Thursday, August 7, 2008

டாட்டா...பைபை...


ஹாய் மக்கள்ஸ், எப்படி இருக்கிங்க?.. ரொம்ப நாளாச்சுல்ல..நான் லீவுக்காக இந்தியா வந்ததுலருந்து ரொம்ப பிஜியாகிருச்சு.நாமளும் பயணக்கட்டுரைல்லாம் எழுதி உங்களையெல்லாம் கொடுமைப்படுத்தலாம்ன்னுதான் பிளான்.எப்படியோ தப்பிச்சுட்டிங்க:P




பர்சனல் வேலைகளை முடிக்கவே நேரம் பத்தலை.இந்தியா வந்துட்டு,பாக்க வராததால,நம்ம நண்பர்கள் கிட்டயிருந்து ஒரே அர்ச்சனைதான் போங்க. எல்லாருக்கும் போன்லயே சிலபல சமாதானங்களை சொல்லி ஸாரி சொல்லறதுக்குள்ள... அவ்வ்வ்வ்வ்.


அதிகம் அர்சனை செஞ்சது நம்ம ஜீவ்ஸ் மாம்ஸ் & மின்னல் சுமதி.அடிக்கடி போன் எடுக்கறதில்லைன்னு ரொம்பவே பாராட்டுனது(?) நம்ம பாசமிகு பாரதி மாம்ஸ்.இதுல திட்டாம விட்டது நம்ம தோழி ஜி3 மட்டும்தான்.காண அன்புடன் அழைத்த நந்து மாம்ஸ்,சஞ்ஜய்,சிவா யாரையும் காண இயலாதது வருத்தம்.

பிளாக் பக்கமே வர முடியல.ஆனா நம்ம ரிட்கவுண்டர்
ரிப்போர்ட் பாத்ததுல,ஒன்னும் எழுதலைன்னாலும் ஆச்சர்யப்படுமளவுக்கு நிறைய எண்ணிக்கையில,பேரு நம்ம வலைப்பக்கம் வந்துட்டு போயிருக்காங்கன்னு நாடுகள் வாரியா காட்டுது.அதுல 43% நேரடி வருகை.உங்க அன்பிற்க்கு நன்றிகள்.


நான் கத்தாருல ஆற்றிய சேவை(?) போதும். துபாய் வேகமா முன்னேறுதாம்ல்ல.. அதை எப்படி அனுமதிக்கலாம்ன்னு, போனஸ்ல்லாம் குடுத்து,என்னை துபாய்க்கு நாடுகடத்திட்டாங்க.

தோஹாவுல தனிக்காட்டு ராஜாவா துள்ளிக்கிட்டு இருந்த என்னிய, துபாய் மெயின் ஆபிஸ்ல போட்டு நொங்கெடுக்கப் போறாங்க:P

அதுவும் நம்ம குசும்பரும் துபாய்ல செலவுகள் பத்தி பதிவெல்லாம் போட்டு பயம்புறுத்திட்டாரு.நான் மூனு வருஷம் கழிச்சு மறுபடியும் துபாய்க்கு போறேன்.என்னென்ன மாற்றங்கள்ன்னு தெரியலை.நான் இல்லாத(காரணத்தால்?) காலத்துல நிறைய டெவலப் ஆகிருச்சாம்ல்ல..

என்ன?அப்போ நமக்குதெரியாத நிறைய பதிவுலக நட்புள்ளங்களை இப்போ அடைந்திருக்கோம் .அதிலும் என்னிய பதிவுலத்துக்கு இழுத்து விட்ட அபிஅப்பா, போன்லயே நட்பை உணர வைக்கும் நம்ம குசும்பர்மாம்ஸ் ரெண்டு பேரையும் பாக்கனும்ன்னு இருந்த ஆவல் தீரப் போகுதுன்னு ஒரு சந்தோஷம்

எந்த வேலையும் ஒழுங்கா முடியாம,முழுத் திருப்தியில்லாம, இதோ மீண்டும் கிளம்புகிறேன். கடமை என்னை அழைக்கிறது.இன்று இரவு விமானம்.நாளைய சூரியன் என்னை துபாயில் சந்திப்பார்(ஓவர் பில்டப்பா இருக்கோ?:P

அலுவல் பணிகள் வழக்கத்துக்கு வந்து,இருப்பிட ஏற்பாடுகள் எல்லாம் முடிய சில காலம் பிடிக்கும். அதுவரை என் கொடுமைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தரலாம்ன்னு பெருந்தன்மையோடு முடிவெடுத்துள்ளேன். (யாருப்பா அது? பதிவிலேயே என்னைக் கவர்ந்த வரிகள் இதுதான்னு சொல்லறது:P)


