Tuesday, November 6, 2007

தீபாவளியா?.....தீபா"வலி"யா?...


இனிய தீப"ஓளி" நல்வாழ்த்துக்கள்..






 
            ஹாய்..ஹாய்..ஹாய்... என்னோட எல்லா தோழர்களுக்கும் ,தோழிகளுக்கும்.. உங்கள் ரசிகனின் அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

              எல்லாரும் ஏற்கனவே..டிரஸ் எல்லாம் எடுத்திருப்பிங்க...நாங்கலாம் வீட்டுல இருக்கும்போது.. அம்மாவுக்கு உதவியா இன்னேரம் எல்லாருக்குபோர்க்களத்துல (சமையல்கட்டுத்தானுங்க..)குதிச்சிருப்போமில்ல...
அதிசயமா..அப்பா முறுக்கு பிழிய..நான் பூரி மாவு பிசைய (குத்துச்சண்டைப்போட).. (அது என்னவோ என்னிய எப்பவும் மாவு பிசைய விட்டுடராய்ங்க..) அதுல வேற அப்பா.."நீதான் கராத்தேவுல பழைய ஓடு ஒடைக்கிறவனாச்சே, உன் வீரத்த இதுல காட்டு பாப்போம் " ன்னு உசுப்பேத்தி விட்டாலும்.. கடைசியா.. "அட ..மாவு நல்லா சாப்ட்டா இருக்கே டா"ங்கற அம்மாவோட பாராட்டுக்காகவே செய்வேன்.அப்பக்கூட எப்படி பாராட்டரதுன்னு தெரியாம "இருக்காதா பின்ன..அவன்தான் இஞ்சினியராச்சே"-ன்னு அப்பா காலை வாருவார்.மக்கள்ஸ் நீங்க சொல்லுங்க..இஞ்சினியருக்கும் பூரிமாவுக்கும் என்ன சம்பந்தம்.என்னவோ நா அதுக்குத்தான் படிக்கிற மாதிரி..இதுக்கு அவர் பாராட்டாமலேயே இருக்கலாமில்ல..

                       தம்பிக்கு மட்டும் நாங்க செய்யரதையெல்லாம் டேஸ்ட் பண்ணி டெஸ்ட் செய்யர வேலை..சும்மாவா வீட்டு கடைக்குட்டியாச்சே.. எனக்கு பொறாமையா இருக்கும்.

                       பலகாரம் ரெடியானதும்.. அதை பத்தரமா எங்கையில மாட்டாம வைச்சிடுவாங்க.(.ஆனாக்கா தம்பி கையில மட்டும் எப்படியோ ஒன்னு ரெண்டு வந்துடும்)..

                    எல்லார் வீட்டுலயும் புது டிரஸ் கெடச்ச சந்தோஷத்துல இன்னும் ஒரு மாசத்துக்கு "பலகாரம் டெஸ்டிங் மிஷினா "(பலியாடுன்னும் சொல்லலாம்)மாறப்போரது தெரியாம கல்யாணமான அண்ணன்கள்..மனைவிக்கு விழுந்து விழுந்து ஹெல்ப் பண்ணுவாய்ங்க..கடைசியா செஞ்சி ஒரு வருஷம் ஆனதால.. மறந்து போன பலகார வகையெல்லாம்..பழைய சமையல் குறிப்புல தேடுவாய்ங்க..அரைக்கொறையா புரியும் போதே.. பக்கத்து வீட்டுக்கு செய்முறை விளக்கம் வேற...

                     முந்தைய நாள் நைட்டே.. அக்கம் பக்கத்து பசங்களுக்கு பட்டாசு கொடுத்து வெடிக்கச்சொல்லி வேடிக்கை பாப்போம்.. நாங்க பெரிய பசங்களாயிடோமில்ல. எங்க ரேஞ்சிக்கி ..இடை இடையே குறைந்த பட்சம் "யானை வெடி","அணு குண்டு " ரேஞ்சிக்கு உள்ளவற்றை (நம்ம ஏரியா ஃபிகர்ஸ் வரும்போது மாத்திரம்..) நாங்க பத்த வைச்சிடுவோம்..வர்ரவங்க.. வழியிலேயே ,கண்ணையும்,கையால காதையும் பொத்திக்கிட்டு நின்னே ஆவனுமில்ல..ஆனாலும் ரொம்ப நல்லவுங்க,கோவமே பட மாட்டாய்ங்க.. சிரிச்சுக்கிட்டே.. போவாங்க.. (வாழ்க எங்க ஊர் பொண்ணுங்க..)

