Monday, August 16, 2010

கடவுள் துகள் - கரு’மந்திரமா’? கருமாந்திரமா?



விஞ்ஞான ஆர்வம் காரணமா,இப்போதைய லேட்டஸ்ட் டிரண்டு என்னன்னு வழக்கம் போல தேடிப்பார்த்த்துல,நாம Snooker விளையாட்டுகளுல பந்துகளை மோதவிட்டு வேடிக்கை பாக்குற மாதிரி சில பல நுண் துகள்களை செயற்கையா அதிவேகத்துல மோத விட்டு அந்த மோதலின் விளைவா உருவாகுற பொருளை(கடவுள் துகள்???) ஆராய போறாய்ங்களாம்.

அணுவின் அடிப்படி துகள்களான இவை இயற்க்கையா அதற்கான சூழலில் மோதிக் கொண்ட்தாலே தான் நாம் இப்போ பார்க்குற இந்த உலகத்தின் பல தனிமங்களுகளும் பல்வேறு குணம் கொண்ட வேதி பொருள்களும் உண்டாயின என்கிறார்கள்.நமது உலகின் அனைத்துப் பொருள்களும் இவற்றின் கலவையே.

ஏற்கனவே ஒருமுறை மோத விட்டு சோதனை நட்த்தியிருக்காங்க.. அதில் உண்டான புதிய அணுக்களை பற்றி ஆராய்ச்சி நடக்குதுன்னு தெரிய வருது.இப்போ அதைவிட பல மடங்கு பெரிதா மிகப் பெரிய பொருட்செலவில் வேற வேற வகை அணுத் துகள்களை மோதவிட்டு கொண்டாடப் போராய்ங்களாம்.
சரி இந்த ‘பார்க்கடல் கடைதலில் அமிர்தம் கெடைச்சா ஓகே. ஆலகாலம் கிடைச்சா? .

இப்படித்தேன் ரொம்ப காலத்துக்கு முன்னாடி,அணுவுக்குள்லயும் அபரிமிதமான சக்தி ஒளிஞ்சுக்கிட்டிருக்கு(?) அந்த கடவுள் சக்தியை வெளியே கொண்டுவரப்போறோம்ன்னு ஆராய்ச்சிலாம் செஞ்சாங்க.இப்போ நேத்துவரை குழந்தைகளுக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்து விளையாட்டு காட்டிக்கிட்டிருந்த நாடெல்லாம் கூட அணுகுண்டு வாங்கி வைச்சிடுதுங்க.

அணுகுண்டால தான் இரண்டாம் உலகப் போர் உடனே முடிவுக்கு வந்தது, பலர் மரணமடையாம காப்பாற்றப் பட்டார்கள்(???)ன்னு அமெரிக்கா ,அன்னிக்கு ஜப்பான்காரங்கிட்டயும் அனுகுண்டுகள் இருந்திருந்தா ரெண்டு நாடுகளுமே போட்டி போட்டுக்கிட்டு ஒன்னை ஒன்னு முழுமையா அழிஞ்சியிருக்கும்.இன்னிக்கு ஒரு போர் வந்தா அடி வாங்கறதுக்கு முன்னாடி அடிக்கறதுதான் சிறந்த தற்க்காப்பு ந்னு பயத்தால் எல்லாநாடுகளும் தனது எதிரி நாடுகளை முழுமையா அழிக்க முயற்ச்சிஒ செய்யும்.

இதுக்கு முன்னாடி எத்தனையோ போர்கள் வந்திருக்கின்றன. எத்தனையோ நாடுகள் தோற்றும் வென்றும் வந்திருக்கின்றன.பல கோடி மக்கள் மடிந்தும்,மீண்டும் வந்திருக்காங்க. இனம் வாழ்ந்துக்கிட்டுதான் வருது.காலம் காயங்களுக்கு மருந்திட்டிருக்கிறது. ஆனா இந்த நவின காலத்துல ஒரு அணுப்போர் ஏற்பட்டா உலகம் இனி பிழைக்காது.இப்படி பலகோடி ஆண்டுக்களுக்களுக்கு புல்பூண்டு கூட முளைக்காம மனித இனமே அற்றுப் போகச்செய்யும் விதமா,பூமியை பல முறை அழிக்க்க் கூடிய அளவு அணுகுண்டுகள் உண்டாக்கி வைச்சிருக்கற,மீளவே முடியாத புதைகுழில இப்போ இருக்கோம்.

