Saturday, January 12, 2008

விடைப் பெறுகிறேன். பதிவுலகத்திலிருந்து...

கொஞ்சம் நாளாகவே பதிவுகளில் ஒரு ஆர்வமின்மை.. பதிவெழுதித்தான் ஆகவேண்டும் என கட்டாயப் படுத்திக்கொண்டால் அதுவே நமக்கு சுமையாகி விடுகிறது.. ஆரம்பத்தில் ஒரு சாதாரண ரசிகனாகத்தான் பதிவுகலகத்துக்கு வந்தேன்.. எல்லாருடைய பதிவுகளையும் ரசித்துப் படித்து,புதியவர்களை ஊக்கப் படுத்தத்தான்(?) ஒரு பேர் வேணுங்கற அடையாளமாக இந்தப் ”ரசிகன்” ‘பதிவை ஆரம்பித்தேன்..

ஆரம்பத்தில் பொழுதுப்பொக்கா ஆரம்பிச்ச இந்த பதிவு..வலை மக்கள்ஸ் & லோக்கல் ஃபிரண்ஸ் ஆதரவால அனுபவம்,சீரியஸ்,காமெடின்னு போய் கடைசியா வெறும் மொக்கையில வந்து விழிந்துருச்சு. அதானே ரொம்ப ஈஸி..:P

பதிவுக்கெல்லாம் ஒரு ஜாலிக்காகத்தானே வர்ரது,இதுல சீரியஸ்ல்லாம் வேணாம்ன்னு பலத்த லோக்கல் நண்பர்களின் (எல்லாம் படிப்பாங்கங்க,போனுல லொள்ளு பண்ணுவாங்க,ஆனா யாரும் பின்னூட்டம் போட மாட்டாங்கறாய்ங்க.. ஹிம் என்ன் ஒரு நல்ல பழக்கம்) எதிர்ப்பினால் சீரியஸ் இடுகைக்காகவே ஒரு பர்சனல் பதிவு போட்டாச்சு... அதனால மெயின் பதிவான உங்கள் ரசிகன் ,எப்போதாவது சீரியஸ் லேசா தலை காட்டினாலும் கூட ,மொக்கை ஸ்பெசலாகிடுச்சு.. எனக்கு மொக்கை மன்னன்னு கூட பட்டமெல்லாம் கொடுத்துட்டாஙக..:))
இன்னும் ஒருபடி மேல போய்,என்னிய பாத்து , நீயெல்லாம்.. காமெடி,ஜோக்கருக்குத்தான் லாயிக்கு, நெசத்துல சீரியஸ்க்கெல்லாம் சரி பட மாட்டேன்னு கமெண்டெல்லாம் அடிச்சிட்டாங்களே மக்கா..ஹிஹி... (ஹலோ.....நியாயம்தானேன்னு சைடுல கேக்கறது..யாருப்பா?:)))).

இதுக்கெல்லாம் மனம் தளராம,எல்லா சீரியஸ் பதிவர்கள் மாதிரி

முள்ளாய் தைத்தது, உன் முரட்டு முடிவு
நிதர்சனத்தின் நிராகரிப்பில்
நிர்மூலமான என் மனது.

ஒவ்வொன்றாய் நீ எடுத்துக்கொடுத்த கற்களில்
நான் கட்டிய கனவுக் கோட்டை...

கண்ணிமைக்கும் நேரத்தில்
கடைக்கால் வரை இடிந்தது.

ச்சீ..ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்...
ரணங்களின் வலியில் வலுக்கட்டாயமாய்
தூக்கியெறிந்தேன் உன்னை என்னுள்ளிருந்து...

மண்ணில் போய் விழுந்தது நீ மட்டுமல்ல...
நீ மட்டுமே நிறைந்திருந்த, என் இதயமும் கூடத்தான்...
"

ன்னு அழுகாச்சி,கொலைவெறிக் கவிதையெல்லாம் எழுதலாமான்னு பாத்தேன்..
ஹய்யோ..... அடிக்காதிங்க.,.. அடிக்காதிங்க,... இதான் கடைசி அழுகாச்சிக் கவிதை.. , இப்ப எனக்கு கூட எழுதுத வருமோன்னு சும்மா எழுதிப் பாத்தேன்.. இனிமே நிச்சயமா இல்லை...மன்னிச்சு விட்டுருங்க...ஹிஹி....

