Tuesday, October 23, 2007

பத்து நிமிடத்தில் கவிதை எழுத கத்துக்கணுமா? குறிப்பு :முன் அனுபவம் தேவையில்லை...

                                      
                                நம்ம கீதா அக்கா இனிமே கொஞ்சம் நாளுக்கு மொக்கை போடரதா தீர்மானிச்சியிருக்கரதால..அவிங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க (சும்மாவா நம்ம தமிழ் டீச்சராசே) நானும் இந்த வாரம் "மொக்கை வாரமாக"(ஏப்பம் விடும் குரலில் படிக்கவும்)அதிகாரப்பூர்வமா அறிவிச்சாச்சு.

                               ஆனா என்ன மொக்க போடலாமின்னு ரொம்ப யோசிச்சப்போ (அடப்பாவி..மொக்க போடரத்துக்கே யோசனையா?) நம்ம Dreamzz ஒரு மெகா மொக்கை போட்டிருக்கிறதா செய்தி கெடச்சிச்சா.. சரின்னு போய் பாத்தாக்கா...அங்க உபயோகமா "கவித போட்டி"யெல்லாம் வச்சிருக்காரு.
       
                                தலைப்பு " சலனம் ". இந்த கவித நமக்கு (சாப்பிட தெரியும் ; சமைக்க வராதுங்கர மாதிரி )படிக்க தெரியும் ,எழுத தெரியாதே.. நம்ம ..அபி அப்பா வேற.. " தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்" ன்னு சொல்லி பிராக்கெட்டுல "(சொந்த அனுபவம்) "ன்னு வேற எழுதியிருக்காரே.நமக்கு வேணாம் இந்த வம்பு இன்னு ஒதுங்கிய போது.

                                   "பயிற்ப்பு "விளக்கத்தை தனியா மொதலிலேயே சொல்லாத கடுப்பிலிருந்த(விவரம் "தமிழ் பெண் பதிவர்களுக்கு ஒரு கேள்வி -முந்தைய இடுகையை படிக்கவும்) நம்ம ரவி, ஏலே .குற்றம் சொல்லியே பேர் வாங்க நினைக்கும் பதிவர்களும் இருக்கிறாய்ங்க.. ன்னு மறைமுகமா.. [நீ சொம்மா மத்தவங்க கவிதய கிண்டலடிக்க தா லாயிக்கு] சொல்லி எனக்குள் இருந்த கவித புயல(?)  தூண்டி விட்டதால..

                                    நானும் சொம்மா.. ட்ரை பண்ணினேன்.ஏதோ சாதம் வடிக்க,பொங்கல் வந்த மாதிரி ஒரு வகையா 3 கவித கொத்த 10 மிணிட்ல எழுதி கிளிச்சிப்புட்டோமில்ல .பின்ன அத திருப்பி ஒட்ட வச்சி பாத்தாக்கா..கவித மாதிரி(?) வந்திருந்தது.
                                   
                                   அட்டா ..ன்னு Dreamzz -ட போட்டிக்கு பின்னூட்டத்த போட்டுட்டு.. நம்ம "பதிவிலேயே பின்னூட்டம் போடுவோர் சங்கம்." கொள்கைக்காக ,மத்தவங்களுக்கும் நம்ம கண்டு பிடிச்ச கவித எழுதும் ரகசியத்த சொல்லுவோமின்னு இங்க போட்டுடோமில்ல...

சப்தமில்லாமல் அசைவது சலனமாமில்ல..
அட கவித எழுதறது எப்பிடின்னு நானும் கண்டுபிடிச்சிட்டேன்.ஏன்னா இதான் என்னோட மொத கவித கொத்து(?).

                              மொதல்ல ஒரு காதல் கதய படிக்கவும்.சோக காதல் கத யாயிருந்தாக்கா நல்லது.(அப்பத்தேன் நம்ம "தமிழ்நதி" அக்கா போல கடைசி வரில கால் டம்லர் சோகத்த பிழிஞ்சி கொடுக்க முடியும்) .

                               பின்ன கண்ண மூடிக்கிட்டு தோனுனத உரை நடையா ,எழுதவும்.அங்கங்க கைய கால(வரிய) ஒடிச்சி போடவும்.கடைசியா ஒன்னு ரெண்டு எதுக மோன ய தூவவும்.சூடா (?)..கவித ரெடி..

