Monday, October 15, 2007

ஓசை செல்லாவுக்கு ஒரு பின்னூட்டம்

ஓசை செல்லாவின்  "செருப்பாலடிக்கனும் டைரக்டர் சாமியை .     " [நன்றி]




எவ்வளவு கோபம் உங்க பதிவிலே....நியாயந்தானே...
ஆனால் இன்னும் பணம் கொடுத்தால்,மீண்டும் அவருடைய அடுத்த படத்திலேயே நடிகை நடிக்க ok ம்பார்.நாமதான் சூடா வாதம் பண்ணூவோம்
அந்த அளவு நடிகை உரிமை கொடுக்காமல் எப்படி தைரியம் வரும்.

இப்படித்தான்,

ஷில்பா போட்டியில் அவமானப்பட்ட போது ,பத்திரிக்கைகாரர்களின் ஆதரவை பயன்படுத்திக்கொண்டு,முத்த விவகாரத்தில் அவர்களை அடுத்தவர் விசயத்தில்(அது சரி தான்.பொது மேடையில்?)தலையிடும் மூடர்கள் என்றார்.அவர் பணம் , புகழ் சம்பாதிக்க தன்னிச்சையாக கலந்துக் கொண்ட போட்டியில்,அவருக்கு ஏற்பட்ட அவமானத்தின் போது தாயாய்,சகோதரியாய் தோள் கொடுத்து போராட்டங்கள் நடத்திய இந்திய தாய்மார்களை ,முத்த விவகார கண்டனத்தின் போது"நாட்டில் கள்ளக் காதல் அதிகமாகிவிட்டது ,இந்திய பெண்களுக்கு என்னை விமர்சனம் செய்ய தகுதி இல்லை "என்றார்.


ரஜினி-ஜ எடுத்துக் கொள்ளுங்கள்.தமிழனிடம் சம்பாதித்த , தனது எல்லா முதலீடுகளையும் கர்னாடகா-பெங்கலூரு வில் குவிக்கும் அவர்.
.தன்னை தலைவனாக கருதும் ஏழை தொண்டனின் ஒரு வாய் தண்ணீருக்கு நடந்த ஒருங்ககினைந்த [அதிசயம்] போராட்டத்தை ஒரு வேளை தனியாக டயட்(diet)ல்[அவர் பாஷையில் உண்ணா விரதம் ] இருப்பதாக கூறி இரண்டாகப்பிரித்து குலைத்து விட்டார்.சரி போராட்டத்தை மற்றொறு நாள் வைத்துக் கொண்டாலாவது வருவீர்களா? எனக் கேட்டதற்க்கு... மறுத்து,நமது உரிமையைக் கூட பிட்சை எடுத்து தான்/மன்றாடித்தான் [உண்ணாவிரதம் ] நாம் பெற [அவர்கள் ஒரு வேளை பரிதாபப்பட்டு கொடுத்தால்]லாயக்கு..போராடி அல்ல... என உறுதிப்படுத்தினார்.அது இன்று வரை கேரளாவிடமும் தொடர்கிறது.

ஒரு வேளை அவர் அன்று ஒருங்கினைந்த போராட்டத்திற்கு நன்றிவுணர்வோடு வந்து தமிழகத்தின் ஒட்டு மொத்த உணர்வை/நியாயத்தை அவர் பிறந்த
கர்னாடகாவிற்கு,அவரே காட்டியிருந்தால்,அவர் ஆயுசு முழுக்க இமயமலை சென்ற புண்ணியம்(?) கிடைத்திருக்கும்.நம்பிய தமிழர்களுக்கு தாகம் தீர்த்ததுக்காக...

இத்தனை நடந்தும்,இன்று அவரைப் பற்றி விமர்சித்தால் எதிர்ப்பு, பயனடையும் கர்னாடக அன்பர்களிடம் [?] இருந்து அல்ல, ஏமார்ந்த என் தமிழ் சகோதரனிமிருந்து........ இதற்கென்றே கடன் வாங்கி கட் அவுட் டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ஒரு கும்பல் வேலையில்லாமல் திரிகின்றது.

சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் திறன் தமிழர்களுக்கு குறைவுதான் என பல விசயங்களில் எனக்குத் தோனுது.

ஒருவேளை நடிகை புகார் கொடுத்து மக்களிடம் நியாயம் கேட்டால் ,ஆதரவு தரலாம் என்றிறுகிறேன்... ஹி..ஹி...

லேட்டஸ்ட் சேதி : நடிகை இப்பிரசனையை பெரிதாக்க வேண்டாம் என்கிறாமாம்.-நமக்கு ஏன் வம்பு....

அப்புறம் போட்டோ நல்லாயிருந்தது. ஹிஹி...


ரொம்ப லேட்ட்ஸ்ட் சேதி: பத்மப்ரியா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.இயக்குனர் - நடிகையிடம் மன்னிப்புக் கேட்டார்.[அப்படி போடு அருவாளை...பத்மா.. நீ ஜெய்ச்சிட்டமா... ஜெய்ச்சிட்ட...இந்த மாமாவோட பதிவ படிசிட்டு,ராவோட ராவா புகார் கொடுத்ததுனால ,பேச்சு மாறாமல் என்னோட ஆதரவு உனக்குத்தான்.].
என்னது ஆட்டோவோட ஆளுங்க கெளம்பியாச்சா....விடு ஜீட்..... எஸ்கேப்.........நான் நிலா பாப்பா வீட்டுல ஒளிஞ்சுக்கப் போறேன்.



என்ன மேட்டர்-இன்னு இன்னும் புரியாதவர்கள் கீழ்காணும் மிளகாயை கொஞ்சம் கடித்து பார்த்துவிட்டு வரவும்.[நன்றி மிளகாய்]


மிளகாய்          செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரா டைரக்டர் சாமி? [விபரம]

14 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

///சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் திறன் தமிழர்களுக்கு குறைவு///

உண்மை தான்.

said...

தோழர் ரசிகன் அவர்களுக்கு, பின்னூட்டம் தேர்ந்தெடுத்து வெளியிடும் அதிகாரத்தை உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது தானே உள்ளே வந்திருக்கிறீர்கள். எப்போ எது எப்படி வரும் என்று தெரியாது.

said...

ஒரு பின்னூட்டத்திற்காக ஒரு பதிவே எழுதுரீங்க போல இருக்கு!!

வாழ்த்துக்கள்!! தொடர்க உங்கள் பணி!!

Anonymous said...

சைக்கிள் கேப்புல எந் தலிவர ரோடுக்கு இழுத்துபுட்டியே
மக்கா பாத்துக்கறன்

said...

// தோழர் ரசிகன் அவர்களுக்கு, பின்னூட்டம் தேர்ந்தெடுத்து வெளியிடும் அதிகாரத்தை உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.//



வாங்க.. தமிழச்சி அக்கா...
நிங்கவந்ததுல ரொம்ப சந்தோஷம்...ஆனா யாரும் என்னோட
"பிராணிகளிடத்தில் இரக்கம் தேவையா?-ஒரு சொந்த அனுபவம்"
படிக்கலயோ?..
அதுக்கு உங்க கருத்த அறிய ஆவலாயிருக்கு..

அப்பறம் உங்க அறிவுறையை படித்தேன்.உண்மை தான்....
பின்னூட்டம் போட்டுட்டு வெயிட் பண்ணுறது சரியில்லைன்னுதான் அப்படி வைச்சேன்.
இது வரை யாரும் தர குறைவாக பேசலங்கரது சந்தோஷம்..ஒரு சில அனானிகள் கும்மி உண்டு,அது கூட தெரிஞ்ச ஆளுங்களோன்னு ஒரு சந்தேகம் உண்டு.

