Friday, January 25, 2008

ஆப்பு வைக்கறாங்கலாம்ல்ல.. ஆப்பு...

திருநெல்வேலிக்கே அல்வாவா?...
திருப்பதிக்கே மொட்டையா?..
பழனிக்கே பஞ்சாமிர்தமா?..
தலைவிக்கே மொக்கையா?..
பாண்டிச்சேரிக்கே தண்ணியா?
(ஹலோ 24 hrs குடிநீர் வசதி,அதைச் சொன்னேன்:P)


இதெல்லாம் என்னன்னு கேக்கறிங்களா?.. எனக்கு ஆப்பு வைக்கப் போறேன்னு ஒருத்தங்க கெளம்பியிருக்காங்களாம்ல்ல..:)).ஏதோ ஒரு லீவு வந்தா ஒரு மூலையில நாம பாட்டுக்கு..நாளுப் பேருக்கு ஆப்பு வைச்சு காலத்தத ஓட்டிக்கிட்டிருக்கோம்...

தெனமும் எப்ப பாத்தாலும் ஹலோ சொல்லற தம்பின்னு ஒரு பாசமே இல்லாம வம்புக்கு இழுத்திருக்காங்க...

நான் துள்ளித் திரியும் ஒரு சிறு மீனாம்ல்ல... அவங்க கண்ணாடி மாத்த வேண்டிய நேரம் வந்துருச்சுன்னு நெனக்கிறேன்.:P

"ஆப்பு" கடலுல,நீச்சலே தெரியாம,வலைவீச வந்துட்டாங்க..அவங்களை குத்தம் சொல்ல முடியாது. பாவம், மின்னலா திடீருன்னு வந்து அடிக்கடி எஸ் ஆகுற ஒரு தோழியோட பேச்சைக் கேட்டு தெரியாம இறங்கிட்டாங்கன்னு புரியுது.

ஆப்பு வைக்கனும்ன்னு நெனச்சா தனி ஆளா ஒடனே எறங்கிடனும்.. இவங்க என்னடான்னா.. ஆப்பு வைக்க ஆள் சேக்க விளம்பரமெல்லாம் குடுத்து புஸ்வானமாக்கிட்டாங்க...

அதுமட்டும்ல.. நம்ம தனிப்பெரும் தலைவி கீதா அக்காவுக்கு போட்டியா,தலைவின்னு பட்டம் வாங்க நெனச்சி,நம்ம தலைவின் தன்னிகரில்லா மொக்கைப் பதிவுகளின் மகிழ்மையால அது முடியாம போய் பிளாக் தலைவியா வெயிட் பண்ணிக்கிட்டிருங்காங்க...

நம்ம கீதா அக்காவுக்கே, "அக்கா"(P) ங்கரதால,பரவாயில்லைன்னு விட்டுடலாம் மக்கள்ஸ்..(கீதா அக்கா, ரிப்பீட்டேய் எங்க?:D)

இப்போ மறுபடியும் நம்ம தனிப்பெரும் தலைவியின் பதவிக்கு குறிவைச்சு சதி ஆலோசனைக்கு முன்னோட்டம் தான் இந்த ஆப்புக்கு அணிசேக்கறதுங்கறது.. இது புரியாம நம்ம தலைவியின் சீடர்கள் & சிஷ்யைகள் அந்தப் பக்கம் அறியாமையால சேந்திருக்காங்க..

(கீதா அக்கா.. கவனிக்கவும்.. உங்க பிரதான சிஷ்யையை,இப்பவே கொஞ்சம் கண்டிச்சு வைக்கவும். சொல்லிப்புட்டேன்..)

வாழ்க தனிப்பெரும் தலைவி,வாழ்க அவரது மொக்கை புகழ்...
(அப்பாடா,இனி எல்லாத்தையும் கீதா அக்கா கவனிச்சிக்குவாங்க..:)) )

.....................................

சரி சரி .. நம்ம வேலையை பாக்கலாம்.. கொஞ்சம் நாளாவே, நம்ம குசும்பன் மாம்ஸ் ,ரெண்டு மாசத்துல தொப்பைய குறைக்கறது எப்படின்னு பாக்கறவங்க,சாட்டறவங்க எல்லார்க்கிடயும் கேட்டுக்கிட்டு திரியறார். என்னன்னு கேட்டா புள்ளைக்கு கல்யாணமாம்ல்ல..பின்ன,நம்மள விட பெரியவர்ல்ல.. ?? காதலிச்ச பொண்ணோடவேவாம்ல்ல.... குடுத்து வைச்சவர்:)...(அவரே, பதிவுல வாக்குமூலம் கொடுத்துட்டார்னு இந்த சமயத்தில் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்.)

