என் நண்பர் இன்னிக்கி ரொம்ப சோகமாயிருந்தாரு..எப்பவும் வாணிலியில போட்ட கடுகு கணக்கா எல்லாரயும் பொரிந்து தள்ளுபவர்,இன்னிக்கி சைலண்டா இருக்காரே..ஊருக்கு போன் அவர் மனைவி திரும்ப வந்துட்டாங்களோ?..ன்னு ஜாலியா கேட்டதுக்கு..மனுஷன் தனது சோகத்த ஒரு அண்டா நெறய பிழிந்து கொடுத்துட்டார்.
விஷயம் இதுதான்.லீவாச்சேன்னு மனைவியும் வீட்டுல இல்லயேன்னு காரை எடுத்துக்கிட்டு ஊர் சுத்த போனவர்,ஒரு ரவுண்டானாவ சுத்தும் போது,இன்னொரு காரும் அவர இடிக்கிற போல வந்து நின்னுச்சாம்..அவரு சரியாதான் ஒட்டியிருக்கிறார்(-ன்னு சொன்னார்).வழக்கம்போல கோபமா இரங்கி நின்னாக்கா.. அழகா ஒரு அரபி பொண்ணு காருலருந்து இறங்குச்சாம்.
பொண்ணப் பாத்தது இவுரு பரிதாபப்பட்டு (பயப்பட்டு -ன்னு எங்களுக்கு தெரியுமில்ல.) போனாப் போவுதுன்னு திரும்பியிருக்கார்.அப்பத்தான் சரளக்கல்ல கிரைண்டருல அரைச்ச மாதிரி ஒரு குரல்.நண்பர் நெசமாவே பயந்து போயி(இப்ப ஒத்துக்கிட்டார்) திரும்பி பாத்தா..
அந்த அரபி பொண்ணுதான் இவர சத்தமா திட்டிகிட்டு இருக்கா..இவருக்கு எங்கே போலிசை கூப்புடுவாளோ -ன்னு பயமும், திட்டு வாங்குவதால்(அவள்திட்டும் அரபி வார்த்தைகள் அவருக்கு புரிந்ததால்) தர்மசங்கடத்திலும் நெளிந்து,ரவுண்டாணாவுல யாருமில்லாத்தால,மன்னிப்பு கேட்டு எஸ் ஆயி வந்தவருதான்."சேது afterthe intervel விக்ரம் போல" எங்கோ பார்க்கிரார்.
"ஹிம்...பொண்ணுன்னா ஒரு அச்சம்,மடம்,நாணம்,பயிற்ப்பு வேணாம்?.அது சரி தமிழ் பொண்ணுன்னா அவுங்களுக்கு தெரியும்,இதுகளுக்கு என்ன தெரியும் ?கூடைய தொறந்த கோழியப் போல சுத்துதுங்க இன்னு பொலம்பினாரு..".
அத கேட்ட டவுட்டு தனசேகரு எங்கிட்ட "மச்சி அச்சம்,நாணம் இன்னாக்கா தெரியும்.மடம் கூட,கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு,ஆனா "பயிற்ப்பு"-ன்னா இன்னான்னு அறியாபுள்ள தனமா கேட்டு வைக்க,எல்லாரும் என்னிய முட்டாய் கடை போல பார்க்க,என்னையும் பெரிய மனுஷனா நெனச்சு ,ஒரு புத்திசாலிதனமான கேள்வி கேற்க்கும் போது,தெரியல்லண்ணா நல்லாயிருக்காதில்ல...
கவலைப்பட்டுக்கினுறுந்த நண்பருங்கூட ஆவலா என்னிய பாக்கரது தெரிஞ்சது.வேர வழியில்ல.. 'வார்த்தையை சொன்ன நண்பரே,இப்ப சொல்லுவாருன்னு அவர காட்டிட்டேன்.அவரோ "குண்டக்க ம்ண்டக்கன்னா,குண்டக்க ம்ண்டக்க தான் "வடிவேலு மாதிரி,இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லமுடியுமாடான்னுடார்.நீ திட்டு வாங்க தான் லாயக்கு,நம்ம மச்சி சொல்லுவானு -ன்னு எல்லாரும் மறுபடியும் என்னைய பாக்க "நியுட்டனின் விதிய பொய்யாக்குர மாதிரி நமது வினைக்கு,இரண்டு மடங்கு எதிர் வினை வருது.நம்மலயும் "லாயக்கு" லிஸ்டில சேத்துருவாய்ங்களோ..