[ எப்படின்னாலும்..எந்த சமயத்திலேயும் ,தேர்ந்தெடுக்கும் உரிமையை கையிலெடுக்கும் "உரிமை ",நமக்கு உண்டுன்னு நினைவில் வைக்கிறேன்.]

நன்றி மீண்டும் வருக...

said...

வாங்க குட்டிபிசாசு....வாழ்த்துக்கு நன்றிகள்....
பதிவு போட மேட்டர் இல்லன்னா என்ன செய்யரதுன்னு ஜடியா புரிஞ்சிக்கிட்டிங்களே..
நீங்களும் என்னோட மத்த பதிவுகளை படிக்கலயா?..

said...

அடடா... அனானி மாமு...
வாங்க... உங்க அழகான முகத்தை காட்டமாட்டிங்கிறங்களே...ஒரு வேளை இன்னும் பிலாக் வீடு வாங்கலையோ?...
இலவசம் தான் சீக்கிரம் வாங்குங்க்க....

அப்புறம் ஒரு சந்தேகம் ...

// இதற்கென்றே கடன் வாங்கி கட் அவுட் டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ஒரு கும்பல் வேலையில்லாமல் திரிகின்றது.//

ஓ.. அது நீங்க தானா.......

said...

nalla soneenga! koothu! koothadigal!

said...

வாங்க...Dreamzz ..
வருகைக்கு நன்றி...

said...

பத்மப் பிரியா - சாமி விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்று தெரியாத நிலையில் ஊடகங்களின் செய்தியை வைத்து ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து கடுங் கண்டனம் செய்வது சரியா ?? ( திரை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது - சில பேர் பேருக்கு கருத்து சொல்கிறார்கள் ). இருக்கட்டும்.

பின்னூட்டத்தை மட்டுறுத்தும் உரிமை என்றுமே உங்களிடம் உள்ளது.

குட்டிப் பிசாசின் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன்.

said...

கலக்கறீங்க.. ரஜினியின் காமெடி.. சாரி காவிரி போராட்டம் பற்றி சரியாக எழுதியுள்ளீர்கள்

said...

வருகைகும் ,கருத்துக்கும் நன்றி லா.ல.தாஸ் சார்.

said...

//அந்த அளவு நடிகை உரிமை கொடுக்காமல் எப்படி தைரியம் வரும்//

அப்படில்லாம் ஒன்னும் இல்ல சாரே.. அடி விழுகிறதுக்கு முன்னாடி எப்படி தெரியும் இந்தாளு அடிக்கப் போராண்ணு?? ஒரே சாத்து திருப்பி கொடுத்துட்டு அவருக்கு வந்த மாதிரிதான் எனக்கும் கோவம் வந்துச்சி அப்படின்னு சொல்லனும் சொல்வாங்களா நம்ம நடிகைங்க??

//நாட்டில் கள்ளக் காதல் அதிகமாகிவிட்டது ,இந்திய பெண்களுக்கு என்னை விமர்சனம் செய்ய தகுதி இல்லை "என்றார்.//

அத கேக்குறதுக்கு சங்கடமா இருந்தாலும் அதுதான சார் உண்மை.. நீங்க இப்பல்லாம் பேப்பரேபடிக்கிறதில்லைன்னு நெனக்கிறேன்..

ரஜினிய பத்தி இன்னும் தமிழ்நாட்டு ஆளுன்னு நம்பிக்கிட்டிருக்குற ஒங்கள பாத்தாத்தான் பரிதாபமா இருக்கு. நல்லா எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி நடிப்பாரு அவ்வளவுதான்..

மண்ணிப்பு -- தமிழ்லயே எணக்கு புடிக்காத வார்த்தைன்னு சாமி சொல்லலியா?? தெரியாமத்தாங்க கேட்டேன்..

அப்படியே நம்ம ஊட்டுக்கு வந்து வாழ்த்து சொன்னதுல ரொம்ம சந்தோசம்..

said...

வருகைக்குக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கானகத்தாரே.