                          ஆனா ஒரு தடவ பக்கத்து பிளாட்டு சுமித்தா "டேய் நானும் வெடிக்கிறேண்டா"ன்னு எங்கிட்ட இருந்து புடுங்கி "யானை வெடி"யை பயப்படாம அசால்ட்டா வெடிச்சப்போ..எங்களோட உதாரெல்லாம் பிசுபிசுத்துப் போச்சில்ல...அதுக்கப்பறம் "யானை வெடி"யெல்லாம் வெடிக்க என் கவுரவம் இடந்தரலை..அத விட பெரிய வெடி வந்தாக்கா வெடிச்சிக்கலாமுன்னு விட்டுட்டேன்..

                       தீபாவளி காலையிலேயே... பட்டாசு சத்தமெல்லாம்..கேக்க ஆரம்பிச்சாலும்.. விழித்தும் விழிக்காமலும் ..குளுருல இழுத்துப்போத்திக்கின்னு தூங்கரது எனக்கு ரொம்பப் புடிக்கும்.அரை தூக்கத்துல எழுப்பி உஷாராவதுக்கு முன்னாடியே தலையில அரைப்படி எண்ணையை தேச்சி விட்டுடுவாங்க..அம்மா.".நல்ல நாளும் அதுவுமா இப்பிடி தூங்கிக்கிட்டிருந்தா.. வர்ரவ என்னத்தான கேப்பா.. புள்ளைய இப்படி வளத்திருக்கியேன்னு"ன்னு வசனம் வேற..அப்பா பங்குக்கு ஒடம்பு முழுசா எண்ணையாலே குளிப்பாட்டி விடுவார்.(அவரோட அப்பா தாத்தாவெல்லாம் தீபாவளிக்கு அவர அப்பிடித்தான் கொடுமை படுத்துனாங்களாம்.)அப்பிடியே அரை மணி நேரம் அசையாம ,வேற எந்த பொருள் மேலயும் எண்ணை பிசுக்கு ஒட்டிக்காம பாத்துக்கனுமாம்.என்ன கொடுமை சார் இது?..

                     தம்பி உஷாருல்ல.. எண்ணை வாசனை..வந்ததும் எத்தனை முயர்ச்சி செஞ்சாலும் பெட்ஷீட்டை விட மாட்டான்..இழுத்துப் போத்திக்கின்னு குப்புற படுத்து தப்பிச்சிக்குவான்.."நா தெனமும் மாதிரி ஷாம்பு போட்டு குளிச்சிக்கிறேன்.என்னிய விட்டுடுங்க..பிளிஸ்ன்னு கெஞ்சுவான்".கொஞ்சம் போராடிப் பாத்துட்டு அம்மாவும் பர்மிஷன் கிராண்டட்.

                   நா அசடு (எண்ணை) வழிய ஒக்காந்திருக்கும் போதே.. தம்பி ஹாயா குளிச்சிட்டு கையில முறுக்கோட எதிருல ஒக்காந்துடுவான்.

               சரி விட்ரா கைப்புள்ளன்னு போயி குளிச்சிட்டு..வாசனையா..(சும்மாவா எனக்கு ரெண்டு நாளைக்கி ஒரு சோப்பு வாங்கனுமில்ல..)வந்தாக்கா..புது டிரஸ் காலருல அம்மா மஞ்சள் பொட்டு வைச்சிருப்பாங்க..அது வேற வெளிய நல்லா தெரியும்.(தீபாவளி துணிக்கு அப்பிடித்தேன் செய்யனுமின்னு அவுங்க பாட்டி சொன்னாங்களாம்).(பொடவையில மாத்திரம் கண்ணுக்கே தெரியாத அளவுக்கு ரொம்ப சின்னதா புள்ளி எப்படி அம்மாவுக்கு வைக்க முடிஞ்சிதுன்னு இன்னும் எனக்கு தெரியலீங்க..)

             இதுக்குத்தான் நான் எப்பவும் டபுள்சைடு கலர் சட்டைய தீபாவளிக்கு தைக்கச் சொல்லுறதும், ராத்திரியே மறக்காம சாதாரண டிசைன் கலர மேல் நோக்கி மடிச்சி வைக்கிறதும்.

பசங்களுக்கு போனடிச்சி பாத்தா.. அவனவன் போத்திக்கிட்டு தூங்கரானுவோ.. என்னடான்னு கேட்டாக்கா.. மாமு..பத்துமணிக்குத்தான் சிம்ரன் பேட்டி போடரானுவோ.(அப்ப சிம்ரன் தான் ரன்னிங்கில பர்ஸ்ட்). அப்ப எழுந்தா போதாது.?.நாமில்லாம் பெரியவங்களாயிட்டோம் மாமுங்கராய்ங்க..(எங்க வீட்டுல மட்டும் இன்னும் என்னிய சின்னப்புள்ளையாவே நெனக்கிற்றாய்ங்க..).

