Tuesday, October 30, 2007

என்ன ஒரு மிருகத்தனமா அடிச்சிக்கிறாய்ங்க.(அசை படத்துடன்)

சண்டையையும் ரசிக்கலாம் வாங்க..
.
நான் ரொம்ப ரசிச்சது..அப்ப நீங்க..?
.
பயாஸ்கோப்பு ஒன்னு



பயாஸ்கோப்பு ஒன்னு வேகமா வரலின்னாக்கா
பயஸ்கோப்பு ரெண்டு...(low quality)









பின்குறிப்பு
மக்கள்ஸ்.. எனக்கு இன்னும் சில நாட்கள் வேலை இருப்பதால ( புதுசா இங்க வந்த நண்பர்களுக்கு உதவுவது(ஊர் சுத்தரது..)).நான் ஒழுங்கா பதிவு போடறதில்லன்னும்.அத சமாளிக்க ,ஈசியா மொக்கையை வாரி வழங்குவதாவும் லோக்கல் நண்பர்களே புகார் செய்வதாககவும் அறிவதால்..
(புது பதிவு போடலன்னாக்கா வண்டியின் டயர் காற்றை பிடுங்கிவிடுவதாக சொன்ன ராஜேஸ்க்கும் சேர்த்து..)
அவர்களை சமாதானப்படுத்த இன்னொரு மொக்கை ஹிஹி..
(இது வரை பாக்காதவங்களுக்கு நிச்சயமா புடிக்கும்..)

வலை வாக்கு குறள்

"பதிவுக்கு டைம் இல்லை எனில் இங்கு ,சிறிது
மொக்கையும் ஈயப்படும். "
.
.இது எப்படி இருக்கு??
.
.

Sunday, October 28, 2007

இது எப்பிடி இருக்கு?...






Friday, October 26, 2007

என் புகழ் பாடும் பாடல்கள் இப்போது இணையத்திலும்...

அந்த காலத்திலேயே.....




இந்த காலத்திலும் ......



எந்த காலத்திலும் ரசிகனுக்கு ஆதரவு உண்டு என்பதனை இதன் மூலம் ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, October 23, 2007

பத்து நிமிடத்தில் கவிதை எழுத கத்துக்கணுமா? குறிப்பு :முன் அனுபவம் தேவையில்லை...

                                      
                                நம்ம கீதா அக்கா இனிமே கொஞ்சம் நாளுக்கு மொக்கை போடரதா தீர்மானிச்சியிருக்கரதால..அவிங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க (சும்மாவா நம்ம தமிழ் டீச்சராசே) நானும் இந்த வாரம் "மொக்கை வாரமாக"(ஏப்பம் விடும் குரலில் படிக்கவும்)அதிகாரப்பூர்வமா அறிவிச்சாச்சு.

                               ஆனா என்ன மொக்க போடலாமின்னு ரொம்ப யோசிச்சப்போ (அடப்பாவி..மொக்க போடரத்துக்கே யோசனையா?) நம்ம Dreamzz ஒரு மெகா மொக்கை போட்டிருக்கிறதா செய்தி கெடச்சிச்சா.. சரின்னு போய் பாத்தாக்கா...அங்க உபயோகமா "கவித போட்டி"யெல்லாம் வச்சிருக்காரு.
       
                                தலைப்பு " சலனம் ". இந்த கவித நமக்கு (சாப்பிட தெரியும் ; சமைக்க வராதுங்கர மாதிரி )படிக்க தெரியும் ,எழுத தெரியாதே.. நம்ம ..அபி அப்பா வேற.. " தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்" ன்னு சொல்லி பிராக்கெட்டுல "(சொந்த அனுபவம்) "ன்னு வேற எழுதியிருக்காரே.நமக்கு வேணாம் இந்த வம்பு இன்னு ஒதுங்கிய போது.

                                   "பயிற்ப்பு "விளக்கத்தை தனியா மொதலிலேயே சொல்லாத கடுப்பிலிருந்த(விவரம் "தமிழ் பெண் பதிவர்களுக்கு ஒரு கேள்வி -முந்தைய இடுகையை படிக்கவும்) நம்ம ரவி, ஏலே .குற்றம் சொல்லியே பேர் வாங்க நினைக்கும் பதிவர்களும் இருக்கிறாய்ங்க.. ன்னு மறைமுகமா.. [நீ சொம்மா மத்தவங்க கவிதய கிண்டலடிக்க தா லாயிக்கு] சொல்லி எனக்குள் இருந்த கவித புயல(?)  தூண்டி விட்டதால..

                                    நானும் சொம்மா.. ட்ரை பண்ணினேன்.ஏதோ சாதம் வடிக்க,பொங்கல் வந்த மாதிரி ஒரு வகையா 3 கவித கொத்த 10 மிணிட்ல எழுதி கிளிச்சிப்புட்டோமில்ல .பின்ன அத திருப்பி ஒட்ட வச்சி பாத்தாக்கா..கவித மாதிரி(?) வந்திருந்தது.
                                   
                                   அட்டா ..ன்னு Dreamzz -ட போட்டிக்கு பின்னூட்டத்த போட்டுட்டு.. நம்ம "பதிவிலேயே பின்னூட்டம் போடுவோர் சங்கம்." கொள்கைக்காக ,மத்தவங்களுக்கும் நம்ம கண்டு பிடிச்ச கவித எழுதும் ரகசியத்த சொல்லுவோமின்னு இங்க போட்டுடோமில்ல...

சப்தமில்லாமல் அசைவது சலனமாமில்ல..
அட கவித எழுதறது எப்பிடின்னு நானும் கண்டுபிடிச்சிட்டேன்.ஏன்னா இதான் என்னோட மொத கவித கொத்து(?).

                              மொதல்ல ஒரு காதல் கதய படிக்கவும்.சோக காதல் கத யாயிருந்தாக்கா நல்லது.(அப்பத்தேன் நம்ம "தமிழ்நதி" அக்கா போல கடைசி வரில கால் டம்லர் சோகத்த பிழிஞ்சி கொடுக்க முடியும்) .

                               பின்ன கண்ண மூடிக்கிட்டு தோனுனத உரை நடையா ,எழுதவும்.அங்கங்க கைய கால(வரிய) ஒடிச்சி போடவும்.கடைசியா ஒன்னு ரெண்டு எதுக மோன ய தூவவும்.சூடா (?)..கவித ரெடி..

                                 ஸ்பெல்லிங்க மிஸ்டேக் வந்தாக்கா திருத்த வேணாம். விட்டுடுங்க..பிழைதாங்க.. கவிதைக்கு அழகு.

                                 உங்க கவித உங்களுக்கே புரியலன்னாக்கா.. கவலப் படாதிங்க.. அதுக்கு படிக்கிற விசயந்தெரிஞ்சவங்க அவிங்களாவே " மீனிங் " கண்டுபிடிச்சி பின்னூட்டத்தில கிழி கிழின்னு கீச்சிடுவாய்ங்க...

ஆங்... மறக்காம.. கவிதையோட தலைப்ப உங்க கவித வரிக்குள்ள ஏதாவது எடம்பாத்து சொருகவும்.இல்லேன்னாக்கா.. உங்க கவிதலிருந்து ஏதாவது ஒரு வார்த்தய உருவி எடுத்து தலைப்பா போடவும்.

முடிஞ்சா..இருட்டுல நிக்கிற மரம், ஒத்த கோட்டால வரஞ்ச பெண்,பாதி பூ,பாதி பறவைன்னு ஒரே கொழப்பமாயிருக்கிற படங்கள சேர்க்கவும்.

இப்பிடி நா 10 மினிட்ல எழுதுன 3 கவித(மாதிரி) இத்தான்..

சலனம்.


மலர் விழுந்தால் நீரில் சலனம் வரலாம்..
மலரை நினைத்தாலே..சலனம் வருமோ..
உன்னை நினைக்கும் என் மனது.





நள்ளிரவு குளத்து நீரில் சலனம்
அட விழுந்தது நிலவின் பிம்பம்.




என்னை பார்க்கும் போதெல்லாம் சலனப்படும்  உன் கண்கள்.
என்னை உறங்கவிடாமல் சஞ்சலப்படுத்துவதை
நீ அறிவாயா?...





" Dreamzz "---ஆயிரம் பொன் எங்க... ஆயிரம் பொன் எங்க... ..(திருவிளையாடல் தருமி போல படிக்கவும்..).

எதுக்கு எல்லாம் இப்ப என்னிய அடிக்க வாராக...?..