ஆனா, எதுக்கு நமக்கு அந்த வேண்டாத வேலையெல்லாம்?..நல்லாயிருக்கட்டும் மக்கள்ஸ்ன்னு விட்டுட்டேன்..

இப்பத்தான் படிச்சேன்.. எனக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்திய வழிகாட்டி அபிஅப்பா கூட “விடை பெறுகிறேன்”ன்னு பதிவு போட்டுடாரு..
ஒருமுறைக்கூட “விடைப் பெறுகிறேன்”ன்னு பதிவு போடலேன்னா முழுமையான பதிவர்(?)ஆக முடியாதுன்னு நம்ம குசும்பர் கூட சொல்லியிருக்காரு..

அதனால எம்மனசுக்கு தோணற வரை, இந்த பதிவுலகத்துலயிருந்து விடை பெறலாம்ன்னு முடிவெடுத்துட்டேன்...
போய் வருகிறேன் நண்பர்களே...இதுவரை உங்கள் ஆதரவுக்குமனமார்ந்த நன்றிகள்... என்னால இனி எந்த தொந்தரவும் இருக்காது..


மறுபடியும் எப்போ வரத் தோணும்?(பதிவுலகத்திற்க்கு ..)ன்னு கேக்குற தோழர்கள் மட்டும் கீழே இருக்குற அடைப்புக்குறிக்குள்ள ஃமவுஸ்சால செலக்ட் செய்யுங்க..(
க.கை.நா மக்கள்ஸ்க்கு மட்டும்: செலக்ட்= மவுஸ் இடது பட்டனை அழுத்தியவாறு அடைப்புக்குறியோட ஆரம்பத்துல இருந்து ,முடிவு வரை மவுஸ் பாயிண்டரை நகர்த்தனும்..:)))) )

இல்லாட்டி வெறுமனே, உங்க கணிப்பொறி கீபோர்டுல “ ctrl ” பட்டனையும் ”A" பட்டனையும் ஒரே சமயத்துல அழுத்தினாலும் ,அடைப்புக்குறிக்குள்ள இருக்குற எழுத்துக்கள் கண்களுக்கு தெரியும்...

{ அவ்வ்வ்வ்வ்....... நான் விடைப் பெறறேன்னதும், எம்புட்டு சந்தோஷம் உங்களுக்கு..?.. அதெல்லாம் சும்மா இன்னிக்கு மட்டும்தான் விடைப் பெறுகிறேன் போட்டேன்.. எப்ப தோணிணாலும் மொக்கை போடுவேன்..ஹிஹி...ஆனா இனி பழையபடி,நான் எழுதறத விட ,மத்த எல்லாரோட பதிவுகளுக்கும் ரசிக்க அதிக நேரம் ஒதுக்குவேன்..இதுவரை தூரத்துல தள்ளி வைச்சிருந்த,உங்க அழுகாச்சி கவிதைகளுக்கும் இனி ஆதரவு உண்டுங்கோ...இதான் என்னோட புத்தாண்டு தீர்மானம்....

இனி யாருக்கும் தொந்தரவு செய்யாம,ஒரு மூலையில, மொக்கை போட்டுக்கிட்டிருக்கேன்..பொறுத்துக்கோங்க மக்கள்ஸ்...ஹிஹி...

இதப் படிச்சிப்புட்டு “நீ நெசமாவே மொக்கையிலருந்து விடைப் பெறுகிறேன்னு நல்ல முடிவெல்லாம் எடுத்துட்டியோன்னு சந்தோஷப்பட்டேன். அடப்பாவி... உன் மொக்கையை தமிழ்மணம் தாங்கிதான் ஆவனுமா?.என்ன கொடுமை இது?”ன்னெல்லாம் பின்னூட்டத்துல என்னிய பாராட்டனும்ன்னு தோணுமே... சந்தோஷமா பாராட்டிட்டு போங்கப்பூ....ஹிஹி...
}

50 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

Anonymous said...

