே இறங்கிவந்த நையன்தாராவிடம்" என்ன செல்லம், என்ன சொன்னாங்க?" என ஆர்வமுடன் கேட்ட பிரகாஷ்ராஜ்யை பார்த்து தீர்க்கமாய் சொன்னாள் ஜெனிலியா..அது

கீழேகீழே..
இன்னும் கீழே..

இன்னும் கொஞ்சம் கீழே...
"அவ தெரியாத்தனமா..ரசிகனோட இந்த மொக்கை பதிவை படிச்சு தொலைச்சிப்புட்டாடா.. கொய்யாலேய்....ய்"

பின் குறிப்பு:"மசாலா சினிமா" மாதிரி இது ஒரு மசாலா(மொக்கை)க்கதை.. (இத இப்ப சொல்லி என்னப்பண்றது.. டைட்டிலுலயே சொல்லியிருந்தாக்கா..நாங்க தப்பிச்சியிருப்போமில்ல..)


1)  உண்மை(யாக 100% சாத்தியதை உள்ள)கதையை முழுசா படிச்சிட்டீங்களா?...
உண்மையிலேயே நீங்க.. எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்.உலக மகா பொறுமை சாலி..


2)  கதையில எத்தனை நடிகைகள் வர்ராங்க?அவங்க பேர்கள் என்ன?பட்டு பட்டுன்னு இப்பவே கரைட்டா பின்னூட்டத்துல ..சொல்லிட்டீங்கன்னா.. உங்க மெம்மரி சூப்பரோ சூப்பர்.ஹிஹி..(என்னது நடிகர்கள் பேரா? அவங்க கெடக்கட்டும் ஒரு மூலையுல..ஹிஹி..).
துணை pin குறிப்பு:பாதி சொன்னாக்கா,வெறும் சூப்பர்தான்..ஆமா..
3)  வர்ணனை(?)கள படிக்கும் போது யாருக்காவது பொறாமை தோனியிருந்தா..நீங்க உண்மையிலேயே ரொம்ப அழகானவங்க..ஒருவேளை எரிச்சல் தோனியிருந்தாக்கா.. உங்க அழகு குறைச்சல்லுன்னு நீங்க தப்பா நெனச்சிக்கிட்டிருக்கீங்கன்னு அர்த்தம். 


4)  கதை படிக்கும் போதே எக்குத்தப்பா நீங்களே இப்பிடித்தான் இருக்குமுன்னு ,எடக்கு முடக்கா ,கண்டபடி கற்பனை பண்ணிக்கிட்டாக்கா..நீங்க ரொம்பவும் முன்னெச்சரிக்கை உணர்வு உள்ளவர்ன்னு அர்த்தம்.நீங்க எப்படி?...ஹிஹி..லாஸ்ட் அண்டு ஃபைனல்(ரெண்டும் ஒன்னுதானோ?..)
இது வெறும் மொக்கைதான்.. மொக்கைதான்.. மொக்கை மட்டுந்தேன்.. மக்கள்ஸ்....


அன்புடன் உங்கள் ரசிகன்.

48 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

நமிதா
சிம்ரன்
நிலா
மாதுரி
ரகசியா
சினேகா
அப்பறம் அப்பறம்
ரசிகா நான் அம்பேல்.:) ஞாபகம் வரலை.
மறுபடி படிச்சிட்டு முயற்ச்சி பண்ணுகிறேன்..ஹிஹிஹி..

தேனி திவாகர் said...

எனது நினைவு சரியாக இருந்தால் மொத்தம் 15 பேர் என்று நினைக்கிறேன்.

kavithaa said...

அடப்பாவமே.ஏதோ சீரியஸ் மேட்டரா இருக்குன்னு வந்ததுல மண்டை காஞ்சி போச்சு
ஆனாலும் நிறைய சிரிச்சேன்.மொக்கை வாழ்க..

said...

//அட உங்க கருத்த கேக்க வந்துட்டு,நானே பேசறேன் . நீங்க சொல்லுங்க..//

நல்லாப் பேசறீங்க.. ஏன் நிறுத்திட்டீங்க... நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்....

