Friday, January 4, 2008

மொக்கை TAG

நேற்று நண்பர் “பொடியன்” சஞ்ஜய் அவர்களோடு சாட்டில் மொக்கை போட்டுக்கொண்டிருந்த போது “மாம்ஸ் நா புதுசா ஒரு TAG விளையாட்டு பதிவு போட்டிருக்கேன். அதுல முடிவுல உங்களுக்கும் ஒரு TAG குடுத்திருக்கேன்... உடனே ஏதாவது மொக்கை பதிவு போட்டு இன்னும் 4 பேருக்கு நீங்களும் TAG போடுங்கன்னாரு.. மொக்கை எதைப்பற்றி வேணாலும் இருக்கலாம் ,எதுவும் கட்டுப்பாடு இல்லை.. இது என்னோட வேண்டுகோள் இல்லை கட்டளை"ன்னு உரிமையா சொல்லிட்டாரு...

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கப்பறம் ,பல பதிவர்கள் இன்னும் ஸ்டார்டிங் ட்ரபிளால ,பதிவை ஆரம்பிக்க சோம்பிக்கிடக்கும் இந்த நேரத்தில் ,இந்த விளையாட்டு சங்கிலி தொடராய் எல்லாரையும் உசுப்பி விட வாய்ப்பு இருப்பதாலையும், மொக்கைதானே ,அதில்லென்ன கஷ்டம் ,அதுவும் எனக்கு :P என்பதாலும் , சஞ்ஜய்யின் அன்புக்கட்டளைக்கு இணக்கவும்.. இந்த இன்ஸ்டண்ட் மொக்கை...


.............................................................






பொதுவாகவே எனக்கு இந்த தினப்பலன்களில் நம்பிக்கை இல்லை.. ஆனா தினமும் நியுஸ் படிக்கும்போது ,அதையும் தவறாம பார்க்கறதுல ஒரு இன்ரஸ்ட் .

புத்தாண்டு அன்று காலையில தினமலருல வந்த தின பலன் பாருங்க...



புத்தாண்டு தின ராசிபலன்

மேஷம்: மகிழ்ச்சி, குதுகலம் அதிகரிக்கும் நாள். நண்பர்களின் வாழ்த்துக்களை கேட்கலாம். ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். புதிய உறுதி மொழிகள் ஏற்று செயல்பட முற்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணக் கனவுகள் நனவாகும் நாள்.

ரிஷபம்: பெரிய மனிதர்களின் ஆசிகளைப் பெறும் நாள். நலிந் தோர் சிலருக்கு உதவிகள் செய்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் அணியலாம். மற்றவர்களின் மனம் புண்படாமல் நடந்து கொள்வீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நல்லது நடக்கும் நாள்.

மிதுனம்: புது உத்வேகம், தெம்புடன் செயல்படுவீர்கள். குடும் பத்தினருடன் கோயில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவீர்கள். நல்லவர்கள், பெரிய மனிதர்களின் வாழ்த்துச் செய்திகளைக் கேட்கலாம். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவதன் மூலம் பாராட்டுக்களைப் பெறலாம். ஆனந்தமான நாள்.

கடகம்: நல்லவர்களின் நட்பு கிடைக் கும் நாள். பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு திருப்தி அடைவீர்கள். பிரியமானவர் கள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்
களின் வாழ்த்துக்களைப் பெறலாம். அண்டை, அயலார் கேட்ட உதவிகளைச் செய்வீர்கள்.

சிம்மம்: உறவினர்களின் வாழ்த்து மழையில் நனைவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த முற்படுவீர்கள். ஆடை, அலங் காரப் பொருட்கள் வாங்கலாம். தொழிலை மேம்படுத்துவதில் நாட்டம் செல்லும். பொழுது போக்கு உல்லாச விஷயங்களில் நாட்டம் செல்லும். குடும்பத்தினருடன் சிலர் வெளியிடங்களுக்கு செல்லலாம்.

கன்னி: சந்திக்கும் நபர்களிடம் சந் தோஷத்தை பரிமாறிக் கொள் வீர்கள். உங்களை குறை சொன்னவர்களே பாராட்டுவர். வீட்டில் சில நல்ல நிகழ்ச்சிகள் நடக்கலாம். நெடுநாட்களாக தொடர்ந்த கெட்ட பழக்கம் ஒன்றை விட்டொழிக்க தீர்மானிப்பீர்கள். தொலைபேசி வழியில் முக்கியமான செய்திகளைக் கேட்கலாம். இனிமையான அனுபவம் பெறலாம்.

