Saturday, October 20, 2007

பதிவிலேயே பின்னூட்டம் போடுவோர் சங்கம்.

                    

                      இப்பத்தேன் தெரிஞ்சிது, நாமெல்லாம் பதிவ படிச்சி தான ..பின்னூட்டம் போடுவோம். சில பேரு திரைவிமர்சனம் பாத்துட்டு, படம் பாக்கர கணக்கா,பின்னூட்டத்த ,முன்னூட்டமா படிச்சிட்டுதான் பதிவுக்கு வாராங்கலாமில்ல...

                      ஏதோ technical பிராபலத்தால என்னோட பதிவோட பின்னூட்டங்கள் தமிழ்க்மணத்துல சேர மாட்டேங்குது.அதனால " மறுமொழியப் பட்ட " பகுதிலயும் பதிவு வரல. நானும் சரி. போனாப் போவுது..பொழச்சி போவட்டும் ,நம்ம மக்கள்ஸ் -ன்னு விட்டுட்டேன்.

                      இதோ அந்த முன்னூட்ட பிரியர்களுக்காகவும் , நான் ரசித்த சந்த்ர்ப்பங்களை நிரந்தரமா பதிவுல இருந்து நினைவு படுத்திக்கவும் மறுபடியும் ஒரு பின்னூட்ட பதிவு.

மத்தவங்க வீட்டுல ,சமிபத்துல ரசித்தது..




"Manaosai" சந்திரவதனா...அக்காவின் " காதலினால் அல்ல"

இது கதையோ,கவிதையோ அல்ல, அவரோட உண்மை உணர்வுகள் ங்கரதுதான் ஹைலைட்.

                        என்னிய ரொம்ப  ஃபீல் பண்ண வச்சிட்டிங்கல்ல...
கொஞ்சம் தவறினாலும் தப்பர்த்தம் தரக்கூடிய ,ஒரு விஷயத்தை மிக ஜாக்கிரதையா..ஆனா..வீரியம் குறையாம தந்துருக்கிங்க... அருமை.

// என்னை நீ நினைத்ததையும், என்னை நீ காதலித்ததையும் உணராமலேயே நான் வேறொருவனைக்: காதலித்து, கல்யாணம் செய்து… என்பாட்டில் வாழ்ந்திருக்கிறேனே! சின்ன உணர்த்தல்கள் கூட என்னிடம் இல்லாமற் போனது எப்படி?//

                         பல சமயங்களுல நானும்,மத்தவங்கள புரிஞ்சிக்காம போயிட்டோமின்னு ,காலங்கடந்து உணர்ந்ததுண்டு.


// என் மேல் பிரியமான யாருக்காவது //

                         தான் காதலிக்காத ,ஒருவன் தன்னை காதலித்ததை அறியும் போது "சே.. அவன நல்லவனு தான நெனச்சேன்." ன்னு, தன்னை(போய்) காதலித்ததன் மூலம் ,மன்னிக்க முடியாத கடுங் குற்றம் செஞ்ச போல கமன்ட் அடிச்சி , அந்த காதலுக்கு உண்மையிலேயே தான் அறுகதையில்லைன்னு நிருபிக்கும் பெண்கள் மத்தியில,காதல ஏத்துக்க முடியாத சூழ் நிலையில்யும் ,ஆனா அந்த அன்பை ஏத்துக்க மனசிருப்பது great.

                          அதானே?.. உன்மையான அன்பு செலுத்த ஆளில்லாத இந்த உலகத்துல,நம்மை நேசிக்கும் ஒருத்தரோட வாழ முடியாட்டாலும் ," அன்பை மாத்திரம் " பகிர்ந்துகிரது தப்பில்லைன்னு தோனுது.நம்ம நேசிக்கும் குழந்தைக் கிட்ட நாம அன்பு செலுத்துறதில்லயா?,.

                          காதலிக்கத் தெரிந்த அவர்,அவரோட துனைவியையும் காதலிச்சி நிறை வாழ்வு வாழ்ந்திருப்பார்ங்கரது நிச்சயம்.""கனவாகிப்போன காதல்"வெயில்ல இருந்தவனுக்கு,அருகாமை நிழலின் அருமை பற்றி நிச்சயம் புரியும்".