//எச்சரிக்கை : பலவீன இதயம் கொண்டவர்கள் தயவு செய்து இதை படிக்கவேண்டாம்..."//

பலவீன இதயம்ன உடனேயே... ஏதோ டச்சிங் மேட்டர்ன்னு பட்டுது.... சாவகாசமா படிச்சுக்கலாம்ன்னு விட்டுட்டேன்... சரி, பதிவைப் படிக்காமல் கமெண்ட் போடலாம்ல..? அதுக்கு ஒண்ணும் தடையில்லியே?

kavithaa said...

// கடந்த ஜந்து வருடமாய் வயது 22//
ஹிஹி.:D
இராமர் பாலம்,மணப்பாறை சிறுவன் செய்த ஆப்பரேஷன்,அபி அப்பா,சிம்பு,அறிவாலையம்,தைலாவரம்,போயஸ்கார்டன்,myfriend
ரசிகரே ! இது என்ன "உள்குத்து" ஸ்பெசல் மொக்கையா?:)):)):))
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரேஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்

kavithaa said...

// கடந்த ஜந்து வருடமாய் வயது 22//
ஹிஹி.:D

இராமர் பாலம்,மணப்பாறை
சிறுவன் செய்த ஆப்பரேஷன்
,அபி அப்பா,சிம்பு,
அறிவாலையம்,
தைலாவரம்,போயஸ்கார்டன்
,myfriend

ரசிகரே ! இது என்ன "உள்குத்து" ஸ்பெசல் மொக்கையா?:)):)):))
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரேஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்

RAVATHI KUMAR said...

பின் குறிப்பு
// வர்ணனை(?)கள படிக்கும் போது யாருக்காவது பொறாமை தோனியிருந்தா..நீங்க உண்மையிலேயே ரொம்ப அழகானவங்க
//
எனக்கு ரொம்ப பொறாமையா வந்துச்சி..உண்மையா தான்.:)

said...

முதல்ல கலரை மாத்துங்க(நான் எழுத்துக்களோட கலரை தான் சொன்னேன்;)) படிக்கறதுக்குள்ள கண் அவிஞ்சு போச்சு :)(இப்டி சொல்லியும் நான் இதை முழுசா படிச்சுட்டேன்னு நம்பிடாதீங்க ஹிஹி படிக்கல:))

said...

/இது வெறும் மொக்கைதான்.. மொக்கைதான்.. மொக்கை மட்டுந்தேன்.. மக்கள்ஸ்..../
இதெல்லாம் சொல்லித் தான் தெரியணுமாக்கும் :)

said...

யோவ் யாருப்பா அது படிச்சி மண்டகாஞ்சிபோச்சி. தப்பா நெனக்காதிங்க மண்டை காய்ந்து போய்விட்டது காஞ்சி இல்ல

said...

ஆமாம் மொக்கை எங்க ராசா? நல்ல கருத்து ஆழம் மிக்க பதிவு. நல்ல எழுத்து நடை.

அப்புறம்... தலைப்பில் கடைசி இரண்டுவார்த்தை படி 100% உண்மையாக நடந்துகொண்டேன்.

நாங்க எல்லாம் சொன்ன பேச்சு கேட்கும் நல்ல பிள்ளைங்க!

said...

//படிக்காமல் கமெண்ட் போடலாம்ல..? அதுக்கு ஒண்ணும் தடையில்லியே?//

அது நம்ம சுதந்திரம் நம் இஷ்டபடி கும்மலாம், அதுக்கு பதிவை படிச்சு இருக்கனும் என்ற அவசியம் இல்லை. இப்ப பாருங்க பின்னூட்டம் படிச்சதாலே ரசிகன் என்ன சொல்லி இருக்கிறார் என்று புரிஞ்சு போச்சு.:)))

said...

