Saturday, December 29, 2007

அல்ப சந்தோஷங்கள்...

                      மக்கள்ஸ் இன்னிக்கு தோஹாவுல பயங்கர குளிரு... அதுல என்ன சந்தோஷம்ங்கரிங்களா?...

                      நார்மலா வருஷா வருஷம் டிசம்பர் மாத மத்தியில தான் தோஹாவுல குளீர் உச்சத்துல இருக்கும்.

                     போன வருஷம்.. டிசம்பர் ஆரம்பத்துல குளிர் இல்லாததால, அம்புட்டு குளிர் இருக்காதுன்னு ஆருடம் சொன்ன டவுட்டு தனபாலுவ நம்பி(இதுல வேற எங்க எல்லாரைவிட ரொம்ப வருஷமா இங்க இருக்கான்னு ரொம்ப பெருமை அவனுக்கு), ரூம் ஹீட்டர் வாங்காம விட்டதால திடீருன்னு குளிர் கால மாறுதல் வந்ததும்.. ஏசியெல்லாம் ஆஃப் செஞ்சும்,நைட்டு தூங்கும் போது கூட வெதர் கோட்டு,காலுல சாக்ஸ்,கையுல டிரைவிங் கையுரை,தலையில கம்பளி தொப்பி,கம்பளி போர்வைன்னு ரொம்ப கஷ்டப் பட்டுட்டேன்.இத்தனையும் தாண்டி உள்ளங்காலுல ஒரு ஜில்லிப்பு.எந்த கடையிலயும் ஹீட்டர் கெடைக்கலை எல்லாம் முன்னாடியே வித்துருச்சாம்..


                                  ஆயில் டைப்பு ஹீட்டர் வாங்கிக்கிட்டு வந்தா ,கொஞ்ச நேரத்துல ஏதோ கருகிய மாதிரி மணம் வருதுன்னு யுஸ் செய்யவே இல்லை.. நைட்டெல்லாம்  எலட்ரிக் கெட்டில்ல வென்னீர் போட்டு ,ஃபிளாக்ஸ்க்குல சூடா வைச்சு , எப்பப்போ குளீரால தூக்கம் கலையுதோ,அப்பப்போவெல்லாம் ஒரு வாய் குடிச்சு சமாளிச்சேன்.வீட்டுல நான் மட்டும் தனியா குடியிருக்கறதால தூக்கம் கலைஞ்சாக்கூட பேச ஆளில்லை.

                                    காலையில எழுந்து கதவை துறந்தாக்கா.. வாசல்ல விட்டுருந்த என்னோட செருப்பே கண்ணுக்கு தெரியலை.அம்புட்டு பனி மூட்டம். வாட்டர் ஹீட்டருல கொதிக்கிற வென்னிர் சூடு கூட ,குளிக்கும் போது கத கதப்பாத்தான் தோனிச்சு.சூடே தெரியலை...


                                    அப்புறம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள எல்லா நண்பர்களுக்கும் போர்கால அவசரத்துல மெசேஜ் அனுப்பி எந்த ஏரியாவுல எந்த கடையில ஹாலஜன் பல்ப் ஹீட்டர் கெடச்சாலும் ,கடைய சீல் வைச்சு மெஜேஜ் தரணுமின்னு உத்தரவு போட்டு,கடைசியா மூணு நாள் கழிச்சி ஏதோ ஒரு டப்பா கடையில பழைய ஹீட்டர் தான் கெடச்சிச்சு... அப்பாடா ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரைங்கரது போல ,சந்தோஷமா வாங்கிப்போயி யுஸ் செஞ்சாக்கா.. தேவர் மகன் படத்துல "வெறும் காத்து தான் வருது"ன்னு சொல்லுற மாதிரிவர்ர மாதிரி ,வெறும் வெளிச்சம் தான் வந்துச்சு,சூடு வரலை...

                                இதெல்லாம் வேலைக்காவாதுன்னு ,ஹீட்டரோட இருக்கிற ஏசியா மாத்திப்புட்டேன்... ஆனா ஏசி மிஷினுல இருக்குற ஹீட்டர ஆன் செஞ்சாக்கா.. அதுலயும் அதே தீஞ்ச வாசனை வருது,.. கம்பி சூடாகி, சூடு வர்ரதால அப்படித்தான் இருக்குமாம். எப்படியோ அதை வைச்சே சமாளிச்சேன்...

