விஞ்ஞான ஆர்வம் காரணமா,இப்போதைய லேட்டஸ்ட் டிரண்டு என்னன்னு வழக்கம் போல தேடிப்பார்த்த்துல,நாம Snooker விளையாட்டுகளுல பந்துகளை மோதவிட்டு வேடிக்கை பாக்குற மாதிரி சில பல நுண் துகள்களை செயற்கையா அதிவேகத்துல மோத விட்டு அந்த மோதலின் விளைவா உருவாகுற பொருளை(கடவுள் துகள்???) ஆராய போறாய்ங்களாம்.
அணுவின் அடிப்படி துகள்களான இவை இயற்க்கையா அதற்கான சூழலில் மோதிக் கொண்ட்தாலே தான் நாம் இப்போ பார்க்குற இந்த உலகத்தின் பல தனிமங்களுகளும் பல்வேறு குணம் கொண்ட வேதி பொருள்களும் உண்டாயின என்கிறார்கள்.நமது உலகின் அனைத்துப் பொருள்களும் இவற்றின் கலவையே.
ஏற்கனவே ஒருமுறை மோத விட்டு சோதனை நட்த்தியிருக்காங்க.. அதில் உண்டான புதிய அணுக்களை பற்றி ஆராய்ச்சி நடக்குதுன்னு தெரிய வருது.இப்போ அதைவிட பல மடங்கு பெரிதா மிகப் பெரிய பொருட்செலவில் வேற வேற வகை அணுத் துகள்களை மோதவிட்டு கொண்டாடப் போராய்ங்களாம்.
சரி இந்த ‘பார்க்கடல் கடைதலில் அமிர்தம் கெடைச்சா ஓகே. ஆலகாலம் கிடைச்சா? .
இப்படித்தேன் ரொம்ப காலத்துக்கு முன்னாடி,அணுவுக்குள்லயும் அபரிமிதமான சக்தி ஒளிஞ்சுக்கிட்டிருக்கு(?) அந்த கடவுள் சக்தியை வெளியே கொண்டுவரப்போறோம்ன்னு ஆராய்ச்சிலாம் செஞ்சாங்க.இப்போ நேத்துவரை குழந்தைகளுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்து விளையாட்டு காட்டிக்கிட்டிருந்த நாடெல்லாம் கூட அணுகுண்டு வாங்கி வைச்சிடுதுங்க.
அணுகுண்டால தான் இரண்டாம் உலகப் போர் உடனே முடிவுக்கு வந்தது, பலர் மரணமடையாம காப்பாற்றப் பட்டார்கள்(???)ன்னு அமெரிக்கா ,அன்னிக்கு ஜப்பான்காரங்கிட்டயும் அனுகுண்டுகள் இருந்திருந்தா ரெண்டு நாடுகளுமே போட்டி போட்டுக்கிட்டு ஒன்னை ஒன்னு முழுமையா அழிஞ்சியிருக்கும்.இன்னிக்கு ஒரு போர் வந்தா அடி வாங்கறதுக்கு முன்னாடி அடிக்கறதுதான் சிறந்த தற்க்காப்பு ந்னு பயத்தால் எல்லாநாடுகளும் தனது எதிரி நாடுகளை முழுமையா அழிக்க முயற்ச்சிஒ செய்யும்.
இதுக்கு முன்னாடி எத்தனையோ போர்கள் வந்திருக்கின்றன. எத்தனையோ நாடுகள் தோற்றும் வென்றும் வந்திருக்கின்றன.பல கோடி மக்கள் மடிந்தும்,மீண்டும் வந்திருக்காங்க. இனம் வாழ்ந்துக்கிட்டுதான் வருது.காலம் காயங்களுக்கு மருந்திட்டிருக்கிறது. ஆனா இந்த நவின காலத்துல ஒரு அணுப்போர் ஏற்பட்டா உலகம் இனி பிழைக்காது.இப்படி பலகோடி ஆண்டுக்களுக்களுக்கு புல்பூண்டு கூட முளைக்காம மனித இனமே அற்றுப் போகச்செய்யும் விதமா,பூமியை பல முறை அழிக்க்க் கூடிய அளவு அணுகுண்டுகள் உண்டாக்கி வைச்சிருக்கற,மீளவே முடியாத புதைகுழில இப்போ இருக்கோம்.