சரி நம்மாலான ஜடியாக்களை அள்ளித் தெளிக்கலாம்ன்னு ஒடனே இந்தப் பதிவு போட்டுப்புட்டேன்...


பிளாகுக்கு வந்தப்பறம்,இந்த எக்ஸசைஸ் டைமிங்கு ஒத்து வராது மாமே...அதுவும் 2 மாசத்துல..

நானு போன மாசம் லுலு செண்டர் போன போது எலட்ரானிக்ஸ் பிரிவுல.. ஒரு ஃபிலிப்பினோ பொண்ணு கலக்கலா சிரிச்சுக்கிட்டிருந்தாளா?..
பசங்கள விட்டு பிரிஞ்சு, நம்ம காலு தானா அங்க போயிருச்சு...என்ன சொன்னான்னு ஒரு எழவும் புரியலைன்னாலும்,அடிக்கடி இந்த டப்பாவ காட்டி ஏதோ சொல்லிக்கிட்டிருந்தா, சரி இதை வாங்கனாதான் புரியறமாதிரி பேசுவா போலன்னு நெனச்சு அதையும் டிராலில வாங்கிப் போட்டுக்கிட்டு ஃபிரியா பேசலாமுன்னு நெனச்சா.. அடுத்த ஆளுக்கிட்ட இதே மாதிரி டப்பாவை காட்டி அதே மாதிரி சிரிச்சு பேச ஆரம்பிச்சிட்டா...பயங்கர கடுப்பாயிட்டேன்ல்ல.. இப்படித்தான் அறியாப் பசங்களை ரொம்ப வருஷமா ஏமாத்தறாங்க இந்த பொண்ணுங்க...

சரி விட்ரா கைப்புள்ளைன்னு அந்த டப்பாவ பாத்தா ஒரு சூப்பர் பிகரோட படம் இருந்துச்சா.. ஜய்யயோ தெரிஞ்சவங்க பாத்தா,என்னவோ ஏதோன்னு தப்பா நெனச்சுக்கப் போறாங்கன்னு கைல இருக்குற டீவீடீ கலைக்ஷனை போட்டு போட்டு மறைச்சு கவுண்டருக்கு எடுத்துக்கிட்டு வந்தேன்...(பாக்ஸோட ரெண்டாவது பக்கம் வெளியிட்டா நம்ம மங்களூர் மாமுவோட வீக் எண்டு ஜொள்ளு ரேஞ்சுக்கு ஆகிடுங்கறதால, தவிர்க்கப் படுகிறது:P)

சங்கதி என்னன்னு பாத்தாதான் தெரியுது,அது வயற்றை குறைக்க,லேசி மக்கள்ஸ்க்கான சாதனம்ன்னு.. அடிப்பாவி... என்னிய பாத்தா அம்புட்டு வயறா தெரியுது?.. எனக்குப் பாத்து எடுத்துக் குடுத்துசே அந்த வெள்ளை கிளி(?) (அதுவும் நான் இப்போ சாப்பிட்டுக்கிட்டு இருக்குற சாப்பாட்டுக்கு,வயறு வர நோ சான்ஸ் ஆச்சே... )ன்னு கறுவிக்கிட்டு ,


யுஸ் பண்ணிப் பாத்தேன்.. அதுலயே ஏதும் வைபரேஷன் இல்லைங்கோ...நமது தசைகளை இயக்க மூளை இரு சின்ன மின் துடிப்பை நரம்புகள் மூலம் குடுத்து இயக்குகிறது.அதே யுத்தியைத்தான் இதுவும். அதுல இருக்குற இணைப்புக்கள் மூலமா,நம்ம வயிற்றுப் பகுதி த்சை மேல ரொம்ப சின்ன எலட்ரிக் பல்ஸ் பாயும்,உடனே நம்ம எக்ஸ்ரா தசைகள் தானா சுறுங்கி விரிஞ்சு எக்ஸர்சைஸ் செய்யும்.நாம ரிலாக்ஸ்ஸா பிளாக்ஸ் படிக்கலாம்,நியுஸ் கேக்கலாம்.
20 நிமிஷம் யுஸ் பண்ணா 800 தண்டாலுக்கு சமமான பல்ஸ் புரோகிராம் செஞ்சு இருக்காங்கலாம்ல்ல..