                                 ஸ்பெல்லிங்க மிஸ்டேக் வந்தாக்கா திருத்த வேணாம். விட்டுடுங்க..பிழைதாங்க.. கவிதைக்கு அழகு.

                                 உங்க கவித உங்களுக்கே புரியலன்னாக்கா.. கவலப் படாதிங்க.. அதுக்கு படிக்கிற விசயந்தெரிஞ்சவங்க அவிங்களாவே " மீனிங் " கண்டுபிடிச்சி பின்னூட்டத்தில கிழி கிழின்னு கீச்சிடுவாய்ங்க...

ஆங்... மறக்காம.. கவிதையோட தலைப்ப உங்க கவித வரிக்குள்ள ஏதாவது எடம்பாத்து சொருகவும்.இல்லேன்னாக்கா.. உங்க கவிதலிருந்து ஏதாவது ஒரு வார்த்தய உருவி எடுத்து தலைப்பா போடவும்.

முடிஞ்சா..இருட்டுல நிக்கிற மரம், ஒத்த கோட்டால வரஞ்ச பெண்,பாதி பூ,பாதி பறவைன்னு ஒரே கொழப்பமாயிருக்கிற படங்கள சேர்க்கவும்.

இப்பிடி நா 10 மினிட்ல எழுதுன 3 கவித(மாதிரி) இத்தான்..

சலனம்.


மலர் விழுந்தால் நீரில் சலனம் வரலாம்..
மலரை நினைத்தாலே..சலனம் வருமோ..
உன்னை நினைக்கும் என் மனது.





நள்ளிரவு குளத்து நீரில் சலனம்
அட விழுந்தது நிலவின் பிம்பம்.




என்னை பார்க்கும் போதெல்லாம் சலனப்படும்  உன் கண்கள்.
என்னை உறங்கவிடாமல் சஞ்சலப்படுத்துவதை
நீ அறிவாயா?...





" Dreamzz "---ஆயிரம் பொன் எங்க... ஆயிரம் பொன் எங்க... ..(திருவிளையாடல் தருமி போல படிக்கவும்..).

எதுக்கு எல்லாம் இப்ப என்னிய அடிக்க வாராக...?..

66 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

உண்மையிலே கவிதைகள் அருமை. எளிமையான கவிதைகள். மலரை நினைத்தாலெ சலனம். குளத்தில் நிலவு. உறக்கம் வரவிடாமல் சஞ்சலம்.

குறுங்கவிதைகள் - கற்பனைத் திறம். தொடர்க திறமையினை.

வாழ்த்துகள்

Anonymous said...

நமக்கும் கவிதை முயற்சி பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசைதான். மொக்கையா இருந்தாலும் சரி.

said...

\"ஆங்... மறக்காம.. கவிதையோட தலைப்ப உங்க கவித வரிக்குள்ள ஏதாவது எடம்பாத்து சொருகவும்.இல்லேன்னாக்கா.. உங்க கவிதலிருந்து ஏதாவது ஒரு வார்த்தய உருவி எடுத்து தலைப்பா போடவும்.\

ROTFL.....
Short & sweet kavithais, good one Rasigan!!!

said...

ஹாய் ரசிகா,


//ஆங்... மறக்காம.. கவிதையோட தலைப்ப உங்க கவித வரிக்குள்ள ஏதாவது எடம்பாத்து சொருகவும்.இல்லேன்னாக்கா.. உங்க கவிதலிருந்து ஏதாவது ஒரு வார்த்தய உருவி எடுத்து தலைப்பா போடவும்.//

அடப்பாவமே, இதுக்கு பேரு தான் கவிதை மொக்கையா? ஒன்ன்மே பிரியலை..

//முடிஞ்சா..இருட்டுல நிக்கிற மரம், ஒத்த கோட்டால வரஞ்ச பெண்,பாதி பூ,பாதி பறவைன்னு ஒரே கொழப்பமாயிருக்கிற படங்கள சேர்க்கவும்.//

அட கஷ்டமே.. இது வேறயா? இதுக்கெல்லாம் எங்க போறது?

said...

ஹாய் ரசிகா.

//மலர் விழுந்தால் நீரில் சலனம் வரலாம்..
மலரை நினைத்தாலே..சலனம் வருமோ..
உன்னை நினைக்கும் என் மனது.//

அது எப்படி மலர் விழுந்தால் சலனமாகும்?
இருந்தாலும் 10 மினிட்டல ஒ.கே. பரவாயில்லை.ஏற்றுக் கொள்ளப்பட்டது.

said...