Saturday, October 20, 2007

பதிவிலேயே பின்னூட்டம் போடுவோர் சங்கம்.

                    

                      இப்பத்தேன் தெரிஞ்சிது, நாமெல்லாம் பதிவ படிச்சி தான ..பின்னூட்டம் போடுவோம். சில பேரு திரைவிமர்சனம் பாத்துட்டு, படம் பாக்கர கணக்கா,பின்னூட்டத்த ,முன்னூட்டமா படிச்சிட்டுதான் பதிவுக்கு வாராங்கலாமில்ல...

                      ஏதோ technical பிராபலத்தால என்னோட பதிவோட பின்னூட்டங்கள் தமிழ்க்மணத்துல சேர மாட்டேங்குது.அதனால " மறுமொழியப் பட்ட " பகுதிலயும் பதிவு வரல. நானும் சரி. போனாப் போவுது..பொழச்சி போவட்டும் ,நம்ம மக்கள்ஸ் -ன்னு விட்டுட்டேன்.

                      இதோ அந்த முன்னூட்ட பிரியர்களுக்காகவும் , நான் ரசித்த சந்த்ர்ப்பங்களை நிரந்தரமா பதிவுல இருந்து நினைவு படுத்திக்கவும் மறுபடியும் ஒரு பின்னூட்ட பதிவு.

மத்தவங்க வீட்டுல ,சமிபத்துல ரசித்தது..




"Manaosai" சந்திரவதனா...அக்காவின் " காதலினால் அல்ல"

இது கதையோ,கவிதையோ அல்ல, அவரோட உண்மை உணர்வுகள் ங்கரதுதான் ஹைலைட்.

                        என்னிய ரொம்ப  ஃபீல் பண்ண வச்சிட்டிங்கல்ல...
கொஞ்சம் தவறினாலும் தப்பர்த்தம் தரக்கூடிய ,ஒரு விஷயத்தை மிக ஜாக்கிரதையா..ஆனா..வீரியம் குறையாம தந்துருக்கிங்க... அருமை.

// என்னை நீ நினைத்ததையும், என்னை நீ காதலித்ததையும் உணராமலேயே நான் வேறொருவனைக்: காதலித்து, கல்யாணம் செய்து… என்பாட்டில் வாழ்ந்திருக்கிறேனே! சின்ன உணர்த்தல்கள் கூட என்னிடம் இல்லாமற் போனது எப்படி?//

                         பல சமயங்களுல நானும்,மத்தவங்கள புரிஞ்சிக்காம போயிட்டோமின்னு ,காலங்கடந்து உணர்ந்ததுண்டு.


// என் மேல் பிரியமான யாருக்காவது //

                         தான் காதலிக்காத ,ஒருவன் தன்னை காதலித்ததை அறியும் போது "சே.. அவன நல்லவனு தான நெனச்சேன்." ன்னு, தன்னை(போய்) காதலித்ததன் மூலம் ,மன்னிக்க முடியாத கடுங் குற்றம் செஞ்ச போல கமன்ட் அடிச்சி , அந்த காதலுக்கு உண்மையிலேயே தான் அறுகதையில்லைன்னு நிருபிக்கும் பெண்கள் மத்தியில,காதல ஏத்துக்க முடியாத சூழ் நிலையில்யும் ,ஆனா அந்த அன்பை ஏத்துக்க மனசிருப்பது great.

                          அதானே?.. உன்மையான அன்பு செலுத்த ஆளில்லாத இந்த உலகத்துல,நம்மை நேசிக்கும் ஒருத்தரோட வாழ முடியாட்டாலும் ," அன்பை மாத்திரம் " பகிர்ந்துகிரது தப்பில்லைன்னு தோனுது.நம்ம நேசிக்கும் குழந்தைக் கிட்ட நாம அன்பு செலுத்துறதில்லயா?,.

                          காதலிக்கத் தெரிந்த அவர்,அவரோட துனைவியையும் காதலிச்சி நிறை வாழ்வு வாழ்ந்திருப்பார்ங்கரது நிச்சயம்.""கனவாகிப்போன காதல்"வெயில்ல இருந்தவனுக்கு,அருகாமை நிழலின் அருமை பற்றி நிச்சயம் புரியும்".


// தனிமைப் பொழுதுகளில் என் நினைவுகளைச் சீண்டுவதை நான் உணர்கிறேன். அதற்காக எனக்கு உன்மேல் காதல் இருக்கிறது என்று மட்டும் நினைத்து விடாதே. இப்போதும் சொல்கிறேன், சத்தியமாக உன் மேல் எனக்குக் காதல் இல்லை.//

//அதுக்காக காதல், கத்தரிக்காய் என்று விபரீதமாய் ஏதும் கற்பிதம் பண்ணி விடாதே. நான் இன்னொருத்தன் மனைவி. நீ இன்னொருத்தியின் கணவன். சத்தியமாய் உன் மேல் எனக்குக் காதலில்லை. ஆனாலும் என்னைச் சலனப் படுத்துகிறாய். சற்று சஞ்சலப் படுத்துகிறாய்//

                       ரொம்ப தெளிவா இருக்கிங்க..உங்க மகன்/மகள் படித்தாலும் குறை சொல்ல முடியாத வெளிப்படை.

                        உங்க பக்குவம் என்னிய வியக்க வைக்குது .நானாயிருந்தாக்கா... "என்னையும் அறியாமல் எனக்குள் ஏதோ ஒன்று"ன்னு குழம்பிப் போயிருப்பேன்.வாழ்த்துக்கள் [வாழ்த்துரதுக்கு வயசெதுக்கு?.]


// ஒப்பாரி வைத்து அழுகின்ற அளவுக்கு நான் இல்லை. ஆனாலும் அவ்வப்போதான தேற்றுவார் இன்றிய தனிமைகளில் ஆற்றாமையில் கொட்டி விடுகிறது கண்ணீர்.//

                        உணர்ச்சிகள் , நமது நியுரான்களில் ஹார்மோன்களின் நடனம் ங்கரத புரிஞ்சிகிட்டு யதர்த்தத்துல ஆறுதலடையருத தவர வேற வழியில்ல...


அன்புடன் ரசிகன்...

..........................................................................................................................................................................

மொத்தத்துல..51 வயசு ஆனாலும்,மதிவதனா அக்கா இப்பவும் மனதளவில் இன்னொரு " அழகி " தான்.

[ அழகி படத்த பாத்த போதும் ,இப்படித்தான் உணர்ந்தேன்."பிரசவிக்காத காதலை"இன்னும் மனதில் சுமந்துக் கொண்டு திரியும் ஆண்கள் நிஜத்தில் பலர் உண்டு.  

             அவிங்களுக்கு ஒரு அட்வைஸ் , எல்லாரும் குழந்தை நல்லா பிறக்கும்ங்கர நம்பிக்கையில தான் சுமக்குறாங்க..."பிரசவ வலி "க்கு பயப்பட்டீங்கனாக்கா.. ஒரு வேளை ,அந்த "காதல் " ங்குற "குழந்தை"யை நீங்க எப்பவுமே அடையமுடியாம போகலாம்.மொதல்ல..உங்க மேல நம்பிக்கை வையுங்க..உங்க காதல் மேல நம்பிக்கை  வையுங்க...சக்ஸஸ் ஆன பின்னாடி மறக்காம எனக்கு பார்ட்டி வையுங்க..என்ன o.k யா?..].

முன்னூட்டம் படிச்சாச்சா..இப்ப கொஞ்சம் அங்க போயி முழு பதிவையும் பாத்துட்டு,இந்த பின்னூட்டத்த மறுபடியும் படிச்சி பாருங்க...ரெண்டு தடவைக்கும் உங்க மனசுல ஏற்படர வித்தியாசம் நல்லாவே புரியும். 


.

Thursday, October 18, 2007

தமிழ் பெண் பதிவர்களுக்கு ஒரு கேள்வி

                      

                       என் நண்பர் இன்னிக்கி ரொம்ப சோகமாயிருந்தாரு..எப்பவும் வாணிலியில போட்ட கடுகு கணக்கா எல்லாரயும் பொரிந்து தள்ளுபவர்,இன்னிக்கி சைலண்டா இருக்காரே..ஊருக்கு போன் அவர் மனைவி திரும்ப வந்துட்டாங்களோ?..ன்னு ஜாலியா கேட்டதுக்கு..மனுஷன் தனது சோகத்த ஒரு அண்டா நெறய பிழிந்து கொடுத்துட்டார்.