துலாம்: தொலைந்தன துன்பங்கள் என புதிய நம்பிக்கை பெறும் நாள். பணவரவுகள் தொடர்பாக முக்கியமான செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் எதிர்பாராத ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறலாம். உடன் பிறப்புக்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர். தெய்வ அனுகூலத்தால் சில நல்ல காரியங்கள் நடக்கலாம்.

விருச்சிகம்: பரிசு, பாராட்டுக்கள் பெறும் நாள். காலை முதல் மாலை வரை உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். பகட்டான ஆடை, ஆபரணங்கள் அணிந்து உங்களின் செல்வாக்கை வெளிப்படுத்துவீர்கள். வி.ஐ.பி.,க்கள் சிலரின் சந்திப்பு நிகழும். வசதிகள் கூடும் நாள்.

தனுசு: மனதில் நிம்மதி, பெருந் தன்மை குடிகொள்ளும் நாள். கலகலப்பான பேசி மற்றவர் களை மகிழ்விப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பால்ய நண்பர்கள் சிலருக்கு வாழ்த்துச் சொல்வீர்கள். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விலை மதிப்புமிக்க பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும்.

மகரம்: வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். தெய்வ வழிபாடுகளின் மூலம் திருப்தி காண் பீர்கள். தர்ம, புண்ணிய காரியங்களுக்காக கணிசமாக செலவிடலாம். நண்பர்களுடன் பார்ட்டி, கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்த்துக் களைப் பெறுவீர்கள்.

கும்பம்: இறைவழிபாட்டின் மூலம் இன்பங்கள் அதிகரிக்கும் நாள். சோர்வாக அமர்ந்திருக்காமல் ஏதாவது வேலைகளை செய்து கொண்டிப்பீர்கள். மனைவி, குழந்தைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்ற பணத்தை தாராளமாக செலவு செய்வீர்கள். வெளியூர்களில் இருக்கும் சிலருக்கு வாழ்த்துக் கூறுவீர்கள்.

மீனம்: உள்ளத்தில் இனம்புரியாத சந்தோஷம் குடிகொள்ளும் நாள். பழைய பொருட்கள் சிலவற்றை கழித்து விட்டு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பெண்கள் வழியில் சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம். எதிர்ப்புகள் போட்டிகள் குறைந்து ஏற்றம் பெறலாம். தொழிலில் மாற்றங்கள் செய்ய திட்டமிடுவீர்கள்.

இதுல உங்க ராசி எதுவா இருந்தாலும் கண்ணை மூடிக்கிட்டு எந்த ராசியோட பலனை பாத்துக்கிட்டாலும் ,பொருத்தமாத்தான் தோனும். ஏன்னா வாழ்த்து சொல்லறது,வாழ்த்து/பரிசு வாங்கறது எல்லாமே புத்தாண்டுக்கு எல்லாருக்கும் நடக்கற விசயம். இதை எம்புட்டு ஸ்மார்ட்டா இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம் மிக்ஸ் பண்ணி பலன்னு போட்டு கலக்கறாய்ங்கல்ல... (ஏமாறது மக்கள் தானே..).இன்னும் மனம் பலமில்லா சிலபேர் இதை வெளையாட்டா எடுத்துக்காம ,சோகம்ன்னு போட்டிருந்தா ,உண்மையாவே சீரியஸ்ஸா சோகமாகிடறாய்ங்க... அதுதான் பாவமாயிருக்கு...


மொக்கைக்கு விளக்கம் குடுத்தா நல்ல பதிவாகிடும் ,அதனால நோ கமெண்ட்ஸ் ..நீங்களே எல்லா பலன்களையும் கம்பேர் பண்ணி புரிஞ்சிக்கோங்க..

இம்புட்டு கிண்டல் பண்ணுற நீ பின்ன ஏதுக்கு அதை போய் படிக்கனுமின்னு கேக்கறிங்களா?... பின்ன.. காலையில வாய்விட்டு சிரிச்சா ,அன்னிக்கு முழுக்க மனசு ஃபிரியா இருக்கும்ன்னு பெரியவிங்க சொல்றாய்ங்களே..:P
அதான் ராசிபலன் பகுதில வர்ர ஜோக்கை தினமும் காலையில தவறாம படிச்சிடறது..:P


ஆனா பொதுப்பலன் போல இல்லாம ,குறிப்பிட்ட பிறந்த நேரம்ல்லாம் வைச்சு,ஜாதகம் கணிச்சு சொல்லறதுல்ல..ஏதோ மீனிங் இருக்குங்கராய்ங்க...