அப்படியே சஸ்பென்ஸ மெயின்டெய்ன் பன்னிக்கிட்டு,"எல்லாருக்கும் 24 மணி நேரம் தரேன்,கார் ,ஹலிகாப்டர் எது வேனுமினாலும் எடுத்துக்குங்க,எல்லா கருப்பு பண பைலும் என் டேபிளுக்கு வரனும்" முதல்வன் அர்ஜின் போல, 'பயிற்ப்பு -ன்னா என்னனு இன்ன முழுசும் யோசிங்க.தெரியலன்னா.. நாளைக்கு சொல்லரேன்..-ன்னுட்டேன்.[நாளைக்கு , யாரும் கண்டு புடிக்கலன்னா எங்கயாவது " எஸ் "ஆகனும்.]
ரவி மாத்தரம் புத்திசாலிதனமா எங்கிட்ட வ்ந்து மாமு எனக்கு தெரியும்.எங்கிட்ட மட்டும் சொல்லு.நா நெனச்சதும் நி சொல்லரதும் ஒன்னான்னு பாக்கனுமின்னான்.உஷாராயிட்டேனில்ல... விஷயந்தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்ச விசயத்த மறுபடி சொல்லரது வேஸ்ட்-ன்னுடேன்.
டென்ஸனான ரவி சரி ஒத்துக்குறேன் .எனக்கு தெரியல.. இப்ப சொல்லு..ன்னான்.அப்படி வா வழிக்கு.ஆனா ஒன்னும் தெரியாதவங்ககிட்ட அவிங்களுக்கு தெரியாத விசயத்த பத்தி பேசரது நாகரீகமில்ல-ன்னேன்.
அவனுடைய நெற்றிக்கண் (?)ண தொறந்து என்ன எரிக்கரத்துக்கு முன்ன அங்கிருந்து எஸ்கேப் ஆனேன்.
நேரா இணையத்துல்ல குதிச்சி... கூகுளாண்டவருகிட்ட மனு போட்டா... ரெண்டு மொக்க குறிப்ப எடுத்து காட்டனாரு.. அதுல ஒன்னுமில்ல..
ஒரத்துல்ல இருக்குர தமிழ் அகராதி தேடல் எல்லாத்துலயும் "பயிற்ப்பு/ பயிர்ப்பு" எல்லாம் கொடுத்து பாத்தாச்சி..நோ ரிசல்ட்ன்னு வந்துச்சி.
அப்பத்தான் நண்பர் சொன்ன வார்த்த மீண்டும் காதில் ஒலித்தது..சே..இதை எப்படி மறந்தேன் நான்..[ "ஹிம்...பொண்ணுன்னா ஒரு அச்சம்,மடம்,நாணம்,பயிற்ப்பு வேணாம்?.அது சரி தமிழ் பொண்ணுன்னா அவுங்களுக்கு தெரியும்,"].
அக்கம் பக்கத்துல்ல யாரும் இல்லாததால உடனே ஊருல,வக்கில் [வைக்கோல்-அல்ல]உதார் விட்டுக் கொண்டிருக்கும் கவி அக்காவுக்கு போன் போட்டேன்[ உயிர் நண்பனின் அக்கா].
டேய் எப்படிடா இருக்க..இன்னு வழக்கமான விசாரிப்பை தொடர்ந்த அக்காவிடம்.அதெல்லாம் இருக்கட்டுங்கா..நான் இப்ப ஒரு சிக்கல இருக்கேன்,என்னோட கவுரவமே(?) ஒங்க பதில்லதா.. இருக்கு..
பீடிக போடாம ஒடனே சொல்லுரா..
எனக்கு பயிற்ப்பு -பத்தி தெரியனுங்கா...
அட இதுக்கு போயா கத்தருலருந்து கூப்புடவ.. அதுல பல வகை உண்டு..
இது வேறயா..இருங்கக்கா... பேனா..பேப்பர் எடுத்துக்கிறேன்.
எடுத்துக்க...எடுத்துக்க.....எடுத்துட்டயா?..
ம்..சொல்லுங்கக்கா..
உளுத்தம் பருப்பு,பாசிப் பருப்பு,பச்சை பருப்பு..இதுதான் இப்ப வெல ஜாஸ்தி..அடுத்து...
அக்காஆஆஆஆ .