// தனிமைப் பொழுதுகளில் என் நினைவுகளைச் சீண்டுவதை நான் உணர்கிறேன். அதற்காக எனக்கு உன்மேல் காதல் இருக்கிறது என்று மட்டும் நினைத்து விடாதே. இப்போதும் சொல்கிறேன், சத்தியமாக உன் மேல் எனக்குக் காதல் இல்லை.//

//அதுக்காக காதல், கத்தரிக்காய் என்று விபரீதமாய் ஏதும் கற்பிதம் பண்ணி விடாதே. நான் இன்னொருத்தன் மனைவி. நீ இன்னொருத்தியின் கணவன். சத்தியமாய் உன் மேல் எனக்குக் காதலில்லை. ஆனாலும் என்னைச் சலனப் படுத்துகிறாய். சற்று சஞ்சலப் படுத்துகிறாய்//

                       ரொம்ப தெளிவா இருக்கிங்க..உங்க மகன்/மகள் படித்தாலும் குறை சொல்ல முடியாத வெளிப்படை.

                        உங்க பக்குவம் என்னிய வியக்க வைக்குது .நானாயிருந்தாக்கா... "என்னையும் அறியாமல் எனக்குள் ஏதோ ஒன்று"ன்னு குழம்பிப் போயிருப்பேன்.வாழ்த்துக்கள் [வாழ்த்துரதுக்கு வயசெதுக்கு?.]


// ஒப்பாரி வைத்து அழுகின்ற அளவுக்கு நான் இல்லை. ஆனாலும் அவ்வப்போதான தேற்றுவார் இன்றிய தனிமைகளில் ஆற்றாமையில் கொட்டி விடுகிறது கண்ணீர்.//

                        உணர்ச்சிகள் , நமது நியுரான்களில் ஹார்மோன்களின் நடனம் ங்கரத புரிஞ்சிகிட்டு யதர்த்தத்துல ஆறுதலடையருத தவர வேற வழியில்ல...


அன்புடன் ரசிகன்...

..........................................................................................................................................................................

மொத்தத்துல..51 வயசு ஆனாலும்,மதிவதனா அக்கா இப்பவும் மனதளவில் இன்னொரு " அழகி " தான்.

[ அழகி படத்த பாத்த போதும் ,இப்படித்தான் உணர்ந்தேன்."பிரசவிக்காத காதலை"இன்னும் மனதில் சுமந்துக் கொண்டு திரியும் ஆண்கள் நிஜத்தில் பலர் உண்டு.  

             அவிங்களுக்கு ஒரு அட்வைஸ் , எல்லாரும் குழந்தை நல்லா பிறக்கும்ங்கர நம்பிக்கையில தான் சுமக்குறாங்க..."பிரசவ வலி "க்கு பயப்பட்டீங்கனாக்கா.. ஒரு வேளை ,அந்த "காதல் " ங்குற "குழந்தை"யை நீங்க எப்பவுமே அடையமுடியாம போகலாம்.மொதல்ல..உங்க மேல நம்பிக்கை வையுங்க..உங்க காதல் மேல நம்பிக்கை  வையுங்க...சக்ஸஸ் ஆன பின்னாடி மறக்காம எனக்கு பார்ட்டி வையுங்க..என்ன o.k யா?..].

முன்னூட்டம் படிச்சாச்சா..இப்ப கொஞ்சம் அங்க போயி முழு பதிவையும் பாத்துட்டு,இந்த பின்னூட்டத்த மறுபடியும் படிச்சி பாருங்க...ரெண்டு தடவைக்கும் உங்க மனசுல ஏற்படர வித்தியாசம் நல்லாவே புரியும். 


.

24 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

said...

மாமா நீங்க பொலம்பரத பாத்தா.... சரி சரி விடுங்க, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. :P

said...

ஹலோ நிலா செல்லம்.
நீ நெனக்கிற மாதிரி எதுவும் இல்லடா கண்ணா...நெசமாத்தேன்..
மனசுல தோனறுத சொன்னேன்.அம்புட்டுதேன்..
இந்த மாமா வீட்டுக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம்.

said...

மனதை நெகிழச் செய்த ஒரு தலைக் காதல் - ஆண் பெண்ணிடம் சொல்லாமலேயே காதலித்து - பெண்ணுக்குத் திருமணம் ஆகி பேரன் பேத்தி எடுத்த பிறகு தன் காதலை வெளிப்படித்தி - கடைசி நேரத்தில் ........... ம்ம்ம்ம் - என்ன சொல்வது ??

said...

:) ஓளி வட்டம் ரொம்ப பெருசா தெரியுதுங்கன்னா!!

said...

வாங்க சீனா சார்.நானும் இப்புடித்தேன் ஃபீல் பண்ணினேன்,மனசுல என்னவோ பண்ணுதில்ல...(என்ன செய்யிரது?நமக்குதா இளகிய மனசுன்னு எற்கனவே சொல்லியாச்சே.

said...

