கண்களை மூடிக்கொள்ளுங்கள். சிகரங்களின் தலையிலிருந்து வழியும் அருவி
சல சலக்கும் மூங்கில் காடு என பாடலில் சொல்லியிருக்கும்
இடத்தில் நீங்கள் இருப்பதாக மனதில் கற்பனை செய்துக்கொண்டு
பாடலை கேட்டுப்பாருங்க.... என்ன ஒரு இசை ?..வழியும் ஹரிஹரனின் தேன் குரலோடு...
Random பாடல்கள் உபயம் ...என்றும் இணைபிரியா, என்னுயிர் தோழன் (படத்தில்...)
மூங்கில் காடுகளே .... |
மூங்கில் காடுகளே, வண்டு முனங்கும் பாடல்களே..
தூர சிகரங்களில், தண்ணீர் துவைக்கும் அருவிகளே..
இயற்க்கை தாயின் மடியைப் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்துப் போனேன்,மனிதனாய் இருந்து
பறக்க வேனும் பறவையாய் திரிந்து
பறந்து,திரிந்து,பறந்து,பறந்து...
மூங்கில் காடுகளே, வண்டு முனங்கும் பாடல்களே..
தூர சிகரங்களில், தண்ணீர் துவைக்கும் அருவிகளே..
சேற்றுத்தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
சேறு மணப்பதில்லை, பூவின் ஜிவன் மணக்கிறது.
வேரை அறுத்தாலும், மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல், மரங்கள் ஆனந்த பூச்சொறியும்
தாமரைப்பூவாய் மாறேனோ,ஜென்ம சாபல்யங்கள் காணேனோ?.
மரமாய் நானும் மாறேனோ,என் மனித பிறவியில் உய்யேனோ?.
மயிலோ,முயலோ பருகும் வண்ணம் வெள்ளை.. பனித்துளி ஆவேனோ?..
மூங்கில் காடுகளே, வண்டு முனங்கும் பாடல்களே..
ஓ..ஓ...தூர சிகரங்களில், தண்ணீர் துவைக்கும் அருவிகளே..
உப்புக் கடலோடு, மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்புத்தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது..
மலையில் விழுந்தாலும்,சூரியன் மரித்துப்போவதில்லை
நிலவுக்கு உயிரூட்டி, தன்னை நீட்டித்துக் கொள்கிறது..
மேகமாய் நானும் மாறேனோ?,அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ?
சூரியன்போலவே மாறேனோ?..என் ஜோதியில் உலகை ஆளேனோ?
ஜனனம்,மரணம் அறியா வண்ணம் நானும் மழைத்துளி ஆவேனோ?..
மூங்கில் காடுகளே, வண்டு முனங்கும் பாடல்களே..
ஓ..ஓ...தூர சிகரங்களில், தண்ணீர் துவைக்கும் அருவிகளே.
இயற்க்கை தாயின் மடியைப் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்துப் போனேன்,மனிதனாய் இருந்து
பறக்க வேனும் பறவையாய் திரிந்து
பறந்து,திரிந்து,பறந்து,பறந்து...
***
ஆரம்பத்தில் காதை கிழிக்கும் சப்தங்களும்,நூறு வயலீன்களின் கதரல்களும்
என்ன கொடுமை இதுன்னு ஃபீல் பண்ணரதுக்குள்ள
எல்லாம் அடங்கி..
பூக்கும் ரோஜாவின் மென்மையுடன் துவங்குகிறது பாடல்...
காதலை மையமாக வைத்து எழுதப்பட்டாலும்..
உலகம் அழியப்போகுதுன்னு ஒரு கும்பல்
புருடா விட்டுக்குன்னு திரியும் வேளையில்
கடைசியில் சொல்லப்பட்ட
// காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை.....
ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம்.... கிழிவதில்லை..
கடல் நிலமாகும் , நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை...
உடல்களும் போகும்,உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை..//
போன்ற பாசிட்டிவ் வரிகள்
என்னை கவர்ந்தன..இசையும்தேன்..
