Showing posts with label சோதனைப் பதிவு (யாருக்கு?). Show all posts
Showing posts with label சோதனைப் பதிவு (யாருக்கு?). Show all posts

Saturday, November 3, 2007

மீசை வச்ச ஆம்பளைகளிடம் ஒரு வாக்கெடுப்பு (ஆண்களுக்கு மட்டும் !!!).




                           எல்லாரும் இப்ப அவிங்க வீட்டுலயே வாக்குப்பதிவு பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்களா..எனக்கும் அந்த சர்வே கோடு/புள்ளி எல்லாம் இப்பத்தேன் கெடச்சிது.. சரி என்னத்த போட்டு டெஸ்ட் பண்ணரதுன்னு யோசிச்சிக்கிட்டே தமிழ்மணத்துக்கு போனேனா.. அங்க.. " மீசை வச்ச ஆம்பளைகள்" ன்னு சின்ன அம்மிணி ஒரு பதிவு போட்டிருந்தாங்க..
                            
                            நா ஸ்கூலுல படிக்கும் போதுலாம் மொத மொத அரும்பு மீசை வந்தபோது தினமும் அத கண்ணாடியில் ரகசியமா பாத்து தடவி தடவி ரசிச்சது நினைவுக்கு வந்தது..சும்மாவா..ஆம்பளங்க பெரிய வயசாயிட்டாங்கன்னு மத்தவங்களுக்கு?..ஏன் நம்ம வீட்டுக்கே சொல்லர அடையாளமாச்சே..(இதுக்காகவே அப்பாவோட ரேசர தெரியாம எடுத்து சும்மா சேவ் பண்ணி வளத்த மீசையாச்சே.(அப்ப இத்தான் பேமஸ் ஜடியா..).இதுல காயம் பட்டு அம்மாக்கிட்ட காரணத்த சொல்ல முடியாம தவிச்ச சந்தர்ப்பங்களும் உண்டு. )

                         மீசை வந்தப்புறந்தான் அக்கம்பக்கத்துக்காரங்களாம் "டேய் பையா"ங்கரத்த மாத்தி திடீருன்னு "வாங்க தம்பி"ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க..மீசையில தண்ணிய தடவிக்கின்னு (அப்பத்தான ரொம்ப கருகருன்னு தெரியும்)தெருவுல பசங்களோட நின்னு கத பேசும்போது டியுசன் போகும் ஸ்மித்தா,ஜான்சியெல்லாம் நம்மல ஓரக்கண்ணால பாத்து சிரிச்சிக்கிட்டே (?) கிட்டே போரமாதிரி தோனுச்சி..

                          ஸ்கூல்ல டீச்சரெல்லாம் "சொல்லுடாவிலிருந்து "சொல்லுப்பா"வுக்கு மாறனதும் அந்த காலகட்டத்தில் தான்.

                          வீட்டுல கூட எல்லா விஷயத்துலயும் ( என்னிய பெரிய மனுஷனா மதிச்சி ) திடீருன்னு ஜடியா கேக்க ஆரம்பிச்சாய்ங்க..தெரு பசங்க கூட திடீருன்னு நம்ம மேல மரியாதயா பாத்தாங்க..எல்லாமே அந்த அரும்பு மீசை (மகிமை) வந்ததால தான்னு ஒரு நம்பிக்கை.. இப்படி ஆண்களுக்கே பெருமையைத்தரும் மீசையை குறை சொல்லராய்ங்களா?..அட இன்னா நம்மள எல்லாம் மொத்தமா வம்புக்கு இழுக்கிறாய்ங்க.?.
                          ஒரு வேளை பெண்ணிய போருல சின்ன அம்மிணியும் குதிச்சிட்டாய்ங்களோ?ன்னு  ஆர்வமா போய் பாத்தேன்.இப்பல்லாம் பெண்ணீய பதியுகள ஆண்கள்தான் அதிகமா படிக்கிறாய்ங்க..எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான்.
    
அப்புறந்தேன் தெரிஞ்சிது..விஷயமே வேற..

                        சில ஆண்கள் பாக்கவே சகிக்காத வகையில தாடிய நெறயா வளத்துக்கிட்டு,மத்தவங்க பொறுக்க முடியாம கேக்கறப்போ?..தாடிய எடுக்கனும்மின்னாக்கா.." டொனேஷன் வெட்டு "இன்னு சொல்லி மிரட்டி பணம் சேர்த்து அத நல்ல காரியத்துக்கு (ஆண்கள் சம்பந்தப்பட்ட) தர்ராய்ங்களாம்.இப்படி ரெண்டே வருஷத்துல மில்லியன் கணக்குல பணம் சேத்துட்டாய்ங்களாம்.(இதுவும் நல்ல பிசினசாயிருக்கில்ல..)

                           அதனால நம்ம எல்லாரையும் தாடி வளர்த்து,தியாகம் பண்ணசொல்லி சின்ன அம்மிணி கேட்டிருக்காங்க..
(அவிங்கள தாடி வளக்க சொல்லமுடியாதுங்கர தைரியந்தேன்).
தாடிலாம் நமக்கு ஒத்துவராதே.. சரிசரி நம்மாலான ஜடியாக்களயாவது சொல்லி உதவுவோமின்னு ,கெடச்ச சர்வே கோடுல போட்டுடேன் (அப்படியே..சரியா வேல செய்யுதான்னுன்ம் டெஸ்ட் செய்ய).

                         இது ஒட்டு மொத்த ஆண் சமுகத்து சம்பந்தப்பட்டதால உங்க ஓட்டுரிமைக்கு விட்டுட்டேன்..
       
                    அப்பிடியே கீழ "கண்ண மூடிக்கிட்டி" எதாவது ஒன்ன கிளிக்கிடுங்க..