நமக்கு விருப்பமோ இல்லையோ யார் சண்டை போட்டுக்கிட்டாலும் நாமும் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.கார்கில் போர் சமயத்துல பாக்கிஸ்தானின் அணு ஏவுகணைகள் இந்தியாவை நோக்கி ஏவ தயாரா இருந்தனவென அந்நாட்டு முன்னாள் ராணுவ அதிகாரி இப்போ அதிர்ச்சியான ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்.அப்படி ஏவப்பட்டால் அதைத் தடுக்கவோ,மீள் மேலாண்மை திறனோ இன்னும் இந்தியாவுக்கு சாத்தியப்படவில்லைங்கரது ஒரு நிதர்சனம்.
இன்னிக்கு இந்த கடவுள் துகள் சோதனைக்கு முன்னேறிய நாடுகளும் மில்லியன்ல கொட்டி கொடுக்கறதும் அதுல ஏதாவது புது ஆயுத மூலக்கரு உருவாகாதாங்கற ஆர்வம் தான்.எது கெடைச்சாலும் ஆக்கத்தைவிட அழிவு சக்க்திக்கே அவற்றை அதிகம் பயன்படுத்த விழைவார்கள்ன்னு உசிதம்.இதுவரை இப்படிப்பட்ட ஏடாகூடங்கள் சின்ன லெவல்ல இருந்துச்சு சின்ன பாதிப்புக்கள் (அணுகுண்டு தவிர)
கருந்துளையை உண்டாக்கப் போறோம்,எதிர் பொருளை(anti matter) உண்டாக்கப் போறோம்,நூறு பேரோட அறிவோட ஒருதனை குலோனிங்குல உண்டாக்கப்போறோம்ன்னு ரூம் போட்டு யோசிச்சு புதுசு புதுசா பல குருப்புக்கள் கெளம்பியிருக்கின்றன.
இது போன்ற ஆராய்ச்சிகளில் வேற்றுகிரகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடிய சக்திவாய்ந்த எரிபொருளை கண்டு பிடிச்சா நானும்தான் சந்தோஷம்ப்படுவேன் (Anti-matter-research).ஆனா அதே பொருளால அதி பயங்கர ஆயுதங்களை செய்ய முயலும் புத்திசாலிகளின் முளையை நினைச்சா தான்....
இதையெல்லாம் யோசிச்சுப்பார்த்தா,விஞ்ஞானம்ங்கரது ஏற்கனவே இருக்குறவற்றை பற்றி அறிவதும் அதை சிறப்பா பயன்படுத்த உதவினாலும் போதுமானது பாதுக்காப்பானது,
அதை விட்டுட்டு கடவுளா மாறி புதுசு புதுசா உண்டாக்கப் போறோங்கறது சரியானதா தோனலை.இயற்க்கையா உருவான சூழல் , நமது வாழ்வியலுக்கு பொருத்தமா இருப்பதல தான் நாம நாமா இருக்கோம்.
பேசாம அணுக்கள் அதுவாவே இருந்துட்டு போகட்டும், அட்லிஸ்ட் மனுஷன் ஒண்டரத்துக்கு வேற ஏதாவது கிரகம் கிடைக்கற வரை,நாம எதுவும் புதுசா ஆணிய புடுங்க வேண்டாம்ன்னு தான் சொல்லத் தோணுது. மாற்றுக் கருத்துக்கள் இருக்கான்னு தெரியலை.இருந்தா விஷய்ம் தெரிஞ்சவங்க விளக்குங்க.
Monday, August 16, 2010
கடவுள் துகள் - கரு’மந்திரமா’? கருமாந்திரமா?
