Friday, November 30, 2007

என் மொபைல் நம்பரை மறந்த மஞ்சக்காட்டு மைனா..

நேத்து எல்லா workersக்கும் கொடுக்க வேண்டிய சம்பளப் பணம் துபாயிலிருந்து வந்து சேந்துச்சு...
வீட்டுக்கு வந்து ,அத எத்தனதடவ கணக்குப்பாத்தாலும் ஏதோ இடிக்கிற மாதிரியே இருந்துச்சி..கால்குளேட்டர தேடினாக்கா..எங்க வைச்சேன்னு தெரியலை.. கணிப்பொறிய வேற ஒரு புரோகிராம் லோடு செய்ய குடுத்துருந்தேன்..

சின்ன வயசுல நா நல்லா மனக்கணக்கு(?) போடுவேன்.. ஆனாக்கா காலேஜ் சேந்ததுலயிருந்து சின்ன ,சின்ன கணக்குக்கு கூடகால்குலேட்டர் யூஸ் பண்ண ஆரம்பிச்சி அதுவே தவிர்க்க முடியாதாயிடுச்சு...

நாம உபயோகப்படுத்தாத திறமை நம்ம கிட்டேருந்து படிப்படியா மறைஞ்சி போயிடும்பாங்களே.. அது நெசந்தேன் போலயிருக்கு..

அதே போலத்தேன் மொபைலும்.. முன்னாடி ஊர்ல போன் மாத்தரம் இருந்த போது நெறய நம்பர்கள நெனவில வைச்சிருப்பேன்..ஒரு தடவை கூட பேசியே இல்லாத கயல்விழி வீட்டு நம்பரகூட...
[ எங்க ஸ்கூல் பசங்க என்னியவிட சூப்பர் மெம்மரி,ஊர்ல இருக்குர எல்லா வயசுபொண்ணுங்க வீட்டு போன் நம்பரையும் வாய்ப்பாடு கணக்கா மனப்பாடமா சொல்லுவாய்ங்க.. ஆனாக்கா ஆறாம் நம்பர் வாய்ப்பாடு கேட்டாக்கா.. பெரும்பாடுத்தேன்..]

ஆனாக்கா.. மொபல் வந்ததுக்கப்பறம் அதுக்கான அவசியம் இல்லாம போச்சா?.. காலப்போக்குல.. மொபைல் இல்லேன்னாக்கா.. முக்கியமான நாளு நம்பரை தவிர அவசரத்துக்கு மத்த நம்பர்கள் நினைவில் நிக்கறதில்லை..

கால்குலேட்டர மேஜை டிராயர்ல தேடிக்கினிருந்த போது என்னோட கண்ணுல பட்டது.ஏர்டெல் சிம்கார்டோட கூடிய கவர்..

சில சமயங்களுல.. சில பொருள்களை பாக்கும்போது அவை டைம் மிஷின் மாதிரி வேலை செஞ்சி நம்மோட மலரும் நினைவுகள தூண்டி விட்டுடும்.அந்த நினைவுக்கே உரித்தான மனநிலைய இப்ப நியாபகப்படுத்தும்..

அந்த சிம்காட்டுக்குள்ள என்னா மலரும் நினைவு இருக்குங்கறிங்களா?..நீங்களும் வாங்க டைம் மிஷுனுல என்னோட.(டிக்கெட்டுக்கு காசுலாம் இல்ல.. சொம்மா ஃபிரிதான்..ஹிஹி..).
சொய்ய்ய்ய்ய்ய்ன்ன்ன்ன்ன்ங்க்க்க்க்க்க்க்

அது நான் துபாயிலருந்து , தோஹாவுக்கு மாற்றலானதுக்கு இடைப்பட்ட ரெண்டு மாசம் லீவுக்கு ஊருக்கு போன காலம்.

படிக்கிற வயசுலருந்தே எனக்கு ஒரு ஆசை.. என்னான்னாக்கா.. வேலை செய்யும் போது ஏதாவது கோர்ஸுல சேந்து படிக்கனுமுன்னு..
ஏற்க்கனவே வேலையில இருக்கறதால ஒரு தன்னம்பிக்கை, பாடம் நடத்துறவருங்க்கூட நம்ம மேல ஒரு மரியாதையா இருக்கிறது,மெச்சுரிட்டியான மனநிலை,
படிக்கிறது நாம சம்பாதிச்ச பணத்துலங்கரதுனால ஒரு திருப்தி,விடுபட்ட கல்லூரி நினைவுகளை நினைவு படுத்துவது.
அனுபவ அறிவோட கூடிய நண்பர்கள்ன்னு பல காரணங்கள்.

சரி ரெண்டு மாசம் லீவ கலாட்டாவா எஞ்சாய் பண்ணிட்டு ,கடைசி பதினைஞ்சி நாள் சென்னைக்கு போயி டி நகர் பக்கத்துல ஒரு ஓட்டலில் தனியா தங்கிட்டேன்..பதினைஞ்சி நாள்ங்கரதால டிஸ்கவுன்டெல்லாம் குடுத்தாய்ங்க..(அதுக்கு முன்னாடியே.. நார்மல் ரேட்ட ஏத்திபுட்டாய்ங்கன்னு பின்னாடிதேன் தெரிஞ்சிது.).
பக்கத்துலருக்குர ஒரு PLC டிரெனிங் சென்டருல சேந்துப்புட்டேன்..


கிளாஸ் அன்னிக்கு போய் பாத்தாதேன் புரியுது.என்னோட பேட்ஜில கூட படிக்கிறவிங்க கேரளாவை சேர்ந்த பசங்க.. இங்கவே தங்கி ரெண்டு வருஷ கோர்ஸ் படிக்கிறாய்ங்களாம்.எனக்கும் கொஞ்சம் மலையாளம் தெரியுங்கரதுனால,சரின்னுட்டு அவிங்ககூட நல்லா பிளேடு போட ஆரம்பிச்சேன். மூனே நாளுல எங்க்கூட ஒட்டிக்கிட்டாய்ங்க.. மாமா.. மச்சான் ரேஞ்சிக்கி..

காலையில கிளாஸு.. "எல்லாரும் படிக்கவரும்போது.,. நீ மட்டும், நான் படிச்சிருக்கேன்னான்னு செக் பண்ண வர்ர"ன்னு சாரு சிரிச்சிக்கிட்டே சொல்லுவாரு..
மதியானத்துக்கு மேல ஒவ்வொரு நாளும் ,ஒரு ஏரியாவை எங்க டீம் ஊர் சுத்த கெளம்பிடும். எந்த ஏரியாவுக்கும் ஓரவஞ்சனை செய்யப்டாதுன்னு ஒரு கொள்கை..
நகர்வலத்தை மொதல்ல.. பக்கத்திலருக்குற கம்புட்டர் சென்டருலயிருந்து ஆரம்பிப்பாங்க..
மொத மொத என்னிய கூட்டிக்கிட்டு போவும்போது..நாங்க்கூட பசங்களுக்கு படிக்கரது எம்புட்டு ஆர்வமுன்னு தப்பு தப்பா நெனச்சிப்புட்டேன்..
அங்க போயி பாத்தா.. ரிசப்ஸனுல கலக்கலா ஒரு பொண்ணு.. பேரு வித்யாவாம்.கொஞ்சம் கருப்பாயிருந்தாலும் களையான முகம்,புன்னகையை பசைபோட்டு முகத்துல ஒட்டி வைச்சுக்கிட்டாய்ங்களோ,கடைசி வரை ஒரு இஞ்ச் கூட கொறையல,சூப்பரு... நா சுய நெனைவுக்கு வந்து தொறந்த வாயை மூடறதுக்குள்ள "வாங்க..என்ன இன்னிக்கி லேட்டு?. இவிரு உங்க டீமுல புதுசான்ன்னு என்னிய பாத்துகிட்டே கேட்டாய்ங்க...".
என்னவோ சொந்தக்காரங்கள கூப்புடுர மாதிரி கூப்புடராய்ங்களேன்னு அதிசயமா பாத்தாக்கா,பின்னாடிதேன் தெரியது.. படுபாவிங்க..
ஆறு மாசமா.. வாரத்துக்கு வாரத்துக்கு ஆறு நாள் (ஞாயிற்றுக்கிழமை லீவாமில்ல..)வது தவறாம வந்து ஏதாவது கம்புட்டர கோர்ஸ் பத்தி விசாரிக்கர கணக்கா.. ஜொள்ளிக்கிட்டிருக்காய்ங்கன்னு..(கிளாஸு வேற எடத்துலயாம். அதனால சேரவே இல்லியாம்).
இதுல வேற "எங்க டீமுக்கு தலிவரே இவிருதேன்"ன்னு ஆப்பு வைச்சுட்டானுங்க...
என்னியயும் "இப்பிடி எத்தனை பேரு கெளம்பியிருக்கீங்க?ன்ற ரீதில ' சேத்துப்புட்டாய்ங்களே..மக்கா..

அடுத்து பீச்..பார்க்ன்னு.. எங்கயும் ஃபிரியா நடக்க முடியலை.. அங்கங்க .. காதலர்கள்(அப்பிடின்னு சொல்லலாமா?).. வெளியிடத்துல கூச்சமேயில்லாம மடிலெல்லாம் படுத்துக்கிட்டு.. நாமதேன் வெக்கப் பட்டுக்கிட்டு ,அவிங்களை டிஸ்டட்ப் பண்ணவேண்டாமுன்னு ஒதுங்கி நடக்க வேண்டியிருக்கு.. நா நாட்டுல இல்லாத காலத்துல என்னென்னவோ மாற்றங்கள் நடந்திருக்குல்ல...பசங்கதேன் ரொம்ப கமெண்டிக்குன்னு வந்தானுங்க..நாம தூரத்துலேருந்து சைட் அடிக்கறதோட சரி.., நமக்கு அம்புட்டு தைரியமில்லிங்க்கோ...

மாலையில மனம்போன கணக்கா.. சுறுசுறுப்பா இருக்குற சென்னை தெருக்களில் நடப்பது புடிச்சிருந்துது. எம்புட்டு வேகம்?.வேலைவிட்டு வீட்டுக்கு ஸ்கூட்டில போகும் அக்கா, கல்லூரி முடிஞ்சு பஸ் நெறய வழியும் ஃபிகர்ஸ், இப்பவே புத்தக மூட்டையை வைச்சு ,வெயிட் லிஃப்ட்ங் பிராக்டீஸ் செய்யும். சின்னஞ்சிறு பிஞ்சுகள்ன்னு நேரம் போவரதே தெரியாம பராக்கு பாத்துக்கின்னு நடப்பேன்.
எல்லாரும் ஒன்னா "லண்டன்" படம் பாத்துட்டு அன்னிக்கி முழுக்க நெனச்சி,நெனச்சி சிரிச்சோம்.
மொதல்ல இது எங்க ஊரு கதைன்னு ஆரம்பிச்சாங்க..(சேட்டாக்களின் பிறவி சுபாவம் அங்கன..) ,நம்ம கிட்ட நடக்குமா?.ஏலே..உங்க ஊரு கதை லோக்கலு.. எங்க ஊரு கதை லண்டனு..எங்க ரேஞ்சே வேறன்னு கலாய்ச்சிப்புட்டேனுல்ல..(மலையாளப்படங்கள் பெரும்பாளும் லோ பட்ஜெட்டுல நாடகம் மாதிரிதேன் இருக்கும்.).
அப்புறம் அவிங்ககிட்டருந்து புதுசா ஒரு ஜடியா தெரிஞ்சிக்கிட்டேன்.அதாவது.. யாரவது சூப்பர் ஆள பாத்துட்டாக்கா.. மொதல்ல பாத்தவன் அந்த பொண்ணு காதுக்கு கேக்குற மாதிரி "மாமு என்னோட போன் நம்பர் சொல்லு"ன்னு கேப்பான். நாங்க அவனோட நம்பரை சத்தமா சொல்லனும்.
நாங்க ஸ்பென்சர் பிளாஸா போன போது நெறய மொற கேட்டு,சொல்லிக்கிட்டானுங்க.. நா அதுல கலந்துக்காம சைலண்டா சைட் ஸியிங்குல கவனம் செலுத்தினேன். பின்ன?.. மெயினா வந்ததே அதுக்குதான..ஹிஹி..

திரும்பி வரும்போது பஸ்ல ஒரு காலேஜ் மைனாக்களின் டீம் எங்கள மாதிரியே.. அவிங்களுக்குள்ளாரயே சொம்மா கலாட்டா செஞ்சிக்கின்னு வந்தாங்க.. அதுல ஒரு மஞ்சக்காட்டு மைனா.. என்னாமா சிரிச்சிக்குது.. மனசே எங்கிட்ட இல்ல,கொஞ்சம் குண்டாயிருந்தாலும்,நல்ல டிரஸிங் சென்ஸ்..,நடு நடுவுல காத்துல பறக்கும் கேசத்தை, வீணை தந்தி மீட்டற மாதிரி விரல்களால நளினமா காதுக்கு பின்னாடி நகர்த்தரதும், கேசத்து நுனியை விரல்ல சுத்தி சுத்தி வெளையாடரதும்,டிஸன்டா அடிக்கடி துப்பட்டாவை சரி செஞ்சிக்கிட்டதும்,தோழிகளோட ஜோக்குகளுக்கு வெக்கம் கலந்த சிரிப்பும் .கண்களில் தெரிஞ்ச குறும்புத்தனமும்.எதிர் பார்க்காத நேரத்துல என்மீது மின்சாரம் வீசிட்டு போன அவசர பார்வைகளும்..