               காலையிலேயே.. பண்ட மாற்றுமுறை அமலுக்கு வந்துடுச்சி...மொத ஆளா இனிப்போட வந்த "மேக்கப்பு " மகேந்திரன்.. தீபாவளி வாழ்த்துக்கள்டா. இன்னு சொல்லி இனிப்பை நீட்ட நானும்.."ஆஹா.. பத்து மணிக்கு எழுந்திரிக்கிறவங்க மத்தில எனக்கு இப்பிடி ஒரு சுறு சுறுப்பான ஃபிரண்டான்னுட்டு "ஆவலா ஒரே ஒரு லட்டை தெரியாம தொட்டுப்புட்டேன்(பின்ன எவ்வளவு நேரந்தேன் தம்பி திங்கரத பாத்துக்கின்னு இருக்கிறது?)

                 அவ்வளவுதான்..ஓசில குடுத்தாக்கா.. அலையிரான் பாரு...இன்னு திட்ட ஆரம்பிச்சிட்டான்?.. என்னன்னு கேட்டாக்கா?."ஒனக்கு இனிப்பு குடுக்கத்தான் இவ்வளவு காலையில வந்தேன் நெனச்சியா?...எங்க வீட்டுல சண்டை போட்டு காஸ்லியா டிரஸ் வாங்கி போட்டுகின்னு வந்தாக்கா.. அதப்பத்தி பாராட்டி சொல்லாம நீயெல்லாம் ஒரு ஃபிரண்டாடாங்கரான்.. [அப்பறமா கேட்டாக்கா.. மத்த பசங்க எல்லாம் அரைதூக்கத்துலயே பையனோட மனசு கஷ்ட்டப்படக்கூடாதுன்னு (லட்டு திங்கன்னு எனக்கு தெரியுமில்ல..)ரொம்ப பாராட்டி வைச்சாங்களாம்.பொழைக்கத் தெரிஞ்ச பசங்க..].

"பொய் சொன்னாத்தேன் இங்க போஜனமே"ன்னு வாய்க்கு வந்த ரெண்டு பொய்யை சொல்லிட்டு ஒரு லட்டை எடுத்துக்கினேன்.. என்னோட பொய்யில திருப்தியடைஞ்ச அவனே இன்னொரு லட்டை எடுத்து தந்தது வேற விசயம்..


அம்மா மத்தவங்களுக்கு திருப்பித்தர இனிப்புகள பங்கு பிரிச்சாங்க... அந்த வீட்டு கடைக்குட்டிக்கு அதிரசம்முன்னா ரொம்ப புடிக்கும்'ரெண்டு சேத்தே வைக்கலாம்.. மூனாவது வீட்டுக்கு. அதிகமா வேணாம்,அவுங்க மட்டும் சிக்கனமா.. கொஞ்சோண்டு கொடுத்திருக்காங்கல்ல..என்று ஒரே டிஸ்கஸன்..
இதுல யாரனாக்கா கடையில வாங்க்கின இனிப்புகள கொடுத்திருந்தாக்கா.. அத பில்டர் பண்ணி.. வேர யாருக்காவது அனுப்ப இன்னொரு முயற்சியும் நடந்துக்கினு இருந்துது.( அப்படி நாங்க அனுப்பினது ,ஒரே நாளுக்குள்ல வேற ஒருத்தங்க வழியா எங்களுக்கே.. திருப்பி வந்துச்சிங்கரது வேற விஷயம்).

இந்த இனிபெல்லாம் எடுத்துக்கிட்டு சித்தப்பா வீட்டுல குடுத்துட்டு வாயேண்டா..ன்னு சொன்ன அம்மா.
பசங்களும் நானும் பரிதாபமா முழிக்கிறதப் பாத்து.. சரிசரி நா பாத்துக்கிறேன்..பசங்கள எல்லாம் பாத்து பேச போவிங்க .. போயிட்டு சீக்கிரமா வாங்கடாண்ணு..காப்பாத்தினாங்க..
இனிப்பு டிரான்போடேசன் வேல அப்பாவோட டிப்பார்ட்மெண்டாயிடும்..

எனக்கு ரொம்பப் புடிச்சது தீபாவளி நைட்டுதான்.. தீபாவளி ,தீப"ஒளி"யா தெரியரது நைட்டுதான்.பகல்ல என்னதா கொண்டாடினாலும் அந்த் டம் டும் சத்தமும் பொகையும் கொடுக்காத இன்பத்த இரவில தீப்பூக்கள சிதரடிச்சிக்கின்னு கண்ணுக்கு ஜெக ஜோதி(?)யா தெரியும் இரவு பட்டாசுக்களும் ,வாணவேடிக்கை வகைகளும் என்னை ரொம்ப கவர்ந்தது உண்மை..