ஹாய் ரசிகா,

//ஏனுங்க இங்கன ஏதோ கவிதை எழுதியிருக்கீங்களாம் எங்கன இருக்கு? :)//

ஹா ஹா ஹா இது சூப்பருங்கோஓஓஓஒ

said...

ஹாய் ரசிகா ரசிகா,

//இது உண்மையாவே நல்லா இருக்குன்னு நான் சொன்னா நம்பணும்//

நம்ம கவிதாயினி சொல்லிட்டா அதுக்கு அப்பீலே இல்லீங்கோஒ.

நல்லாயிருக்கு.

said...

//ஆங்... மறக்காம.. கவிதையோட தலைப்ப உங்க கவித வரிக்குள்ள ஏதாவது எடம்பாத்து சொருகவும்.இல்லேன்னாக்கா.. உங்க கவிதலிருந்து ஏதாவது ஒரு வார்த்தய உருவி எடுத்து தலைப்பா போடவும்.//

அட இவ்ளோ ஈசியா கவிதை மொக்கை. நான் ரொம்ப மெனக்கெட்டு மொக்கை போட்டுகிட்டிருக்கேன்.

said...

அட போடா கொக்க மக்கா... அப்பிடின்னு தான் சொல்ல வந்தன். ஆனா வித்தியாசமா இருக்கு. நிறைய சிரித்தேன். உங்களுக்கும் கவிதை நல்லாவே வருது. முயற்சியுங்கள்.

said...

இரண்டு நாட்களுக்கு முன் தான் அவனுக்கு வானத்தில் இருக்கும் நிலாவைக்காட்டி, அதுதான் நிலா என்று கற்றுக்கொடுத்தேன். இரவில் நிலாவைப் பார்க்கும்போதெல்லாம் "அங்க பாரு நிலா" என்பான்.

தொ.கா.யில் நிலா குளத்தில் தெரிந்தது. இரவு தூங்க போகும் நேரம் அது. உடனே சொன்னான், "அங்க பாரு நிலா தண்ணில தூங்குது"

குளத்தில்
கல்லெறியாதே.
நிலா தூங்கட்டும்.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

// உங்க கவித உங்களுக்கே புரியலன்னாக்கா.. கவலப் படாதிங்க.. அதுக்கு படிக்கிற விசயந்தெரிஞ்சவங்க அவிங்களாவே " மீனிங் " கண்டுபிடிச்சி பின்னூட்டத்தில கிழி கிழின்னு கீச்சிடுவாய்ங்க...//

இங்க சில பேரு கவிதைக்கு 'மீனிங்' கேட்க வேணாம்கிறங்க. விரும்பினா வந்து பாருங்க..

http://panithulligal.blogspot.com/2007/10/blog-post_24.html

said...

மாப்பு! என்ன இது?

said...

கவிதைகள் நிஜமாவே நல்லா தான் இருக்க.. அதுவும் முதல் முறைனு வேற சொல்லறீங்க!

said...

//நள்ளிரவு குளத்து நீரில் சலனம்
அட விழுந்தது நிலவின் பிம்பம்.//
சூப்பரு

said...

எல்லாம் இருக்கட்டும்.. இப்படி கவிதையா கொட்டுதே.. குளத்திலா என்ன விழுந்துச்சு?

said...

//Dreamzz "---ஆயிரம் பொன் எங்க... ஆயிரம் பொன் எங்க... ..(திருவிளையாடல் தருமி போல படிக்கவும்..).//

சிவன் எழுதிய கவிதைக்கே அது கிடைக்காத பொழுது, மனுசாளு எழுதினதுக்கெல்லாம் எப்படி கொடுப்பாங்க :D

//நள்ளிரவு குளத்து நீரில் சலனம்
அட விழுந்தது நிலவின் பிம்பம்.//
நிலா பிம்பம் விழுந்து நீரில் சலனம் வராதய்யா! உம் கவிதையில் சொல் குற்றமோ, லகர ளகர குற்றமே இல்லை யெனினும், பொருட்குற்றம் உள்ளது...

தலைக்கு பின்னாடி ஒளி வட்டம் தெரிஞ்சாலும், குற்றம் குற்றமே!

ஹிஹி! எஸ்கேப்..

said...

