வெட்டியா இருப்பவர்களை மாடு மேய்க்க போ என்பது கிராமத்து வழக்கம் என கேள்விப்பட்டிருக்கிறேன். உருப்படியா எதுவும் செய்ய இல்லைன்னா பிளாக் எழுத போ என்பது டவுன் வழக்கமாகிட்டதால கொஞ்சம் எதையாவது கிறுக்கி வைக்கலாம்ன்னு மறுபடியும் வந்திருக்கேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய வந்ததில்,இதுவரை இல்லாத மாற்றத்தை உணர முடிந்தது.
விலைவாசியைக் கண்டு வாயை பிளந்ததில், இன்னா,உள்ளே இருந்துட்டு வந்தியா? என்பது போல பார்த்தார்கள்,இனி இவ்வரிசையில் வெளிநாட்டில் இருந்துட்டு வந்தியா? என்பதையும் தயக்கமில்லாமல் சேர்த்துக்கொள்ளலாம்.
மற்ற நாடுகளில் கிடைக்கும் எல்லா பொருட்களும் தொழில்நுட்பங்களும் இங்கேயே கிடைக்கிறது. அதிக விலைகொடுத்து நாம் வாங்கி வந்த எலட்ரானிக் பொருட்கள்,’இன்னாப்பா இது? இதையா அங்கேயிருந்து தூக்கிக்கிட்டு வர்ரே,இது நம்ம பர்மா பஜார்லயே கிடைக்குதே’ என்பது போன்ற விமர்சனங்களில் சட்டென்று மதிப்பிழந்தன.
கொஞ்சம் தரம் வேறுபட்டாலும்,சீன தயாரிப்புக்களின் உபயத்தால் எல்லாரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர்.
இந்தகால பசங்க(?) மனநிலையிலும் நிறையவே மாற்றங்கள்.பணம் செலவழிப்பதில் தயக்கம் குறைந்திருக்கிறது.உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் எல்லா தரப்பினரிடையேயும் அதிகரித்திருக்கிறது.ஜோடிகள் உரிமையோடு கைக்கோர்த்து வலம் வருவதையும் பரவலாக காண முடிகிறது.இளம்பெண்களின் குழுக்கள் வெளிப்படையாக, வழியில் போகும் ஆண்களை கமெண்ட் அடித்து சிரிக்கும் இயல்பை அடைந்து விட்டதை காண முடிந்தது (’ஆதாம் டீசிங்’ என்ற வார்த்தை கூடிய விரைவில் டிஷ்னரியில் சேர்க்கப்பட்டுவிடும்ன்னு தோனுது).
வந்த சில நாட்களிலேயே நான்கைந்து முறை,பள்ளிச்சிறுவன் யாராவது பைக்கிலும்,பக்கத்திலேயே யாராவது ஒரு பள்ளிச்சிறுமி சைக்கிளிலும் பேசிக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். பசங்களால் பைக்கை எப்படி பெண்ணின் சைக்கிள் வேகத்தில் மிக மெதுவாக, அதுவும் பேசிக்(வழிந்துக்)கொண்டே ஓட்ட முடிகிறது என வியப்பு (ரொம்ப முக்கியம்).பின்னால் வருபவர்கள் டென்ஷனாகி ஹாரன் அடித்தால் அப்போதைக்கு மட்டுமே கொஞ்சம் வேகமெடுத்து மீண்டும் அப்பெண்ணுக்கு இணையாக வருவது என ஒரு சடுகுடு விளையாட்டுக்கவிதையே நடக்கிறது.
ஆனால் இதுவரை ஸ்க்கூட்டரில் பெண்ணும் சைக்கிளில் பையனும் மட்டும் காணவே முடிவதில்லை.ஏன் என புரிய வில்லை(?)
லஞ்சம் கொடுப்பது ஒரு வழக்கமான விஷயம் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதுன்னு தோனுது. விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தம்பியின் பைக்கை லைசென்ஸ் இல்லாமல் ஓட்டும் எனக்கு இம்முறை புது பைக் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தேன்.