ஆனா.. நா துபாய்க்கு போனதுல இருந்து .இன்னிக்கி வரைக்கும் தீபாவளிக்கு வீட்டுல இருக்கரதில்ல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..தம்பிக்கு ஆபிஸ் லீவுங்கரதால.. ஊருல நா இல்லாத கொறைய தீத்து வைக்கிறான்..

என்றாலும் நண்பர்கள் நம்மோட கவலைய மறக்கடிச்சிடராய்ங்க..

எல்லாருக்கும் என்னோட இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..


அப்பரம் தீபாவளிய பாதுகாப்பா கொண்டாடணுமில்ல.. இல்லேனாக்கா அது தீபா"வலி" ஆயிடும்..

சின்னப்பசங்க பட்டாசு வெடுக்கும் போது,பெரியவங்க கண்காணிப்புல பாத்துக்குங்க..
பட்டாசு பாக்கெட் பக்கத்துலயே..பட்டாசு வெடிக்க வேண்டாம்.
வெடிக்க போவரதுக்கு முன்னாடி ஒரு பக்கெட் தண்ணி எடுத்து பக்கத்துலயே வைச்சிக்குங்க..
பட்டாசி வெடிக்கலீன்னாக்கா .. கிட்டப்போயி பாக்கவோ..கையால எடுக்கவோ வேண்டாம்..
அவசியப்பட்டா.. வெடிக்காத பட்டாசு மேல தண்ணி ஊத்திடுங்க..

இந்த சமயத்துல ரோட்டுல நடந்து போறப்ப "பட்டாசு எதனாக்கா இருக்கான்னு"ஜாக்கிரதையா கீழ பாத்து போங்க..

வீட்டுல வயசானவங்க/உடல் நலமில்லாதவங்க இருந்தாக்கா..வெளிச் சத்தம் அதிகமா கேக்காத ஒரு அறைய அவிங்களுக்கு ஏற்பாடு செஞ்சிக்குடுங்க..அது அவிங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

எல்லாரும் குடுக்கராய்ங்களேன்னு நெறய இனிப்பு சாப்பிடாதீய்ங்க..உடம்புக்கு நல்லதில்ல..(முக்கியமா மாமியார் வீட்டுக்கு போயிருக்கும், புது மாப்பிள்ளைகளுக்கு..ஹிஹி..)..

செரிமானத்துக்கு/தீக்காயங்களுக்கு உகர்ந்த மருந்து வாங்கி வச்சிக்கோங்க..

இரவு பட்டாசுக்களை (சங்கு சக்கரம்/பாம்பு மாத்திரை,மத்தாப்பூ) வீட்டுக்குள் பத்தவைக்காதிங்க...அந்த ரசாயனக் கலந்த புகை வீட்டுக்குள் அடர்த்தியா சுவாசிக்கிறது நல்லதில்லீங்க..

இதையெல்லாம் படிச்சி தீபாவளி முடியருத்துக்குள்ள....உங்களுக்கும்.., உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் நண்பனின் அன்பு கலந்த ,safe தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.. உங்கள் ரசிகன்.




46 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

ரசிகன், இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். நீ தீபாவளி கொண்டாடியதை அருமையாக, பதிவாக இட்டிருந்தாய். நகைச்சுவை தூக்கலாகவே இருந்தது. எல்லோர் வீட்டிலும் வில்லன் தம்பி தான். ஆனால் அவன் தான் உதவுதலிலும் மன்னன்.

வாழ்த்து அட்டைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளனவே. வாழ்த்து சொல்லும் போது சரியாகச் சொல்ல வேண்டாமா ?? திருத்த வேண்டும் உடனடியாக.

said...

வாங்க சீனா சார் வாங்க.. நன்றிகளுடன் ,தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

// ஆனால் அவன் தான் உதவுதலிலும் மன்னன்.//
உண்மையிலேயே பல அவசியமான சந்தர்ப்பங்களில் தம்பியின் முழுஆதரவு எனக்கு ரொம்ப சந்தோஷத்த வாரி கொடுத்திருக்கு..

அது..பாருங்க சார்.. அந்த வாழ்த்து அட்டையபோடும் போதே கவனிச்சேன்.."தீபாவலினி = தீப"வலி"இல்லாத (பாதுகாப்பான) ன்னு" நான் சொல்ல வந்த மீனிங்க எடுத்துகாட்டுற மாதிரி தற்செயலா இருந்துச்சா.. அத்தான் அப்படியே..விட்டுட்டேனுங்க.. நாஞ்சொல்லறது சரிதானுங்களா சார்? ..

said...