சில பல சந்திப்புக்கள்.சில நண்பர்களை அவர்களுக்கே தெரியாமல் பார்த்துவிட்டு வரத்தான் நேரம் இருந்தது

இங்க வந்து நான் கலந்துக்கிட்ட மிகச் சொற்ப சந்திப்பு நிகழ்ச்சிகளுல தமிழ்க்குழுமங்களின் சென்னை சந்திப்பும் ஒன்று.
நம்ம சிபி மாம்ஸ்,சகாரா,தணிகை இன்னும் பலரையும் கண்டு அளவளாவியது பசுமையான நினைவு


இந்த சந்திப்பினைப் பற்றி குழுமத்தில் கிறுக்கிய அவசர ரிப்போர்ட்

................

ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும்ன்னு ஆசைப்படும்போது

கற்கண்டு,வெல்லம்,தேன்,பேரிட்சை,திராட்சை ஐந்தையும் போட்டு பஞ்சாமிர்தமா செய்து கொடுத்தா எப்படியிருக்கும்?. இது ஏதாவது பழனி பக்கம்
டூர் போனது பற்றியோ என யோசிக்கறிங்களா?

தமிழ் இணைய உலகின் ஐந்து குழுமங்களும் இணைந்து சென்னையில்(20.08.08) நடத்திய பஞ்சாமிர்த சந்திப்பு சங்கமத்தைப் பற்றிதான் சொல்லுகிறேன்.

விடுப்பு முடிந்து ,துபாய் கிளம்ப விசா வந்துவிட்ட காரணத்தால்,ஆயத்த பணிகளின் நிமித்தம், சந்திப்பில் கலந்துக்கொள்ளமுடியுமா? என மனதில் சந்தேக நிழல் படிய, ஒருவழியாய் , சரி, ஆட்டோகிராப் மாதிரி பஸ் ஜன்னலோரம் உட்கார்ந்து கொசுவத்தி சுத்திக்கிட்டே போகலாம்ன்னு ,நான் கிளம்ப முடிவெடுத்து புதுவையிலிருந்து கிளம்பியதே மதியம் 1 மணிக்குத்தான். ( மதியம் மூன்று மணிக்கே குழும சந்திப்பு துவங்கும்ன்னு மஞ்சூர் அண்ணா அலைப்பேசியிருந்தார்).

சென்னையில் வந்திறங்கிய போது மணி 4. சரி நமக்கோ வழி தெரியாது.நேரமும் ஆகிருச்சு.ஏன் ரஸ்க் எடுக்கனும்?ன்னு (நமக்குத்தான் ரிஸ்க்ன்னா ரஸ்க் மாதிரியாச்சே:P ) இந்திய தேசிய வாகனத்தில்(அட,நம்ம ஆட்டோதாங்க)
போகலாம்ன்னு தெரியாத்தனமா முடிவெடுத்து,சென்னையின் சந்து

பொந்துக்களை எல்லாம் சுற்றிப்பார்த்து,புதுவையிலிருந்து சென்னைக்கு
பஸ்ஸில் வந்த தொகையை விட அதிகமா கப்பங்கட்டி,ஒருவழியா சவன் ஹில்ஸ் (ஏழுமலை)செட்டியார் திருமண நிலையம் வந்திறங்கிய போது தொப்பலாய் நனைந்திருந்தேன்.

4 மணிநேர பயணக்களைப்பும்,தினமும் மதியம் உண்ட களைப்பில் லேசாய் ஓய்வெடுக்கும் பழக்கமும் சேர்ந்து சவால் விட,சரி பெரிய பெரியவங்களா வந்து நிறைய இலக்கியம்ல்லாம் பேசுவாங்க,நாம கடைசி வரிசை சிம்மாசனமா பாத்து,கனவுலகை ஒரு ரவுண்டு போய் வந்துடலாம்ன்னு நினைச்சு போனா. அங்க..நம்ம சிபி மாம்ஸ் & மஞ்சூர் அண்ணா. கண்டதும் களைப்பெல்லாம் போய், சுற்றி பார்வையை ஒரு ஸ்கேன் செஞ்சா, அட.., சரிசமமாய் இளைய தலைமுறை, யாரைப் பார்த்தாலும் சினேகப் புன்னகை.என் கல்லூரி நினைவுதான்
வந்தது.உற்சாகம் தொற்றிக்கொண்டது.