நாளை உலகம் இல்லையெ... |
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,முன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.
உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் .........
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என் செய்வாய்?
ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்துக்கொள்வேன்.
உன் இதழ்களின் மேலே இதழ்களைச் சேர்த்து
இருவிழி மூடிக்கொள்வேன்.
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியைத் தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்....
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,மன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.
உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.
காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை.....
ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம்.... கிழிவதில்லை..
கடல் நிலமாகும் , நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை...
உடல்களும் போகும்,உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை..
நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?
வானையும் வணங்கி,மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக்கொள்வேன்..
ஆயிரம் பூக்களில் படுக்கையும் அமைத்து
உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்.
என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.
நாளை உலகம் இல்லையென்றானால் அழகே என்ன செய்வாய்?
***
கேள்வியும் நானே ,பதிலும் நானே..
அன்பே சிவம்....MP3 |
யார்? யார்? சிவம்?
நீ,நான்,சிவம்
வாழ்வே தவம்
அன்பே சிவம்.
ஆத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம்
சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவர்க்கோ.
அன்பே சிவமாகும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
யார்? யார்? சிவம்?
நீ,நான்,சிவம்
வாழ்வே தவம்
அன்பே சிவம்.
யார்? யார்? சிவம்?
நீ,நான்,சிவம்
வாழ்வே தவம்
அன்பே சிவம்.
இதயம் என்பது சதைதான் என்றால்
எறிதழல் தின்று விடும்
அன்பின் கருவி இதயம் என்றால்
சாவை வென்று விடும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
யார்? யார்? சிவம்?
நீ,நான்,சிவம்
வாழ்வே தவம்
அன்பே சிவம்.
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு
முடிவே இல்லையடா..
மனதின் நீளம் எதுவோ அதுவே
வாழ்வின் நீளமடா
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்றும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
அன்பே சிவம் அன்பே சிவம் எங்கும்
***
தத்துவப்பாட்டுன்னாக்கா சோகமாத்தேன் இருக்கனுமா? என்ன?
தோம்....MP3 |
தோம் கருவில் இருந்தோம,கவலையின்றி கண்மூடி கிடந்தோம்.
தோம் தரையில் விழுந்தோம்,விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது ,அப்போது போன தூக்கம் நம் கண்களிலே
எப்போது ,எப்போது வந்து சேரும் விடை தோனலியே..
..
அலைகளை அலைகளை பிடித்துக்கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்துக்கொண்டு
செளக்கியம் அடைவது நியாயமில்லை..
..
வழி எது? வாழ்க்கை எது விளக்கவில்லை..
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை.
..
கனவுகள் மட்டும் இல்லையென்றால்
கவலைகள் நம்முயிர் தின்றுவிடும்..
..
ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரைதான்
இரண்டுக்கும் நடுவே ஓடுவது
தலைவிதி என்கிற ஒரு நதிதான்..
..
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கையிது.
மண்ணுக்குள் முடிகிறதே..
விசயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே..
******
35 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
saringa otu potachu
நல்ல அழகான பாடல்களை எடுத்துக் கொடுத்திருக்கீங்க ரசிகன்.
பாராட்டுக்கள்.
- சகாரா.
என் தங்கமணிக்கு மூங்கில் காடுகளே! ரெம்ப பிடிக்கும், அதனால அதுக்கே என் ஓட்ட குத்தி இருக்கேன், இல்லாட்டி என் முதுகுல சரி, சரி...
அன்பே சிவம் பாடலுக்குதான் என் ஓட்டு...மற்ற எல்லாப் பாடல்களின் அர்த்தமும் இந்த ஒரு பாட்டிலேயே வந்து விடுவதால்.
1)அலைகளை அலைகளை பிடித்துக்கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்துக்கொண்டு
செளக்கியம் அடைவது நியாயமில்லை..
2)காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை.....
ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம்.... கிழிவதில்லை..
கடல் நிலமாகும் , நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை...