இதுல வேற 6 புரோகிராம் & 24 லெவல் ஆஃப்சன் இருக்கு.(அதிக லெவல் வைச்சுட்டிங்கன்னா.. மைக்கேல் ஜாக்சனுக்கு போட்டியா பிரேக்கே இல்லாம ,பிரேக் டான்ஸெல்லாம் ஆட ஆரம்பிச்சுருவிங்க.ஜாக்கிரதை...:P)



அடடா.. இது நோகாம நொங்கெடுக்கற வேலையால்ல இருக்கு.. இதே மாதிரி கை,கால் தசைகளுக்கும் எக்ஸசைஸ் செய்ய முடிஞ்சா எப்படியிருக்கும்ன்னு நெனச்ச போது.., சிட்டி செண்டர்ல.. இதே போல ஒரு ஜட்டம் பாத்தேன்.. அதுல தனித் தனியா நாளு ஒயர்ல மின் இணைப்பு இருக்கறதால எங்க/எப்படி வேணாலும் பயன்படுத்துற வசதி இருக்கு...அதுலயே கை,கால் தசைப் பயிற்ச்சி,மசாஜ் அதிர்வுக்கும் ஆஃப்சன் குடுத்திருந்தாங்க.. முந்தையதை விட விலை ரெண்டு மடங்கு.டூ இன் ஒன் ஆச்சே.. வயற்றுப் பட்டையும் இருக்கே.
அதையும் வாங்ட்டோம்ல்ல.. ஒயரெல்லாம் ஒட்டி ஏதோ "ஃபைடர்மேன்" படத்துல வர்ர எலட்ரிக் மனுஷன் மாதிரி... கொஞ்ச நாள் ஆர்வமா உபயோகப் படுத்தனேன்..



உடல்ல பல்ஸ் ஈஸியா,மென்மையா கடத்துறதுக்காக ஸ்பெசல் வாட்டர் பேஸ்டு ஜெல்(ஜொள் இல்லை:P) இருக்கு.






மெஷர் பண்ணப்போ,எக்ஸ்ரா தசைகள் போயே போச்..
ஆனா சாதாரணமா உடற்பயிற்சி செஞ்சு,குளிச்சுட்டு வந்து தூங்கும் போது வர்ர, தியானம் செஞ்ச மாதிரி ஒரு மன அமைதி இதுல கடைசி வரை கிடைக்கவே இல்லை,...அதனால மறுபடியும் வழக்கமான பயிற்ச்சிக்கு மாறிட்டேன்.




ஆனா,குறுகிய காலத்துல எக்ஸ்ரா தசையை குறைக்க இதை நிச்சயமா நம்பலாம்.

குசும்பன் மாம்ஸ்.. இது "மாப்பிள்ளை இன்ஸ்டன்" ஸ்பெசலுங்கோ... அங்கயும் லுல்லு சென்டல கிடைக்கும்ல்ல... ரெண்டு மாசம் குறைஞ்ச நேரம்ல்ல.. இன்னிக்கே வாங்க யுஸ் பண்ண ஆரம்பிச்சுடுங்க.... வாழ்த்துக்கள் மாமேய்... எந்த தேதின்னு சொன்னா,நானும் அப்போ இந்தியாவுக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணிருவேன்ல்ல...


அன்புடன் உங்கள் ரசிகன்...

42 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

//"ஆப்பு" கடலுல,நீச்சலே தெரியாம,வலைவீச வந்துட்டாங்க..அவங்களை குத்தம் சொல்ல முடியாது. பாவம், மின்னலா திடீருன்னு வந்து அடிக்கடி எஸ் ஆகுற ஒரு தோழியோட பேச்சைக் கேட்டு தெரியாம இறங்கிட்டாங்கன்னு புரியுது.//
ஹாஹா! உள்குத்து பலமாஇருக்கு!

said...

மாம்ஸ்... இது என்ன எக்ஸர்சைஸ் ஐடியா எல்லாம் கொடுத்து கலக்கறீங்க...

said...

அட.. நம்ம தான் பர்ஸ்ட்டா!

said...

பிரியாணி பார்சல்ல்ல்ல்

said...

அப்புறம்....

said...