எல்லோரும் இயல்பாக சொல்வது,”மச்சான், ஒரு xxx ரூபா கேப்பான். நீ 8 போடலைனாலும் உடனே லைசென்ஸ் கிடைச்சிரும்.இல்லாட்டி 9,10,11 ன்னு எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் இழுத்தடிப்பான்னு அறிவுரைகள்.இதில் ஒரு காவல்துறை நண்பனும் அடக்கம்(சுத்தம்..)
எதுவுமே ரகசியம் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்தே நடக்கிறது. இதில் வேறு அங்கே ‘இங்கு யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்ன்னு ஒரு அறிவிப்பு பலகை வேறு ‘. லஞ்ச வழக்குகளில் பிடிபடுவது என்பதெல்ல்லாம் அவர்களுக்குள் உள்குத்து,பங்குபிரட்சனைகளால் வருவது தான் எனவும் அறிந்துக்கொண்டேன்.நம் வசதிக்கேற்ப, இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்காக, ‘ஊரோடு ஒத்து வாழ், be roman when in rome. போன்ற தத்துவங்களை எழுதி வைத்துவிட்டுப் போன நம்முன்னோர்களை மதித்து உண்மைத் தமிழனாக இருக்க விரும்பி,கொடுக்க ஒத்துக்கொண்டேன். வேறு வழி?
மாற்றமில்லாத விஷயங்கள்ன்னா அவை,என்னைக் காண்பவர்கள் கேற்க்கும் பின்வரும் கேள்விகள்
1) வந்து எத்தனை நாள் ஆச்சுங்க தம்பி?
2) எத்தனை நாள் லீவு?
3) எப்போ கல்யாணம்?
4) என்ன வாங்கிக்கிட்டு வந்திருக்கிங்க?
5) எப்போ கிளம்பற மாதிரி?
6) பணத்தை பேங்குல போடாம ஏதாவது நிலம் கிலம் வாங்கி போட்டுட்டு போங்க (நாம ஏதோ புதையல ஒளிச்சு வைச்சிருக்கிற மாதிரி)
7) அங்க நம்ம ராமசாமி மகன் குப்புசாமி இருக்கானாமே அவனெல்லாம் பார்ப்பிங்களா? ( ஏன்னமோ UAE ல ஒரே ஒரு தெரு தான் இருக்குற மாதிரி)
8) அங்க சாப்பாடெல்லாம் எப்புடி?
9) நீங்க அங்க இஞ்சினியரா தானே வேல செய்யறிங்க(சந்தேகத்தோட) எதுக்கு கேக்கறேன்னா,நம்ம ரங்கசாமி கூட அங்க மேனேஜர்ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சான். பின்னாடி அங்க போன கந்தசாமி விசாரிச்சதுல பெட்ரோல் பங்குல எடுபிடி பையனாமில்ல..(அடங்கொக்காமக்க...என்னைப் பார்த்து அந்த கேள்வியை ஏண்டா கேட்டேன்னு கரக்காட்டக்காரன்ல வர்ர கவுண்டமணியைப் போல திரும்ப திரும்ப(?) கேட்டு அடிக்கணும்ன்னு தோனிய ஆசையை மறைக்க ரொம்பவே கஷ்டப்படுட்டேன்).
பதில் சொல்லி சலிச்சு போயி,சின்னதா கேள்வி பதில் பிட் நோட்டிஸ் அடிக்கலாம்னு இருக்கேன்.இந்த கேள்வித்திலகங்களுக்கு ஆளுக்கு ஒன்னு குடுத்துட்டு நம்ம வேலையை பாக்க போயிறலாம்ல... நீங்க என்ன சொல்லறிங்க?
என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்
Friday, August 6, 2010
நான் மாடு மேய்க்க போறேன்....
