Friday, January 4, 2008

கத்தார் பதிவர்கள் மாநாடு.1300 டிக்கெட்டுக்களில்,முக்கால்வாசி விற்று தீர்ந்த அதிசயம்.....

அதிசயம்.. ஆச்சர்யம்...திட்டமிட்டப்படி ,வரும் ஜனவரி 25ம் தேதி தோஹாவில் நடக்கவிருக்கும் கத்தார் பதிவர்கள் மாநாட்டுக்கு, அலைகடலென மக்கள் கூட்டம்.அரங்கத்தின் கணிக்கப்பட்ட 1300 இருக்கைகளை விட அதிகமாக திரண்டு தமிழர்கள் முன்பதிவு. முன்பதிவு நிலையங்கள் (டிக்கெட் கவுன்ட்டர்கள்) குறிப்பிட்ட காலத்துக்கு முன்னவே மூடப்படும் வகையில் சரித்திரம் காணாத சூடான நுழைவுச்சீட்டு விற்பனை.நிற்க வேண்டிய அளவு கூட்டம் இருக்கும் என எதிர்பார்ப்பு.

சரி சரி முறைக்காதிங்க... மேட்டரை சொல்லிடறேன்..

தமிழ் இணையத்தின் புதுவரவான ஜாலி ஏன்ஜல்ஸ் சிந்து , செளமியாவின் அப்பாவும்,என்னுடைய அருமை நண்பரும்,"பொன்ஸ் "என்று பணி இடத்தில் அன்போடு அழைக்கப் படுபவருமான நண்பர் திரு.பொன்சித்திரவேல் அவர்கள் , கத்தார் தமிழ் சங்கத்தின் ஒரு அங்கமாய் தமிழ் பணி ஆற்றி வருவது கத்தார் வாழ் தமிழ் மக்கள் நன்கு அறிந்ததே..

கடந்த முறை பொங்கல் விழாவுக்கு திரு.சாலமன் பாப்பையா,"அரட்டை அரங்கம் புகழ் ராஜா,திருமதி.பாரதி பாஸ்கர் போன்ற தமிழறிஞர்களை தோஹாவுக்கு அழைத்து வந்து தமிழ் சங்கம் சார்பில் நகைச்சுவை பட்டி மன்றம் நடத்தியதில் நண்பரின் பங்கு குறிப்பிடத் தக்கது.

பழகுவதற்க்கு எளிமை, வந்த நாட்டிலும் கூட பிள்ளைகள் தமிழை மறந்து விடக்கூடாது என்று தன் குழந்தைகளுக்கு தவறாமல் தமிழ் பயிற்றுவிக்கும் அவரது தமிழ் ஆர்வம் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை...சிந்து,செளமியாவின் இனிய தமிழ் பேச்சை கேற்கவே அவ்வளவு இனிமையாக இருக்கிறது.தமிழ் பதிவுகளுக்காக தமிழ் தட்டச்சு படித்து வருகிறார்கள். என் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்கத்தெரியாது என்று பெருமையோடு கூறும் சில பெற்றோர்களுக்கு இவரின் தமிழ் ஆர்வம் ஒரு படிப்பினையாய் அமைய வேண்டும்.

இந்த வருடம் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு," சன் தொலைக் காட்சி-அசத்தப்போவது யாரு? " புகழ் நகைச்சுவை கலைஞர்கள்
கோவை குணா,மதுரை முத்து, வடிவேல் கணேஷ்,ஈரோடு மகேஷ், கோவை ரமேஷ் ஆகியோரை கொண்டு ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியும்,வழக்கம் போல பள்ளி சிறுவர்கள்,சிறுமியர்,குழந்தைகள் கலை ,நடன நிகழ்ச்சிகளும் நடத்த சங்கம் தீர்மானித்திருப்பதை தெரிவித்தார்.