உடல்களும் போகும்,உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை..
3)நாத்திகம் பேசும் நல்லவர்க்கோ.
அன்பே சிவமாகும்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு
முடிவே இல்லையடா..
மனதின் நீளம் எதுவோ அதுவே
வாழ்வின் நீளமடா
mmm...
என் ஓட்டு அன்பே சிவம் பாடலுக்குத்தான்.
கந்த குரு கவசத்தில் இருக்கும் ஒருசில வரிகள் இந்தப் பாடலின் மைய்ய கருவாக நான் க்ருதுகிறேன்.
அன்பே சிவம், அன்பே சாந்தம், அன்பே ஆனந்தம், அன்பே பிரம்மம்.
போன்ற வரிகள் தான் அது.
கந்த குரு கவசம் கேட்டுப்பாருங்கள் தெரியும்.
nalla paatukal athanaiyum!
moongil kaadugale ennoda favla onnu
//இதயம் என்பது சதைதான் என்றால்
எறிதழல் தின்று விடும்
அன்பின் கருவி இதயம் என்றால்
சாவை வென்று விடும்//
ithu nextu!
//நாளை உலகம் இல்லையென்றானால், அன்பே என்ன செய்வாய்? //
நாளை உலகம் இல்லையென்றானால், அன்பே என்னை என்ன செய்வாய்?
இதுவும் நல்லாயிருக்கும்ல :)
எத்தனை பாட்டு லிஸ்ட்ல இருந்தாலும் என் சாய்ஸ் எப்பவும் மூங்கில் காடுகளேக்கு தான். My all time favourite :D
எல்லாப் பாடல்களும் ஒவ்வொரு உணர்வை தூண்டுவதாய் சிறப்பாக அமைந்திருக்கிறது.ரசிகனின் ரசிப்புத்தன்மைக்கு நன்றிகள்
மூங்கில் காடுகள் இயற்க்கைக்காக
அன்பே சிவம் மனிதத்துவத்திற்க்காக
நாளை உலகம் காதலுக்காக
கருவில் பாடல் தத்துவம் என்று
எல்லாமே நன்றாக இருக்கிறது.
//தத்துவப்பாட்டுன்னாக்கா சோகமாத்தேன் இருக்கனுமா? என்ன?//
சோகத்திலதான தத்துவமே பிறக்குது. காதல் தோல்வி, அன்புடையேர் பிரிவு போன்றவைதான் சோகத்திற்கு வித்து. நினைவு ஒடுங்கும்போதுதான் கருத்துக்கள் பிறக்குது. சோகம் நினைவை ஒடுக்குது.
கவிதைகளும், நல்ல சிந்தனைகளும் சோகத்தை, அசோகமாக்குகிறது. ஒரு வடிகால்தான்.
என் ஓட்டு
//இதயம் என்பது சதைதான் என்றால்
எறிதழல் தின்று விடும்
அன்பின் கருவி இதயம் என்றால்
சாவை வென்று விடும்//
இதையம் ஒரு சதையல்ல
அது மனிதனுடைய வரம்.
அது இறைவன் உள்ள இடம்.
இருக்கும் இடம் விட்டு
இல்லாத இடம் தேடுகிறது
மனித இனம்.
பாட்டெல்லாம் இன்னும் கேட்கலை, கேட்டுட்டுப் பின்னூட்டம் போடறேன், அது சரி, யாரு திருத்திக் கொடுத்தது? இல்லாட்டி திடீர்னு புத்தி வந்துடுச்சா? :P
// dubukudisciple said...
saringa otu potachu//
நல் வருகைகள் டீடீ அவர்களுக்கு..
முதல் ஓட்டு போட்டு ஓட்டுப்பெட்டிய திற்ந்து வைச்சதுக்கு மிக்க நன்றிகள்.
// சகாரா said...
நல்ல அழகான பாடல்களை எடுத்துக் கொடுத்திருக்கீங்க ரசிகன்.
பாராட்டுக்கள்.