தமிழ் பதிவுலகுக்கு மாபெரும் இழப்பு

said...

//விடைப் பெறுகிறேன். பதிவுலகத்திலிருந்து... //

அபி அப்பாவுக்கும் உங்களுக்கும் ஆண்டிபயாடிக் கிடைக்க வாழ்த்துக்கள். விரைவில் குணமடைய வேண்டும் !

Anonymous said...

என்னா ஒரு டெக்கினிக்கு...(வடிவேலு வார்த்தையில் படிக்கவும்)

said...

ரசிகனுக்கு என்னாச்சு?

said...

இதப் படிச்சிப்புட்டு “நீ நெசமாவே மொக்கையிலருந்து விடைப் பெறுகிறேன்னு நல்ல முடிவெல்லாம் எடுத்துட்டியோன்னு சந்தோஷப்பட்டேன். அடப்பாவி... உன் மொக்கையை தமிழ்மணம் தாங்கிதான் ஆவனுமா?.என்ன கொடுமை இது?”

said...

ன்னெல்லாம் பின்னூட்டத்துல என்னிய பாராட்டனும்ன்னு தோணுமே... சந்தோஷமா பாராட்டிட்டு போங்கப்பூ....ஹிஹி... }

said...

மொக்கையில் இது புது ரகம்..ரசிகன் ஸ்டைல்...

said...

கொஞ்ச நேர சந்தோஷம் கூட தரக் கூடாதா?உடனேவா சும்மா எழுதினேன்னு சொல்றது.....அடுத்த பதிவுல சொல்லியிருந்தால் ஒரு பதிவுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிருக்குமே!!!!!!
அருணா

said...

சின்னப் பசங்களுக்கு வேற வேலை இல்ல -பவன் பய போறேன்றான் - அபீக் குட்டி சொல்லி அபி அப்பா போறென்றாரு - இப்ப ரசிகன் - என்ன நெனெச்சிக்கிட்டு இருக்காங்க இவங்கெல்லாம் - யாரே நம்பி நாங்க பொறந்தோம் - போங்கடா போங்க

said...

விடைப் பெறுகிறென் - தப்பு - விடை பெறுகிறேன் - சரி

கீதா டீச்சர் = பெரம்பு எங்கே

said...

http://dinamalar.com/2008jan13varamalar/THUNUK.ASP

இது தான் நீங்க தலைமறைவுக்கு காரணமா ?

Anonymous said...

NO COMMENTS,ENJOY.

said...

என்னப்பா.. இப்படி தான் திடீர்னு ஷாக் குடுப்பியா?

Anonymous said...

//இப்பத்தான் படிச்சேன்.. எனக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்திய வழிகாட்டி அபிஅப்பா கூட “விடை பெறுகிறேன்”ன்னு பதிவு போட்டுடாரு..//

அபி அப்பாவை கும்முவதற்காக சுற்றி வளைத்து இப்படி ஒரு மொக்கையா? ஹூம்...நடத்துங்க, நடத்துங்க!

Anonymous said...

என்னத்த திட்றது? பொழச்சு போங்கன்னு விடவேண்டியதுதான்

said...

அவ்வ்வ்வ்வ்வ்! ஏன்? இந்த வில்லத்தனம்! அதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கப்பா!!

ஹிஹி :)

Anonymous said...

என்ன ஆச்சு அண்ணனுக்கு? ஓவர் எமோஷன்?

Anonymous said...

உங்க வீட்டுக்கு டயல் பண்ணனுமா?:P

said...

நல்லவங்களுக்கு அழகு சொல்லிக்காம போறது.;):)))

said...

