Thursday, August 18, 2011

நாங்க இந்தியர்கள்.ரொம்ப... நல்லவிங்க...


நாங்க இந்தியர்கள்.ரொம்ப... நல்லவிங்க...

பத்திரிக்கைச் செய்தி 1: ஒரு மாதத்திற்க்கு முன்னால்,இந்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்புச் சுவரை சீன ராணுவத்தினர் அத்துமீறி சேதப்படுத்திய விபரம் வெளிவந்துள்ளது.

மேன்மை தாங்கிய (?) இந்திய அரசு : என்னது? என்ன தைரியம்? யார் செய்தது?.. ஓ.. சாரி சீனா வா? வழக்கம் போல நோ கமெண்ட்ஸ்..

தினமலர் செய்தி 2: இந்தியாவால் ஆபத்தில்லை என்பதை உணர்ந்து பாக்கிஸ்தான் இந்திய எல்லைப்பகுதியில் உள்ள தனது ராணுவத்தில் பகுதியினரை ஆப்கான் எல்லைக்கு மாற்றியது.இது இந்திய,பாக்கிஸ்தான் உறவை மேலும் வலுப்படுத்தும்.

அடேங்கப்பா...

......................


பாக்கிஸ்தான் செய்தது சரியே.

தொலைநோக்குப் பார்வை இல்லாத இந்திய அரசால் பாக்கிஸ்தானுக்கு ஆபத்து இல்லை. ஆனால் பாக்கிஸ்தானால்தான் இந்தியாவுக்கு ஆபத்து.தீவிரவாதிகள் போர்வையில் பயிற்சி பெற்ற சில ராணுவத்தினரை அனுப்பி பார்லிமெண்டில் குண்டு வைத்தாலும்,எல்லை கோட்டை தாண்டி தாக்குதல் தொடுக்கக் கூட திரணியற்ற,முதுகெலும்பு அற்ற நாடு.

இவர்களுக்கு ஊழல் வழக்குகளில் இருந்து நழுவுவதிலும்,அன்னா அசாரே போன்றோரின் போராட்டங்களை நசுக்குவதிலுமே கவனம் செலுத்த நேரம் சரியாக இருக்கும் பாக்கிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவோ,எல்லைமீறும் சீனாவை கண்டித்து விமர்சிக்கவோ இயலும் என எதிர்பார்ப்பது சிரமம்.

சண்டை மிக மூர்க்கமாக வந்தால் எங்கள் அரசியல்வாதிகள் ராணுவ ஆயுத ஊழலில் வெளிநாடுகளில் முதலீடு செய்த பணத்துடன் அந்தந்த நாடுகளில் செட்டில் ஆகிவிடுவர்.இப்போதே பலர் இரட்டை விசா வைத்திருப்பதாக கேள்வி.

‘சுண்டெலி இலங்கையையே கட்டுப்படுத்த முடியாத இந்தியாவைப் பற்றி கவலைப்படுவதை விட்டு இனி பாக்கிஸ்தான் தனது எல்லைக் காவல் படையை முழுமையாக இந்திய எல்லையிலிருந்து நீக்கிவிடலாம்.

யார் மதித்தாலும் இல்லாவிடிலும் நாங்கள் எல்லைக்கோட்டை மதிப்பவர்கள்.(இன்னிக்கு என்ன கிழமை? வெள்ளிக்கிழமை நாங்க சண்டை போடறதில்லை). என்ன?

நீங்களோ, சீனாவோ இப்போதுள்ள எங்கள் எல்லைப் பகுதியில் நுழைந்து சில இடங்களை ஆக்கிரமித்து விட்டால், ‘இது அப்படி ஒன்றும் கவலைப்படும் அளவு பெரிய விசயமில்லை.வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என எங்கள் ராணுவ தளபதி அறிக்கை விடுவார். எங்கள் எல்லைக்கோட்டை மாற்றிக்கொள்வோம். ஆக்கிரமித்த பகுதிகள் உங்களுடையதாகிவிடும்.அங்கே நீங்கள் ராணுவ தளமோ, தீவிரவாத பயிற்சி முகாமோ கூட நடத்திக்கொள்ளலாம்.

இதையெல்லாம் தட்டிக்கேற்காமல், ஈனக்குரலில் சர்வதேச சமுகத்திடம் முனங்குவதால் நாங்கள் கோழைகள்,ஏமாளிகள், சுயநலவாதிகள், முட்டாள்கள்.....இன்னும் உங்களுக்கு பிடித்த(?) கெட்ட வார்த்தைகள்..) என (என்ற உண்மையை) நினைக்க வேண்டாம்.

ஏன்னென்றால் நாங்கள் இந்தியர்கள், என்றும் என்றென்றும் எல்லைக்கோட்டை மிகவும் மதிப்பவர்கள்.


செய்தி விமர்சனம்

ஒரு இந்திய பெருமிதத்துடன்

ரசிகன்.

3 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:

ரவிச்சந்திரபிரபு said...

2016 la chinakaran india mala gundu pooda poran parunga

said...

அடடா... ஒரு நச்சுங்கோ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான்.

said...

இன்னும் எத்தனையோ..