                     விஷயம் இதுதான்.லீவாச்சேன்னு மனைவியும் வீட்டுல இல்லயேன்னு காரை எடுத்துக்கிட்டு ஊர் சுத்த போனவர்,ஒரு ரவுண்டானாவ சுத்தும் போது,இன்னொரு காரும் அவர இடிக்கிற போல வந்து நின்னுச்சாம்..அவரு சரியாதான் ஒட்டியிருக்கிறார்(-ன்னு சொன்னார்).வழக்கம்போல கோபமா இரங்கி நின்னாக்கா.. அழகா ஒரு அரபி பொண்ணு காருலருந்து இறங்குச்சாம்.
                   பொண்ணப் பாத்தது இவுரு பரிதாபப்பட்டு (பயப்பட்டு -ன்னு எங்களுக்கு தெரியுமில்ல.) போனாப் போவுதுன்னு திரும்பியிருக்கார்.அப்பத்தான் சரளக்கல்ல கிரைண்டருல அரைச்ச மாதிரி ஒரு குரல்.நண்பர் நெசமாவே பயந்து போயி(இப்ப ஒத்துக்கிட்டார்) திரும்பி பாத்தா..
                  அந்த அரபி பொண்ணுதான் இவர சத்தமா திட்டிகிட்டு இருக்கா..இவருக்கு எங்கே போலிசை கூப்புடுவாளோ -ன்னு பயமும், திட்டு வாங்குவதால்(அவள்திட்டும் அரபி வார்த்தைகள் அவருக்கு புரிந்ததால்) தர்மசங்கடத்திலும் நெளிந்து,ரவுண்டாணாவுல யாருமில்லாத்தால,மன்னிப்பு கேட்டு எஸ் ஆயி வந்தவருதான்."சேது afterthe intervel விக்ரம் போல" எங்கோ பார்க்கிரார்.
                  "ஹிம்...பொண்ணுன்னா ஒரு அச்சம்,மடம்,நாணம்,பயிற்ப்பு வேணாம்?.அது சரி தமிழ் பொண்ணுன்னா அவுங்களுக்கு தெரியும்,இதுகளுக்கு என்ன தெரியும் ?கூடைய தொறந்த கோழியப் போல சுத்துதுங்க இன்னு பொலம்பினாரு..".

                         அத கேட்ட டவுட்டு தனசேகரு எங்கிட்ட "மச்சி அச்சம்,நாணம் இன்னாக்கா தெரியும்.மடம் கூட,கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு,ஆனா "பயிற்ப்பு"-ன்னா இன்னான்னு அறியாபுள்ள தனமா கேட்டு வைக்க,எல்லாரும் என்னிய முட்டாய் கடை போல பார்க்க,என்னையும் பெரிய மனுஷனா நெனச்சு ,ஒரு புத்திசாலிதனமான கேள்வி கேற்க்கும் போது,தெரியல்லண்ணா நல்லாயிருக்காதில்ல...

                            கவலைப்பட்டுக்கினுறுந்த நண்பருங்கூட ஆவலா என்னிய பாக்கரது தெரிஞ்சது.வேர வழியில்ல.. 'வார்த்தையை சொன்ன நண்பரே,இப்ப சொல்லுவாருன்னு அவர காட்டிட்டேன்.அவரோ "குண்டக்க ம்ண்டக்கன்னா,குண்டக்க ம்ண்டக்க தான் "வடிவேலு மாதிரி,இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லமுடியுமாடான்னுடார்.நீ திட்டு வாங்க தான் லாயக்கு,நம்ம மச்சி சொல்லுவானு -ன்னு எல்லாரும் மறுபடியும் என்னைய பாக்க "நியுட்டனின் விதிய பொய்யாக்குர மாதிரி நமது வினைக்கு,இரண்டு மடங்கு எதிர் வினை வருது.நம்மலயும் "லாயக்கு" லிஸ்டில சேத்துருவாய்ங்களோ..
                         
                       அப்படியே சஸ்பென்ஸ மெயின்டெய்ன் பன்னிக்கிட்டு,"எல்லாருக்கும் 24 மணி நேரம் தரேன்,கார் ,ஹலிகாப்டர் எது வேனுமினாலும் எடுத்துக்குங்க,எல்லா கருப்பு பண பைலும் என் டேபிளுக்கு வரனும்" முதல்வன் அர்ஜின் போல, 'பயிற்ப்பு -ன்னா என்னனு இன்ன முழுசும் யோசிங்க.தெரியலன்னா.. நாளைக்கு சொல்லரேன்..-ன்னுட்டேன்.[நாளைக்கு , யாரும் கண்டு புடிக்கலன்னா எங்கயாவது " எஸ் "ஆகனும்.]

                       ரவி மாத்தரம் புத்திசாலிதனமா எங்கிட்ட வ்ந்து மாமு எனக்கு தெரியும்.எங்கிட்ட மட்டும் சொல்லு.நா நெனச்சதும் நி சொல்லரதும் ஒன்னான்னு பாக்கனுமின்னான்.உஷாராயிட்டேனில்ல... விஷயந்தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்ச விசயத்த மறுபடி சொல்லரது வேஸ்ட்-ன்னுடேன்.
டென்ஸனான ரவி சரி ஒத்துக்குறேன் .எனக்கு தெரியல.. இப்ப சொல்லு..ன்னான்.அப்படி வா வழிக்கு.ஆனா ஒன்னும் தெரியாதவங்ககிட்ட அவிங்களுக்கு தெரியாத விசயத்த பத்தி பேசரது நாகரீகமில்ல-ன்னேன்.

                          அவனுடைய நெற்றிக்கண் (?)ண தொறந்து என்ன எரிக்கரத்துக்கு முன்ன அங்கிருந்து எஸ்கேப் ஆனேன்.

                         நேரா இணையத்துல்ல குதிச்சி... கூகுளாண்டவருகிட்ட மனு போட்டா... ரெண்டு மொக்க குறிப்ப எடுத்து காட்டனாரு.. அதுல ஒன்னுமில்ல..
ஒரத்துல்ல இருக்குர தமிழ் அகராதி தேடல் எல்லாத்துலயும் "பயிற்ப்பு/ பயிர்ப்பு" எல்லாம் கொடுத்து பாத்தாச்சி..நோ ரிசல்ட்ன்னு வந்துச்சி.

                              அப்பத்தான் நண்பர் சொன்ன வார்த்த மீண்டும் காதில் ஒலித்தது..சே..இதை எப்படி மறந்தேன் நான்..[ "ஹிம்...பொண்ணுன்னா ஒரு அச்சம்,மடம்,நாணம்,பயிற்ப்பு வேணாம்?.அது சரி தமிழ் பொண்ணுன்னா அவுங்களுக்கு தெரியும்,"].
                             அக்கம் பக்கத்துல்ல யாரும் இல்லாததால உடனே ஊருல,வக்கில் [வைக்கோல்-அல்ல]உதார் விட்டுக் கொண்டிருக்கும் கவி அக்காவுக்கு போன் போட்டேன்[ உயிர் நண்பனின் அக்கா].
                            டேய் எப்படிடா இருக்க..இன்னு வழக்கமான விசாரிப்பை தொடர்ந்த அக்காவிடம்.அதெல்லாம் இருக்கட்டுங்கா..நான் இப்ப ஒரு சிக்கல இருக்கேன்,என்னோட கவுரவமே(?) ஒங்க பதில்லதா.. இருக்கு..

பீடிக போடாம ஒடனே சொல்லுரா..

எனக்கு பயிற்ப்பு -பத்தி தெரியனுங்கா...

அட இதுக்கு போயா கத்தருலருந்து கூப்புடவ.. அதுல பல வகை உண்டு..

இது வேறயா..இருங்கக்கா... பேனா..பேப்பர் எடுத்துக்கிறேன்.

எடுத்துக்க...எடுத்துக்க.....எடுத்துட்டயா?..

ம்..சொல்லுங்கக்கா..

உளுத்தம் பருப்பு,பாசிப் பருப்பு,பச்சை பருப்பு..இதுதான் இப்ப வெல ஜாஸ்தி..அடுத்து...

அக்காஆஆஆஆ .

என்னடா...அங்க....நங்கு நங்கு-ன்னு இரும்பு சத்தமெல்லாம் கேக்குது..

அது நாந்தான் இங்க சொவத்துல தலைய முட்டிக்கிட்டேன்.அதவிடுங்க..நாங்கேட்டது சமையல் பருப்பல்ல.. ப..யி..ற்.நெடில்..ப்...பு.

