Showing posts with label மீள் இடுகைகள். Show all posts
Showing posts with label மீள் இடுகைகள். Show all posts

Thursday, May 1, 2008

மறுப்பிறவி- ஒரு விஞ்ஞான அலசல்...(பாகம்-1 உடல்)

மரணத்திற்க்கு பிறகு,என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்வதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம் என்றுமே குறையாதது தான் .ஏன் என்றால் மனித மனம்,மரணத்திற்க்கு பிறகு, தான் முழுமையாக இல்லாமல் போவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மில் பலபேர் மறுபிறவியை நம்ப விரும்புகிறோம்.





ஹாய் ஃபிரண்ஸ்...

போன மீள் இடுகையில் (*பிய்த்துக்கொள்ள தலையில் நிறைய முடி இருப்பவர்களுக்கு மட்டும்...*), உங்க ஆதரவைத் தொடர்ந்து,மறுபடியும் ஒரு குழப்பத் தொடர்.நேரமில்லாததால் முழுமையாக விளக்க இயலாம போனாலும், எளிமையா,தேவையான அளவு குழப்பி இருக்கேன்னு நெனைக்கிறேன். படிச்சிட்டு பின்னூட்டத்துல திட்டிட்டு போங்கப்பு..:)))))



மரணத்திற்க்கு பிறகு,என்ன இருக்கிறது என தெரிந்துக்கொள்வதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம் என்றுமே குறையாதது தான் .ஏன் என்றால் மனித மனம்,மரணத்திற்க்கு பிறகு, தான் முழுமையாக இல்லாமல் போவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மில் பலபேர் மறுபிறவியை நம்ப விரும்புகிறோம்.

இதைப் பற்றி பல மதங்களிலும்,தவறு செய்பவர்களை குறைக்கவோ,நல்ல செயல்களை ஊக்குவிக்கவோ, குறைந்த பட்சம் சொர்கம்,நரகம் என மரணத்திற்க்கு பிறகும், ஏதோ இருப்பதாகவே சொல்ல விரும்புகின்றன.


சரி... அதுப்பாட்டுக்கு கிடக்கட்டும்.நம் நிகழ்காலத்துக்கு தொந்தரவு கொடுக்காத வரை...:))

விஞ்ஞானம் இதற்க்கு என்ன சொல்கிறது என கேட்டீர்களேயானால்.. மறுபிறவி ஒன்று இல்லை.. ஒரே சமயத்தில பல வகையில் மறுபிறவி அடைகிறோம்ன்னு நான் சொன்னால்,வியப்படைவீர்களா?.. என்ன இது குழப்பமான கூற்று என? ஆனால் விஞ்ஞானம் இதை ஒருவித மறுசுழற்சியாக பார்க்கிறது.


நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்று ,நம் மரணம் என சொல்லப் படுகின்ற விடயத்திற்க்கு பின்பும் பழையதை விட்டு,நிலைப்பது(சாகா வரம்?) அல்லது புதிய வடிவத்தில் உருவாவது/சேர்வது என்பதை மறுபிறவி என எடுத்துக்கொள்ளலாமா?..


நம்மிடம் இருப்பதை

1)உடல்
2)ஆன்மா/மனம்(soul)
3)ஜீன்கள்


என பிரித்து விஞ்ஞான முறையில மறுப்பிறவியை ஆராய்வோம்.


முதலில்...

இந்த இடுகையில் உடல் பற்றி எடுத்துக்கொள்வோம்..

உடலைப் பொறுத்த மட்டில்,நாம் உயிரோடு இருக்கும் போதே பல மறுபிறவிகள் எடுக்கிறோம்.

நம் உடலில் வினாடிக்கு , 2.5 கோடி செல்கள் இறந்த வண்ணம் இருக்கின்றன.அவற்றிற்கு இணையாக புதிய செல்கள் தோன்றுகின்றன.