என்னை மறந்து,பேக்ரவுண்டுல ஏ.ஆர். ரகுமான் மியுஸிகெல்லாம் ஒலிக்க.. மெதுவா திரும்பிப்பாத்தாக்கா.. நம்ம பசங்களும் , வாயப் பொளந்துக்கிட்டு ,ஜொள்ளிக்கிட்டிருக்காய்ங்க..

அடப்பாவிங்களா?.இன்னிக்காவது நாம தனியா வந்திருக்கக் கூடாதா?.ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டேங்கராய்ங்களேன்னு உஷாராவரதுக்குள்ள..

ஒருத்தன் முந்திக்கிட்டு கேட்டேபுட்டான்.."மச்சி என்னோட மொபைல் நம்பர குடு"ன்னு.."சே.. எனக்கு ஒரு சான்ஸ் குடுக்க மாட்டேங்கராய்ங்களேன்"னு மனசுல சபிச்சிக்கிட்டே நம்பரை சொன்னேன். சொல்லி முடிச்சிட்டு பாத்தாக்கா.. எல்லா பயலுவளும் என்னிய அதிர்ச்சியா பாக்கரானுங்க.. என்னாச்சுங்கரமாதிரி பாத்தாக்கா.. "அது உன்னோட நம்பரு "ந்னு அழுவரமாதிரி சொன்னான். அப்பத்தேன் எனக்கு புரிஞ்சிது.. அட...என்னையும் அறியாம நா சொன்னது என்னோட நம்பரத்தேன்.
ஹிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேய்ய்ய்ய்ய்.....
ஜ லவ் மை மனசு.. என்னோட கஷ்ட்டத்த புரிஞ்சிக்கிட்டு எம்புட்டு புத்திசாலிதனமா செஞ்சியிருக்கு?.,,ஹிஹி..
அந்த பொண்ணு வேற, நம்பரை சொல்லி பாத்துகர கணக்கா என்னிய பாத்து சிரிச்சிக்கிட்டே எதையோ கையில எழுத.. பசங்க பஞ்சராயிட்டானுங்க..
அடப்பாவி.. சைக்கிள் கேப்புல,எல்லாரும் ஆட்டோ ஓட்டரவிங்கள பத்தி கேள்விப்பட்டிருக்கேன்,நீ என்னடான்னா லாரியே ஓட்டிப்புட்டியேன்னு பொருமிட்டாய்ங்கல்ல.ஹிஹி....

ஊருக்கு வந்தப்புறம் ,எனக்கு ஒரு சந்தேகம்.. ஒரு வேளை நெசமாவே அந்த பொண்ணு போன் செஞ்சா?.. அதனால தம்பிக்கிட்ட வாங்குன சிம்கார்ட, அவங்கிட்ட குடுக்காம வேற புதுசா வாங்கி குடுத்துட்டேன்.. ரெண்டு நாளா கனவு கூட செல்போன் அழைப்பு வர்ர மாதிரி வந்துச்சு,எழுந்து பாத்தாக்கா.கல்லூரி நண்பர்கள் கிட்டயிருந்து அழைப்புகள் .பின்னாடி ஏர்போர்ட் வந்தப்பறம் கூட, போன் வராதா? ,பிளைட்ட கேன்ஸல் பண்ணிப்புடலாமின்னு காத்துருந்தேன் . ஃபிளைட்டுல ஏர் ஹோஸ்டல்.."சார் ஃபிளிஸ் மைபைல ஆஃப் செஞ்சிடுங்களேன்"னு கொஞ்சலா சொல்லறவரை மொபைலையே பாத்துக்கிட்டிருந்தேன். கடைசி வரை போன் வரவேயில்லை..ஹிம்.. எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேனுமில்ல.. என்ன நாசொல்லறது..ஹிஹி..

Friday, November 23, 2007

தமிழ் படங்களுல மெசேஜ் இல்லைன்னு யாருங்க சொன்னது?..(குறிப்பு: நீங்களூம் உங்க திறமைய காட்டலாம்)

தமிழ் படங்களுல மட்டுமே காண கிடைக்கும் அற்புதங்கள்.(தமிழ் படங்களுலிருந்து நா கத்துக்கிட்ட "லா ஆஃப்(பு) டமில் சினிமா")



1) வில்லன் கிட்ட ஒல்லிப்பிச்சான் ஹீரோ மொத மூணு அடிகளை வாங்கிக்கிட்டு பறந்து,பறந்து விழுந்து ,எழுந்து வாய தொடச்சிக்கிட்டு புன் சிரிச்சாக்கா..
முப்பது அடியாள்களையும் மொத்தமா துவசம் செய்யப்போறாருன்னு அர்த்தம்.
[நீங்க.. கதாநாயகன் மொதல்ல எத்துனி அடி வாங்கனாருன்னு எண்ணி பாக்கறதுக்கு வசதியா வில்லன் ஒவ்வொரு அடியா டைமிங் விட்டுத்தான் அடிப்பார்.]

2) ஹீரோவ அடிக்க வர்ர குருப்பு ..அடியாள்கள் எல்லாரும் கும்மி அடிக்கற கணக்கா ரவுண்டு கட்டி மூணு தடவ அவர சுத்தி சுத்தி வரனும். இதுல
நாயகன் சூப்பர் ஸ்டாரா இருந்துட்டா.. கதாநாயகன் வட்டத்து நடுவிலேயே அவருக்கு தெரிஞ்ச ஆடுபுலி ஆட்ட ஸ்டெயிலெல்லாம் காட்டறவரை பாத்துக்கின்னே சுத்தனும்.
[ஹீரோ வுடு கட்டும் போது வட்டத்து நடுவிலேருந்து நகர்ந்துட்டாக்கா.., அவரோட புதிய சென்டர் பொசிசனுக்கு கும்மிய மாத்திப்புடனும்.].

3) ஹீரோ சண்டைக்கி முன்னாடி வசனம் பேசனுமின்னு ஆசைப்பட்டுட்டாக்கா.. அது முடியற வரை ரொம்ப பொறுமையா காத்துக்கிட்டிருக்கனும்.


4) ஹீரோ ஒரு வில்லன அடிக்கும்போது மத்த அடியாள்கள் பொறுமையா வெயிட் பண்ணி அவர சுத்தி பயமுறுத்தற(பயப்படற)பாணில (மாடிமேல மாடி வைச்சி) வுடு கட்டிக்கிட்டே ஒவ்வொருத்தரா அவிங்க மொற வரும்மோது வந்து அடி வாங்கனும்.
[அதுவும் ஒரே அடிதான் உங்க மூவ்.அத தடுத்து கதாநாயகன் திருப்பி அடிக்கும் போது முந்திரிக்கொட்ட தனமா தடுக்கல்லாம் கூடாது..]

5) ஹீரோ வயத்துல குத்தினாக்கா.. வலியில வயத்த முன்னாடி வளைக்கனும்.
[நெஜத்துல முன்னாடி மடங்கி , அடுத்த குத்துக்கு மூஞ்சியல்ல காட்டுவாய்ங்கல்ல..].



6) ஹீரோகிட்ட ஒரே சமயத்துல காலால ஒதை வாங்க வசதியா ரெண்டு பேரு ..சரியா ரெண்டு சைடுல அவரு கைய பிடிச்சி தூக்கி விடுவாய்ங்க..
சில பேரு வேற ரெண்டு சகாக்களை ஹீரோ அடிக்க தூக்கி விடுவாய்ங்க..




7) அடியாளுங்க அடி வாங்கி விழும்போது அட்லீஸ்ட் ஒரு டைவாவது அடிச்சிட்டு விழந்தாத்தேன் ஒரு மதிப்பு.அதிலும் கதாநாயகன் எப்பவும் காய்கறி வண்டி,கவுத்து வைச்ச பானைகள், பிளாஸ்டிக் குடம் ,பூத் கண்ணாடி,வீட்டு கூரைன்னு பாத்துத்தேன் தூக்கிப்போடுவார்.அதை யெல்லாம் ஒடைச்சிட்டு விழுர அளவு அடியாள் குண்டாயிருக்கனும்.
குறிப்பு: டைவ் அடிக்க கதாநாயகன் கையோ காலோ உங்க மேல படனுங்கர அவசியமில்ல...

8) பனி பிரதேசத்துல பாட்டு பாடும்போது குளிருல கதாநாயகன் உடம்பு முழுக்க டிரஸ் போட்டுருக்கும் போது கதாநாயகிகளுக்கு ரொம்ப புழுக்கமா இருக்கும் போல ,அதனால அவிங்க சின்ன புள்ளையா இருந்த போது போட்ட டிரஸை போட்டிருப்பாய்ங்க..

9) நம்ம ஹீரோ ரெண்டு கையையும் தட்டிட்டு ஒரு தாவு தாவிட்டாருன்னாக்கா... புவியீர்ப்பு விசையெல்லாம் ஆஃப் ஆயிடும்..அவரு சாவகாசமா பத்து பதினைஞ்சி தடவ ஒதச்சிட்டு தானா கீழ வந்துருவாரு.


10) சண்டை முடிஞ்சிருச்சின்னு நியுஸ் வந்துமே..போலிஸ் ஜீப் வரும்.தப்பி ஓடும் கடைசி அடியாள் ஜீப் மேலயே போய் விழுவார்.
(சில அவசர குடுக்கை இன்ஸ்பெக்டர்கள் துப்பாக்கியால வானத்துல மூனுமொறை சுட்டுக்கினே வருவாய்ங்க.. பத்துரூபாய்க்கு ஒரு டஜன்னு பர்மா பஜாருல வாங்கன தோட்டாவாயிருக்குமோ?)

11) வில்லனை பயம்புறுத்த கதாநாயகன் வீசும் கத்தி பூமாராங் விதிப்படிலாம் இருக்கனுமின்னு அவசியமில்லை..எந்த வடிவத்துல இருந்தாலும் அது வில்லன் முகத்துக்கு நேரா சொம்மா சங்கு, சக்கரம் மாதிரி நாளு சுத்து சுத்திட்டு சீக்கிறமா கதாநாயகன் கையில/காலுல வந்து விழுந்துடும் (ஏன்னாக்கா கத்திய எப்பிடி வீசனுமின்னு வில்லனுக்கு வசனம் மூலம் விளக்கி சொல்ல ஹிரோ வெயிட் பண்ணராரில்ல?..)


12) கதாநாயகிய வில்லன் வேனுல கடத்தும்போது.. அவன தொறத்திப் பிடிக்க,ஹீரோ யாரு கிட்டயும் லிப்ட் கேக்க வேண்டாம். சிட்டியா இருந்தா கடைக்கு போவ ,மலைபிரதேசமாயிருந்த மரத்தடி தேடி போவ, புது மாடல் பைக்கோட அப்பத்தான் ஒருத்தர் வந்து சாவியோட ஹீரோ கண்ணுல படர மாதிரி விட்டுட்டு போவார்..புண்ணியவான்.

13) அப்படி தொறத்தும் போது வழில குறுக்க வர்ர கண்டெய்னர் லாரி.. ஹீரோ பைக்கோட அதை தாவியோ.,.இல்ல சக்கரத்துக்கடில ஒருக்களிச்சிக்கின்னு பைக்கோட சருக்கிக்கிட்டோ தாண்டற வரையில ஃபிரிஸ் ஆகி நிக்கும்.

14) பாட்டுல சீனுல எம்புட்டு மழை பெஞ்சாலும் ஹீரோயின் மேக்கப் கலையாது..

15) ஒரே பாட்டுல நூறு எடத்துக்கு சொம்ம மாயமா போயி,ஆயிரம் டிரஸ் போட்டு கலக்கலாம்.

16) கதாநாயகன் தவர அவரு ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஜோக்கரு.. எப்பவுமே கதாநாயகன் தான் டீம் லீடரு.. ஹீரோயினு டீமுல அவிங்கத்தேன் தலைவி.

17) மூனு படத்துக்கு முன்னாடி ஹீரோவுக்கு ஜோடியா நடிச்ச நடிகை,இப்ப ஹீரோவுக்கு அக்காவா நடிக்கலாம்..

18) காதல் கதையில ..ஹீரோவும் ஹீரோயினும் ஒருத்தர ஒருத்தர் தேடிக்கிட்டிருக்கும் போது,கிளைமாக்ஸ் வரை, அடிக்கடி அவிங்க முகத்த வேற சைடு திருப்பிக்கிட்டு [பாத்துக்காம] சகஜமா கிராஸ் பண்ணி போவாங்க.(அப்ப ஸ்லோமோசன்ல காட்டுவாய்ங்க..).

19) துப்பாக்கி தோட்டா தீந்துருச்சின்னாக்கா.. அத அப்பிடியே (ஒன்ஸ் யுஸ் மாதிரி) சைடுல தூக்கி போட்டுட்டாக்கா... தரையில வேற துப்பாக்கி கெடைக்கும்.. அத டைவ் அடிச்சி எடுத்து டைவ்லயே சுடலாம்.. (எத்தன குண்டு சுட்டாங்கன்னெல்லாம் எண்ணப்படாது...).

20) பத்து பேரு ஒரு ஆள சரமாரியா சுடறதவிட, ஹீரோ ஒத்த ஆள் அந்த பத்துப்பேர சுடும்போது தான் குண்டு சரியா குறி தவறாம தாக்கும்.


21) கதாநாயகன் சம்பந்தப்பட்டவிங்க.. ரொம்ப சென்டிமென்டா பேசி..அவிங்க மூஞ்சிய குளோசப்புல காட்டிட்டாக்கா..அடுத்த சீனுல ஆள் குளோசுன்னு அர்த்தம்.