என்னடா...அங்க....நங்கு நங்கு-ன்னு இரும்பு சத்தமெல்லாம் கேக்குது..
அது நாந்தான் இங்க சொவத்துல தலைய முட்டிக்கிட்டேன்.அதவிடுங்க..நாங்கேட்டது சமையல் பருப்பல்ல.. ப..யி..ற்.நெடில்..ப்...பு.
"பயிற்ப்பு " சரியான வார்த்த தானா? நல்லா பாத்தியா "ஸ்பெல்லிங்" மிஸ்டேக் இருக்க போவுதுடா...
சமாளிக்காதிங்கக்கா.... ஒரு குளூ உண்டு. அது அச்சம்,மடம்,நாணம் வரிசையில தமிழ் பொண்ணுக்கு அவசியமான ஒரு குணம்.
அச்சம்,மடம்,நாணம் வரிசையில அப்படின்னா இந்த காலத்து பொண்ணுங்களுக்கு அது தேவையில்லன்னு அர்த்தம்டா.
"பயிற்ப்பு " ன்னா என்னன்னே தெரியாம,அது அவசியமில்லன்னு எப்படி சொல்லுவிங்க..தெரியுமா? தெரியாதா?..
அது.. அது.. அட உங்க மாமாவே வந்துட்டாரே .அவருகிட்ட கேளு.அவரு புத்திசாலி.
அதுல புத்திசாலிங்கரத்துலதான் எனக்கு சந்தேகமே...
ஏண்டா?
உங்களை போய் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டாரே..
அடிச்சேன்னா.. ஊருக்கு வருவல்ல.. அப்ப பாத்துக்கிறேன்.
ஹலோ..பையா என்னடா சந்தேகம்.
வாங்க மாமா..அச்சம்,மடம்,நாணம் வரிசையில "பயிற்ப்பு " ன்னா என்ன?
ம்...ம்....உங்க கவி அக்கா கிட்ட அச்சம்,சமயல்ல உதவி பண்ணரதால மடம் ,அது மத்தவங்களுக்கு தெரிஞ்சிடுமோங்கிற நாணம் எல்லாம் எனக்கு இருக்கிறத்தால,அந்த.. என்னது..அங்.. பயிற்ப்பு அதுவும் எங்கிட்ட இருக்கனுந்தான் தோனுது.ஆனா என்னன்னு தான் தெரியல..
நான் இங்கு ...நங்கு....நங்கு....நங்கு.........
இடைவிடாம "இரும்பு சத்தம் கேட்டதால.. அங்க மாமா..போன் ரிப்பரோ -இன்னு நினைத்திருக்க கூடும்.
மக்கள்ஸ்..
நடந்த எல்லாம் கேட்டங்கல்ல.... அய்யா சொல்லுங்க....அம்மா சொல்லுங்க.....அக்காசொல்லுங்க...
தமிழ் பொண்ணுங்களே சொல்லுங்க....
அந்த "பயிற்ப்பு " ன்னா என்னங்க.....
நில்லுங்க.. நில்லுங்க.. ஓடாதிங்க....கொஞ்சம் நில்லுங்க please ..சொல்லிட்டுப் போங்க....
"பயிற்ப்பு " ன்னா என்னங்க.....
Thursday, October 18, 2007
தமிழ் பெண் பதிவர்களுக்கு ஒரு கேள்வி
Subscribe to:
Post Comments (Atom)
38 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
அது "பயிர்ப்பு" நண்பரே
கூகிளாண்டவர் வழியாக...
http://www.google.co.in/search?hl=en&q=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&meta=
:-))
வாங்க பலூன் மாமா...
மொதலிலேயே எனக்கு சொல்லிக்கொடுத்ததுக்கு நன்றிகள்.ஆனா.எனக்கு மட்டும் கூகுலாண்டவர் ஏன் வரம் குடுக்கலயோ.ஏன்?..[ஒரு வேளை "ஸ்பெல்லிங்கு மிஸ்டேக்"காயிருக்குமோ.இல்ல போன பதிவுல அபி அப்பாவ கொற சொன்னதால ,அவரோட சதியாயிருக்குமோ?.இன்னு ஒரு சந்தேகம் உண்டு.].