எழுத்தாளர் சுஜாதா சொல்லறப்போல.. “சாதாரண மனித வாழ்க்கையை ,பிரபஞ்ச இயக்கங்களோட சம்பந்தப்படுத்தி சொல்லற பார்வை என்னை கவர்ந்தது. ஆனா இதுல உண்மையான விசயம் தெரிஞ்சவிங்க குறைவு”.


.............................................................


இந்த மொக்கை போதுமா?..இன்னும் கொஞ்சம் வேணுமா?..


சரி இப்போ விசயத்துக்கு வருவோம்....
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டு நான் அழைப்பு விடுக்கும் வீ.ஜ.பிக்கள் யாருன்னா... (மொக்கை எக்ஸ்பீரியண்ஸ் இருக்கிறவிங்க மட்டும் குடுத்திருக்கேன்).

1) மொக்கைன்னு சொல்லிட்டப்பறம் நம்ம தனிப் பெரும் தலைவி இல்லாமலா?...

2) இனி பதிவே போட மாட்டேன்ன்னு.. கூறிய என் இந்த தோழியின் முடிவைக்கேட்டு ஆரம்பத்துல லேசா “அப்பாடான்னு தப்பிச்சது உலகம்ன்னு“ தோணினாலும் இப்போ அவர் இல்லாத கும்மி உலகமே ஏதோ வெறுமையா தோனுற காரணத்தாலும் ,அவரது விரதத்தை கலைக்கும் விதமா அழைப்பு விடுக்கிறேன்.

3)சீரியஸ் பதிவுகளை தொடந்து போட்டு தாக்கினாலும்.தனது மொக்கை திறமையை தன்னை அறியாமல் அடிக்கடி வெளிப்படுத்தும் சகலகலா வல்லி ஆகிய இந்த தோழிக்கு அழைப்பு அனுப்பலேன்னாக்கா தமிழ் உலகம் என்னிய மன்னிக்காது..

4) பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய , தமிழிணையத்தின் நம்ம வீட்டு பிள்ளை ,என்ன பதிவு போடறது?ன்னு கேட்டே ஒரு பதிவு போட்ட மொக்கை வழிகாட்டி,நம் பாசத்துக்குறிய அபிமான நண்பர்.

5)உலகத்தை சுத்தினாலும் ,அம்மா அப்பாவை சுத்தினாலும் ஒன்னுதாங்கர போல , மொக்கை போட்டாலும் , (காயலான் கடையில, கிலோ கணக்குல பழைய பாட்டு சீடிகளா வாங்கி குவிச்சு அதை )பிட் எழுதி கொடுமை பண்ணரதும் ஒன்னுன்னு புரிஞ்சிக்கிட்டு,என்னிக்குமே மேட்டர் பஞ்சம் வராத பாட்டு பிட்டு டிரிக்ஸ்ஸ இந்த சின்ன வயசுலயே கண்டு பிடிச்ச புத்திசாலி குட்டீஸ் இவர்.

6)தலைவியோட பலமுனை தாக்குதல்களை சமாளிச்சு , எதிர்கட்சியா நிக்கும் ஒரே ஜித்தன் இவர்தான். தலைவியின் சீடர்களால் அன்போடு வம்பி என்று அழைக்கப்படும் இவர் ஒரு வாழும் வழிகாட்டி...

7) வயசோட அனுபவத்தையும் , மனசோட இளமையையும் கலந்து எல்லா ஏஜ் குருப்க்கும் பிடித்தமான இவர். இவர் போகாத வலை வீடுகளே இல்லைன்னு சொல்லலாம். எல்லாத்தையும் ரசிச்சு படிக்கும் தமிழ் வலையுலகின் திரிலோக சஞ்சாரி... இவர்.(ஆனா நாரதர் போலல்லாம் இல்லை ரொம்ப நல்லவர்.) .(இதுவரை இவர் மொக்கை போட்டதில்லை என்றாலும் நமக்காக செய்வார் என்று நம்புவோம்...)

8)ஜாலியா பதிவுகள்ல்ல கலக்கும்போதே ,சமயம் கெடக்கும் போதெல்லாம் டீடீ அக்கா,ரசிகன் போன்ற அப்பாவி நண்பர்களை வம்புக்கு இழுக்கும் மின்னல் இவர்...

9)இவர் இல்லேன்னா இந்த வீ.ஜ.பி லிஸ்ட் ஒரு நிறைவு பெறாது.. பார்வேர்ட் மெயில் வீட்டியோக்களை ,ஜிலு ஜிலு தலைப்பு வைச்சு,ஹிட் கவுண்டரை சும்மா கேதான் ஃபேன் போல சுத்த வைக்கிரதுல இவர அடிச்சுக்க ஆளே இல்லை..