- சகாரா.//
வருகைக்கும்,பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றிகள் சகாரா தென்றல்..
// ambi said...
என் தங்கமணிக்கு மூங்கில் காடுகளே! ரெம்ப பிடிக்கும், அதனால அதுக்கே என் ஓட்ட குத்தி இருக்கேன், இல்லாட்டி என் முதுகுல சரி, சரி...///
ஹா..ஹா.. அம்பியண்ணா.. எலக்சன்ல யார் வின் பண்ணாலும்,வீட்டுல அண்ணியோட ஆட்சி தான் நடக்குது போல...
வருகைக்கும்,ஓட்டுக்கும் நன்றிகள்..
// பாச மலர் said...
அன்பே சிவம் பாடலுக்குதான் என் ஓட்டு...மற்ற எல்லாப் பாடல்களின் அர்த்தமும் இந்த ஒரு பாட்டிலேயே வந்து விடுவதால்.//
நல்லா கவனிச்சிருக்கிங்க பாசமலர்..
அர்த்தமுள்ள சிந்தனை. வாழ்த்துக்களும்,நன்றிகளும்.
// நளாயினி said...
1)அலைகளை அலைகளை பிடித்துக்கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்துக்கொண்டு
செளக்கியம் அடைவது நியாயமில்லை..
2)காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை.....
ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம்.... கிழிவதில்லை..
கடல் நிலமாகும் , நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை...
உடல்களும் போகும்,உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை..
3)நாத்திகம் பேசும் நல்லவர்க்கோ.
அன்பே சிவமாகும்
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு
முடிவே இல்லையடா..
மனதின் நீளம் எதுவோ அதுவே
வாழ்வின் நீளமடா
mmm...//
அவ்வ்வ்வ்வ்.......
நளாயனி அக்கா.. நீங்க நெனைக்கிற மாதிரி எதுவும் இல்லே...
நெசமாத்தேன்...
வருகைக்கு நன்றிகள்..
// புதுகைத் தென்றல் said...
என் ஓட்டு அன்பே சிவம் பாடலுக்குத்தான்.
கந்த குரு கவசத்தில் இருக்கும் ஒருசில வரிகள் இந்தப் பாடலின் மைய்ய கருவாக நான் க்ருதுகிறேன்.
அன்பே சிவம், அன்பே சாந்தம், அன்பே ஆனந்தம், அன்பே பிரம்மம்.
போன்ற வரிகள் தான் அது.
கந்த குரு கவசம் கேட்டுப்பாருங்கள் தெரியும்.//
இருக்கலாம்..
மனிதநேயம் உள்ள எல்லாருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து
அன்புதான் கடவுளின் வடிவமஙகரது..
//
Dreamzz said...
moongil kaadugale ennoda favla onnu //
நன்றிகள் டிரிம்ஸ்...
// Dreamzz said...
//இதயம் என்பது சதைதான் என்றால்
எறிதழல் தின்று விடும்
அன்பின் கருவி இதயம் என்றால்
சாவை வென்று விடும்//
ithu nextu!//
மாம்ஸ்.. ரெண்டு பாட்டுக்கு ஓட்டு போட்டா அது செல்லாத ஓட்டு ஆகிடாதோ?..ஹிஹி...:)
// ஆயில்யன் said...
//நாளை உலகம் இல்லையென்றானால், அன்பே என்ன செய்வாய்? //
நாளை உலகம் இல்லையென்றானால், அன்பே என்னை என்ன செய்வாய்?
இதுவும் நல்லாயிருக்கும்ல :)//
அவ்வ்வ்வ்வ்வ்.......
நல்லாவே இருக்குங்க..:)))
வருகைக்கும்,கருத்துக்கும ரொம்ப நன்றிகள் ஆயில்யன்..
மூன்றாம் பாடல் முதல் விருப்பம் ( அன்பே சிவம்)
இரண்டாம் பாடல் அடுத்த விருப்பம்.
வரிகள் அருமை - கருத்துகள் எளிமை
ரசிகன் என்ன இது சர்வேசனுக்குப் போட்டியா - கருத்துக் கணிப்பெல்லாம்
//
G3 said...
எத்தனை பாட்டு லிஸ்ட்ல இருந்தாலும் என் சாய்ஸ் எப்பவும் மூங்கில் காடுகளேக்கு தான். My all time favourite :D//
பாடல் வரிகள் மட்டுமில்லாம, ஹரிஹரனின் குரலும் ரொம்பவே நல்லாதான் இருக்குங்க..
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள் ஜி3.
// பிரியமுடன் பிரித்தி said...
எல்லாப் பாடல்களும் ஒவ்வொரு உணர்வை தூண்டுவதாய் சிறப்பாக அமைந்திருக்கிறது.ரசிகனின் ரசிப்புத்தன்மைக்கு நன்றிகள//
பாராட்டுகளுக்கு நன்றிகள் பிரித்தி...
// பிரியமுடன் பிரித்தி said...
மூங்கில் காடுகள் இயற்க்கைக்காக
அன்பே சிவம் மனிதத்துவத்திற்க்காக
நாளை உலகம் காதலுக்காக
கருவில் பாடல் தத்துவம் என்று
எல்லாமே நன்றாக இருக்கிறது.//
எல்லா பாடல்களையும் ரொம்பவே ரசிச்சு இருக்கிங்கன்னு புரியுது..
வாழ்த்துக்களும்,நன்றிகளும்..
//
salaisjr said...
//தத்துவப்பாட்டுன்னாக்கா சோகமாத்தேன் இருக்கனுமா? என்ன?//
சோகத்திலதான தத்துவமே பிறக்குது. காதல் தோல்வி, அன்புடையேர் பிரிவு போன்றவைதான் சோகத்திற்கு வித்து. நினைவு ஒடுங்கும்போதுதான் கருத்துக்கள் பிறக்குது. சோகம் நினைவை ஒடுக்குது.
கவிதைகளும், நல்ல சிந்தனைகளும் சோகத்தை, அசோகமாக்குகிறது. ஒரு வடிகால்தான்.
என் ஓட்டு
//இதயம் என்பது சதைதான் என்றால்
எறிதழல் தின்று விடும்
அன்பின் கருவி இதயம் என்றால்
சாவை வென்று விடும்////
வருகைக்கும் ,ஆழமான சிந்தனைகளுக்கும மிக்க நன்றிகள் சாலை ஜெயராமன் சார்...
// வேதா said...
மூங்கில் காடுகளே பாட்டு எடுக்கப்பட்ட விதம் அதன் வரிகளை கவனிக்க விட்டதில்லை இது வரை :)
இந்த நான்கு பாடல்களில் எனக்கு பிடித்தது அன்பே சிவம் தான் :)
ரெண்டாவது பாட்டு நான் கேட்டதாகவே இல்லையே எந்த படம் இது?//
நல்வருகைகள் வேதா...
நீங்க சொல்லறது நெசந்தானுங்க...
நாங்கூட படமா பாக்கும் போது வரிகளின் மேல கவனம் போகலை..
பின்னாட பாட்டை மட்டும் உறங்க போறதுக்கு முன்னாடி கண்ணை மூடிக்கிட்டு கேற்க்கும் போது தான் கவனிச்சேன்.. இயற்கையோடு இணைய துடிக்கும் ஓரு இதயத்தை...
ரெண்டாவது பாட்டு "லவ்பேர்ட்ஸ்"ங்கர தமிழ்(?) படத்துல வந்தது..(இதுக்குத்தேன் காலேஜ கட்டடிச்சி சினிமா பாக்கற பழக்கமிருக்கனுனஙகறது..:))
(பிரபுதேவா,நக்மா,ஏ.ஆர்.ஆர்)
வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிகள்ங்க...
// கீதா சாம்பசிவம் said...
