Monday, December 3, 2007

கிராமபுற சேவையா? மருத்துவ பயிற்சியா?






போன " கொலை செய்ய லைசென்ஸ்? -டாக்டர்கள் ஜாக்கிரதை" பதிவை படிச்சுப்புட்டு நெறய நண்பர்கள் சாட்டிங்க்குல கேட்டுட்டாய்ங்க..
படிக்கிற பசங்கள கிராமத்துக்கு வைத்தியம் பாக்க அனுப்பினா கிராம மக்கள் நெலமை என்னாவதுன்னுட்டு?
எனக்கு கூட ஆச்சர்யமாகிடுச்சு.. இளைஞர்கள் எல்லாரும் இந்த மாதிரி பொதுப்பிரச்சனையை கூட ஆர்வமா விவாதம் செய்ய ஆரம்பிச்சிட்டாய்ங்களேன்னு .நல்ல முன்னேற்றம் தானே...
டாக்டருக்கு படிக்கிற ஒரு நண்பன் ஊருலருந்து போன் செஞ்சி "யு டூ? "ன்னு அரைமணி நேரம் பொரிஞ்சிப்புட்டான்.அப்புறமா என்னோட பார்வையில நியாயங்கள சொன்னேன்.. அவன் கூட பொதுவா யோசிச்சுப்பாத்தா நீ சொல்லறது சரின்னுதேன் தோனுதுன்னு வழிக்கு வந்துப்புட்டான்..
மேலே கேள்வி கேட்ட மக்கள் கிட்ட குடுத்த வாக்குறுதிப்படி இந்த பதில் பதிவு..
(மேட்டரு என்னான்னு இன்னும் தெரியாதவிங்க.. முந்தைய பதிவ கொஞ்சம் படிச்சிட்டு வந்துருங்களேன்.பின்னூட்டமும் கூட கருத்தோட நெறயபேர் சொல்லியிருக்காங்க..)


நீங்க நினைக்கிற மாதிரி கிராமத்துல உயிரை பறிக்கும் ஆப்ரேஷங்கள் நடத்தப்படுவதில்லிங்க...
எளிமையா வாழ்க்கை நடத்துற அவிங்களுக்கு, வர்ரது சாதாரண நோய்கள் தான்.. அவை நன்றாக அனுபவமுள்ள மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டு முன்னமே தீர்மானிக்கப்பட்ட ஆபத்தில்லாத மருந்துக்கள் ,கிராம மருத்துவ மனைகளில் அரசாங்கத்தால் கொடுக்கப்படுகின்றன..
காலரா போன்ற உயிர்கொல்லி நோய்களின் கதையே வேறு , உடனே அரசாங்கம் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை குறிப்பிட்ட பகுதிகளுக்கே அனுப்பி முகாம் நடத்துகிறது.தேவைப்பட்டால்.. வீடு வீடாகத் தேடி வந்து ஊசிபோட்டுச் செல்கிறார்கள்..

நகரத்தை போல டீசல் புகைக்காற்றும்,முறை தவறிய உணவுப்பழக்க வழக்கங்களும் இல்லாத கிராமத்தில் வரும் இத்தகைய சாதாரண நோய்களுக்கு மருந்து கொடுக்க ஒரு கம்ப்ண்டராலேயே முடியும்.. பின்ன ஏன் மாணவர்கள்ங்கறீங்களா?...

அத்தனை கும்பல்,அவசரமில்லாத கிராமத்து ஆஸ்பத்தரிகளில் தான் மாணவர்கள் பொறுமையாக மக்களிடம் பேசும் பயிற்ச்சியை கற்றுக்கொள்ள முடியும்.அது ஒவ்வொரு மருத்துவருக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசிய தகுதி. அதுவும் வெறும் நான்கு மாதங்களுக்குத்தேன்..

சில மருத்துவர்கள் நாம் நமது பிரச்சனையை சொல்ல ஆரம்க்கும்போதே தலையை குனிந்துக்கொண்டு காகிதத்தில் எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.நாம் சொல்லி முடிக்கும்போதே மருந்து சீட்டை கையில் கொடுத்துவிடுவார்கள். இதற்க்கு பதில் இந்த அறிகுறிக்கு இந்த மருந்துன்னு ஒரு போர்டுல எழுது வாசல்ல தொங்கவிட்டாக்கா.,நாங்க நேரா ஃபார்மஸில வாங்க்கிப்போமில்ல..