10)தேவதை கனவுகளில் அலுவலகத்துலயே டிரிம்ஸ் காணுபவர்...தேவதை வர்ணனை கவிதைகளால் கலக்குபவர்.(ஆனா இன்னும் நேருல தேவதையை பாத்துட்டாரான்னு தெரியாத ரகசியமாவே இருக்கு:)))


11) இணையத்தின் இளைய இளவரசி... செல்லக்குட்டி ,பொம்முக்குட்டி, அம்முக்குட்டி




1) “தனி”ப்பெரும் தலைவி கீதா அக்கா..
2) கும்மி புகழ் அன்புத்தோழி ஜி3
3) தலைவியின் பிரதான சிஷ்யை ”கவியரசி“ வேதா
4)” நம்ம வீட்டுப் பிள்ளை” அபி அப்பா..
5)சித்து,சித்துன்னு நம்மையெல்லாம் கடுப்பேத்தி சந்தோஷப்படும் நம்ம ஃபிரண்டு (ஃமைபிரண்டு)
6)”ஆல் இன் ஆல் அழகுராஜா” அம்பியண்ணன்
7)என்றும் பதினாறு ”சீனா சார்”
8)மின்னல் சுமதி
8)மங்களூர் மாமு..”சிவா தி கிரேட்”


10)தேவதையின் காதலன்(:P) டிரிம்ஸ் மாம்ஸ்...
11) “நறுக்”புகழ் நிலா செல்லம்...

ஓகே...இதுல அழைப்பு வாங்கனவிங்கள்லாம் சொம்மாவது ஏதாவது மொக்கை போட்டு ,தமிழ் பதிவர்களின் இந்த வருஷ பதிவுகளை உசுப்பி விட்டு சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.அப்படியே போற போக்குல குறைந்த பட்சம் 4 பதிவர்களை TAG செய்து விட்டு போகவும்.

ஸ்ஸ்ஸ் யப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே... இருங்க,...ஒரு சோடா குடிச்சிட்டு வர்ரேன்..ன்னு ஒரு தோழி சொல்ல ஆசைபடறது புரியுது.. :P

அதான் நாங்களே சொல்லிட்டோம்ல்ல...:P

ஏம்பா சஞ்ஜய்.. இப்போ திருப்தியா... ரசிகன் அங்கிள் சார்புல உங்க தோழி பொன்னரசிக்கும் ஒரு தாங்க்ஸ் சொல்லிடுங்க... மொக்கையை ஆரம்பிச்சு வைச்சதுக்கு...:P..



45 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

cheena (சீனா) said...

என்னைய்யா - என்னெ ஏழிலே போடிருக்கே - நான் முத ராசிக்காரன் தெரியுமா - ஆமா அதென்ன தோழிகளுக்கே முதலிடம்

Dreamzz said...

அடப்பாவிகளா... கிளம்பிடீங்களா....!

Dreamzz said...

நீ அவன் தானா?

Dreamzz said...

அவ்ன் நீ தானா?

Dreamzz said...

இருந்தாலும், தனியா கஷ்டபடல என்பதில் ஒரு அல்பமில்லா சந்தோஷம்! ஹி ஹி!

Dreamzz said...

இன்னும் ஒன்னு1

Dreamzz said...

7! வர்ட்டா!

Dreamzz said...

சரி இனி ராசிபலனுக்கு பதில்..

//. குடும்பத்தினருடன் சிலர்
வெளியிடங்களுக்கு செல்லலாம்.
//
ஏண்டா வெண்ணை.. (ரசிகன் உங்களை இல்ல. இதை எழுதியவன.. ஐ மீன் பேப்பர்ல)
குடும்பத்தோட வெளியில போகாம, அப்புறம் வீட்டுக்குள்ள பாத்ரூம், சமையல் அறைனா பொவாய்ங்க?

Dreamzz said...

//நல்லது நடக்கும் நாள்.
//
ஏன்? மீது நாள் எல்லாம் கெட்டது நடக்குமா?

Dreamzz said...

//அயலார் கேட்ட உதவிகளைச் செய்வீர்கள்.
//
அப்புறம் நமக்கு நாமே வா செஞ்சுப்போம்.. டேய் அடுத்தவனுக்கு செஞ்சா தாண்ட்டா அதுக்கு பேரு உதவி!

Dreamzz said...

//வீட்டில் சில நல்ல நிகழ்ச்சிகள் நடக்கலாம்//
ஏன்? வீட்டுலேயே ஐடம் டேன்ஸ் ஏற்பாடு பன்னி தரியா?

Dreamzz said...