                                  இந்த வருஷம் முன்னாடியே ,புத்திசாலித்தனமா.. நவம்பர் கடைசிலயே ஓடிப்போயி ஹாலஜன் லைட் ஹீட்டர் வாங்கிட்டேன்... ஓளியினால வெப்பமாக்குறதால ரூம் முழுசா சீரா பரவுது.ஏசிலயே வர்ர ஹீட்டர் போல எந்த மணமும் இல்லை.. மத்த டைப் ஹீட்டர் போல ஹீட்டரே சூடாவரது இல்லை.. சைஸ்சும் சின்னது.வெயிட் அரவே இல்லை.. ஆனா லைட்ட ஆன் செஞ்சாக்கா,ரூம் முழுக்க விரைவா வெப்பமாக்கிடுது.

                                   அதுலயும் ஃபேன் மாதிரி 180 டிகிரி தானா சுத்துற வசதியும் உண்டு. டைமர் வசதியும் இருக்கு , மூன்று அடுக்கு ஓளி-வெப்பம் அட்ஜெஸ்மெண்டும் வேற இருக்கு.

                                    அடடா... இத நம்ம நண்பர்களுக்கும் ரெக்கமென்ட் செய்யலாமேன்னு ,அப்பவே எல்லாருக்கும் ,மாடல் விபரம்,கிடைக்கிற கடையெல்லாம் போட்டு ஈ-மெயில் அனுப்பினேன்.. ஆனா மறுபடியும் டவுட்டு தனபாலு.. மாமு இந்த வருஷம் குளிர் இருக்காது.வேன்னா பாரேன்ன்னான். குளிர் வந்தா பாத்துப்போம் மச்சின்னானுங்க...பசங்க...

                                  அதே போல டிசம்பர் மத்தியில கூட குளிர் அவ்வளவு இல்லை.. அதிகாலையில லேசா பனி மட்டும் இருந்துச்சு. பசங்களுக்கு சந்தோஷம். நாங்க்கூட என்னடா இது ? இம்புட்டு முன்னெச்சரிக்கையா வாங்கில்லாம் வைச்சு இப்போ மூட்டைக்கட்டி போட்டிருக்கோமே..அதவிட நெறய சொம்மா செலவெல்லாம் தெனமும் செஞ்சிக்கிட்டுத்தேன் இருக்கோம். ஆனா...நாம இம்புட்டு கணிச்சு இவனுங்களுக்கெல்லாம் சவால் விட்டு வாங்கனப்பறம் சொம்மா வேஸ்டாகிடுச்சேன்னு ஃபீல் பண்ணேன்.. அந்த ஹீட்டருக்காகவாவது குளிர் வரப்டாதான்னு ஒரு ஆசை...

                                  என்னோட ஆசை நிறைவேறிடுச்சு.. ரெண்டு நாளா.. குளிர் பட்டைய கெளப்புது.. எனக்கோ.. ஹீட்டருனால ரூமே சொம்மா கத கதப்பா சுகமா இருக்கு.. வேணுமின்னே ஜன்னல் கதவையும் திறந்து வைச்சுக்கிட்டு குளிர் காத்துல லைட் ஹீட்டர் ஓளியில ,குளிர் காஞ்சுக்கிட்டு நடு ராத்திரில வலை மேயரது நல்லாத்தேன் இருக்கு. இதே மத்த டைப் ஹீட்டருன்னாக்கா.. .வெளிக் காற்று வரப்டாது.. ஏன்னாக்கா வெப்பம் காற்று மூலமாவே கடத்தபடறதால..(ஏசி குளிர் மாதிரியே..),ஆனா இதுல வெப்பம் ஓளி மூலமா பரவரதால காற்று ஊடகம் பற்றி கவலையே இல்லை..