[ ஆனாக்கா நான் புதுவை மருத்துவமனையில பக்கத்துவீட்டு பாப்பாவுக்கு ஜிரத்துக்கு கொண்டுபோனப்போ.. அந்த டாக்டர்
ரொம்ப அன்பா குழந்தைகிட்ட படிப்ப பத்தியெல்லாம் விசாரிச்சு, பிரச்சனைகளை சொன்ன போது ,பொறுமையா கேட்டு அவருக்கு தேவையான விபரங்களையும் கேட்டுக்கிட்டு, என்னென்ன மருந்து குடுக்கிராரு.. எதுக்காக குடுக்கிறாரு,மருந்து பக்க விளைவுகள் என்ன (ஏ.கா: அசதியா வரும்) எல்லாத்தைவும் விளக்கமா சொன்னாரு. அதுவும் பதினைஞ்சே நிமிஷத்துல.. நமக்கே ரொம்ப திருப்தியா ஒரு உணர்வு.].

கொஞ்சம் சிக்கலான நோயாளிகள் தாலுக்கா.. மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்..அங்கு ஏற்கனவே அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அரசாங்கத்தால் பணி அமர்த்தப்பட்டுள்ளார்கள்..புதிய திட்டத்தின் படி மருத்துவ மாணவர்கள் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுறை/ ஆலோசனைப்படி அவருடைய மேற்ப்பார்வையில் இயங்கத் துவங்க்குவார்கள். பெரும்பாலான அடிப்படை தவறுகள் இங்கு ஆரம்பத்திலேயே திருத்த வாய்ப்பாக அமைகின்றது.. இதுவும் வெறும் நான்கு மாதங்களுக்குத்தேன்..


முந்தைய பயிற்ச்சிகளால் மெருகூட்டப்பட்ட முக்கால் மருத்துவர்கள் ,முழுமையடைவது கடைசியா.. நகர்புற மருத்துவமனைகளில் தான்.
அவசியப்பட்ட லேட்டஸ்ட் கருவிகள்,புதிய முறைகளோடு பயிற்ச்சி செய்ய துவங்க்குகிறார்கள். அதுவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் மேற்ப்பாற்வையில்..

முதல் நான்கு மாதங்கள் - மக்கள் தொடர்பு பயிற்ச்சி.. [கிராமம்]
இரண்டாம் நான்கு மாதங்கள் - மருத்துவ சோதனைப்பயிற்ச்சி [துணை நகரம்]
மூன்றாம் நான்கு மாதங்கள் - இறுதி கட்ட திறனாய்வு பயிற்ச்சி [நகரம்]

அதுவும் கடைசி எட்டு மாதங்கள் அனுபவமுள்ள மருத்துவர்களின் மேற்ப்பார்வையில்...மாறுபட்ட மூன்று வித்தியாசமான் சூழ்நிலைகளிலும் அனுபவம்.பலத்தரப்பட்ட மக்கள்,சூழல் என்று..

இப்போ சொல்லுங்கள்.. உயிர் காக்கும் பணிக்கு வருபவர்க்கு இந்த பயிற்ச்சிக்கூட வேணாமின்னாக்கா எப்பிடி?..


தவறான மருத்துவத்தால் அடிக்கடி உயிர் இழப்புக்கள் இப்போ ஏற்ப்படறது தெரிய வர்ரதால, மருத்துவ குழுக்களின் ஆலோசனைப்படி அரசாங்கம் மருத்துவ மாணவர்களின் படிப்ப இன்னும் கூடுதல் பயிற்ச்சி குடுக்கனும்ன்னு முடிவெடுத்திருக்கு..இது நல்லதுதான்..

அரசியல்வாதிங்க அவிங்க சாதனையா ஓட்டு கேக்கரதுக்காக .. இதை "கிராமப்புற சேவை"ன்னெல்லாம் விளம்பரப்படுத்தியதாலதேன் இம்புட்டு குழப்பமும்ன்னு தோனுது.


