ரொம்ப நாளா தொலைச்சிட்டு தேடிக்கிட்டிருந்த மொபைல் எக்ஸ்ட்ரா மெமரி இன்னிக்கு மாட்டிக்கிச்சு.. அத துழாவி பாத்தா.. ஒரே பூக்கள் வாசனை... நா போன ஆகஸ்ட் மாசம் லீவுக்காக ஊருக்கு போயிருந்த போது, என்னோட ஃபிரண்டு.. வீட்டுக்கு விசிட் செஞ்ச்சேன்.
யாருன்னு கேக்கறிங்களா?.. அதான் பாண்டிச்சேரி கவர்னர்ன்னு கூட சொல்லுவாய்ங்களே... என்னிய வரவேற்கறதுக்காக.. வீடு முழுக்க அலங்காரம் செஞ்சு நிறய பூச்செடிகள்ல்லாம் வைச்சு ,மியுஸிக் எல்லாம் போட்டு அமக்கள படுத்திப்புட்டார் நண்பர். மரியாதை தெரிஞ்சவர்.
அப்புறம் தான் தெரிஞ்சுது என்னோட வருகைய முன்னிட்டு பள்ளிக்கூடம்ல்லாம் கூட லீவு விட்டுட்டாய்ங்களாமில்ல...
என்னடா..இது ?.எனக்காக படிக்கற பசங்களுக்கு எல்லாம் லீவு விடனுமா?. இருக்கிற மூனு லேடீஸ் காலேஜிகளுக்கு மட்டும் லிவு விட்டா பத்தாதான்னு கேட்டேன்.
அதுக்கு "என்ன மாமே இப்பிடி சொல்லிப்புட்டே.. உன்னோட வருகைய முன்னிட்டு அறுவது வருஷத்துக்கு முன்னாடியே ஃபிரன்ஞ்சு காரன் பாண்டிசேரிக்கு இந்த நாளுல சுதந்திரம் குடுத்திருக்கான். நாங்க இது கூட செய்யலேனாக்கா எப்படி"ங்கராய்ங்க பாசக்கார பயலுங்க....
சரி சரி... நம்ம புகழ் நமக்கே தெரியலைன்னு பிரண்டோட வீட்ட சுத்திப்பாக்கும்போது கை சும்மா இல்லாம
என்னோட மொபைலோட கேமராவால பாக்கற பூவையெல்லாம் கிளிக்கிக்கிட்டே வந்துச்சு...2 M பிக்செல்லா இருந்தாலும் ,அந்த ராத்திரியிலயும் ஒன்னு ரெண்டு படம் தெளிவா வந்திருந்தது.. அடடா... இது கொஞ்சம் முன்னாடி கெடக்காம போயிருத்தே..
PIT போட்டில மொத பரிசு மிஸ் பண்ணிப்புட்டோமேன்னு ஓரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியாவா ஆகிடுத்து...( முதல் பரிசு வாங்குன நந்து அங்கிள் மன்னிக்கவும்!!! :P )
நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல நெனக்கும் போது கெடச்சது ரொம்ப சந்தோஷமாகிடுச்சு..
யார் யாருக்கு என்ன என்ன கலர் புடிக்குமின்னு தெரியாததால ,அப்போ எடுத்த எல்லா பூக்களோட போட்டோவையும் குவிச்சுட்டேன்...
உங்களுக்கு புடிச்ச பூவோட ,
நண்பர்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

WISH
YOU
VERY
SPECIAL
HAPPY
NEW
YEAR
BY
RASIGAN...
SOUHAITEZ-VOUS LA NOUVELLE ANNÉE HEUREUSE TRÈS SPÉCIALE
WENS U ZEER SPECIAAL GELUKKIG NIEUW JAAR
ΕΠΙΘΥΜΙΑ ΕΣΕΙΣ ΠΟΛΥ ΕΙΔΙΚΗ ΚΑΛΗ ΧΡΟΝΙΑ
ПОЖЕЛАЙТЕ ВАМ ОЧЕНЬ СПЕЦИАЛЬНОЕ С НОВЫМ ГОДОМ
DESÉELE LA FELIZ AÑO NUEVO MUY ESPECIAL
A RELAXED MIND,
A PEACEFUL SOUL,
A JOYFUL SPIRIT,
A HEALTHY BODY &
HEART FULL OF LOVE, THAT IS MY WISH 2 U AND YOUR FAMILY
HAPPY NEW YEAR
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்...
26 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
Happy new year rasigan.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.படங்கள் எல்லாமே அழகாக இருக்கிறது.
'அதுக்கு என்ன மாமே இப்பிடி சொல்லிப்புட்டே.. உன்னோட வருகைய முன்னிட்டு அறுவது வருஷத்துக்கு முன்னாடியே ஃபிரன்ஞ்சு காரன் பாண்டிசேரிக்கு இந்த நாளுல சுதந்திரம் குடுத்திருக்கான். நாங்க இது கூட செய்யலேனாக்கா எப்படிங்கராய்ங்க பாசக்கார பயலுங்க....'
ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு:))
இனிய மலர்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
எல்லாப் பூக்களும் எனக்குப் பிடித்ததே
ஆகவே இந்தப் புத்...பூக்களாண்டு அனைவருக்கும் உங்களையும் சேர்த்துத்தான் வண்ணமயமாக வாசமயமாக மலரவைப்போம்!!!
ஹாய் ரசிகா,
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே,
"என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"
//உங்களுக்கு புடிச்ச பூவோட ,
நண்பர்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.../
Lol.. olinthirukkum message rasikka thakkathu!
Ungallukum Happy New year!
//?.எனக்காக படிக்கற பசங்களுக்கு எல்லாம் லீவு விடனுமா?. இருக்கிற மூனு லேடீஸ் காலேஜிகளுக்கு மட்டும் லிவு விட்டா பத்தாதான்னு கேட்டேன்.
//
athu sari!
Happy New year Rasigan
// rK said...
Happy new year rasigan.//
நன்றிகள் ஆர்.கே சார்..
// பிரியமுடன் பிரித்தி said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.படங்கள் எல்லாமே அழகாக இருக்கிறது.//
வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பிரித்தி...
// குட்டிபிசாசு said...
இனிய மலர்ச்சியான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!//
நன்றிகள் குட்டிப்பிசாசு அவர்களே..
வாழ்த்துக்கள் உங்களுக்கு...
// நானானி said...
எல்லாப் பூக்களும் எனக்குப் பிடித்ததே
ஆகவே இந்தப் புத்...பூக்களாண்டு அனைவருக்கும் உங்களையும் சேர்த்துத்தான் வண்ணமயமாக வாசமயமாக மலரவைப்போம்!!!//
கவிதைத்தனமான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நானானி..அவர்களே..
// வேதா said...
படங்களெல்லாம் ரொம்ப அழகா இருக்கு பூக்கள் என்றாலே அழகு தானே :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)//
உண்மைதான்.. மலர்கள் அழகானவையே...ரசிப்பவர் உள்ளவரை...
உங்க போட்டிக்கு அனுப்பப் படாத கவிதை அருமையா இருக்குங்க..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..
// Sumathi. said...
ஹாய் ரசிகா,
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே,
"என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"//
வாங்க சுமதி, அப்போ மொத்தம் எத்தனை புத்தாண்டு வாழ்த்துக்கள் கெடச்சதுன்னு சொல்லவேயில்லையே?..:P
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
// Dreamzz said...
//உங்களுக்கு புடிச்ச பூவோட ,
நண்பர்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.../
Lol.. olinthirukkum message rasikka thakkathu!
Ungallukum Happy New year!//
நல்வருகைகள் மாம்ஸ்...
தேவதைக் கவிதைகள் எழுதறவருன்னா சும்மாவா?... தெளிவா புரிஞ்சிக்கிட்டிங்க..
மனமுவந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
// மங்களூர் சிவா said...
Happy New year Rasigan//
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சிவா...
தங்களுக்கு நல்வருகைகளையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்வதில் மகிழ்கிறேன்...
happy new year-2008 rasigan
really ur photography skill is good.try some more & more.
wishes
HAPPY NEW YEAR SREEDHAR SIR.
Wishes maamz.. அது சரி .. இந்த மலரா? நான் கூட உங்க பக்கத்து வீட்டு மலரோன்னு நெனச்சிட்டேன். :))
// vijay said...
happy new year-2008 rasigan//
வாங்க விஜய், நன்றிகள்...
vijay said...
really ur photography skill is good.try some more & more.
wishes //
பாராட்டுகளுக்கு நன்றிகள் .நிச்சயமாக முயலுவேன்..
// Sivakumar NGL Plant Qatar said...
HAPPY NEW YEAR SREEDHAR SIR.//
நன்றிகள் சிவக்குமார் முதல் பின்னூட்டத்திற்க்கு... வாருங்கள் அடிக்கடி..
// SanJai said...
Wishes maamz.. அது சரி .. இந்த மலரா? நான் கூட உங்க பக்கத்து வீட்டு மலரோன்னு நெனச்சிட்டேன். :))//
வாங்க சஞ்ஜய்...மறுவடிவத்திற்க்கு வாழ்த்துக்கள்...
பக்கத்து வீட்டு பூவையெல்லாம் விளம்பரப் படுத்தப்டாது.. மவுசு ரொம்ப ஏறிட்டுமில்ல..:P
அவ்வ்வ்வ்வ்வ்வ்....என்னாச்சு என்னோட பின்னூட்டங்கள் தமிழ்மணத்துல திரட்டப்படவே இல்லை... ஓகே மக்கள் பொழச்சிப்போகட்டும்..:))
// delphine said...
ரசிகன்..
பூக்கள் யாவும் அருமை. அதோடு உங்கள் வாழ்த்துக்களும் மிகவும் அருமை..//
நன்றிகள் ஃடெல்பின் அக்கா...
Post a Comment