"பயிற்ப்பு " சரியான வார்த்த தானா? நல்லா பாத்தியா "ஸ்பெல்லிங்" மிஸ்டேக் இருக்க போவுதுடா...

சமாளிக்காதிங்கக்கா.... ஒரு குளூ உண்டு. அது அச்சம்,மடம்,நாணம் வரிசையில தமிழ் பொண்ணுக்கு அவசியமான ஒரு குணம்.

அச்சம்,மடம்,நாணம் வரிசையில அப்படின்னா இந்த காலத்து பொண்ணுங்களுக்கு அது தேவையில்லன்னு அர்த்தம்டா.

"பயிற்ப்பு " ன்னா என்னன்னே தெரியாம,அது அவசியமில்லன்னு எப்படி சொல்லுவிங்க..தெரியுமா? தெரியாதா?..

அது.. அது.. அட உங்க மாமாவே வந்துட்டாரே .அவருகிட்ட கேளு.அவரு புத்திசாலி.

அதுல புத்திசாலிங்கரத்துலதான் எனக்கு சந்தேகமே...

ஏண்டா?

உங்களை போய் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டாரே..

அடிச்சேன்னா.. ஊருக்கு வருவல்ல.. அப்ப பாத்துக்கிறேன்.

ஹலோ..பையா என்னடா சந்தேகம்.

வாங்க மாமா..அச்சம்,மடம்,நாணம் வரிசையில "பயிற்ப்பு " ன்னா என்ன?

ம்...ம்....உங்க கவி அக்கா கிட்ட அச்சம்,சமயல்ல உதவி பண்ணரதால மடம் ,அது மத்தவங்களுக்கு தெரிஞ்சிடுமோங்கிற நாணம் எல்லாம் எனக்கு இருக்கிறத்தால,அந்த.. என்னது..அங்.. பயிற்ப்பு அதுவும் எங்கிட்ட இருக்கனுந்தான் தோனுது.ஆனா என்னன்னு தான் தெரியல..

நான் இங்கு ...நங்கு....நங்கு....நங்கு.........

இடைவிடாம "இரும்பு சத்தம் கேட்டதால.. அங்க மாமா..போன் ரிப்பரோ -இன்னு நினைத்திருக்க கூடும்.

மக்கள்ஸ்..

நடந்த எல்லாம் கேட்டங்கல்ல.... அய்யா சொல்லுங்க....அம்மா சொல்லுங்க.....அக்காசொல்லுங்க...
தமிழ் பொண்ணுங்களே சொல்லுங்க....

அந்த "பயிற்ப்பு " ன்னா என்னங்க.....

நில்லுங்க.. நில்லுங்க.. ஓடாதிங்க....கொஞ்சம் நில்லுங்க please ..சொல்லிட்டுப் போங்க....


"பயிற்ப்பு " ன்னா என்னங்க.....

Wednesday, October 17, 2007

சார்.. பிலிஸ் கைத்தட்டுங்க ...கைத்தட்டுங்க பிலிஸ்..சார்..

இங்க ஒரு வாரமா ரம்ஜான் லீவுனால ரொம்ப போரடிச்சிச்சா..சரின்னு பின்னூட்டம் போட ஒரு பேர் அடையாளமா இருக்கட்டுமேன்னு இந்த வலைப் பதிவை தொடங்க்கிட்டேன்.நடுவுல தானா, தமிழ் டைப்படிக்க லேசா கத்துக்கிட்டேனா...[யாருங்க அது "கையில பூமாலை"ன்னு முனுமுனுக்கிறது].சரின்னு சில பல(?) படங்கள போட்டாக்கா... யாரும் திரும்பிக்கூட பாக்கல..

திடீருன்னு நமக்கும் எல்லாரோடயும் [வலையில] பழகி வெளயாடனுமின்னு ஆசைவந்துச்சா..[பின்ன எதன நாள்தா சும்மா வேடிக்கை பாக்கரது?].ஒரு வேள..சும்மா இருந்தாக்கா,மனசுல விபரீத எண்ணங்கள் உருவாகுங்க்கிறாங்களே அது நெசந்தானோ?.,
தமிழ் மணத்துல்ல மனுப்போட்டாக்கா.."இந்த படம் காட்டுர வேலையில்லாம் வேணாம்...உன்னிய இனி இந்த ஏரியாவுல பாத்தன்னாக்கா.." என்ற ரீதியில வெளயாட்டுல சேத்துக்கமாட்டேன்னுடாங்க்க...எழுத்துப்பதிவுன்னாதான் சேப்பாங்க்களாம்.எனக்கோ ஒவ்வொரு எழுத்தா லென்ஸ் வச்சி தேடி புடிச்சி டைப்ப... சோம்மல்.எங்க ஊருல சின்ன வயசுல,எலலா ஆட்டத்துலயும் "உ(ஒ)ப்புக்கு சப்பாணி"ன்னு ஒரு ஆளை சும்மா பாவப்பட்டு சேப்பாங்க.. அப்படி எதாவது ஆப்சன் தமிழ்மணத்துல இருக்கான்னு தேடிப் பாத்தா இல்லடான்னுடாங்க்க...
"இந்தப் பழம் புளிக்கும் "-ன்னு கூட தோணிருச்சி... ஆனா புடிச்சியிருக்கரது புலி வாலாச்சே...... என்ன எழுதலாம்ன்னு யோசிசாக்கா...
அரசியல் பத்தி எழுதலாமின்னா..ஜ.பி அட்ரஸ கண்டு புடிச்சி ஆட்டோ அனுப்புராய்ங்களாம்.[அவங்க ஆளுங்கலாம் வலைப்பதிவிலும்,வளைகுடாவிலும் ஊடுருவி இருப்பதா இன்டலிஜியன்ஸ் (?) ரிப்போட் சொல்லுது.
சினிமா -நெறய காம்படீசன்.
சண்ட போட்டுக்கிர யாராவது ரெண்டு பதிவங்கள சிண்டு முடிஞ்ச்சி விடலாம்முன்னா...திடீருன்னு ரெண்டு பேரும் ஒன்னா வந்து,ஒற்றுமையா நமக்கு ஆப்பு வைக்கிறாங்களாம்.

நமக்கு ஏன் வம்பு...சரி மொதல்ல சொந்த கதையயே எழுதுவோம்.பின்ன பொது பிரச்சனைய பாக்கல்லாமுன்னு.. நா நாய்கிட்ட மாட்டன வீரக்கதைய எழுதிட்டு..
கணிப்பொறி [வெளிய எலிக்குட்டி[mouse]இருக்குங்கறதால எலிப்பொறின்னெல்லாம் சொல்லறது நல்லா இல்ல...]யில டீவி பாத்தா..[நாங்க இப்படித்தான் டீ டைமில காப்பித்தான் குடிப்போம்.].
சிம்பு பையன் சின்னப்புள்ளதனமா அழுவரத மாத்தி மாத்தி காட்டரானுங்க.நடு நடுவுல கட்டிபுடி வைத்தியம் வேற .நமக்கும் அழுவாச்சியா வந்ததால [இலகிய (?)மனசு....ஹிஹி..]
வேற சேனல மாத்தினாக்கா... அங்க ஒரு மேடை நிகழ்ச்சி, நரஸிமராவு [ஞாபகமிருக்கா..] மாதிரி உம்முனு இருந்த பார்வையாளர்களை அடிக்கடி
சார்.. பிலிஸ் கைத்தட்டுங்க ...கைத்தட்டுங்க பிலிஸ்..சார்...[ரிவர்ஸ் வேரயா?]-ன்னு கேட்டு கேட்டு வாங்கிட்டுருந்தார் ஒருத்தர்[யாருன்னு தெரியுதா?..].இதலாம் ஒரு பொயப்பான்னு ,தலையில கொஞ்சம் வேகமா அடிச்சிக்கிட்டதுல,லேசா வீங்கியே போச்சு . சரின்னு ஆப் பண்ணிட்டு வலையில வந்து விழுந்தா..
மொத்தமா 11ரு................ பேர்... [பெரிய தொகைய படிக்கரமாதரி நீட்டி படிக்கவும்.].வந்தாங்க ,ஒருத்தரும் பின்னூட்டம் போடல -அவிங்களுக்கு ரொம்ப செலவாகும்மோ?...இப்பத்தான் அந்த டீவி ஆளோட கஷ்டம் புரியுது.
சரி இது சரிப்பட்டு வராதுன்னு,நுண்ணரசியல் [நன்றி- "நுனிப்புல்"-உஷாக்காவுக்கு] முறையில யோசிச்சாக்கா...
பதிவர் யாரையாவது சும்மாவாச்சும் ஒரு பாய்ன்ட புடிச்சி நல்லா திட்டி எழுதினா மறுப்பு,எதிர்ப்பு,ஆதரவு - ன்னு ரொம்ப பேரு வீட்டுக்கு வருவாங்களேன்னு ஒரு அனுபவசாலியை கேட்டதுக்கு...