நீங்க இன்னொரு வருடம் அனுபவ படிப்பு படிச்சாத்தேன் நாங்க குடுக்குற டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர்கள்ன்னு முடிவெடுக்கிறது ,மருத்துவ கல்வித்துறையின் தீர்மானம்.பட்டம் குடுக்கப்போறவிங்களே அவிங்கத்தானே..

அதுப்படி இன்னும் டாக்டராவே ஆவாத நீங்க ,எங்களுக்கு நிரந்தர அரசு வேளை தந்தாத்தேன் என்னோட படிப்பை முடிப்பேன்னு சொல்லறது எப்பிடி நியாயம்?..


மருத்துவ மாணவ நண்பர்களே.. இந்த திட்டம் நீங்க செய்யற அடிஸ்னல் வேலையோ? இல்ல சேவையோ இல்ல...

மக்கள் உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பத்ற்க்காக, சேர்க்கப் பட்ட உங்கள் பாடத்தின் ஒரு பகுதி அம்புட்டுத்தேன்..
எங்களோட வரிப்பணத்துலயிருந்து பத்து லட்சம் குடுத்து படிக்க வைக்கிறோம்..உங்கள நம்பி எங்களோட உயிரையே ஒப்படைக்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் கூடுதல் படிச்சுட்டு வாங்கன்னு சொல்லறதுல்ல என்னங்க தப்பிருக்கு....?

27 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

Anonymous said...

meaningfull questions.
excellent post.

said...

//மாணவர்கள் பொறுமையாக மக்களிடம் பேசும் பயிற்ச்சியை கற்றுக்கொள்ள முடியும்.அது ஒவ்வொரு மருத்துவருக்கும் இருக்க வேண்டிய அத்தியாவசிய தகுதி.//
I fully accept this point
Very valid point...

//அத்தனை கும்பல்,அவசரமில்லாத கிராமத்து ஆஸ்பத்தரிகளில் தான் //
Ha Ha Ha.... THis is not true... PHCs are also heavily rushed.....

Many PHCs treat 200 patients per day

This point is not valid

//அங்கு ஏற்கனவே அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அரசாங்கத்தால் பணி அமர்த்தப்பட்டுள்ளார்கள்..//
No.... As per this scheme, it will be only interns in Taluk hospital.. THis is the difference.... This point is not valid..

//முந்தைய பயிற்ச்சிகளால் மெருகூட்டப்பட்ட முக்கால் மருத்துவர்கள் ,//

YOu have assumed that doctors will be posted first in PHC, then in GH and then in Medical College. This assumption is wrong. So this point is not valid

//இப்போ சொல்லுங்கள்.. உயிர் காக்கும் பணிக்கு வருபவர்க்கு இந்த பயிற்ச்சிக்கூட வேணாமின்னாக்கா எப்பிடி?..//

For your kind information, even in the present CRRI, they are working in PHCs for 4 months... Do you know this or not... So there is nothing new to this...

So students are ALREADY WORKING for one year as CRRI.. Why add another year.....

Please tell me whether you know that even today CRRIs have to work in PHCs for 4 months........

Your assumption seems to ignore this fact.

//தவறான மருத்துவத்தால் அடிக்கடி உயிர் இழப்புக்கள் இப்போ ஏற்ப்படறது தெரிய வர்ரதால,//
No... The scheme has been brought to post doctors for Rs 8000 instead of Rs 18000.

//அரசியல்வாதிங்க அவிங்க சாதனையா ஓட்டு கேக்கரதுக்காக .. இதை "கிராமப்புற சேவை"ன்னெல்லாம் விளம்பரப்படுத்தியதாலதேன் இம்புட்டு குழப்பமும்ன்னு தோனுது.//
Exactly. See what I have told in http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html

//நீங்க இன்னொரு வருடம் அனுபவ படிப்பு படிச்சாத்தேன் நாங்க குடுக்குற டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர்கள்ன்னு முடிவெடுக்கிறது ,மருத்துவ கல்வித்துறையின் தீர்மானம்.//
But this has been done NOT FOR STUDENTS Favour, but TO HAVE A SYSTEM OF CONTRACT LABOUR.