சீனா சார்..எப்போதும் போல,உங்க வாழ்த்துக்கள் மனசுக்கு உற்சாகம் தருது.நன்றிகள்.

said...

வாங்க சின்ன அம்மிணி,நெனச்சிட்டீங்க இல்ல.. இதுவே மொத படி.. மக்கள்ஸ் கஷ்டப்படுவாய்ங்கன்னு பாத்தாக்கா.. நாம எப்ப கத்துக்கறது?...ஜோரா..ஆரமிச்சிடுங்க...

said...

//Short & sweet kavithais //
ரொம்ப நன்றிங்க திவ்யா..
ஆமா.. அந்த // ROTFL..... //-ன்னாக்கா என்னங்க.?...

said...

rote full ?
திவிரமா ஆராச்சியெல்லாம் பண்ணினாக்கா..ஏதோ திட்டிர வார்த்தயெல்லாம் பொருந்துது.நீங்களே சொல்லிடுங்களேன்.

said...

// ஏனுங்க இங்கன ஏதோ கவிதை எழுதியிருக்கீங்களாம் எங்கன இருக்கு? //
வாங்க வேதா, வாங்க..
இங்கன..எங்கன.. அடடா.. இதுவே கவித மாதிரி இருக்கே...
நம்ம கவிதல்லாம் பெரிய பெரிய கவிஞர்களுக்கும்,கவிதாயினிகளுக்கும் தான் கண்ணுல தெரியும்.உங்களுக்கு தெரியுங்கரது எனக்கு தெரியுமில்ல..ஹிஹி...(வேதா...இப்ப கவித.. தெரியுதாங்க.?...).

said...

// ஓ தனியா கலர்கலரா எழுதியிருக்கீங்களே அதுவா?../
அட இதுவும் நல்ல ஜடியாவாயிருக்கே வேதா.. மக்கள்ஸ்.. நம்ம கவித பாடத்துல கடைசி ஜடியாவா..இதயும் சேத்துக்கலாமில்ல...

" கவித ரெடியாயதும்,அதுதான் நீங்க கவிதைன்னு " சொல்லிக்கொள்ளும் பாகம் " என மத்தவங்களுக்கு ஈசியா புரிய..தனியா (நமிதா சைஸ் font உபயோகிச்சா தனிச் சிறப்பு) கலர் கொடுக்கவும்."

said...

// உங்களுக்கு ஆதரவு கொடுத்ததால் பரிசுத்தொகையில் பாதி எனக்கு //

டீல் எனக்கு O.K ..(நாளாயினி அக்கா பின்னூட்டத நீங்க இன்னும் படிக்கலன்னு நெனக்கிறேன்..ஹிஹி..)

// ட்ரீம்ஸ் எங்கப்பா போயிட்ட உன்னய வச்சு இங்க ஒருத்தர் காமெடி பண்ணிட்டாரு//
இந்த" போட்டுக் கொடுக்கும் " வேலய மாத்திரம் மறக்காம செய்யிரிங்களே,அது எப்படி வேதா?ஹா ஹா..

said...

// இது உண்மையாவே நல்லா இருக்குன்னு நான் சொன்னா நம்பணும் :D//
நம்பறேன்.நீங்க சொன்னா.. நிச்சயமா நம்பறேன்.. ( நம்பித்தான ஆகனும் ,பரிசு தொகையில 50:50 பார்ட்னராச்சே)

நல்லா கவிதை எழுதுரிங்க.. நீங்களே நல்லாயிருக்குன்னு சொன்னதால ரொம்ப சந்தோஷமுங்க...நன்றிகள்.

said...

வாங்க சுமதி வாங்க...நல்வரவு..
// அடப்பாவ(வி) மே, இதுக்கு பேரு தான் கவிதை மொக்கையா? ஒன்ன்மே பிரியலை..//

ஒன்னுமே பிரியாம இருக்கரது தா கவிதயின் வெற்றி.. மார்டன் ஆர்ட்ஸ் மாதிரி,இது மார்டன் கழுத சாரி கவித ன்னு வச்சிக்கங்களேன்...அதுக்கு " மீனிங் "கண்டுக்க பெரியாள்லாம் இருக்காங்கல்ல.. நாம எழுதரதோட நிருத்திக்குவேமேன்னுதான் ஹிஹி.... என்ன சொல்றிங்க... அப்பரம் உங்க " சுட்ட "சாரி, கேட்ட கவிதகள் ரொம்ப சூப்பராய்ருந்துதுங்க..

said...