கடவுளே, ஃபாண்ட் எல்லாம் மாறிடுச்சே, உங்களாலே ஆன உதவியா இது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிஜமாவே விடைபெறுகிறீங்கனு நினைச்சேனே! :P

said...

கொஞ்ச நேர சந்தோஷம் கூட தரக் கூடாதா?உடனேவா சும்மா எழுதினேன்னு சொல்றது.....அடுத்த பதிவுல சொல்லியிருந்தால் ஒரு பதிவுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிருக்குமே!!!!!!

டபுள் ரிப்பீட்டூ

said...

இந்த ஸ்டண்ட் எல்லாம் நாங்க எப்பவோ அடிச்சாச்சு. ரீல் அந்து போச்சு ராசா! போதும். :)

said...

//விடைப் பெறுகிறென் - தப்பு - விடை பெறுகிறேன் - சரி

கீதா டீச்சர் = பெரம்பு எங்கே//

ஹிஹிஹி, சீனா சார், நன்னி, நன்னி!

said...

"சாதனை"ப் பதிவு எழுத உங்களை அழைத்துள்ளேன், வந்து பார்த்துவிட்டுப் பின் எழுதவும்

said...

ஆமாம்,இந்த புளொக் வேணாம்...
இன்னொரு புளொக் ல வாங்க. சந்திப்போம்.

Anonymous said...

Cha.. I opended with sad since u always used to put replies... If you go out from blog too please put replies..

said...

//பதிவெழுத போவதில்லைன்னு ஒரு பதிவு போடலேன்னா முழு பதிவரா ஆகவே முடியாது, நானெல்லாம் எவ்ளோ போட்டிருக்கேன் இந்த மாதிரி :)

வாங்க வேதா வாங்க ,நல்வருகைகள்...:) ,ஆஹா..சந்தடி சாக்குல நீங்க நெறய முறை முழுப்பதிவர் ஆகிட்டிங்கன்னு விளம்பரமா?..அவ்வ்வ்வ்.... நம்ம கீதா அக்காவையே மிஞ்சிருவிங்க போலயிருக்கே..:)))))))

ஏதோ ஒரு வேகத்துல எழுதியிருக்கீங்கன்னு நினைக்கறேன் பரவாயில்ல உங்க மனநிலை சரியானப்புறம் திரும்ப வந்து எழுதுங்க :)//

ஏனுங்க வேதா...நான் தான் தெளிவா “ இன்னைக்கு மட்டும் தான் விடைப் பெருகிறேன்” சொல்லறேன்னு பிராக்கெட்டுல போட்டிருக்கேனே படிக்கலிங்களா?..:))))))))))

வருகைக்கும் ,கருத்துக்கும் ரொம்ப நன்றிகள்..

said...

// Anonymous said...

தமிழ் பதிவுலகுக்கு மாபெரும் இழப்ப//

ஆஹா..யாருப்பா அது, எனக்கு ஆதரவு தெரிவிச்ச ஒரே ஜீவன்?.
ஒருவேளை புது ஆளாயிருப்பாரோ?.:)

ஆனாலும் ரொம்ப உஷாருதான்.. மத்தவங்க ஆட்டோவுக்கு பயந்து,பேரைக் கூட போடலியே..:))))))))

said...

// கோவி.கண்ணன் said...

//விடைப் பெறுகிறேன். பதிவுலகத்திலிருந்து... //

அபி அப்பாவுக்கும் உங்களுக்கும் ஆண்டிபயாடிக் கிடைக்க வாழ்த்துக்கள். விரைவில் குணமடைய வேண்டும் !//

ரொம்ப நன்றிகள் நண்பரே.. நிஜமாவே எல்லாருக்குமே, பிரச்சனைன்னு வரும்போது,மனோதிடம்ங்கர ஆண்டி பயாடிக் மருந்து தேவைத்தான்..ஒரு நல்ல செய்தி.. இதை புரிஞ்சுக்கிட்டு அபி அப்பா மறுபடியும் எழுத ஆரம்பிச்சுட்டார். நன்றிகள்..

said...