[மூளையில் மட்டும் இறந்த செல்கள் புதுப்பிக்கப் படுவது இல்லை.. அதற்க்கு பதிலாக இறக்கும் நியுரான் செல்களின் இணைப்புகள் வேறு உபரி (ஸ்பேர்) செல்களுக்கு மாற்றப் படுகிறது.நம் வாழ்நாள் முழுவதற்க்குமான உபரி செல்கள் மூளையில் உள்ளன.. ஒரு சராசரி மனிதன் தன் மொத்த மூளையில் 2% மட்டுமே பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு உண்டு.(இப்படி செல் இணைப்பு காப்பி செய்யும்போது,குறைவான என்சைம்களை தூண்டிய முக்கியமில்லா நிகழ்வுகள் குறித்த இணைப்புகளுக்கு,மூளை காப்பி செய்ய முக்கியத்துவம் கொடுக்காததினால் தான் மறதி என்ற நிகழ்வு ஏற்படுகின்றது என சொல்கிறார்கள்,..) இதைப்பற்றி பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்].

உடலின் இறந்த செல்கள்,கண்ணுக்குத் தெரியாத மேல் தோல் உரிப்புகளாக,முடி,நகம்,வியர்வை அழுக்கு என பல வடிவங்களில் வெளியேறுகிறது.குண்டாக இருப்பவர், இறக்கும் செல்களுக்கு ,சமமான புதிய செல்கள் உருவாவதற்க்கு தேவையான அளவில் அமீனோ அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளாவிட்டால் உடல் இளைக்கிறார்..

இப்படி பார்க்கும்போது ஒவ்வொரு 24 நாட்களூக்கும் ஒருமுறை நம் உடலின் எல்லா செல்களும் புதுப்பிக்கப் படுகின்றன.(ரத்தத்த செல்களையும் சேர்த்து தான்). எனவே உடலைப் பொருத்தமட்டில்,வாழும் போதே, நாம் ஒவ்வொரு 24 நாட்களுக்கு ஒருமுறை மறுப்பிறவி எடுக்கிறோம் தானே..
அதாவது 100 வருடம் வாழும் ஒருவர்..(அவ்வ்வ்...பேராசை?) =100 * (365/24) =5,55,104.2 முறை முழு உடலையும்,செல்மறுசுழற்ச்சி செய்துக் கொள்கிறோம்(அடேங்கப்பா..).


இல்லை..இல்லை.. இறந்த பிறகு எடுப்பது தான் மறுபிறவி என சொல்வீர்களானால்... உங்களுக்காக..

நமது மனித உடல்..பல்வேறு மூலக்கூறுக்களால் ஆன ஒருகூட்டுப்பொருள்.அந்த மூலக்கூறுகள் எல்லாம் அணுக்களால் ஆனவை..
அணுக்கள் எலக்ரான்,புரோட்டான்,நியுட்ரான் போன்ற அடிப்படை அணுத்துகள்களால்..ஆனவை..

இதே அணுத்துகள்களால் தான் உலகமும்,அதில் நான் காணுகிற எல்லா பொருட்களும் ஆகியுள்ளன.(ஒரே வகை செங்கட்களை,பல பாணிகளில் உபயோகித்து பல வடிவம்.வகையான வீடுகளை உருவாக்குவது போல..).


இறப்பு என்பது உடனே ஏற்படுவது இல்லை,அது படிப்படியாக நிகழ்வது.20 வயதோடு மூளையின் முழுவளர்ச்சி நின்றுவிட,மூளையின் செல்கள் இறந்துக்கொண்டே இருக்க..அதிலிருந்தே திரி கொளுத்தப் பட்ட வெடி மருந்தைப் போல,நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துக்கொண்டே இருக்கிறோம்.


கடைசி காலத்தில், மூளை கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாடு இழந்து,ஒரு கட்டத்தில் ,தன்னிச்சை செயல்களான இதய இயக்கம் போன்றவைகளைக் கூட நிகழ்த்த முடியாத காலகட்டம் தான்,இறப்பு எனப்படுகிறது.(அந்த சமயத்திலேயும்,உடலின் செல்கள்,இதய இயக்கத்தின்,கடைசி வினாடியில் கிடைத்த ஆக்ஸிஜன் தீரும்வரையில் உயிர்வாழ்கின்றன.அதன் பின்புதான்,செல் கட்டமைப்பு சிதையத் துவங்குகின்றன.).