' மீனை தூண்டில் போட்டு பிடிப்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள்.. மீன் தூண்டில் வீசுவதை நம்புவீர்கள் அவள் கண்களை பார்த்தால்..//
அந்த கண்மீன்கள்(?) இப்போது நீந்திக் கொண்டிருந்தன.தண்ணீரில் அல்ல.. கண்ணீரில்..'
' அல்வாவுக்கு பேர் போன சென்னை மாநகரம்.அடிவானுக்கு செம்மஞ்சள் பூசிக்கொண்டிருந்த சூரியன், அதை அழித்துக்கொண்டிருந்த இருட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல்,'

மறுபடி கவிதை வேற..ம்ம்..ஒன்னு கவிதை எழுதுங்கள்,இல்லை கதை எழுதுங்கள், இல்லை காமெடி எல்லாவற்றையும் கலந்து கட்டி..............எங்கள் மேல் கருணையே இல்லையா?.hee hee.

இந்த' உண்மை(யாக 100% சாத்தியதை உள்ள)கதையை 'தெரியாத்தனமா.'.நானும் முழுசா 'படிச்சு தொலைச்சிப்'புட்டேன்.

கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பவர்கள் said...

//அது நம்ம சுதந்திரம் நம் இஷ்டபடி கும்மலாம், அதுக்கு பதிவை படிச்சு இருக்கனும் என்ற அவசியம் இல்லை//

குசும்பனுக்கு ரிப்பிட்டுடுடு

Anonymous said...

கொக்கரக்கோஓஓஓஓஓ கும்மாங்கோஓஓஓஓஓஓஓஓ

kavithaa said...

// யோவ் யாருப்பா அது படிச்சி மண்டகாஞ்சிபோச்சி. தப்பா நெனக்காதிங்க மண்டை காய்ந்து போய்விட்டது காஞ்சி இல்ல//

யோவ் ஜெயம். தப்பா நெனக்காதிங்க. ரசிகரு இவ்ளோ பெரிய மொக்கை போட்டிருக்காரு அத கண்டுக்காம, பெருசா என்னோட பின்னூட்டத்தில் சொல்குற்றம் பொருள் குற்றம் கண்டுபிடிக்க வந்திட்டீங்களே..ஹி.ஹி.
காய்ந்து காஞ்சி எல்லாம் ஒன்றுதான் மொக்கையை படிச்சதுக்கப்பறம்.

Anonymous said...

சரியா 17 நடிகைகள்,4 தடி பசங்கள். மறுபடி போய் சரியான்னு செக் பண்ணிட்டு வந்து என்னோட பேரை போடுரேன்.

said...

//ஒரு பொண்ணோட மனசு ஒரு பையனுக்குத்தான் புரியுமின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.//
மொக்கையிலேயும் ஒரு நல்ல பழ(புது)மொழி வாழ்க ரசிகன்.:D

said...

டண்டணக்க டணக்க
டண்டணக்க டணக்க
டண் டண் டண் டடண்
டண் டண் டண் டடண்

Anonymous said...

போச்சு போச்சு எல்லாம் தப்பா போச்சு. நான் சொன்னதுக்கு அதிகமாவே குஜிலிகள் இருக்காங்க.எம்பேர சொல்றதா இல்லை.

said...

Hahaa... rombave creative'a dhan yosikrenega :P
munladen?? :P

//பின் குறிப்பு:"மசாலா சினிமா" மாதிரி இது ஒரு மசாலா(மொக்கை)க்கதை.. (இத இப்ப சொல்லி என்னப்பண்றது.. டைட்டிலுலயே சொல்லியிருந்தாக்கா..நாங்க தப்பிச்சியிருப்போமில்ல..)//
idhu dhaan leathayum vida top!!

Cheers,
**மருதம்**

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

என்னத்த சொல்ல!

said...