அப்பறம் நீங்க குடுத்த சுட்டில.. "பயிற்ப்பு " க்கு நாலஞ்சி அர்த்தம் வருதே..எது சரி...?[இதுல ஒரு "வயதுக்கு வந்தவங்களுக்கான" அர்த்தமும் அடக்கம்.இது தெரியாம "தமிழ் பெண் பதிவர்களுக்கு ஒரு கேள்வி"இன்னு தலைப்பு வச்சுட்டேன்.தமிழ் பெண் பதிவர்கள் என்னிய மன்னிச்சுடுங்க..]
உங்க புண்ணியத்துல டவுட்டு தனசேகரு ,ரவிக்கிட்டல்லாம் ,கவி அக்கா ஸ்டெய்ல்ல..
// அதுல பல வகை உண்டு..// [நாலஞ்சி அர்த்தம் கெடச்சதால]-ன்னு பட்டய கெளப்பிடமாட்டேன்?...
//பயிற்ப்பு //
'ற்' பக்கத்துலெ மெய் எழுத்து வராது.
பயிற்பு ன்னு இருக்கணும்.
யாரு உங்க தமிழ் டீச்சர்? அந்த "உண்மை" எனக்குத் தெரிஞ்சாகணும்! :P
நன்றி துளசி கோபால் சார். உங்க விளக்கத்தை அப்படியே என்னோட தமிழ் "டீச்சருக்கு "அனுப்ப போரேன்.இப்ப படிக்கிற புள்ளைங்களாவது சரியா படிக்கட்டும் -ங்கர நல்லெண்ணந்தான்.
அப்பறம் இந்த மெய் எழுத்து..மெய் எழுத்து..ங்கரிங்களே..பொய் எழுத்துன்னும் ஏதாவது இருக்குதா?...
[ஜஜயோ.. அடிக்காதிங்க.. அடிக்காதிங்க.....]
வாங்க கீதாக்கா...
//யாரு உங்க தமிழ் டீச்சர்? அந்த "உண்மை" எனக்குத் தெரிஞ்சாகணும்! //
இப்படில்லாம் மிரட்டினிங்கனா.... என்னோட தமிழ் டீச்சர் நீங்க தாங்கற " உண்மை "யை எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்.ஆமா..
அப்பரம் அதென்ன உங்க பதிவுல...
// இந்த உலகுக்கு ஆதாரமாக இருப்பவளே பெண்தான். அவள்தான் மூலாதார சக்தி. பெண் இல்லையேல் சிருஷ்டி இல்லை. உலகம் இல்லை. உயிர்ப்பு இல்லை.//
இப்படி சொல்லி சொல்லியேதான் ஆம்பளைங்களோட "சம உரிமை"யை பறிச்சிட்டிங்க..ஹிஹி...[நானில்ல..நானில்ல....சாம்பசிவம் மாமா தான் சைடுல இப்படி சொல்லச் சொன்னார்.]
அடிக்கடி வந்து திட்டிட்டு போங்களேன்...
accham (fear), naanam (shyness), madam (simplicity, innocence), payirppu (modesty)
ரசிகன். நீங்க நல்லா பதில் சொல்ல கத்துக்கிட்டிங்க.பேசாம 'மதன் பதில்கள்,சுஜாதா பதில்கள் போல் நீங்களும் பதிலுக்குன்னே ஒரு வலைபூ தொடங்கலாம்.
கவி அக்கா discussion superb..அவர்களையும் கேட்டதா சொல்லுங்க.
வாங்க"r" சார்..
ஒரு வேளை நீங்க English டீச்சரா இருக்கிங்களோ?..
வருகைக்கு நன்றி...
ஸாரி பிரித்தி,எனக்கு கேள்விகள் கேற்க்க மட்டும் தான் தெரியும் [திரு (?) விளையாடல் நாகேஷ் மாதிரி படிக்கவும்]
முதலில் துளசிகோபால் சார் இல்லை மேடம், அப்புறம் நான் தான் உங்க தமிழ் டீச்சர்னு சபையிலே வச்சுச் சொல்லி மானத்தை வாங்கிடாதீங்க. நச், நச், நச், நான் செவத்திலே முட்டிக்கிற சத்தம் அது, அங்கே வந்து கேட்டிருக்குமே? :P
கீதா அக்காவுக்கு நன்றிகள்
நா அப்பவே நெனச்சேன்.
இவ்வளவு பொறுமையா விளக்கம் கொடுக்கும் போதே,ஒரு சந்தேகம் இருந்துச்சி.
மன்னிச்சிடுங்க துளசி மேடம்.