//இரண்டாம் சொக்கன் said...

என்னா ஒரு டெக்கினிக்கு...(வடிவேலு வார்த்தையில் படிக்கவும்)//

வாங்கய்யா.. வாங்க.. இப்படித்தான் சொல்லி சொல்லி.. அவ்வ்வ்வ்வ்.......
(இதையும் வடிவேலு வார்த்தையில் படிக்கவும் :)))))))) )

said...

// பாச மலர் said...

ரசிகனுக்கு என்னாச்சு?//

தெரியலைங்க.:P.ஹிஹி.....
வருகைக்கு நன்றிகள்...

said...

//இம்சை said...

இதப் படிச்சிப்புட்டு “நீ நெசமாவே மொக்கையிலருந்து விடைப் பெறுகிறேன்னு நல்ல முடிவெல்லாம் எடுத்துட்டியோன்னு சந்தோஷப்பட்டேன். அடப்பாவி... உன் மொக்கையை தமிழ்மணம் தாங்கிதான் ஆவனுமா?.என்ன கொடுமை இது?”

ன்னெல்லாம் பின்னூட்டத்துல என்னிய பாராட்டனும்ன்னு தோணுமே... சந்தோஷமா பாராட்டிட்டு போங்கப்பூ....ஹிஹி... }//

நம்ம இம்சை அங்கிளோட தொல்லை தாங்கலை.. சைலண்டா படிச்சு கஷ்டப் படறத விட்டுட்டு
அதை வெளிப்படையா போட்டு மத்தவங்களையும் கஷ்டப் படுத்தனுமா?.. என்ன கொடுமைங்க இது? :P
:)))))))

said...

//பாச மலர் said...

மொக்கையில் இது புது ரகம்..ரசிகன் ஸ்டைல்...//

ஹிஹி..நன்றிகள் பாசமலர்.. ஆனா என்ன புண்ணியம் ,நெசமாவே விடைப்பெற சொல்லி ஆட்டோல்லாம் அனுப்பறாய்ஙக்ளே..ஹிஹி..
:)))))))

said...

// aruna said...

கொஞ்ச நேர சந்தோஷம் கூட தரக் கூடாதா?உடனேவா சும்மா எழுதினேன்னு சொல்றது.....அடுத்த பதிவுல சொல்லியிருந்தால் ஒரு பதிவுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிருக்குமே!!!!!!
அருணா//

அடடா.. இந்த யோசனை எனக்கு வரலியே.... ஆனாலுங்க அருணா. இப்ப சொன்னதுக்கே உண்மையா இருக்கக் கூடாதான்னு இவங்கெல்லாம் என்னிய
திட்டறாய்ஙகளே.. இன்னும் ஒருபதிவு விட்டு சொல்லியிருந்தா... மொக்கையில இருந்து எஸ் ஆகி பழகி என்னிய மொக்கையே போடப் படாதுன்னு லாரி அனுப்பிட்டா என்ன பண்றதுன்னு தான்..ஹிஹி..:))))))))

said...

// cheena (சீனா) said...

சின்னப் பசங்களுக்கு வேற வேலை இல்ல -பவன் பய போறேன்றான் - அபீக் குட்டி சொல்லி அபி அப்பா போறென்றாரு - இப்ப ரசிகன் - என்ன நெனெச்சிக்கிட்டு இருக்காங்க இவங்கெல்லாம் - யாரே நம்பி நாங்க பொறந்தோம் - போங்கடா போங்க

