Monday, September 5, 2011

10 நிமிடத்தில் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டுமா?


என்னை நெகிழ வைத்த விடியோ.நண்பர்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி.உங்கள் ஒலிப்பெருக்கிகளை இணைத்துக்கொள்ளுங்கள்( Please turn on your speakers during this video play).இந்த மனிதரின் உற்சாக தத்துவ முத்துக்களை சிதறாமல் பெற...





தனது குறைகளைக் கண்காட்சி பொருளாக்கி நமது பரிதாப உணர்ச்சிகளை பயன்படுத்திக்கொள்ள முயலும் சில மாற்றுத்திறனாளிகளின் நடுவே ,நம்மை வெட்கம் கொள்ளச்செய்யும் அற்புதமான தன்னம்பிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி சிலர்,மற்றவர்களின் உதவியில்லாமல் தன்னிச்சையாக தனது தேவையை பூர்த்திச் செய்யும் ஆற்றலை மிகுந்த மனோதிடத்தோடு உருவாக்கி தன் வாழ்க்கை என்ற அளவில் வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள்.அவர்களை பாராட்ட நமது மனம் விரும்பும்.

ஆனால் இந்த வீடியோவில் உள்ள சிறப்புத்திறனாளி (அப்படித்தான் அழைக்க தோன்றுகிறது).தன் வாழ்வை மட்டுமல்லாது,மாணவர்கள்,வாழ்வில் தோல்வியில் துவள்பவர்கள் என எல்லாருக்கும் ஊன்றுகோளாக தன்னம்பிக்கையை விதைக்கிறார்.

இவரின் தன்னம்பிக்கை நிறைந்த தத்துவங்களை கேற்க்கும் போது,உடலியல் ரீதியாக எல்லாம் நல்லவண்ணம் உள்ள நாம் இந்த வாழ்க்கையை ரசிக்கத் தவறுவது ஏன்? சோதனைகளை சந்திக்க அஞ்சுவது ஏன் என சிந்திக்கத் தூண்டுகிறது.

உடலியல் ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டுள்ள அவர் வாழ்க்கையை இந்த அளவு ஆனந்தமாக ரசிப்பதை பார்க்கும்போது,நாம் துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுப்பதும்,சிலர் தற்கொலை என முடிவெடுப்பதும் எவ்வளவு அபத்தம்?..

யார் உண்மையிலேயே மாற்றுத்திறனாளி? அவரா ? இல்லை நாமா? நீங்களே கூறுங்கள்?


அன்புடன்
ஸ்ரீதர்