டேய்... எல்லார்க்கும் சொன்னியே.. உனக்கு எப்படினு சொன்னியா? மவனே என்னைகாச்சும் கைல மாட்டின சொல்றேன் :)

(ரசிகன் இதுவும் உங்களுக்கு இல்லை.. ஜோசியம் சொன்ன வனுக்கு)

மங்களூர் சிவா said...

நாலு பேர TAG பண்ண சொன்னா நீ பாட்டுக்கு ஒரு பெரிய லிஸ்டே போட்டுட்டியனா நாங்கல்லாம் யாரை TAG பண்றது??

இந்த வருசம் ஆரம்பிச்சு 4 நாள் கூட ஆகலை அதுக்குள்ள ரெண்டாவது TAG நல்லா இருங்கய்யா!!

எவ்ளவோ பண்ணீட்டோம் இதை பண்ண மாட்டமா???

ரசிகன் said...

// cheena (சீனா) said...

என்னைய்யா - என்னெ ஏழிலே போடிருக்கே - நான் முத ராசிக்காரன் தெரியுமா - //

வாங்க சீனா சார் .. நீங்க பதிவை சரியா படிக்கலையா??..இது மொக்கை பதிவர்களுக்கான செயின்.. இதுலயுமா முதலிடம்..:P

(இதுவரை இவர் மொக்கை போட்டதில்லை என்றாலும் நமக்காக செய்வார் என்று நம்புவோம்...)ன்னு போட்டிருக்கேனே... பாக்கலியா?

// ஆமா அதென்ன தோழிகளுக்கே முதலிடம//

இதிலிருந்து என்ன தெரியுது?.. மொக்...அவ்வ்வ்... சீனா சார் என்னிய வாயை கிளறி விட்டு பெண்ணிவாதிகள் கிட்ட மாட்டி விடணும்ன்னு பாக்கறறிங்களா?...
நாங்க உஷாருல்ல...:P

ரசிகன் said...

வாங்க டிரிம்ஸ் மாம்ஸ்.. ஏன்னிந்த கொலைவெறி தாண்டவம்...

திரிஷா ஜாதகம் உங்களுக்கு குடுப்பினையில்லைன்னு யாரோ ஒரு கிளி ஜோசியக்காரன் சொன்னதுக்காக அந்த கோபத்தையெல்லாம் தினமலர் ஜோஸியர் மேல காட்டறது அம்புட்டு நல்லாவா இருக்கு :P

ரசிகன் said...

// Dreamzz said...

இருந்தாலும், தனியா கஷ்டபடல என்பதில் ஒரு அல்பமில்லா சந்தோஷம்! ஹி ஹி!//

என்னே ஒரு சேவை மனது... சிக்கனமில்லா வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றிகள்...

ரசிகன் said...

// மங்களூர் சிவா said...

நாலு பேர TAG பண்ண சொன்னா நீ பாட்டுக்கு ஒரு பெரிய லிஸ்டே போட்டுட்டியனா நாங்கல்லாம் யாரை TAG பண்றது??

இந்த பரந்த பதிவுலகத்துல TAG பண்ண ஆளா இல்லை...அதுவும் மொக்கை பதிவுக்கு...என்ன தூக்கத்துல இருக்கிறிங்களா?.:)))

எவ்ளவோ பண்ணீட்டோம் இதை பண்ண மாட்டமா???//

அப்படி போட்டு தாக்குங்க மாமே...:)

ரசிகன் said...

// Anonymous said...

:)//

நன்றிகள் நண்பரே..:)

Geetha Sambasivam said...

//வாங்க சீனா சார் .. நீங்க பதிவை சரியா படிக்கலையா??..இது மொக்கை பதிவர்களுக்கான செயின்.. இதுலயுமா முதலிடம்.. //

போடறது எல்லாம் மொக்கை, இதிலே டாக் வேறே, அதுக்கு ஒரு மெயில் வேறேயா?

எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி?

"எல்லா மொக்கையும் மொக்கை அல்ல -பதிவுலகில்
நான் போடும் மொக்கையே சிறப்பு."

அப்படினு புதுக்குறளே படைச்சவ நானு, என்கிட்டேயே மோதலா? :P

Sanjai Gandhi said...

ரொம்ப நன்றி மாம்ஸ்.. நல்லாவே மொக்கை போடறிங்க..:)) கலக்கிட்டிங்க போங்க..