22) ஊருல யாருக்குமே தெரியாத வில்லனோட ரகசிய இடம்,கிளைமாக்ஸ்ல கதாநாயகனுக்கு மட்டுந்தேன் தெரியும்.செல சமயம் அத ஹீரோவுக்கு பயந்து சொல்லறதுக்காகவே ஒரு ஆளை வில்லன் சம்பளம் குடுத்து அவனோட வீட்டுல ஹீரோ வந்து மெரட்டி கேக்கர வர வைச்சிருப்பாரு.

23) ஹீரோயின் மழை வருபோது ரோட்டுல எறங்கி ஆடினாக்கா.. மார்டன் டிரஸ் போட்ட எல்லாரும் குடைய தூக்கிப்போட்டுட்டு அவிங்க பின்னாடி வரிசையா நின்னு ஆடுவாய்ங்க..

24) அதிலும் அவிங்க ஆடப்போறா ஸ்டெப் என்னன்னு முழுசா புரிஞ்சிக்கிட்டு அத கோரஸா ஆடுவாய்ங்க..இதுல குத்தாட்டமாயிருந்துட்டாக்கா.. தாவணி கட்டிக்கிட்டு பேயாட்டம் ஆடர அந்த ரெண்டு பொண்ணுங்க நிச்சயம் அங்க காய்கறி வாங்க வந்திருப்பாய்ங்க...

25) எம்புட்டு ஸ்டாங்கான தேக்கு மரக்கதவாயிருந்தாலும்,வீடு எரியும் போது ஹீரோ ஒரே ஒதையில தொறந்துடுவார்.



26) ஹீரோ ஒத்த துப்பாக்கி குண்டால காரை சுட்டாருன்னாக்கா.. அந்த கார் அப்படியே வெடிச்சி ஒரு முப்பது ,நாப்பது அடி உயரத்துக்கு போயி ஸ்லோவா விழும்.


27) எல்லா டைம் பாமும் ,எப்ப வெடிக்கப் போவுதுன்னு நொடி நொடியா காட்டுற பெரிய பெரிய டிஜிட்டல் வாட்சோட இருக்கும்.அதுல டிக் டிக் இன்னு பெருசா சத்தம் வேற வரும் (டிஜிட்டல் வாட்ச்சில சப்தமான்னு கேட்டாக்கா நீங்க தமிழ் படம் பாக்க ரிஜக்டட்..)
ஹீரோ அந்த சத்தத்த நல்லா கேட்டு வெடிகுண்ட கண்டு பிடிக்கும் போது பத்து நொடித்தேன் மிதியிருக்கும்.அதுல கலர் கலரா செயலிழக்க வைக்கிற ஒயருங்க வெளியிலேயே இருக்கும்.அத ஹீரோ ரொம்ப சீரியஸ்ஸா இங்கி,பெங்கி,பாங்கி போட்டு சரியான ஒயரை கண்டுபிடிச்சி வெட்டி எல்லாரையும் காப்பாத்திட்டு ,நிம்மதியா முகத்த தொடச்சிக்குவார் ..(அசடு வழிய பாத்துக்கிட்டிருக்கிற உங்க முகத்த தொடச்சிக்க சிம்பாலிக்கா சொல்லராருங்க்கோ..)


28) ஹீரோ திடீருன்னு ரேடியோவையோ, டீவியையோ திரும்பிப்பாத்தா.. அதுல அவருக்கு தேவையான /அவிரு வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயந்தேன் அதுல வரும்.

29) வில்லன் கிட்ட சவால் விட்டுட்டாக்கா...ஹீரோ ஒத்த பாட்டுல கோடிஸ்வரராயிடலாமுங்க்கோ...

30) டமில் தெரியாத மும்பை பொண்ணுக்கு ,இடுப்பு தெரியர லெவல்ல துணிய சுத்தி "தமிழ்மணம் கமழும் பெண்" ன்னு சொல்லி தமிழர்கள் காதுல ஒரு மொழம் பூ இலவசமா சுத்தலாம்.

31) ரோட்டுல குடுப்பபாட்டு பாடனாக்கா.. பல வருஷம் முன்னாடி காணாம போனவிங்கள்லாம் ஆயிரம் கிலோ தாண்டி டெலிபதில கேட்டுட்டு ஒடனே வந்துருவாய்ங்க..(அவிங்கள கன்பார்ம் பண்ண குடும்ப செயின் ,பாதிகாசுல செஞ்ச டாலர்,மோதரம் ஏதாவது போட்டு சின்ன வயசுல தொலைக்கனும்.).

32) ரொம்ப வேண்டப்பட்டவிங்களுக்கு ஒடம்பு சரியில்லாம போனாலோ,ஆப்பரேஷன் தியேட்டல அவிங்களுக்கு ஆபிரேஷன் நடக்கும் போதோ..ஏதாவது ஒரு அம்மன் கோயிலுக்கோ..அறுவாளோட இருக்குற அய்யனாரு கோயிலுக்கோ போயி தலைய விரிச்சிப்போட்டுக்கின்னு ஒரு குத்தாட்டம் போட்டாக்கா..அப்ப காஞ்சிப்போன இலை ,தழை எல்லாம் பறக்கற மாதிரி புயல்/மழை வந்தாலோ அவிங்களுக்கு ஒடம்பு சரியாயிடும்.



33) ஹீரோ எந்த கட்டடத்துக்கு கார்ல போனாலும் அந்த கட்டடத்துக்கு வாசலிலேயே கார் பார்க்கிங் இருக்கும்.(அவிரு லைசென்ஸ் வாங்க்கிட்டாரான்னு சென்சோட கொஸ்டீன் கேட்டாக்கா,மூணு வருஷத்துக்கு தமிழ் படம் பாக்கக்கூடாதுன்னு தள்ளி வைக்கப்படுவீர்கள்.)

34) மலை உச்சியில தொங்கிட்டிருக்கிற (யாரு அங்க போயி காரை தொங்கவிட்டதுன்னெல்லாம் கேக்கப்டாது).காருலேருந்து ஹீரோயின ஹீரோ காப்பாத்துர வரை அந்த கார் அங்கயே ஒட்டிக்கிட்டிருக்கும். அதுபோலத்தேன் பத்தி எறியற வீடு கூட ஹீரோ குழந்தைய ஹீரோயினுக்காக காப்பாத்திக்கிட்டு வந்தப்பின்னாடித்தேன் கீழ விழும்.

35) நல்லா வெயில் காலத்துல பாட்டு பாடுபோது,சண்டை போடும் போது,ஹீரோ ரொமான்ஸ் செய்யும் போது தானா மழை பேயும்.

36) ஹீரோயின்கள் எல்லாம் ரொம்பவே பயந்தாங்க்கோலிகள்ன்னு தோனுது ..ஏன்னாக்கா இடி இடிச்சாக்கா பயந்துபோயி ஒடனே ஹீரோவ கட்டி பிடிச்சிக்கிறாய்ங்கல்ல....

37) காதலுக்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை.. ஹீரோயினோட ஒரு சண்டை போட்டாலோ(சொம்மா வாயாலதான்..)., ஹீரோயின் பாக்கர மாதிரி ரோட்டுல ஏமாந்த யாராவது ஒருத்தர ஒரு அறை விட்டு அரைப்பக்கத்துக்கு அறிவுரை சொன்னாலோ, (பின்னாடி இருந்து ஹீரோயின் பாக்கரத தெரியாத மாதிரி) நண்பர்கள் கிட்ட அவிங்கள பாராட்டி சொன்னாலோ..,வழுக்கி விழும் ஹீரோயின டைமிங்குல போயி தாங்கிக்கிட்டாலோ. ஆரம்பத்துல கெட்டவன் மாதிரி காட்டி பின்னாடி நல்லவன்னு புரிய வைச்சாக்கூட போதும் ஒடனே லலலவ்வு ஸ்டாட் ஆயிடும்.. ஒடனே ஊரவிட்டு போயி எங்காவது டூயட் பாடரது அவசியம்.(இதெல்லாம் படத்துல மட்டுந்தேன்.நெசத்துல டிரை செஞ்சி நண்பர்கள் மாட்டிக்கிட்டாக்கா.. நா பொருப்பில்லைங்க்கோ...)

38) ஹீரோ எதாவது ஒரு கட்சி ஆளாயிருந்துட்டாக்கா... உள்குத்து / வெளிக்குத்து பஞ்ச் டையலாக் இல்லேன்னாக்கா அது தமிழ் படத்துல சேந்தது இல்லை..

இப்ப சொல்லுங்க... தமிழ் படங்களுல எம்புட்டு மெசேஜ் இருக்குல்ல...

ஆங்கிலப் படங்களை கிண்டலடித்து ,பல நாடுகளை சுற்றி வந்த ஒரு கருத்துத்தொடர் பாத்துப்புட்டேன்.. ( கருத்துத்தொடர்- படிக்கிற யாரும் அவிங்களுக்கு தோனறத சேத்துக்கலாம்).
அதுபோல நம்ம தமிழ் படங்களுக்கு எத்த மாதிரி சொல்லியிருக்கேன்.. என்னிய விட நீங்க நெறய படம் பாத்து நொந்து போயிருப்பீங்க..
நீங்க படம் பாத்து கத்துக்கிட்ட "law of tamil cinema" மேசேஜ் ஜ சொல்லுங்க..பார்ப்போம்..ஹிஹி...

(நீங்க சொல்லற கலக்கல் மெசேஜ்கள், உங்க பேரோட பதிவுல சேக்கப்படும் ).



ஆப்டர்  பப்லீஸ்  குறிப்பு:

ஆஹா.. வெளியிட்டுட்டு காலையில வந்து பின்னூட்டத்தப்பாத்தாக்கா.. சீனா ஜயா அம்மா சென்டிமென்ட் பத்தி ஞாபகப் படுத்தியிருக்காரு.. அட..முக்கியமான , இத மறந்துட்டோமே.. நாம தமிழ் சினிமா பாக்க குவாலிபைடு இல்லையான்னு தோனுது.. அதப்பத்தி சீனா சாரே எதாவது சொல்லியிருந்தால நாமலும் ரசிக்கலாமில்ல...


அடுத்து ஒரு ஆச்சர்யம் .எனக்கு ரொம்ப மாசத்துக்கு முன்னாடியே தமிழ் படத்துக்குன்னு நண்பர் நாஞ்சில் மைந்தன் 11 பாயிண்ட் எழுதியிருக்காரு (.தலைப்பு : இது நம் தமிழ் சினிமா ).பின்னூட்டத்துல பாத்துட்டு ஆச்சர்யப்பட்டுட்டு போனேன். அதுல மூணு பாயின்ட் எனக்கு தோனனத முன்னாடியே யோசிச்சு எழுதியிருக்காரு..எல்லாருமே தமிழ் படம் பாக்கரவியிங்கதானே..ஹிஹி...
அவரு எழுதினதுல மத்த பாயிண்ட் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு..

சாம்பிள்ளுக்கு ஒன்னு பாருங்க..

3. கிளைமாக்ஸ்சில் ஹுரோ வில்லனை கொல்லபோகும் போது வில்லனின் மனைவி குழந்தையுடன் வந்து தாலியை காட்டியவுடன் ஹுரோ வில்லனை உயிருடன் விட்டுவிடுவார்.

அவரு ஏற்க்கனவே தனி பதிவா போட்டுப்புட்டதால மத்த மெசஜிகளை இங்க போடரத விட (பின்னே அவுரு கேஸ் போட்டுட மாட்டாரா?..ஹிஹி..) நாம மீதிய அங்கயே போய் படிச்சிக்கலாமே..



பின்னூட்ட கலக்கல்கள்


39) சீனா ஜயா: அம்மா சென்டிமென்ட:கடைசிக் காட்சியிலே அம்மாவைக் கட்டிப்போட்டு கதா நாயகனை வரவழைத்து வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள வில்லன் படும் பாடு - அய்யோ - தாங்காது.


(இது தமிழ் சினிமாவின் பாலபாடமாச்சே...சூப்பருங்க சார்..)

40) கவிதா : 
பொதுவா ஹீரோயினோட அப்பா தான் வில்லன்.எப்பிடி?



41)
ஆர்.கே :  
Heroin always rich and hero local poor.after love heroin will come to heros poor home and doing all works to shows heros mother.



42) விஜய் சார்: அப்படி வரும்போது ஹீரோயின் அடக்கமான பொண்ணுதான் என்று காண்பிப்பதற்காக ,புடவை கட்டிக்கொண்டு வரச் சொல்லுவார்.ஹிஹி:)

42)
பிரியமுடன் பிரித்தி:
மாறுவேடம் போட தாடி ஒட்டி,கருப்புக் கண்ணாடி அணிந்தால் போதும்.




43) துளசி அக்கா :ஆன்னா ஊன்னா ஹீரோ பெயரைச்சொல்லிப் பயமுறுத்தும் அவரோட தோழர்க்கூட்டம்.

ஒரு விளையாட்டுப்போட்டி(??)ன்னாகூட ஹீரோ வரும்வரை தோழர்கள
் தவிப்பாத் தவிக்கணும (ரசிகன்: இது ரொம்பவே சூப்பரு...)
& தாலி செண்டிமெண்ட்

44)  ஹரிஹரன சார்:

தமிழ் சினிமா தந்த இன்னொரு டெக்னாலஜி மேட்டர் பயோ ஐடண்டிபிகேஷன் எக்ஸ்பர்ட்டீஸ.
ஒரு பிரதரை சாட்டையால் அடித்தால் எங்கோ இருக்கும் இன்னொரு இரட்டை சகோதரன் முதுகில் வரி வரியா தடம்னு அறிவியலை தடம் புரட்டின டெக்னாலஜி ஜித்தன்ஸ் தமிழ்சினிமாவில் மட்டுமே உண்டு..