நமக்கு விருப்பமோ இல்லையோ யார் சண்டை போட்டுக்கிட்டாலும் நாமும் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.கார்கில் போர் சமயத்துல பாக்கிஸ்தானின் அணு ஏவுகணைகள் இந்தியாவை நோக்கி ஏவ தயாரா இருந்தனவென அந்நாட்டு முன்னாள் ராணுவ அதிகாரி இப்போ அதிர்ச்சியான ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்.அப்படி ஏவப்பட்டால் அதைத் தடுக்கவோ,மீள் மேலாண்மை திறனோ இன்னும் இந்தியாவுக்கு சாத்தியப்படவில்லைங்கரது ஒரு நிதர்சனம்.

இன்னிக்கு இந்த கடவுள் துகள் சோதனைக்கு முன்னேறிய நாடுகளும் மில்லியன்ல கொட்டி கொடுக்கறதும் அதுல ஏதாவது புது ஆயுத மூலக்கரு உருவாகாதாங்கற ஆர்வம் தான்.எது கெடைச்சாலும் ஆக்கத்தைவிட அழிவு சக்க்திக்கே அவற்றை அதிகம் பயன்படுத்த விழைவார்கள்ன்னு உசிதம்.இதுவரை இப்படிப்பட்ட ஏடாகூடங்கள் சின்ன லெவல்ல இருந்துச்சு சின்ன பாதிப்புக்கள் (அணுகுண்டு தவிர)

கருந்துளையை உண்டாக்கப் போறோம்,எதிர் பொருளை(anti matter) உண்டாக்கப் போறோம்,நூறு பேரோட அறிவோட ஒருதனை குலோனிங்குல உண்டாக்கப்போறோம்ன்னு ரூம் போட்டு யோசிச்சு புதுசு புதுசா பல குருப்புக்கள் கெளம்பியிருக்கின்றன.

இது போன்ற ஆராய்ச்சிகளில் வேற்றுகிரகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடிய சக்திவாய்ந்த எரிபொருளை கண்டு பிடிச்சா நானும்தான் சந்தோஷம்ப்படுவேன் (Anti-matter-research).ஆனா அதே பொருளால அதி பயங்கர ஆயுதங்களை செய்ய முயலும் புத்திசாலிகளின் முளையை நினைச்சா தான்....


இதையெல்லாம் யோசிச்சுப்பார்த்தா,விஞ்ஞானம்ங்கரது ஏற்கனவே இருக்குறவற்றை பற்றி அறிவதும் அதை சிறப்பா பயன்படுத்த உதவினாலும் போதுமானது பாதுக்காப்பானது,

அதை விட்டுட்டு கடவுளா மாறி புதுசு புதுசா உண்டாக்கப் போறோங்கறது சரியானதா தோனலை.இயற்க்கையா உருவான சூழல் , நமது வாழ்வியலுக்கு பொருத்தமா இருப்பதல தான் நாம நாமா இருக்கோம்.

பேசாம அணுக்கள் அதுவாவே இருந்துட்டு போகட்டும், அட்லிஸ்ட் மனுஷன் ஒண்டரத்துக்கு வேற ஏதாவது கிரகம் கிடைக்கற வரை,நாம எதுவும் புதுசா ஆணிய புடுங்க வேண்டாம்ன்னு தான் சொல்லத் தோணுது. மாற்றுக் கருத்துக்கள் இருக்கான்னு தெரியலை.இருந்தா விஷய்ம் தெரிஞ்சவங்க விளக்குங்க.