நாம் இறந்த பிறகு, மண்ணில் புதைக்கப் பட்டால்,நமது செல்கள் சிதைந்து உடலின் மூலப் பொருட்களான ஆக்ஸிஜன்,கார்பன்,சோடியம் போன்ற அணுக்களாக பிரிந்து மண்ணில் கலக்கின்றன.அவற்றை உண்ணும் பேக்டீரியாவில் கலந்து மறுப்பிறவி எடுக்கிறோம். அந்த மண்ணில் வளரும் மரம்,செடி,புல்லினால் ஈர்க்கப் பட்டு அவைகளில் ஒரு பகுதியாக மறுபிறவி எடுக்கிறோம்.

எரிக்கப் பட்டால்,வாயுவாகி காற்றில் கலக்கின்றன,உலகத்தை சுற்றி வருகிறோம்.காற்றின் கலவையாய்.அவற்றை சுவாசிக்கும்,உயிர்களில் தங்குகிறன.

மிஞ்சிய கார்பன் அணுக்களை(அஸ்தி) தூவிய நதி, கடல் போன்றவற்றால் , பரவுகின்றோம். அதை உண்ணும் மீன்,ஒதுங்கும் கரையோற புல்வேர் என பல விதங்களில் மறுசுழற்ச்சி ஆகின்றன நம் அணுக்கள்.

எனவே உடல் ரீதியாக நாம் மொத்தமாக இல்லாமல்,பல துகள்களாய்,அணுக்கலாய்,பல கோடிப் பிறவிகளை (அவதாரங்களைன்னு சொல்லலாமா?..) எடுக்கிறோம்.சரிதானே?..


அதுசரி,சாகாவரம்ன்னு ஏதோ சொன்ன மாதிரி தோனுச்சேன்னு கேக்கறிங்களா?..

நமது பூமியின் ஒவ்வொரு அங்கூலமும்,பல்லாயிரக்கணக்கான உயிர்களின் சமாதிகள் தான்.நமது பூமியில் எங்கு தோண்டினாலும்,பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்து ,சில ஆயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த வாழ்ந்த உயிர்களின் தடயங்களை காணலாம்.
அது அவற்றின். எலும்புகள் தான்.


எலும்புகள் கால்சியத்தினாலானவை. உயிர்களின் வாய்வியலுக்கு தேவையான உறுதியான கட்டமைப்பு,அவற்றை பல லட்சக்கணக்கான ஆண்டுகளூக்குப் பிறகும் சிதைவடையாமல் இருக்கச் செய்கின்றன.இதனால் தான் ,உடல் செல்கள் சிதைவடைந்து,மறைந்த நிலையிலும்,
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டையனோஸர் போன்ற விலங்குகளின் எலும்புகளை நாம் இன்றும் அகழ்வாராச்சியில் மீட்டெடுக்க முடிகிறது.மனித எலும்பும்,பற்களும் அதே வகை தான்.எனவே எலும்புகளைப் பொருத்தவரையில் அவை சாகாவரம் பெற்றவைன்னு சொல்லலாமா?..

மனம் மற்றும் ஜீன்கள் வகையில் மறுபிறவி கருத்துக்களை விஞ்ஞான விளக்கங்களை இனிவரும் இடுகைகளில் பார்ப்போம்.

Friday, January 18, 2008

சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் (இளையவர்களுக்கான விஞ்ஞானம்) - இடுகை1(ஒலிப் பட்டையுடன்)...

குட்டீஸ்... போன முறை விளையாட்டு மூலமா நாம கத்துக்கிட்ட பாடம் உங்களுக்கு புடிச்சிருந்ததா?..சரி இன்னைக்கு நாம படிக்கப் போறது மனித உடல் எடை சமசீரின்மை..(human body imbalance)&மூளையின் கணிப்பு சக்தியில் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள்.

(சன் டீவி ஸ்டெயிலில் படிக்கவும் : P ) தமிழ் பதிவுலகிலேயே , முதன் முறையாக பொதுப் பதிவுல,பதிவோட குரலையும் சேத்து மக்களை கொடுமைப் படுத்தறேன் பொறுத்துக்கோங்கோ.. மக்கள்ஸ் :)))))))

final science for ...



(விளையாட்டுப் பாடத்தை ஒலியா கேக்கனுமா?..மேல இருக்குற பிளேயர்ல பிளே பட்டனை அழுத்துக்க..:))

”கண்ணைக் கட்டி காட்டுல விட்டப் போல”ம்பாங்க...இந்த முறை அங்கிள் உங்களை கண்ணைக் கட்டி கிரவுண்டுல விடப் போறேன்.இந்த பரிசோதனைக்கு உங்க அப்பாவோட உதவியும் தேவைப் படும்.அதனால அவரையும் கூப்பிட்டுக்கோங்க..