வாங்க விஜய் ,மொத்தமா பாத்ததுல..நீங்க மட்டுந்தேன்..இதப்போயி சீரியஸா எடுத்துக்கிட்டு டிரை பண்ணியிருக்கீங்க..ஆனா அந்த மாதுரிதேன் கொஞ்சம் இடிக்குது.(.உங்களுக்கு எத்தினி வயசு?..ஹிஹி..)..
இருந்தாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுட்டீங்க...வாழ்த்துக்கள்..பரிச..நம்ம டிரிம்ஸ் மாம்ஸ் கிட்ட நாஞ்சொன்னதா சொல்லி வாங்கிக்கோங்க.. ஹா..ஹா..
ஆமா..// மறுபடி படிச்சிட்டு முயற்ச்சி பண்ணுகிறேன்.// இன்னு சொன்னீங்க.?.. அது சரி ஒரு தடவ படிச்சதுக்கே.. எல்லாருக்கும் தல சுத்தி முதுவுபக்கம் வந்து நிக்குது..நீங்க ரெண்டு மொற படிச்சாக்கா.. ஒரு வாரத்துக்கு எழுந்திரிக்கத்தான் முடியுமா?..ஹிஹி,,:D.
வருகைக்கு நன்றிகள்..

said...

// எனது நினைவு சரியாக இருந்தால் மொத்தம் 15 பேர் என்று நினைக்கிறேன்.//
உங்க வீட்டுக்கே யாராவது வழி காட்டினாத்தேன் உண்டு..திவாகர் சார்..பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்.ஹிஹி.. நன்றிகள்.

said...

// அடப்பாவமே.ஏதோ சீரியஸ் மேட்டரா இருக்குன்னு வந்ததுல மண்டை காஞ்சி போச்சு
ஆனாலும் நிறைய சிரிச்சேன்.மொக்கை வாழ்க..//
வாங்க கவிதா.. மொக்கை பதிவு போட்டும் ,எங்க இன்னும் காணலியேன்னு பாத்தேன்..ஹிஹி..அப்ப இப்ப மண்டையில எதுவும் இல்லையா?..ஹிஹி..(அப்பாவித்தனமா கேட்டதுக்கு எதுக்குங்க.. சோடா பாட்டில எடுக்கிறீங்க..ஹிஹி..)
// ரசிகரே ! இது என்ன "உள்குத்து" ஸ்பெசல் மொக்கையா?
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பரேஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்//
ஏனுங்க கவிதா நீங்க என்னிய வம்புல மாட்டி விடாம தூங்க மாட்டீங்க போல..
இதுக்காகத்தேன்.. நான் கடைசியா..
// இது வெறும் மொக்கைதான்.. மொக்கைதான்.. மொக்கை மட்டுந்தேன்.// ன்னு வாக்குமூலம் கொடுத்திருக்கேன்..நாமத்தான் உஷாருல்ல..ஹிஹி..:D
ஆமா..இன்னும் ரிசல்ட் வர்லியா?..உங்க அப்பா வேற இப்பவே..கிப்ட் வாங்க ஜடியா கேக்கராரு..[பாவம் இப்பிடி அப்பாவியா இருக்காரே..ஹிஹி..:))]

said...

/ நல்லாப் பேசறீங்க.. ஏன் நிறுத்திட்டீங்க... நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்....//
இளவரசரே.. ஒரே ஊருல இருந்துக்கின்னு இப்பிடி வார்ரீங்களே..நாளைக்கி நாங்கதேன் உங்க கூட இருக்கோனும் ஞாபகம் வைச்சிக்கோங்க..(நம்ம பிரித்தியோட சேந்ததுலருந்து நமக்கும் நெல்லா மெரட்ட வருதுங்கோ.ஹிஹி...).
//சாவகாசமா படிச்சுக்கலாம்ன்னு விட்டுட்டேன்... //
அவ்வளவு ரிஸ்க் எடுக்க துணீஞ்சிட்டீங்களா?..ஹா..ஹா..
//சரி, பதிவைப் படிக்காமல் கமெண்ட் போடலாம்ல..? அதுக்கு ஒண்ணும் தடையில்லியே?//
மத்தவங்க எல்லாம் ஏதோ பரிச்சைக்கி படிக்கிற மாதிரி படிச்சிட்டுத்தேன்.. திட்டியிருக்காய்ங்கன்னு நெனக்கிறீங்களா?..ஹிஹி...
இங்க எதுக்கும் தடா இல்லைங்க..

said...