அப்புறம் கீதா அக்கா..ரொம்பவே இடுச்சிக்க வேணாம்.சுவர் உடஞ்ச்சி போச்சுன்னா..சாம்பு மாமா ரொம்ப வருத்தப்படுவாருல்ல...
ஹாய் ரசிகனே,
சூப்பர் போங்க, அசத்தல். ஆனாலும் இந்த மனுஷங்களுக்கு எதுல தான் டவுட்டு வரதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையே!!?
நல்லாயிருக்கு உங்க பதிவும், எழுத்தும்,நடையும், ....
ரொம்ப நன்றிங்க சுமதி,
// இந்த மனுஷங்களுக்கு எதுல தான் டவுட்டு வரதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையே!!?//
ஆனாலும் என்ன பண்ணறது, எந்த சந்தேகம் வந்தாலும்,உடனே கேட்டு தெளிவு படுத்திக்கனுமின்னு எங்க தமிழ் டீச்சர் சொல்லியிருக்காங்க..
பின் குறிப்பு :நான் கீதா அக்காவை காட்டிக் கொடுக்க வில்லை என கூறிக் கொள்கிறேன்.
http://www.maraththadi.com/article.asp?id=2033
நன்றி அனானி,
பலூன் மாமா வோட சுட்டில கூகுலாண்டவர் வழியா , இதுவும் வந்துச்சி. [இது தா நாஞ்சொன்ன அந்த "வயதுக்கு வந்தவங்களுக்கான" அர்த்தம்.எந்த அர்த்தம் சரின்னு தெரியாட்டாலும் ," ஹரி கிருஷ்ணன" ஜயாவோட கட்டுரை ரசிக்கும் படியா இருந்துச்சு.அவருக்கு நன்றிகள்.அப்புறம் "மரத்தடி"ய அறிமுகம் செஞ்சதுக்கு உங்களுக்கும் ரொம்ப நன்றிங்க..
\"ரவி மாத்தரம் புத்திசாலிதனமா எங்கிட்ட வ்ந்து மாமு எனக்கு தெரியும்.எங்கிட்ட மட்டும் சொல்லு.நா நெனச்சதும் நி சொல்லரதும் ஒன்னான்னு பாக்கனுமின்னான்.உஷாராயிட்டேனில்ல... விஷயந்தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்ச விசயத்த மறுபடி சொல்லரது வேஸ்ட்-ன்னுடேன்.
டென்ஸனான ரவி சரி ஒத்துக்குறேன் .எனக்கு தெரியல.. இப்ப சொல்லு..ன்னான்.அப்படி வா வழிக்கு.ஆனா ஒன்னும் தெரியாதவங்ககிட்ட அவிங்களுக்கு தெரியாத விசயத்த பத்தி பேசரது நாகரீகமில்ல-ன்னேன்.\
இந்த வரிகள் வாசிக்கும் போது சிரிப்பை அடக்க முடியலீங்க, உங்கள் நகைச்சுவையுணர்வு ரசிக்க வைத்தது.
அழகான எழுத்து நடை.....ரொம்ப சுவாரிஸியமா எழுதுறீங்க,ரசிகன் பாராட்டுக்கள்.
துளசி கோபால் said...
//பயிற்ப்பு //
'ற்' பக்கத்துலெ மெய் எழுத்து வராது.
பயிற்பு ன்னு இருக்கணும். //
துளசி கோபால் , அது பயிற்பு இல்லீங்க - அது பயிர்ப்பு
கீதா சாம்பசிவம் said...
//யாரு உங்க தமிழ் டீச்சர்? அந்த "உண்மை" எனக்குத் தெரிஞ்சாகணும்! //
ஏனுங்கோ, கீதா , ஏங்க இந்த கொல வெறி ? யாரைப் பாத்தாலும் உங்க தமிழ் டீச்சர் யாரு - அவங்களை கொல்லனும் னு - கொதறீங்களே !!
உங்க தமிழ் டீச்சர் உங்கள அவ்வளவு வெறுப்பேத்திட்டாங்களா ??
இருக்கட்டும் - நீங்க உடனடியா இக்கொதறுதல நிப்பாட்டாட்டி, நாங்க (??), எங்க தமிழ் டீச்சர்ஸ் எல்லாம் ஒரு கச்சி "கீதா எதிர்ப்புக் கழகம்" ( நாந்தேன் தலவரு) ஆரம்பிச்சி உங்க முன்னாடி தமிழ்க் கொடி காட்டப் போறோம். சாக்கிரதை
அப்புறம் ரசிகனோட நகச்சுவை ( நகத்தே கடிக்கும் போது வருமே) ரொம்ப நல்லா இருக்கு. ரசித்தேன்.