/.."தீபாவலினி = தீப"வலி"இல்லாத (பாதுகாப்பான) ன்னு" நான் சொல்ல வந்த மீனிங்க எடுத்துகாட்டுற மாதிரி தற்செயலா இருந்துச்சா.. அத்தான் அப்படியே..விட்டுட்டேனுங்க.. நாஞ்சொல்லறது சரிதானுங்களா சார்? ../

குப்புற விழுந்தாலும் மீசையிலே ( இருக்கா அல்லது எடுத்தாச்சா) மண்ணு ஒட்டலெயாக்கும்

said...

சீனா சார் ரசிகன் மாமா குப்புற விழுந்தாலும் பூகம்பம் வருதான்னு செக் பன்றேன் னு சொல்ற பலே ஆளு.

தீபாவளி வாழ்த்துக்கள் ரசிகன் மாமா

said...

நிலாக் குட்டி - ரசிகனே சரியாப் புரிஞ்சு வைச்சிருக்கீயே - நன்று - இனிய தீபாவள் வாழ்த்துகள் நிலா, நந்து, சசி

said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

said...

அட அட அட இப்படி பெரிய தீபாவளியா கலக்கிறீங்கள்.

said...

// ரசிகன் மாமா குப்புற விழுந்தாலும் பூகம்பம் வருதான்னு செக் பன்றேன் னு சொல்ற பலே ஆளு.//
ஹா.. ஹா...நல்ல ஜடியா அடுத்த தடவ விழுந்தா அப்பிடியே செஞ்சிடரேன்..நிலா செல்லம்.
நிலா செல்லத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
அப்பிடியே.. என்னோட தீபாவளி வாழ்த்த.. நந்து மாமாவுக்கும்,சசி அக்காவுக்கும் சொல்லிடுடா குட்டி..

said...

உங்க தீபாவளி அனுபவங்கள் சூப்பர் :)//
ரொம்ப நன்றிங்க வேதா..
// இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே :)
தோழிக்கும்,குடும்பத்திற்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

said...

//நல்லாதேங் சமாளிக்கறீங்க :D//
எல்லாம் நம்ம கீதா அக்கா டிரெய்னிங்காச்சுங்களே..ஹிஹி...

said...

// குப்புற விழுந்தாலும் மீசையிலே ( இருக்கா அல்லது எடுத்தாச்சா) மண்ணு ஒட்டலெயாக்கும//

ஹா..ஹா... சீனா சார் மாட்டிக்கிட்டீங்களா?..மாட்டிக்கிட்டீங்களா? நானாவது எப்பிடியோ சொல்லி சமாளிச்சேன் ..நீங்க..// இனிய தீபாவள் வாழ்த்துகள்// ன்னு நம்ம நிலாகுட்டிக்கு தப்பு தப்பா வாழ்த்து சொல்லியிருக்கீங்களே..எப்புடி சமாளிக்கப் போறீங்க..ஹிஹி...
[ஜய்ய்ய்யா.. ஜாலி..சீனா சார் கூட என்னிய மாதிரியே தப்புத்தப்பா தான எழுதராருன்னு எங்க டீச்சர் கிட்ட சொல்லி த்ப்பிச்சிக்குவேனே..ஹிஹி..]

said...

அன்பு ரசிகனுக்கு இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.1

Anonymous said...

WISH YOU HAPPY DEPAWALI RASAIGAN

Anonymous said...

Superb sridhar. nallaa erukuthu. happy dipawali.

Anonymous said...

rasigan, whish you special happy depaavali kal.

said...

தலிவா.. கலக்கிட்டீங்களே.
நன்றி.
உங்களுக்கு எங்கள் பொன்னான தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

//சின்னப்பசங்க பட்டாசு வெடுக்கும் போது,பெரியவங்க கண்காணிப்புல பாத்துக்குங்க..
பட்டாசு பாக்கெட் பக்கத்துலயே..பட்டாசு வெடிக்க வேண்டாம்.
வெடிக்க போவரதுக்கு முன்னாடி ஒரு பக்கெட் தண்ணி எடுத்து பக்கத்துலயே வைச்சிக்குங்க..
பட்டாசி வெடிக்கலீன்னாக்கா .. கிட்டப்போயி பாக்கவோ..கையால எடுக்கவோ வேண்டாம்..
அவசியப்பட்டா.. வெடிக்காத பட்டாசு மேல தண்ணி ஊத்திடுங்க..