// // வர்ணனை(?)கள படிக்கும் போது யாருக்காவது பொறாமை தோனியிருந்தா..நீங்க உண்மையிலேயே ரொம்ப அழகானவங்க
//
எனக்கு ரொம்ப பொறாமையா வந்துச்சி..உண்மையா தான்.//
நம்பரேனுங்க ரேவதி குமார்..அதுமட்டுமில்ல.. பதிவ முழுமையா படிச்சிட்டு உங்களுக்கு தேவையான பகுதிய மட்டும் எடுத்துக்கிறீங்களே.. உண்மையாவே.. நீங்க பொறுமைசாலி மட்டுமில்ல... தேர்ந்தெடுக்கும் அறிவு உடையவர்..(அட,நிச்சயமா..நீங்க ரொம்ப அழகானவங்க கூடத்தேன்.. அத நாங்க சொல்லி அங்கிகரிக்கனுமின்னு ஏன் நெனக்கிறீங்க..)..
ரொம்ப வெளிப்படையா இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.
வருகைக்கு ரொம்ப நன்றீகள்ங்க..

said...

// முதல்ல கலரை மாத்துங்க//

வாங்க வேதா..வாங்க.. மொபைல்ல E-மெயில் பாத்த ஒடனே..வீட்டுக்கு வந்து மாத்திப்புட்டேனுங்க...

// // முதல்ல கலரை மாத்துங்க(நான் எழுத்துக்களோட கலரை தான் சொன்னேன்)//
ஆஹா.. நம்ம வேதாவா இப்பிடியெல்லாம் பேசரது?..உங்கள நா ரொம்ப சின்னப்புள்ள இன்னு இல்ல நெனச்சேன்.. காலேஜ் பாஷையில கலக்கிறீங்க..ஹா..ஹா..:)):)):))

// /இது வெறும் மொக்கைதான்.. மொக்கைதான்.. மொக்கை மட்டுந்தேன்.. மக்கள்ஸ்..../
இதெல்லாம் சொல்லித் தான் தெரியணுமாக்கும் //
பின்ன.. நம்ம கவிதா கூட இது "உள்குத்து"பதிவுன்னு என்னிய வம்புல மாட்டிஉட பாத்தாங்களே..அத்தான் உஷாராய்ருக்கட்டுமேன்னு..ஹிஹி..:D

// (இப்டி சொல்லியும் நான் இதை முழுசா படிச்சுட்டேன்னு நம்பிடாதீங்க ஹிஹி படிக்கல////

நம்பலாமுன்னுதேன் தோனுது..ஏன்னாக்கா இம்புட்டு தெளிவா இருகிங்களே..ஹிஹி..:D

வருகைக்கு ரொம்ப நன்றீங்க வேதா...

said...

// ஜெயம் said...
யோவ் யாருப்பா அது படிச்சி மண்டகாஞ்சிபோச்சி. தப்பா நெனக்காதிங்க மண்டை காய்ந்து போய்விட்டது காஞ்சி இல்ல//
வாங்க ஜெயம் வாங்க.. வந்த ஒடனே.. நம்ம கவிதாவ வம்புக்கு இழுத்துட்டீங்களே.. அவிங்கள நீங்க இன்னும் பாத்ததில்லல்ல.. அத்தான் இம்புட்டு தைரியம்..இப்ப பாருங்க.. அவிங்க என்ன சொல்லியிருக்காங்கன்னு..ஹிஹி..
(என்னிய திட்ற மாதிரி நெனச்சிட்டீங்களா?..இப்ப பாத்தீங்கள்ல..ஹிஹி..:)) ).

said...