எப்போதும் போல தோஹா சினிமா அரங்கத்தில் இல்லாமல், இந்த முறை MES பள்ளி வளாகத்தில் நடக்கப்போகிறது.எனவே 1300 பேருக்கான இருக்கைகளே உள்ளதால்...இந்த வருடம் இடமின்மை மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.வழக்கம் போலவே எல்லாருக்கும் வசதியான விடுமுறை நாளான "வெள்ளிக் கிழமை"யில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதால் ,தமிழ் அன்பர்கள் குடும்பம்,குடும்பமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்...

நுழைவுச்சீட்டுக்களும் கூடிய விரைவில் தீரும் நிலை உள்ளதால் ,சிரமத்தை தவிர்க்க..நண்பர்கள் உங்கள் அருகில் இருக்கும், கீழ்காணும் அலைபேசி எண்களை தொடர்புக் கொண்டு நுழைவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

தமிழன்பர்கள் -
அருகில் உள்ள இடம் -தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி /அலைபேசி எண்கள்

திரு. சுப்பிரமணியன்- தோஹா- 4687408 / 5723114
திரு.அஷோக் -தோஹா- 4490155 / 5549378
திரு.சேகர் -தோஹா -4946387 / 5524704
திரு.வரதராஜன்- தோஹா- 4433644 / 5685652
திரு.SRM பாண்டியன் -மிசைத்- 4626679 / 5660684
திரு.பொன்சித்திரவேல் -அல் வக்ரா- 4645037 / 5615952
திரு.பாஸ்கரன் -அல்கூர் -4722736 / 5214385

நுழைவு சிட்டு
வினியோக பணியில்
நிறுவனங்கள்

Aryaas உணவகம் -மான்சூரா- 4419668
'' '' முந்தசா- 4360097
Dreams Studio- 4323575



மேலும் இது பற்றி இன்னும் அறியாத மற்ற நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழி தகவல் அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.


கீழ் காணும் நிகழ்ச்சி அழைப்பிதழை பெரிதாக காண/மேலதிக விபரங்களுக்கு படங்களின் மேல் சுட்டவும்... ( ஃகிளிக்குங்க..)






அதுசரி...ஆரம்பத்துல" பதிவர்கள் மாநாடு "அது இதுன்னு எதோ கேட்ட மாதிரி இருந்துச்சேன்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது..
பல சமயங்கள்
கத்தார் கதாநாயகர்கள் அதாங்க.. நானு(ஹிஹி..) , நவின பாரதிய இளவரசர்,கானகத்தார்,கடகத்தார் எல்லாரும் ஒன்னா பதிவர்கள் சந்திப்பு நடத்தனுமின்னு பல முறை அலைபேசி,குறுந்தகவல் அரட்டை (சாட்) மூலம் முடிவு செஞ்சு ,ஆனால் சில பல காரணங்களால அது தாமதமாகிக்கிட்டே போவுது... நம்ம கானகத்தார் கூட இதைப்பற்றி அவர் பதிவில் சொல்லியிருந்தார்.

அதனால இதை பதிவர்கள் சந்திப்பிற்க்கு ஒரு வாய்ப்பா மாற்றிடலாமேன்னு எனக்கு ஒரு யோசனை.. மற்ற மூன்று பேருக்கும் அழைப்பு அனுப்பிட்டேன்.( நம்ம கடகம் மட்டும் வழக்கம்போல சாக்குப்போக்கு சொல்லி அடம்பிடிக்கிறாரு,...விட்டுருவோமா?... பாத்துடலாம்...:)))

இப்போ புரியுதா ,இந்த விழாவுக்கு ஏன் இவ்வளவு கூட்டம் அலைமோதுதுன்னு..

அட என்னங்க இது?.. கூட்டம் வரனுமின்னு அரசியல் கட்சிங்க மாத்திரம் ,விடுமுறை/பண்டிகை நாட்களில் கடற்கறையோரங்களுல மேடை போட்டு,சும்மா கடற்காற்று வாங்க வந்த மக்களையெல்லாம் பார்த்து
அலைகடலென திரண்டு வந்திருக்கும் தொண்டர்களேன்னு ஒரு ஃபில்டப்பு கொடுக்கலையா?.. பத்திரிக்கைகளில் முதல் பக்கத்துல போட்டுகலையா?..
அதே ஃபார்முலாவை, நான் பின்பற்றனா என்ன தப்புங்கறேன் ?... என்ன நான் சொல்லறது..


கத்தார் தமிழன்பர்களே.. உங்களை விழாவில் சந்திக்க தயாராகிறோம் கத்தார் கதாநாயகர்கள்... நாங்க ரெடி?.. நீங்க ரெடியா?..


என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்..

24 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

Superu! Have fun guys!

said...

//இப்போ புரியுதா ,இந்த விழாவுக்கு ஏன் இவ்வளவு கூட்டம் அலைமோதுதுன்னு..//

நல்லா கறி, மீன், முட்டை னு சாப்ட்டு ஒடம்ப தேத்தி வைங்க.. 1300 பேரும் இந்த 4 ஒடம்பும் எவ்ளோ அடி தாங்கும்னு பாத்து அடிப்பாங்களானு சொல்ல முடியாது... சிலர் இதான் சான்ஸ்னு பின்னி பெடலெடுக்க வாய்ப்பிருக்கு...:P

ஹிஹி.. விழா நல்லபடியா நடைபெற வாழ்த்துக்கள் மாம்ஸ் :))

எந்த விழா என்றெல்லாம் கேக்கப் படாது :P

said...

// Dreamzz said...

Superu! Have fun guys!//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் மாம்ஸ்...

said...

// SanJai said...

//இப்போ புரியுதா ,இந்த விழாவுக்கு ஏன் இவ்வளவு கூட்டம் அலைமோதுதுன்னு..//

நல்லா கறி, மீன், முட்டை னு சாப்ட்டு ஒடம்ப தேத்தி வைங்க.. 1300 பேரும் இந்த 4 ஒடம்பும் எவ்ளோ அடி தாங்கும்னு பாத்து அடிப்பாங்களானு சொல்ல முடியாது... சிலர் இதான் சான்ஸ்னு பின்னி பெடலெடுக்க வாய்ப்பிருக்கு...:P//

ஆஹா..சும்மா இருக்கிறவங்களுக்கு, நீங்களே சொல்லிக்குடுப்பிங்க போல :))
சைடுல ஆப்பு வைக்கிற ஜடியாவா?
:)))

ஏன் வெஜிடேரியன் சாப்பிடற யானைக்கு பலமில்லையா என்ன?...:)

வருகைக்கு, நன்றிகள்ப்பா...

said...

// SanJai said...


எந்த விழா என்றெல்லாம் கேக்கப் படாது //

அவ்வ்வ்வ்வ்...... ஏன் இந்த கொலைவெறி?..:)))

said...

//ஏன் வெஜிடேரியன் சாப்பிடற யானைக்கு பலமில்லையா என்ன?...//
ஸாரி மாம்ஸ்.. நான் உங்க பாடி சைஸ் மறந்துட்டேன். :P

said...

கத்தார் வலைப் பதிவர்கள் மாநாடு சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன்.

அப்படியே அதனோடு இனைந்து நடக்கும் பொங்கல் விழாவுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.( பொங்கல் விழா அமைப்பாளர்கள் யாரும் உங்க நன்பர்கள் இல்லையே??. பாத்தாங்கன்னா டின்னு கட்டிட மாட்டாங்க??)

ஆமா அலைகடலென திரண்டு வரனும்கிறீங்க.. கத்தார் கடல்ல அலையே இல்லையே .. என்ன செய்யுறதா உத்தெசம்.. செயற்க்கை அலை ஏதும் பிளான் பன்னி இருக்கீங்களா??? =:)

said...

நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன்..

said...