இந்த சமயத்துல ரோட்டுல நடந்து போறப்ப "பட்டாசு எதனாக்கா இருக்கான்னு"ஜாக்கிரதையா கீழ பாத்து போங்க..

வீட்டுல வயசானவங்க/உடல் நலமில்லாதவங்க இருந்தாக்கா..வெளிச் சத்தம் அதிகமா கேக்காத ஒரு அறைய அவிங்களுக்கு ஏற்பாடு செஞ்சிக்குடுங்க..அது அவிங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

எல்லாரும் குடுக்கராய்ங்களேன்னு நெறய இனிப்பு சாப்பிடாதீய்ங்க..உடம்புக்கு நல்லதில்ல..(முக்கியமா மாமியார் வீட்டுக்கு போயிருக்கும், புது மாப்பிள்ளைகளுக்கு..ஹிஹி..)..

செரிமானத்துக்கு/தீக்காயங்களுக்கு உகர்ந்த மருந்து வாங்கி வச்சிக்கோங்க..

இரவு பட்டாசுக்களை (சங்கு சக்கரம்/பாம்பு மாத்திரை,மத்தாப்பூ) வீட்டுக்குள் பத்தவைக்காதிங்க...அந்த ரசாயனக் கலந்த புகை வீட்டுக்குள் அடர்த்தியா சுவாசிக்கிறது நல்லதில்லீங்க..//

எல்லா அட்வைஸிம் சூப்பர்.கிரேட்.

said...

வாங்க வாங்க ..பாரதிய நவீன இளவரசன்.
மொத மொத வந்திருக்கீங்க.. (அதுவும் நம்ம கத்தருலயிருந்து)வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிகள்..

said...

// அட அட அட இப்படி பெரிய தீபாவளியா கலக்கிறீங்கள//
வாங்க நளாயினி அக்கா..வாங்க.. வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிகள்..

said...

// அன்பு ரசிகனுக்கு இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.1//

வாழ்த்துக்கு ரொம்ப நன்றிகள்.பிரித்தி... உங்களுக்கும் ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்..
ஆமா அது என்ன நல் வாழ்த்துக்கள் பக்கத்துல ஒரு "1"
தவறி வந்துச்சா?.இல்ல சிக்கனமா ஒரே ஒரு வாழ்த்துதானா?..ஹிஹி..

said...

வந்ததுக்கு வாழ்த்தனதுக்கும் ரொம்ப நன்றிகள்..ரமேஷ்..

said...

//rajash -doha said..//.ராஜேஷ் நீங்க சிங்கப்பூர் போயிட்டதா சொன்னாங்க..திரும்பி வந்துட்டீங்களா?..
உங்களுக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்.

said...

நன்றிகள்.. கவிதா..பாதுகாப்பா தீபாவளி கொண்டாடுங்க...ஹாப்பி தீபாவளி.

said...

// உங்களுக்கு எங்கள் பொன்னான தீபாவளி வாழ்த்துக்கள்//
வாங்க விஜய் வாங்க.. வாழ்த்துக்கு ரொம்ப நன்றிகள்..

said...

//தலிவா.. கலக்கிட்டீங்களே.//
ஆஹா .. எனக்கு ஒரு தொண்டர் கெடச்சியிருக்காரு..
[அப்படின்னாக்கா கீதா அக்காவுக்கு, "தொண்டருக்கு தொண்டரா"..ஹிஹி..]

said...

// எல்லா அட்வைஸிம் சூப்பர்.கிரேட்.//
நன்றிகள்.ஆமா பின்னூட்டத்துல ,இவ்வளவு நல்லா காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கீங்களே .நீங்களும் பதிவு போடலாமே..எதாவது சந்தேகம்/உதவி தேவைப்பட்டா எனக்கு எழுதுங்க..
அன்புடன் ரசிகன்.

said...

ரசிகன்,

நிலா கிட்டே போட்டுக் கொடுத்தாச்சா ? - இன்னூம் நிலா தவறுகள் கண்டு பிடிக்கற அளவுக்கு வரலே. இருப்பினும் பெரியவங்க தப்பு செஞ்சா பெருமால் செய்யுற மாதிரின்னு பெருந்தன்மையா விட்டுக் கொடுத்துடுவா.

இருப்பினும் தவறுக்கு வருந்துகிறேன். பணியில் ஆங்கிலம் - இங்கு தமிழ் தட்டச்சு - வேகம் - நேரமின்மை - எனப் பல காரணங்கள் - எழுத்துப் பிழைகளுக்கு.

ஹேய் சீரியஸ்ஸா எல்லாம் எடுத்துக்கலே - இதுக்குப் பதில் போட்டு கலாய்க்க வேண்டாம்

said...