வாங்க மாமே... வாங்க..
// ஆமாம் மொக்கை எங்க ராசா? நல்ல கருத்து ஆழம் மிக்க பதிவு. நல்ல எழுத்து நடை.//
நீங்க தப்பா வேற வீட்டுல பதிவ படிச்சிட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்திட்டீங்களோ?..ஹிஹி..
// அப்புறம்... தலைப்பில் கடைசி இரண்டுவார்த்தை படி 100% உண்மையாக நடந்துகொண்டேன்.
நாங்க எல்லாம் சொன்ன பேச்சு கேட்கும் நல்ல பிள்ளைங்க!//
குசும்பரே..இப்பிடி திடீர் திடீருன்னு நல்லப்புள்ளையா மாறிட்டீங்கன்னாக்கா..கும்மி உலகம் என்னாவது?..
கும்மும் போது உள்குத்துக்கு டார்கெட் வேணாமா?.:))

said...

// அது நம்ம சுதந்திரம் நம் இஷ்டபடி கும்மலாம், அதுக்கு பதிவை படிச்சு இருக்கனும் என்ற அவசியம் இல்லை. //
ஆஹா.. என்ன ஒரு உயர்ந்த கொள்கை..வாழ்க.. குசும்பரின் குசும்புகள்..ஹிஹி..

said...

வாங்க பிரித்தி வாங்க..
// எங்கள் மேல் கருணையே இல்லையா?.hee hee.//
ஹிஹி.. ஏதோ என் கடமையதா செய்யரேன்..பலனைப்பத்தியெல்லாம் கவலப்படக்கூடாதுன்னு பக்கத்துவீட்டு பாட்டி சொல்லிட்டு போயிருக்காய்ங்களே..

// இந்த' உண்மை(யாக 100% சாத்தியதை உள்ள)கதையை 'தெரியாத்தனமா.'.நானும் முழுசா 'படிச்சு தொலைச்சிப்'புட்டேன்.//
இத இத.. இதத்தேன் நா எதிர்பாத்தேன்..ஹிஹி.. தாங்க்ஸ்ங்கோ......(ஆமா, கத உண்மையாயிடுச்சா?..ஹிஹி...)

said...

// கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பவர்கள் said...

//அது நம்ம சுதந்திரம் நம் இஷ்டபடி கும்மலாம், அதுக்கு பதிவை படிச்சு இருக்கனும் என்ற அவசியம் இல்லை//
குசும்பனுக்கு ரிப்பிட்டுடுட//

கடைத்தேங்காயை ஒடையுங்க.. ஆனா காசு குடுத்து எடுத்து ஒடையுங்க.. நம்ம குசும்பரோட தேங்காய.. சுட்டு எடுத்து ஒடைக்கிரது சரியா படலை..ஹிஹி.... நன்றிகள்..

said...

// கொக்கரக்கோஓஓஓஓஓ கும்மாங்கோஓஓஓஓஓஓஓஓ//
யாருப்பா அது.. கதைய படிச்சி முடியருத்துக்குள்ள விடிஞ்சிருச்சா?...சேவலே..கூவிடுச்சி...ஹிஹி..:))

said...

// யோவ் ஜெயம். தப்பா நெனக்காதிங்க. ரசிகரு இவ்ளோ பெரிய மொக்கை போட்டிருக்காரு அத கண்டுக்காம, பெருசா என்னோட பின்னூட்டத்தில் சொல்குற்றம் பொருள் குற்றம் கண்டுபிடிக்க வந்திட்டீங்களே..ஹி.ஹி.
காய்ந்து காஞ்சி எல்லாம் ஒன்றுதான் மொக்கையை படிச்சதுக்கப்பறம்//

சாந்தி..சாந்தி..(யாரென்னெல்லாம் கேக்கப்டாது) கவிதா.. நண்பருக்கு உங்களப்பத்தி சரியா தெரியாதில்லையா..
நா சொல்லி வைக்கிறேனுங்க...ஏனுங்க.. ஜெயம் "தப்ப சுட்டி காட்டுன மாபெரும் தவறுக்கு" சாரி சொல்லிடுங்களேன் .:D
ஆமாங்க கவிதா.. கெடச்ச கேப்புல என்னிய வார்ரீங்களே..ஹிஹி...

said...