                                      பசங்களுக்கு போன் போட்டு "நல்லா ,குளிரா, ஜாலியா இருக்குல்ல"ன்னு போட்டு வாங்கனாக்கா..... "மச்சான் ,நீ சொன்னத அப்பவே கேக்காம போயிட்டோம்டா... லைட்டு டைப்பு ஹீட்டரெல்லாம் வித்து போயிருச்சாம்.. மிச்சமிருக்குற ஏதாவது சில கடைகளுல வெல அதிகமா கொடுத்தாவது நாளைக்கு வாங்கிப்புடனும்"ன்னு புலம்பரானுங்க...

ஒரே நாளுல என்னோட வேஸ்ட் ஹீட்டரு..ஹீரோ ஹீட்டராயிட்டாரு...

                                        என்னோட முன்னெச்சரிக்கை பலன் குடுத்ததுல ஏதோ ஒரு அல்ப சந்தோஷம்....ஹிஹி.. ஆனா இதப்போல சின்ன ,சின்ன அல்ப சந்தோஷங்களும் தேவைன்னு தான் தோனுது...


                                         மத்தவிங்க ஹீட்டர் வாங்கரதையும் ஜோசியம் சொல்லி தடுத்த டவுட்டு தனபாலு என்ன பாடு படறான்னு தெரிஞ்ச்சிக்க.. போன் செஞ்சா ஹிஹி... "உன் ஹீட்டர விட எங்கிட்ட சூப்பர் ஜடியா இருக்கு ..சொன்னா நீ திட்டுவே "ங்க்கரான். "அட.. சொம்மா சொல்லுடா.. எல்லாருக்கும் பயன்படட்டுமே"ன்னு கேட்டாக்கா.." மாமே.. ஒரு குவாட்டர கப்புன்னு அடிச்சுட்டு படுத்துட்டா.. பனி மலையில படுத்தாலும் குளிர் தெரியாது"ங்கரான்.. திருந்தவே மாட்டான்..

                                          அவன் கெடக்கிறான் "தண்ணி"ப் பாம்பு. எப்படியோ... இந்த கடுங்குளிரை ,இதமா மாற்றி ,புத்தாண்டை வரவேற்க்க காத்திருக்கும் என்னோட ஹீரோ ஹிலியம் ஹீட்டருக்கு... நன்றிகள்...

                                          அவர நீங்களும் பாக்க வேணாமா?...உங்களுக்காக எப்பிடியெல்லாம் போஸ் குடுக்கறாரு பாருங்க...


ஸ்டார் மியுஜிக்


லேசா, லேசா...


முழு வெப்பம் செட்டிங்...


நின்ன இடத்துலயே சுத்துறாரு...

18 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

ஒரு அல்ப சந்தோஷத்தைக் கூட இவ்வளவு அழகா பதிவெழுத முடியும்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் ரசிகன்!

உங்க முன்னெச்சறிக்கை நடவெடிக்கைக்கு பாராட்டு!

said...

// delphine said...

just buy an electric blanket.. it will keep you hot...//

டெல்ஃபின் அக்கா...வல்வருகைகள்.. விடுமுறை எப்படி இருக்கு?..
அப்புறம் இப்போ நீங்க சுற்றுலா போய் இருக்குற மாதிரி இங்க அம்புட்டு மாசமெல்லாம் குளிர் இருக்காது..
அதிகபட்சம் 1 வாரம்,10 நாள் தாக்குப்பிடிக்கும் அம்புட்டுத்தேன். மத்த நாளுல எல்லாம் தாங்கக்கூடிய குளிர் தான்.
அதனால எலட்டிக் பிளாங்கெட் போன்ற சாதனங்களை யாரும் விற்பனைக்கு வைக்கறதில்லை...:))
முதன் முதலா குளிர் நாடுகளுக்கு போய் இருக்கும் நண்பர்களுக்கு உங்கள் ஆலோசனை நிச்சயமா பலன் தரும்.

வருகைக்கும்,ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

said...

// Divya said...

ஒரு அல்ப சந்தோஷத்தைக் கூட இவ்வளவு அழகா பதிவெழுத முடியும்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் ரசிகன்!