//எங்களோட வரிப்பணத்துலயிருந்து பத்து லட்சம் குடுத்து படிக்க வைக்கிறோம்..//
Totally wrong and baseless statement. Can you prove this. ???? Please see http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html

//உங்கள நம்பி எங்களோட உயிரையே ஒப்படைக்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் கூடுதல் படிச்சுட்டு வாங்கன்னு சொல்லறதுல்ல என்னங்க தப்பிருக்கு....?//
Excellent... Let them do PG...

My point is very simple... There are some guys who want to do PG immediately after MBBS (sons of doctors, IAS Officers)... Let them do PG as they have financial support

There are some (sons of teachers farmers) who want to work in Government.. Give them job....
-----
When there are enough persons ready to work, why ABOLISH those posts and post every one on contract basis.
-----

said...

கீழ்க் கண்டவை குறித்து உங்கள் கருத்து என்ன

1. கிராமப்புறங்களில் ஒரு மருத்துவர் Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடிதது மூன்று ஆண்டுகள் பணி புரிய வேண்டுமா, அல்லது அதற்கு பதில் ஒரு பயிற்சி மருத்துவர் 4 மாதம் மட்டும் பணி புரிய வேண்டுமா

2. TNPSC Waiting Listல் சுமார் 1000 மருத்துவர்கள் அரசு வேலைக்கு காத்திருக்கும் போது அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தாமல் அந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவதை ஆதரிக்கிறீர்களா ??

3. ஒரு கிராமத்திற்கு 3 ஆண்டுகள் ஒரு மருத்துவர் பணிபுரிய வேண்டுமா, அல்லது ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒவ்வொரு (வேறுவேறு) மருத்துவர் பணிபுரிய வேண்டுமா ??

said...

Please read my old posts....
3 வருடங்கள் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த என் கருத்து

http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html

Please note that I support the Rural Service... It will be a lot beneficial to the doctors... I learnt a lot in my 3 years in PHC.. (not medical but administration, human relationship, disaster management, crisis management etc)... Any one who has worked in a PHC SINCERELY for 2 years will have enough Management Skill to manage 200 people !!!

The Doctors are wasting such a golden oppurtunity by not working there

But there are few misconceptions regarding this also

Government DOES NOT SPEND 10 Lakhs for a doctor.... It is totally rubbish... The money spend is for giving free Treatment and not education of doctors....

If they have spend even Rs 10,000 for a medical student, would a student die in Stanley....

Even after reading the state of hostels in Stanley and Kilpauk do you STILL BELIEVE this rubbish of spending lakhs of rupees for doctors. Doctors have died of Dengue even in AIIMS ?????

It because government spends the least amount of money for a medical student, than for an engineerings student or an arts college student

said...

At the time of admission, the students have given a bond that they are willing to serve in rural areas....

They have NO RIGHT to question that now...

If they were not willing to work in rural areas, they should have got admission into private college.

(This does not mean that I endorse the rubbish 10 lakh per doctor argument).

http://bruno.penandscale.com/2007/01/my-two-seconds-of-fame.html

But why reduce the pay to 1/3rd

Why can't they give the full pay.

This is the question

said...

By the way, many of Anbumani's wonderful scheme (anti smoking, rural service) are being misunderstood by the public

http://bruno.penandscale.com/2006/05/doctor-as-health-minister.html

said...

I am a strong Pro-Rural Service person, but for a different reason..

This scheme (of 4 months in villages and 8 months in cities )is to fill vacancies (cheap labour !!!)

I want rural service for the benefit of the doctors :) :) :)

அது சரி.. நாம சொல்ரதெல்லாம் யாரு கேட்பா ??

said...

Why can't regular doctors be appointed.... There are thousands of guys who are willing to work if they are given appointment orders.... By the way, Please read my post... I have given very clearly that why this "contract" scheme will be totally useless for eradicating quacks...... http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html

When a doctor is appointed on a regular basis, he will develop a rapport with the community at least after 6 months... Now when the CRRIs are shunted to PHCs every 3 months, this is going to decrease the confidence of people in the system....

What I am asking (in Tamil Nadu) is posting these doctors in Villages "in addition to a regular in service doctor"

and not IN PLACE of an in service doctor...

Tamil Nadu DO NOT FACE SHORTAGE OF DOCTORS...