நன்றி குசும்பன்,நல்வரவு..
இது ஆணி வக்கிற மாதிரியா?,ஆணி புடுங்கர மாதிரியான்னு தெர்ல..(புரியல)..ஒரு வேளை பூத(?)கண்ணாடி வச்சி பாத்திங்களோ?..ஆனாலும் நீங்க ரொம்ப குசும்பு தான்..ஹாஹா..
அடிக்கடி வாங்களேன்.

said...

ரசிகா! டெக்கினிக்க புருஞ்சுகிட்டப்பா, நல்லா மேல மேல வாப்பா, பல பின்னூட்டம் வாங்கி!:-))

said...

ரொம்பவே இளகுதே மனசு, ம்ம்ம்ம்? அங்கேயும் போய்ப் படிச்சுட்டு வரேன். ஒளி வட்டம் ஓவராயிருக்கோ?

said...

அட நம்ம அபி அப்பாவா.. வாங்க வாங்க..(இதனாலதேன் ஊருல அவ்வளவு மழையா?..) என்னால நம்பமுடியாம.. பின்னூட்டத்த நாலுதடவ படிச்சி, ஜ.பி அட்ரஸ் எல்லாம் பாத்துதா நம்பனேன்.(இப்பத்தேன் அனானிகள் போலியா நவினமாயிட்டாய்ங்கல்ல...)
மொத பதிவிலேயே உங்கள ரொம்ப எதிர்பார்த்தேனுங்க...இப்ப நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷமுங்க..
உங்க அன்பும் ஆதரவும் என்னிக்கும் தொடரணுமின்னு கேட்டுக்கிறேன்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

said...

வாங்க டீச்சர்.., என்ன இன்னும் வரலியேன்னு ரொம்ப எதிர்பாத்தேன்.ஆமா..இன்னிக்கு நம்ம வீட்டுல என்ன சமையல்?.சாரி சாரி அத நம்மோட சாம்பசிவம் மாமாகிட்டதா கேக்கனுமில்ல.. அவர்கிட்டயே கேட்டுக்கிரேன்.

// ரொம்பவே இளகுதே மனசு, ம்ம்ம்ம்? //
டீச்சர் நீங்களுமா?..அப்புடி எதாவது இருந்தாக்கா.. உங்ககிட்ட மறைப்பேனா?..

அப்பறம்..நம்ம " வேதா " மேல உங்க அனுமதியோட ஒரு கேஸ் போடப்போறேன் (நீங்களும் அங்க வந்திருந்திங்க இல்ல..).காரணத்த அங்க ரெண்டாவது பின்னூட்டத்துலயே இப்பத்தான் போட்டிருக்கேன். இன்னும் வரல..waiting for your அனுமதிஸ்..

said...

என்னமா கண்ணு? காதல், கத்ரிகாய்னு ரெம்ப உருகற. ஒளிவட்டம் எல்லாம் வேற தெரியுது.
சரி, பொறுத்திருந்து பாக்கறேன். :))

நாங்களும் முன்னாடியே வந்து ஓசில படிச்சுட்டு போயிட்டோம். இப்ப தான் ஹிஹி, டிக்கட் எடுக்கறோம். :p

said...

அன்புள்ள ரசிகா.
/ ' எல்லாரும் குழந்தை நல்லா பிறக்கும்ங்கர நம்பிக்கையில தான் சுமக்குறாங்க..."பிரசவ வலி "க்கு பயப்பட்டீங்கனாக்கா.. ஒரு வேளை ,அந்த "காதல் " ங்குற "குழந்தை"யை நீங்க எப்பவுமே அடையமுடியாம போகலாம். '--/
காதலை மனதில் சுமத்தல்-உயிரை தன்னுள் சுமத்தல்,தோல்வி பயம்-பிரசவ வேதனை, காதல்-குழந்தை. ம்ம்ம் .. கலக்கிட்டிங்க.எப்படித்தான் உங்களுக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறதோ?.very nice.good.
எல்லா பெண்களும் அப்படி இல்லைங்க.தவிர்க்க முடியாத காரணத்தால் காதலை பிரிந்தாலும்.காதலனை மனதில சுமந்து கொண்டு வாழுகின்றவர்களும் உண்டு.

said...

அன்புள்ள ரசிகா.
/'நமது நியுரான்களில் ஹார்மோன்களின் நடனம் '/-அதிக science ஆர்வம் உண்டோ?.கவிதை போல நல்லாயிருக்கு.இனி கவிதையும் எழுதுங்க.
/' உங்க மேல நம்பிக்கை வையுங்க..உங்க காதல் மேல நம்பிக்கை வையுங்க...சக்ஸஸ் ஆன பின்னாடி மறக்காம எனக்கு பார்ட்டி வையுங்க..என்ன o.k யா?'/
எனக்கும் சேத்து பார்ட்டி வைக்க சொல்லுங்க.