ஹீரோவுக்கு செக் வைக்கும் படு விவரமான வில்லன்கள் ரயில்வே டிராக் க்ளைமாக்ஸ் சேஸிங்கில் டிராக்கில் கால் மாட்டிக்கொண்டு ஙேன்னு பல்பு பார்ட்டி ஆகிவிடுவார்கள்... மாட்டிக்கொண்ட ஷூவை கழட்டி விட்டு ஓடாமல் ஏதோ கர்ணனின் கவச குண்டல ரேஞ்சுக்கு கழட்டமுடியாமல் ஹீரோயின் முன்னால் இம்சைப்படுவார்கள்..

(
ரசிகன்: சூப்பர்... அப்படி போடுங்க அறுவாளை..காருல பிரேக் பிடிக்கலின்னாக்கூட இஞ்சின சாவியால ஆஃப் பண்ணாம ,அறுவது கிலோமீட்டர் ஓட்டுவாய்ங்களே..)

45) டிரிம்ஸ் மாம்ஸ் :

ஹீரோ அறிமுகம்:மொத மொதல்ல ஹீரோ அறிமுக சீனுல,அவரு ஓடிக்கிட்டோ.. இல்லாட்டி பறந்துக்கிட்டோத்தேன் இருப்பாரு
..


[ரசிகன்: ஹிஹி... செண்டிமெண்ட் பாயிண்ட புடிச்சிட்டிங்க மாமே.. அருமை.. இது பரவாயில்லை.. செல படங்களுல காசு குடுத்து பாக்க வந்த ரசிகர்களோட மூஞ்சியில ஒதைக்கிற மாதிரி காலை காட்டிக்கிட்டேதேன் ஹீரோ அறிமுகம் ஆவராருங்க்கோ..]

46)dubukudisciple :

                                  1)  ஹீரோ விளையாட்டுல எப்பிடியும் கடைசில ஜெயிச்சுடுவாரு....அப்பிடியே தோத்துப்புட்டாலும் அது அவிரு வேணுமின்னே ஹீரோயினுக்காக பெருந்தன்மையா விட்டுக்கொடுததாயிருக்கும்..

                                  2)  ஹீரோ,ஹீரோயினைதேன் லவ் பண்ணிவாரு..


[ ரசிகன் : நல்லவேளை ஹீரோ ஹீரோவாத்தேன் நடிப்பாருன்னு சொல்லாம போனிங்களே..ஹிஹி..]
நல்லா நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க,.. ரொம்பவே ரசிச்சேனுங்க...டிடி...:D
[ஆமா ..சூழாவளி பயணத்துக்கு நடுவில படம் பாக்க ,ஒங்களுக்கு எப்பிடி டைம் கெடைக்குது?.]

47)   manipayal :

                          ஹீரோவும் ஹீரோயினும் வில்லனிடம் மாட்டிகொள்ளும் போது அவர்களை காப்பாற்ற ஒரு நாயோ ஆடோ யானையோ வரும். atleast போலீஸுக்கு ஒரு தகவலாவது குடுக்கும்.



[ ரசிகன் : மணி சார் .. நெசந்தானுங்க...சூப்பர் பாயிண்டுக்கு நன்றிங்க..

48) நம்ம பொடியனின் குறும்புகள்: (+18+3+1 rated): 

                          ஹீரோயின் கிட்ட வில்லன் டைம் என்னனு கேட்டாக் கூட அவனுக்கு செருப்படி விழும். அது ஸ்லோ மோஷனில் 3 முறை காட்டப் படும்.( படம் முடியரதுக்குள்ள ஒரு ரேப் சீன் கன்பர்ம். :P )
ஹீரோயினே தப்பா நடக்க சம்பதிச்சாலும்..ஹீரோ அறிவுறை சொல்லி திருத்துவார்..



49) பாச மலர்.

ஹீரோ விஜய்யோ முரளியோ...ஆனா அவர் ஃப்ரண்ட் மட்டும் கண்டிப்பா சார்லிதான்...ஹீரோ வயசுக்கும் ஃப்ரண்ட் வயசுக்கும் அப்படி ஒரு பொருத்தம்.



ஆமாங்க.. இப்ப நம்ம விவேக்கும் அந்த இடத்த பிடிச்சிக்கிட்டாரு..

50) கருப்பன்/Karuppan

எழும்பும் தோலுமாக இருக்கும் வில்லனின் அடியாளால் எளிதாக கடத்தப்படும் ஹீரோயின், ஹீரோயின் அம்மா, ஹீரோவின் தங்கை, மற்றும் இதர நன்பர்கள், கிளைமாக்சில் வில்லனின் ஆட்களை ஹீரோவுடன் சேர்ந்து பின்னி பெடலெடுப்பார்கள்.
பி.கு: கிளைமேக்ஸ் யுத்தத்தில் இந்த இதர மக்கள் அவ்வப்போது வில்லனின் இரண்டு அல்லது மூண்று ஆட்களிடம் மாட்டிக் கொள்வர் அப்போது பிசியாக பைட் செய்து கொண்டிருக்கும் ஹீரோ பறந்து வந்து நன்பர் மாட்டிக் கொண்ட வில்லன் ஆட்களில் ஒருவரை உதைப்பார் மீதியை நன்பர் கவனித்துக் கொள்வார்...!

 
51 ) நானானியின் நச்சுன்னு ஒரு பாயிண்ட்.. .

சினிமா போலீசும் சரி சீரியல் போலீசும் சரி...கதை முடியனுமின்னா சுறுசுறுப்பா வில்லனைப் பிடிப்பார்கள். கதையை இழுக்கனுமின்னா வெண்டைக்காய் மாதிரி ஒரே வழவழ கொழகொழதான். சர்தானே நய்னா?



உண்மைதானுங்க.. உண்மையைதவிர வேறெதுவுமில்லை..

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கல்ல?...

Saturday, November 17, 2007

சானியா மிர்சாவும், படங்களும்..

            நீங்கள் இதுவரை எங்கேயும் பார்த்திராத சானியா மிஸ்ராவின் படங்கள். கண்ணைப்பறிக்கும் வண்ணக் கொண்டாட்டங்கள்.

                இப்ப யார் வீட்டுக்கு போனாலும் அவுங்க ஊரோட சில பல படங்கள போட்டு வைச்சிருக்காங்க..ராத்திரியில மொத மொதல்ல எடுத்த  படமாம்.

              அவ்வ்வ்வ்வ்வ்...... எப்பிடியெல்லாம் நம்மல அலைய வைக்கராய்ங்க இல்ல?...

சரி சரி ..நமலும் ஊரோட ஒத்துப்போவனுமில்ல..

                 அதுவும் நா இருக்குற ஊர் ரொம்ப பெருமை வாய்ந்தது..எதற்க்கு பெருமை வாய்ந்தது?ன்னு கேக்கறீங்களா?
அதான் நான் இருக்குற ஊர்ன்னு முன்னாடியே சொல்லிட்டேனே..

                          எங்க தோஹாவுல சமிபத்துல ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்துச்சில்ல..அங்க நானும் என்னோட நண்பர்களும் எடுத்த/கிடைத்த சில முதல் இரவுப்படங்கள வைக்கிறேன்..பாத்துட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்கப்பு...

(படம் பெருசா தெரியனுமின்னாக்கா..படத்து மேல வெக்கப்படாமே கிளிக்குங்க.. )

டென்னிஸ் புயல் ,தென்றலாய்...



கோச்சுடன்


அட.. இவர்கள் விளையாட்டு வீராங்கனைகளா? இல்லை தேவதைகளா? 


India's tennis star Sania Mirza, 2nd right, enters the arena with her teammates during the Opening Ceremony of the 15th Asian Games in Doha, Qatar on December 1, 2006. AP



அஞ்சாமல் நீளம் தாவும் அஞ்சு ஜார்ஜ்


Anju Bobby George competes in the final of the Women's Long Jump at the Asian Games in Doha, Qatar on December 10, 2006. AP

ரொம்பவே.. யோசிக்கிறயே.. கிருஷ்ணன் சசிகிரன்..
வீட்டுல சமையல் செய்யாம வந்துட்டோமின்னா?..
(ஓஹோ.. புரிஞ்சிடுச்சி.. ஆனாக்கா இண்டோருல சிகரேட் பிடிக்கப்படாது..)



Krishnan Sasikiran of India ponders the move during the Asian Games Chess Mixed Teams Classical Swiss Round 9 in Doha, Qatar on December 14, 2006. AP


வெண்கல தாரகை ஜெய்ஷா..
அங்க என்ன பராக்கு ஜெய்ஷா.?. ஓ..கேமராவா?..இப்பவே ஆரம்பிச்சாச்சா?
கோட்டப்பாத்து ஓடியிருந்தா தங்கப்பதக்கம் கெடச்சியிருக்குமில்ல?..





China's Xue Fei, left, runs to the line to win the gold medal in the final of the Women's 5000m at the Asian Games in Doha, Qatar on December 11, 2006.. At center is Japan's Kayo Sugihara, silver and at right India's P Jaisha Orchatteri, bronze. AP


வந்த இடத்தில் மானம் காத்த மங்கைகள்..


The Indian team celebrates as they hold the gold medals they won in the final of the Women's 4x400m relay at the Asian Games in Doha, Qatar on December 12, 2006. AP

வெள்ளி தாரகைகள்..
துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கா?..



Shweta Chaudhry, Srao Harven and Sonia Rai, of India wave after winning the silver medal of the Women's 10m Air Pistol team shooting event at the Asian Games in Doha on December 3, 2006. AP



விளையாட்டு ஜோதி ஏத்த பஞ்சகல்யாணில வந்த எங்க நாட்டு இளவரசர்..




கத்தார் நாட்டு ராஜா , ராணி பாருங்க..



மந்திரிகள் எந்திரிச்சி நின்னப்போ..



உள் அரங்க செட்டிங்..துவக்க விழா கலை நிகழ்ச்சிகள்..



ரைட் சகோதரர்களூக்கு கிளைடர் ஜடியா குடுத்தவர்..



கப்பலோட்டிய " அரபி"


கண்ணைப் பறிக்குது வண்ணமயம்..









சொம்மா ஜெக ஜோதியா இருக்குதே.. பட்டாசு நம்ம சிவகாசியோ?..









விளையாட்டு சின்னம் அறிமுகம்.





பாரம்பரிய உடையுடன் அரபாப்ஸ் & அரபாபிஸ் (கோரஸ் பாட்டு).



பொது மக்கள்..ஆரவாரம்.




மன்னின் மைந்தர்கள் காலரி



விதேசி மலர்கள்





என்ன தப்பு செஞ்சான்னு இந்த பையன பெஞ்சு மேல நிக்க வச்சிட்டாங்கன்னு தெரியலியே..



கொடியேற்றம்..



தண்ணீ அடிச்சிட்டு நடனம் பாத்திருப்பீய்ங்க.. உண்மையான தண்ணியில நடனம் பாருங்கப்பு..



அவ்வ்வ்வ்வ்வ்வ்,......என்னமா உணர்ச்சிகரமா ஆடராய்ங்கல்ல?.



இந்த தேவியின் ஆசிர்வாதம் யாருக்கு?



இப்பிடித்தேன் நெட்டி முறிக்கனும்..
முன்ன, பின்ன பாக்கலேன்னு சொல்லப்படாதில்லையா?



டால்பீனை தோற்க்கடிக்கும் தாமரைகள்..





எல்லாம் முடிஞ்சி போச்சு.. கடைசிப் பட்டாசு..



கடைசி கடைசியா நா விழா முடிஞ்சி வந்தபோது இருட்டுல எடுத்தப்படம்..
எத எடுத்தன்னு கேக்கறீங்களா? வேறென்ன இருட்டைத்தேன்.ஹிஹி.. (அடப்பாவி அட்லிஸ்ட் அத ஃபிளாஷ் போட்டு எடுத்திருக்கலாமில்ல.(?.))




பதிவிலேயே பின்னூட்டம் போடுபவர்கள் சங்கம் ..- இடுகை 3

பதிவிலேயே பின்னூட்டம் போடுபவர்கள் சங்கம் ..- இடுகை 3



                    நாளைக்கி லீவுதானேன்னு இன்னிக்கி ராத்திரி , திரட்டி வழியா மேஞ்சிக்கிடிருந்த போது..
"உயிர் மெய் மலர்கள் "ங்கர பதிவுல இ.கா வள்ளி என்னும் பதிவரின் "தரையில் இறங்கும் விமானங்களும், எதார்த்தத்தின் வலிகளும்"ங்கர இடுகைய பாக்க நேர்ந்துச்சி..

                    அருமையா எழுதியிருக்காங்கன்னு தோனுச்சி எனக்கு ;உங்களுக்குமுன்னு நம்பரேன்..போய் பாருங்க..

                     மொதப்பத்திய படிக்கும்போதே.. அந்த இடுகைக்கு நா ரொம்ப அன்னியோன்யமாயிட்டேன்..ஏன்னாக்கா..கல்லூரி படிப்பை முடித்து ,நானும் வாழ்க்கை போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்ட போது, பல சமயங்களுல இதே மனநிலையில்தான் இருந்தேன்..,
சிந்தனைய தூண்டர மாதிரி இருந்ததால.. மூளை படிக்கும் போதே.. மனசுல தோனுவதை டைப்பிட்டேன்.. ஏன்னாக்கா.. பின்னாடி மறுபடியும் படிச்சாக்கா, இதே பாதிப்பு இல்லாம போகலாம்..