//பொதுவாகவே எனக்கு இந்த தினப்பலன்களில் நம்பிக்கை இல்லை.. ஆனா தினமும் நியுஸ் படிக்கும்போது ,அதையும் தவறாம பார்க்கறதுல ஒரு இன்ரஸ்ட் .//

ஹிஹி.. WHY BLOOD.. SAME BLOOD.. :P

மொதல்ல ஏகப்பட்ட வரிகளை போட்டு ஒரு Description... அப்புரம் கீழ அசங்க பேர போட்டு பாதி பக்கத்த நெறப்பிட்டிங்க.. பதிவ பெரிசா போட ஜுப்பர் டெக்குனிக்கு மாமு...:P

//ஏம்பா சஞ்ஜய்.. இப்போ திருப்தியா... ரசிகன் அங்கிள் சார்புல உங்க தோழி பொன்னரசிக்கும் ஒரு தாங்க்ஸ் சொல்லிடுங்க... மொக்கையை ஆரம்பிச்சு வைச்சதுக்கு...//
அவளையே சொல்ல வச்சிடறேன். :P

Sanjai Gandhi said...

//போடறது எல்லாம் மொக்கை, இதிலே டாக் வேறே, அதுக்கு ஒரு மெயில் வேறேயா?

எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி?//

நான் இல்லை.. நான் இல்லை :)))

ரசிகன் said...

// கீதா சாம்பசிவம் said...

எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி?

"எல்லா மொக்கையும் மொக்கை அல்ல -பதிவுலகில்
நான் போடும் மொக்கையே சிறப்பு."

அப்படினு புதுக்குறளே படைச்சவ நானு, என்கிட்டேயே மோதலா? :P//

கீதா அக்கா,போட்டியா? நானா? அதுவும் மொக்கை புகழ் உங்க கிட்டயா?..
அவ்வ்வ்வ்வ்..... அதான் மொதல் இடத்துல உங்களை ரிசர்வ் பண்ணியாச்சே.. ஸ்டாட் மொக்கைஸ்.. :)))

வருகைக்கு நன்றிகள் அக்கா...

ரசிகன் said...

// SanJai said...

ரொம்ப நன்றி மாம்ஸ்.. நல்லாவே மொக்கை போடறிங்க..:)) கலக்கிட்டிங்க போங்க..

//பொதுவாகவே எனக்கு இந்த தினப்பலன்களில் நம்பிக்கை இல்லை.. ஆனா தினமும் நியுஸ் படிக்கும்போது ,அதையும் தவறாம பார்க்கறதுல ஒரு இன்ரஸ்ட் .//

ஹிஹி.. WHY BLOOD.. SAME BLOOD.. :P

மொதல்ல ஏகப்பட்ட வரிகளை போட்டு ஒரு Description... அப்புரம் கீழ அசங்க பேர போட்டு பாதி பக்கத்த நெறப்பிட்டிங்க.. பதிவ பெரிசா போட ஜுப்பர் டெக்குனிக்கு மாமு...:P//

ஹிஹி.. எல்லாம் நம்ம கீதா டீச்சரின் பொதிகை லைவ் மெகா மொக்கை பதிவுகளை படிச்ச எஃபெக்ட்டு தான்..:P

ரசிகன் said...

//SanJai said...

//போடறது எல்லாம் மொக்கை, இதிலே டாக் வேறே, அதுக்கு ஒரு மெயில் வேறேயா?

எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இப்படி?//

நான் இல்லை.. நான் இல்லை :)))//

அவ்வ்வ்வ்......இது அந்தர் பல்டியா இருக்கே.. ஹா..ஹா..

வருகைக்கு நன்றிகள் சஞ்ஜய்...

MyFriend said...

என் பின்னூட்டத்தை காணோம்.. காக்கா தூக்கிட்டு போச்சு... :-((

MyFriend said...

மொக்கன்னா என்னன்னு தெரியாத என்னை போய் மொக்கை டேக் எழுத சொல்றீங்களே..

சரி.. ஏதோ என்னைப்பத்தி கொஞ்சம் பெருமையா சொன்னதுனால மொக்கன்னா என்னன்னு தெர்யாமலும், இந்த டேக் எதைப்பத்தின்னு தெரியாமலும் நான் ஒரு போஸ்ட் போடுறேன்..

ஆங்.. இதுக்கு பேருதான் மொக்கன்னு பின்னால சொல்லப்படாது ஆமா. ;-)

மங்களூர் சிவா said...


மொக்கை பதிவு போட்டாச்சு போட்டாச்சு ஒழுங்கா மரியாதியா வந்து பின்னூட்டீடு ஹி ஹி

cheena (சீனா) said...

எப்பா ரசிகா - நானு போட்டுட்டேன் - மருவாதயா வந்து பாத்துட்டுப் போ - ஆமா சொல்லிப்புட்டேன்.

http://pathivu.madurainagar.com

ரசிகன் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
என் பின்னூட்டத்தை காணோம்.. காக்கா தூக்கிட்டு போச்சு... :-((
//
இது சூப்பரேய்...:)))

ரசிகன் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

மொக்கன்னா என்னன்னு தெரியாத என்னை போய் மொக்கை டேக் எழுத சொல்றீங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்............