// அது எப்படி மலர் விழுந்தால் சலனமாகும் //
ஏம்பா.. மலர் விழுந்தாலும்,நீர் பரப்புல.. லேசா அலை வரரத நீங்க பாத்ததில்லயா?..(இதுக்குதான் "போகோ" பாக்கரத விட்டுட்டு "டிஸ்கவரி" பாக்கனுங்கரது)
நா எழுதனா மட்டும் ஒத்துக்க மாட்டேங்கரிங்களே சுமதி..

// ஒ.கே. பரவாயில்லை.ஏற்றுக் கொள்ளப்பட்டது. // உங்க பெருந்தன்மைக்கு நன்றி..
அப்பாடா ஒருவழியா நம்ம சுமதி ஏத்துக்கிட்டாய்ங்க..

said...

// //ஏனுங்க இங்கன ஏதோ கவிதை எழுதியிருக்கீங்களாம் எங்கன இருக்கு? :)//

ஹா ஹா ஹா இது சூப்பருங்கோஓஓஓஒ.. //

ஏனுங்க சுமதி நா திட்டுவாங்கறத ரசிக்கிறதுல.. உங்களுக்கு எவ்ளோ சந்தோஷம்..ஹிஹி..(அப்பிடி இன்னா காண்டு .. எம்மேல...)

said...

// நல்லாயிருக்கு. //
எவ்வளவுதா நீங்க கலாய்ச்சாலும் (நல்லாவே கலாய்க்கிறிங்க..),கடிசியா நம்ம பிரண்ட உட்டு கொடுகரதில்லன்னு பாராட்டுனதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்ங்க.. சுமதி..

said...

வாங்க சிவா..
// அட இவ்ளோ ஈசியா கவிதை மொக்கை(?).
நான் ரொம்ப மெனக்கெட்டு மொக்கை போட்டுகிட்டிருக்கேன்.//
எனிக்கே இப்பத்தேன் தெரியும்.. ஆனா ரொம்ப மொக்கையாயிட்டா அடிக்க கூட வாராய்ங்க...

said...

//

அட போடா கொக்க மக்கா... அப்பிடின்னு தான் சொல்ல வந்தன். ஆனா வித்தியாசமா இருக்கு. நிறைய சிரித்தேன //

சொல்ல வந்தத மாத்திக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி நளாயினி அக்கா...ஒரு வேள இன்னும் ஏதாவது திட்டனுமின்னு ஜடியா இருந்தா கூட.. நம்ம வேதாவுக்கும் அதுல பாதி குடுத்துருங்களேன்..ஏன்னா எது கெடிச்சாலும் ஆளுக்கு பாதின்னு ஒரு டீல் இருக்கில்ல...( வேதா : அடப்பாவி சும்மாயிருக்கரவங்கள கூட ஞாபகப்படுத்தி திட்ட சொல்ரியே..ஒன் பொறுப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா...இதுக்குத்தா.. பேரம் பேசாம 50:50 டீல் ஒத்துக்கினியா?...இரு.. இரு ..ஒன்னிய அடுத்த பதிவுல..கவிதயாலயே அடிக்கிறேன்.. என முறைக்க .. மிரண்டு போன நான், எஸ்கேப்)

said...

// உங்களுக்கும் கவிதை நல்லாவே வருது. முயற்சியுங்கள். // இப்பிடித்தேன் நம்மல அடிக்கடி ஏத்திவிட்டு உடம்பு முழுக்க ரணகளமாக்கிடராய்ங்க.. (வின்னர் - கைப்புள்ள மாதிரி படிக்கவும்). பாராட்டுக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நளாயினி அக்கா..

said...

// குளத்தில்
கல்லெறியாதே.
நிலா தூங்கட்டும்.//
நல்லாயிருக்கு தறுதலையாரே (ஒரு மரியாதைக்கு) (பேரே அது தானா?).நன்றிகள்.

said...

// அவிங்களாவே " மீனிங் " கண்டுபிடிச்சி பின்னூட்டத்தில கிழி கிழின்னு கீச்சிடுவாய்ங்க...//
// இங்க சில பேரு கவிதைக்கு 'மீனிங்' கேட்க வேணாம்கிறங்க.//
வாங்க நவன்.அப்ப நா சொன்னது சரிதான..

said...