நன்றி ரசிகன்...தீபாவளி வாழ்த்துக்கள்

said...

ரசிகன் ரொம்ப அருமையா இருந்துச்சு உங்க பதிவு, அப்படியே வீட்டில் இருப்பது போல் ஒரு பீளிங்ஸ் என்ன எனக்கு சண்டை போட தம்பி கிடையாது:)

said...

"என்னவோ நா அதுக்குத்தான் படிக்கிற மாதிரி..இதுக்கு அவர் பாராட்டாமலேயே இருக்கலாமில்ல.."

சப்பாத்தி மாவு என்னத்த அடிச்சாலும் தாங்கிக்கும் சிந்தாது சிதறாது, அதுபோல நீங்களும் இருந்து இருப்பீங்க அதனால இருக்கும்:)

said...

"தம்பிக்கு மட்டும் நாங்க செய்யரதையெல்லாம் டேஸ்ட் பண்ணி டெஸ்ட் செய்யர வேலை.."

டெஸ்டிங்இன் ஜினியரா ஆகி இருப்பாரே..:)

said...

"ரொம்ப நல்லவுங்க,கோவமே பட மாட்டாய்ங்க.. சிரிச்சுக்கிட்டே.. போவாங்க.. (வாழ்க எங்க ஊர் பொண்ணுங்க..)"

ரசிகன் உங்க வீட்டுக்கு பக்கத்தில் வீடு ஏதும் காலியாக இருந்தா சொல்லுங்க, தீபாவளி முடிஞ்சாலும் பராவாயில்லை ஊருக்கு போகும் பொழுது அவுங்க நடந்து வரும் பொழுது குறுக்க வெடி வெச்சு பார்கிறேன்:)

said...

அப்புறம் ரசிகன் உங்களுக்கு, உங்க தம்பிக்கு உங்க அப்பா அம்மாவுக்கு முக்கியமா அந்த பக்கத்து வீட்டு சுமித்தாவுக்கு ஸ்பெசல் தீபாவளி வாழ்த்துக்கள்

(அப்புறம் நானும் துபாயில்தான் இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க?)

said...

// ஹேய் சீரியஸ்ஸா எல்லாம் எடுத்துக்கலே - இதுக்குப் பதில் போட்டு கலாய்க்க வேண்டாம//
முயற்ச்சி பண்ணுகிறேன் ஜய்யா..ஹிஹி..
//பெரியவங்க தப்பு செஞ்சா பெருமால் செய்யுற மாதிரி//
சின்னவங்க தப்பு செஞ்சா சிவனே(?) தப்பு செய்யுற மாதிரிங்கராய்ங்களே உண்மையா சார்?[ ஹிஹி.. பழக்க தோஷம்..]

said...

// நன்றி ரசிகன்...தீபாவளி வாழ்த்துக்கள//
வாழ்த்துக்களுக்கும்,வருகைக்கும் நன்றிகள். மங்கை அக்கா..

said...

வாங்க.. குசும்பரே.வாங்க...
// ரசிகன் உங்க வீட்டுக்கு பக்கத்தில் வீடு ஏதும் காலியாக இருந்தா சொல்லுங்க,//
உங்களுக்கு இல்லாததா?..செஞ்சிடுவோம் ..
//தீபாவளி முடிஞ்சாலும் பராவாயில்லை ஊருக்கு போகும் பொழுது அவுங்க நடந்து வரும் பொழுது குறுக்க வெடி வெச்சு பார்கிறேன்:)//
என்னிய மாட்டிவிடாம இருந்தாக்கா.. சரிதானுங்ககோ..
// பக்கத்து வீட்டு சுமித்தாவுக்கு ஸ்பெசல் தீபாவளி வாழ்த்துக்கள்//
நிச்சயமா ஸ்பெசலா சொல்லிடறேன்..குசும்பரே..(ஆமா உங்க வீட்டுக்கு இது தெரியுமா?..ஹிஹி...)
// அப்படியே வீட்டில் இருப்பது போல் //
ரொம்ப நன்றிகள் மாம்ஸ்..

said...

// சப்பாத்தி மாவு என்னத்த அடிச்சாலும் தாங்கிக்கும் சிந்தாது சிதறாது, அதுபோல நீங்களும் இருந்து இருப்பீங்க //
நம்க்கும் வீட்டுல ரொம்ப அனுபவமோ?..ஹிஹி...
// டெஸ்டிங் இன்ஜினியரா ஆகி இருப்பாரே//
அடா அடா..அடா..என்னே உங்க சிந்தனை..ஒரு சின்ன மாற்றம்..கிட்டதட்ட" டெஸ்டிங் "பிரிவு மேனேஜரா இருக்கான்..