சரி.. ஏதோ என்னைப்பத்தி கொஞ்சம் பெருமையா சொன்னதுனால மொக்கன்னா என்னன்னு தெர்யாமலும், இந்த டேக் எதைப்பத்தின்னு தெரியாமலும் நான் ஒரு போஸ்ட் போடுறேன்..

ஆஹா.. திருநெல்வேலில்;இருந்துக்கிட்டு "இதுதான் அல்வாவா?"ன்னு கேக்கறா மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்கு..:))

/ஆங்.. இதுக்கு பேருதான் மொக்கன்னு பின்னால சொல்லப்படாது ஆமா. ;-)
//
ரொம்பவே உஷருதானுங்கோ...:D
இருந்தாலும் சொல்லுவோம்ல்ல... :))

ரசிகன் said...

//வேதாsaid...
உங்கள தனியா மொக்கை பதிவு வேற போட சொல்லிட்டாங்களா? வெளங்கிடும் :D

ஹிஹி....

ஏற்கனவே இந்த மாதிரி என்னைய ரெண்டு பேர் தொடராட்டத்துக்கு கூப்பிடுருக்காங்க அதுவும் தலைவி வேற நான் அதை எழுதலன்னு சொல்லி பப்ளிக்கா மானத்தை வாங்கிட்டாங்க :) தினேஷ் வேற என்னமோ பாஞ்சாலி சபதம் மாதிரி சபதமெல்லாம் போட சொல்லியிருக்கான், //

அவ்வ்வ்...இதுல இம்புட்டு இஸ்டரி,ஜியாகிராஃபில்லாம் இருக்குதா..:)

அதனால கொஞ்சம் டைம் கொடுங்க ஆபிசர் :)
//

ஏனுங்க வேதா..என்னங்க இது?.. மேனஜர் டைம் கேக்கக்கனுமா?.. டேக் யுவர் ஓன் டைம்..(நா உன்னுடய டைம் தான கேட்டேன். எங்க டைம்ம எடுத்துக்க எங்களுக்கு தெரியுமின்னெல்லாம் சொல்லப்டாது..:)))

ரசிகன் said...

//வேதா said...
/இந்த மொக்கை போதுமா?..இன்னும் கொஞ்சம் வேணுமா?../
அய்யோ இன்னுமா????????????? :D
//

ஹிஹி...என்னோட புகழ் எனக்கே தெரியாம போச்சே..:))

ரசிகன் said...

// மங்களூர் சிவா said...

மொக்கை பதிவு போட்டாச்சு போட்டாச்சு ஒழுங்கா மரியாதியா வந்து பின்னூட்டீடு ஹி ஹி
//

செல்லாது செல்லாது.. அதையெல்லாம் மொக்கையாவே நா ஒத்துக்க மாட்டேனுங்க மாமே..:)))

ரசிகன் said...

//cheena (சீனா) said...
எப்பா ரசிகா - நானு போட்டுட்டேன் - மருவாதயா வந்து பாத்துட்டுப் போ - ஆமா சொல்லிப்புட்டேன்.

http://pathivu.madurainagar.com
//

அவ்வ்வ்....... இதோ இப்பவே..வந்துட்டேனுங்க ஜயா... ஆபிஸ்லருந்து நேரா அங்க வந்துடறேன்..:))
(இப்பெல்லாம் சீனா சாரு கூட கீதா அக்கா மாதிரியே மெரட்ட ஆரம்பிச்சிட்டாருல்ல..ஹிஹி..:)))

பாச மலர் / Paasa Malar said...

ரசிகன்,

உங்க tag ல் சீனா சார் மூலம் இணைந்தாகிவிட்டது..பிடியுங்கள் ஒரு நன்றி..

Sanjai Gandhi said...

// பாச மலர் said...

ரசிகன்,

உங்க tag ல் சீனா சார் மூலம் இணைந்தாகிவிட்டது..பிடியுங்கள் ஒரு நன்றி..//

அக்காவுக்கு என்ன ஒரு தாராள மனசு.. போற போக்குல எல்லாருக்கும் நன்றிய அள்ளி வீசறாங்க.. :P

ரசிகன் said...

//பாச மலர் said...

ரசிகன்,

உங்க tag ல் சீனா சார் மூலம் இணைந்தாகிவிட்டது..பிடியுங்கள் ஒரு நன்றி..//

வருகைக்கும்.. சங்கிலித்தொடர்ல ஒரு இணைப்பா இணைந்ததற்க்கும்.. ரொம்ப நன்றிங்க பாசமலர்...