Anonymous said...

///மொதல்ல..உங்க மேல நம்பிக்கை வையுங்க..உங்க காதல் மேல நம்பிக்கை வையுங்க..///
அறிவுரைக்கு மிக்க நன்றி. என்னுடைய successக்கு அப்புறம் உங்களுக்கு நிச்சயமா டிரீட் உண்டு.

said...

//
வாங்க.. இங்க நீங்க என்னிய திட்டலாம்,பாராட்டலாம்,கருத்தை சொல்லலாம்.ஆணி வைக்கலாம்,ஆணி புடுங்கலாம்.[அதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்களோ?],சண்டை கூட போடலாம்.அனானிகளுக்கும் ஆதரவுண்டு[உண்மையான பின்னூட்டம் கிடைச்சா சரி].ஆனா..தரக் குறைவான வார்த்தைகளுக்கு அனுமதியில்லை.அவை நீக்கப்படும் இன்னு சொல்லிக்கிறேன்.அட உங்க கருத்த கேக்க வந்துட்டு,நானே பேசறேன் . நீங்க சொல்லுங்க..
//
பின்னூட்ட பொட்டிக்கு மேல இவ்ளோ பெரிய Description இதெல்லாம் ரொம்பவே ஓவருங்ணாஆஆஆஆஆ

சொல்லிட்டேன்

said...

வாங்க வேதா வாங்க.. நீங்க நல்லாத்தா ரசிக்கிறிங்க.. பதிவ கட் பேஸ்ட் பண்ணி அடில கடிசி வரி கருத்த எழுதிட்டா பின்னூட்டம் ரெடி..பின்ன ஏன் ரெம்ப பேரு இத செய்யமாட்டேங்கராங்க.. வேதாவ பாத்து கத்துகுங்க..மக்கள்ஸ்..

said...

// இப்ப போய் பதிவை படிச்சுட்டு வரேன் ஹிஹி //
வருகைக்கு நன்றிங்க வேதா..

said...

// ஆமா உண்மையிலேயே க்ரேட் தான்.//
கருத்துக்கு நன்றிங்க வேதா..

said...

//சரியா சொன்னீங்க//
பின்னூட்டத்துக்கு நன்றிங்க வேதா..

said...

// இந்த கமெண்ட்ஸ் போதுமா? அப்புறமா படிச்சுட்டு கமெண்ட் போடலன்னு கம்பளைன் பண்ணக்கூடாது //

இந்த பதில் போதுமில்ல..ஏன்னா.. ஜஞ்சு பின்னூட்டத்துக்கு ஒரு பதில்தானான்னு நீங்க கம்பளைன் பண்ணக்கூடாதில்ல... அதனாலதா.. ஜஞ்சு பதில் நன்றிகள்.எப்பிடி..நாங்க உஷாருல்ல..

said...

வாங்க அம்பி...இப்பக்கூட பிளாட்பார டிக்கட் வெல குறைவுன்னு அத எடுத்துகிட்டு ,டிரென்னுல ஏறரிங்கலே...
சரி சரி ..நம்ம கீதா அக்கா,உங்கள பாத்தாக்கா.. மறக்காம "நகாசு" பட்டுப்பொடவையும்,கல்யாணத்துக்கு எடுத்து வச்ச ரிவெர்சிபிள் புடவையும் மறக்காமல் எடுத்துட்டு வந்துடுங்க -ன்னு சொல்லசொன்னாங்க....

said...

// எனக்கும் சேத்து பார்ட்டி வைக்க சொல்லுங்க.//

நன்றி பிரித்தி.. உங்களுக்கும் சேத்தே அனானி அன்பர் கிட்ட விருந்து வாங்கிடுவோம்.

said...

நன்றி அனானி நண்பரே,தைரியமா இருங்க.. உங்க வெற்றிக்கு வாழ்த்துக்கள்.அப்பறம் நம்ம பிரித்தி க்கும் பார்ட்டில ஒரு சீட் சொல்லிடுங்க...

said...

// பின்னூட்ட பொட்டிக்கு மேல இவ்ளோ பெரிய Description இதெல்லாம் ரொம்பவே ஓவருங்ணாஆஆஆஆஆ//
மன்சிடுங்க சிவா.....வேள மெனக்கெட்டு அதப் படிச்சதுக்கு நன்றி.பல பேரு அத கவனிக்கிறதே இல்லயாம்..ஹிஹி..
வந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி...