Monday, April 21, 2008

வாழ்த்தி உதவுங்களேன்...



நண்பர்களே..., என்னுடன் படித்த ஒரு நெருங்கிய தோழியின் தந்தை,உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவராயினும்,எந்த தெய்வத்தை நம்புகிறவராயினும்,உங்கள் அகத்தை நம்புறவராயினும் அவருக்காக ஒரு நிமிடம் பிராத்தனை செய்து உதவுங்களேன்.

மற்றவருக்காக பிராத்திக்கும் உங்கள் எல்லாருடைய நல்ல எண்ணங்களும் ,வாழ்த்துக்களும் ,அவரை விரைவில் குணமாக்க செய்யட்டும்.எனது தோழியின் மனதிற்க்கு ஆறுதலளித்து பலப்படுத்தட்டும்.

உங்கள் எல்லாருடைய பிராத்தனைகளையும் வாழ்த்துக்களையும் வேண்டும்
அன்புடன் உங்கள் ரசிகன்.

25 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

மெளலி (மதுரையம்பதி) said...

கண்டிப்பாக உங்கள் நண்பரது தந்தை குணமடைவார்...

சகாதேவன் said...

உங்கள் தோழியின் அப்பா
சீக்கிரம் குணமடைய
என் பிரார்த்தனைகள்

சகாதேவன்.

Sumathi. said...

ஹாய் ஸ்ரீதர்,

கண்டிப்பா இது கூட சேய்யலைன்னா எப்படி? ஒரு மனுசனா இருந்து என்ன பிரயோசனம். நிஜமாவெ செய்யறேன்.

ரசிகன் said...

மிக்க நன்றிகள் மதுரையம்பதி,சகாதேவன்,சுமதி அவர்களே. தங்களுடைய வாழ்த்துக்கள் நிச்சயம் தோழிக்கு ஆறுதல் தரும்., தங்கள் வாழ்த்துக்களை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்.

Thamiz Priyan said...

நம் அனைவரின் பிரார்த்தனை நிச்சயமாக பலிக்கும். அவரது தந்தை நல்ல குணமுடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

கண்டிப்பா இப்பவே பிரார்த்திக்கிறேன்.


anpudan

santhi

CVR said...

உங்கள் தோழியின் தந்தை சீக்கிரமே குணமடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

ரசிகன் said...

தங்கள் ஆறுதலுக்கு மிக்க நன்றிகள் தமிழ்பிரியனுக்கும்,புன்னகை தேசத்திற்க்கும்,சீ.வீ.ஆர்க்கும்.
நன்றிகள்.

பாச மலர் / Paasa Malar said...

விரைவில் அவர் குணம் பெற வாழ்த்துகள்..

சுந்தரா said...

உங்கள் தோழியின் தந்தை விரைவில் குணமடைய என் மனப்பூர்வமான பிரார்த்தனைகள்.

சுந்தரா

manjoorraja said...

விரைவில் உங்கள் நண்பரின் தந்தை நலமடைய பிரார்த்திக்கிறேன்.

முத்தமிழ் மற்றும் நம்பிக்கை குழுமங்களின் சார்பில் இந்த வார பிரார்த்தனையில் இவருக்காகவும் பிரார்த்திக்கப்படும்.

Aruna said...

என் பிரார்த்தனையில் உங்களின் தோழியையும் சேர்த்துக் கொண்டேன். கண்டிப்பாக சீக்கிரமே குணமடைவார்கள்.
அன்புடன் அருணா

ரசிகன் said...

வாழ்த்தி ஆறுதலித்த பாசமலர்,சுந்தரா,கூட்டுப்பிராத்தனைக்கு சேர்த்து பலப்படுத்திய நண்பர் மஞ்சூர் ராஜா,அன்புடன் அருணா எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.எனக்கு ஏன் இப்படி நண்பர்களின் ஆறுதல்களுக்கு அழைப்பு விடுக்க தோன்றியதுன்னு அப்போது தெரியவில்லை.
இந்த வாழ்த்துக்களை தோழிக்கு அனுப்பிய போது,பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்தாலும், நமது ஆறுதல்கள்,வாழ்த்துக்கள் அவரை பலப்படுத்த முடிந்தது என உணந்த போது நெகிழ்ந்து போனேன். தோழியின் நன்றிகளை எனது நன்றிகளுடன் வாழ்த்தியருளிய எல்லா நண்பர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.மிக்க நன்றிகள்:).

மாதங்கி said...

My prayers for your friend's father to get well soon. May God bless him with good health and long life.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.. வாழ்க வளமுடன்..

நிஜமா நல்லவன் said...

கூடிய விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன்.

Anonymous said...

அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

வாழ்க நலமுடன்....

தணிகை said...

உங்கள் தோழியின் அப்பா
சீக்கிரம் குணமடைய
என் பிரார்த்தனைகள்

தணிகை said...

உங்கள் தோழியின் அப்பா
சீக்கிரம் குணமடைய
என் பிரார்த்தனைகள்

NewBee said...

நண்பரின் தந்தை குணமடைய பிரார்த்திக்கிறேன்...

May god bless them with health n strength...n all smiles

வெட்டிப்பயல் said...

தங்கள் தோழியில் தந்தை விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள்

மங்களூர் சிவா said...

உங்கள் தோழியின் அப்பா
சீக்கிரம் குணமடைய
என் பிரார்த்தனைகள்

ஜி said...

Kandippa Rasigan... Ellaam valla Iraivan ellaathaiyum lesaakki vaippaan

Uma said...

my prayers

ரசிகன் said...

முகமறியா தோழமைக்கும் ஆறுதல் கூறிய நல்ல உள்ளங்கள் மாதங்கி,முத்துலெட்சுமி அக்கா,நிஜமா நல்லவன்,தனிகாசலம்,newbee,வெட்டிப்பயல்,மங்களூர் மாம்ஸ்,ஜி,உமா குமார் அனிவருக்கும் மிக்க நன்றிகள்.

தோழியின் தந்தை உடல்நிலை நன்றாகி வருகிறது என்று அறிந்தேன்.தங்களின் வாழ்த்துக்களாய் தோழிக்கு தைரியமூட்டியதற்க்கு அனைவருக்கும் மிக்க நன்றிகள் கூற கடமைப்பட்டுள்ளேன்.