உங்க முன்னெச்சறிக்கை நடவெடிக்கைக்கு பாராட்டு!///

வாங்க திவ்யா...,நேத்திக்கு நைட்டு ஏதோ ஒரு அல்ப சந்தோஷத்துல திடீருன்னு பதிவெழுதி அப்பவே போட்டுட்டேன். இப்ப எனக்கு ரொம்ப அல்பமா தோனுதுங்க ஹிஹி.... இதுலயும் ஒரு பாஸிட்டிவ் கண்டு புடிச்சி பாராட்டி ஊக்கப்படுத்துற உங்களுக்குத்தான் உண்மையிலேயே பாராட்டுக்கள் சேரனுமுங்க...

வருகைக்கும், பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றிகள்

said...

ஜெய்பூர் குளிரில் இதே மாதிரி அவதிபட்டும் கூட இப்படி ஒரு பதிவை எழுதணும்னு நினைக்கவே இல்லை .உங்க பதிவை விட உங்க ஹீரோ heater தான் super ....அருணா

said...

இம்புட்டு வெளிச்சத்துல எப்படிய்யா தூங்கறது!?!?!!?

said...

//
delphine said...
just buy an electric blanket.. it will keep you hot...
//
டாக்டர் 230 வோல்ட்டா இல்ல 400வோல்ட்டா

இப்பிடியெல்லாம் இருக்கா!!

அவ்வ்வ்

said...

//aruna said...

ஜெய்பூர் குளிரில் இதே மாதிரி அவதிபட்டும் கூட இப்படி ஒரு பதிவை எழுதணும்னு நினைக்கவே இல்லை .உங்க பதிவை விட உங்க ஹீரோ heater தான் super ....அருணா //
நன்றிகள் அருணா.. ஊருல இப்பிடி கெடச்சா நெறய பேரு வாங்குவாய்ங்கல்ல...ஆனா கரண்ட்டு பில்லு கண்டபடி எகிருமே.. :

said...

// மங்களூர் சிவா said...

இம்புட்டு வெளிச்சத்துல எப்படிய்யா தூங்கறது!?!?!!?//

வாங்க சிவா மாம்ஸ்.. தடிமனான கப்பளி போர்வைய போத்திக்கிட்டாக்கா.. பட்ட பகல்ல கூட உலகமே இருண்டிருங்கோ....

said...

ஹாய் ரசிகா,

அட இவ்ளோ நல்லா விளம்பரம் பண்ண தெரிஞ்ச நீ ஏன் ஒரு நல்ல விளம்பர கம்பனியா பாத்து (என்ன ஒரு 70Kசம்பளமா) சேரக் கூடாது?

said...

// மங்களூர் சிவா said...

//
delphine said...
just buy an electric blanket.. it will keep you hot...
//
டாக்டர் 230 வோல்ட்டா இல்ல 400வோல்ட்டா

இப்பிடியெல்லாம் இருக்கா!!

அவ்வ்வ//

என்ன செய்யரது மாம்ஸ் உங்க வீக் எண்டு ஜொள்ளு இந்த வாரம் அம்புட்டு ஹாட்டா இல்லாததால தான் இம்புட்டு குளிரா இருக்கு.. இதையெல்லாம் தேட வேண்டியிருக்கு :)))

said...

// Sumathi. said...

ஹாய் ரசிகா,

அட இவ்ளோ நல்லா விளம்பரம் பண்ண தெரிஞ்ச நீ ஏன் ஒரு நல்ல விளம்பர கம்பனியா பாத்து (என்ன ஒரு 70Kசம்பளமா) சேரக் கூடாது?//

வாங்க சுமதி, நல்ல ஜடியா..முயற்ச்சி பண்ணி பாக்கலாம்.ஆமா அதென்ன சம்பளத்த குறைச்சுபபுட்டிங்க?.:P

said...

ரஜாய், ரஜாய்னு ஒண்ணு இருக்கு, அதைப் போர்த்திட்டுப் படுத்தா தூக்கம் சுகமோ சுகம்,
இன்னும் பூராப் பதிவும் படிக்கலை, அப்புறமா வந்து படிச்சுட்டுப் பின்னூட்டறேன்.
"வல்வருகைகள்.. விடுமுறை எப்படி இருக்கு?.."