தேவையான பொருட்கள் :உங்க கண்ணைக் கட்டி மறைச்சுக்கறதுக்கு ஒரு தடிமனான கர்சிப் துணி கால் பாதுகாப்பிற்க்கு காலணிகள் அவசியம்.

விளையாட்டு ரொம்ப சிம்பிள்.. உங்க ஊருல இருக்குற,பெரிய விளையாட்டு மைதானத்துக்கு போயிருங்க.. சமதளமா புற்கள் மட்டுமே இருக்குற பகுதிய தேர்ந்தெடுத்துக்கோங்க.. ஓட்டப் பயிற்ச்சிக்கு யாரும் வராத நேரத்தை தேர்வு செய்யறது ரொம்ப அவசியம்.நீங்க நிற்குற இடத்துக்கு சுற்றி ஒரு 30 அடி நல்ல சமதளமா இருக்கற மாதிரி பார்த்துக்கோங்க..உங்க முன்னாடி மைதானத்துல, காலைத் தடுக்கி விடுற அளவு கற்கள்,பள்ளம் போன்றவை இருக்குதான்ன்னு பார்க்கச் சொல்லுங்க.. இருந்தா அவற்றை நீங்கிடுங்க/வேற இடம் தேர்ந்தெடுத்துக்கலாம்.


இடம் அப்பாவுக்கு திருப்தியாகிடுச்சுன்னா..நீங்க நிற்குற இடத்துல இருந்து,ஒரு முப்பது அடி தூரத்துல இருக்குற ஒரு பொருளை,போய் சேர வேண்டிய இடமா பார்த்து வச்சிக்கோங்க. உங்க கண்களை,கொண்டு வந்த துணியால கட்டிக்கோங்க.. (குறிப்பா சுபாக் குட்டி,கரண்,கிஷோர் செல்லம் யாரும் கண்ணை துறந்துக்கிட்டு ஏமாத்தப் படாது..:) )


நீங்க செய்ய வேண்டியதெல்லாம் கண்களை சாதாரணமா மூடிக்கிட்டு, முப்பது அடி தூரத்துல இருக்குற டார்கெட் இடத்த நோக்கி இயல்பா நடக்க வேண்டியது தான்.ஓடக் கூடாது,வேகம் வேண்டாம்.நிதானமா நடங்க.. வழியில எதுவும் உங்களை தடுக்காம அப்பா பாத்துக்கிட்டு இருக்காரு இல்லையா?..நம்பிக்கையா, கீழ விழாம அடிமேல் அடி வைச்சு நடஙக..


ஒரு முப்பது அடி நடந்தப்பறம் துணியை நீக்கிட்டு,கண்ணை திறந்து பாருங்க...அட என்ன ஆச்சர்யம்.. நீங்க நேரா நடந்துக்கிட்டிருக்கறதா தானே நெனச்சிக்கிட்டிருந்திங்க.. ஆனா நிஜமாவே நீஙக போக வேண்டிய பாதைய விட்டு வலதுபுறத்துல,கிட்டத்தட்ட ஒரு அரைவட்டம் அடிச்சு ஆச்சர்யகரமான தூரம் வந்து இருப்பிங்க.உஙகளை அறியாமலேயே..


எப்படின்னு காரணம் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா?.. ரொம்ப சிம்பிள்..

நம்ம உடல் பாக்கறதுக்கு வலது இடது புறஙக்ளுல சரி சமமா அமைஞ்சிருந்தாலும்.. உண்மையிலேயே நமது உடலின் வலது,இடது புறங்கள் சமமான எடையோட இல்லை.. அதுக்கு என்ன காரணங்கள்ன்னு பார்த்தா..

1) நம் உடல் உள்ளுறுப்புக்கள் இடது வலது ,புறம் சரியான எடைவிகிதத்துல அமைஞ்சு இல்லை, கல்லீரல்,இதயம் இதெல்லாம் ஒரு புறம் அதிகமா ஒதுங்கியிருக்கு.(பார்க்க:சிம்பிள் அனாடமி -சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ்)

2) பொதுவா நாம எல்லாரும் வலதுகை பழக்கமுடையவங்களா இருக்கறதுனால,வலது கை,தோள்கள் எல்லாம் தசைகள் இறுகி,அதிக அடர்த்தியோட பலமா,நமது இடது பக்கத்தை விட எடை அதிகமா இருக்கும்.