// அதுவும் முதல் முறைனு வேற சொல்லறீங்க!//
வாங்க தினேஷ்.. அட நெசமாத்தாங்க... எல்லாம் பூவோட சேரர நாரும் மணக்குங்கரமாதிரி ,நம்மள பாராட்டவும்,திட்டவும்,உரிமையோட கலாட்டா செய்யயும் நாளு நல்ல நண்பர்களோட சேந்ததால தாங்க.. நீங்களும் மேல பின்னூட்டம் போட்டு கலக்கின என்னோட, நண்பர்களோட வீட்டுக்கும் ஒரு நடை போனிங்கனா.. உங்களுக்கும் ஒரு கலை ஆர்வம் வரும் பாருங்க...

said...

// லகர ளகர குற்றமே இல்லை யெனினும், பொருட்குற்றம் உள்ளது...//
அடப்பாவமே....அது நீங்கதானா.. நக்கீரர்ங்கரது..
உங்களதா இந்த வலைப்பதியுலகத்துல பலபேரு பின்பற்றராய்ங்க..
நானும் எஸ்கேப்..

said...

// ஆங்... மறக்காம.. கவிதையோட தலைப்ப உங்க கவித வரிக்குள்ள ஏதாவது எடம்பாத்து சொருகவும்.இல்லேன்னாக்கா.. உங்க கவிதலிருந்து ஏதாவது ஒரு வார்த்தய உருவி எடுத்து தலைப்பா போடவும். //

நல்லா ரசிக்கும் படியா இருந்துச்சு ரசிகன்.
பல கவிதைகளைப் பார்க்கும் போது இது உண்மை என்றே படுகிறது.

said...

// முடிஞ்சா..இருட்டுல நிக்கிற மரம், ஒத்த கோட்டால வரஞ்ச பெண்,பாதி பூ,பாதி பறவைன்னு ஒரே கொழப்பமாயிருக்கிற படங்கள சேர்க்கவும்.//

இனிமே இப்படிப்பட்ட படங்களை பார்க்கும் போது உங்க பதிவு நியாபகம் நிச்சயம் வரும். ஹா...ஹா...

Anonymous said...

சரிதான்.. சொல்பவர்ர்களுக்குப் புரிந்தால்! ஆதரவுக்கு நன்றி.

Anonymous said...

ரசிகா ,நீ மொதல்ல உங்கால காட்டு.. நீ எங்கயோ போயிட்ட..

said...

verynice mokkai.hihihi..' mokkai vaaram 'kalakkuriya thalaivaa.

said...

kavuje/padhivu/comments ellame nalla irukku..first time unga kada pakkam varen.. adhanaala aayirathula (oh ungalukku ainooru thaana..) sari, ainoorula enakku oru pangu odhukku vainga rasigare :)

(idhe maathiri veda kittayum kettiya-nu ellam sinna pulla thanama kekkakoodadhu hehe)


ennama ideas sollirkinga..
//
ஆங்... மறக்காம.. கவிதையோட தலைப்ப உங்க கவித வரிக்குள்ள ஏதாவது எடம்பாத்து சொருகவும்.இல்லேன்னாக்கா.. உங்க கவிதலிருந்து ஏதாவது ஒரு வார்த்தய உருவி எடுத்து தலைப்பா போடவும்.
//
idhu toppu !!

appo naanum kavuje ezhudalaamnu solringa.. oru naal andha kodumayayum indha mann thaangattum :P

Anonymous said...

//மலர் விழுந்தால் நீரில் சலனம் வரலாம்..
மலரை நினைத்தாலே..சலனம் வருமோ..
உன்னை நினைக்கும் என் மனது. //

நல்லா இருக்கு..... உண்மைய சொன்னா இது மொக்கை கவிதை இல்ல, நல்ல கவிதை :-)

said...

// நல்லா ரசிக்கும் படியா இருந்துச்சு ரசிகன்.
பல கவிதைகளைப் பார்க்கும் போது இது உண்மை என்றே படுகிறது.//
கருத்துக்கும் வருகைக்கும் பிரித்திக்கு மனமார்ந்த நன்றிகள்.

said...

// ரசிகா ,நீ மொதல்ல உங்கால காட்டு.. நீ எங்கயோ போயிட்ட..//
ஏனுங்க வாரிவிடரதுக்குதான..?.. நா ரொம்ப உஷாருங்கோ..ஹிஹி..

said...

நன்றிகள் விஜய்.எழுத நேரமில்லனாக்கா வேற வழி..

said...