So your argument does not hold merit

What I can see is that you have totally wrong concepts about the reality (brain washed by media)

said...

Right now this House surgeoncy is for 12 months, out of which 3 months are for Rural Posting...

What we were in fact asking is to increase the House Surgeoncy to 24 months and have hospital postings for 12 months and rural posting for 12 months (entire period under supervision)

As per the compulsary rural service, the second 12 months is "not under supervision"

This is a difference..

The scheme is meaningful only if the CRRIs are posted under a doctor and not IN PLACE of a doctor

said...

//Whatever might be the reason, people get some relief with these doctors, instead of screwed up by fraud doctors at the village level.//

This can be true as far as Jharkand is concerned, but the scenario in tamil nadu is different...

Because of the (currently proposed) compulsary rural service, the more experienced doctor (appointed through regular service) is going to be replace by an inexperienced house surgeon (appointed on contract for 3 months)

Do you think that this is good or bad.. Can you see the difference.. Can you see why there is opposition from all quarters..

A beautiful scheme (12 months of rural internship) has been torn to pieces and is being misunderstood.

My worry is
1. that medical students are not understanding the benefits of working in rural setup
2. Administration is not treating them as students, but as cheap labour.

The same scheme would have been well received if presented in a proper way (without idiotic arguments like "10 lakh per student").. It is only such rubbish arguments that has angered the medical field and made them blind to other benefits of this scheme and (without any justification) oppose this totally.

A little PR Approach would have resulted in implementation of a beautiful scheme without all these controversy ...

said...

//அதுப்படி இன்னும் டாக்டராவே ஆவாத நீங்க ,எங்களுக்கு நிரந்தர அரசு வேளை தந்தாத்தேன் என்னோட படிப்பை முடிப்பேன்னு சொல்லறது எப்பிடி நியாயம்?..//

Here you are mistaken

Not every one is asking for permanent jobs...

There are two categories of Doctors

Category I

1. Sons / Son-in-laws !!! / Daughters / daughter-in-laws !!! of Doctors with nursing homes. They want to start their practise in their dad / father-in-law's nursing home immediately...
2. Sons / daughters of IAS Officers / Judges / politicians... They want to go abroad or marry sum one from the above list :) :) :)

They are opposing this scheme, because it spoils their dream of "immediate money"

Category II

1. Sons of teachers, clerks, shop keepers, farmers

They already are studying the course with educational loan

Their parents are at the verge of retirement / already retired

They need a government job to settle in life

They are opposing this scheme because this scheme spoils their chance of getting a permanent job
------
your problem is that you treat every one as Category I

You forget a simple fact that 80% of medicos today (in tamil Nadu) are from Category II
------

said...

சில மாற்றங்கள் அரசாங்கம் கொண்டு வரும்போது..ஏற்றுக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் இருக்கிறது..

இப்போ திடீர்னு நுழைவுத் தேர்வு வேணான்னாங்க..என்ன பண்ணோம்...

அடுத்த வருஷம் வேணுன்னுவாங்க..

ஒருவேளை உனக்கும் வேணாம் எனக்கும் வேணான்ன்னு 6 மாசம் குறைத்து விடுவார்களோ?

said...

//சில மாற்றங்கள் அரசாங்கம் கொண்டு வரும்போது..ஏற்றுக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் இருக்கிறது..//

Will you accept if someone says that your pay will be suddenly reduced to 1/3rd

//இப்போ திடீர்னு நுழைவுத் தேர்வு வேணான்னாங்க..என்ன பண்ணோம்.. அடுத்த வருஷம் வேணுன்னுவாங்க..
//
In any issue, If any one want something or does not want something, he/she should fight for his rights.

Other than that both issues are wide apart....

//ஒருவேளை உனக்கும் வேணாம் எனக்கும் வேணான்ன்னு 6 மாசம் குறைத்து விடுவார்களோ?//

The issue is not duration. It is the regular posting vs contract posting and Rs 8000 vs Rs 20000

said...

புருனோ அவர்கள் சொல்கிற கருத்தும் சரின்னு படுகிறது..

தலைவலியும் காய்ச்சலும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்...பார்ப்பவர்கள் நாம் என்ன வேண்டுமனாலும் பேசிப் போகிறோம்..