Friday, August 6, 2010

நான் மாடு மேய்க்க போறேன்....


வெட்டியா இருப்பவர்களை மாடு மேய்க்க போ என்பது கிராமத்து வழக்கம் என கேள்விப்பட்டிருக்கிறேன். உருப்படியா எதுவும் செய்ய இல்லைன்னா பிளாக் எழுத போ என்பது டவுன் வழக்கமாகிட்டதால கொஞ்சம் எதையாவது கிறுக்கி வைக்கலாம்ன்னு மறுபடியும் வந்திருக்கேன்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய வந்ததில்,இதுவரை இல்லாத மாற்றத்தை உணர முடிந்தது.


விலைவாசியைக் கண்டு வாயை பிளந்ததில், இன்னா,உள்ளே இருந்துட்டு வந்தியா? என்பது போல பார்த்தார்கள்,இனி இவ்வரிசையில் வெளிநாட்டில் இருந்துட்டு வந்தியா? என்பதையும் தயக்கமில்லாமல் சேர்த்துக்கொள்ளலாம்.


மற்ற நாடுகளில் கிடைக்கும் எல்லா பொருட்களும் தொழில்நுட்பங்களும் இங்கேயே கிடைக்கிறது. அதிக விலைகொடுத்து நாம் வாங்கி வந்த எலட்ரானிக் பொருட்கள்,’இன்னாப்பா இது? இதையா அங்கேயிருந்து தூக்கிக்கிட்டு வர்ரே,இது நம்ம பர்மா பஜார்லயே கிடைக்குதே’ என்பது போன்ற விமர்சனங்களில் சட்டென்று மதிப்பிழந்தன.


கொஞ்சம் தரம் வேறுபட்டாலும்,சீன தயாரிப்புக்களின் உபயத்தால் எல்லாரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர்.


இந்தகால பசங்க(?) மனநிலையிலும் நிறையவே மாற்றங்கள்.பணம் செலவழிப்பதில் தயக்கம் குறைந்திருக்கிறது.உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் எல்லா தரப்பினரிடையேயும் அதிகரித்திருக்கிறது.ஜோடிகள் உரிமையோடு கைக்கோர்த்து வலம் வருவதையும் பரவலாக காண முடிகிறது.இளம்பெண்களின் குழுக்கள் வெளிப்படையாக, வழியில் போகும் ஆண்களை கமெண்ட் அடித்து சிரிக்கும் இயல்பை அடைந்து விட்டதை காண முடிந்தது (’ஆதாம் டீசிங்’ என்ற வார்த்தை கூடிய விரைவில் டிஷ்னரியில் சேர்க்கப்பட்டுவிடும்ன்னு தோனுது).


வந்த சில நாட்களிலேயே நான்கைந்து முறை,பள்ளிச்சிறுவன் யாராவது பைக்கிலும்,பக்கத்திலேயே யாராவது ஒரு பள்ளிச்சிறுமி சைக்கிளிலும் பேசிக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். பசங்களால் பைக்கை எப்படி பெண்ணின் சைக்கிள் வேகத்தில் மிக மெதுவாக, அதுவும் பேசிக்(வழிந்துக்)கொண்டே ஓட்ட முடிகிறது என வியப்பு (ரொம்ப முக்கியம்).பின்னால் வருபவர்கள் டென்ஷனாகி ஹாரன் அடித்தால் அப்போதைக்கு மட்டுமே கொஞ்சம் வேகமெடுத்து மீண்டும் அப்பெண்ணுக்கு இணையாக வருவது என ஒரு சடுகுடு விளையாட்டுக்கவிதையே நடக்கிறது.

ஆனால் இதுவரை ஸ்க்கூட்டரில் பெண்ணும் சைக்கிளில் பையனும் மட்டும் காணவே முடிவதில்லை.ஏன் என புரிய வில்லை(?)