நல்லாத்தேன் இருந்தாரு ..திடீருன்னு ...சாமி(?) வந்தவரு போல / தலயில தண்ணி தெளிச்ச கோழி போல...தலய சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்து உக்காந்தாரு..[அவருக்கு என்ன அனுபவமோ..]ஆயுத எழுத்து சூர்யாவை அரசியலில் சேரவேணாமுன்னு மிரட்டும் அரசியல்வாதியை போல.. மாமு... வேனாம்..அங்க கும்பகும்பலா திரியராய்ங்க....ஒருத்தர தொட்டுடின்னா.. கும்பலா வீட்டுக்கு வந்து ரவுண்டு கட்டிடுவாய்ங்க...ஒம் முதுவுல டின்னு கட்டிடுவாய்ங்க..ன்னு தூதுவர் ரேஞ்ச்க்கு அவுங்களுக்கே தோனாத ஜடியா கொடுத்தாரு.

சரி நமக்கு மென்ணரசியலே போதுமின்னு...நாமலே நாளு பெரியவங்கள வீட்டுக்கு கூப்படல்லாமின்னு..
அபி அப்பாவ பாக்க போனாக்கா...அங்க "ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் "ன்னு எழுதி வைச்சிருக்கராரு.இதுல "- இது நானில்லை"ன்னு ஒரு சமாளிப்பு வேர... சரி அபி அப்பா மறை முகமா லஞ்சம் கேக்கராருன்னு [ஊருல உலகத்துல்ல இல்லாததா...] நாலு பதிவ படிச்சிட்டு [நெஜமாவே நல்லாயிருந்தது..] லஞ்சமா நாலு பின்னூட்டம் போட்டுட்டு ,"வாங்க பழகலாம்" -சாலமன் பாப்பையா ரேஞ்ச்ஜிக்கு அழைப்பு வைச்சுட்டு வந்தா,ஆளு தல காட்டவேயில்ல.இதுக்கு அபி பாப்பாவ கூப்பிட்டிருந்தா கூட,இந்நேரம் தவழ்ந்தாவது இந்த ரசிகன் மாமா..வூட்டுக்கு வந்திருக்கும்.[ஒரு வேள தண்ணில பைக் விட்டது ,கிராப்பிக்ஸ் -ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிட்டதால ,நெசமாவே கத்துக்க போயிட்டாரோ?.(அடுத்து வானத்துல பைக் விடுரமாதிரி கிராப்பிக்ஸ் செய்ய அபி அப்பா டெண்டர் விட்டிருக்கிறதா ஒரு தகவல்)].
[ஆபத்துக்கு முன் குறிப்பு :அபி அப்பாவுக்கு இந்த பதிவு தெரிஞ்சா தண்ணி பைக்கிலேயே துபாயிலிருந்து ,கத்தருக்கு கடல் மார்க்கமாகவே வந்து இறங்கும் அபாயமிருப்பதால்,யாரும் அபி அப்பாவிடம் " போட்டுக்' கொடுக்க வேண்டாமுன்னு கேட்டுக் கொள்கின்றேன். [ஏங்க எட்டப்பர்-ன்னு ஒரு பதிவர் இருக்குராமே.. உண்மையா?]

பதினெட்டு மொற படையெடுத்த மன்னனெல்லாம் மனசில நினச்சு ...நல்லா எழுதரவங்க நாலஞ்சு பேரு வீட்டுக்கு போயி அழைப்பு வைச்சேன்.மொட்ட அடிச்சதால வருத்தத்துல இருந்த நிலா பாப்பா வூட்டுக்கெல்லாம் போயி.."பாப்பா..பாப்பா..இந்த ரசிகன் மாமா பதிவ படிசாக்கா முடி வளருமாம்.பின்னூட்டம் போட்டாக்கா ரோம்ப வளருமாம்.ன்னு கத எல்லாம் உட்டுட்டு அழச்சிட்டு வந்தேன்.

காஞ்சிப் போன என் வலைப்பூங்காவுக்கு மொதல்லவந்து " பின்னூட்ட "தண்ணி ஊத்தியது,மதிப்புக்குரியதமிழ்நதி அவர்கள் தான்.[எனது மனமார்ந்த நன்றிகள்]அப்பாடா.. மனசுல என்ன சந்தோஷம்...[பிரசவத்துக்கு பிறகு தாயுக்கு வரும் நிம்மதி போல..].அட.இந்த சின்ன விசயத்துல கூட இவ்வளவு
நிறைவு கிடைக்குமா?...வாழ்க்கையில நமக்கு இன்னும்தெரியாத பல சந்தோஷ பக்கங்கள் உண்டுன்னு புரிஞ்ச்சிக்கிட்டேன்.

பீலிங்கோட ஒரு காபி குடிச்சிட்டு திரும்பிப்பாத்தாக்கா... நம்ம நிலா பாப்பா..அங்க வெளயாடிட்டுடிருந்தது. எனக்குஜடியா கூட குடுத்துச்சி..அட .. ன்னு நன்றி சொல்லரதுக்குல்லார.ஜெஸிலா அக்கா, கவிதா,Anonymous கள் ,மங்களூர் சிவா,kannabiran, RAVI SHANKAR (KRS),எல்லா பதிவுக்கும் கருத்த சொன்ன cheena (சீனா)[ஸ்பெஷல் தாங்க்ஸ்],Sumathi.,பிரியமுடன் பிரித்தி இன்னு நெறய விருந்தாளிங்க வந்திருந்தாங்க...[முக்கியமா.. அவுங்க கருத்த சொன்னாங்க.. நன்றி].
சைடுல வச்சிருந்த neo earth படத்துல,கரும்புள்ளி,செம்புள்ளி குத்துனது போல உலக பட மேப்புல visitor dots எல்லா இடத்துலயிம் இருக்குது.நமது தமிழினம் இப்போ எல்லா இடத்திலும் நிக்கமற நிறைந்திருப்பது சந்தோஷமா இருக்கு..[அவங்கவங்க அங்கங்க எலக்ஸனுல நின்னுடா உலகத்தயே பிடிச்சிடலாமோ?..].என்னியயும் தமிழ் பதிவர் குடும்பத்துல ஏத்துக்கிட்டாங்கன்னு புரிந்தது..

முயர்ச்சியில துவளாத விக்கரமனா.. தமிழ்மணத்துல மறு மதிப்பீடு மனுப்போட்டதுல.. ஒடனே ஒத்துக்கிடாங்க..நன்றி..

பின்ன குட்டிபிசாசு,Dreamzz ,.:: மை ஃபிரண்ட் ::. ,நளாயினி,சின்ன அம்மிணி ,சகாரா ன்னு நிறைய நட்பு மழைதாங்க...
இங்க வந்த மூணு நாளுல இத்தனயும் கெடச்சதுக்கு தமிழுக்கு நன்றி.
நியோ பேடை பார்த்தா..ரெண்டு நாளுள ஆயிரம் பார்வையாளர்களை தாண்டிடுச்சி.[state countor லேட்டா சேத்ததுனால 400 குறைவா காட்டுது].
இந்த சந்தோஷத்துக்காகவே லீவுமுடிஞ்சாலும் எதாவது மொக்கை யாவது ,போடனும்ன்னு தீர்மானம் நிறைவேத்திட்டேன்.மனச தேத்திக்குங்க..என்ன பன்னரது சும்மா தன்பாட்டுக்கு இருந்தவன [பஞ்ச் டயலாகிலெல்லாம் ] ..ஏதோ சொல்லுவாய்ங்களே...ஆங்.. சிங்கத்த தூண்டி விட்டுட்டிங்கல்ல....யானையை எழுப்பி விட்டுட்டிங்கல்ல..


சிங்க்கங்காருங்கோ..



கருப்பு யானை



ஆப்டர் சிவாஜி பட "கடலை மாவு டெக்னிக் " சிவப்பு யானை

Tuesday, October 16, 2007

என்னடா... இந்த தமிழ் மணத்துக்கு வந்த சோதனை?