என் சித்தி பெண்..மருத்துவக் கல்லூரி மாணவி..இதை பற்றிப் புலம்பி ஒரு கடிதம் எழுதியிருந்தாள்..

சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாச் சரி..

said...

//சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாச் சரி..//

உங்கள் வாயில் சீனி போட வேண்டும்.... இன்றுடன் முடிவு

said...

//ஆனாக்கா நான் புதுவை மருத்துவமனையில பக்கத்துவீட்டு பாப்பாவுக்கு ஜிரத்துக்கு கொண்டுபோனப்போ.. அந்த டாக்டர்
ரொம்ப அன்பா குழந்தைகிட்ட படிப்ப பத்தியெல்லாம் விசாரிச்சு, பிரச்சனைகளை சொன்ன போது ,பொறுமையா கேட்டு அவருக்கு தேவையான விபரங்களையும் கேட்டுக்கிட்டு,//

நீங்கள் சொல்வது சரி. சேலத்துல ஒரு மருத்துவர் இருக்கார். பெயர் ஏ.கே.கண்ணன். அவரும் இப்படி தான். போனால் ஒருவருக்கு 20 நிமிடங்கள் எடுத்துப்பார். ஊர் கதை எல்லாம் பேசுவார். ஃபீஸும் நாமினல் தான். அப்புறம் ரொம்ப நம்பிக்கையா பேசுவார். ஆனால், சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவரிடம் என் அம்மாவை அழைத்து சென்றிருந்தேன். காலில் knee replacement அறுவை சிகிச்சைக்கு பிறகு, ஏ.கே.கண்ணன்னிடம் இருந்து இவரிடம் காண்பித்தோம். ஒரு முறை சிறுநீர் பரிசோதனை செய்து அவரை ஊருக்கு அனுப்பிவிட்டு, மறுநாள் நான் மட்டும் சென்றேன், பரிசோதனை முடிவை காண்பிக்க. அவர் செய்த செய்கை என்னை மிகுந்த அதிர்ச்சியாக்கியது. என் அம்மாவுக்கு ஏற்கனவே ஒரு சிறுநீரகம் இல்லை. இவரிடம் பரிசோதனை முடிவை காண்பித்ததும், அந்த ரிசல்ட் ஷீட்டை டேபிளின் மீது just like that எறிந்து "கிட்னி வேலை செய்யவில்லை. உடனடியாக அட்மிட் செய்ய சொல்லுங்கள். All the best. Let GOD be with you." என்று கூறிவிட்டார். என் அம்மாவிடம் இதை சொல்லாமல், அப்புறம் அந்த ரிசல்டை கண்ணனிடம் சொல்ல அவர் நார்மல் தான், பிரச்சினை எதுவும் இல்லை என்றால். பின் என் அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்து Nephrologist-இடம் சென்று அவர் நார்மல் என்று சொன்னதும் தான் நிம்மதி வந்தது. இத்தனைக்கும் அவர் மிகுந்த அனுபவம் உள்ளவர். உண்மையிலேயே அந்த 2 நாட்கள் நரக வேதனை தான்.

said...

Absolutely agree with u.
actualla indha idea enakku niraiya naal thoni irukka.. lol i think from some movie..

said...

@bruno
nice analysis. but unfortunaltely i amnot much aware of the internal happenings.. I guess as in every thin, this has its own cons.

said...

@ Dreamzz : thanks for the compliments

said...

News
1. Strike Withdrawn
2. Tamil Nadu Government is going to appoint doctors from Employment Exchange in place of vacancies. This is a very good move

said...

// rk said...

meaningfull questions.
excellent post.//

வருகைக்கு நன்றிகள் ஆர்.கே..

said...

நல்வருக்கைகள் டாக்டர் புருனோ சார்..

உங்கள் விரிவான கருத்துக்களுக்கும் ,தெளிவுபடுத்திய புதிய செய்திகளுக்கும் மிக்க நன்றிகள்..

said...

// வேதா said...