லஞ்சம் கொடுப்பது ஒரு வழக்கமான விஷயம் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதுன்னு தோனுது. விடுமுறைக்கு வரும்போதெல்லாம் தம்பியின் பைக்கை லைசென்ஸ் இல்லாமல் ஓட்டும் எனக்கு இம்முறை புது பைக் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தேன்.

எல்லோரும் இயல்பாக சொல்வது,”மச்சான், ஒரு xxx ரூபா கேப்பான். நீ 8 போடலைனாலும் உடனே லைசென்ஸ் கிடைச்சிரும்.இல்லாட்டி 9,10,11 ன்னு எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் இழுத்தடிப்பான்னு அறிவுரைகள்.இதில் ஒரு காவல்துறை நண்பனும் அடக்கம்(சுத்தம்..)


எதுவுமே ரகசியம் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்தே நடக்கிறது. இதில் வேறு அங்கே ‘இங்கு யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்ன்னு ஒரு அறிவிப்பு பலகை வேறு ‘. லஞ்ச வழக்குகளில் பிடிபடுவது என்பதெல்ல்லாம் அவர்களுக்குள் உள்குத்து,பங்குபிரட்சனைகளால் வருவது தான் எனவும் அறிந்துக்கொண்டேன்.நம் வசதிக்கேற்ப, இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்காக, ‘ஊரோடு ஒத்து வாழ், be roman when in rome. போன்ற தத்துவங்களை எழுதி வைத்துவிட்டுப் போன நம்முன்னோர்களை மதித்து உண்மைத் தமிழனாக இருக்க விரும்பி,கொடுக்க ஒத்துக்கொண்டேன். வேறு வழி?


மாற்றமில்லாத விஷயங்கள்ன்னா அவை,என்னைக் காண்பவர்கள் கேற்க்கும் பின்வரும் கேள்விகள்


1) வந்து எத்தனை நாள் ஆச்சுங்க தம்பி?

2) எத்தனை நாள் லீவு?

3) எப்போ கல்யாணம்?

4) என்ன வாங்கிக்கிட்டு வந்திருக்கிங்க?

5) எப்போ கிளம்பற மாதிரி?

6) பணத்தை பேங்குல போடாம ஏதாவது நிலம் கிலம் வாங்கி போட்டுட்டு போங்க (நாம ஏதோ புதையல ஒளிச்சு வைச்சிருக்கிற மாதிரி)

7) அங்க நம்ம ராமசாமி மகன் குப்புசாமி இருக்கானாமே அவனெல்லாம் பார்ப்பிங்களா? ( ஏன்னமோ UAE ல ஒரே ஒரு தெரு தான் இருக்குற மாதிரி)

8) அங்க சாப்பாடெல்லாம் எப்புடி?

9) நீங்க அங்க இஞ்சினியரா தானே வேல செய்யறிங்க(சந்தேகத்தோட) எதுக்கு கேக்கறேன்னா,நம்ம ரங்கசாமி கூட அங்க மேனேஜர்ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சான். பின்னாடி அங்க போன கந்தசாமி விசாரிச்சதுல பெட்ரோல் பங்குல எடுபிடி பையனாமில்ல..(அடங்கொக்காமக்க...என்னைப் பார்த்து அந்த கேள்வியை ஏண்டா கேட்டேன்னு கரக்காட்டக்காரன்ல வர்ர கவுண்டமணியைப் போல திரும்ப திரும்ப(?) கேட்டு அடிக்கணும்ன்னு தோனிய ஆசையை மறைக்க ரொம்பவே கஷ்டப்படுட்டேன்).


பதில் சொல்லி சலிச்சு போயி,சின்னதா கேள்வி பதில் பிட் நோட்டிஸ் அடிக்கலாம்னு இருக்கேன்.இந்த கேள்வித்திலகங்களுக்கு ஆளுக்கு ஒன்னு குடுத்துட்டு நம்ம வேலையை பாக்க போயிறலாம்ல... நீங்க என்ன சொல்லறிங்க?


என்றும் அன்புடன்

உங்கள் ரசிகன்