// அப்புறம் நானும் துபாயில்தான் இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க?//
ஆஹா..கொஞ்சம் லேட்டா தெரிஞ்சிக்கிட்டோமே..நான் துபாயில இருந்து கத்தருக்கு மாற்றலாகி மூணு வருஷமாயிடுச்சுங்க...ஆனா அடிக்கடி துபாய்க்கு வேலை விசயமா வர்ரதுண்டு..அடுத்து வர்ரதாயிருந்த நிச்சயமா உங்களையும்,நம்ம அபி அப்பாவையும் பாக்க முயற்சி செய்வேன்.உங்க வருகையும் வாழ்த்துக்களும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.. மீண்டும் வருக மாமே..

said...

உங்க வீட்டு தீபாவளி கொண்டாட்டத்தை அப்படியே நேர்த்தியா சொல்லியிருக்கிறீங்க, சூப்பர்!!

\\கடையில வாங்க்கின இனிப்புகள கொடுத்திருந்தாக்கா.. அத பில்டர் பண்ணி.. வேர யாருக்காவது அனுப்ப இன்னொரு முயற்சியும் நடந்துக்கினு இருந்துது.( அப்படி நாங்க அனுப்பினது ,ஒரே நாளுக்குள்ல வேற ஒருத்தங்க வழியா எங்களுக்கே.. திருப்பி வந்துச்சிங்கரது வேற விஷயம்).\\

ரசித்து சிரித்தேன் இந்த வரிகளை படிக்கும் போது.........பதிவு முழுவதுமே படிக்க சுவாரிஸியமா இருந்தது!

said...

வாங்க திவ்யா.. நல்வருகை..
தீபாவளி அன்னிக்கி மகிழ்ச்சிய எங்களோட பகிர்ந்துகிறதுக்கு ரொம்ப நன்றிங்க.....

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ரசிகன்.

உங்கள் தீபாவளி இனிதே முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

நா ஜெயசங்கர்

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

உங்கள ஒரு கேள்வி கேட்க இங்க வந்தேன். ஆனா பதிவு ரொஒஓஓஓஓஓஓஒம்ப பெருசா இருக்கறதால அப்பாளிக்கா போஸ்ட்ட படிக்கறேன் :)

ப.பா. சங்கத்துலயும் சரி. கவிதாயினி ப்ளாக்லயும் சரி.. //ஜி3 சங்கத்துக்கும் எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

அது என்ன சங்கம்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போமில்ல :)

said...

வாங்க ...நா ஜெயசங்கர்
மொத முறையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க..
வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க..

said...

வாங்க ..ஜி3 வாங்க...வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

// ரொஒஓஓஓஓஓஓஒம்ப பெருசா இருக்கறதால அப்பாளிக்கா போஸ்ட்ட படிக்கறேன் :)//
எப்ப அடுத்த தீபாவளிக்கா?...ஹிஹி..

// உங்கள ஒரு கேள்வி கேட்க இங்க வந்தேன்.//
எனக்கு கேள்விகள் கேக்கமட்டுந்தேன் தெரியும்..இருந்தாலும் டிரை பண்ணலாம்..சொம்மா கூச்சப்படாம கேளுங்க..

// அது என்ன G3 சங்கம்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போமில்ல :) //
ஆஹா.. அந்த ஊருக்கே.. தெரிஞ்ச ரகசியம்..(ஊருக்கே தெரிஞ்சா அது எப்டி ரகசியமாவுமென்னெல்லாம் கேக்கப்..டாது...) இன்னும் உங்களுக்கு தெரியலியா?..என்ன கொடுமை கெளதம் இது?..

சரிசரி போனாப்போவுதுங்க.. பா.பா சங்கத்துல Saturday, September 1, 2007 பதிவுல ஜி3 யோட பயோடேட்டா, கெடக்கும்..அதுல .."பிடித்த 3 சொற்கள் :& நீண்ட கால சாதனை : "ங்கர வரிகலுல உள்ளத பாத்து..G3 சங்கமின்னாக்கா..இன்னாக்கா என்னா?..அதனோட கொள்கைகள் இன்னா இன்னா.. என்று.. தெரிந்துக்கொள்ளவும்.ஹிஹி...
வருகைக்கு ரொம்ப தாங்க்ஸ்ங்க ஜி3..[படிக்காட்டாலும் ஹிஹி..)

said...

போஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கு

belated Diwali wishes Rasigan

said...

// மங்களூர் சிவா said...

போஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கு

belated Diwali wishes Rasigan//

ஓ.. நீங்க தலைப்பை பத்தி சொல்றீங்களா மாம்ஸ்..?ஹிஹி..
வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்..