ஹி..ஹி ஒன்னுமில்லங்க சும்மா பதிவு தமிழ் மணத்துல சேருதான்னு டெஸ்ட் பண்ணினேன்.
[அதுக்குள்ளாற உருட்டுக்கட்டைய தூக்கிக்கிட்டு வர்ரது கொஞ்சங்கூட நல்லாயில்ல சொல்லிப்புட்டேன்.

சரி சரி கோவத்துல வந்தா.. இந்த படத்த பாத்து கூல் ஆவுங்க...
அபி அப்பாவுக்கு பிடித்த,தென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்காத வார்த்தை எனக்கு வேண்டும்!!!

Monday, October 15, 2007

ஓசை செல்லாவுக்கு ஒரு பின்னூட்டம்

ஓசை செல்லாவின்  "செருப்பாலடிக்கனும் டைரக்டர் சாமியை .     " [நன்றி]




எவ்வளவு கோபம் உங்க பதிவிலே....நியாயந்தானே...
ஆனால் இன்னும் பணம் கொடுத்தால்,மீண்டும் அவருடைய அடுத்த படத்திலேயே நடிகை நடிக்க ok ம்பார்.நாமதான் சூடா வாதம் பண்ணூவோம்
அந்த அளவு நடிகை உரிமை கொடுக்காமல் எப்படி தைரியம் வரும்.

இப்படித்தான்,

ஷில்பா போட்டியில் அவமானப்பட்ட போது ,பத்திரிக்கைகாரர்களின் ஆதரவை பயன்படுத்திக்கொண்டு,முத்த விவகாரத்தில் அவர்களை அடுத்தவர் விசயத்தில்(அது சரி தான்.பொது மேடையில்?)தலையிடும் மூடர்கள் என்றார்.அவர் பணம் , புகழ் சம்பாதிக்க தன்னிச்சையாக கலந்துக் கொண்ட போட்டியில்,அவருக்கு ஏற்பட்ட அவமானத்தின் போது தாயாய்,சகோதரியாய் தோள் கொடுத்து போராட்டங்கள் நடத்திய இந்திய தாய்மார்களை ,முத்த விவகார கண்டனத்தின் போது"நாட்டில் கள்ளக் காதல் அதிகமாகிவிட்டது ,இந்திய பெண்களுக்கு என்னை விமர்சனம் செய்ய தகுதி இல்லை "என்றார்.


ரஜினி-ஜ எடுத்துக் கொள்ளுங்கள்.தமிழனிடம் சம்பாதித்த , தனது எல்லா முதலீடுகளையும் கர்னாடகா-பெங்கலூரு வில் குவிக்கும் அவர்.
.தன்னை தலைவனாக கருதும் ஏழை தொண்டனின் ஒரு வாய் தண்ணீருக்கு நடந்த ஒருங்ககினைந்த [அதிசயம்] போராட்டத்தை ஒரு வேளை தனியாக டயட்(diet)ல்[அவர் பாஷையில் உண்ணா விரதம் ] இருப்பதாக கூறி இரண்டாகப்பிரித்து குலைத்து விட்டார்.சரி போராட்டத்தை மற்றொறு நாள் வைத்துக் கொண்டாலாவது வருவீர்களா? எனக் கேட்டதற்க்கு... மறுத்து,நமது உரிமையைக் கூட பிட்சை எடுத்து தான்/மன்றாடித்தான் [உண்ணாவிரதம் ] நாம் பெற [அவர்கள் ஒரு வேளை பரிதாபப்பட்டு கொடுத்தால்]லாயக்கு..போராடி அல்ல... என உறுதிப்படுத்தினார்.அது இன்று வரை கேரளாவிடமும் தொடர்கிறது.

ஒரு வேளை அவர் அன்று ஒருங்கினைந்த போராட்டத்திற்கு நன்றிவுணர்வோடு வந்து தமிழகத்தின் ஒட்டு மொத்த உணர்வை/நியாயத்தை அவர் பிறந்த
கர்னாடகாவிற்கு,அவரே காட்டியிருந்தால்,அவர் ஆயுசு முழுக்க இமயமலை சென்ற புண்ணியம்(?) கிடைத்திருக்கும்.நம்பிய தமிழர்களுக்கு தாகம் தீர்த்ததுக்காக...

இத்தனை நடந்தும்,இன்று அவரைப் பற்றி விமர்சித்தால் எதிர்ப்பு, பயனடையும் கர்னாடக அன்பர்களிடம் [?] இருந்து அல்ல, ஏமார்ந்த என் தமிழ் சகோதரனிமிருந்து........ இதற்கென்றே கடன் வாங்கி கட் அவுட் டுக்கு பால் அபிஷேகம் செய்யும் ஒரு கும்பல் வேலையில்லாமல் திரிகின்றது.

சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் திறன் தமிழர்களுக்கு குறைவுதான் என பல விசயங்களில் எனக்குத் தோனுது.

ஒருவேளை நடிகை புகார் கொடுத்து மக்களிடம் நியாயம் கேட்டால் ,ஆதரவு தரலாம் என்றிறுகிறேன்... ஹி..ஹி...

லேட்டஸ்ட் சேதி : நடிகை இப்பிரசனையை பெரிதாக்க வேண்டாம் என்கிறாமாம்.-நமக்கு ஏன் வம்பு....

அப்புறம் போட்டோ நல்லாயிருந்தது. ஹிஹி...


ரொம்ப லேட்ட்ஸ்ட் சேதி: பத்மப்ரியா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.இயக்குனர் - நடிகையிடம் மன்னிப்புக் கேட்டார்.[அப்படி போடு அருவாளை...பத்மா.. நீ ஜெய்ச்சிட்டமா... ஜெய்ச்சிட்ட...இந்த மாமாவோட பதிவ படிசிட்டு,ராவோட ராவா புகார் கொடுத்ததுனால ,பேச்சு மாறாமல் என்னோட ஆதரவு உனக்குத்தான்.].
என்னது ஆட்டோவோட ஆளுங்க கெளம்பியாச்சா....விடு ஜீட்..... எஸ்கேப்.........நான் நிலா பாப்பா வீட்டுல ஒளிஞ்சுக்கப் போறேன்.



என்ன மேட்டர்-இன்னு இன்னும் புரியாதவர்கள் கீழ்காணும் மிளகாயை கொஞ்சம் கடித்து பார்த்துவிட்டு வரவும்.[நன்றி மிளகாய்]


மிளகாய்          செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரா டைரக்டர் சாமி? [விபரம]

அகிம்சை-ன்னா என்னாங்க...

நேற்று ஒரு அகிம்சாவாதியை காண நேர்ந்தது...

அகிம்சை-யைப் பற்றி பாடம் எடுத்து எங்களை இம்சை செய்து விட்டார்.
அவரது ஒரே நிலத்தை ஒருவன் அபகரித்த போது கூட விட்டுக்கொடுத்தாராம்.என்றாவது ஒரு நாள் அவனும் அகிம்சையாவானாம்.


இதில் நம்மையும் அகிம்சாவாதி ஆக அறிவுரை வேறு...[கடைசி வரை மவுனமாய் ,அகிம்சாவாதியாய் கேட்டுவிட்டு வந்தோம்].

எனக்கு அவரை பார்த்து பரிதாபம் தான் வந்தது.அந்த நாள்வரை இவர் உயிரொடுயிருக்க வேண்டுமே.
இன்றைய இளைய சமுதாயத்திற்கு இந்த தடைக்கல் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது.

யோசித்துப்பார்த்தால் இன்று தமிழ் நாடும் .. கேரளாவோடும்,கர்னாடகாவோடும் இவரைப் போலவே ஏமார்ந்துக் கொண்டிருக்கின்றது.

வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்.


வெள்ளைக்காரன் எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்றாலும்,காந்தியை ஜாக்கிரதையாக காப்பாற்றியதுக்கு ஒரு காரணம் உண்டு.
"அவரது அகிம்சையைக் கண்ட வெள்ளைக்காரன் பயந்து (?) விட்டான்" என்றால் ,அது ஜல்லியடி...முயர்ச்சி.

ஏனென்றால்,

1] எவ்வளவுதான் அடித்தாலும் ,வாங்கிக்கொண்ட (கோழை) நல்லவர்களை உண்டாக்கிக் கொண்டிருந்ததால்...
2 ]ஆயுதம் எடுத்து நாட்டை மீட்க முயலும் வீரமான மகனை,தானே காட்டிக்கொடுக்கும் பொறுப்புணர்ச்சி மிக்க
அகிம்சாவாதிகளை உண்டாக்கிக் கொண்டிருந்ததால்...
3]என்ன போராட்டம் நடந்தாலும்,அது ஆங்கில சொத்துக்கோ,உயிருக்கோ சேதமில்லாமல், முன் கூட்டியே அறிவித்து நடந்ததால்.