ரசிகன் said...

SanJai said...
// பாச மலர் said...

ரசிகன்,

உங்க tag ல் சீனா சார் மூலம் இணைந்தாகிவிட்டது..பிடியுங்கள் ஒரு நன்றி..//

அக்காவுக்கு என்ன ஒரு தாராள மனசு.. போற போக்குல எல்லாருக்கும் நன்றிய அள்ளி வீசறாங்க.. :P

நல்லது தானேப்பா.. காட்ச் பிடிச்சிக்க வேண்டியது தானே.. மறக்காம சங்கிலியின் பின்னோக்கி வந்து நன்றி சொல்லறதுக்கு...அவிங்களுக்கு தான் நன்றி சொல்லனும்..:)

பாச மலர் / Paasa Malar said...

//ஆமாம்.. அதுல டேக்கோட லிங்க் அட்டாச் செய்யவே இல்லையே?.. செய்துடுங்களேன்.//

அது எப்படி செய்யுறது ரசிகன்...கொஞ்சம் உதவுங்களேன்...technical சமாச்சாரத்தில் நான் கொஞ்சம் வீக்...

ரசிகன் said...

//பாச மலர் said...

//ஆமாம்.. அதுல டேக்கோட லிங்க் அட்டாச் செய்யவே இல்லையே?.. செய்துடுங்களேன்.//

அது எப்படி செய்யுறது ரசிகன்...கொஞ்சம் உதவுங்களேன்...technical சமாச்சாரத்தில் நான் கொஞ்சம் வீக்...//

கொஞ்சம் தாமதமாகிடுத்துங்க.. சீக்கிறம் விபரங்கள் அனுப்பிடறேன்.. .வருகைக்கு நன்றிகள் பாசமலர்..

Ponnarasi Kothandaraman said...

:) Sanjai link kuduthanga...
Nice mokkai.. Enakum intha rrasi ellam pakka aasai than but namrathu nambama irukrathu vera vishayam :D

Sanjai Gandhi said...

//Ponnarasi Kothandaraman said...

:) Sanjai link kuduthanga...
Nice mokkai.. Enakum intha rrasi ellam pakka aasai than but namrathu nambama irukrathu vera vishayam :-D
//

அட அட.. கொய்ந்த என்னமா தெளிவா பேசுது. :P இத உங்க அண்ணா பார்த்தார்னா ரொம்ப சந்தோஷபடுவார். :P.. நீ எப்போ தான் திருந்த போறியோ போ. :)))

ரசிகன் said...

// Ponnarasi Kothandaraman said...

:) Sanjai link kuduthanga...
Nice mokkai.. Enakum intha rrasi ellam pakka aasai than but namrathu nambama irukrathu vera vishayam :D//

முதல் வருகைக்கு வரவேற்ப்புகள் பொன்னரசி.
லிங்க் குடுத்ததற்க்காக நண்பர் சஞ்ஜய்க்கும் நன்றிகள்..
சரியா சொன்னிங்க.. எல்லாம் ஒரு ஆர்வம் தானே..
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்...

ரசிகன் said...

// SanJai said...

//Ponnarasi Kothandaraman said...

:) Sanjai link kuduthanga...
Nice mokkai.. Enakum intha rrasi ellam pakka aasai than but namrathu nambama irukrathu vera vishayam :-D
//

அட அட.. கொய்ந்த என்னமா தெளிவா பேசுது. :P இத உங்க அண்ணா பார்த்தார்னா ரொம்ப சந்தோஷபடுவார். :P.. நீ எப்போ தான் திருந்த போறியோ போ. :)))//

ஏன்ப்பா..சஞ்ஜய் ,இங்கயும் சண்டை போடனுமா?.. என்னவோ போங்க.. (ஆனாலும் ரொம்ப நல்லாவே நக்கல் பண்ணறிங்க:))))))
வருகைக்கும்,லிங்க் குடுத்ததற்க்கும்,வரவைச்சு கலாட்டா செய்யறதுக்கும்:P... ரொம்ப நன்றிகள்.ஹிஹி..

Sanjai Gandhi said...

//வரவைச்சு கலாட்டா செய்யறதுக்கும//

என்னாது.. வர வச்சி கலாட்டா செய்றேனா? .. ஏனுங்க ரசிகன்.. இன்னைக்கு நாந்தான் கெடைச்சனா உங்களுக்கு..? :( நல்லா தான் போட்டுக் குடுக்கறிங்க.. நல்லா இருங்க..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((