வாங்க.. வேதா..
// டெம்ப்ளேட்ட சரி பண்ணுங்க. அதே மாதிரி இந்த குதிக்கற சன்னலை அதான்பா இந்த பாப் அப் விண்டோவையும் எடுத்துடுங்க//

செஞ்சிட்டேன்.. இப்பா ஓக்கேவா?(ஆனா புது ஆம்ப்லெட்டில ,சாரி டாம்ப்லெட்டில பின்னூட்டம் போடறவங்க பேர் வரமாட்டேங்குதே..)
// பரிசுல தான் பாதிய கேட்டேன் நீங்க வாங்கற உள்குத்துக்கெல்லாம் நோ பார்ட்னர்ஷிப் :D//
கவிதாயினிகளுக்கு போற்றுதலும்,தூற்றுதலும் ஒரே மாதிரின்னுல்ல.. ஊருல பேசிக்கிறாய்ங்க..)

// குதிக்கற சன்னலை // ஹா..ஹா..ஹா.. நல்லாயிருக்கு வார்த்தை.

said...

வாங்க வாங்க அருண்..
// (idhe maathiri veda kittayum kettiya-nu ellam sinna pulla thanama kekkakoodadhu hehe)//
அட இப்புடி ஒரு பிஸினஸ் இருக்கா.. நல்லாயிருக்கே ஜடியா....
// idhu toppu !!//
ரொம்ப நன்றிங்க அருண்.(ஆமா.. நீங்க அடிக்கடி லாங்..லீவு எடுக்கறதா கேள்விப்பட்டேனே..உண்மையா?..)

said...

// நல்லா இருக்கு..... உண்மைய சொன்னா இது மொக்கை கவிதை இல்ல, நல்ல கவிதை :-)//

வாங்க அப்பாவி சார். இப்பிடி நாளு பேர் அப்பாவித்தனமா பாராட்டரதாலதான் நமக்கும் கவித கிருக்க ஆசை வருது.பாராட்டுக்கு நன்றிங்க...அடிக்கடி வாங்களேன்..

said...

//
.(ஆமா.. நீங்க அடிக்கடி லாங்..லீவு எடுக்கறதா கேள்விப்பட்டேனே..உண்மையா?..)
//

appapo varra pazhakkamum irukku.. adha oru paya sollirka maatane :P

said...

மாமே ..அப்பப்ப வந்ததால தான் அது லாங் லீவு,வராட்டி அது பர்மணன்ட் லீவாயிடுமில்ல....ஹிஹி..

said...

// உங்க கவித உங்களுக்கே புரியலன்னாக்கா.. கவலப் படாதிங்க.. அதுக்கு படிக்கிற விசயந்தெரிஞ்சவங்க அவிங்களாவே " மீனிங் " கண்டுபிடிச்சி பின்னூட்டத்தில கிழி கிழின்னு கீச்சிடுவாய்ங்க...//

மாடர்ன் ஆர்ட் மாதிரி மாடர்ன் கவிதைனு சொல்லிகிடலாம்.
( யார்னா மாடர்ன் கவிதைனு ஒரு போட்டி வைங்க.. அப்படியே எனக்கு ஒரு தந்தி அடிச்சி சொல்லிடுங்கோ..:P )

said...

அடேங்கப்பா = இவ்ளோ பின்னூட்டமா - வாழ்க - மொக்க போட்டாத்தான் இளந்தலைகளுக்குப் பிடிக்கும் போலெ இருக்கு- ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பதிவே விட பின்னூட்டங்கள் நல்லாவே இருக்கு

said...

// மாடர்ன் ஆர்ட் மாதிரி மாடர்ன் கவிதைனு சொல்லிகிடலாம். //
சரியா சொன்னீங்க்கோ..பொடியன்..நன்றிகள்.
//( யார்னா மாடர்ன் கவிதைனு ஒரு போட்டி வைங்க.. அப்படியே எனக்கு ஒரு தந்தி அடிச்சி சொல்லிடுங்கோ..:P )//
கலக்கிடலாம்..

said...

// பதிவே விட பின்னூட்டங்கள் நல்லாவே இருக்கு//
நன்றிகள் சீனா சார்..
வாங்க..வாங்க..எல்லாரும் வாங்க.. சீனா சாரோட வாழ்த்துக்கள்..நம்ம எல்லாருக்கும் சேத்துத்தான்.

said...