ஹரி கிருஷ்ணனோட விளக்கம் தான் சரியான விளக்கம். உடன்படுகிறேன்.
அன்புடன் சீனா
வாங்க திவ்யா.. உங்க பாராட்டுக்கும் ,ரசிகத் தன்மைக்கும் ரொம்ப நன்றிங்க..
அடிக்கடி தலை காட்டிட்டு போங்களேன்.
வாங்க சீனா சார்.. அப்ப நீங்களும் தமிழ் டீச்சர் தானா..ஆமா எங்க தமிழ் டீச்சரு மேல,உங்களுக்கு என்னா இவ்வளவு கோவம்?..[அது சரி ,சண்டையும் ,சச்சரவும் தமிழ் டீச்ச்ருங்களோட பரம்பரை சொத்தாச்சே.]
// அப்புறம் ரசிகனோட நகச்சுவை ( நகத்தே கடிக்கும் போது வருமே) ரொம்ப நல்லா இருக்கு. ரசித்தேன். //
நகச்சுவை முடிஞ்சி விரல் சுவை வரதுக்குல்ல..இந்த பின்னூட்ட மிரட்டல எங்க தமிழ் டீச்சருக்கு தெரியப்படுத்திடரேன்.
டீச்சர்ஸ் சண்டை போட்டா ,ஸ்டுடண்டுக்கு கொண்டாட்டம்தான..[அது சரி ..இந்த வம்புக்கெல்லா நாந்தேன் காரணமின்னு, இம்போஸிஸன் கொடுத்துடா?...].
// துளசி கோபால் , அது பயிற்பு இல்லீங்க - அது பயிர்ப்பு //
அதெப்படி சீனா சார்.எந்த தயிரியத்துல ,ஒரே பின்னூட்டத்துல எல்லாரையும் சமாளிக்கிறிங்க....ஹிஹி..பதில் தாக்குதலுக்கு ரெடியா?..
ஆமாம், அதை வேறே நான் சொல்லணும்னு நினைச்சேன், பயிர்ப்பு தான் சரி, பயிற்பு இல்லைனு, சீனா வந்து புண்ணியத்தைக் கட்டிட்டார். நல்லாத் தேறிட்டார் போலிருக்கு, பை த பை, ரசிகரே, அவருக்கும் நான் தான் தமிழ் டீச்சர்! சொல்லி இருப்பாரே! இந்தச் சங்கம் ஆரம்பிக்கிறது எல்லாம் பின்னணியிலே என் தலை மேலே தான் செயல்படுது. என்ன இம்பொசிஷன் கொடுத்தாலும் நீங்க எழுதற அழகு இதுதான், நான் தான் எழுதணும் இனிமேல், P: :P
அது என்னங்க இப்படி இறுக்கி மூடி வச்சுட்டீங்க உங்க ப்ளாகை, திறக்கறதுக்குள்ளே, கை வலி மட்டுமில்லாமல் கம்ப்யூட்டர் மவுஸ் கூட அழ ஆரம்பிச்சுடுச்சு! :P :P
// என்ன இம்பொசிஷன் கொடுத்தாலும் நீங்க எழுதற அழகு இதுதான //
என்னிய ரொம்ப புகழாதிங்க டீச்சர்,கூச்சமாயிருக்கில்ல.....
//அது என்னங்க இப்படி இறுக்கி மூடி வச்சுட்டீங்க உங்க ப்ளாகை //
அய்யய்யோ...மன்னிச்சிக்கோங்க.. நா.. மொக்கை போட்டு,மக்கள்ஸ கொடும படுத்தறதால,சில பேரு எம்மேல காண்டா திரியராய்ங்கன்னு இப்பத்தேன் QBC ல.. மின்னல் (flash) செய்தி பாத்தேன்.அதான் பாதுகாப்பு காரணங்களுக்காக..ஹிஹி..
ஆனா எப்பவும் உங்களுக்கு இங்க.. ஸ்பெசல் பாஸ் உண்டே..
(டீச்சருக்கு சமாதானத்த சொல்லிட்டாலும்,இது ஒருவேள அன்னிய நாட்டு சதியா இருக்குமோன்னு எனிக்கு ஒரு சந்தேகமாயிருக்குல்ல...ஹிஹி...)