இன்னும் ஒன்ன்..

said...

7 வர்ட்டா!

Anonymous said...

நீ யாரைப்பத்தி பேசறேன்னு புரியுதுடா பேராண்டி.

நான்கூட அங்க Advice பண்ணினேன்.

உன் மகிமை, மாட்சிமை எதுவும் தெரியாம பண்ணிட்டு இருப்பாய்ங்க.

போனா போவுது.
மன்னிச்சு விட்டுட்ரா கண்ணு.

COOL. COOL.

இந்தப் பதிவு வெரி குட்.

நல்லா நகைச்சுவையா எழுதறே.

அந்த 'வெள்ளைக் குட்டி'யால தாத்தாவே ஜொள்ளு விட்டுட்டேன்.

(வயசாயிடுச்சின்னா ஜொள்ளு விடக்கூடாதா...
என்ன? ம்...ம்..?)

Anonymous said...

கமென்ட் போட்டால் உடனே பதிப்பிக்கப் பட்டுடுது.
உன் அங்க்கீகாரம் கிடைச்சதுக்கப்புறம் பதிப்பிக்கப் படற மாதிரி SETTING பண்ணிகோயேன

said...

// Dreamzz said...

//"ஆப்பு" கடலுல,நீச்சலே தெரியாம,வலைவீச வந்துட்டாங்க..அவங்களை குத்தம் சொல்ல முடியாது. பாவம், மின்னலா திடீருன்னு வந்து அடிக்கடி எஸ் ஆகுற ஒரு தோழியோட பேச்சைக் கேட்டு தெரியாம இறங்கிட்டாங்கன்னு புரியுது.//
ஹாஹா! உள்குத்து பலமாஇருக்கு!//

ஹிஹி.. எல்லாம் நம்ம பிரண்ட்ஸ்ங்கர உரிமையில தான்.:) வருகைக்கும்,சப்போர்ட்ட்டுக்கும் நன்றிகள் மாம்ஸ்...

said...

// Dreamzz said...

மாம்ஸ்... இது என்ன எக்ஸர்சைஸ் ஐடியா எல்லாம் கொடுத்து கலக்கறீங்க...//
ஏதோ நம்மால முடிஞ்ச உதவி..,புது மாப்பிள்ளைக்கு..:)

said...

// Dreamzz said...

பிரியாணி பார்சல்ல்ல்ல//
இங்க வெஜிடபிள் பிரியாணி தான் ஸ்பெஷல்.அதையே ஒரு பார்சல் அனுப்பிடறேன்...:)
ஆமாம்..மாம்ஸ் உங்க லக்கி நம்பர் 7 ங்கரதால கரைட்டா 7 வரை பின்னூட்டமா?..அவ்வ்வ்வ்வ்வ்...
விபரமாத்தான் இருக்கிங்க:)))))))))
ஆரம்பத்துலயே வந்து,தொடர் கலக்கல் கலக்கியதுக்கு நன்றிகள் மாம்ஸ்..:)

said...

//சாம் தாத்தா said...

நீ யாரைப்பத்தி பேசறேன்னு புரியுதுடா பேராண்டி.

நான்கூட அங்க Advice பண்ணினேன்.//

ஹிஹி..நன்றிகள் சாம் தாத்தா.. நீங்க வேற யாரையோ நினைச்சுக்கிட்டிங்கன்னு தோனுது...ஏன்னா உங்க அட்வைஸ் அங்ககாணலையே:)
(அவ்வ்..அப்படின்னா நான் கவனிக்காத இன்னோரு ஆப்பு இருக்கோ?.:) லிங்க் குடுத்தா என்னன்னு கவனிப்போம்ல்ல..

ஹிம்.. நம்மக்கூட ஒன்னா சேந்து இருக்க வேண்டியவங்கள்லாம் ,எதிர் கட்சில இருந்துக்கிட்டு ஆப்பு வைக்கறாங்க.. பரவாயில்லை..எப்போ வந்தாலும், நம்ம கட்சில பதவி வெயிட்டிங்கு...ன்னு எல்லாருக்கும் அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.:))))))

//உன் மகிமை, மாட்சிமை எதுவும் தெரியாம பண்ணிட்டு இருப்பாய்ங்க.//

உங்களுக்கு தெரியுது..நன்றிகள் தாத்தா..

//போனா போவுது.
மன்னிச்சு விட்டுட்ரா கண்ணு.
COOL. COOL.