விடைப் பெறுகிறென் - தப்பு - விடை பெறுகிறேன் - சரி

கீதா டீச்சர் = பெரம்பு எங்கே//
அவ்வ்வ்வ்வ்.... சீனா சார் ,நீங்க நம்ம நாரதர் கானசபாவுல பாடனும்ன்னு கேட்டிருந்திங்களே..
அதுக்காக இப்படியெல்லாம் பாடி ஞாபகப்படுத்தப்டாது..ஹிஹி....
வந்ததுமில்லாம என்னிய டீச்சர்கிட்ட போட்டுக் குடுத்துட்டு வேற போறிஙக..
இதுல பிரம்பு ஜடியா வேற.. ஆனா எங்க தனிப்பெரும் தலைவி ரொம்ப நல்லவங்க,இளகிய மனசுடையவங்க...
யாரையும் அடிச்சு துன்பப் படத்த மாட்டாங்க..(சாம்பு மாம்ஸ் பொய் சொன்னதுக்கு மன்னிச்சுக்கோங்கோ..:P )
(டீச்சர்.. பாராட்டு கேட்டுச்சா..:)))) )

ரொம்ப நன்றிகள் சீனா ஜயா...

said...

// இம்சை said...

http://dinamalar.com/2008jan13varamalar/THUNUK.ASP

இது தான் நீங்க தலைமறைவுக்கு காரணமா ?//

அவ்வ்வ்வ்.... அங்கிள்,ஏதோ மொக்கைப் பதிவு போட்டுக்கிட்டு நான் பாட்டுக்கு சைடுல இருக்கேன். என்னியப் போயி...அவ்வ்வ்வ்வ்வ்வ்
நான் அவனில்லைங்கோ......:))))))))))))))

said...

// Anonymous said...

NO COMMENTS,ENJOY.//

யாருப்பா இது?.. அதுசரி இந்த என்ஜாய் யாருக்கு?எனக்கா இல்லை மக்கள்ஸ்க்கா? :P

said...

// சகாரா said...

என்னப்பா.. இப்படி தான் திடீர்னு ஷாக் குடுப்பியா?//

வாங்க சகாரா... நீ நெசமாவே விடை பெற்றுடுன்னு எனக்கு ஷாக் குடுத்துட்டாய்ஙக்ளே மக்கள்ஸ்..அவ்வ்வ்வ்வ் :))
வருகைக்கு நன்றிகள்

said...

// Anonymous said...

//இப்பத்தான் படிச்சேன்.. எனக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்திய வழிகாட்டி அபிஅப்பா கூட “விடை பெறுகிறேன்”ன்னு பதிவு போட்டுடாரு..//

அபி அப்பாவை கும்முவதற்காக சுற்றி வளைத்து இப்படி ஒரு மொக்கையா? ஹூம்...நடத்துங்க, நடத்துங்க//

ஹிஹி.. அவருக்கு நல்லது நடந்தா சரிதானே..அவரும் ஏற்கனவே எழுத ஆரம்பித்து விட்டார்..:)

ஒருவேளை இதை எழுதியது அபி அப்பாவோ.. அவர் படிச்சதா சொன்னாரே.... அவ்வ்வ்வ்வ்வ்.....

ஒன்னுமே புரியலை உலகத்துல..
என்னமோ நடக்குது,மர்மமா இருக்குது..:)))

said...

// kotts said...

என்னத்த திட்றது? பொழச்சு போங்கன்னு விடவேண்டியதுதான//

அவ்வ்வ்வ்வ்.....நீங்க இம்புட்டு நல்லவரா?..ரொம்ப நன்றிங்க.:))

said...

//Dreamzz said...

அவ்வ்வ்வ்வ்வ்! ஏன்? இந்த வில்லத்தனம்! அதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கப்பா!!

ஹிஹி :)//

மாம்ஸ் யுடூ..?

எல்லாரும் முடிவே பண்ணிட்டிஙக்ளா?.. கடைசி பாராவ பாராமலே சொல்லப்டாது..:P

said...

// kavithaa said...

என்ன ஆச்சு அண்ணனுக்கு? ஓவர் எமோஷன்?

உங்க வீட்டுக்கு டயல் பண்ணனுமா?:P//

ஹாய் கவிதா,அதுக்கெல்லாம் ஒன்னும் அவசியம் இல்லை.. :))))
வருகைக்கு நன்றிகள்

said...

// delphine said...