கடைசியா டீச்சரெல்லாம் ஒன்னா சேந்து நம்மல பலி போட்டுட்டாங்களே.. ம்ம்..
ம் நடத்துய்யா ரசிகா நடத்து. சந்தேகம் தீர்ந்துச்சா இல்லையா??
பின்னூட்டங்கள் அனைத்தும் அருமை.
ரசிகன் - நான் தமிழ் ஆசிரியர் இல்லை. தமிழ் கற்றவன் அவ்வளவுதான். ( ஆனால் ஒரு தமிழாசிரியைக்கும் எனக்கும் ஒரு பிரிய முடியாத தொடர்பு உண்டு)
ஹலோ ரசிகன்,
உங்கள் பதிவுப் பக்கம் நல்ல நேர்த்தியா வடிவமைக்கப்பட்டிருக்கு. நீங்க ஜாலியா சொல்றீங்களோ, சீரியஸா சொல்றீங்களோ, பல பெரிய நல்ல விஷயங்களை தரீங்க. உங்க mail ID குடுங்க. 2 பிளாக்ல போடற அளவுக்கு பயிர்ப்பு பற்றி பேசலாம். என்ன
பயிர்ப்பு என்றால் ஒரு பெண் தன்னைத் தன் கணவன் தவிர வேறு ஏதாவது ஆண் தொடும்போது எழும் அறுவறுப்பு உணர்ச்சி. கம்பளிப் பூச்சி ஊருவது போல இருக்கு என்று மௌன ராகம் படத்தில் ரேவதி மோகனிடம் கூறுகிறாரே அந்த உணர்ச்சிதான். அதிலும் மோகன் அக்கதையில் அவள் கணவன், ஆனாலும் அவள் தன் இறந்துபோன காதலன் கார்த்திக்கைத்தான் அச்சமயத்தில் மனதில் கணவனாக வரித்திருந்தாள் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை எல்லாமே ஆணாதிக்கத்தின் எதிர்ப்பார்ப்பின் விளைவுதான். அவை பெண்களிடம் இருக்க வேண்டும் என்று திட்டம் வகுத்ததே ஒரு ஆணாகத்தான் இருக்க முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// மங்களூர் சிவா said...
ம் நடத்துய்யா ரசிகா நடத்து. சந்தேகம் தீர்ந்துச்சா இல்லையா??
பின்னூட்டங்கள் அனைத்தும் அருமை.//
சிவா மாம்ஸ்.. அதான் பின்னூட்டத்துல பாடமே நடத்திப்புட்டாய்ங்களே நம்ம மக்கள்..ஹிஹி..
// cheena (சீனா) said...
ரசிகன் - நான் தமிழ் ஆசிரியர் இல்லை. தமிழ் கற்றவன் அவ்வளவுதான். ( ஆனால் ஒரு தமிழாசிரியைக்கும் எனக்கும் ஒரு பிரிய முடியாத தொடர்பு உண்டு)///
ஆஹா..சீனா சார் புரிஞ்சிடுச்சி...
வீட்டுல கத்துக்கிட்டுதான் எங்களுக்கு
சொல்லிக்குடுக்கிறிங்களோ?
// SALAI JAYARAMAN said...
ஹலோ ரசிகன்,
உங்கள் பதிவுப் பக்கம் நல்ல நேர்த்தியா வடிவமைக்கப்பட்டிருக்கு. நீங்க ஜாலியா சொல்றீங்களோ, சீரியஸா சொல்றீங்களோ, பல பெரிய நல்ல விஷயங்களை தரீங்க. உங்க mail ID குடுங்க. 2 பிளாக்ல போடற அளவுக்கு பயிர்ப்பு பற்றி பேசலாம். என்ன//
ஜெயராமன் சார்.. பாராட்டுகளுக்கு நன்றிகள். என்னோட மின்னஞ்சசல் முகவரிய வலைப்பூவோட மொதப்பக்கத்துலயே குடுத்திருக்கேனே..
ஹிஹி....
// dondu(#11168674346665545885) said...