எனவே காந்தி வெள்ளைக்காரனுக்கு ஒரு வரம்.

ஒருவேளை காந்தி இல்லையென்றால், கோழைகளாய் மாற்றப் பட்ட இளையசமுதாயம், சுபாஸ் சந்திரபோஸ் போன்றோரிடம்
இணைந்திருக்கும்.

என் நாடு எப்போதோ .. நான் கில் ஒரு பங்கே உள்ள வெள்ளைக்காரனை போராடியே வென்றிருக்கும்.
[சுபாஸ் சந்திரபோஸ் காலத்தில் சமஸ்தான்ங்ககள் எல்லாம் கூடி ஒரு நாடாகியிருந்தது.]

பிராணிகளிடத்தில் இரக்கம் தேவையா?-ஒரு சொந்த அனுபவம்

மக்கள்ஸ் இதைப் படிங்க
 
15 oct 2007 dinamalar -ல் வந்த சேதி
5 வயசு ம்ட்டுமே ஆன சிறுமியை 10 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கடித்து குதறிய சம்பவம். பாவம் அந்த பிஞ்சு இன்னும்கூட கண்ணில் பயம் போக வில்லை.போட்டோவ பாருங்க...







கஷ்டம் புரிய வேண்டுமா?. உங்களை 10 வெறிநாய்கள் கடித்து குதறுவதாக கற்பனை செய்து பாருங்கள்.
ஏண்டா டேய்,ஏதோ பொழுது போகலன்னு உன் பதிவுக்கு வந்தா நாய் கடிக்கும்ன்னு பயம்புறுத்தற?.என நீங்கள் கேக்கரது பிரியுது [புரியுது].உங்களுக்கே இவ்வளவு பயம்னாகா, அந்த குழந்தைக்கு?.


               இன்று மட்டும் அல்ல.நிறைய தடவை இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.இன்னும் ஏன் இதுக்கு ஒரு தீர்வு செய்ய முடியல .. ?
முனிசிபாலிட்டி-யை கேட்டாகா.... நாய்களை ஒழிக்க "பிராணிகள் வதை தடுப்பு சங்கங்கள்" எதிர்ப்பு -இன்னு சொல்ராங்க.... அவங்க சொல்லிட்டு கார்ல போய்டுவாங்க.. கஷ்டப்படறது /கடிபடறது நடக்கர நடுதர மக்கள்ஸ் தானே.இதில வேற நம்ம ஊருல ஆஸ்பத்திரில நாய் கடிக்கு போதுமான மருந்து இல்லையாம்.டாக்கிடரே [டாக்டர்] நாட்டு வைத்தியம் செய்யச் சொல்றாரமாம்.

                   நாய்க்கு குடும்ப கட்டுப்பாடு செஞ்சு எதிர்காலத்துல நாய் தொகைய கொறைக்கிரது[லொல்..லொல்..] இருக்கட்டும்.....நிகழ்காலத்தில நாங்க கடி பட்டுதான் ஆவனுன்னு சொன்னா...பிராணிகள் வதை தடுப்பு சங்கங்கள் நடத்துரவங்க என்னிய பொறுத்த வரை "பிராணிகள்" தான்.அவர்களுக்கு எதிரா "மனித வதை தடுப்பு சங்கம் ஆரம்பிக்க யோசனை இருக்கு..[இது வேறயா?..]

     
                எதுக்கு சொல்லரன்னாக்கா... எனக்கே இதுல சொந்த அனுபவம் இருக்கு [மத்தவங்களுக்கு என்ன வாடகை அனுபவமா இருக்கு?]என்னன்னா...[என் பார்வை விட்டத்தை பார்க்க.. உடையாத ஒரு டாட்டாய்ஸ் கொசு வத்தி சுருள் ..வேண்டாம்..வேண்டாம்..டாட்டாய்ஸ் வெரி ஸ்லோ...திபாவளி சங்குசக்கரம் என் முகத்துக்கு நேரா [நெருப்பு பதித்த வைக்காமல் தான்]சுத்துவதாக கற்பனை செய்யுங்கள்].

             அது நான் கத்தாருக்கு வருவதற்க்கு முன் துபாயில் திரவியம் தேடிய காலம்[கி.பி 2004/ஸ்ரீ.பி 0024 (ஸ்ரீதர் பிறந்த பின் என படிக்கவும்.)ஹிஹி..].
லீவு நாளில் யாரேனும் ஒரு நண்பனின் ரூமில் எல்லாரும் தங்கி கும்மாளம் செய்து,நாங்கள் போன பின் அவனுடைய மற்ற ரூம்மேட்களிடம் திட்டு வாங்க செய்வதில் ஒரு சுகம்.[என் ரும் முறை வரும் போது [கம்பெனி ரூமாதலால்)பெறும்பாலும் தலைமறைவாகிவிடுவேன்.நானாகொக்கா?].
அன்று மாட்டிய நண்பன் நாங்கள் போட்டசத்தத்துக்கும்[பாட்டும்பாங்களே] கூத்துக்கும்[டான்ஸ்-ம்பாங்களே] ஒன்னும் சொல்லாததால் ,"என்ன தொந்தரவு செஞ்சாலும்,அமைதியா இருக்கானே, இவன் ரொம்ப நல்லவன் டா..இன்னு ஃப் பீல் பண்ணி வெளியே வரும் போது மணி 12-30.[ரூமை கிளின் செய்யவும்,உறக்கம் கலைந்த பக்கத்து ரூம் பெரிசிடம் திட்டு வாங்கி முடிக்கவும் நிச்சயம் விடிந்து விடும் அந்த "அன்பே சிவம்" நண்பனுக்கு.]
             

               இரவு ஜில்லென்ற காற்று.அரட்டைக்கு பின் யாருமில்லா அமைதி.மேகத்தில் ஒளிந்து ஒளிந்து என்னை சைட் அடிக்கும் நிலா (?)[பொறுத்துக்கோங்க வயசுக் கோளாறு..].எனக்கு பாரதி,ஷ்ல்லி போல உண்ர்வு வரவே [போதாத நேரம்] இயந்திர வாழ்க்கைக்கு நடுவே இயற்கையை ரசிக்க கிடைத்த வாய்ப்பாக நினைத்து...
டாக்ஸி யை விட்டு நடக்க ஆரம்பித்தேன்-5 km மட்டுமே .மனதில் தோன்றிய பாடலை முணுமுணுத்தவாரே குளிரில் நடந்த சில நிமிடங்களில் தூரத்தில் பத்து பதினைந்து நாய்கள் [சரியா சொல்லு பத்தா?பதினைந்தா?-என்ன என் நிலம ஒனக்கு நக்கலா-நா நாய எண்ணினாகா,அதுக என்னோட எலும்பை எண்ணாம இருந்தா பத்தாது?].எதுல விட்டேன்.?.. ம்..பத்து பதினைந்து நாய்கள் ஒன்றை ஒன்று கடித்து விளையாடிக் கொண்டு இருந்தன.நமக்கு இந்த விளையாட்டெல்லாம் வாணமுன்னு.சுத்தி பாத்தா யாருமில்ல..பாலைவனத்தில் ரோடு மாத்திரம் லைட் வெளிச்சத்துல கோடாக தெரிஞ்சிச்சு...வானத்த பாத்தா நிலா மிஸ்ஸிங்.. சே.. நிலாவாயிருந்தாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.பிரச்சனைன்னு வரும்போது.... பதற்றத்தில்ல என்னென்னவோ தோனுதுல்ல....
 