// சரியா 17 நடிகைகள்,4 தடி பசங்கள். மறுபடி போய் சரியான்னு செக் பண்ணிட்டு வந்து என்னோட பேரை போடுரேன்.//
// போச்சு போச்சு எல்லாம் தப்பா போச்சு. நான் சொன்னதுக்கு அதிகமாவே குஜிலிகள் இருக்காங்க.எம்பேர சொல்றதா இல்லை.//
வாங்க வாங்க.. ........... வாங்க..
ரெண்டும் நீங்க தானா..தடிப்பசங்க இன்னு சொல்லும்போதே.. நீங்க யாருன்னு தெரிஞ்சி போச்சிங்கோ....
ஹிஹி......

said...

// G.Ragavan said...

டண்டணக்க டணக்க
டண்டணக்க டணக்க
டண் டண் டண் டடண்
டண் டண் டண் டடண்//
பாவம் யாரு வீட்டு புள்ளையோ..பதிவ படிச்சி இப்பிடி ஆகிப்போச்சி...
உங்களோட இந்த நெலமைக்கு நானும் ஒரு காரணமின்னு நெனக்கும் போது கஷ்டமாயிருந்தாலும்..கடமைய செய்யும் போது ,இப்பிடியெல்லாம் நடக்கரத்து சகஜம் தானே..ஹிஹி...:))
வருகைக்கும் கும்மிக்கும் நன்றிகள் ஜி.ராகவன்.
[ஆமா.. இப்பத்தேன்.. "வீராசாமி" படம் பாத்து தொலச்சிங்களோ?...ஹிஹி..:D]

said...

Marutham said...
// Hahaa... rombave creative'a dhan yosikrenega
munladen??
//பின் குறிப்பு:"மசாலா சினிமா" மாதிரி இது ஒரு மசாலா(மொக்கை)க்கதை.. (இத இப்ப சொல்லி என்னப்பண்றது.. டைட்டிலுலயே சொல்லியிருந்தாக்கா..நாங்க தப்பிச்சியிருப்போமில்ல..)//
idhu dhaan leathayum vida top!!//
முதல் வருகைக்கு ரொம்ப ரசிகனின் நல்வரவேற்ப்புகள்..மருதம்..
வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிகள்..
கீ.பி/கீ.மு மாதிரி, பின்லேடன்/முன்லேடன்..இருக்கப்படாதுங்களா?..ஹிஹி..:D

said...

// Dreamzz said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//
ஹா..ஹா..மாம்ஸ்..நீங்களும் படிச்சிட்டீங்களா?..முழுசா படிச்சிட்டீங்களா?..சவுண்ட கேட்டாலே.. புரியுதே..ஹிஹி...
// என்னத்த சொல்ல!//
உங்களுக்கு இல்லாத உரிமையா?..எனக்குள்ள மொத மொதல்ல..கவித(மொக்க) வெளக்க(?) ஏத்திவைச்சதே.. நீங்கதான..(அதுக்காக நெறய பேரு உங்க மேல "ரொம்ப காண்டா" திரியுராய்ங்களாம்.. உஷாரு..மாமே.. உஷாரு..)ஹிஹி...:))

CresceNet said...

Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.

said...

இன்னிக்குத் தான் படிச்சென் - என்ன பதில் போடுறதுன்னு யோசிச்சேன் - ஒண்ணுமே புரிலே - கண்ணெக் கட்டுது - குஷ்பூ கிட்டே கேட்டென் - வேற உருப்படியா வேலை பாருங்கன்னு சொல்லிட்டாங்க. கேயார்விஜயாட்ட கேட்டா சிரிச்சுட்டுப் போய்ட்டாங்க. சிரீப்ப்ரியா சிங்கப்பூர்லெ இருந்து சொன்னாங்க - ரசிகன உதைக்கலாமான்னு - நம்மள் எல்லாம் மறந்துட்டானேன்னு

நேரமில்ல - அதனால கடேசி கடசியா ஆச்சி கிட்டெ கேட்டேன். அருமையான ஆரம்பம் - நடிகர் திலகத்த ஞாபகப் படுத்துனதுக்கு நன்றின்னாங்க. அப்புறம் படிச்சிட்டு பய புள்ள ஒரு மாதிரி திரியுறான் - கவனிக்கனும்னாங்க

ஆமா நான் என்ன சொல்றேன்னு கேக்கறிங்களா - இதோ - என் கருத்து .

