Monday, October 15, 2007

அகிம்சை-ன்னா என்னாங்க...

நேற்று ஒரு அகிம்சாவாதியை காண நேர்ந்தது...

அகிம்சை-யைப் பற்றி பாடம் எடுத்து எங்களை இம்சை செய்து விட்டார்.
அவரது ஒரே நிலத்தை ஒருவன் அபகரித்த போது கூட விட்டுக்கொடுத்தாராம்.என்றாவது ஒரு நாள் அவனும் அகிம்சையாவானாம்.


இதில் நம்மையும் அகிம்சாவாதி ஆக அறிவுரை வேறு...[கடைசி வரை மவுனமாய் ,அகிம்சாவாதியாய் கேட்டுவிட்டு வந்தோம்].

எனக்கு அவரை பார்த்து பரிதாபம் தான் வந்தது.அந்த நாள்வரை இவர் உயிரொடுயிருக்க வேண்டுமே.
இன்றைய இளைய சமுதாயத்திற்கு இந்த தடைக்கல் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது.

யோசித்துப்பார்த்தால் இன்று தமிழ் நாடும் .. கேரளாவோடும்,கர்னாடகாவோடும் இவரைப் போலவே ஏமார்ந்துக் கொண்டிருக்கின்றது.

வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்.


வெள்ளைக்காரன் எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்றாலும்,காந்தியை ஜாக்கிரதையாக காப்பாற்றியதுக்கு ஒரு காரணம் உண்டு.
"அவரது அகிம்சையைக் கண்ட வெள்ளைக்காரன் பயந்து (?) விட்டான்" என்றால் ,அது ஜல்லியடி...முயர்ச்சி.

ஏனென்றால்,

1] எவ்வளவுதான் அடித்தாலும் ,வாங்கிக்கொண்ட (கோழை) நல்லவர்களை உண்டாக்கிக் கொண்டிருந்ததால்...
2 ]ஆயுதம் எடுத்து நாட்டை மீட்க முயலும் வீரமான மகனை,தானே காட்டிக்கொடுக்கும் பொறுப்புணர்ச்சி மிக்க
அகிம்சாவாதிகளை உண்டாக்கிக் கொண்டிருந்ததால்...
3]என்ன போராட்டம் நடந்தாலும்,அது ஆங்கில சொத்துக்கோ,உயிருக்கோ சேதமில்லாமல், முன் கூட்டியே அறிவித்து நடந்ததால்.

எனவே காந்தி வெள்ளைக்காரனுக்கு ஒரு வரம்.

ஒருவேளை காந்தி இல்லையென்றால், கோழைகளாய் மாற்றப் பட்ட இளையசமுதாயம், சுபாஸ் சந்திரபோஸ் போன்றோரிடம்
இணைந்திருக்கும்.

என் நாடு எப்போதோ .. நான் கில் ஒரு பங்கே உள்ள வெள்ளைக்காரனை போராடியே வென்றிருக்கும்.
[சுபாஸ் சந்திரபோஸ் காலத்தில் சமஸ்தான்ங்ககள் எல்லாம் கூடி ஒரு நாடாகியிருந்தது.]

7 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

Anonymous said...

அகிம்சை-ன்னா என்னாங்க.

தெரியாதுங்க.

Anonymous said...

லேட்டா பொறந்துட்டயே தலைவா......
அப்பவே போறந்தா காந்திகட்சிக்கி எதிர்கட்சி துவங்கி
நீ தலைவரு ,நா கொ.ப.செ ஆகி இருக்கலாமில்ல.

said...

வாங்க அனானிஸ் ,ரெண்டு பேரும் ஒன்னா? இல்ல வேறயான்னு தெரியல்லை..
எப்படி இருந்தாலும் வருகைக்கு நன்றி.

said...

அகிம்சை என்பது நாம் வலியவர்களாக இருந்தும் எளியவர்களைக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பது தான். ஒருவன் கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுபவன் அகிம்சாவதி (???). மகாத்மா காந்தி அவர் இருந்த காலத்தில் அவர் செய்தது சரியான செயல். தற்போதைய சூழ்நிலையில் நாம் அப்படிப் பட்ட அகிம்சா வாதியாக இருக்க வேண்டாம்.

said...

அகிம்சையின் அனுகுமுறை என்னவென்றால், அகிம்சாவாதி எதிரியிடம் அடி வாங்கனும், திருப்பித் தாக்க கூடாது. நாட்டுக்காக ஆயுதம் தாங்கி போராடும் வீரர்களை பயங்கரவாதிகள்னு கண்டிக்கனும், அவங்களை காட்டிக் கொடுக்கனும். ராட்டை சுத்தனும், பஜனை பாடனும் வெள்ளக்காரனா பாத்து ஏதாவது கொடுத்தா போதும்னு காத்து கிடக்கனும். பல ஆயிரம் மக்கள் கூடி நின்று சில நூறு போலீசுக்கிட்ட அடி வாங்கியே சாகனும். தன்னைத் தானே இம்சிக்கிறது தான் அகிம்சை. எறும்பு கூட நசுக்கினா கடித்து அதன் எதிர்ப்பை காட்டும் ஆனால் அகிம்சாவாதி வீரத்தை உதை வாங்கி காட்டனும்.

said...

நன்றி சீனா சார்.அகிம்சையைப் பற்றி காந்தித்துவ (காந்தி வலியவரா?) விளக்கமும் சொல்லிட்டு,அப்படியே

// தற்போதைய சூழ்நிலையில் நாம் அப்படிப் பட்ட அகிம்சா வாதியாக இருக்க வேண்டாம். // இன்னு சொன்னதன் மூலம் தாங்கள் யதார்த்தவாதி என மீண்டும் நிருபிச்சியிருக்கிங்க.. ஆதரவுக்கு நன்றி.

said...

வாங்க ஆசாத்.. பேருக்கு ஏத்த மாதிரியே தீப்பிழம்பா இருக்கிறிங்களே..உங்க பதிவுல வரலாற்றுல மறக்கப்பட கூடாத ஓரு வீரனின் வரலாற்றை நினைவு படுத்தறிங்க..தொடர்க உங்கள் பணி.