// தகுதியற்ற இடங்களில், தகுதியானவர்களைப் பார்க்கும் போதும், தகுதியான இடங்களில்
தகுதியில்லாதவர்களைப் பார்க்கும் போதும் மனதுக்குள் ஒரு குழப்பம் வரும், எல்லாமே சந்தர்ப்பம் சார்ந்தது தானோ என்று.//

                       அப்போது மட்டுமல்ல,இப்போதும் பலரை பார்க்கும் போது.. சர்வைவல் தியரிகள் (வாழ்வியல் நிலைப்பு விதிகள்) காலத்துக்கேற்ப மாறிடுச்சோன்னு தோனுது.


// யதார்த்தம் வலிக்காமல் இருக்கும் ஒரு புள்ளியில், நாம் இந்த வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டோம் என்று தான் தோன்றுகின்றது.//

இதையெல்லாம் கூட பாஷையால் உணர்த்த முடியுதே என ஆச்சர்யமாயிருக்கு..சூப்பர்..

                         சுடு நீரையும், சாதாரண நீரையும் பதமாக கலந்து இரண்டையும் ,நம் உடலுக்கு பாதிப்பில்லாத வெப்பத்திற்க்கு கொண்டுவருவது (குளிக்கத்தேன்.. வேறேதுக்கு?..) என்ற நீண்ட பொருளை" விளாவுதல்" என்ற ஒற்றை தமிழ் சொல்லில் அடக்கலாம்..மற்ற மொழிகளில் இதற்க்கு அர்த்தம் சிதையாமல் , சுருங்க சொல்லி விளங்க வைக்கும் வார்த்தை உண்டா என தெரிய வில்லை.. அதுபோல யோசித்துப்பார்த்தால், மேலே உள்ள ஒற்றை வரி தன்னுள் ஆழ்ந்த அர்த்தங்களை பொதிந்து கொண்டுள்ளதாகத் தோனுது.



// அழகான ஒரு கைவேலை செய்யலாம், கோலம் போடலாம், வரையலாம் ஆனால் அவற்றை ரசிக்கும் ஒரு உயிர் தான் நம் உடன் இருக்க வேண்டுமென்று நினைப்பது புத்திசாலித்தனம் இல்லையில்லயா?//

                          பின்னே.. காண கண் இல்லாவிட்டால் தங்கமென்ன?தகரமென்ன எல்லாம் உலோகம் தானே.நாம் உயிரோடிருப்பதை நமக்கு நினைவுப்படுத்துவதே நம்மை நேசிக்கும்/ரசிக்கும் மற்ற மனங்கள்தானே..(நண்பர்களையும் சேர்த்துத்தான்)
சொர்கமோ, நரகமோ வாழ்க்கையின் முடிவில் இல்லை..அது நமது தினசரி வாழ்வின் பயணத்தில் தான் உள்ளது.
அந்த பயணத்தை இன்பமயமாக்க நிச்சயம் துணையின் குணம் அவசியம்தானுங்க..
.

                          சில சமயங்களில் இந்த இயந்திர வாழ்க்கையில் ரசிக்க என்ன இருக்கிறது என ஒரு சலிப்பு உண்டாயிருந்தது..இப்போது இந்த வாழ்க்கை இயந்திரத்தின் ரிதத்தைக்கூட ரசிக்கத்தோன்றுகின்றது..மனம் ஒன்றுதான் ..பார்வை தான் வேறு.


// இவற்றையெல்லாம் செய்வது நேரத்தை வீணாகச் செலவு செய்வதாக நினைக்கும் உள்ளங்களுடன் கூட வாழ்க்கை அமையலாம், பணம் பண்ணும் உலகில் இவை பலருக்குத் தேவையற்ற விசயங்களாகிவிடுகின்றன. //

                         கட்டாயப்படுத்தி வருவதல்ல ரசனை.. , ஷேர் மார்க்கெட் கற்றுக்கொள் என என் நண்பர்களும் என்னை கட்டாயப்படுத்துவதை நான் நிச்சயம் விரும்ப மாட்டேன்.. அதே சமயம் கவிதைளை,மலரை ரசிக்க கற்றுக்கொள் எனவோ,விஞ்ஞானம் தெரிஞ்சிக்கலாமுன்னோ.. நானும் கட்டாயப்படுத்த மாட்டேன்.
                        நான் ரசிச்சதை சொல்லுவேன்,அவர்கள் ரசிச்சதை சொல்லுவார்கள்..எங்கள் ரசனைகள் வேறு .எங்கள் பார்வைக் கோணங்களும் வேறு.ஆனாலும் ஏதோ ஒரு ரசனை புள்ளியில் நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம்..எனவேத்தான் இப்பவும் நாங்கள் நண்பர்களாயிருக்கிறோம்.
                         ஒரே வகை மலர்களாலான மாலையைவிட ,வேறுபட்ட மலர்களின் சங்கம மாலையே..கவர்ச்சியானது..[நாஞ்சொன்னது "வேறுபட்ட " மட்டுமே.. "எதிர் குணமுள்ள "என்ற பொருளில் இல்லை].

                       கலையை ரசிக்க அதனை கற்றுக்கொள்ள வேண்டியதில்லை.. ரசனை இருந்தால் போதுமானது..அப்படியிருந்தாக்கா. ஒரு பரத நாட்டிய கலைஞர்.கூட .கராத்தே வீரரின் வித்தை ரிதத்தை ரசிக்க முடியும்.


// எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவர்களே யோசித்து, நகைச்சுவையாக, சிரிக்க, சிரிக்க பேசும் அவர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்ததில்லை,//

வெளிச்சம் என்று எதை நாம் நிர்ணிப்பது..நாலு பேர் பாராட்டுவதையா?..இல்லை.. அப்படி பேசும் போது நமக்குள் /சூழ்னிலையில் ஏற்ப்படும் ஈடுபாடு/மகிழ்ச்சி மட்டுந்தான்.


// அழகு மட்டுமிருந்தால் போதுமா புத்திசாலித்தனம் வேண்டாமா என்ற கேள்வியும், புத்திசாலியான அழகில்லாத பெண்ணை ஏற்றுக்கொள்வாயா என்ற மறுகேள்வியின் பதிலான மௌனமும் எனக்கு யதார்த்ததின் வலியை உணர்த்தியது. //

என்னிய ரொம்பவே யோசிக்க வச்சிட்டீங்களே.. வள்ளி..

                         
  அழகு எத்தினி வருஷம் இருக்குமுங்க?. ஒரு குழந்தை பிறந்ததுக்கப்பறம்...ஜஞ்சி வருஷம்..? இல்ல ஆறு வருஷம்?.. அதுக்கப்பறம் அன்பும்,ஆறுதலும் ஆலோசனையும் சொல்லி தோளோடு தோள் கொடுக்க அறிவு தானே வேனும்...

                          அழகு வேணுமின்னாக்கா.. ஆரம்பத்துல கவரரதுக்கு ஒரு கருவியா இருக்கலாம் ஆனாக்கா..அந்த அட்ராக்ஸன் நிலைக்கனுமின்னாக்கா..அறிவு முக்கியம். எந்த ரசனையும் இல்லாத ஷோகேஸ் பொம்பையை யாரும் மனைவியா அடைய விரும்ப மாட்டாங்க..(ஹிஹி.. நானுந்தேன்..).

                          என்னிய பொருத்தவரை என்னோட ஓட்டு மொதல்ல அன்புக்குதாங்க.. நேசிக்கத்தெரிஞ்ச மனசுத்தான்,.. நெக்ஸ்டுதான் அறிவு..
அதுக்கப்பறந்தேன் கடைசியா அழகு..
[ஆனாக்கா,..அடுத்த பெண்கள் புத்திசாலியா இருப்பதைப் பார்த்து மதிக்கும் ,சில ஆண்கள் ,தங்கள் மனைவி புத்திசாலியாக இருந்தால் ஈகோவாக அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதை பார்த்திருக்கிறேன்.].

                            என்னிய பொருத்தவரை , என்னோட எதிர்காலதேவதை என்னிய விட புத்திசாலியா வந்தாக்கா.. சந்தோஷமா எல்லா பொறுப்புக்களையும் அவிங்ககிட்ட குடுத்துட்டு ..ஹாயா.. அவுங்கள புத்திசாலித்தனத்த ரசிக்கப்போயிடுவேன்னுங்க.. ஹிஹி.. (இப்பவே சரண்டரா?).
ஆனாக்கா..அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் போடுவேன்.. அப்பத்தான சமாதானப்படுத்த சான்ஸ் கெடைக்கும்..ஹிஹி..



//ஆனால் திறமை என்பதின் அர்த்தம், அதை வெளிக்காட்டுதல் மட்டும் தான் என்று நான் எண்ணியது தவறு என இப்போது நான் நினைப்பது தான் யதார்த்தத்தின் வலியை எனக்குப் போக்கியது.//

                              திறமைங்கரது ஒரு ஒளி வெளக்கு மாதிரி, அது எப்படியும் வெளிச்சத்த குடுத்துக்கிட்டுதேன் இருக்கும்.. நாம வலிந்து வெளிக்காட்ட அவசியமில்லை. கண்ணு நல்லா தெரியரவிங்களுக்கு தானாவே தெரியும்.
நாம்மல சூழ்ந்திருக்கரது குருடர்களின் கூட்டமாயிருக்கரதால வெளிச்சமே இல்லைன்னு சொல்ல முடியுமா என்ன?..

                              நம்ம கிட்ட இருக்குறது திறமையா இன்னு தீர்மானிக்கிற உரிமை நம்மகிட்ட இல்லீங்களே.. நம்மோட சூழ்னிலையும் ,சுற்றியிருக்கிற சமுகமும் தானே..?..

                    சமுகம் நமக்கு வெற்றிய குடுத்தா அது திறமை.. இல்லேன்னாக்கா.. ..........
                    உலகம் உருண்டைன்னு சொன்னவரை அவமதித்து பார்த்தது ஒரு சமுகம்..மாஜிக் வித்தை காட்டரவரை பாபான்னு காலுல விழுது இன்னொரு சமுகம்..இதுல யாரு தெறமசாலி ? யாருக்கு தெறமசாலி?..


// அடக்குமுறையை ஏற்படுத்திவிட்டு பெண்கள் முட்டாள்கள் தான் என்று சந்தோசப்படும் ஆண்கள், நிச்சயம் யதார்த்தத்தை அணுக பயப்படுபவர்கள் என்று தான் தோன்றும்.//

இது பெண்ணியவாத குரல் மாதிரி இருக்கே..,என்னிய கேட்டாக்கா இந்த காலத்துல நெறய ஆண்கள் தான் ,அப்பாவிகளா இருக்காங்கன்னு தோணுது..

// ஆனால் மதிப்புகள் என்பது, சரியானவர்களால் மதிப்பிடப்படும் போது தான் அறியவரும், அதும் தேவையான இடத்தில், கடலில் நீருக்கான மதிப்பும், பாலையில் நீருக்கான மதிப்பும் போல...//

ரொம்ப அருமையான ,பொருத்தமான உதாரணம்..

[கொஞ்சம் அகலப்பார்வையா யோசிச்சிப்பாத்தாக்கா.. இந்த பூமியோட வயசு பல கோடி ஆண்டுகள்..இனியும் பலகோடி ஆண்டுகள்..இதுல என்னோட குறுகிய கால நூற்றாண்டு வாழ்க்கைக்கும்,ஒரே நாள் முழு வாழ்க்கையையும் வாழும் ஈசலுக்கும் பெரிய வித்தியாசமிருக்கறதா தோன வில்லை. இதுல நா ஏன் என்னிய போன்ற வாழ்க்கையை கொண்டவர்கள்கிட்டயே என்னோட திறமைக்கு அங்கிகாரம் கேக்கனும்?]        


// நான் எதை தகுதியாய் என்னிடம் பார்க்கின்றேன் என்பதிலும், மற்றவர் என்னிடம் தகுதியாய் எதைப்பார்க்கின்றார்கள் என்பதிலும் பெருவாரியாக வேருபாடு உள்ளது.
தகுதி என்பது நம்மிடம் இருப்பதில்லை, மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும், அவர்களால் உணர்ந்து கொள்ள முடிவதுமே தகுதியாகின்றது//

                   நான் ரொம்ப ரொம்ப ரசிச்ச விளக்கம் இத்தேன்..ஆனாக்கா இந்த "மற்றவர்" ங்கரவங்க கருத்து நிரந்தரமில்லையே.. "பெருவாரியானவர்கள்" அல்லது "என் வாழ்வில் பாதிப்பை ஏற்ப்படுத்த முடிந்தவர்கள்"ன்னு மாத்திடலாமா?




//நான் தேடிய அல்லது ஆசைப்பட்ட தகுதிகள் கிடைத்த மாத்திரத்திலும் கூட நம் தேடுதல்களும் எதிர்பார்ப்புகளும் முடிவதில்லை//.

                     உண்மைத்தான். நாம் முன்னே ஆசைப்பட்ட தகுதிகளின் தற்போதைய மதிப்பும் மாறிவிட்டிருக்கிறது..நாம் எப்போது தேடல்களை ஆரம்பிக்கிறோமோ அங்கே நமது முன்னேற்றம் துவங்குகின்றது .எங்கே நமது ஆசைகளை / எதிர்பார்ப்புகளை நிறுத்துக்கிறோமோ அங்கே நமது வாழ்க்கை முடிகின்றது..