உங்க பதிவை முழுசா படிச்சு முடிச்சா அதுக்கு வந்துருக்கற பின்னூட்டம் அதை விட பெரிசா இருக்கு, எனக்கு இந்த ப்ரச்னைய பத்தி அந்தளவுக்கு தெரியாது என்றாலும் பின்னூட்டத்துல வந்துருக்கற கருத்தை நான் ஒத்துக்கறேன்.//

வாங்க வேதா.. நாம கொஞ்சமாவது தெரிஞ்சிக்க வேண்டிய விசயங்களுல இதுவும் ஒன்னு. அதுக்காகதானே விவாததுக்கு பதிவு போட்டிருக்கேன்.. நம்ம டெல்ஃபின் அக்காவும்,டாக்டர் புருனோவும் இதுல ஆழமான அனுபவ அறிவு உள்ளவிங்கங்கரதுனால அவிங்க கருத்தை நம்மக் கூட பகிர்ந்துக்கிறாய்ங்க...

இப்ப இந்த மேட்டரைப் பத்தி கொஞ்சம் ஜடியா கெடைச்சியிருக்குமுன்னு நம்பறேனுங்க...உங்க வருகைக்கும், கருத்துக்கும் (பதிவையும், பின்னூட்டத்தையும் முழுசா படிச்சதுக்காகவும் ஹிஹி...)ரொம்ப நன்றிகள் வேதா..

said...

]
//சில மாற்றங்கள் அரசாங்கம் கொண்டு வரும்போது..ஏற்றுக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் இருக்கிறது..
இப்போ திடீர்னு நுழைவுத் தேர்வு வேணான்னாங்க..என்ன பண்ணோம்...
அடுத்த வருஷம் வேணுன்னுவாங்க..
ஒருவேளை உனக்கும் வேணாம் எனக்கும் வேணான்ன்னு 6 மாசம் குறைத்து விடுவார்களோ?//

// தலைவலியும் காய்ச்சலும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்...பார்ப்பவர்கள் நாம் என்ன வேண்டுமனாலும் பேசிப் போகிறோம்..//

வாங்க பாசமலர் .. அவ்வ்வ்வ்வ்வ்......
சடனா அந்தர் பல்டி அடிச்சிட்டிங்களே..
இருந்தாலும் உங்கள நா பாராட்டறேன்.நாம சொன்னதுல ஏதாவது தப்புன்னு தோனினாக்கா
பிடிவாதமா நிக்காம நம்பரத்த ஒத்துக்கிற நல்ல குணம் உங்ககிட்ட இருக்கு..சபாஷ்..
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

said...

சீனு said...

// அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்து Nephrologist-இடம் சென்று அவர் நார்மல் என்று சொன்னதும் தான் நிம்மதி வந்தது. இத்தனைக்கும் அவர் மிகுந்த அனுபவம் உள்ளவர். உண்மையிலேயே அந்த 2 நாட்கள் நரக வேதனை தான்.//

உண்மைதானுங்க சீனு..

சில சம்பவங்களில் எயிட்ஸ் இருக்கறதா தப்பா ரிப்போர்ட் கொடுத்து ,சாதாரண நோயாளிய மன நோயாளியா மாத்துன கொடுமையும் உண்டு.. அலச்சியப்போக்கு,தகுதியில்லாதவர்களை வைத்து டெஸ்ட்கள் எடுப்பது போன்றவற்றால் எல்லாருக்குமே சிரமம்தானுங்க..

தங்கள் அனுபவத்தை எங்களோட பகிர்ந்துக் கொண்டு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியதற்க்கு நன்றிகள்..சீனு..

said...

// Dreamzz said...

Absolutely agree with u.
actualla indha idea enakku niraiya naal thoni irukka.. lol i think from some movie..//

வருகைக்கு நன்றிகள் மாம்ஸ்.. கருத்துக்களுக்கும்..

Dreamzz said...

// guess as in every thin, this has its own cons.//

அடாடா தத்துவம்..ரொம்ப சரியா சொன்னிங்க.. நன்றிகள்..

said...

//இருந்தாலும் உங்கள நா பாராட்டறேன்.நாம சொன்னதுல ஏதாவது தப்புன்னு தோனினாக்கா
பிடிவாதமா நிக்காம நம்பரத்த ஒத்துக்கிற நல்ல குணம் உங்ககிட்ட இருக்கு..சபாஷ்..//
ரீப்பீட் !!!!