இந்தப் பதிவு வெரி குட்.

நல்லா நகைச்சுவையா எழுதறே.//

ஹிஹி...நன்றிகள் தாத்தா...

அந்த 'வெள்ளைக் குட்டி'யால தாத்தாவே ஜொள்ளு விட்டுட்டேன்.

(வயசாயிடுச்சின்னா ஜொள்ளு விடக்கூடாதா...
என்ன? ம்...ம்..?)

யாரு சொன்னா.. ஜொள்ளு நம்ம பிறப்புரிமைன்னு நம்ம "ஜொள்ளு"ப் பாண்டி மாம்ஸ் சொல்லியயருக்காரே:)
இதுக்கு வயசு எதுக்கு?...(ஆனாலும் ஓவர் ஜொள்ளு உடம்புக்கு ஆகாதாம்ல்ல..:P )
கலக்குங்க தாத்தா...:)

Anonymous said...

:))

said...

//சாம் தாத்தா said...

கமென்ட் போட்டால் உடனே பதிப்பிக்கப் பட்டுடுது.
உன் அங்க்கீகாரம் கிடைச்சதுக்கப்புறம் பதிப்பிக்கப் படற மாதிரி SETTING பண்ணிகோயேன//

தாத்தா..நாம போடற மொக்கைக்கு ,கமாண்டு மாடரேஷன்லாம் கொஞ்சம் ஓவரா இருக்குமேன்னுதான் அப்படியே விட்டுட்டோம்..ஹிஹி..
வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்...

said...

// Anonymous said...

:))//

குறுக்கே புகுந்து சிரிக்கும் நண்பருக்கு நன்றிகள்:)))))))

said...

ஹேய் - இதென்ன கூத்து - யாமிருக்க பயமேன் - யாரது ஆப்பு வைக்கறது - பாத்துடுவோமா - ம்ம்ம்ம்ம்

பேரன் சரவணன் தொப்பையைக் கொறைக்க முய்றசி செய்யுறாரா என்ன

said...

//இப்படித்தான் அறியாப் பசங்களை ரொம்ப வருஷமா ஏமாத்தறாங்க இந்த பொண்ணுங்க...//

இங்கேயுமா? :)

said...

payanulla thakaval kusumpanukkum :)


oru maasaththil kuraikka vazhi irukkaa

:)

said...

//cheena (சீனா) said...

ஹேய் - இதென்ன கூத்து - யாமிருக்க பயமேன் - யாரது ஆப்பு வைக்கறது - பாத்துடுவோமா - ம்ம்ம்ம்ம்

பேரன் சரவணன் தொப்பையைக் கொறைக்க முய்றசி செய்யுறாரா என்ன//

வாங்க சீனா ஜயா.. நல்வரவுகள்.. உங்க தத்துவக் கவிதை கலக்கலா இருந்துச்சு..

ஹிஹி.. சீனா சார் உங்களுக்கு தெரியாததா?.. உரிமையுள்ள நண்பர்கள் சும்மா விளையாட்டா தங்களுக்குள்ளையே வைச்சுக்கறது தானே வலை குடும்பத்துல ஆப்புங்கரது.. தெரியாத ஆளுக்கு செஞ்சா அது ” தனி மனித தாக்குதல்” ஆகிடுமே..:)
நம்ம அக்கா,ரொம்ப நல்லவங்க,எனக்கு நல்லா தெரிஞ்சவங்க.உரிமையா சொல்லிட்டுத்தான் செஞ்சாங்க..
அவங்க பதிவுல ஜாலியா கமெண்ட் போட்ட எல்லாருமே எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க..
சில பேரு அதை புரிஞ்சுக்காம ரொம்ப சீரியஸ்ஸா நெனச்சுட்டாங்கன்னு தோணுது:(


சீனா சார்,நீங்க நம்ம கட்சிக்கு வந்ததுல பெரிய பலமே வந்துருச்சு.. பாத்துடலாம் ஒரு கை..:))))

//யாமிருக்க பயமேன் - யாரது ஆப்பு வைக்கறது - பாத்துடுவோமா - ம்ம்ம்ம்ம்//
அதானே.. கலக்கிடலாம்.ஹிஹி...