// தான் போகும் இடத்தின் சூழலுக்கேற்ப தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற யதார்த்தம் தான் வெற்றிகரமான ஒரு வாழ்வியல் தத்துவமாக எனக்குப் படுகின்றது.//



     
                 நமது எண்ணங்களுக்கு ஏற்ப, நாம் போகும் சூழலை பக்குவமாக மாற்றுவதுதான் வெற்றிகரமான ஒரு வாழ்வியல் தத்துவமாக எனக்குப் படுதுங்
க..



பின் குறிப்பு:

இது யோசிச்சி எழுதியது அல்ல.. இப்போது தோனுவத எழுதியது.(பொலம்பல படிச்சாலே புரியுதே..)
இம்புட்டு பெரிய புலம்பல் , நீங்க படிச்சி மண்டைய குழப்பிக்க அல்ல..
நான் எதிர்காலத்தில் ,இந்த தருணத்தில் இருந்த ,என் மனநிலையை லேசா ஞாபகப்படுத்திக்கொள்ள மட்டுந்தேன்.
ஏன்னாக்கா இப்பிடி ரசிக்கும் மனநிலையில, என்னையே நான் ரசிக்கிறேன்..ஹிஹி..(இது வேறயா?..)

(இது தான் எங்க்கிட்ட ஒரு பெரிய கெட்டப்பழக்கங்கரது.. முன் குறிப்பா போட வேண்டியதையெல்லாம் பின்குறிப்பா போட்டுடறேன்..ஹிஹி..]

எப்படியோ இன்னைய லீவு சுவரஸ்யமா சிந்தனையில போச்சு.. நன்றிகள். இ.கா வள்ளி அவர்களுக்கு..

Friday, November 16, 2007

திருடனுக்கு தேள் கொட்டினாக்கா எப்பிடியிருக்கும்..?





அப்பிடி போடு அறுவாள...

தனக்கு வந்தாதானே தெரியும் கஷ்டமும்,நஷ்டமும்...,திருடனுக்கு தேள் கொட்டினாக்கா எப்பிடியிருக்கும்..?

என்னாச்சி, ஒரே பழமொழியா கொட்டுதேன்னு யோசிக்கிறிய்ங்களா?..
நடந்த விசயம் அப்பிடியாப்பட்ட விசயமாச்சே..

நம்ம "நீல குறுக்கு" புகழ் (Blue crass ம்பாங்களே..) பிரியங்கா , அதானுங்க.. அடிக்கடி பிராணிகள் பாதுகாப்புக்கு போராட்டம் நடத்தி மனுஷங்கள வதைப்பாய்ங்களே.. அவிங்களேதேன்..

இப்ப டில்லில குரங்குகள் எண்ணிக்கை ரொம்பவும் பெருகிடுச்சி.(நா.. நம்ம அரசியல்வாதிகளை சொல்லலீங்கோ..)
வீடு ,ஆஃபிஸ் இன்னு எல்லா இடத்துலயும் பூந்து ஒரே அட்டகாசம்..,இவிங்க வீடு மாடில காய வைச்ச துணிகள அவிங்க வீட்டுல,அவிங்க விட்டு துணிகள இவிங்க வீட்டு மாடிலையும் போட்டு ,குடும்பத்துல கொழப்பத்த உண்டாக்கிக்கின்னு இருக்குதுங்க.. கவர்மெண்டு ஆபிசுல கூட பகல்ல நிம்மதியா தூங்கக்கூட(?) முடியாம ஆஃபிஸ்ரெல்லாம் கஷ்ட்டபடராய்ங்க..

ஆனாக்கா இந்த அக்கா.. இதெல்லாம் பத்தி கண்டுக்காம.. குரங்குகளுக்கு எதிரா முனிசிபாலிட்டி ஏத்தாவது நடவடிக்கை எடுத்தாக்கா.. ஒடனே போராட்டந்தேன்ன்னு சொம்மா மெரட்டிக்கினு இருந்தாங்கல்ல...அதுவும் "குரங்குகள் ரொம்பவும் சாதுவானவை குழந்தைகள் மாதிரி"ன்னு அதுங்களுக்கு சர்ட்டிபிக்கேட் சர்வீஸ் வேற.. (பெருகிவரும் வெறி நாய்களை குறைக்க நடவடிக்கை எடுத்த போதும் , முழுசா.. முட்டுக்கட்டை போட்டு விளம்பரம் தேடிக்கனதும் இவிங்கத்தேன்.)

சோனியாவோட மகளாச்சே.., அதனால முனிசிபாலிட்டியும் குரங்காட்டிகள டிஸ்மிஸ் செஞ்சிட்டு , குரங்குங்க கூட பேச்சு வார்த்தை (?)நடத்த டிரைனிங் எடுக்கப்பட்ட.."லங்கூர் "குரங்க (படம் பார்க்கவும்..) அப்பாயிட் செஞ்சிது..

குரங்கு எண்ணிக்கைய குறைக்குறதுக்கு பதிலா..யாராவது வீட்டுக்குள்ள குரங்க்கு வந்துடுச்சின்னு கம்லெயின்ட் செஞ்சாக்கா,குறைஞ்ச பட்சம் ஒரு வாரத்துக்குள்ளையோ(?),பத்து நாளுக்குள்ளை அங்க போயி அத வெரட்டரதுதான் திட்டமாம்...

இது ஒரு கொழப்பம் என்னான்னாக்கா.. விடுகள பர்மனன்டா ஆக்ரமிச்சி டேரா போட்ட குரங்குகள விரட்ட போன நம்ம லங்கூரும் குஷியாயி ,அதுங்க கூட சேந்து ஆட்டம் போட்ட கதையெல்லாம் உண்டு..(மத்தவங்களுக்காக ,அதுங்களுக்குள்ளையே சண்ட போட்டுக்க அது ஒன்னும் தமிழ்நாட்டு குரங்கு இல்லையே..)..

இன்னா செய்யரத்து.?. எதாவது செஞ்சாக்கா இந்தம்மா பேஜார் பண்ணுமோன்னு கிறுக்கு புடிச்சி அலைஞ்சிக்கிட்டிருந்த.. முன்சிபாலிட்டிகாரங்க வயத்துல பால்,டிக்காஷன்,சீனி யெல்லாம் கலந்து வார்க்கர மாதிரி ஒரு சம்பவம் நடந்துடுச்சி...

இத்தன நாளும் நடுத்தர மக்களோட வீட்டுல டாண்ஸ் ஆடிக்கினிருந்த ஒரு குழந்தை (முன்னோர்தேன்....)நம்ம தலைவிய பாத்து நன்றி சொல்லிட்டு போலாமுன்னு நேத்திக்கி..அவிங்க வீட்டுக்கு (பிரியங்கா தனது கணவர் பற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுடன் வசித்து வரும் டில்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களா..) போயிருக்கு...(தினமலர் செய்தி)
அத நம்மாளு தப்பா புரிஞ்சிக்கிட்டு அலறியடிச்சிக்கின்னு வெளிய ஓடிவந்துட்டாய்ங்களாம்..
அத்தோட மட்டுமில்ல..
திருடனுக்கு தேள் கொட்டி.., அவன் நம்மல எழுப்பி உரிமையோட மருந்து வாங்க்கிட்டு வர சொல்லர கணக்காக்கா..
நேரா குடும்பத்தோட போயி முனிசிபாலிட்டில கம்லெய்ன்ட் குடுத்துட்டாய்ங்க...
ஓஹோ உங்க வீட்டுக்கு குழந்த வந்திருக்கா?..பீடிங் பாட்டிலுல பாலெல்லாம் குடுத்தீங்களா? ன்னு அவிங்க கிட்ட நேரா கேக்க முடியுமா?
ஒடனே.. நம்ம .லங்கூராரோட முனிசிபாலிட்டி காரங்க.. பிரியங்கா வீட்டுக்கு போயிருக்காங்க...(நன்றி சொல்ல இருக்குமோ?..) அதுக்குள்ள நம்ம ஹீரோ எஸ்கேப்..

முனிசிபாலிட்டிகாரங்களூக்கு ஒரே சந்தோஷம்.. இனிமே.. குரங்க்குகள் பெருக்கத்த குறைக்க நடவடிக்கை எடுத்தாக்கா இந்தம்மா வாய தொரப்பாங்கங்கரீங்க?.

இனிமே..வேற ஏதாவது.. பிராணிகளால பொது மக்களுக்கு கஷ்டம் வந்தாக்கா.. நடவடிக்கை எடுக்கரத்துக்கு முன்னாடி.. நம்ம பிரிங்கா மேடம் வீட்டுக்குள்ள ஒன்னு ரெண்டு பிராணிகள ஓட்டி விட்டாக்கா..
நடவடிக்கை எடுக்க சொல்லி மேலிடத்திலயிருந்தே நேரா பர்மிஸன் வந்துடுமில்ல.. இந்தம்மாவும் சைலண்டா இருப்பாய்ங்கள்ல..

(இந்த வம்புக்காகத்தேன்ன். பிரியங்காவும் சிம்லா பக்கம் ஒரு பெரிய பங்களா வாங்கரத்தா ஒரு நியுஸ்.. ஏன்னாக்கா பிராணிகள் அதிகம் இல்லாத குளிர் பிரத்தேசத்துல ஜாலியா இருந்துக்கின்னு.. அதுங்களுக்கு ஆதரவா நெறய போராட்டம் நடத்தலாமே.. நேரடியா கஷ்ட்டப்படுரது மக்கள்ஸ் தானே ).

எது எப்பிடியோ,அவிங்க லொல்லுல கடுப்பாயிபோயி ,வீட்டுக்குள குரங்க வெரட்டி விட்ட அந்த யாரோ ஒரு புண்ணியவான டில்லி முனிசிபாலிட்டிகாரங்க..நன்றியோட ரகசியமா பரிசு குடுக்க தேடரதா ஒரு நியுஸ்..
அது நீங்களாயிருந்தாக்கா.. ஒடனே ஓடிப்போயி.. வாங்கிக்கோங்க..

Saturday, November 10, 2007

எச்சரிக்கை : பலவீன இதயம் கொண்டவர்கள் தயவு செய்து இதை படிக்கவேண்டாம்...

                            

                           அல்வாவுக்கு பேர் போன சென்னை மாநகரம்.அடிவானுக்கு செம்மஞ்சள் பூசிக்கொண்டிருந்த சூரியன், அதை அழித்துக்கொண்டிருந்த இருட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், வெக்கி கொண்டு விலகத்தொடங்கிய நேரம்.மார்கழிக்கே உரிய குளிருடன் தென்றல்.மொட்டை மாடியில் முழங்காலிட்டு முகம் புதைத்து இருக்கும் பாவனாவின் கூந்தலை ஆசையோடு தழுவியது.

                               நமிதா..காண்போர் மனதிலெல்லாம் மையம் கொள்ளும் காந்தப் புயல்(?).கடந்த ஜந்து வருடமாய் வயது 22.புதிதாய் காண்பவர் இன்னொரு முறை அவளை ரகசியமாக திரும்பிப் பார்க்கவில்லை என்றால் தைரியமாகச் சொல்லலாம் "ஒரு நல்ல கண் டாக்டரை போய் பார்" என்று.நெற்றி மேல் சரிந்து விழும் முடிக்கற்றையை அவள் அடிக்கடி சரி செய்துக் கொள்ளும் அழகை பார்ப்பதற்கே..லைபரெரி,கல்லூரி மரத்தடி,தெரு முனை மொட்டை சுவர் என மானத்தோடு,வாழ்க்கையையும் சேர்த்து அடகு வைத்து காத்திருக்கும் லோக்கல் ரோமியோ மாதிரிகள்(?) பலர்.

                                 "இராமர் பிரிட்ஜ்" ஆர்ட்ஸ் காலேஜி"ல வக்கீலுக்கு படிச்சிட்டு ,இஞ்சினியரிங் பரிச்சையில பதினைஞ்சு அரியரோட பாசாயிட்டு,இப்ப டாக்டர் வேலைக்கு காத்துக்கொண்டிருக்கிறாள்.(ஒருவேளை அவளோட அப்பா டாக்ரராக இருந்திருந்தால்.. இவள் டாக்ராவதற்க்கு பத்தாவது பாஸானாலே போதுமாயிருந்தது..என்ன செய்ய..?)

                                  தப்பித்தவறி அவள் யாரோடாவது பேசி விட்டால்,அந்த அதிருஷ்டசாலிதான், அன்றைய கல்லூரி ஹீரோ/வில்லன் எல்லாம்.(சில பேருக்கு )

                                 பக்கத்துவீட்டு மாமி இவள் இல்லாமல் கடைக்கு போவதில்லை..கறி்வேப்பில்லயிலிருந்து கத்திரிக்காய் வரை கூடுதல் கிடைப்பதால்..இப்படிப்பட்ட அழகு தேவதையை கண்ணில் காட்டியதுக்கு கடைக்காரன் பின் எப்படித்தான் நன்றியை காட்டுவதாம்?

                                 மீனை தூண்டில் போட்டு பிடிப்பதை கேள்விப் பட்டிருப்பீர்கள்.. மீன் தூண்டில் வீசுவதை நம்புவீர்கள் அவள் கண்களை பார்த்தால்..

                                அந்த கண்மீன்கள்(?)  இப்போது நீந்திக் கொண்டிருந்தன.தண்ணீரில் அல்ல.. கண்ணீரில்..