அதனால இயல்பாவே நமது உடல்ல வலது பக்கம் கொஞ்சம் எடை கூடுதலா அமைஞ்சுடுது.நாம பழகிட்டதால இதை பெருசா உணரதில்லை.கண்களால் பாக்கும்போது,நாம தவறாம நேர் கோட்டுல போக முடியுது.ஏன்னா பார்வையால,மூளை கால்களின் சின்ன சின்ன கோண மாறுபாடுகளை லைவ்வா சரி செஞ்சுக்கிட்டே வருது.ஆனா கண்களை மூடிக்கிட்ட பின்னால் நமது மூளையால பாதைய சரியா கணிக்க முடியலை.. அப்போ உடல் எடை போன்ற சின்ன சின்ன விசயங்களும் கணக்கில வருது.

நம்மை அறியாமலேயே வலது பக்கம் லேசா சாய்ந்துக்கொண்டே நடக்கிறோம். அதனால நம்ம பாதை ஒரே நேர் கோடா இல்லாம,கொஞ்சம் கொஞ்சமா வட்டத்தின் பரிதி வடிவில மாறுகிறது. கவலையில்லை.. பாதையில ஏதும் ஆபத்தான தடையில்லைன்னு நாம ஏற்கனவே பாத்தோமே. தொடர்ந்து நடந்திங்கன்னா.. அது முழுமையான வட்டமா நீங்க ஆரம்பிச்ச இடத்துக்கிட்டயே வந்திருவிங்க..ஆச்சர்யமா இருக்கில்ல?..


உங்க காலடி தூரத்தையும்,உங்க இடது,வலது எடை வேறுபாட்டையும் பொறுத்து வட்டம் பெரிதாகவோ,சிறிதாகவோ இருக்கும்.
ஜாலியா செஞ்சுப் பாருங்க...

(இருட்டில் கூட நாம நேரா நிக்கிறோமான்னு நம்ம மூளைக்கு உணர்த்தரது,நம்ம காதினுல் உள்ள குறுத்தெலும்பை சுற்றி இருக்குற திரவத்தின் சம மட்டம் தான்ன்னு ஏற்கனவே படிச்சிருக்கறது ஞாபகம் இருக்கா?..)

கண்பார்வை அற்றவர்களுக்கு,மூளையின் பயிற்ச்சியால.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பாதத்தோட angle அதாவது கோணம் சிறிது மாறினாலும் அவங்களால உணர முடியும்.சரிப் படுத்திக்க முடியும்.அவங்களால் நேரா நடக்க முடியும்.உடல் எடை சமச்சீரின்மை அவங்களை அந்த அளவு பாதிக்கறதில்லை.

பெரியவங்களுக்கு..

ஃபிரண்ட்ஸ், நீஙக செய்ய வேண்டியது

1) கிரவுண்டுல பிள்ளைகள் நடக்கும் பாதையில ,ஓட்டப் பயிற்ச்சி எடுக்குற யாரும் வந்து குறுகிடாம இருக்க,யாரும் விளையாடாத நேரத்தை தேர்ந்தெடுத்துக்கோங்க...

2)எந்த கற்களோ,பள்ளம்,மேடு போன்றவைகளோ பிள்ளைகள் கண்ணைக் கட்டி நடக்கும் பாதையில் இல்லாம பாத்துக்கோங்க..

3)குழந்தை நடக்கும்போது லெஃப்ட்,ரைட்,நேர் பாதைன்னு கமெண்டரி கொடுக்க வேணாமே.. அவங்க நடக்கற மாறிய பாதையில எந்த தடையும் இல்லைங்கரதால, ஒன்னும் சொல்லாம அமைதியா கவனிங்க...லெட் தம் எக்ஸ்புளோர் நியு வண்டர்ஸ்...

இந்த விளையாட்டுல பெரியவஙக்ளுக்கும் ஒரு பாடம் இருக்கு.: இதேப் போல நாமலும் கண்ணைக் கட்டிக்கிட்டு நடக்க முயலும்போது என்ன என்ன நடக்கும் தெரியுமா?..