Subscribe to:
Post Comments (Atom)
14 பேர் கருத்துசொல்லியிருக்காங்க.நீங்களும் சொல்லுஙக.:
நீங்க அங்க இஞ்சினியரா தானே வேல செய்யறிங்க(சந்தேகத்தோட) எதுக்கு கேக்கறேன்னா,நம்ம ரங்கசாமி கூட அங்க மேனேஜர்ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சான். பின்னாடி அங்க போன கந்தசாமி விசாரிச்சதுல பெட்ரோல் பங்குல எடுபிடி பையனாமில்ல..(அடங்கொக்காமக்க...என்னைப் பார்த்து அந்த கேள்வியை ஏண்டா கேட்டேன்னு கரக்காட்டக்காரன்ல வர்ர கவுண்டமணியைப் போல திரும்ப திரும்ப(?) கேட்டு அடிக்கணும்ன்னு தோனிய ஆசையை மறைக்க ரொம்பவே கஷ்டப்படுட்டேன்).
ada same blood
:P
அருமை. ஒட்டக பால் குடிச்சிருக்கின்களா? அப்படின்னு யாரும் கேட்கறதில்லையா?
engapaa aaalaiyea romba naaala kaanoom
enga ponneeenga
adiggadi blog pakkam varanum illea veru eathaavathu blog open pannitteengala?
//Blogger senthil1426 said.....
ada same blood //
அட நாம தனி ஆளு இல்ல :)).வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே.
..........................
// Anonymous said...
:P//
???
.........................
// வழிப்போக்கன் said...
அருமை. ஒட்டக பால் குடிச்சிருக்கின்களா? அப்படின்னு யாரும் கேட்கறதில்லையா?//
வாங்க வழிப்போக்கன்.நீங்களே ஐடியா கொடுப்பது போல தோணுதே:)) பாராட்டுக்கு நன்றிகள் நண்பா.
......................
// vinu said...
engapaa aaalaiyea romba naaala kaanoom
enga ponneeenga
adiggadi blog pakkam varanum illea//
வாங்க வினு,
இந்த முறை ஒரு USA-பூஸ்டன் க்காக கடலில் பெட்டோலியம் துளையிடும் ரிக் அவசர புராஜெட்டில் அங்கம் வகித்ததால்,வேலைப் பளு காரணமா,துபாயில் இருந்த காலம் முழுவதும் பதிவெழுத சூழ்நிலை ஒத்துவர வில்லை.
// veru eathaavathu blog open pannitteengala?//
ஹா..ஹா...இல்லைங்க. இப்படில்லாம் புரளி இருக்குதா என்ன? இருக்குற பதிவையே நமக்கு சரியா தொடர முடியவில்லையே.
வருகைக்கும் அக்கரைக்கும் மிக்க நன்றிகள் தோழரே.
என்றும் அன்புடன்
உங்கள் ரசிகன்.
அன்பின் ரசிகன்
கண்டு எவ்வளவு நாட்களாகி விட்டது - பணிச்சுமை குறைய நல்வாழ்த்துகள்
மதுரைக்கு வருவதுதானே ! எப்போ கல்யாணம் பா ?
நட்புடன் சீனா
நல்வருகைகள் அன்பின் சீனா ஐயா.
மிகுந்த இடைவெளியில் உங்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சியைத் தருகிறது. நிச்சயமா வர (தங்களை காணவும்)முயற்சிப்பேன்.
தங்கள் வாழ்த்துக்களுக்கும்,வருகைக்கும் மிக்க நன்றிகள் ஐயா.:)
எனது பிளாக்கிற்கு வந்து கட்டுரையை படித்து பின்னூட்டம் அதாங்க கமெண்ட் போஸ்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் தொடர்ந்து படிங்க வெளிநாட்டுல இருந்து ஊருக்கு வந்தா என்ன என்ன கேள்வி கேப்பாங்கன்னு இவ்வளவு detaila எழுதி இருந்தது நல்லாஇருந்தது பிளாக் ஐ எப்படி popular பண்ணலாம்னு கொஞ்சம் ஐடியா குடுங்க தேங்க்ஸ்
nice post!
//மற்ற நாடுகளில் கிடைக்கும் எல்லா பொருட்களும் தொழில்நுட்பங்களும் இங்கேயே கிடைக்கிறது// very true! Every time I return to India, americans ask me "Why do Indians always buy candy before they start to India? Do you celebrate it with candy?" lol...
//6) பணத்தை பேங்குல போடாம ஏதாவது நிலம் கிலம் வாங்கி போட்டுட்டு போங்க // etho irukira panatha enna seyarathunu teriyama naama nikara mathiri solvanga! anmakulla teriyum namma nilamai
keep writing!!!
Deeksh
WELCOME BACK!!!