              திரும்பி போகலாமுன்னா...நைட் ரொம்ப தூரம்.. அதுவுமில்லாம அந்த ரூம் நண்பந்தான் என்னோட அலும்பு தாங்காம..சைலண்டா இருந்து,நாய்களை அரேன்சு செய்துட்டானோன்னு ஒரு சந்தேகம்..[நாங்கதா சீனா தானா 001 இல்ல...]..
            எத்தனை சதிகளுக்கும் கலங்க மாட்டான் இந்த புளி.. சாரி.. புலி. கடிக்கிற நாய் குலைக்காதாமே .இந்த எல்லா நாயும் குலைக்குதே.
என என் ஏட்டறிவை நம்பி[வேற வழியில்ல].முகத்துல தைரியமா ஆக்ட் கொடுத்துக்கிட்டு [பயந்தாதான் நாய் துறத்துமின்னு பாட்டி சொன்னாங்கல்ல] மெதுவா நடத்தேன்.என் "லப் டப்" எனக்கே கேட்டது.நாய்கள் ரோட்டின் அந்தப் பக்கம் இருந்தன.அவற்றை கடக்கும்வரை
ஒன்னும் ஆகல... எனக்கு கொஞ்சமா நம்பிக்கை வந்தது.எனக்கு கராத்தாவில் பிரவுன் பெல்ட்,இப்போ இடுப்பிலே பிளாக் லெதர் பெல்ட் .நான் 6+1 அறிவு(?) படைத்த மனிதன் இந்த நாய்கள கண்டு பயப்படுவதா?..என லேசா..அட லேசாதான் ஒரக்கண்ணால பாத்தேன்..அங்க ஒரு நாய் மட்டும் என்னய ஓரக்கண்ணால பார்த்துகினுருக்குது...
                எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய் விட்டது.நான் ஓடவில்லை என நாய்க்கு தெரிவிக்க இன்னும் மெதுவா நடத்தேன்.எனக்கு சம்பந்தமில்லாம எல்லார் ஞாபகமும் வந்தது,ஊருல அம்மா,அப்பா..தம்பி..அப்புறம் இன்னும் யாரு?எங்கன்னே தெரியாத என் தேவதை [என் உட்பி தாங்க].

ஆனா அந்த நாயுக்கும் எனக்கும் எந்த ஜென்மத்து பகையோ.. திடீரென குறைத்தது.அதை கேட்டதும் என்னை அறியாமல் என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு அதிர்வு [சும்மா அதிருதில்ல....அதிருதில்ல....].
அத பாத்ததும் மத்த நாய்களுக்கும் நான் நிஜத்தில் பயப்படும் ரகஸியம் தெரிஞ்சு போயிருக்க வேண்டும்.அவ்வளவு தான் ஓனாய்களுக்கு இடையே சிக்கிய மான் போலானது என் நிலமை.[இப்பத்தான் புலி.சிங்கம்ன்ன..?..-ok வில்லங்கள் ரவுண்டு கட்டும் தமிழ் பட ஹிரோ(?) போலானேன்].
matrix படத்தில் வருவது போல கேமிரா என் பின்னாலிருந்து சுற்றுவதாக கற்பனை செய்து கொள்ளவும்.
 
            நாய்கள் ரோட்டை தாண்டி ஓடி வரும் சமயத்தில் திடிரென என் மொபைல் போன் அடித்தது.அதில் லைட் பிரகாசமாக [நெருப்பு மாதிரி]அனைந்து அனைந்து எரிந்ததும், பேட்டா ராப் பாட்டு சத்தமும் நாய்களை பயபடுத்தியிருக்க வேண்டும்.அவை ஒரு வினாடி திகைத்து நின்று,பின் ஓடத் துவங்கின..[என் அதிருஷ்டம் துபாய் நாய்கள் பயந்தாகோளிகள்]-(அப்ப நீ..)
war of the worlds- படத்தில் வேற்று கிரகவாசிகளை அழிக்க வழி கண்டுபிடித்த அமேரிக்க ஜனாதிபதி மனநிலையிலிருந்தேன் நான்.ஓடும்போது நின்று திரும்பிப் பார்த்த ஒன்றிரண்டு நாய்களையும் மொபைல் போன் ஜ இயக்கி லைட் ஜ ஆட்டி ஆட்டி காட்டி ஓட வைத்தேன்.இப்போது அங்கு நான் மட்டுமே.
மொபைல் call ஜ எடுக்காதது ஞாபகம் வர,recall செய்தேன்.அந்த ரூம் நண்பன் தான்.டேய் நீ தனியாக போனதாக சொன்னார்கள்.நீ உன் ரூமுக்கு போய் விட்டாயா என தெரிஞ்சிகத்தான் கூப்பிட்டேன் என்றான்.

அடேய் ..என் உயிர் காத்த நண்பா.. உன்னைப்போய் சந்தேகப்பட்டேனே.. டெலிபதியோ..எலிபதியோ.... சமயத்தில் காப்பாற்றினாயே.. என் நன்றி உணர்ச்சியில் பொங்க...ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க அவன் அங்கு விழிக்க..
ஒருவேளை அவன் அந்த சமயத்தில் எனக்கு கால் பண்ணாமல் இருந்தாலோ.. அல்லது நான் மொபைலை சைலண்ஸில் போட்டிருந்தாலோ..
என் கதி என்னவாகிருக்கும் ?..நினைக்கவே முடியவில்லை.

எனவே நம் ஊரில முனிஸிபாலிட்டி காரங்களுக்கு ஒரு ஜடியா..
வெறி நாய்களை கொல்லக்கூடாதுங்கறவங்களை ,அந்த நாய்களோடு ஒரு நாள்[big brothor program மாதிரி] அடைத்து வைத்தால் அப்புறம் இப்படி சொல்லுவாங்கங்கிறிங்க.....

வெறி நாய்களை கொல்வதன் மூலம் இது போன்ற அசம்பாவித சம்பவங்களிலிருந்து பொது மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கிறிர்கள்.
எனவே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல்,யாரை பற்றியும் பயமும் இல்லாமல்,கடமையை செய்யுங்கள்.

ஒரு நற்செய்தி : மற்ற மானில முனிஸிபாலிட்டி- கள் ஏற்கனவே இந்த கடமையை துவங்கி விட்டன.

Thursday, October 11, 2007

உலகம் உருண்டை தான்.. ஒத்துக்கிறேன்...



ஏதோ " மீன் கண்"fisheye lense -ம் சோக்கா இருக்குதில்ல...


















அட... காகிதத்திலும் கலைவண்ணம்.




























கண்கட்டி வித்தை ரகசியம்


நீங்கள்  ஆவலுடன் எதிர்பார்த்த கண்கட்டி வித்தை ரகசியம் இதோ...[பில்டப்..பு..]


இப்படி நீட்டி வரைந்து....



நிமிர்ந்து பார்த்தால






வித்தை ready



இப்படி நீட்டி வரைந்து....





நிமிர்ந்து பார்த்தால



வித்தை ready


ஏலகைவன் போல.. சாரி.. ஏகலைவன் போல..[குருவை பார்காமல்] என்னை மனதில் நெனைச்சு வரைந்து பார்க்கவும்..

pin குறிப்பு: பயப்படாதீர்கள் ...கட்டை விரல் கேற்க மாட்டேன்..அதில் உள்ள மோதிரம் மட்டும் கொடுத்தால் போதும்.

கண்கட்டி வித்தை [ இன்னும் பாருங்க....]

தரையில் இருப்பது நிஜமல்ல . ஓவியந்தான்.







கண்கட்டி வித்தை- 6 [ கிழிருந்து குதிக்க முடியுமா?]

கண்கட்டி வித்தை-5 [புதையல் எடுக்கலாம் வாங்க...]

நிஜமா ஓவியந்தான்.

இப்படி தோண்டி...


 
புதையல் டிடக்டர்
 




இப்படி அள்ளி...



புதையல் வாங்கலையோ...புதையல்..



Wednesday, October 10, 2007

கண்கட்டி வித்தை-4 [ computor குப்பை]





டாய்....எவன்டா என் kamp-u-tor-i- குப்பை -ன்னு சொல்லி தூக்கி போட்டது?

கண்கட்டி வித்தை-3 பார்க்க வந்த V.I.P -கள்


V.IP - 1 :SPIDER MAN



V.I.P-2 BAT MAN & SON OF SUPERMAN Co.,



ரசிகனின் வருத்தம்: தொங்கி வித்தை காட்டுவதால் ஆட்டோகிராப் வாங்க முடியவில்லை.

கண்கட்டி வித்தை-2 தாகமா இருக்குதா?


நிஜமா ஓவியந்தான்.தாகமா இருக்குதா?

கண்கட்டி வித்தை இன்னும் பாக்கலையா? இதை பாருங்க...

இதை பாருங்க...

கண்கட்டி வித்தை-1



 

சுவர் இருந்தால் மட்டுமல்ல,ரோடு இருந்தாலும் சித்திரம் வரைய முடியும் போல...

முதலீடு : திறமை,கொஞ்சம் பெயின்ட், நெறைய பொறுமை.

 குறிப்பு: எப்படி ? ரகசியம் 18 ம் பதிவில். டியுசன் பீஸ கொடுப்பவர்களுக்கு இப்போதே ஜொள்ளப்படும்.சாரி.. சொல்லப்படும்.