தங்கள் முயற்சி கண்டு மெய்சிலிர்த்தேன்.
நானும் கவிதை எழுத கற்றுக்கொண்டேண்.
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற என்னாலன உதவியாக எனது பதிவில் தங்களுக்கு விளம்பரம் கொடுத்துள்ளேன்.சுட்டபழம்

said...

தங்கள் முயற்சி கண்டு மெய்சிலிர்த்தேன்.
நானும் கவிதை எழுத கற்றுக்கொண்டேண்.
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற என்னாலன உதவியாக எனது சுட்டபழத்தில் தங்களுக்கு விளம்பரம் கொடுத்துள்ளேன்

said...

//நக்கீரன் said...
தங்கள் முயற்சி கண்டு மெய்சிலிர்த்தேன்.
நானும் கவிதை எழுத கற்றுக்கொண்டேண்.
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற என்னாலன உதவியாக எனது சுட்டபழத்தில் தங்களுக்கு விளம்பரம் கொடுத்துள்ளேன//
வருகைக்கும்.. விளம்பரத்துக்கும் ரொம்ப நன்றீங்க..நக்கீரரே.. (நல்லவேளை சொற்குற்றம்,பொருட்குற்றம் கண்டு பிடிக்காம விட்டீங்களே..ஹிஹி..)

said...

இப்படி கலர் கலரா
எழுதி கவிதைன்னு சொன்னா,
விண்ணில் விரிந்த
வானவில்லும் ஒரு,
ஏழு வரி கவிதைதான்
--------------------------
[ 2மினிட்ஸ் மேகி கவிதை "இது எப்படி இருக்கு?"]

said...

மொக்கை போடுவது எப்படி?
அடுத்த விளம்பரம் ரெடி.

said...

//goma said...
இப்படி கலர் கலரா
எழுதி கவிதைன்னு சொன்னா,
விண்ணில் விரிந்த
வானவில்லும் ஒரு,
ஏழு வரி கவிதைதான்//
----------------------

யார் இல்லன்னு சொன்னது ??? ரசிகனா ??


//[ 2மினிட்ஸ் மேகி கவிதை "இது எப்படி இருக்கு?"] //

நல்லாவெ இருக்கு - 2 மினிட்ஸ் அதிகம் - உடனே உடனே வேணும்

said...

// இப்படி கலர் கலரா
எழுதி கவிதைன்னு சொன்னா,
விண்ணில் விரிந்த
வானவில்லும் ஒரு,
ஏழு வரி கவிதைதான்
--------------------------
[ 2மினிட்ஸ் மேகி கவிதை "இது எப்படி இருக்கு?"]//

ஆஹா..இப்பத்தேன் கவனிச்சேனுங்க கோமதி..அருமையா இருக்கு..
வண்ணங்கள் வரிகளை கவிதையாக்கினாலும் இல்லாவிட்டாலும்
வானவில் நிஜமாவே ஒரு கவிதைதான்..சூப்பருங்க....

said...

// நக்கீரன் said...

மொக்கை போடுவது எப்படி?
அடுத்த விளம்பரம் ரெடி.//

வாங்க நக்கீரன் அவர்களே...
என்னிய வச்சி காமெடி கிமெடி பண்ணிரமாட்டீங்களே?..

said...

வாங்க சீனா சார் வாங்க..

// cheena (சீனா) said...

யார் இல்லன்னு சொன்னது ??? ரசிகனா ??
ஜய்யோ.. அப்பிடி நா சொல்லலிங்களே ஜயா..என்னிய பொலி போடறதிலேயே குறியா இருக்கீங்களே..

//[ 2மினிட்ஸ் மேகி கவிதை "இது எப்படி இருக்கு?"] //
நல்லாவெ இருக்கு - 2 மினிட்ஸ் அதிகம் - உடனே உடனே வேணும//
இது என்ன சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு.. ஹிஹி..
(எனக்கு இப்பவே ஜஸ்கிரிம் வேணும்..)

Anonymous said...

:)

Anonymous said...

Hello Neenka kavita kavitanu sollidu kadasi Varaikkum khddve ellaiye... parthinkala.. Ethu unkalukke niyajama padutha

usha said...

Rompa arumaiya erukku appidinu naan poi solluven. Neenka kandukkathinka sariya...

Eni enkala neenka Amatthatinka kavitha sollrenu sollidu katha sollidu erukkinka