பதிவர்கள் மாநாடு நல்லதொரு மாநாடு - நல்லவர்கள் நால்வர் கூடி நடத்தும் மாநாடு. இம்மாநாடு வெற்றி பெற நல் வாழ்த்துகள். ஆமா மாநாட்டுக்கு மறந்துடமா போயிடணும் ஸ்ரீதர். நினப்பு இருக்கட்டும்

said...

// SanJai said...
//ஏன் வெஜிடேரியன் சாப்பிடற யானைக்கு பலமில்லையா என்ன?...//
ஸாரி மாம்ஸ்.. நான் உங்க பாடி சைஸ் மறந்துட்டேன். :P
//
கொஞ்ச நாள்.., நல்லா சாப்பிட்டா ...
ஏம்ப்பா சஞ்ஜய்...இது அநியாயமா தோணலை.. என்னியப் பாத்து..., அவ்வ்வ்வ்வ்வ்.....:)))

said...

//வேதா said...
அட சந்தடி சாக்குல பதிவர் மாநாடா? நல்லா என்சாய் பண்ணுங்க :D எங்களுக்கெல்லாம் ஓசில டிக்கட் கிடைக்காதா? எங்க தலைவி இல்லாம ஒரு மாநாடா? ;D
//
நன்றி ஹை...:)) .உங்களுக்கு இல்லாததா?.. ஓசில எதுக்கு? நானே புக் பண்ணிடறேன்.:). மூட்டை முடிச்செல்லாம் கட்டிருங்க..:D
ஒரு ஃபிளைட் டிக்கெட் மட்டும் எடுத்துட்டு வந்திருங்க..:P:P:P

ஜய்யோ.... தலைவியா?.. ஏனுங்க வேதா...என்னிய திட்டுவாங்காம கொஞ்சம் நாள் என்சாய் பண்ண உடறதில்லைன்னு முடிவே பண்ணிட்டிங்களா?..:))

said...

//கானகம் said...
கத்தார் வலைப் பதிவர்கள் மாநாடு சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன்.

சுய வாழ்த்தும்பாங்களே..அது இது தானோ:)))

அப்படியே அதனோடு இனைந்து நடக்கும் பொங்கல் விழாவுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.( பொங்கல் விழா அமைப்பாளர்கள் யாரும் உங்க நன்பர்கள் இல்லையே??. பாத்தாங்கன்னா டின்னு கட்டிட மாட்டாங்க??)

ஹிஹி.. ரொம்ப நெறய... ஆனா எல்லாருக்கும் ஒரு "டின்" வாங்கிக்கொடுத்து சமாதானப்படுத்திற மாட்டேன்?.. அட .. நீங்க நெனக்கிற மாதிரியெல்லாம் இல்லைங்க மாம்ஸ்.. "கோக்,பெப்சி டின் னைத்தான் சொன்னேன்.. நம்புங்க..:)))

ஆமா அலைகடலென திரண்டு வரனும்கிறீங்க.. கத்தார் கடல்ல அலையே இல்லையே .. என்ன செய்யுறதா உத்தெசம்.. செயற்க்கை அலை ஏதும் பிளான் பன்னி இருக்கீங்களா??? =:)
//

கடல் இருக்கு.. அலையா மக்கள் வருவாய்ங்கன்னு தான் அப்படி சொன்னேன்.. (இதையெல்லாம் மேடைப்போட்டு சொல்லறவிங்கக்கிட்ட கேக்க மாட்டிங்களே.. ஏதோ என்னிய போல அப்பாவிப் புள்ள தெரியாம சொன்னா.., கரைட்டா நோட் பண்ணி கேக்கறிங்களே மாம்ஸ் இது நியாயமா?:P

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் கத்தார் கதாநாயகர். கானகத்தார் அவர்களே..

said...

//இரண்டாம் சாணக்கியன் said...
நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன்..
//
வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி நண்பரே...

said...

// Anonymous said...
:)
//

நன்றிகள்:)

said...