அய்யய்யோ - மீனா கிட்டெ இருன்ந்து தொல்லை பேச்சி - தொல்லையெ சமாளிச்சுட்டு சொல்ர்ரென் - வர்ட்டா ???

said...

சீனா சார்..
லேட்டா வந்ததுமில்லாம.. அவிங்ககிட்டயெல்லாம் கொளுத்திப் போட்டுடீங்களே..சார்..
குஷ்புவ நம்ம ஹீரோயினுக்கு அத்தையா கோட்டுடலாம்.ஸ்ரீபிரியாவ அம்மாவா,ஆச்சிய ஆச்சியாவே போட்டு சமாதானப்படுத்திடலாமுங்கோ..ஹிஹி...

// படிச்சிட்டு பய புள்ள ஒரு மாதிரி திரியுறான் - கவனிக்கனும்னாங்க//
ஆச்சி.. எல்லாம் நம்ம சீனா சாருக்கிட்ட ஃபிரண்டு சேந்தப்பறம்தான்..இப்பிடியெல்லாம்..ஹிஹி...

// மீனா கிட்டெ இருன்ந்து தொல்லை பேச்சி - தொல்லையெ சமாளிச்சுட்டு சொல்ர்ரென் - வர்ட்டா ???//
மீனாக்கிட்ட பேசரது உங்களுக்கு தொல்லையா? அப்பிடின்னாக்கா...சீனாசார் ..அப்பிடியே..கால எனக்கு டைவர்ட் பண்ணிடுங்களேன்..ஹிஹி..
வருகைக்கும் கலாட்டாவுக்கும் நன்றிகள் சார்..

said...

அடப்பாவி

said...

பாவனா
நமீதா
நிலா
கோபிகா
கஜாலா
நயந்தாரா

அடப்போய்யா நான் போய் திரும்ப படிச்சிட்டு வரேன்

said...

// மங்களூர் சிவா said..

பாவனா
நமீதா
நிலா
கோபிகா
கஜாலா
நயந்தாரா

அடப்போய்யா நான் போய் திரும்ப படிச்சிட்டு வரேன் //

ஹா..ஹா.. மாம்ஸ்.. நீங்க எல்லா ஆக்ட்டரஸ்சோட பெரெயெல்லாம் வாய்ப்பாடு கணக்கா மனப்பாடம் செஞ்சி வச்சிருப்பீங்கன்னுல்ல நெனச்சேன்.. கவுந்துப்புட்டீங்களே..
நன்றிகள் மாமே..

said...

// மங்களூர் சிவா said..

பாவனா
நமீதா
நிலா
கோபிகா
கஜாலா
நயந்தாரா

அடப்போய்யா நான் போய் திரும்ப படிச்சிட்டு வரேன் //

ஹா..ஹா.. மாம்ஸ்.. நீங்க எல்லா ஆக்ட்டரஸ்சோட பெரெயெல்லாம் வாய்ப்பாடு கணக்கா மனப்பாடம் செஞ்சி வச்சிருப்பீங்கன்னுல்ல நெனச்சேன்.. கவுந்துப்புட்டீங்களே..
நன்றிகள் மாமே..

said...

// மங்களூர் சிவா said..

பாவனா
நமீதா
நிலா
கோபிகா
கஜாலா
நயந்தாரா

அடப்போய்யா நான் போய் திரும்ப படிச்சிட்டு வரேன் //

ஹா..ஹா.. மாம்ஸ்.. நீங்க எல்லா ஆக்ட்டரஸ்சோட பெரெயெல்லாம் வாய்ப்பாடு கணக்கா மனப்பாடம் செஞ்சி வச்சிருப்பீங்கன்னுல்ல நெனச்சேன்.. கவுந்துப்புட்டீங்களே..
நன்றிகள் மாமே..