அது என்ன வல்வருகைகள்? இன்னுமா தமிழ் எழுத வரலை? நறநறநற ஒரு லட்சம் முறை எழுதுங்க இம்பொசிஷன் கொடுத்திருக்கேன், உங்களுக்கு!

said...

// கீதா சாம்பசிவம் said...

"வல்வருகைகள்.. விடுமுறை எப்படி இருக்கு?.."

அது என்ன வல்வருகைகள்? இன்னுமா தமிழ் எழுத வரலை? நறநறநற //

அவ்வ்வ்........டீச்சர் நீங்க ஊர்ல இல்லாத போதெல்லாம் சரியாத்தேன் எழுதிக்கிட்டிருந்தேன்.அதெப்படி கரெக்ட்டா நீங்க வரும்போது தப்புத்தப்பா மாட்டறேன்னு பிரியலை..அதுவும் பதிவெல்லாம் விட்டுப்புட்டு பின்னூட்டத்துல..

//ஒரு லட்சம் முறை எழுதுங்க இம்பொசிஷன் கொடுத்திருக்கேன், உங்களுக்கு!//

அதுசரி விளக்கம் சொல்லிப்புடறேன். அது தெரிஞ்சேதான் எழுதினேன்.அதாவது இந்த காலத்துல பதிவ படிக்கறவிங்களே குறைவு.அதுலயும் பின்னூட்டம் போடற பொறுமை இருக்கிறவிங்க ரொம்பவும் கொறைவு. அதுலயும் என் னோட பதிவுக்கு,அதுவும் மொக்கை பதிவுக்கு அதுலயும் அசல் மொக்கைக்கு.. அதுலயும் ஃபர்ஸ்ட்டு ஃபர்ஸ்ட்டு வந்தவிங்கள சொம்மா வரவுன்னா கூப்பிடறது?.. அதான் வரவேற்ப்பு ஸ்டாங்கா இருக்கட்டுமேன்னு வன்மையான + வருகை = வல் வருகை.. கண்டிக்கரது மட்டும் வன்மையா கண்டிக்கலாம். வர வேற்க்கிறத வன்மையா செய்யப்டாதா?..

[இப்போ சொல்லுங்க .. கீதா அக்கா இம்போஷிஷன் கேன்சல்.ஹிஹி,....]

said...

//என்னோட முன்னெச்சரிக்கை பலன் குடுத்ததுல ஏதோ ஒரு அல்ப சந்தோஷம்....ஹிஹி.. ஆனா இதப்போல சின்ன ,சின்ன அல்ப சந்தோஷங்களும் தேவைன்னு தான் தோனுது...//
ROFL! athu ennamo sari!

said...

athellam sari... indha bulb fuse ellam pogaatha :D

said...

// Dreamzz said...

//என்னோட முன்னெச்சரிக்கை பலன் குடுத்ததுல ஏதோ ஒரு அல்ப சந்தோஷம்....ஹிஹி.. ஆனா இதப்போல சின்ன ,சின்ன அல்ப சந்தோஷங்களும் தேவைன்னு தான் தோனுது...//
ROFL! athu ennamo sari!//

ஹிஹி.. தாங்க்ஸ் மாம்ஸ்..

said...

// Dreamzz said...

athellam sari... indha bulb fuse ellam pogaatha :D//

மாம்ஸ் ஏன் இந்த கொலை வெறி...
அதான் ஒன்னுக்கு மூணு பல்ப் இருக்குல்ல.. :)))

(எதுலயுமே ஸ்பேர் இருக்குறது நல்லதுன்னு பெரியவிங்க சொல்லறாய்ங்க மாமே:P:P:P )

said...

// வேதா said...

ஒரு ஹீட்டர் வாங்கினதுக்கு இப்டி ஒரு பில்டப்பா? :D

/அதான் வரவேற்ப்பு ஸ்டாங்கா இருக்கட்டுமேன்னு வன்மையான + வருகை = வல் வருகை../
பயங்கர சமாளிப்பு திலகமா இருப்பீங்க போலிருக்கே :)//

ஹிஹி... உங்க ஃபிரண்டாயிருந்துக்கிட்டு இம்புட்டு கூட இல்லாட்டி எப்படிங்க?..:P

வருகைக்கு நன்றிகள்.. :)