பாட்டெல்லாம் இன்னும் கேட்கலை, கேட்டுட்டுப் பின்னூட்டம் போடறேன், அது சரி, யாரு திருத்திக் கொடுத்தது? இல்லாட்டி திடீர்னு புத்தி வந்துடுச்சா? :P//
அப்படியா?.. கீதா அக்கா... உங்களுக்காகவே பாட்டுல ஒரு வரிய தப்பா விட்டு வைச்சிருக்கேனே இன்னும் கண்டு புடிக்கலியா?..ஹிஹி..
// யாரு திருத்திக் கொடுத்தது? //
அவ்வ்வ்வ்வ்வ்......
நம்ப மாட்டிங்களே...
//இல்லாட்டி திடீர்னு புத்தி வந்துடுச்சா? :P////
நாமெல்லாம் திருந்திடா பின்ன டீச்சருக்கு திட்ட ஆளில்லாம போயடும்ல்ல.. அத்னால நோ சான்ஸ்..
ஹிஹி..:))))
வருகைக்கும்,கொலைவெறி கமெண்ட்டுக்கும் ரொம்ப நன்றிகள் டீச்சர்..:))
(இன்னும் பாட்டையே கேக்கலியாம். அதுசரி.. பாடத்த மட்டும் என்ன முழுசா படிச்சிட்டா வந்து நடத்தறாய்ங்க?..:P)
// கேட்டுட்டுப் பின்னூட்டம் போடறேன்,//
அவ்வ்வ்வ்வ்.......
எப்படியும் திட்டத்தான் போறிங்க..
அத மொத்தமாவே கொடுத்தடலாமே.
அதுல என்ன தவணைமுறை..
கீதா அக்கா,ஏன் இந்த கொலைவெறி?:)))
//
cheena (சீனா) said...
மூன்றாம் பாடல் முதல் விருப்பம் ( அன்பே சிவம்)
இரண்டாம் பாடல் அடுத்த விருப்பம்.
வரிகள் அருமை - கருத்துகள் எளிமை
வாங்க சீனா சார்.. நீங்க ரொம்ப நாளா புதுப்பதிவு போடலியேன்னு நெனச்சிக்ககட்டிருந்தேன்.
ஓட்டு போட்டதற்க்கும், கருத்துகளுக்கும் நன்றிகள்..
// ரசிகன் என்ன இது சர்வேசனுக்குப் போட்டியா - கருத்துக் கணிப்பெல்லாம//
ஹிஹி..இல்ல.. நம்ம நண்பர்களோட ரசனைய பத்தி தெரிஞ்சிக்கத்தான்..
நெஜமாவே ஆழமா ரசிக்கறாய்ங்க..
தீர்கமா சிந்திக்கிறாய்னஙக..
பாட்டு கூட அவிங்களுக்கு புடிச்சததல ஸ்பெசிப்பிக்கா இருக்காய்ங்க..
நல்ல செலக்ட்டிவிட்டி கெப்பாசிட்டி இருக்குன்னு புரியுது..
mmm...//
அவ்வ்வ்வ்வ்.......
நளாயனி அக்கா.. நீங்க நெனைக்கிற மாதிரி எதுவும் இல்லே...
நெசமாத்தேன்...
வருகைக்கு நன்றிகள்..
வாழ்வனுபவமே உண்மை. எனக்கு இந்த அனுபவங்கள் உண்டு. அதையே பாடலாசிரியரும் சொல்லவருகிறார். என்ன நீங்கள் தவழும் பருவத்தில் இருக்கிறீர்கள். படு ஐhலியாக. இப்படித்தான் நகைப்பீர்கள். ஆனால் என்றோ ஒருநாள் இத்தகைய தத்துவங்கள் உங்கள் உணர்வுகளாக பேசப்படும். அது தான் வாழ்வின் நிதர்சனம். ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என சும்மாவா சொல்லிவைத்தார்கள் முன்னோர்கள். வாழ்வின் அனுபவப்பாடமே உன்னதம். சிரித்ததும் ;நகைத்ததும் காணும் வாழ்வை புரியமுயலுங்கள். அல்லது வாழவாவது கற்றுக்கொள்ளுங்கள்.