//பேரன் சரவணன் தொப்பையைக் கொறைக்க முய்றசி செய்யுறாரா என்ன//

ஆஹா... இன்னும் தெரியாதா.. மாம்ஸ்க்கு கல்யாணம் தேதி கூட நிச்சயமாகிடுச்சுல்ல... நேரா பத்திரிக்கையில உங்க கிட்டல்லாம் சொல்லலாம்ன்னு இருக்கார்.:)

வருகைக்கும்,கட்சிக்கு உங்க சப்போர்ட்டுக்கும் நன்றிகள் சார்...

said...

// பாரதிய நவீன இளவரசன் said...

//இப்படித்தான் அறியாப் பசங்களை ரொம்ப வருஷமா ஏமாத்தறாங்க இந்த பொண்ணுங்க...//

இங்கேயுமா? :)//

ஆமாம்ஸ் மாம்ஸ்.. அதுவும் எங்களைப் போல பேட்சுலர் பசங்கள குறிவைச்சுதான் ஏமாத்தறாங்க..ஹிஹி..:)))))

வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிகள்..
சீக்கிறம் தோஹா நகைச்சுவை நிகழ்ச்சிய பத்தி பதிவு போடுங்களேன்..
:)))
வெயிட்டிங்கு...:)

said...

//மின்னுது மின்னல் said...

payanulla thakaval kusumpanukkum :)


oru maasaththil kuraikka vazhi irukkaa

:)//

ஆஹா.. நீங்களும்ல்ல.. புது மாப்பிள்ளை..வாழ்த்துக்கள் மாமே.. உங்களுக்கு ஒரு மாசம் தான் டைம் இருக்கா?..அப்போ ரெண்டு ஜட்டத்தையும் ஒரே சமயத்துல யுஸ் பண்ண வேண்டி வரும்ன்னு நெனக்கறேன்:P

வருகைக்கு நன்றிகள்...
எல்லா வலையுலக நண்பர்களின் சார்பாக திருமணம் காணப் போகும் உங்களுக்கும்,சகோதரிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்:)

அன்புடன் உங்கள் ரசிகன்...

said...

Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா

said...

mmmmm?களப்பணி ஆற்ற கடமை உணர்ச்சியோட ஒரு இரண்டு நாள், அங்கே, இங்கே போனால் என்ன என்னவெல்லாம் நடக்குது? இதிலே என்னைத் தலைமைப் பதவியை விட்டு இறக்கச் சதி வேறேயா? உறியடித்தே தீருவோம்! சீச்சீ, தப்பு இல்லை? ஹிஹிஹி, முறியடித்தே தீருவோம்! :P

said...

//நாளுப் பேருக்கு ஆப்பு வைச்சு காலத்தத ஓட்டிக்கிட்டிருக்கோம்...//

இது தமிழா? சகிக்கலை! :P

said...

//வைக்கனும்ன்னு நெனச்சா தனி ஆளா ஒடனே எறங்கிடனும்.. //

தப்பு 2

said...

//இப்போ மறுபடியும் நம்ம தனிப்பெரும் தலைவியின் பதவிக்கு குறிவைச்சு சதி ஆலோசனைக்கு முன்னோட்டம் தான் இந்த ஆப்புக்கு அணிசேக்கறதுங்கறது.. இது புரியாம நம்ம தலைவியின் சீடர்கள் & சிஷ்யைகள் அந்தப் பக்கம் அறியாமையால சேந்திருக்காங்க..//

எல்லாரும் நிஜமாவே உளவு பார்க்கத் தான் அங்கே போய்க் குவிஞ்சிருக்காங்க தெரியலை?

said...

இது குசும்பரின் பதிவுல போட வேண்டியது.இருந்தாலும் உங்க பதிவுக்கு சம்பந்தமாக இருப்பதால் இங்கேயே பின்னூட்டம்.இங்கே கூட ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஏதோ D.x.என் பேர்ல மலேசியா தயாரிப்பு ஏதோ வாங்கு வாங்குன்னு ஆறு மாசமா தொல்லை.நமக்கு இந்த யோகாசனம் மாதிரி கையை காலை முறுக்குற சுகம் இதுல கிடைக்குமான்னு தெரியல.கொஞ்சம் காலை முறுக்கு (?????),குளியல், வெறும் வயிற்றில் தண்ணீர் பின் சிற்றுண்டி என பழக்கம் நிரந்தர சுகம்.

said...

ஹி ஹி ....நல்ல காமெடி :)) இதெல்லாம் எங்கே கொண்டு பொய் விடப் போகுதோ!!

said...