//cheena (சீனா) said...
பதிவர்கள் மாநாடு நல்லதொரு மாநாடு - நல்லவர்கள் நால்வர் கூடி நடத்தும் மாநாடு. இம்மாநாடு வெற்றி பெற நல் வாழ்த்துகள். ஆமா மாநாட்டுக்கு மறந்துடமா போயிடணும் ஸ்ரீதர். நினப்பு இருக்கட்டும்
//
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சீனா ஜயா..
என்னங்க சீனா சார் .. இப்படி சொல்லிப்புட்டிங்க.. மத்தவிங்களை எழுப்பப்போறதே நான் தானே..ஹிஹி..:)))

said...

எனக்கும் ஒரு டிக்கெட்டு ரிசர்வுடு...

said...

நான் இல்லாத போது மாநாடு நடத்த திட்டம் போட்டது யாரு?

said...

// vijay said...

எனக்கும் ஒரு டிக்கெட்டு ரிசர்வுடு...//

வாங்க விஜய் சார்.. உங்களுக்கு ஒன்னரை டிக்கெட் தேவைப்படுமே..:P..
அல்ரெடி அரேஞ்சுடு.. வந்து வாங்கிக்கோங்களேன்..:))

said...

//vijay said...

நான் இல்லாத போது மாநாடு நடத்த திட்டம் போட்டது யாரு?//

என்ன இப்படி சொல்லிட்டிங்க.. உங்களை வரவேற்க்க தானே இந்த விழாவே..நேத்திக்கு பேசும்போதுகூட சொன்னேனே..:P
வருகைக்கு நன்றிகள் விஜய்...

said...

ம்ம்ம்ம், முன்னை மாதிரிக் கஷ்டமா இல்லை, இன்னும் படிக்கலை, வந்து மெதுவாப் படிக்கிறேன். கொஞ்சம் வேலை அதிகம், கணினி வேறே என்னோட நேரத்துக்குக் கிடைக்கலை! :)))))))))

said...

பின்னூட்டம் இன்னும் கொடுக்கிறது கஷ்டமாவே இருக்கே? :(((((

said...

பின்னூட்டமிடுவதுக்கு லேட்டாயிருக்கலாம், ஆனால், மாநாட்டுக்கு உரிய நேரத்திற்கு வந்துவிடுகிறேன். மாநாடு மைலாடு என்று அடிக்கடி கலைஞர் டிவியில் 'மாநாட மையிலாட' பார்க்கிறோமே, அதுபோல் நமது மாநாட்டிலும் மைலாடுமா?

said...

// கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம், முன்னை மாதிரிக் கஷ்டமா இல்லை, இன்னும் படிக்கலை, வந்து மெதுவாப் படிக்கிறேன். கொஞ்சம் வேலை அதிகம், கணினி வேறே என்னோட நேரத்துக்குக் கிடைக்கலை! :)))))))))//

நன்றிகள் அக்கா..இவ்வளவு கஷ்டத்துலயும் வருகைக்கும்,பின்னூட்டத்திற்க்கும்...

said...

// பாரதிய நவீன இளவரசன் said...

பின்னூட்டமிடுவதுக்கு லேட்டாயிருக்கலாம், ஆனால், மாநாட்டுக்கு உரிய நேரத்திற்கு வந்துவிடுகிறேன். மாநாடு மைலாடு என்று அடிக்கடி கலைஞர் டிவியில் 'மாநாட மையிலாட' பார்க்கிறோமே, அதுபோல் நமது மாநாட்டிலும் மைலாடுமா?//
ஹா..ஹா.. வாங்க இளவரசர் அவர்களே.. நல்வருகை... நம்ம கூட்டத்தில மயில் இல்லை மழலைகள் தான் ஆடப்போறாங்க..
என்ன..சில மழலைகளுக்கு வயசு கொஞ்சம் கூடுதல் இருக்கலாம்.:)))வருகைக்கு நன்றிகள் நண்பரே...
விழாவில் சந்திக்க ஆவலாயிருக்கிறேன்.