சியர்ஸ் சொல்லலாம்னு வந்தேன்!.. ம்ம்.//

அவ்வ்வ்வ்வ்.......
வருகைக்கு நன்றிகள் அக்கா..
ஏன் நீஙக்ளுமா விடைபெறப் போறிங்க?..சியர்ஸ்?.
மக்கள்ஸ் பாவம்ல்ல....:P

said...

// கண்மணி said...

நல்லவங்களுக்கு அழகு சொல்லிக்காம போறது.;):)))//

ஹலோ.. கண்மனி அக்கா.. இது அநியாயம்..சும்மா ஒரு வார்த்தை சொல்லப்டாதே.. அவ்வ்வ்வ்வ்..... மக்கள்ஸ்சை அம்புட்டு சீக்கிறமா ஃபிரியா விட்டுற முடியுமா.. எம்புட்டு மொக்கைல்லாம் போட வேண்டியிருக்கு..:))))

said...

//கீதா சாம்பசிவம் said...

கடவுளே, ஃபாண்ட் எல்லாம் மாறிடுச்சே, உங்களாலே ஆன உதவியா இது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிஜமாவே விடைபெறுகிறீங்கனு நினைச்சேனே! :P//

ஹிஹி..ஏதோ என்னால முடிஞ்ச உதவி.. :)
நன்றிகள் அக்கா...

said...

//ambi said...

இந்த ஸ்டண்ட் எல்லாம் நாங்க எப்பவோ அடிச்சாச்சு. ரீல் அந்து போச்சு ராசா! போதும். :)//

வாங்க அம்பியண்ணா.. என்ன இருந்தாலும் ஒரு குடுப்பினை வேணாமா?.. என்ன இருந்தாலும் உங்க அளவு எக்ஸ்பர்ட் இல்லியே.. நாங்க,
ஏதோ எங்க லெவலுக்கு ஒரு மொக்கை.. அதுக்கு இம்புட்டு திட்டா?..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//கீதா சாம்பசிவம் said...

"சாதனை"ப் பதிவு எழுத உங்களை அழைத்துள்ளேன், வந்து பார்த்துவிட்டுப் பின் எழுதவும//

தலைவி சொல்லி அரியர்ஸ் வைக்க முடியுமா?.. நேரம் கிடைச்ச உடனே செஞ்சுடறேனுங்க அக்கா..

said...

// இறக்குவானை நிர்ஷன் said...

ஆமாம்,இந்த புளொக் வேணாம்...
இன்னொரு புளொக் ல வாங்க. சந்திப்போம்.//

ஏனுங்க இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே.
அட..நாந்தான் கடைசி பாராவுல சொல்லியிருக்கேனுங்களே..
அது மட்டுமில்லாம ஒரு பொது பிளாக்குக்கே ஆட்டோல்லாம் வருது
அவ்வ்வ்வ்வ்....

said...

//இ.கா.வள்ளி said...

Cha.. I opended with sad since u always used to put replies... If you go out from blog too please put replies..//

அவ்வ்வ்வ்வ்.....ஏனுங்க வள்ளி.. நான் போகலைன்னாலும் கூட எல்லாரும் ஒன்னா சேந்து பஸ் ஏத்தி அனுப்பிடுவிங்க போல.. :)))
வருகைக்கு நன்றிகள்..

said...

ரசிகன்,

கவிதை ரொம்ப நல்லா எழுதறீங்களே!! விடைபெறுகிறேன் அப்படின்னு சொல்லிட்டீங்களே, உங்கள பிரியப்போறமே அப்படிங்கற வருத்தத்துல எல்லாருமே இந்த கவிதையை பார்க்க மறந்துட்(டாங்க)டோம். நல்லாருக்குங்க கவிதை வரிகள். அதிலும்,

//ரணங்களின் வலியில் வலுக்கட்டாயமாய்
தூக்கியெறிந்தேன் உன்னை என்னுள்ளிருந்து...//

நிதர்சனம் சொல்லிப் போகுதுங்க உங்களின் இந்த வரிகள். படித்ததும் ஏனோ மனது வலித்தது. ;-(