// நளாயினி said...
mmm...//
அவ்வ்வ்வ்வ்.......
நளாயனி அக்கா.. நீங்க நெனைக்கிற மாதிரி எதுவும் இல்லே...
நெசமாத்தேன்...
வருகைக்கு நன்றிகள்..
வாழ்வனுபவமே உண்மை. எனக்கு இந்த அனுபவங்கள் உண்டு. அதையே பாடலாசிரியரும் சொல்லவருகிறார். என்ன நீங்கள் தவழும் பருவத்தில் இருக்கிறீர்கள். படு ஐhலியாக. இப்படித்தான் நகைப்பீர்கள். ஆனால் என்றோ ஒருநாள் இத்தகைய தத்துவங்கள் உங்கள் உணர்வுகளாக பேசப்படும். அது தான் வாழ்வின் நிதர்சனம். ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என சும்மாவா சொல்லிவைத்தார்கள் முன்னோர்கள். வாழ்வின் அனுபவப்பாடமே உன்னதம். சிரித்ததும் ;நகைத்ததும் காணும் வாழ்வை புரியமுயலுங்கள். அல்லது வாழவாவது கற்றுக்கொள்ளுங்கள்.///
ஆஹா.. நளாயினி அக்கா.. எப்பவும் மாதிரி நீங்க எனக்கு ஏதோ உள்குத்து குடுக்கறிங்கன்னு நெனச்சிக்கிட்டு நா சொலலிப்புட்டேன். பாட்டு கருத்துகளை நானும் ஆமோதிக்கிறேன்.. அதனாலதான போட்டிருக்கிறேன்?..
அம்புட்டுத்தேன் அக்கா.. நெசமாவே..
// என்ன நீங்கள் தவழும் பருவத்தில் இருக்கிறீர்கள். படு ஐhலியாக. இப்படித்தான் நகைப்பீர்கள். ஆனால் என்றோ ஒருநாள் இத்தகைய தத்துவங்கள் உங்கள் உணர்வுகளாக பேசப்படும்.//
அக்கா இந்த காலத்துல நாங்கெல்லாம் இப்பவே நீங்க சொல்லற மெச்சுரிட்டிய அடைஞ்சிடறோம்ல்ல..:)). ரொம்ப வயசு ஆக தேவையில்ல.. உதாரணமா நீங்க புரிஞ்சிக்கிட்ட இந்த பாடல் கருத்துக்களை நாங்களும் புரிஞ்சிக்கிட்டு ரசிக்கிறோமில்ல..
ஹிஹி..
நீங்க பாடல் கருத்துக்கு ம்ம்ம் ன்னு சொன்னத எனக்குத்தேன் உள்குத்தா சொன்னதா நெனச்சிப்புட்டேன்..ஹிஹி(பின்ன என்னோட கவிதை எழுத வாருங்கள் பதிவுக்கு உங்க உள்குத்து பின்னூட்டத்த மறக்க முடியுமா?:))))
ஏதோ கோபமாக பேசினமாதிரி தெரியுது. அப்பிடி ஏதும் இல்லைத்தானே. உங்களுக்கு நான் ஏதும் கோபமாக பேசியதாக உணர்வு ஏற்பட்டதா. ஏற்படாட்டி அப்பாடா நிம்மதி.
// ஏதோ கோபமாக பேசினமாதிரி தெரியுது. அப்பிடி ஏதும் இல்லைத்தானே. உங்களுக்கு நான் ஏதும் கோபமாக பேசியதாக உணர்வு ஏற்பட்டதா. ஏற்படாட்டி அப்பாடா நிம்மதி./
அப்படட நீங்க ஏதும் கோவமா சொன்னதா தோனலிங்களே அக்கா..
நீங்க சொன்ன எல்லா கருத்துக்களுமே. நெசம்தானே..
நிஜமாவே அனுபவம் கத்துக்குடுக்கற பாடம் எல்லாத்த விட உயர்ந்தது.
சரியா சொன்னனங்க... சூப்பரு..
Post a Comment