
ஒரே ஒரு முத்தமிட்டு,
சந்தோஷத்தில் குதிக்காதே
,பூமி அதிருதுன்னு
கிண்டல் செய்கிறாய்.
குதிப்பதா?
உன் முத்தத்தால்,
நான் மிதந்துக்
கொண்டல்லவா
இருக்கிறேன்.
உன் கவிதைநன்றாகத்தான்இருக்குடா என்கிறாய்,அதை உன்
கண்களில் இருந்துதான்
கற்றுக்கொண்டேன்
என்றால் நம்புவாயா?
என் கன்னுக்குட்டி:P
என்னை பூதம்என திட்டுகிறாயேஎனக்கு
சந்தோஷம்தானடி,
என் செல்ல
காதல் பிசாசே:P
புவியீர்ப்பு சக்திபூமிக்கு உண்டுஎன தெரியும்.புவி எதிர்ப்பு சக்தி
உன் கண்களில்
உள்ளதோ?
என் அம்முக்குட்டி
உன் கண்களைக்
கானும்போதெல்லாம்
மனம் மிதக்கத்
துவங்குகிறதே
உன் முகம்கண்டால் மட்டும்ஏனடி நான் இப்படிஉளருகிறேன்?ஓ.; இவை
உன் கண்களா?
இல்லை
கண்”கள் ”ளா?
என்னைக்காதலிக்கச் சொன்னால்கற்றுக்கொடுஎன்கிறாய்.குருவிற்க்கு
மிஞ்சிய
சிஷ்யன்
ஆகிவிட்டேனோ?.
நான் காதலைக்
உணர்ந்துக்கொண்டதே
உன்னிடமிருந்துதானே.
மனம்ஒரு குரங்குஎன்பது உண்மைதான்உன் தொலைப்பேசிக்
குரலைக் கேட்ட
கணமே உன்மேல்
தாவி விடுகிறதே
நீ நகமாயும்,நான் சதையாயும்இருப்போம்என்றாய்.இப்போதுதான்
புரிகிறது,
என் சிலுமிஷங்கள்
வளரும்தோறும்
அவற்றை
வெட்டிக்கொண்டே
இருக்கிறாயே கள்ளி.
அன்பே எத்தனை நாள்என்னை இப்படிஇயந்திரமாய்வைத்திருக்கப் போகிறாய்?ஒன்று நீ திருடிய
என் இதயத்தைக் கொடு .
இல்லையென்றால்
நஷ்ட ஈடாய் உன்
இதயத்தைக் கொடு
அடிப்பாவி..ஏன் இந்த
கொலைவெறி?
காதலிச்சா
கவிஞனாகிடலாமாம்?
என்றேன்
அர்த்தத்தோடு
காதலில்
தோற்றால் கூட
மகா கவிஞனாகலாம்
என்கிறாய்
கிண்டலோடு.
இதென்ன?எனக்கு பசிக்கவேஇல்லையே?ஓ.
நீ அங்கு
உணவருந்திவிட்டாயா?
என் குட்டிம்மா..
நேற்றுஉன் கனவில்நான் வந்தேனா?மறக்காமல் கேற்கிறாயே,
அறியாமல் பேசுகிறாயடி
என் செல்லம் ,
உன் நினைவுகள்
என்னைத் தூங்க
விட்டால்தானே
கனவு
காண்பதற்க்கு!!!
என் மனதைதிட்டம் போட்டுதிருடியவள் நீ.நான் பொறுப்பில்லாம,
தொலைத்து விட்டதாய
அல்லவா குற்றம்
சாட்டுகிறாய்:P
எத்தனை யோசித்தும்விடை கிடைக்கவில்லை. அதிகம் பேசுவது
உன் கண்களா?
இல்லை
உதடுகளா? என்று.
அன்று தடுக்கிவிழுந்தேன்இன்றும்எழவே இயலவில்லை.என்னடா செல்லம்
விழிக்கிறாய்?. .
உன் கண்ணடி பட்டு,
உன்னுள் விழுந்த நான்.
முள்ளை முள்ளால்தான்எடுக்க வேண்டுமாம்.உன் ஒவ்வொரு
கடைசி முத்தத்தால்
என்னுள் எழும்
பாதிப்புக்களை
சரி செய்ய,
தயவு செய்து
இன்னொரு முத்தம்
கொடுத்துவிடு கண்ணே.

தூக்கம் வருதுன்னு கொஞ்சலாய்சோம்பல் முறிக்கிறாயேஎன் மான்க்குட்டியே
இதைக் கண்டு
மொத்தமாய் என்
தூக்கம் போய் விட்டதை
நீ அறிவாயா?

இது நடக்குமாடா?
கேற்க்கிறாய்.
நான்
உன்னைக் காதலிப்பது
மட்டும் நடக்கும்
என்றா நினைத்திருந்தேன்?
அன்பே..உன் அலைப்பேசி மேல்எனக்கு பொறாமை.அது
சிணுங்கும் போதெல்லாம்
உன் கன்னத்தில் வைத்து
சமாதானப் படுத்துகிறாயே:P

சகியே ,என்ன செய்கிறாய்?
ஓ.. தான்
தான் அழகு
என இறுமாந்திருந்த
அந்த கிளிக்கு பாடம்
புகட்டிக்கொண்டிருக்கிறாயா?

என் மனம் பறிக்கும் காதல்
,உயிர் வாங்கும் கண்கள்
கனவு கொடுக்கும் உதடுகள்,
எத்துணை ஆயுதங்களுடன்
என்னுடன் போரிடுகிறாய்?.
சந்தோஷமாய் சரணடைகிறேன்
என் தேவதையே.


என் கோபத்தை
உன் ஒற்றை
கொஞ்சலில் எளிதாய்
வீழ்த்துகிறாய்.
உன் ஒற்றைக்
கண்ணீர் துளியின்
வலிமையைத் தாங்கும்
வகையறியாமல்
தவிக்கிறேன் நான்.
புல்லட் புருப் ஆடைகள்புவியெங்கும் கிடைக்கின்றன.என் நெஞ்சைத்துளைக்கும்
உன் ஓரப் பார்வையை
தாங்கத் தான்
ஒருகவசம் எங்கு
தேடியும் கிடைக்கலையே

கவிதை எழுதி
கல்லடிபட்ட(:p) காயம்கூட
ஆறி விட்டதடி கண்னே
உன் கண்ணடி
பட்ட காயம்
இன்னும் ஆறவில்லையடி
நெஞ்சில்:P

பசியில்லாமல் புசிக்கிறேன்.
உணர்வில்லாமல் நடக்கிறேன்.
உறக்கமில்லாமல் கனவுக்காண்கிறேன்
அன்பே இன்னுமா புரியவில்லை?
உடன் நீயில்லாமல் தவிக்கிறேன்டி..
அன்பே எச்சரிக்கையாயிரு,உன் வீட்டிற்க்குஆட்டோஅனுப்பியிருக்கிறார்களாம்.என்னைக் கொலைவெறிக்
கவிஞனாக்கி,
அவர்களை கொடுமைப்
படுத்தியதற்க்கு:P