பயிர்ப்பு என்றால் ஒரு பெண் தன்னைத் தன் கணவன் தவிர வேறு ஏதாவது ஆண் தொடும்போது எழும் அறுவறுப்பு உணர்ச்சி. கம்பளிப் பூச்சி ஊருவது போல இருக்கு என்று மௌன ராகம் படத்தில் ரேவதி மோகனிடம் கூறுகிறாரே அந்த உணர்ச்சிதான். அதிலும் மோகன் அக்கதையில் அவள் கணவன், ஆனாலும் அவள் தன் இறந்துபோன காதலன் கார்த்திக்கைத்தான் அச்சமயத்தில் மனதில் கணவனாக வரித்திருந்தாள் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை எல்லாமே ஆணாதிக்கத்தின் எதிர்ப்பார்ப்பின் விளைவுதான். அவை பெண்களிடம் இருக்க வேண்டும் என்று திட்டம் வகுத்ததே ஒரு ஆணாகத்தான் இருக்க முடியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்///
ராகவன் அவர்களே,
விளக்கம் சரியோ தப்போ..
அடுத்தவன் ஸ்பரிசத்தை ஒரு பெண் அருவருப்பாய் உணர வேண்டும் என்பது நல்ல குணமாய் தோன்றுகிறது.குடும்ப கலாச்சாரத்திற்க்கு இது அடிப்படை..
கருத்துக்களுக்கு நன்றிகள்..
//அடுத்தவன் ஸ்பரிசத்தை ஒரு பெண் அருவருப்பாய் உணர வேண்டும் என்பது நல்ல குணமாய் தோன்றுகிறது.குடும்ப கலாச்சாரத்திற்க்கு இது அடிப்படை..//
அதே அடிப்படையை இன்னும் ஸ்ட்ராங்காகப் போடலாமே? ஆண்களுக்கும் பயிர்ப்பு வேண்டாமா? அவன் மட்டும் கண்ட பெண்களையெல்லாம் பார்த்து ஜொள்ளு விடலாமா?
பாரதி கூறிய "கற்பை இருவருக்கும் பொதுவில் வைப்போம்", திருவள்ளுவர் கூறிய "பிறன் மனை நோக்கா பேராண்மை" என்பதெல்லாம் விதிவிலக்கு கூற்றாகவே இருந்துள்ளன. மற்றப்படி புத்திமதியெல்லாம் பெண்களுக்கு மட்டுமே.
இது பற்றி நான் எழுதிய 6 பதிவுகளைப் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அடுத்தவன் ஸ்பரிசத்தை ஒரு பெண் அருவருப்பாய் உணர வேண்டும் என்பது நல்ல குணமாய் தோன்றுகிறது.குடும்ப கலாச்சாரத்திற்க்கு இது அடிப்படை..//
கணவனால் சபிக்கப்பட்டு அகழிகையை கல்லாக்குவதும்... அந்த அகழிகையை ராமன் மீண்டும் பெண்ணாக்குவதும்.. அந்த ராமனே தன் மனைவியை சந்தேகப்படுவதும்... இந்த ஆணாதிக்கக் கதைகளைத்தான் டோண்டு அவர்கள் தனது கருத்தில் சாடியுள்ளார்.
இங்கு ஆசிரியப்பெருமக்கள் அதிகமாயிருப்பது போல தெரிவதால் கணிதவியல்படி சொல்றேன்...
இந்திரலோகத்தில் இந்திரன் constant! இந்திராணிகள் மட்டுமே variable! இதுதானா குடும்ப கலாச்சாரம்???
நல்லாருக்கு உங்க ரசிகன்.
ஆனா இந்த நாலு குணம் பொண்ணுங்க கிட்ட இருக்கனும் னு நெனைக்கிற ஆண் தன் கிட்ட என்ன குணங்கள் இருக்கனும் னு சொல்லுவாங்களா?
Search in தமிழ் http://www.yanthram.com/ta/
//"குண்டக்க ம்ண்டக்கன்னா,குண்டக்க ம்ண்டக்க தான் "வடிவேலு மாதிரி,இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லமுடியுமாடான்னுடார்//
எப்பிடி ரசிகன் இப்பிடில்லாம் எழுத முடியுது!இது உங்களாலே மட்டுமெ முடியற கலக்கல்ஸ்.நடத்துங்க...நடத்துங்க!!
அன்புடன் அருணா
//அட இதுக்கு போயா கத்தருலருந்து கூப்புடவ//
எழுத்துப் பிழை ரசிகன்....கத்தாருக்குப் பதிலா கத்தர்னு வந்திருக்கு...அப்புறம் கூப்புடவ இல்ல "கூப்பிடுவ"
இதை பிரசுரிக்க வேண்டாம். please change it....
அன்புடன் அருணா
Post a Comment