//நம்ம தலைவின் தன்னிகரில்லா மொக்கைப் பதிவுகளின் மகிழ்மையால அது முடியாம போய் பிளாக் தலைவியா வெயிட் பண்ணிக்கிட்டிருங்காங்க...//

அட நீங்க சொல்லுறத பார்த்தா, அது எங்க DD அக்கா மாதிரி இருக்கே????
ஆமா'னு மட்டும் சொல்லிடாதீங்க...

Anonymous said...

இந்த மிஷின் எல்லாம் தேவையே இல்லை. குசும்பனுக்கு கல்யாணம் ஆனவுடன், அவங்க தங்கமணி குடுக்கற மாவட்டற வேலையில தன்னால உடம்பு இளைச்சுடும் பாருங்க. :p

இது எப்படி உனக்கு தெரியும்?னு கேள்வி எல்லாம் கேக்கபடாது. :))

said...

அந்த ரெண்டாவது படத்தை மயில் ச்ச மெயில் அனுப்புப்பா தம்பி!!

said...

//நிவிஷா..... said...

Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா//

நிவிஷா.. இதே பின்னூட்டத்தை என்னோட பழைய இடுகைக்கும், மற்ற பதிவுகளுக்கும் போட்டிருக்கிங்க...நானும் உங்க பதிவுக்கு வந்து வரவேற்ப்பு சொல்லியிருக்கேன். இன்னும் புதுப்பதிவு ஏதும் இல்லை.. எல்லாருக்கும் ஒரே பின்னூட்டம் போடப்டாது,,புதுசா வந்திருக்கிங்க.. நாங்களும் எல்லா நண்பர்களின் பதிவுகளையும் படிக்கிறோம்ல்ல.. ஹிஹி.. சும்மா ஜாலியாத்தான்... ரொம்ப நன்றிகள் உங்க வருகைக்கு.. புதுப்பதிவு போடுங்க.. வந்து ரசிப்போம்.. நிச்சயமா..

அன்புடன் நண்பன்..

said...

//கீதா சாம்பசிவம் said...

mmmmm?களப்பணி ஆற்ற கடமை உணர்ச்சியோட ஒரு இரண்டு நாள், அங்கே, இங்கே போனால் என்ன என்னவெல்லாம் நடக்குது? இதிலே என்னைத் தலைமைப் பதவியை விட்டு இறக்கச் சதி வேறேயா? உறியடித்தே தீருவோம்! சீச்சீ, தப்பு இல்லை? ஹிஹிஹி, முறியடித்தே தீருவோம்! :P//

ஆஹா.. வாங்க கீதா அக்கா.. வாங்க.. கலக்குங்க... எப்டி அவங்களை சும்மா விடறது.. அதானே.,.

(ஹிஹி ஆரம்பிச்சி வைச்சிடோம்ல்ல... எங்க தலைவியாச்சே.. சும்மா பின்னி எடுத்துட மாட்டாங்க?..)

said...

// கீதா சாம்பசிவம் said...

//நாளுப் பேருக்கு ஆப்பு வைச்சு காலத்தத ஓட்டிக்கிட்டிருக்கோம்...//

இது தமிழா? சகிக்கலை! :P


//வைக்கனும்ன்னு நெனச்சா தனி ஆளா ஒடனே எறங்கிடனும்.. //

தப்பு 2

//
அவ்வ்வ்வ்.,.... தலைவிக்கிட்டயிருந்து எதிரணிக்கு ஆப்பு கிடைக்கும்ன்னு நெனச்சாக்கா.. என்னியயையும் விட்டு வைக்க மாட்டேங்கறாய்ங்களே..அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//கீதா சாம்பசிவம் said...

//இப்போ மறுபடியும் நம்ம தனிப்பெரும் தலைவியின் பதவிக்கு குறிவைச்சு சதி ஆலோசனைக்கு முன்னோட்டம் தான் இந்த ஆப்புக்கு அணிசேக்கறதுங்கறது.. இது புரியாம நம்ம தலைவியின் சீடர்கள் & சிஷ்யைகள் அந்தப் பக்கம் அறியாமையால சேந்திருக்காங்க..//

எல்லாரும் நிஜமாவே உளவு பார்க்கத் தான் அங்கே போய்க் குவிஞ்சிருக்காங்க தெரியலை?//

கீதா அக்கா.. உங்க நுண்ணரசியல் சூப்பரேய்...
இப்போ எதிரணியில யாரு யாரு அவங்க சைடுன்னு குழப்பமாயிருக்குமே.. கலக்கிட்டிங்க.. ஹிஹி..

said...