Subscribe to:
Post Comments (Atom)
15 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
நல்ல பகிர்வு
//பேசாம அணுக்கள் அதுவாவே இருந்துட்டு போகட்டும், அட்லிஸ்ட் மனுஷன் ஒண்டரத்துக்கு வேற ஏதாவது கிரகம் கிடைக்கற வரை,நாம எதுவும் புதுசா ஆணிய புடுங்க வேண்டாம்ன்னு தான் சொல்லத் தோணுது.// சொன்ன யார் கேட்கிறது.
// sakthi said...
நல்ல பகிர்வு//
நன்றிகள் ஷக்தி:)
//சொன்ன யார் கேட்கிறது.//
உண்மைதான்.சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர்களும் தொலைநோக்கு பார்வையோடு இவற்றை அணுகுவதில்லை.கருத்துக்கு மிக்க நன்றிகள்.
Good post..... பல கோணங்களில் யோசித்து, உங்கள் கருத்துக்களை அருமையாக சொல்லி இருக்கீங்க....
Followers widget இணைக்கவில்லையா?
இத தான் சும்மா இருக்குற சங்க ஊதி கெடுப்பானாம் ஆண்டி அப்படின்னு சொல்லுவாங்களோ ?? ;)
இத தான் சும்மா இருக்குற சங்க ஊதி கெடுப்பானாம் ஆண்டி அப்படின்னு சொல்லுவாங்களோ ?? ;)
// Chitra said...
Good post..... பல கோணங்களில் யோசித்து, உங்கள் கருத்துக்களை அருமையாக சொல்லி இருக்கீங்க....
Followers widget இணைக்கவில்லையா?//
வாங்க சித்ரா,வருகைக்கு நன்றிகள்:)
இனிதான் என்னன்னு பார்த்து Followers widget இணைக்கனுமுங்க.
//அனுபவி ராஜா said...
இத தான் சும்மா இருக்குற சங்க ஊதி கெடுப்பானாம் ஆண்டி அப்படின்னு சொல்லுவாங்களோ ??//
நல்வருகைகள் ராஜா,ஒன்னுக்கு ரெண்டு தடவையா உங்க கருத்தை அடிச்சு(?) சொல்லியிருக்கிங்களே:))
கட்டுரைக்கேற்ற மிகப் பொருத்தமான பழமொழிய சும்மா ’நச்’ன்னு சொல்லிட்டிங்க.நன்றிகள்.
தலைப்பு அருமை......அணுவிற்கணுவாய்......அப்பாலுக்கப்பாலாய் நிற்கும் கடவுளை இணைத்திருக்கிறீர்கள். வெற்றி உண்டாகட்டும் நண்பரே.........
Ithellam vendamnu than enakum thonuthu. Ethuku por, ethuku anu ayutham, sathyama therila!
I wish all this enemity and terrorism just vanishes away into thin space.
Man should be content with what he has, we can focus our research on many other things that can prove to make life easier and help everyone on this planet.
Thought provoking!
Cheers
Deeksh
அருமையான பதிவு எதிர்காலத்திற்கு இப்படி விஞ்ஞானப் பதிவுகள் தான் தேவை... வாழ்த்தக்கள்.
தலையாட்டி பொம்மையெல்லாம் பிரதமரா வாய்ச்ச பின்பும் இப்படி நேர்மையா எழுதறீங்களே...உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்குண்ணா..ஆனா என்ன, ஆளானப்பட்ட UNஏ பேசாம வேடிக்கை பாக்கறப்ப, நாம் ஒன்னும் செய்ய முடியாதுங்கறதுதேன் உண்மை
வருகைக்கும் மேலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் ஃபிரண்ட்ஸ்.
நித்திலம்-சிப்பிக்குள் முத்து
Deekshanya
ம.தி.சுதா
அன்னு
வாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html
அறிவியல் முன்னேறினால் மட்டும் போதாது என்று சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
அருமையான பதிவு thanks rasigan
Post a Comment