                               பெண்களுக்கே உரிய ரகசிய விசும்பல்..காற்றில் லேசாய் கசிந்துக் கொண்டிருந்தது..ஆம் அது நமது சினேகாவிடமிருந்து தான்..
அபி அப்பா வந்தாலும் தேற்ற முடியாத அழுகை.

                              நான் என்ன செய்வது?. "அது " நடக்க கூடாதாயிருந்தது..தப்பு என் மேலயுந்தான்...நான் அவசரப்பட்டிருக்க கூடாது.. என எண்ணங்கள் கூட்டணியாய் பூமிகாவின் மனதில் முட்டிமோத..

                             " நைட்டு தூங்கக்கூட பிடிக்கல..யாரைப்பார்த்தாலும் கோபமாய் வருகின்றது.நான் செஞ்ச அந்த தப்புக்கு நான் அனுபவிக்கிறேன் அதுக்கு மத்தவங்கங்கள குத்தம் சொல்லி இப்ப என்ன பண்ணரது?. நடந்தது நடந்தது தான.?அத மாத்தவா முடியும்?..". என்ற ஸ்ரேயாவின் யோசனையை சிணுங்கிக் கலைத்தது அவளுடன் எப்போது உறவாடும் பாக்கியத்தைப் பெற்ற அலைப்பேசி..

                              அதை சமாதானப்படுத்தும் நோக்கில் எடுத்து கண்ணத்தில் வைத்து(ஹிம்..கொடுத்து வைத்த நோக்கியோ இல்ல..) ஹலோ.. என்றாள் திரிஷா.

"எப்படி இருக்கே..(பத்மப்)பிரியா ?"

"ஜ அம் பைன்.நீங்க யாரு?'

"ம்.. ஒசாம முன் லேடன்னு வச்சிக்கோயேன்"

                        முதலில் அதிர்ந்த கோபிகா உடனே சுதாரித்துக்கொண்டாள்.
ஒரு வேளை நமக்கு தெரிஞ்சவந்தான் சும்மா கலாட்டா செய்யரானோ?..
ஒருவேளை நம்மோட படிச்ச கடைசி பெஞ்சி சடைமுடி "கெட்டவன்" சிம்புவா இருப்பானோ..அப்பவே."யாரு மொதல்ல கிளாசுக்கு வராங்கன்னரது முக்கியமில்ல..யார் கடைசில ,மொதல்ல வெளிய போறாங்கன்றதுதான் முக்கியம்ன்னு தத்துவம் பேசுவானே?..அவனா?
இல்ல.. மொத பெஞ்சி பரட்டை தலை தனூஷா? இருக்காதே.. அவனுங்க மொக்க வாய்ஸ்தான் ஊருக்கே தெரியுமே..யாரா இருந்தால் என்ன?
யாராயிருந்தாலும் இப்ப நம்ம நிலமை புரியாமல்..

"இதப்பாருங்க .. யாராயிருந்தாலும் இந்த வெளயாட்டெல்லாம் வேணாம்..இப்ப நா மூடுல இல்லை"

ஹேய்..அசின் கூல்ப்பா.. நா..மாதவன்..நானும் ஆன்ரியாவும்.. நேத்து உனக்காக தைலாவரம் தியேட்டருல "கூட்டணிதர்மம் " படத்துக்கு எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?ஏன் வரலை?"

"மன்னிச்சிடு சூர்யா ..வேல அதிகமாயிடுச்சு.

"நானும் ஜோதிகாவும் இப்ப உன் வீட்டுலதான் இருக்கோம்..அம்மா நீ மேல மொட்டை(?)மாடியில இருக்கரதா சொன்னதால இப்ப மேல வந்துக்கிட்டிருக்கோம். நம்ம அறிவாலயத்துல "ராமன்=இயேசு=அல்லா" படமோ இல்ல, போயஸ்கார்டனுல "கொலைமுயற்சி"படமும் கூட ஆளில்லாம தான் ஓடுதாம்.. அதுக்கு இன்னிக்கு போலாமா?.."

"நா இப்ப எங்கயும் வரலை.."

                    பேசிக்கொண்டே மேலே வந்த ஸ்ரீகாந்தும் லைலாவும், ரகஸியாவின் அழுத முகத்தை கண்டு பதறினார்கள்.

"என்னாச்சு ஏன் இப்படி மேக்கப் போடாம மொட்ட மாடியில உக்காந்திருக்கிற?.. பாக்கவே சகிக்கல.."

"நானே ரொம்ப நொந்து போயிருக்கேன். என்ன எதுவும் இப்ப கேக்காதே சந்தியா..பிலீஸ்.."

 " இன்னமும் திகைப்பு நீங்காமலிருந்த சித்தார்த்தின் (சந்தோஷமா?. மைஃபிரண்டு?) கையை பிடித்து சர சரவென்று படிக்கட்டில் இறங்கத்தொடங்கினாள் நிலா.

"என்னாச்சுப்பா ஏன் இவ்வளவு கோபம்?.".என்றான் ஜாக்கிஜான்.
" பின்ன என்னடா.. நம்ம பிரண்டாச்சேன்னு கேட்டாக்கா?..ரொம்ப பிகு பண்ணிக்கிறா?..அவளுக்கு ரொம்ப திமிரு.."

"நீ நெனக்கிற மாதிரி இருக்காதுடா.அபிராமி .ஒரு பொண்ணோட மனசு ஒரு பையனுக்குத்தான் புரியுமின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க..மாள்விகா ஏதோ டென்ஷனுல இருக்காங்க..இல்லன்னாக்கா.. அவிங்க..இப்பிடியெல்லாம் நடக்க கூடியவங்க இல்ல..இந்த மாரி நெலமையில ஃபிரண்ட்ஸ் நாமலே கைவிட்டாக்கா.. அவிங்க பாவமில்லையா?".என்ற அஜித்தை கனிவோடு பார்த்தாள்  ஷிரேயா ரெட்டி..(ஏமி உங்க ஊருல எத்துனி காரு).

அட இவனைப்போல நானும் அவளுக்கு ஃபிரண்டுதான் .நமக்கு இவனப்போல தோனாம பூடுத்தே..என வருத்தப்பட்ட சிம்ரன்.. அவனிடம்.." கமல் நீ சொல்லரத்தும் சரிதாம்ப்பா..நான் மேலப்போயி அவக்கிட்ட தனியா பேசிப்பாக்குறேன்.". என்றாள்.

அவள் மேலே சென்ற சிறிது நேரத்தில்....பிரியாமணியின் விசும்பல்களுக்கிடையே.. கஜாலாவின் பேச்சு லேசாக கேட்டது..


" நெனச்சேன்.இப்பிடி ஏதாவது நடந்திருக்குமின்னு..உனக்கு அறிவு எங்க போச்சு.. கொஞ்சமாவது முன்னெச்சரிக்க வேணாம்?..இப்ப கஷ்ட்டப்படரது யாரு.?இப்ப டென்ஷனாயிட்டு என்ன பண்ணறது?..
உன்னிய மாதிரி பல பேரு இந்த காலத்துல ஜாக்கிரதையா இல்லாம பாதிக்கப்படராய்ங்க..
சரிசரி அழுவாத.. கண்ண தொடச்சிக்கோ..
நடந்ததையே நெனச்சிக்கிட்டிருக்காம.. எல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சி மறக்க முயர்ச்சி பண்ணு..".


                  ஆறுதல் எனக்கூறிவிட்டு கீழே இறங்கிவந்த நையன்தாராவிடம்" என்ன செல்லம், என்ன சொன்னாங்க?" என ஆர்வமுடன் கேட்ட பிரகாஷ்ராஜ்யை பார்த்து தீர்க்கமாய் சொன்னாள் ஜெனிலியா..அது

















கீழே















கீழே..




















இன்னும் கீழே..













இன்னும் கொஞ்சம் கீழே...








"அவ தெரியாத்தனமா..ரசிகனோட இந்த மொக்கை பதிவை படிச்சு தொலைச்சிப்புட்டாடா.. கொய்யாலேய்....ய்"









பின் குறிப்பு:"மசாலா சினிமா" மாதிரி இது ஒரு மசாலா(மொக்கை)க்கதை.. (இத இப்ப சொல்லி என்னப்பண்றது.. டைட்டிலுலயே சொல்லியிருந்தாக்கா..நாங்க தப்பிச்சியிருப்போமில்ல..)


1)  உண்மை(யாக 100% சாத்தியதை உள்ள)கதையை முழுசா படிச்சிட்டீங்களா?...
உண்மையிலேயே நீங்க.. எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்.உலக மகா பொறுமை சாலி..


2)  கதையில எத்தனை நடிகைகள் வர்ராங்க?அவங்க பேர்கள் என்ன?பட்டு பட்டுன்னு இப்பவே கரைட்டா பின்னூட்டத்துல ..சொல்லிட்டீங்கன்னா.. உங்க மெம்மரி சூப்பரோ சூப்பர்.ஹிஹி..(என்னது நடிகர்கள் பேரா? அவங்க கெடக்கட்டும் ஒரு மூலையுல..ஹிஹி..).
துணை pin குறிப்பு:பாதி சொன்னாக்கா,வெறும் சூப்பர்தான்..ஆமா..




3)  வர்ணனை(?)கள படிக்கும் போது யாருக்காவது பொறாமை தோனியிருந்தா..நீங்க உண்மையிலேயே ரொம்ப அழகானவங்க..ஒருவேளை எரிச்சல் தோனியிருந்தாக்கா.. உங்க அழகு குறைச்சல்லுன்னு நீங்க தப்பா நெனச்சிக்கிட்டிருக்கீங்கன்னு அர்த்தம். 


4)  கதை படிக்கும் போதே எக்குத்தப்பா நீங்களே இப்பிடித்தான் இருக்குமுன்னு ,எடக்கு முடக்கா ,கண்டபடி கற்பனை பண்ணிக்கிட்டாக்கா..நீங்க ரொம்பவும் முன்னெச்சரிக்கை உணர்வு உள்ளவர்ன்னு அர்த்தம்.



நீங்க எப்படி?...ஹிஹி..



லாஸ்ட் அண்டு ஃபைனல்(ரெண்டும் ஒன்னுதானோ?..)
இது வெறும் மொக்கைதான்.. மொக்கைதான்.. மொக்கை மட்டுந்தேன்.. மக்கள்ஸ்....


அன்புடன் உங்கள் ரசிகன்.

Tuesday, November 6, 2007

தீபாவளியா?.....தீபா"வலி"யா?...


இனிய தீப"ஓளி" நல்வாழ்த்துக்கள்..






 
            ஹாய்..ஹாய்..ஹாய்... என்னோட எல்லா தோழர்களுக்கும் ,தோழிகளுக்கும்.. உங்கள் ரசிகனின் அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

              எல்லாரும் ஏற்கனவே..டிரஸ் எல்லாம் எடுத்திருப்பிங்க...நாங்கலாம் வீட்டுல இருக்கும்போது.. அம்மாவுக்கு உதவியா இன்னேரம் எல்லாருக்குபோர்க்களத்துல (சமையல்கட்டுத்தானுங்க..)குதிச்சிருப்போமில்ல...
அதிசயமா..அப்பா முறுக்கு பிழிய..நான் பூரி மாவு பிசைய (குத்துச்சண்டைப்போட).. (அது என்னவோ என்னிய எப்பவும் மாவு பிசைய விட்டுடராய்ங்க..) அதுல வேற அப்பா.."நீதான் கராத்தேவுல பழைய ஓடு ஒடைக்கிறவனாச்சே, உன் வீரத்த இதுல காட்டு பாப்போம் " ன்னு உசுப்பேத்தி விட்டாலும்.. கடைசியா.. "அட ..மாவு நல்லா சாப்ட்டா இருக்கே டா"ங்கற அம்மாவோட பாராட்டுக்காகவே செய்வேன்.அப்பக்கூட எப்படி பாராட்டரதுன்னு தெரியாம "இருக்காதா பின்ன..அவன்தான் இஞ்சினியராச்சே"-ன்னு அப்பா காலை வாருவார்.மக்கள்ஸ் நீங்க சொல்லுங்க..இஞ்சினியருக்கும் பூரிமாவுக்கும் என்ன சம்பந்தம்.என்னவோ நா அதுக்குத்தான் படிக்கிற மாதிரி..இதுக்கு அவர் பாராட்டாமலேயே இருக்கலாமில்ல..

                       தம்பிக்கு மட்டும் நாங்க செய்யரதையெல்லாம் டேஸ்ட் பண்ணி டெஸ்ட் செய்யர வேலை..சும்மாவா வீட்டு கடைக்குட்டியாச்சே.. எனக்கு பொறாமையா இருக்கும்.

                       பலகாரம் ரெடியானதும்.. அதை பத்தரமா எங்கையில மாட்டாம வைச்சிடுவாங்க.(.ஆனாக்கா தம்பி கையில மட்டும் எப்படியோ ஒன்னு ரெண்டு வந்துடும்)..

                    எல்லார் வீட்டுலயும் புது டிரஸ் கெடச்ச சந்தோஷத்துல இன்னும் ஒரு மாசத்துக்கு "பலகாரம் டெஸ்டிங் மிஷினா "(பலியாடுன்னும் சொல்லலாம்)மாறப்போரது தெரியாம கல்யாணமான அண்ணன்கள்..மனைவிக்கு விழுந்து விழுந்து ஹெல்ப் பண்ணுவாய்ங்க..கடைசியா செஞ்சி ஒரு வருஷம் ஆனதால.. மறந்து போன பலகார வகையெல்லாம்..பழைய சமையல் குறிப்புல தேடுவாய்ங்க..அரைக்கொறையா புரியும் போதே.. பக்கத்து வீட்டுக்கு செய்முறை விளக்கம் வேற...