// நட்டு said...

இது குசும்பரின் பதிவுல போட வேண்டியது.இருந்தாலும் உங்க பதிவுக்கு சம்பந்தமாக இருப்பதால் இங்கேயே பின்னூட்டம்.இங்கே கூட ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஏதோ D.x.என் பேர்ல மலேசியா தயாரிப்பு ஏதோ வாங்கு வாங்குன்னு ஆறு மாசமா தொல்லை.நமக்கு இந்த யோகாசனம் மாதிரி கையை காலை முறுக்குற சுகம் இதுல கிடைக்குமான்னு தெரியல.கொஞ்சம் காலை முறுக்கு (?????),குளியல், வெறும் வயிற்றில் தண்ணீர் பின் சிற்றுண்டி என பழக்கம் நிரந்தர சுகம்.//

வாங்க நட்டு சார்...
குசும்பன் மாம்ஸ்க்கு நீங்களும் ஜடியா கொடுத்திருக்கிங்க.. அவர் சார்புல உங்களுக்கு நன்றிகள்..(அவரும் எதிர்ப்பதிவு போட்டு கலக்கிட்டாருங்கோ.. ஹிஹி..)

said...

// The last adam said...

ஹி ஹி ....நல்ல காமெடி :)) இதெல்லாம் எங்கே கொண்டு பொய் விடப் போகுதோ!!//

எங்க கொண்டு போய் விட்டாலும்.. அங்கயும் மொக்கை போடுவோம்ல்ல.,.ஹிஹி...
நன்றி இறுதி ஆதாம் சார்...

said...

//My days(Gops) said...

//நம்ம தலைவின் தன்னிகரில்லா மொக்கைப் பதிவுகளின் மகிழ்மையால அது முடியாம போய் பிளாக் தலைவியா வெயிட் பண்ணிக்கிட்டிருங்காங்க...//

அட நீங்க சொல்லுறத பார்த்தா, அது எங்க DD அக்கா மாதிரி இருக்கே????
ஆமா'னு மட்டும் சொல்லிடாதீங்க...//

ஏனுங்க கோப்ஸ்.. என்னிய விட அதிகமா குழப்புறிங்களே?..:P..கேள்வியும் நானே,பதிலும் நானேங்கற மாதிரி,தெளிவா சொல்லிட்டப்பறமும் நான் ஏன் சொல்லப் போறேன்.. ஹிஹி.. வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பரே........:)

said...

// ambi said...

இந்த மிஷின் எல்லாம் தேவையே இல்லை. குசும்பனுக்கு கல்யாணம் ஆனவுடன், அவங்க தங்கமணி குடுக்கற மாவட்டற வேலையில தன்னால உடம்பு இளைச்சுடும் பாருங்க. :p

இது எப்படி உனக்கு தெரியும்?னு கேள்வி எல்லாம் கேக்கபடாது. :))//

ஹிஹி.. அம்பியண்ணா... அதெல்லாம் கேக்க மாட்டோம்ல்ல.. எங்களுக்கே தெரியும்ல்ல.. :P
வருகைக்கு நன்றி அண்ணா...

said...

//// வேதா said...

அது சரி நான் சொன்ன ஆப்பை அவங்க முயற்சி செய்யல போலிருக்கு எழுத்துப்பிழையில்லாம ஒரு பதிவு போட சொல்லுங்கன்னு சொன்னேன் தலைவிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியா இருக்கும் :)//

வாங்க வேதா.. நல்வருகைகள் ..
ஹா..ஹா.. நல்ல ஜடியாதான்..
வாழ்த்துக்கள்..நன்றி..

said...

// மங்களூர் சிவா said...

அந்த ரெண்டாவது படத்தை மயில் ச்ச மெயில் அனுப்புப்பா தம்பி!!//

மாம்ஸ் உங்க போன வார வீக் எண்டு ஜொள்ளு இதைவிட டாப்பா இருந்ததால.. அனுப்பறதுக்கு தேவை இல்லாம போச்சே.. என்ன செய்ய :P
நன்றி.. (தனியா அனுப்பிடறேன்.. ஃபீல் பண்ணாதிங்க..:)))))))) ).