1)நம்பிக்கையின்மை:எந்த தடையும் பாதையில இல்லைன்னு நாம ஏற்கனவே உணர்ந்திருந்தாலும்,பிள்ளையைப் போல,தைரியமா நாளு அடிக்கு மேல எடுத்து வைக்க முடியாது.ஏதோ ஏதோ குறுக்கே வருவது போல தட்டுத் தடுமாறுவோம்.

2)இதயம் வேகமா துடிக்கும்,பிள்ளையைப்போல திரில் ரசிக்க மனம் வராது.

3)மனதில ஒளிந்திருக்குற பல கருப்பு மேகங்கள்,எண்ண அலைகள் ஒரு எச்சரிக்கை அலர்ட்னஸ்ங்கர பேருல எழுந்துக்கொண்டே இருக்கும்.

4)நம்மை அறியாமலேயே,இதுல சொன்ன படி ஆகக் கூடாதுன்னு, வேண்டுமென்றே இடதுபுறம் காலை இழுத்து வைத்து,நேர் பாதையில் செல்ல முயலுவோம்,செயற்க்கையாக.இதுல ஓவரா முயன்று,நேரா இல்லாம, இடது பக்கத்துல வேற பாதை போடறதுக்கு கூட வாய்ப்பு இருக்குங்க..

அதனால இது சூதுவாது(?) அறியாத பிள்ளைகளுக்குத்தான் சரியா வரும்.பெரியவங்களுக்கு இல்லை:P:P:P

லீவு நாளுல,ஜாலியா முயன்று பாத்துட்டு சொல்லுங்க...

அடுத்து மனப்பயிற்ச்சி பிரிவுல, ஒரு விளையாட்டைப் பார்ப்போம், குட்டீஸ்.. அதுவரை டாட்டா..


**இது எனது சையன்ஸ் ஃபார் சில்ரன்ஸ் பிளாக்ல இருந்து ஒரு இடுகை**
---------------------------------------

எனக்கு வேலை கொஞ்சம் அதிகமாவே இருக்குறதால புதுப்பதிவு போட சமயம் & மூடு இல்லை.. போன பதிவுல சும்மா விடைப் பெறுகிறேன் போட்டு அதை நகைச்சுவை பிரிவுல சேத்துக் கூட ,நெறய மக்கள்ஸ் பாராட்டி,“ரொம்ப நல்ல முடிவு”ன்னு சந்தோஷப் பட்டாங்க :)))) அதெப்படி மக்கள்ஸ்ஸ ஃபிரியா விட்டுற முடியும்?.:P.அதான் நேரம் கெடக்குற வரை என்னோட மற்ற பதிவுகளுல இருந்து சில இடுகைகளை வெளியிடலாம்ன்னு ,இதை வெளியிட்டிருக்கேன்.

இந்த புது வருஷத்துல எனக்கு 4 tag பதிவு எழுத சொல்லி விண்ணப்பம் /அன்புக் கட்டளை வந்திருக்கு.

1) சஞ்சய்கிட்டயிருந்து மொக்கை டாக்.. - போட்டாச்சு
2)இம்சை(f/o பவன் குட்டி) சீரியஸ் டாக் - போட்டாச்சு
3)எங்க தனிப்பெரும் தலைவி கீதா அக்கா சிறந்த பதிவு டாக்
4)புதுகைத் தென்றல் புத்தாண்டு உறுதிமொழி டாக்...

கீதா அக்காவும்,புதுகைத்தென்றலும் தாமதத்திற்க்கு மன்னிக்கவும்,கொஞ்சம் டைம் குடுங்களேன்...செஞ்சுடலாம்..

என்னுடைய அழைப்பை ஏற்று மொக்கை டாக் போட்டு ஆதரவு அளித்த.. சீனா ஜயா,மங்களூர் மாமு,கீதா அக்கா,வேதா,டிரிம்ஸ் மாம்ஸ்,ஸாரி சொல்லி எஸ் ஆன அம்பியண்ணா,விரைவில போட்டுடறேன்னு வாக்கு குடுத்து சைலண்டா இருக்குற ஜி3,ஃமைபிரண்டு,நிலா பாப்பா எல்லாருக்கும் என்னுடய நன்றிகளை சொல்லிக்கிறேன்...