என்னால்,பெரியவங்கன்னு தவறா புரிந்துக்கொள்ளப்பட்ட ,வயதால் மட்டுமே முதிர்ந்த, 'அனுபவ இளைஞர்களும் ‘,சுறுசுறுப்பாய் உரையாடிக் களித்திருக்க, புதுமையாத்தான் இருந்தது.

அறிமுகப் படலம்,நட்பு விசாரிப்புக்கள் என ஆரம்பத்திலேயே களைக்கட்டிய
சூழ்நிலை.

புதிய அறிமுகங்கள் இயல்பாய் நிறைவேறின . இத்துணை புதிய பெயர்களை நினைவில் இருத்திக் கொள்ள சிரமப்பட்ட வேளையிலும், இதுவரை பெயர்
மட்டுமே அறிந்திருந்த ரசிகவ் ஞானியார் ,அருட்ப்பெருங்கோ, தமிழ்த்தேனி, மல்லிகை அக்கா, ஜே.கே,விஜய் ஆகியோர்களை நேரில் காண முடிந்தது மகிழ்ச்சியளித்தது.

நம்ம ஊர்க்காரர், பாண்டிச்சேரி பிரேம் குமாரும்,நீங்கதானே ரசிகன் ஸ்ரீதர்?ன்னு கேட்டு அறிமுகப் படுத்திக்கொண்டார்.

மஞ்சூர் அண்ணா, நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் நகைச்சுவை உணர்வுடனும், அத்துணை பணிகளுக்கிடையிலும் தவிர்காமல் நம்முடன் அலாவலாவி, அக்கரையுடன் அங்குமிங்கும் நடைப்பயின்று நட்புக்களிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் நிகழ்ச்சி முடியும்வரை எங்கும் முழுமையாக 1 நிமிடம் கூட அமரவில்லை.(அண்ணியாரும் வந்திருந்ததால் ,அவர்முன் அமரவில்லை என்ற கூற்றை நான் ஆமோதிக்க வில்லை என்பதனை நான் இங்கு தெரித்துக் கொள்ள விரும்புகிறேன்:P)

மஞ்சூர் அண்ணாவின் மகள் சுட்டிப் பெண் மானஸ்வியும், அப்பாவை போன்றே
சுறுசுறுப்பு.

நானும் சிபி மாம்ஸும் ஒன்றாக அமர, நம்ம சிபி மாம்ஸ், வந்த உடனேயே ஆரம்பிச்சுட்டார் கலாய்ப்பை.மாப்ளை ஸ்னாக்ஸ் இன்னும் வரலியேன்னார்.

எனக்கும் ஒரு டவுட்டு.மாம்ஸ், கோவை சந்திப்புல மட்டும் வடையெல்லாம் தந்தாங்க, நமக்கு அல்வா தந்துட்டாங்களோன்னு ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தப்போ, நம்ம தணிகை வந்து இனிப்பு காரம் காகித தட்டில் வைத்து வழங்கி, வயிற்றில் பால்,டிக்காஷன்ல்லாம் வார்த்தார்.

அதற்கும் சிபி மாம்ஸ்: மாப்ளே இதென்ன சைடிஸ் மொதல்ல குடுத்துட்டாங்க???.

கோக் கொண்டு வர, அதை ஏதோ மில்ட்ரி ரம் பாணியில் ஒரு சிப் சிப்பிட்டு, மிக்ஸிங்க் சரியாயில்லையேங்கறார். மாம்ஸ் , அக்காக்கிட்ட சொல்லனுமா?ன்னு கேட்டதுதான், ஒடனே சோடா அடிக்காமலேயே தெளிவாயிட்டார்.

அதுக்குள்ள நீங்கதான் சிபியான்னு ரெண்டு மூனு பேர் மாம்ஸ்ச விசாரிக்க,அட
மாம்ஸ்க்கு இம்புட்டு மவுஸ்ன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா,இவர பக்கத்துல
ஏதாவது ரூமுல வைச்சு பூட்டி, அவர பாக்க டிக்கெட்ல்லாம் போட்டிருக்கலாமேன்னு கூட ஐடியா வந்துச்சு:P

ரசிகவ் ஞானியாரின் புத்தக வெளியீடு,குழும நண்பரின் மறைவிற்க்கு நினைவு
அஞ்சலி என நிகழ்ச்சிகள் துவங்கின.