/( ஏன்னமோ UAE ல ஒரே ஒரு தெரு தான் இருக்குற மாதிரி)/
சிரிச்சு முடியலை ரசிகன்!இங்கே இருக்கிற ஜெய்ப்பூரிலேயே...இந்தா அவன் வடக்கே இருக்கானே அடிக்கடி போய்ப் பார்த்துக்கோங்க!அப்படீன்னு சொல்லும்போது ங்கே!!!!!
பிட் நோட்டீஸ் ஐடியா சூப்பர்...
//உஜிலாதேவி said...
இருந்தது பிளாக் ஐ எப்படி popular பண்ணலாம்னு கொஞ்சம் ஐடியா குடுங்க தேங்க்ஸ்//
ஹிஹி...அப்டில்லாம் யோசிக்கரதில்லைங்க.நம்மைவிட அனுபவசாலிங்ககிட்ட கேட்டுப்பாருங்களேன் :)வருகைக்கு நன்றிங்க.
//Deekshanya said...
Every time I return to India, americans ask me "Why do Indians always buy candy before they start to India? Do you celebrate it with candy?" lol...//
ஆமாங்க ஒரு காலத்துல வெளிநாட்டு சாக்கலெட்டுன்னா நம்ம மக்களுக்கு கொஞ்சம் மோகம் இருந்தது:))))
இப்போல்லாம் நான் இங்கயே கொஞ்சம் இனிப்பு வாங்கி,அட்டை பெட்டியை நீக்கிட்டு,கொடுத்துறது.வெளிநாட்டு இனிப்புன்னு அவங்களாவே நினைச்சுட்டா நாம என்ன செய்யறது?:P
// etho irukira panatha enna seyarathunu teriyama naama nikara mathiri solvanga! anmakulla teriyum namma nilamai //
அதானே?.. சரியா சொன்னிங்க.
வருகைக்கு நன்றிகள்:)
//அன்புடன் அருணா said...
.இந்தா அவன் வடக்கே இருக்கானே அடிக்கடி போய்ப் பார்த்துக்கோங்க!அப்படீன்னு சொல்லும்போது ங்கே!!!!! //
ஹா..ஹா... சேம் பிளட்:)) நல்வருகைக்கு நன்றிகள்ப்பா...:)
//வழிப்போக்கன் - யோகேஷ் said...
பிட் நோட்டீஸ் ஐடியா சூப்பர்..
//
வாங்க வழிப்போக்கன்.பாராட்டை பார்த்தா நீங்களும்கூட ஐடியா தேடிக்கிட்டிருந்த மாதிரி தெரியுது:))
வருகைக்கு நன்றிகள்.
9) நீங்க அங்க இஞ்சினியரா தானே வேல செய்யறிங்க(சந்தேகத்தோட) எதுக்கு கேக்கறேன்னா,நம்ம ரங்கசாமி கூட அங்க மேனேஜர்ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சான். பின்னாடி அங்க போன கந்தசாமி விசாரிச்சதுல பெட்ரோல் பங்குல எடுபிடி பையனாமில்ல..(அடங்கொக்காமக்க...என்னைப் பார்த்து அந்த கேள்வியை ஏண்டா கேட்டேன்னு கரக்காட்டக்காரன்ல வர்ர கவுண்டமணியைப் போல திரும்ப திரும்ப(?) கேட்டு அடிக்கணும்ன்னு தோனிய ஆசையை மறைக்க ரொம்பவே கஷ்டப்படுட்டேன்).
....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
கலக்கல் பதிவு.... அடுத்து இந்தியா போகும் போது, என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கலாம் என்று சொல்லி இருக்கீங்க... நன்றிங்க.
//Blogger Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
கலக்கல் பதிவு.... அடுத்து இந்தியா போகும் போது, என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கலாம் என்று சொல்லி இருக்கீங்க... .//
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிகள்.நீங்க இந்தியா வரும்போது இன்னும் அதிகமான கேள்விகளை எதிர்பார்க்கலாம்.அதையும் உங்க வழக்கமான நகைச்சுவை பாணில எங்களுக்கு பதிவா போட்டுருங்களேன். நன்றிகள்:)
Post a Comment