                     முந்தைய நாள் நைட்டே.. அக்கம் பக்கத்து பசங்களுக்கு பட்டாசு கொடுத்து வெடிக்கச்சொல்லி வேடிக்கை பாப்போம்.. நாங்க பெரிய பசங்களாயிடோமில்ல. எங்க ரேஞ்சிக்கி ..இடை இடையே குறைந்த பட்சம் "யானை வெடி","அணு குண்டு " ரேஞ்சிக்கு உள்ளவற்றை (நம்ம ஏரியா ஃபிகர்ஸ் வரும்போது மாத்திரம்..) நாங்க பத்த வைச்சிடுவோம்..வர்ரவங்க.. வழியிலேயே ,கண்ணையும்,கையால காதையும் பொத்திக்கிட்டு நின்னே ஆவனுமில்ல..ஆனாலும் ரொம்ப நல்லவுங்க,கோவமே பட மாட்டாய்ங்க.. சிரிச்சுக்கிட்டே.. போவாங்க.. (வாழ்க எங்க ஊர் பொண்ணுங்க..)

                          ஆனா ஒரு தடவ பக்கத்து பிளாட்டு சுமித்தா "டேய் நானும் வெடிக்கிறேண்டா"ன்னு எங்கிட்ட இருந்து புடுங்கி "யானை வெடி"யை பயப்படாம அசால்ட்டா வெடிச்சப்போ..எங்களோட உதாரெல்லாம் பிசுபிசுத்துப் போச்சில்ல...அதுக்கப்பறம் "யானை வெடி"யெல்லாம் வெடிக்க என் கவுரவம் இடந்தரலை..அத விட பெரிய வெடி வந்தாக்கா வெடிச்சிக்கலாமுன்னு விட்டுட்டேன்..

                       தீபாவளி காலையிலேயே... பட்டாசு சத்தமெல்லாம்..கேக்க ஆரம்பிச்சாலும்.. விழித்தும் விழிக்காமலும் ..குளுருல இழுத்துப்போத்திக்கின்னு தூங்கரது எனக்கு ரொம்பப் புடிக்கும்.அரை தூக்கத்துல எழுப்பி உஷாராவதுக்கு முன்னாடியே தலையில அரைப்படி எண்ணையை தேச்சி விட்டுடுவாங்க..அம்மா.".நல்ல நாளும் அதுவுமா இப்பிடி தூங்கிக்கிட்டிருந்தா.. வர்ரவ என்னத்தான கேப்பா.. புள்ளைய இப்படி வளத்திருக்கியேன்னு"ன்னு வசனம் வேற..அப்பா பங்குக்கு ஒடம்பு முழுசா எண்ணையாலே குளிப்பாட்டி விடுவார்.(அவரோட அப்பா தாத்தாவெல்லாம் தீபாவளிக்கு அவர அப்பிடித்தான் கொடுமை படுத்துனாங்களாம்.)அப்பிடியே அரை மணி நேரம் அசையாம ,வேற எந்த பொருள் மேலயும் எண்ணை பிசுக்கு ஒட்டிக்காம பாத்துக்கனுமாம்.என்ன கொடுமை சார் இது?..

                     தம்பி உஷாருல்ல.. எண்ணை வாசனை..வந்ததும் எத்தனை முயர்ச்சி செஞ்சாலும் பெட்ஷீட்டை விட மாட்டான்..இழுத்துப் போத்திக்கின்னு குப்புற படுத்து தப்பிச்சிக்குவான்.."நா தெனமும் மாதிரி ஷாம்பு போட்டு குளிச்சிக்கிறேன்.என்னிய விட்டுடுங்க..பிளிஸ்ன்னு கெஞ்சுவான்".கொஞ்சம் போராடிப் பாத்துட்டு அம்மாவும் பர்மிஷன் கிராண்டட்.

                   நா அசடு (எண்ணை) வழிய ஒக்காந்திருக்கும் போதே.. தம்பி ஹாயா குளிச்சிட்டு கையில முறுக்கோட எதிருல ஒக்காந்துடுவான்.

               சரி விட்ரா கைப்புள்ளன்னு போயி குளிச்சிட்டு..வாசனையா..(சும்மாவா எனக்கு ரெண்டு நாளைக்கி ஒரு சோப்பு வாங்கனுமில்ல..)வந்தாக்கா..புது டிரஸ் காலருல அம்மா மஞ்சள் பொட்டு வைச்சிருப்பாங்க..அது வேற வெளிய நல்லா தெரியும்.(தீபாவளி துணிக்கு அப்பிடித்தேன் செய்யனுமின்னு அவுங்க பாட்டி சொன்னாங்களாம்).(பொடவையில மாத்திரம் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு ரொம்ப சின்னதா புள்ளி எப்படி அம்மாவுக்கு வைக்க முடிஞ்சிதுன்னு இன்னும் எனக்கு தெரியலீங்க..)

             இதுக்குத்தான் நான் எப்பவும் டபுள்சைடு கலர் சட்டைய தீபாவளிக்கு தைக்கச் சொல்லுறதும், ராத்திரியே மறக்காம சாதாரண டிசைன் கலர மேல் நோக்கி மடிச்சி வைக்கிறதும்.

பசங்களுக்கு போனடிச்சி பாத்தா.. அவனவன் போத்திக்கிட்டு தூங்கரானுவோ.. என்னடான்னு கேட்டாக்கா.. மாமு..பத்துமணிக்குத்தான் சிம்ரன் பேட்டி போடரானுவோ.(அப்ப சிம்ரன் தான் ரன்னிங்கில பர்ஸ்ட்). அப்ப எழுந்தா போதாது.?.நாமில்லாம் பெரியவங்களாயிட்டோம் மாமுங்கராய்ங்க..(எங்க வீட்டுல மட்டும் இன்னும் என்னிய சின்னப்புள்ளையாவே நெனக்கிற்றாய்ங்க..).

               காலையிலேயே.. பண்ட மாற்றுமுறை அமலுக்கு வந்துடுச்சி...மொத ஆளா இனிப்போட வந்த "மேக்கப்பு " மகேந்திரன்.. தீபாவளி வாழ்த்துக்கள்டா. இன்னு சொல்லி இனிப்பை நீட்ட நானும்.."ஆஹா.. பத்து மணிக்கு எழுந்திரிக்கிறவங்க மத்தில எனக்கு இப்பிடி ஒரு சுறு சுறுப்பான ஃபிரண்டான்னுட்டு "ஆவலா ஒரே ஒரு லட்டை தெரியாம தொட்டுப்புட்டேன்(பின்ன எவ்வளவு நேரந்தேன் தம்பி திங்கரத பாத்துக்கின்னு இருக்கிறது?)

                 அவ்வளவுதான்..ஓசில குடுத்தாக்கா.. அலையிரான் பாரு...இன்னு திட்ட ஆரம்பிச்சிட்டான்?.. என்னன்னு கேட்டாக்கா?."ஒனக்கு இனிப்பு குடுக்கத்தான் இவ்வளவு காலையில வந்தேன் நெனச்சியா?...எங்க வீட்டுல சண்டை போட்டு காஸ்லியா டிரஸ் வாங்கி போட்டுகின்னு வந்தாக்கா.. அதப்பத்தி பாராட்டி சொல்லாம நீயெல்லாம் ஒரு ஃபிரண்டாடாங்கரான்.. [அப்பறமா கேட்டாக்கா.. மத்த பசங்க எல்லாம் அரைதூக்கத்துலயே பையனோட மனசு கஷ்ட்டப்படக்கூடாதுன்னு (லட்டு திங்கன்னு எனக்கு தெரியுமில்ல..)ரொம்ப பாராட்டி வைச்சாங்களாம்.பொழைக்கத் தெரிஞ்ச பசங்க..].

"பொய் சொன்னாத்தேன் இங்க போஜனமே"ன்னு வாய்க்கு வந்த ரெண்டு பொய்யை சொல்லிட்டு ஒரு லட்டை எடுத்துக்கினேன்.. என்னோட பொய்யில திருப்தியடைஞ்ச அவனே இன்னொரு லட்டை எடுத்து தந்தது வேற விசயம்..


அம்மா மத்தவங்களுக்கு திருப்பித்தர இனிப்புகள பங்கு பிரிச்சாங்க... அந்த வீட்டு கடைக்குட்டிக்கு அதிரசம்முன்னா ரொம்ப புடிக்கும்'ரெண்டு சேத்தே வைக்கலாம்.. மூனாவது வீட்டுக்கு. அதிகமா வேணாம்,அவுங்க மட்டும் சிக்கனமா.. கொஞ்சோண்டு கொடுத்திருக்காங்கல்ல..என்று ஒரே டிஸ்கஸன்..
இதுல யாரனாக்கா கடையில வாங்க்கின இனிப்புகள கொடுத்திருந்தாக்கா.. அத பில்டர் பண்ணி.. வேர யாருக்காவது அனுப்ப இன்னொரு முயற்சியும் நடந்துக்கினு இருந்துது.( அப்படி நாங்க அனுப்பினது ,ஒரே நாளுக்குள்ல வேற ஒருத்தங்க வழியா எங்களுக்கே.. திருப்பி வந்துச்சிங்கரது வேற விஷயம்).

இந்த இனிபெல்லாம் எடுத்துக்கிட்டு சித்தப்பா வீட்டுல குடுத்துட்டு வாயேண்டா..ன்னு சொன்ன அம்மா.
பசங்களும் நானும் பரிதாபமா முழிக்கிறதப் பாத்து.. சரிசரி நா பாத்துக்கிறேன்..பசங்கள எல்லாம் பாத்து பேச போவிங்க .. போயிட்டு சீக்கிரமா வாங்கடாண்ணு..காப்பாத்தினாங்க..
இனிப்பு டிரான்போடேசன் வேல அப்பாவோட டிப்பார்ட்மெண்டாயிடும்..

எனக்கு ரொம்பப் புடிச்சது தீபாவளி நைட்டுதான்.. தீபாவளி ,தீப"ஒளி"யா தெரியரது நைட்டுதான்.பகல்ல என்னதா கொண்டாடினாலும் அந்த் டம் டும் சத்தமும் பொகையும் கொடுக்காத இன்பத்த இரவில தீப்பூக்கள சிதரடிச்சிக்கின்னு கண்ணுக்கு ஜெக ஜோதி(?)யா தெரியும் இரவு பட்டாசுக்களும் ,வாணவேடிக்கை வகைகளும் என்னை ரொம்ப கவர்ந்தது உண்மை..

ஆனா.. நா துபாய்க்கு போனதுல இருந்து .இன்னிக்கி வரைக்கும் தீபாவளிக்கு வீட்டுல இருக்கரதில்ல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..தம்பிக்கு ஆபிஸ் லீவுங்கரதால.. ஊருல நா இல்லாத கொறைய தீத்து வைக்கிறான்..

என்றாலும் நண்பர்கள் நம்மோட கவலைய மறக்கடிச்சிடராய்ங்க..

எல்லாருக்கும் என்னோட இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..


அப்பரம் தீபாவளிய பாதுகாப்பா கொண்டாடணுமில்ல.. இல்லேனாக்கா அது தீபா"வலி" ஆயிடும்..

சின்னப்பசங்க பட்டாசு வெடுக்கும் போது,பெரியவங்க கண்காணிப்புல பாத்துக்குங்க..
பட்டாசு பாக்கெட் பக்கத்துலயே..பட்டாசு வெடிக்க வேண்டாம்.
வெடிக்க போவரதுக்கு முன்னாடி ஒரு பக்கெட் தண்ணி எடுத்து பக்கத்துலயே வைச்சிக்குங்க..
பட்டாசி வெடிக்கலீன்னாக்கா .. கிட்டப்போயி பாக்கவோ..கையால எடுக்கவோ வேண்டாம்..
அவசியப்பட்டா.. வெடிக்காத பட்டாசு மேல தண்ணி ஊத்திடுங்க..

இந்த சமயத்துல ரோட்டுல நடந்து போறப்ப "பட்டாசு எதனாக்கா இருக்கான்னு"ஜாக்கிரதையா கீழ பாத்து போங்க..

வீட்டுல வயசானவங்க/உடல் நலமில்லாதவங்க இருந்தாக்கா..வெளிச் சத்தம் அதிகமா கேக்காத ஒரு அறைய அவிங்களுக்கு ஏற்பாடு செஞ்சிக்குடுங்க..அது அவிங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

எல்லாரும் குடுக்கராய்ங்களேன்னு நெறய இனிப்பு சாப்பிடாதீய்ங்க..உடம்புக்கு நல்லதில்ல..(முக்கியமா மாமியார் வீட்டுக்கு போயிருக்கும், புது மாப்பிள்ளைகளுக்கு..ஹிஹி..)..

செரிமானத்துக்கு/தீக்காயங்களுக்கு உகர்ந்த மருந்து வாங்கி வச்சிக்கோங்க..

இரவு பட்டாசுக்களை (சங்கு சக்கரம்/பாம்பு மாத்திரை,மத்தாப்பூ) வீட்டுக்குள் பத்தவைக்காதிங்க...அந்த ரசாயனக் கலந்த புகை வீட்டுக்குள் அடர்த்தியா சுவாசிக்கிறது நல்லதில்லீங்க..

இதையெல்லாம் படிச்சி தீபாவளி முடியருத்துக்குள்ள....உங்களுக்கும்.., உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் நண்பனின் அன்பு கலந்த ,safe தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.. உங்கள் ரசிகன்.