முன்னரே நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட, நமக்குத் தெரியாம
போட்டி நடத்திட்டாங்களான்னு கேட்டா,ஏதோ கவிதையாம்ல்ல, அதுல போட்டியாம், சரி சரி நமக்கு சம்பந்தமில்லாத சின்ன மேட்டரு,

அடுத்த முறை ஏதோ கலாய்ப்பு, மொக்கைன்னு நம்ம பிரிவுகள்ல வைச்சா,நாம
கலந்துக்கிடலாம்ன்னு நானும் மாம்ஸும் முடிவு செஞ்சுக்கிட்டோம்.

போட்டில வெற்றிப் பெற்றவங்களுக்கெல்லாம் பரிசு கொடுத்தாங்களே, நாங்க அந்த போட்டிகளுல கலந்துக்காம விட்டுக் கொடுத்ததால தானே எல்லாரும் ஜெயிக்க முடிஞ்சுது?. அதுக்கே நமக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு கொடுத்திருக்கனும், அப்படிஏதும் ஏற்பாடு செய்ததாக தெரியாததால்,அதைக் கண்டித்து, வெளிநடப்பு செய்யதீர்மானிச்சோம் (சந்திப்பு கூட்டம் முடிந்த அப்புறம்தான் வெளிநடப்பெல்லாம்.:P ஏன்னா, கையில மிக்சர் மிச்சம் இருந்துச்சே:P)

மேடையில் கர்னாடக சங்கீதம்(சம்ஸ்க்ரிதத்துல பாடறத எதுக்கு கர்னாடகம்ன்னு
சொல்லறாங்க?) பாடிய குழந்தைகளின் குரல்வளம் கவர்ந்திழுத்தது.

பின்னணி இசையில்லாமலேயே, நிஜப் பாடலை காதுகளில் இனிமையாய் தவழவிட்ட இளைஞரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நான் நேரில் காண விரும்பி,இயலாமல் போனது இருவரை, ஒன்று எனது தமிழ்
டீச்சர் கீதா அக்கா, இரண்டு நம்ம சீனா ஐயா.சீனாவும், திருமதி சீனாவும் முன்னமே அலைபேசியிலேயே சொல்லிட்டாங்க,வர இயலவில்லைன்னு.

கடைசி வரை வருவதாகவே சொல்லிய டீச்சரே கிளாஸ் கட் அடிச்சுட்டாங்க. வந்திருந்தா, ஒருவேளை என்னை அங்கேயே இம்போசிஷன்ல்லாம் எழுத சொல்லியிருப்பாங்க:P

சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்து,நண்பர்களிடம் விடைப் பெற்ற போது, ஏதோ
ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு உணர்வுதான் தோன்றியது.அனைவரும்
ஒரு குடும்ப அங்கத்தினராகவே தங்களுக்குள் பழகியது நெகிழ வைத்தது.

எந்த சமூகம் கருத்துப்பரிமாற்றங்களில் சிறந்து விளங்குகிறதோ? அந்த சமுகம்செழித்து வளரும் என்பது நிதர்சனம்.இத்தகைய குழுமங்கள் இணைய தமிழை வளர்பதுமட்டுமன்றி,தன்னையறியாமலேயே அறிவுப் பகிர்தலின் அடுத்த பரிமாணத்திற்க்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

இரவு புதுவை வந்து சேர்ந்த போது,இரவு 2-30 மணி.இந்த நேரத்தில் புதுவை பஸ்
நிலையமே இதுவரை கண்டிராத விதம் வித்தியாசமாய் தோன்றியது,இரவிலும்
சுறுசுறுப்பாய் கடைகள்,வெளியூர் பயணிகள்.

12 மணிநேர தொடரியக்கத்தின் காரணமாக தோன்றிய அசதியை விஞ்சி,ஒரு
மனநிறைவு.சந்திப்பிற்க்கு அழைப்பு விடுத்த மஞ்சூர் அண்ணாவுக்கு நன்றி
சொல்ல வேண்டும்.இனிய அனுபவத்தை அளித்த குழுமநட்புக்களுக்கும்தான்.

.................


அப்பாடா, நம்ம மக்கள்சை ரொம்ப நாள் கொடுமைப்படுத்தாம விட்டதுக்கும்,இன்னும் ரொம்ப நாள் சுதந்திரமா விடப்போவதற்க்கும் சேர்த்து இந்த 'முழு நீள' பதிவிலேயே மொத்தமா படுத்திட்டோம்ல்ல,

என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்